Tuesday, October 15, 2013

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது! யாழ் உரும்பிராயில் சம்பவம்!

15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ், உரும்பிராய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்கு சிறுமியின் வீட்டாரது சம்மதத்தையும் பெற்றுக்கொண்டு ள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனையறிந்த அயவலர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பா டொன்றைப் பதிவு செய்தனர். இந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்து இன்று யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிவான், குறித்த இளைஞரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கு மாறும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment