இந்நாட்டு மாணவர்களிடையே மெல்ல மெல்ல எயிட்ஸ் நோய் பரவி வருவதைக் காண முடிகின்றது எனவும், 25 – 49 வயதினரிடையே சென்ற ஒன்றரை ஆண்டுகளில் நூற்றுக்கு 60 வீதம் அதிகரித்துள்ளதாகவும் தேசிய எயிட்ஸ் ஒழிப்பு அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டின் சென்ற மாதங்களில் சென்ற ஆண்டுக்குச் சமனான முறையில் எயிட்ஸ் நோய் அதிகரித்துள்ளமையையும் காண முடிகின்றது எனவும், ஒன்பது பேரைக் கொண்ட ஆய்வுக் குழுவொன்றை நியமித்து, அவர்கள் மூலமாக சரியான தகவலைத் தனக்குப் பெற்றுத் தருவதற்கு ஆவன செய்வதாக சுகாதாரச் செயலாளர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(கேஎப்)

No comments:
Post a Comment