Saturday, October 19, 2013

மாகாண சபை முறை முழுமையாக நீக்கப்பட வேண்டும்! - பிரதமர்

மாகாண சபை முறை முழுமையாக நீக்கப்பட வேண்டும் என பிரதமர் தி.மு. ஜயரத்ன குறிப்பிடுகிறார். மாகாண சபையை நிருவாகிப்பதற்கு அதிகூடிய பணத்தொகை செலவுசெய்யப்படுகின்ற போதும், அதற்கேற்ப நன்மை கிடைப்பதில்லை என அவர் தெளிவுறுத்துகிறார்.

மாகாண சபைக்காக செலவாகும் பணத்திலிருந்து பொதுமக்களின் நன்மைகருதி செலவிடப்படும் தொகை மிகக் குறைவாகவே இருக்கின்றது என்றும், மாகாண சபைத் தேர்தலுக்காக அரசாங்கம் பாரியளவு பணத்தை செலவிட வேண்டியிருக்கின்றது என்றும் அந்தத் தேர்தலில் களம் குதிக்கின்ற வேட்பாளர்களுக்கும் அதைவிடப் பாரிய தொகை செலவாகின்றது என்றும் அவர் மேலும் தெளிவுறுத்துகிறார்.

(கேஎப்)

1 comment: