Sunday, October 27, 2013

கொழும்பு கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை திறப்பு!

கொழும்பில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இருபது நிமிடங்களில் சென்றடையக்கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் கொழும்பு-கட்டுநா யக்கா அதிவேக நெடுஞ்சாலை இன்று (27.10.2013) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப் படுகிறது.

25.8 கிலோ மீற்றர் நீளமுள்ள இந்த அதிவேகப் பாதையை இன்று காலை 9.45 க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேலியகொட நுழைவாயிலில் வைத்து வாகனப் போக்குவரத்திற்காக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

தினசரி சுமார் 15000 வாகனங்கள் பயணிக்கும் இந்த வழி திறப்பதையிட்டு அன்றாடம் நீர்கொழும்பு கண்டி மார்க்க வீதிகளில் வாகன நெருக்கடி பெருமளவு குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

  1. Thankfull for President Rajapakshe government.

    ReplyDelete