Monday, October 28, 2013

யாழ்தேவி ரயிலில் மோதுண்டு ஒருவர் மரணம்!

கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு திருமுறிகண்டி பகுதியில் வைத்து ஒருவர் எதிர்பாராதவிதமாக மோதுண்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் திருமுறிகண்டி, பொன்னகர் பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் சேர்ந்த அன்னமுத்து கணேஸ் (வயது 65) என்பவரே விபத்தில் மரணமடைந்துள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment