பொகவந்தலாவ, போனோகோட் தோட்டத்தில் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததன் காரணமாக வெட்டு காயங்களுக்கு உள்ளான நபர், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.தனது மனைவியின் தகாத உறவை அறிந்த பெண்ணிண் கணவர், குறித்த ஆணை கத்தியால் வெட்டியதோடு தனது மனைவியையும் தாக்கியுள்ளார். வெட்டுக் காயங்களுக்கு இலக்கான ஆணும் பெண்ணும் பொக வந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று மாலை கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலும் முவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.




No comments:
Post a Comment