பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, குறித்த சிறுமியிடம் 20 ரூபா பணத்தை கொடுத்துவிட்டு தப்பிச்சென்ற சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சாலியவௌ பொலிஸார் தெரிவித்தனர். சாலியவௌ - துனுமடலேவ கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமியே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது கடந்த ஜூலை மாதம் 15ம் திகதி சிறுமி மாத்திரமே வீட்டில் இருந்துள்ளார். இவ்வேளை அங்கு வந்த சந்தேகநபர் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு அவரிடம் 20 ரூபா பணத்தை கொடுத்து நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்லக்கூடாது என மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
சிறுமி தனக்கு நடந்தவற்றை தனது பாடசாலை நண்பியிடம் கூறியதும் குறித்த நண்பி தனது தாயிடம் அதனை குறிப்பிட்டுள்ளார். அதன்பின் நண்பியின் தாய், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயிடம் சம்பவத்தை தெரிவித்து பொலிஸ் நிலைய த்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சாலியவௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment