இல்லத்தரசிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் கைதொழிலை ஊக்குவிப்பதற்கான பயிற்சிகளின் ஒரு பகுதியாக குருநாகல், புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 4200 இல்லத்தரசிகளுக்கு கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சி இன்று (15.10.2013) வழங்கப்பட்டது.
இப்பயிற்சிகள் அனைத்தும் நிபுணத்துவம் மிக்க கால்நடை வைத்தியர்களின் வழிகாட்டலில் இலவசமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இவ்வேலைத் திட்டத்தின் கீழ் இல்லத்தரசிகளுக்கு கோழிக்குஞ்சுகளும் வழங்கப்பட்டதுடன் இத்திட்டத்திற்காக இலய்கை அரசினால் 4.5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment