Wednesday, October 23, 2013

41 வயது பெண்ணைக் கடத்திச் சென்று கற்பழித்த 17, 19 வயதுக்காரர்கள்.

ஆட்கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பதின்ம வயது இளைஞர்கள் தடுப்புக காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 17 மற்றும் 19 வயதுடைய இவர்கள் கத்தி முனையில் 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று காட்டுப் பகுதியில் வைத்து கற்பழித்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப் பிட்டி பொலிஸ் அறிவித்ததுள்ளது.

வெளிநாட்டில் மீண்டும் வேலைக்குப் போவதற்கு தனது கடவுச் சீட்டைப் புதுப்பிக்கச் சென்று கொண்டிருந்த போதே இவர் கடத்தப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டி நீதவான் பந்துல குணரட்ன இவர்களை 28 ம் திகதிவரை தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டதோடு அடையாள அணிவகுப்புக்கும் உத்தரவிட்டார். மேலும் விசாரணை குளியாப்பிட்டி பொலிசின் பெண்கள் மற்றும் சிறுவர் அலகினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment