Thursday, June 6, 2013

ஹலால் பிரிவினைவாதத்தைக் கொண்டு செயற்படுத்த முனைந்த விடயங்களை இன்று............பொதுபல சேனா!

ஹலால் பிரிவினைவாதத்தைக் கொண்டு செயற்படுத்த முனைந்த விடயங்களை இன்று வேறு விதமாக விதைப்பதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும், அரசாங்கம் முஸ்லிம் மத்ரசா நிறுவனங்கள் தொடர்பில் தேசிய கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது மாற்றுவழிமுறையில் இரண்டு அரச சார்பற்ற அமைப்புகள் நாட்டினுள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன எனவும், அதனூடாக ஹலால் பிரிவினைவாதத்தைக் கொண்டு செயற்படுத்த முனைந்த விடயங்களை இன்று வேறு விதமாக விதைப்பதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அதற்கான ஒரு உதாரணமாக மத்ரசா பாடசாலைகளை கூறமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னர் பள்ளிவாயல்களில் அறநெறி பாடசாலைகளை நடத்தினார்கள். தற்போது எல்லா இடங்களிலும் மத்ரசா நிறுவனங்களை ஸ்தாபித்து பாடசாலைகளை நடத்துகின்றனர். இதனை யார் நிர்வகிக்கின்றார்கள் என கேள்வி எழுப்பினார்.

எனவே, அரசாங்கம் உடனடியாக தலையிட்டு தேசிய கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் என்று நாங்கள் அரசாங்கத்திடம் யோசனை தெரிவிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment