மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹண விஜயவீரவின் மனைவியின் முறைப்பாட்டையடுத்து, கைதுசெய்யப்பட்ட ரோஹண விஜயவீரவின் மகளை, மனநல பரிசோதனைக்கு உட்படுத்தி முழுமையான அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு வத்தளை நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.தாய் மற்றும் சகோதரனை தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள ரோஹண விஜயவீரவின் மகளின் வழக்கு வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகள் வைத்திய அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதன் போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டதுடன், வழக்கை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment