நயினாதீவு, நெடுந்தீவு கடல் பயண அளவை அதிகரிக்குமாறு பொது அமைப்புக்கள் கோரிக்கைவிடுத்துள்ளன. அமைதியற்ற காலத்தில் அமுல்படுத் தப்பட்ட பயணங்களின் அளவுகள் தொடர்ந்தும் பேணப்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாக இந்த அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கான பயணம் மாலை 5மணிக்கும், நயினாதீவுக்கான பயணம் மாலை 6 மணிக்கும் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், பயணிகள் தமது தேவைகளை நிறைவேற்ற முடியாதிருப்பதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். நிரந்தர சமாதானம் நிலவும் நாட்டில் தமது தேவைக்கு ஏற்ப பயணங்களை மேற்கொள்ளும் வகையில் , பயண அளவுகளை அதிகரிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இப்பகுதி மக்கள் கோருகின்றனர்.
No comments:
Post a Comment