Tuesday, May 15, 2012

பொலிஸ் முறைப்பாடுகளுக்கான பிரதியை அவ்விடத்திலேயே வழங்க நடவடிக்கை

பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை செய்யும்போது , அந்த முறைப்பாடுகளுக்கான பிரதியை அவ்விடத்திலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், வாகன அனுமதிப் பத்திரம் ஆகியன காணாமற்போதல் மற்றும் சிறிய வாகன விபத்துக்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை மேற்கொள்ளும் போது, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டின் பிரதியை பெற்றுக்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

அதற்காக அரசாங்கத்திற்கு 25 ரூபா செலுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment