Sunday, May 13, 2012

யாழில் குற்றச் செயல்கள் அதிகரிப்பு: பட்டியலிடும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்து இருப்பதாக யாழ்ப்பாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ். சிறிகுகநேசன் தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவ்விதம் கூறினார்.

அவர் அது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ள 4 கிலோகிராம் கஞ்சாவை வைத்திருந்தவர் இளவாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருட்களைப் யாழில் விற்பனை செய்பவர்கள் தொடர்பாக புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்தோடு யாழில் இரவில் சந்தேகத்திற்கு உரிய விதத்தில் நடமாடியவர்கள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ். நல்லூர் பகுதியில் இளம் பெண்ணை துன்புறுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அப்பொண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்ததுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நெடுந்தீவில் குற்றங்கள் எதுவும் நடந்ததாக பதிவுகள் இல்லை. ஊர்காவற்துறையில் பிடிவிறாந்து பிடிக்கப்பட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் கிகேரா, காங்கேசன் துறை பொலிஸ் பரிசோதகர் மற்றும் கோப்பாய் பொலிஸ் பரிசோதகர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment