Monday, May 14, 2012

சரத் பொன்சேகாவுக்கு விடுதலையா?

வெளிநாட்டு, உள்நாட்டு அழுத்தங்கள் காரணமாக சிறையிலிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விரைவில் விடுதலையாகலாம் என ஜனநாயக தேசிய முன்னணி தெரிவிக்கிறது. முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கோட்டகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

இவ்வாரம் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்ற ஊகம் தற்போது பரவலாக அடிபட்த் தொடங்கியுள்ளவேளையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதற்கான உத்தரவாதங்கள் எதுவும் கிடைக்கவில்லையென அவர் கூறியுள்ளார்.

தற்போது சுவாச நோய் காரணமாக சரத் பொன்சேகா கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

இதேவேளை பொன்சேகாவின் விடுதலை குறித்து அரசாங்கம் எவ்வித அறிவித்தலையும் தமக்கு வழங்கவில்லை என பொன்சேகாவின் குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித்துள்ளனர். _

No comments:

Post a Comment