Saturday, December 24, 2011

மன்னிப்பு கேட்க மாட்டோம்---அனோமா பொன்சேகா

சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்காக தானோ அல்லது தனது குடும்பத்தவர்களோ மன்னிப்பு கேட்க போவதில்லை என்று சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எப்படி இருந்த போதிலும் பொன்சேகாவை விடுதலை செய்வது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் அலஸுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

.சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டுமாயின் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் ஒன்றை விடுக்க வேண்டும் என்று வெளியாகியுள்ள தகவல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அனோமா பொன்சேகா மேற்சொன்னவாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment