Sunday, December 25, 2011

வெளிநாட்டுத் தம்பதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கணவர் பலி: மனைவி படுகாயம்

தங்காலையில் வெளிநாட்டுத் தம்பதியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது கணவர் கொல்லப்பட்டதுடன் மனைவி படுகாயமடைந்த நிலையில் காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தங்காலை பிரதேசத்தில் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இடம்பெற்ற கிறிஸ்மஸ் இசை நிகழ்ச்சி ஒன்றின் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இசை நிகழ்ச்சி நடந்தவேளை வெளிநாட்டு பிரஜையின் மனைவியிடம் பிரதேச அரசியல்வாதி உள்ளிட்ட குழுவினர் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதாகவும்,. இது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் கலகமாக மாறி அரசியல்வாதியும் அவரது குழுவினரும் வெளிநாட்டு ஜோடிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த மோதல் சம்பவத்திற்கும் தங்காலை பிரதேச அரசியல்வாதிக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டைச் சேர்ந்த தம்பதியினர் மீது துப்பாக்கிப் பிரயோகமும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment