கறுப்பு நிற ஹெல்மட் அணிந்திருந்த இனந்தெரியாத குழுவினரே ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்த மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்,அந்த குழப்பக்காரர்களை இனங்காண முடிந்துள்ளதாகவும் ஐ.தே.க.வின் முன்னாள் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுயாதீனமான விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு தானும், கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவும் பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
சிறிகொத்த மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு பதிலாக கட்சியின் மறுசீரமைப்புக்காக குரல் கொடுத்தவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment