Tuesday, November 1, 2011

அம்பலயாகம கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

இன்று அதிகாலை 5 மணியளவில் கொபயினனே - அம்பலயாகம கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் அட்டகாசம் புரிந்ததில் பிரதேச மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். நியமன மற்றும் தெலஹெர ஆகிய கிராமங்களுக்கு இன்று அதிகாலை மூன்று காட்டு யானைகளும் ஒரு குட்டி யானையும் புகுந்து விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுத்தியுள்ளன.

உடனடியாக கொபயினனே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு பொலிஸார் வனவள அதிகாரிகளை வரவழைத்து யானைகளை விரட்டியுள்ளனர். இந்த யானைகள் தாக்குதலில் எவ்வித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டதில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரதேசத்திகுட்பட்ட 35ஆம் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு காட்டு யானைகள் சுமார் 15 வீடுகள் உடைத்து சேதமாக்கியுள்ளன.

இரவில் வந்த யானைகள் வீட்டில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் சுவர்களை உடைத்து சேதப்படுத்தியதுடன் வாழை தென்னை தோட்டங்கள் மற்றும் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த நெல் மூட்டைகளையும் சேதப்படுத்தியுள்ளதாக கிராமத்தவர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment