Friday, October 14, 2011

அவுஸ்திரேலியா செல்வதற்கு முயன்ற மூவருக்கு பிணை மறுப்பு

அண்மையில் மீன்பிடி படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டவேளை கைது செய்யப்பட்டவர்களில் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட மூவருக்கு பிணை வழங்க கொழம்பு நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி உத்தரவிட்டார். கல்முனை ஊடாக இந்தியாவிற்கு தப்பிச்செல்லவிருந்த 39 பேர் கைது செய்யப்பட்டதோடு அவர்களில் 6 பேர் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டது அதன்படி குறித்த ஆறு பேரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தடுத்து வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment