Monday, October 17, 2011

அதிக இலாபம் தரும் வியாபாரம் அரசியலாகும் கூறுகின்றார் சந்திரிகா.

எமது நாட்டில் அதிக இலாபம் தரும் தொழிலாக அரசியல் உள்ளது. அரசியல் வாதிகளால் நாட்டு சொத்துக்கள் கொள்ளையிடப்படுகின்றன என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க தெரிவித்தார். அனுரா பண்டாரநாயக ஞாபகார்த்த அமைப்பு ஏற்பாடு செய்த க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் உயர் சித்தியடைந்த மாணவர்கள் சிலருக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி அங்கு தொடர்ந்த உரையாற்றுகையில் கல்வி துறையில் எமது பிள்ளைகளை ஈடுபடுத்தாவிட்டால் எமது பரம்பரையினருக்கு எதிர்காலம் இல்லாமல்போய்விடும். இன்று பாராளுமன்றத்தில் யார் இருக்கின்றர்கள் என்று பாருங்கள் கொலைகாரர்களும் திருடர்களும் அங்கு உள்ளனர். தந்தை மகன், மகள், மாமா, மாமி என்று எல்லோரும் பாராளுமன்றத்தில் உள்ளனர் எல்லாக் கட்சிகளுக்கும் இது பொருந்தும். அரசியலே இலங்கையில் அதிகஇலாபம் தரும் தொழிலாகும் என்றார்

No comments:

Post a Comment