Thursday, October 13, 2011

சட்டவிரோத ஆயூதங்களைக் களைய விஷேட நடவடிக்கை

சட்டவிரோத ஆயுதங்களக் களையும் நடவடிக்கை இன்று முதல் அமுலுக்குக் கொண்டுவரப்படுவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத் துறைஅமைச்சருமான கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்துள்ளார். தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் அங்கு தொடர்ந்து கூறுகையில, முல்லேரியா சம்பவத்தை மிகவும் மோசமான ஒரு சம்பவமாகக் கருதி அது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.நாட்டில் தற்போது அமைதியுடனான சமாதான சூழல் நிலவுகின்றது. துப்பாக்கிக் கலாசாரத்தை அரசாங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது. நாட்டு மக்களுக்கு நிம்மதியாக வாழக் கூடிய சூழ்நிலையை உருவாக்க அரசாங்கம் சட்ட விரோத ஆயுதங்களைக் களைவதற்காக விஷேட நடவடிக்கை ஒன்றை உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பல குழுக்களையும் அரசாங்கம் அமைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment