Friday, October 14, 2011

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சுட்டுக் கொலை! - விசாரணைகள் ஆரம்பம்

உடவலவ - பனகடுவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்சி புரொக்டர் தெரிவித்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 32 வயதான இந்திரானி (தாய்), 37 வயதுடைய லலித் (தந்தை), 12 வயதுடைய சிலான் சத்துரங்க (மகன்) மற்றும் 08 வயதுடைய நதீக்கா செவ்வந்தி (மகள்) ஆகியோரே நேற்றிரவு 7.40 அளவில் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

இதேவேளை ,இன்று அதிகாலை நான்கு மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த எம்பிலிபிட்டி பிரதம நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அதன் பின்னர் சடலங்கள் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment