பாரதவின் சேவை தொடர்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் மறந்துள்ளதாக பாரத லக்ஷ்மனின் சகோதரி சுவர்ணா குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலுள்ள சிலர் வெளியிடும் கருத்துக்களின் ஊடாக குற்றவாளிகள் பாதுகாக்கப்படுவதாகவும், அவர்கள் குற்றவாளிகளின் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.சுவர்ணா குணவர்த்தன அங்கு தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது,
எனது சகோதரர் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்.அவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முறைகேடான கலாசாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததார்.அதனால் சிலரின் வெறுப்பிற்கு அவர் ஆளானார்.இதன் பிரதிபலனாகவே அவரது உயிர் காவு கொள்ளப்பட்டது.
விலைமதிப்பற்ற உயிர்களுக்கு விலையொன்றை நிர்ணயிக்கும் கலாசாரம் நாட்டிற்குள் உருவாகியுள்ளது.பாரதவுக்கு நீதியை நிலைநாட்டுவோம் என்ற சர்வதேச ரீதியான நடவடிக்கையை ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment