இந்த தேசிய மாநாட்டில் (இஜ்திமா) இலங்கையின் சகல பிரதேசங்களையும் சேர்ந்த அஹமதிய்யா முஸ்லிம் ஜமாஹாத்தின் பெண்களும் சிறுமியர்களும் பங்கு பற்றினர்.
ஜமாஹத்தின் தேசியத் தலைவி ரிஹானா தரீக்கின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பேச்சு, கட்டுரை, இஸ்லாமிய வினா-விடை, கஸீதா , கிராஅத் ஆகிய போட்டி நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் சமய சொற்பொழிவுகளும் இடம் பெற்றன.
நிகழ்வில் 'அந் நிஸா ' என்ற சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்த சஞ்சிகையையே படத்தில் காண்கிறீர்கள்.
No comments:
Post a Comment