அம்பாறை மாவட்டத்தின் மகா ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 69ஆவது மைற்கல் விஷேட அதிரடிப்படை முகாமில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ஒருவரும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.குறித்த அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சரான சிசிர குமார மீது, அரந்தலாவை விஷேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் பிரதம பொலிஸ் பரிசோதகரான ஜயதிலக்க மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிசிர குமார உயிரிழந்தார்.
இந்நிலையில் தனக்குத் தானே துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்ட ஜயதிலக்க சிகிச்சை பயனளிக்காத நிலையில் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
69ஆவது மைற்கல் விஷேட அதிரடிப்படை முகாமில் இவ்விரு பாதுகாப்பு அதிகாரிகளும் நேற்றுக் காலை வேளையில் உரையாடிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு வலுப்பெறவே, பிரதம பொலிஸ் பரிசோதகரான ஜயதிலக்க உதவிப் பொலிஸ் அத்தியட்சரான சிசிரகுமார மீது தன்னிடமிருந்த கைத் துப்பாக்கியினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். அத்துடன் தனக்குத் தானே துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த நிலையில் மஹாஓயா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சர் இடைவழியிலேயே உயிரிழந்ததுடன் காயமடைந்திருந்த பிரதம பொலிஸ் பரிசோதகர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு கொண்டுவருவதற்கென விஷேட ஹெலி கொப்டர் ஒன்றினை பாதுகாப்பு அமைச்சு மஹா ஓயாவுக்கு நேற்று பிற்பகல் அனுப்பியிருந்தது. இருப்பினும், ஹெலி கொப்டரில் ஏற்றுவதற்கு முன்னரே, துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட குறித்த பொலிஸ் பிரசோதகரும் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் இருவரது சடலங்களும் மஹா ஓயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வதிகாரிகள் இருவருமே மிகவும் ஒழுக்கமும் நேர்மையும் மிக்க அதிகாரிகள் என சக அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
புலிகளுக்கு எதிரான நடிவடிக்கைகளிலும், ஜேவிபி கிளர்சியாளர்களை ஒடுக்குவதிலும் இவர்கள் இருவரும் மிகவும் அர்பணிப்புடன் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஏஎஸ்பி சிசிர குமார யுத்தம் முடிவடைந்தபின்னர் நாட்டில் நிலைகொண்டிருந்த பாதாள உலக கும்பலை ஒழித்துக்கட்டுவதில் முன்னணியில் நின்ற அதிகாரியாகும்.
இதேநேரம் இச்செய்தி தொடர்பாக தமிழர்களுக்கு செய்தி வழங்கி கொண்டிருக்கும் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியையும் இங்கு தருகின்றோம். ஆச்செய்தியில் கொல்லப்பட்டவர் எஸ்எஸ்பி (சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டகர்) என்றும் துப்பாக்கி பிரயோகம் செய்தவர் சார்ஜன்ட் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தாக்குதலுக்கு உள்ளானவர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் என்பதுடன் துப்பாக்கி பிரயோகம் செய்தவர் ஒரு பிரதம பரிசோதகர் அவார். செய்திகள் தொடர்பாக எவ்வித விசாரணைகளும் மேற்கொள்ளாமல் கனவில் கதை சொல்லும் இவர்களின் செய்திகளை தமிழ் மக்கள் நம்பவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆத்துடன் சம்பவம் அம்பாறையில் இடம்பெற்றதாகவும் அம்பாறை காய மடைந்தவர்களை அம்பாறை வைத்தி யசாலை க்கு கொண்டு சென்றதாகவும் வேறு சொல்கின்றனர், உண்மையில் அவர்களை கொண்டு சென்றது மகாஓய வைத்தியசாலைக்கு . ஆனால் சம்பவம் நடம்தது மகாஓய எனுமிடத்தில் மகாஒயவிற்கும் அம்பாறைக்கும் 45 கிலோ மீற்றர் துர வித்தியாசம் உண்டு. இச்செய்தியானது யாழ்பாணத்தில் இடம்பெற்ற விடயம் ஒன்றை கிளிநொச்சி வட்டக்கச்சியில் இடம்பெற்றதாக தெரிவிப்பதை ஒத்ததாகும்.

No comments:
Post a Comment