Friday, September 23, 2011

கலாபூசணம் பீர் முஹம்மதின் 'நேர்மை பிறந்தது' இறுவட்டு வெளியீட்டு விழா

இலங்கையின் மூத்த இஸ்லாமியப் பாடகர் கலாபூசணம் பீர்முஹம்மதின் 'நேர்மை பிறந்தது' இறுவட்டு வெளியீட்டு விழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு மாளிகாவத்தை சின்ன பிரதீபா மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் , ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் பல ஆண்டுகளாக இஸ்லாமிய கீதங்களை பாடியிருக்கும் பாடகர் பீர்முஹம்மத் தேனிசை மாமணி,கவித் தென்றல், மியூசிக் நூரி போன்ற பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment