டுபாயிலிருந்து இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசிகளை கடத்தி வந்த இலங்கை நபரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சுங்க அதிகாரிகள் இன்று மேற் கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த நபரிடம் இருந்து 759 கையடக்கத் தொலைபேசிகள் கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி 58 இலட்சம் ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது. நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் யூ.எல். 228 என்ற ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கியபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment