இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகத்திற்கான ஆலோசனைக்குழு நியமிக்கப்பட்டதை அடுத்து இலங்கை அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் பலரும் தமது எதிர்பினை தெரிவித்து வருகின்றனர். இவ்நியமனம் தொடர்பாக கருத்துரைத்துள்ள ஊடகத்துறை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல, இலங்கை போன்ற இறைமையுள்ள நாடொன்றின் மீது ஐ.நா வின் பொருத்தற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமான இச்செயற்பாட்டை தாம் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ.நா இலங்கையை குறைத்து மதிப்பிடக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் இவ்விடயம் தொடர்பாக அரசாங்கம் இன்று உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளிவிடும் எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment