Monday, December 28, 2009

வடமாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் வருட நடுப்பகுதியில் .

ஜனாதிபதித் தேர்தல் , பொதுத் தேர்தல் என்பன முடிவடைந்தவுடன் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் வடமாகாண சபைக்கான தேர்தல் இடம்பெறும் என விவசாயத் துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையில் அரசியல் யாப்பு மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இன்று இலங்கையில் அமுலில் உள்ள அரசியல் யாப்பின் 13ம் திருத்தத்தினை அமுல்படுத்துவதெனவும் அதன் நடைமுறையினைப் அவதானித்து தேவைக்கேற்ப விடயங்களை சேர்த்துக்கொள்ளவும் நீக்கிக்கொள்ளவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment