Saturday, February 28, 2009

பிரணாப்புக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்ற வைகோ கைது



மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்ற மதிமுக பொதுச்செயலர் வைகோ மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏ க்கள் உட்பட சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

"இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய வலியுறுத்தாமல் தமிழர்களை அவமானப்படுத்தும் வகையில் பேசி வரும் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும்" என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஓருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் நேற்று கூறியிருந்தார்.

அதன்படி இன்று தூத்துகுடியில் வைகோ தலைமையில் மதிமுக எம்எல்ஏ க்கள் வரதராஜன், ஞானதாஸ் உட்பட சுமார் 150 பேர் கருப்புக் கொடி போராட்டம் நடத்த முயன்றனர். மேலும், அவர்கள் இலங்கை அரசு மற்றும் ராஜபக்ஷேவுக்கு ஏதிராக கோஷமிட்டனர். இதையடுத்து, பொலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர்.

No comments:

Post a Comment