
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் சேர். ஜோன் ஹோம்ஸ்; வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
முல்லைத்தீவில் சிக்குண்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுவதற்குப் புலிகள் இயக்கத்தினர் இடமளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர்; வட பகுதியை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அரசாங்கத்திற்கு உதவி, ஒத்துழைப்புக்களை நல்குவதற்கும் ஐ. நா. தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதி செயலாளர் நாயகம் இன்று 20 ஆம் திகதி வவுனியாவுக்கு விஜயம் செய்கிறார். வன்னியில் புலிகள் இயக்கத்தினரின் பிடியிலிருந்து தப்பி வந்துள்ள 35 ஆயிரத்து 756 பொதுமக்கள் மற்றும் மக்களுக்கென வவுனியாவில் அமைக்கப்பட்டிருக்கும் 13 நிவாரணக் கிராமங்களையும் அவர் பார்வையிடவுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐ. நா. பிரதி செயலாளர் நாயகம் நாளை
சனிக்கிழமை சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
No comments:
Post a Comment