
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கப்பலில் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பிலபல வர்த்தகர்கள் கொழும்பில் கைது செய்யப் பட்டிருக்கின்றார்கள் என்று கூறப்படுகிறது. வட மாகாணத்திற்குப் பொருட்களை ஏற்றுவதற்காகக் கப்பல் ஒன்றை சிலதினங்களுக்கு முன்னர் இங்கு கொண்டுவந்தவரான பிரபல வர்த்தகர் ஒருவர் நேற்று முன்தினம் வெள்ளவத்தையில் அவரது இல்லத்தில் இருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டதுடன் மற்றைய வர்த்தகர் கொழும்பு டாம் வீதியிலுள்ள அவரது வர்த்தக நிலையத்திலிருந்து கூட்டிச் செல்லப்பட்டுள்ளார். வெள்ளை வானில் வந்தோர் அவரை வலுக்கட்டாயமாகக் கூட்டிச்செல்ல முயன்ற சமயம் அங்கு பெரும் களேபரம் ஏற்ப்பட்டது எனினும் வந்தவர்கள் பொலிஸார் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து வர்த்தகரைக் கூட்டிச்செல்ல இடமளிக்கப்பட்டது. கைதான இரு வர்த்தகர்களும் கொழும்புத் துறைமுகப் பொலிஸில் தடுத்துவைக்கப் பட்டிருக்கின்றனர் என்று தெரியவருகின்றது.
No comments:
Post a Comment