
கிழக்கு மாகாணத் தமிழ் மக்களுக்கு தேசிய ரீதியான அரசியல் பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்காகவே கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்ததாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கிலிருந்து தெரிவான தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களிலிருந்து அந்நியப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கு சென்றாலும் வரவேற்பதற்கு மக்கள் தயாராக இல்லை ஆகவே தான் கருணாவை ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தார் என்றும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதன் பின்னர் அங்குள்ள மக்கள் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்துகொள்ள வாய்ப்பளிக்கப்பட்டது பின்னர் மாகாண சபைக்கு அவர்களின் பிரதிநிதியைத் தெரிவு செய்யும் வாய்ப்பை வழங்கி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது. இப்போது அந்த மக்களுக்கு தேசிய ரிதியில் அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் முழு நாடுமே மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று தெரிவித்த பசில் ராஜபக்ஷ எம்.பி பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் அதனை கைவிட்டால் அவர் ஒரு சுயாதீன மனிதன். நாம் பயங்கரவாதத்தை எதிர்க்கின்றோமே தவிர தனி நபர்களை அல்ல என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment