Showing posts sorted by date for query T111. Sort by relevance Show all posts
Showing posts sorted by date for query T111. Sort by relevance Show all posts

Wednesday, March 24, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்...நடந்த வன்கொடுமைகள்! -கிறேசியன்!(பாகம் -13,14)

சென்ற் நிகலஸ் றோட்டைச் சேர்ந்த ஜேக்கப் என்பவர் எனது பகுதிக்குள் இருந்தார். அவருக்கு 5 குழந்தைகள், வயது 45 முதல் ஐம்பது இருக்கும். அவரிடம் விசாரித்தேன். சொன்னார், தம்பி, எனது தெருவில் நான் நன்றாக இங்கிலிஸ் கதைப்பேன். ஐ.பி.கே.எப். வந்ததிலிருந்து எங்கள் பகுதிக்குள் வரும் போது என்னை அழைத்துத்தான் கதைப்பார்கள். காரணம் அவர்களுக்கு தமிழ் தெரியாமல் இருந்தது. ஊரில் உள்ளவர்கள்தான் எனக்கு ஆங்கிலம் தெரியும் என்று அழைத்து வந்தார்கள்.

ஊரில் இருப்பவர்களை சந்தேகத்தில் பிடித்துச் சென்றால் சம்பந்தப்பட்டவர்களுடன் சென்று உயர் அதிகாரிகளுடன் ஆங்கிலத்தில் கதைப்பேன். பின்னர் அந்த வட்டாரத்தில் யாரையாவது பிடித்தால் என்னிடம் வந்து கேட்பார்கள், ஜேக்கப் அண்ண, “ ஒருக்கா வந்து ஆமிக்காரரோட கதைச்சு எப்படியாவது என்ர பிள்ளையை எடுத்துத் தாங்கோ” என்று.
நானும் அவயன்ர காம்புக்குப் போய் பிடிபட்ட பிள்ளையைப் பற்றி நல்லவிதமாகச் சொல்லி அவர எனக்குக் குழந்தையில் இருந்து தெரியும், எந்தத் தப்பும் செய்யாது என்று பொய் சொல்லி கூட்டிக் கொண்டு வந்து விடுவேன்.

அப்படி முன்பின் பார்த்திராத பிள்ளையளை நான் கூட்டிக் கொண்டு வந்து விட்டதுக்கு இப்ப இவையள் கேக்கினம், “உன்ர பிள்ளையை உன்ர மனிசிய ஐ.பி.கே.எப். க்கு கூட்டிக் குடுத்தியா” என்று. எந்த மனச்சாட்சியை வைத்து இந்த மாதிரி கேக்கினம் என்று தெரியவில்லை!

நான் எந்த இயக்கத்துக்கும் ஆதரவு கொடுத்ததில்லை. ஊர்ச்சனம்தான் ஐ.பி.கே.எப். ஐ இழுத்து வந்து எனது வாசலில் நிறுத்தினவையள். புலியின் ஆதரவாளர்கள்தான் அவர்களுடன் கதையுங்கோ என்று சொல்லி என்னை இப்படி மாட்டிவிட்டவர்கள். இங்கிலிஸ் படிச்சபடியால் வந்த வினை!

எனது நிலையை எடுத்துச் சொல்வதற்கு, அதனை செவிமத்து கேட்பதற்கு இவர்களில் யாரும் படித்தவர்கள் இல்லை. விசாரணை அதிகாரிகள் என்று வந்தவர்கள் கொழும்புச் சிறையில் தமிழ் பெடியங்களைக் கொன்ற சிங்களக் கைதிகள் போல இருக்கிறார்கள். விறகு கட்டையால் அடிக்கிறார்கள். கொழும்பில் விறகுகட்டை, அலவாங்குகளால்தான் தமிழ் கைதிகளை அடிச்சுக் கொன்றவர்கள் என்று கேள்விப்பட்டனான்.

ஒரு புலித் தம்பி கேட்டார், நீ எத்தனை புலிகளைக் காட்டிக் குடுத்தனீ? என்று. ஊரில் இருந்த புலிகளின் ஆதரவாளர்கள் ஏனைய புலி ஆதரவாளர்களை தங்களது பகையின் மூலம் காட்டிக் கொடுத்தார்கள். நான் ஐ.பி.கே.எப். பிடம் போய், தவறாக போட்டியில் சொல்லியிருக்கினம் என்று கூறி பிடித்து வைத்திருந்த புலி ஆதரவாளர்களை எடுத்து வந்தனான்.

இவையள் என்னவென்றால் ஐ.பி.கே.எப். போட உனக்கு என்ன வேலை? என்று கேட்டு கொடுமைப் படுத்துகின்றனர். இங்க பாருங்க தம்பி எனது அலகை என்று காண்பித்தார். மல்லி என்ற கொடிய மிருகம் தனது முரட்டுக் கையால் குத்தினதால் எனது அலகு ஒரு பக்கத்துக்கு இழுத்துக் கொண்டுவிட்டது என்று கூறி தனது இடது பக்கத்து தாடையைக் காண்பித்தார்.
உண்மையில் நான் அவரைப் பார்க்கும் போது அவரது தாடை வலது பக்கம் சரிந்து பக்கவாட்டாக இழுத்துக் கொண்டு இருந்தது.

இயற்கையிலேயே அவருக்கு இப்படித்தான் கீழ்வாய்ப் பகுதி அமைந்துள்ளது போலும் என்று நினைத்திருந்தேன். மண்ட மல்லியின் வேலைதான் இதுவென்று சொன்னபோதுதான் அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

2005ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் அவரது வீட்டுக்குச் சென்றேன். புலி விலங்குகளிடமிருந்து விடுபட்ட பின்னர் நான் அவரைப் பார்த்ததில்லை. ஒரு நாள் அவர் பற்றி நினைவு வந்தது. பார்த்து வரலாம் என்று தோன்றியது. பார்த்தேன், அவரது வாய் முற்றாகக் கோணலாகி கதைபேச்சு எதுவுமற்றவராகி, கைகளால் ஏதோ சொல்லவந்தார். பின்னர் அழுவதற்கு ஆரம்பித்து விட்டார். அவரது மூத்தமகள் போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர். முப்பத்தைந்து வயதை தாண்டியிருந்தார். ஏனைய பிள்ளைகள் திருமணமாகிச் சென்றுவிட்டனர்.

அவர் எதையோ சொல்ல பல தடவைகள் முயற்சித்தார். அவரால் முடியவில்லை. ஆறுதல் கூறி புறப்படும் போது என்னைக் கட்டித்தழுவி அழுதார். அவசரமாக ஓர் வெள்ளைத் தாளை எடுத்து எழுதினார். “புலிகளோட கவனம், அவர்கள் மனிதர்கள் அல்ல! கொடிய சாத்தான்கள்! எங்களுக்கு நடந்த கொடுமைகள் உலகத்துக்குத் தெரியாது, அப்படி உலகத்துக்குத் தெரிந்தால் தமிழருக்குத்தான் அவமானம். நான் மறந்துவிட்டேன். நீயும் மறந்துவிடு! ஜேசு உன்னைக் காப்பாற்றுவார். கடவுளை வணங்கு! இப்படி எழுதிக் காண்பித்தார். அந்தத் தாளை என்னுடனேயே எடுத்து வந்தேன்.

எவ்வளவு பெருந்தன்மை ஜேக்கோப் அவர்களுக்கு, தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை பழிவாங்க நினைக்காமல், மறந்துவிடு என்றும், தமிழர்களுககு இதனால் அவமானம் என்றும் சிந்திக்கும் அளவுக்கு ஓர் இனப் பற்றுக் கொண்ட மனிதரை இந்தப் புலிவிலங்குகள் விலங்கிட்டுக் கொடுமைப் படுத்தியுள்ளனர்.

தங்களைத் தவிர பிற இயக்கங்களையும், பொதுமக்களையும் புலிகள் எதிரிகளாகத்தான் பார்த்தனர். காரணம் சந்தேகம். குடும்பங்களுக்குள் சந்தேகம் தோன்றினால் அந்தக் குடும்பமே அழிந்துவிடும். அதே போன்றுதான் ஓர் இனத்தவருள் சந்தேகம் தோன்றினால் அந்த இனமே அழிந்துவிடும். தமிழருக்கு இது பொருந்தும். தீராத சந்தேகம் தீவிர பகையானது! ஜாக்கோப் அவர்களால் பலர் காப்பாற்றப்பட்டனர், ஜாக்கோப்பைக் காப்பாற்ற யாருமில்லை! விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை!

தொடரும்….

பாகம் -14

புலிகள் பிடித்துவைத்திருந்த தமிழ் இளைஞர்களில் ஏறக்குறைய மூவாயிரத்துக்கும் அதிகமானவர்களை கொலை செய்தார்கள். பிடித்து வராமல் அந்த அந்த ஊர்களில் வைத்தே மூவாயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களைக் கொன்றார்கள். மேலும் இயக்க ஆதரவாளர்கள், ஐ.பி.கே.எப். இருந்த போது அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என்று பொதுமக்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் வரை கொலை செய்தார்கள். ஐ.பி.கே.எப். வெளியேறிய 1990ஆம் ஆண்டில் தமிழ் இளைஞர்கள் மொத்தமாக ஒன்பததினாயிரம் பேர் வரை புலி விலங்குகளால் கொல்லப்பட்டார்கள்.

தமிழர்களைக் கொலை செய்வது புலிகளுக்கு பிறப்பரிமையாக்கப்பட்டது. 2009;ல் தமிழர்களை கூண்டோடு அழிப்பது சிங்கள இனத்துக்குப் பிறப்புரிமையாக்கப்பட்டது. எனது ஊரில் நடந்த ஓர் நிகழ்வைச் சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன். 1982ஆம் ஆண்டு நடந்தது.
எனது ஊரில் ஆசீர்வாமும் அந்தோனிப்பிள்ளையும் உறவினர்கள். ஓத்த வயதுடைய இவர்களது குழந்தைகள் ஆறாவது ஏழாவது வகுப்புகளில் படித்து வந்தனர். இந்த இரு மானவர்களுக்கிடையில் ஒரு நாள் கைகலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் வீடு வந்து சேர்ந்தது. ஆசீர்வாதமும் அந்தோனிப்பிள்ளையும் நேருக்கு நேர் சண்டையிட்டுக்கொண்டனர். இரண்டு பேருக்குமேi முகங்களில் காயம். இரண்டு பேருமே சவால் விட்டுக்கொண்டனர். உன்னை ஒரு கை பார்க்காமல் விடமாட்டேன். இதுதான் இவரது சவாலும்! ஆசீர்வாதம் தனது தரப்பில் பத்துப் பேரைத் திரட்டினார். இதைக் கேள்விப்பட்ட அந்தோனிப்பிள்ளை பதிலாக அவரும் பத்துப்பேரைத் திரட்டினார். அவரும் விருந்து வைத்தார். இவரும் விருந்து வைத்தார் அடியாட்களுக்கு. இரண்டு நாட்கள் விருந்துக்குப் பின்னர் ஞாயிறு மாலை அந்தோனிப்பிள்ளையின் வீடு நோட்டமிடப்பட்டது. அந்தோனிப்பிள்ளை அலேர்ட் ஆனார். அவரது அடியாட்களும் வந்து சேர்ந்தனர். தடிகள் கத்திகளுடன் மோதிக்கொண்டனர். யாரும் இறந்துவிட வில்லை. ஆனால் பயங்கரக் காயம்.

இரண்டு பகுதியினரும் ஆளுக்கொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆசீர்வாதத்தின் மனைவியிடமிருந்த தாலிக்கொடி காப்புச் சங்கிலி எல்லாம் அடவு கடைக்கும், விற்பனைக்கும் சென்றன. அதேபோல் அந்தோனிப்பிள்ளையின் நகைகளும் விற்பனைக்குச் சென்றன. இது மானப்பிரச்சினை, கழட்டடி தாலியை என்றுதான் நகைகள் கழற்றப்பட்டன. முதலில் பத்துப் பத்துப் பேருடன் ஆரம்பமான இந்தப் பகை இப்போது ஒவ்வொருப் பகுதியிலும், ஐம்பது பேராகிவிட்டது. மருத்துவ மனைக்குச் சென்றவர்கள் வழக்குகளைச் சந்தித்தனர். இரண்டு பகுதியினரும் சட்டத்தரனிகளை ஏற்பாடு செய்தனர். ஊரில் இரண்டு வசதியானவர்கள் சண்டையிட்டால், இரண்டு சட்டத்தரணிகள் பணக்காரர் ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே! இவர்கள் மருத்துவரையும் பணக்காரர்களாக்கிக் கொண்டிருந்தனர்.

ஒருபக்கம் மருத்துவச் செலவுகளைச் சந்திக்க வேண்டும். சட்டத்தரணிகளுடன் தற்காப்பு நடவடிக்கைகளையும் வழக்கில் உள்ள ஓட்டை உடசல்களையும் கண்டறிந்து வழக்கில் வெற்றி பெற வேண்டும். இதே திட்டத்தில்தான் அந்தோனிப்பிள்ளையும் செயற்பட்டு வருகிறார். ஒரு கிழமை போனது. மருத்துவமனையிலிருந்து அனைவரும் வீடு திரும்பினர். இந்த இரண்டு பகுதியினரையும் தூண்டி விடுவதற்கென்று பலபேர் இரவு பகலாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். உடனுக்குடன் இருபகுதியினரது திட்டங்களும் இருவரையும் சென்றடையும்இ ஊர் வாசகசாலையில் இதற்கென்றே ஆட்கள் கூடுவர். சண்டையில் யாரது பக்கம் நியாயம் இருக்கிறது என்பதுபற்றி விலாவாரியாகக் கதைப்பார்கள். பொதுவான விவாதம் ஒருபக்கம் இருக்க, ஆசீர்வாதத்தை தூண்டி விடுவதற்கும் அவர்கள்தான் நியாயம் அதிகமாக இருககிறது என்று கூறி அவரை உசுப்பேற்றி விடுவதற்கும் ஊரில் வெட்டிப்பேச்சு வல்லவர்கள் இருந்தனர்.

இறுதியில் ஊர் இரண்டு பட்டது. அடுத்த மோதலுக்குத் தயாரானார்கள் இருபகுதியினரும். இந்த நேரத்தில் வெளிநாடு சென்றிருந்த பாதிரியார் ஊர் திரும்பினார். ஆலயத்தில் இருந்தவர்களிடத்து விபரங்கள் கேட்டறிந்தார். ஊருக்குள் சென்று ஏனையோரை விசாரித்தார். இறுதியாக இரு பகுதியினரையும் ஆலயத்துக்கு வரும்படி அழைத்தார். இருவரும் தங்கள் குழுவினருடன் ஆலயத்துக்கு வந்து சேர்ந்தனர். குழுவினரை வெளியே இருக்கச் சொன்ன பாதர். ஆசீர்வாதத்தையும், அந்தோனிப்பிள்ளையையும் தனியாக உள்ளே அழைத்தார்.

அவர் முன் இருந்த நாற்காலியில் இருவரையும் அமரும்படி கூறினார். பாதரின் ஆணையில் உபதேசியார் மட்டும் நின்று கொண்டிருந்தார். பாதர் சொன்னார்: ஒரு வீரன் எப்போதும் தன் குற்றத்தை ஒப்புக் கொள்வான். கோழை ஒருபோதும் குற்றத்தை ஒப்புக்கொள்ள மாட்டான். தண்டனை கிடைத்துவிடுமோ மரியாதை குறைந்து விடுமோ என்ற அச்சத்தில் கோழை பொய்சொல்ல ஆரம்பிப்பான். உங்கள் இருவரிடத்திலும் வீரம் இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன்.

எனவே நாங்கள் மூவரும் ஐந்து நிமிடங்கள் அமைதியாக இருப்போம் என்று கூறி உபதேசியாரிடம் ஐந்து நிமிடத்தில் எங்களுக்கு நினைவூட்டவும் என்று சொல்லி பாதர் மௌனமானார். ஆசீர்வாதமும் அந்தோனிப்பிள்ளையும் அவர் போன்றே மௌனமானார்கள்.
ஐந்து நிமிடங்களில் உபதேசியார் நினைவூட்டினார். பாதர் ஆசீர்வாதத்தைப்பார்த்து, நீங்கள் சொல்லுங்கள். யார் மீது தப்பு? ஆசீர்வாதம் சொன்னார்: பாதர் என்மீதுதான் தப்பு! என்னை மன்னித்துவிடுங்கள்! அந்தோனிப்பிள்ளையைப் பார்த்து அந்தோனிப்பிள்ளை சொல்லுங்கள் யார் மீது தப்பு? பாதர் என்மீதுதான் தப்பு என்றார் அந்தோனிப்பிள்ளை. பாதர் சொன்னார்: நீங்கள் இருவருமே வீரர்கள். உங்கள் ஊரில் நான் பங்குத்தந்தையாக இருக்கப் பெருமைப்படுகிறேன்.

நீங்கள் இருவரும் சண்டையிடுவதால் சிலருக்கு சில நன்மைகள் கிட்டலாம். ஆனால் இழப்பு எங்கள் சமூகத்துக்குத்தான். சிறுபிள்ளைகளது பிரச்சனைகளை அவர்களுடனேயே தீர்த்துக் கொள்ளவேண்டும். நாம் பெரியவர்கள் மோதல் போடுவது மிருக சிந்தனைக்கு ஒப்பானது. பகுத்து அறிந்துகொள்ள அறிவு இருக்கும் போது ஆயுதங்களுக்கு என்ன வேலை இருக்கிறது. இங்கு எதைப்பற்றியும் நாங்கள் ஆராய வேண்டியதில்லை. நடந்தவையை மறந்து நீங்கள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழவேண்டும். நீங்கள் ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்லிக்கொள்ளுங்கள். இருவரும் சமாதானம் சொல்லிக்கொண்டனர். இருவரும் கைகோர்த்தபடி பாதரின் பின்னால் சென்றனர். வெளியே நின்ற குழுவினரிடத்து பாதர் சொன்னார்.

அன்பார்ந்த சகோதரர்களே! ஆசீர்வாதம் அவர்களுக்கும் அந்தோனிப்பிள்ளை அவர்களுக்கும் இருந்து வந்த பகை உணர்வு மறைந்துவிட்டது. அவர்கள் ஒற்றுமையாக வாழ சம்மதம் தெரிவித்துள்ளனர். அவர்களிடையில் இனிமேல் சண்டை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது உங்ளின் கடமையாகும். இவ்வளவு பெரிதாகிவிட்ட சண்டையை ஒரு நொடிப்பொழுதில் மறப்பதற்கு முன் வந்த ஆசீர்வாதத்தையும் அந்தோனிப்பிள்ளையையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்! எங்கள் ஊரில் இனிமேல் சண்டைகள் வரக்கூடாது. அப்படி வந்தால் அதனை முளையிலேயே நாங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நல்லதோர் நிகழ்வை நாம் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இன்று இரவு நானே உங்கள் எல்லோருக்கும் விருந்து வைக்கிறேன். அதில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று கூறி முடித்தார்.

ஆசீர்வாதம், உடனே பாதர் இந்த விருந்துக்கு நான் ஆடு ஒன்று தருகிறேன். பதிலுக்கு பாதர் நானும் ஓர் ஆடு தருகிறேன் என்று கூறி இருவரும் ஆடுகளைக் கொடுத்து அன்று இரவு விருந்து சிறப்பாக நடந்து ஊர் பெரும் அமைதி திரும்பியது.

இரண்டு மாணவர்களது சண்டை எங்கள் ஊரை இரண்டு பட வைத்தது. இரண்டு பிரிவாக ஊர் திரண்டு மோதுவதற்கு இருந்த தருணத்தில் பங்குத் தந்தை வந்தார். எங்கள் இனத்தைப்பற்றி நாம் சிந்தித்துப்பார்த்தால் இச்சம்பவம் எங்கள் இயக்கங்களுக்கு மிகவும் கச்சிதமாகப் பொருந்தும்!

இயக்கங்கள் மோதும் போது அதனைத் தடுப்பதற்கு யாரும் இருக்கவில்லை. எங்கள் இளைஞர்களும் ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை ஆகியோர் பங்குத் தந்தைக்கு மரியாதை கொடுத்தது போன்று யாருக்கும் மரியாதை கொடுத்ததில்லை. எங்கள் பங்குத் தந்தையால் ஊர் இரண்டுபட்டு நடக்க இருந்த மோதல் தவிர்க்கப்பட்டது. சமாதானம் ஏற்பட்டது.

இந்தப் பங்குத் தந்தைப் போன்று எங்கள் தமிழ் இனத்துக்கு ஓர் தலைமை இருந்திருந்தால் இயக்கங்களை அழைத்து அமரவைத்து வீரர் என்றால் தவறை ஒத்துக்கொள்வர் என்று விளக்கம் கூறியிருந்தால் இந்த இயக்க அழிப்பு நடவடிக்கையே நின்று போயிருக்கும். 1986ல் எலி வளை என்றாலும் தனி வளை வேண்டும் என்பார்கள். எங்கள் இனத்துக்கு என்று ஓர் தலைமை நிரந்தரமாக வேண்டும். அதை ஏற்படுத்த வேண்டியது இன்று எஞ்சியிருக்கும் தமிழ் மக்களது கடமையாகும். முன்பு புலிகள் எங்கள் இனத்தை வேட்டையாடியது போன்று இனி வருங்காலங்களில் சிங்கள இனத்தவர் எங்கள் இனத்தை வேட்டையாடாமல் இருக்க தகுதியுடையவர்களை இணைத்து தலைமை ஒன்றினை உருவாக்க வேண்டும்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 6,7

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8


1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 9

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -10)

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்!- கிறேசியன்! (பாகம் -11)

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -12)

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

தொடரும்...

Read more...

Wednesday, March 17, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -12)

ஒருவாரம் அந்தப்பக்கம் வராமல் இருந்தவர் பழையடி தனது கைவரிசையைக் காண்பித்துக் கொண்டுதான் இருந்தார். கே.டி.யின் சொந்த இடம் வட்டக்கச்சி, இவர் பலதரப்பட்ட ஒழுங்கீனங்களைச் செய்ததாகவும், புலி விலங்குகளின் கட்டுப்பாட்டையும் மீறி தன்னச்சையாகச் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, புலி இயக்கத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டதாகவும் அறிந்தேன்.

நான் இந்த மில் சிறைக்கு வந்த போது இருந்த கைதிகளில் பாதியளவு குறைந்து அந்தக் குறைந்த அளவைப் புதியவர்களைக் கொண்டு வந்து நிரப்பியிருந்தனர். நான் வருவதற்கு முன்னர் ஏறக்குறைய 1500 பேர்வரையில் புலி விலங்குகள் கொலை செய்துவிட்டதாக அறிந்தேன். நான் வந்த பின்னரும் இதே அளவு சகோதரர்களை புலி விலங்குகள் கொன்றிருப்பார்கள். விடுதலை செய்யப்படுபவர்கள் பகல் நேரங்களில்தான் அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்படி நான் வந்த இவ்வளவு காலங்களிலும் பகல் நேரத்தில் அழைத்துச் சென்று விடுதலை செய்யப்பட்டவர்கள் இரண்டுபேர் மட்டுமே.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்ன. எங்களுக்கு வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. செய்தித் தாள்கள் கிடையாது. வானொலி, ரி.வி எதுவும் கிடையாது. அவர்களது சித்திரவதை அவர்கள் கொடுக்கும் இரண்டு வேளை உணவு, அருகில் இருப்பவர்கள் சொல்லும் அவர்களது அனுபவங்கள், கால் விலங்கு இவைகள்தான் எங்களுடன் பிணைந்திருந்தன. நாங்கள் தினமும் பரிதாபப்படும் விடயம் அந்தக் குழிகளுக்குள் வாழும் சகோதரர்கள் பற்றியதுதான். தரையில் வைத்திருக்கும் எங்களுக்கே இவர்கள் இவ்வளவு கொடுமைகள் செய்திருக்கையில் அந்த குழிகளுக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு எப்படியான கொடுமைகளைச் செய்திருப்பார்கள் என்பது கற்பனைகூட செய்துபார்க்க முடியாது.
விடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்களை புலிவிலங்குகள் எதிரியாகக் கற்பனை செய்து பழிதீர்த்தார்கள். ஆனால் பொதுமக்களை இழுத்துவந்து எதற்காக பிற இயக்கங்களுக்கு உதவி செய்தாய் என்று கொடுமைப்படுத்தி கொலை செய்தது மனிதத் தன்மைக்கும் நியாயத்துக்கும் பொருத்தமில்லாதது.

என்னுடன் செட்டி என்றொரு சகோதரர் எனது பகுதியில் கால்விலங்குடன் பலதுயரங்களைச் சந்தித்து வந்தார். இவர் யாழ்ப்பாணம் கெனடி வீதியைச் சேர்ந்தவர். சிறந்த கடல் ஓட்டி, இவர் அனைத்து இயக்கங்களுக்கும் உதவிகள் பல செய்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் இலங்கை இந்திய நேவிகளின் கண்களில் படாமல் படகு ஓட்டக்கூடியவர். ஆயிரக்கணக்கானவர்களை இந்தியாவுக்கு படகுகளில் ஏற்றி கரைசேர்த்துள்ளார். இறுதியாக ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களையும் இந்தியாவில் இறக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் பெட்டிசன் வர இவரை அழைத்து வந்து கொடுமைகள் பல செய்தனர். இவர்க்கு நான்கு குழந்தைகள்.

இவருக்கு இழைத்துவிட்ட கொடுமைகளை அவர் என்னிடம் விபரித்தார். ஒவ்வொரு சம்பவங்களையும் விபரிக்கும் போதும் அவரால் அழுகையை அடக்கமுடியவில்லை. எனது குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பல தடவை கண்ணீர் வடித்தார். உண்மையில் அவர் தியாக உணர்வு கொண்ட பாமரனாக இருந்தார்.

அவர் என்னிடத்தில் கேட்டார்! எதற்காக புலிகள் இப்படி எல்லாரையும் கொல்லினம்? எல்லாரும் தனிநாடு கேட்டுப் போராடினவர்கள்தானே! நான் எலலாருக்கும் உதவியிருக்கிறேன். எனக்கு இந்த இயக்கங்களுக்குள் உள்ள வித்தியாசங்கள் என்னவென்றே தெரியாது! யாழ்ப்பாணத்தில் எல்லாரும் எல்லாருக்கும் உதவி செய்தினம், நானும் அப்படித்தான் உதவிசெய்தென். கடல் ஓடுவது. எங்களுக்கு நாடு கிடைக்க என்னாலான உதவியைச் செய்தேன். எனக்குப் பெரிய படிப்பறிவு கிடையாது. உடல் உழைப்பை எங்கள் இனத்துக்காக வழங்கினேன். இதில் என்ன குறையைக் கண்டனர் இந்தப் புலிகள். நான் முன்பு நினைத்தேன் புலிகள் இயக்கத்தினர் படித்தவர்கள், பண்புள்ளவாகள் என்று என்னைப் பிடித்துவந்த பின்னர்தான் தெரிந்தது, படிப்பறிவு மட்டுமல்ல, நாகரீகமே தெரியாதவர்கள் என்று. அவ்வளவுக்கு இவர்கள் அரக்கர்களாக இருக்கின்றனர்.

இப்போதே இவர்கள் இப்படி என்றால் நாடுகிடைத்தால்! எனது குடும்பத்தையே அழித்துவிடுவார்கள். நான் இல்லாமல் எனதுக் குடும்பத்தினர் உணவுக்கே கஸ்ரப்படுவார்கள். அவர்களுக்கு யார் உணவு கொடுப்பது? என்னைப் பார்ப்பதற்கு கண்டிப்பாக வந்திருப்பார்கள். இந்த மிருகங்கள் அவர்களைக் காட்டவே இல்லை. எனது மூத்த மகள் என்னைக் கொண்டு வந்த அன்றே புலிகளின் ஒப்பிசுக்கு முன்னால் நின்று சண்டை போட்டவள். தாயை விட என்னுடன்தான் பாசமாக இருப்பாள். நான் இல்லாமல் பள்ளிக்கூடம் கூட போயிருக்கமாட்டாள். எப்படியாவது அவளைப் பள்ளிக்கூடம் போகச் சொல்ல வேண்டும், இந்த விலங்குகளிடம் கேட்டேன், “ஒரு கடுதாசி போடவேனும் என்டு” ‘உண்ட சறத்தைக் கழட்டி கடுதாசி எழுது” என்று ஏசிவிட்டுச் சென்றார்கள். பிள்ளைப்பாசம், குடும்பப்பாசம் பற்றி இந்த மனித விலங்குகளுக்கு எப்படித் தெரியப்போகுது” என்று அழுதான் செட்டி!

இவர் தினம் தினம் தன் உடல் எடையை இழந்துவந்தார். அதிஸ்ரவசமாக இவர் ஒரு நாள் விடுவிக்கப்பட்டார். செட்டி வீடு சென்ற நான்கு மாதங்களில் இறந்துவிட்டார். புலிவிலங்குகளில் சித்திரவதை அவரது நுரையீரலைப் பாதித்திருந்தது. பல மருத்துவர்களைச் சந்தித்தும் முடியாமல் போய் இறந்தார். இவரது இறப்பைப் கண்ட இவரது மனைவி ரூத் மற்றும் குழந்தைகள் புலிகளை வாழ்த்தியிருப்பார்கள்!!

செட்டி எனக்குச் சொன்ன விடயங்கள் அப்பாவித்தனமாக இருந்தாலும் அதில் மறைந்திருக்கும் நியாயம் தமிழர்களைச் சிந்திக்கவைப்பவை! இயக்கங்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டன. அவர்களுக்குள் என்ன போட்டி என்றே மக்களுக்குத் தெரியாது. ஆனால் இயக்கங்களுக்கு உதவிய பொதுமக்களைச் சித்திரவதை செய்வதைத் தடுத்து நிறுத்துவது யார்? தமிழர்களை வழிநடத்த தமிழருக்கென்று நியாயமான தலைமை என்று இல்லாமல் போனதுதான் தமிழினத்தின் இன்றைய நிலைக்குக் காரணம் என்றே நினைக்கிறேன்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 6,7

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8


1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 9

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -10)

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

தொடரும்…......

Read more...

Tuesday, March 16, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்!- கிறேசியன்! (பாகம் -11)

சூனா. பானா. தமிழ்ச்செல்வன் அரசியல் தலைவராகி வெளிநாடுகளுக்குச் சென்று பல்லிளித்து வந்ததைத் தவிர வேறு ஏதும் செய்ததில்லை. அரசியல் என்றால் புன்னகைப்பதுதான் என்று இவர் கண்டுபிடித்திருந்தார் போலும். அன்று என்னைத் தாக்கும் போது அவரது முகத்தை நான் நேராகப் பார்த்தேன். மிகவும் கொடூரமானதும், அசிங்கமானதாகவும் இருந்தது.

அங்கே இருந்த ஏனைய இயக்க அங்கத்தினருக்கும் புலி விலங்குகளுக்கும் தன்னை ஓர் பொல்லாத விலங்கு என்று காண்பிப்பதற்காக என்னை அப்படிப் பலமாக அடித்துத் துவைத்தார். என்னை அவருக்கு யார் என்றே தெரியாது. அன்றுதான் இந்தப் பகுதிக்கு வந்தவர். தன்னை ஓர் சூரப்புலியாகக் காண்பிக்க பிறரை வருத்தினார். எனது கையால் ஒரு அடிக்குத் தாங்கமாட்டார் அந்தப் பலிலிளிக்கும் விலங்கு. கைது செய்யப்பட்டிருக்கும் இயக்க அங்கத்தினரைப் பார்வையிட வந்தவராம் அன்று. தனது வீரத்தையும் காண்பிக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவுதான் இது.

யுத்த நிறுத்த காலத்தில் இவர் நான்கு பஸ்களை உறவினர்கள் பெயரில் வாங்கி தொழில் நடத்திவந்தார். இவரது குழந்தை விளையாடுவதற்கு ஒன்றரை இலட்சம் ரூபாயில் லாப்ரொப் கம்யூட்டர் வேண்டி கொடுத்திருந்தார். சாதாரண புலிப் போராளி அங்கத்தினர் இதனைக் கண்டு வேதனை அடைந்தனர்.

புலிகளின் பெருந்தலைகள் எல்லோரும், சொகுசான வீடுகள், வாகனங்கள், ஆடம்பரப் பொருட்கள் என்று வன்னியிலும் ஐரோப்பியர் போன்று வாழ ஆரம்பித்தனர். இந்த வாழ்க்கையை முன்நின்று நடத்திக் காட்டியவர் தமிழ்ச்செல்வன்தான். இவரது அந்த இரக்கமற்ற கொடுந் தாக்குதலை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அவர் இறந்த போது பலர் கவிதைகள் பாடினர். இப்படியான கொடியவர்களும் நல்லவர் போல் உலகத்தை ஏமாற்றியுள்ளனர் என்று கண்டேன்.

இந்த அடிக்கும் அதே மருத்துவர் தயாபரன் வின்ரோஜன் தடவி எனக்கு ஆறுதல் கூறினார். தமிழ் செல்வன் இதற்கு முன்னரும் ஒரு தடவை இங்கு வந்து ஒரு பெடியனைப் போட்டு தாறுமாறாக அடித்துவிட்டுச் சென்றார். அவருக்கும் இந்தப் பகுதிக்கும் எந்தவிதச் சம்மந்தமும் இல்லை. இங்கு கைதிகளை மிகவும் சுதந்திரமாக விட்டுள்ளனர். தன்னிடம் ஒப்படைத்தால் காலில் விலங்குபோட்டு இப்படி இருக்கவைத்திருக்க மாட்டேன், வெளவால் போல அனைவரையும் தலைகீழாகத் தொங்கவிட்டிருப்பேன் என்று கூறிச் சென்றார் என்று என்னிடம் கூறினார்.

இப்படியாக ஒருவாரம் கழிந்தது. ஒருநாள் இரவு ஒரு சக கைதிக்கு வயிறு வலி ஏற்பட்டது. காலை மாலை இருவேளை தவிர ஏனைய நேரங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்க அவர்கள் அனுமதிப்பது கிடையாது. அந்தச் சகோதரன் வலியில் தான் கழிவறை செல்லவேண்டும், இங்கு சொப்பின் பைகிடையாது எனவே என்னை வெளியிலே கூட்டிச் செல்லுங்கள் என்று சத்தமிட்டார். காவல் விலங்கு அதற்குச் சம்மதிக்காமல் சத்தம் போட்டாமல் இரு! சத்தம் போட்டால் அடிவாங்குவாய் என்று கூறிச் சென்றார். இரவு அனைவரும் தூங்கிவிட்டோம். அந்தச் சகோதரன் அம்மண்டபத்தின் உள் ஓரத்தில் மலம் கழித்துவிட்டார்.

காலையில் புலி விலங்குகள் வந்தனர். யார் மலங்கழித்தது என்று கேட்டனர். பதில் சொல்ல யாரும் முன்வரவில்லை, உங்கள் அனைவருக்கும் இதற்காகத் தண்டனை உண்டு என்று கூறிவிட்டுச் சென்றனர். மாலை உணவு வழங்கப்பட்டப் பின்னர் அனைவரையும் எழுந்து நிற்கும்படி கூறினர் விலங்குகள். அனைவரும் எழுந்து நின்றோம். தலைக்கு மேலே கைகள் இரண்டையும் உயர்த்திக்கொண்டு நிற்கும்படி கூறினர்.

மாலை நான்கு முப்பது மணியளவில் இந்த உத்தரவைப் போட்டனர். ஒரு மணி இரண்டு மணி நேரமல்ல 16மணி நேரம் யாரும் கையைக் கீழே கொண்டுவரக்கூடாது. அருகில் இருக்கும் சுவரில், அல்லது தூணில் சாயக்கூடாது, பத்துக்கும் மேற்பட்ட புலி விலங்குகளை இதற்காகவே காவலுக்குப் போட்டனர். வலி தாங்காமல் கைகளைக் கீழே கொண்டு வந்தவர்களுக்கு அடிவிழுந்தது. 3-4 மணி நேரங்களுக்கு மேல் என்னால் தொடர்ந்து நிற்கமுடியவில்லை. எதிர் முனையில் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் என்னைப் பார்த்து அழுதுகொண்டு நின்றார். இரவு 10மணியைக் கடந்ததும் ஏறக்குறைய 10பேருக்கு மேல் நிலத்தில் இருந்து விட்டனர். இதைப் பார்த்துவிட்ட புலிவிலங்குகள் ஓடிவந்தனர். நிலத்தில் இருந்தவர்களைத் தாக்கினர், எங்களைக் கொன்று விடுங்கள் என்று கத்தினார்கள் நிலத்தில் இருந்தவர்கள்.

இந்தக் கதறல்கள் எவற்றினையும் அவர்கள் காதில் வாங்கவில்லை. தொடர்ந்து அடித்து அவர்களை எழுந்து நிற்கவைத்தார்கள். எனது தோழ்கள் இரண்டும் வலியெடுத்து விறைத்துவிட்டது. கைகளை நேரே தூக்காமல் தலையின் மேல் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்துக்கொண்டேன். இதைபோன்று அனைவரும் வைத்திருந்தனர். உறக்கம் உடலைத் தள்ளாட வைத்தது. புலிவிலங்குகள் ஆள்மாறி ஆள்மாறி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். சிலர் தள்ளாடி மற்றவர் மீது விழுந்தனர். இப்படியாக இரவு முடிந்தது.

காலையில் வழக்கம் போல் கடன் கழிக்க வரிசையாகச் சென்று முடித்துவிட்டு வந்தோம். இப்போது கூட விலங்குகள் திருப்தியடையவில்லை. மீண்டும் கைகளைத் தூக்கிக்கொண்டு நிற்கும்படி கூறினர். அவர்கள் உத்தரவுபடி கைகளை தலைக்கு மேலாக உயர்த்திக்கொண்டு நின்றோம். காலை 8.30 மணியளவில்தான் நிலத்தில் அமரும்படி கூறினர். அப்படி நிலத்தில் அமர்ந்தவர்கள் இருந்தபடியே உறங்கலாயினர். இதைக் கவனித்த விலங்குகள் மீண்டும் தடிகள் எடுத்து வந்து உறங்கியவர்களை அடிக்கத் தொடங்கினர்.

பகல் நேரத்தில் நித்திரை கொள்ளக்கூடாது கைதிகள் என்பது அவர்களது சட்டமாம். கொடுமைப்படுத்த வேண்டும் என்பது கொள்கையானால் அனைத்துமே சட்டம்தான்! மிருகவதை என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அது என்னவென்று தெரியாது. இந்தப் புலி விலங்குகளிடம் தான் அதன் உண்மைநிலையைக் கண்டேன். இப்படியான ஓர் தண்டனையைக் கண்டு பிடித்து நடைமுறைப்படுத்திய புலி விலங்கின் பெயர் ரவி என்பதாகும். இவர் செம்படை சலிமுக்கு அடுத்தப்டியான பதவியில் சில காலம் இருந்தார். பின்னர் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார் என அறிந்தேன்.

மீண்டும் பல நாட்கள் இதே போன்று பலதரப்பட்ட தாக்குதல்கள், சித்திரவதைகளுக்கிடையில் வழக்கம் போல் கே.டி. வந்து பலரது மூக்குகளை உடைத்துக் கொண்டிருந்தார். கே.டி. உள்ளே வரும்போது அங்கிருக்கும் சகோதரர்கள் தங்கள் தலைகளைக் கீழே சரித்துக்கொள்வார்கள். கே.டி. திரும்பி வெளியே செல்லும் வரை தலையை நிமிர்த்திப் பார்க்கவேமாட்டார்கள்.

ஒருநாள் நான் விசயம் தெரியாமல் கே.டி.யைப் பார்த்துவிட்டேன். சைகையால் வா என்று அழைத்தார். வேறு வழியில்லை, எழுந்து சென்றேன். அப்பையா அண்ணன் சொன்னது உடனே நினைவுக்கு வந்தது! எனது மூக்கை எப்படிப் பாதுகாப்பது என்று தெரியவில்லை! மூக்கைப் பாதுகாக்கப்புறப்பட்டால் உடல்ப் பாகங்கள் பழுதடையும், ஒரு தடவை வலிதானே! வருவது வரட்டும் என்று அந்த விலங்கின் முன் நின்றேன்.

தூசன வார்த்தைகள் பேசி தனக்குத் தானே கோபத்தை வரவழைத்து தனது உள்ளங்கையால் என் மூக்கின் மீது பலமாகக் குத்தினார். மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியது, போய் இரடா என்றார், தரை முழுவதும் இரத்தம் வடிய நான் மீண்டும் எனது இருப்பிடத்தில் இருந்தேன். இரத்தத்தைத் துடைக்க எந்தவித துணியும் கிடையாது. எனது சறத்தைக் கழற்றி இரத்தத்தைத் துடைத்தேன். மறுநாள் காலை கடன் கழித்த பின்னர்கூட அந்தச் சறத்தைக் கழுவ முடியவில்லை. ஐந்து நாட்கள் கழித்துத்தான் குளிப்பதற்கு அனுமதித்தனர். அன்றுதான் இரத்தக்கறை படிந்த சறத்தைக் கழுவினேன்.

வாரத்தில் இரண்டு மூன்று தடவை வந்து மூக்குடைக்கும் கே.டி. இப்போது தினமும் வர ஆரம்பித்தார். காலைக் கடன் கழித்துவிட்டு வரும் சகோதரர்களுக்கு வாசலில் நின்று கெட்டவார்த்தைகள் பேசி பெருத்த தடி ஒன்றினால் அடிப்பார். தொடர்ந்து ஒரு வாரமாக இந்தப் பணியை கே.டி. என்ற விலங்கு செய்து வந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவாளர் தர்மலிங்கம் என்பவர், வயது 45க்கு மேல் இருக்கும். வழக்கம் போல் காலைக்கடன் முடித்து வரும்போது கே.டி. வரிசையில் வருபவர்களுக்கு ஓர் தடிப்பான தடியினால் அடித்துக்கொண்டு நின்றார். தர்மலிங்கம் அவர்கள் வந்ததும் அவரை அடிக்கும் போது அவர் தனது இடது கைகளினால் தடுத்து விட்டார். கே.டி.க்கு கோபம் வந்துவிட்டது. தர்மலிங்கம் அவர்களைத் தள்ளிவிட்டார். கால்சங்கிலி தடுக்க அவர் கீழே விழந்தார். சற்று தள்ளி ஓர் மண்வெட்டி இருந்தது. அந்த மண்வெட்டியை எடுத்து பிடியை நிலத்தில் குத்திக் கழற்றினார். அந்தப் பிடியினால் தர்மலிங்கம் அவர்களைத் தாக்குவதற்கு ஆரம்பித்தார். முழங்கைக்குக் கீழ் உடைந்தது. அவர் மீது பட்ட ஒவ்வொரு அடியும் அருகில் நின்ற அனைவரையும் திகைக்க வைத்தது. புலி விலங்குகளும் இதனை தள்ளி நின்று ரசித்துக் கொண்டிருந்தனர்.

மறுநாள் இச்சிறையின் பொறுப்பாளர் சலீம் வந்தார். கே.டி.யை அழைத்து இனிமேல் இந்தப்பக்கம் வரக்கூடாது என்றும் யாரைக் கேட்டு அவரை அடித்தனீ என்றும், நீ இங்கு வரும்போதெல்லாம் இவர்களை அடிக்கிறாய் என்று ஏக வசனத்தில் திட்டி அனுப்பிவைத்தார். ஆனாலும் கே.டி. இந்த உத்தரவை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒருவாரம் அந்தப்பக்கம் வராமல் இருந்தவர் பழையடி தனது கைவரிசையைக் காண்பித்துக் கொண்டுதான் இருந்தார்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 5

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 6,7

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8


1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 9

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -10)

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

தொடரும்…

Read more...

Monday, March 15, 2010

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -10)

1987 ஆகஸ்ட் மாதத்தில் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான குமரப்பாவும், புலேந்திரனும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்குச் சென்று வரவேண்டும் என்று விண்ணப்பித்திருந்தனர் அமைதிப்படையிடம். தரைமார்க்கமாகச் செல்வதற்கு பாதுகாப்புகள் அப்போது இல்லை. எனவே உலங்கு ஊர்தியில் இவர்களை அழைத்துச் சென்றுவர ஐ.பி.கே.எப். ஏற்பாடு செய்தது.

அதன்படி இந்த இருவரும் உலங்கு வானூர்தியில் மட்டக்களப்புக்குச் சென்றனர். அங்கே ஒருமணி நேரம் தங்கிவிட்டு மீண்டும் ஊர்தியில் ஏறும்போது ஒரு பெண்ணை அழைத்து வந்து ஏற்றினர். இராணுவக் கெலிகாப்ரரில் பெண்களை ஏற்றக் கூடாது என்று சட்டம் உள்ளது. பைலட் ஏற்றுவதற்கு மறுத்தார். குமரப்பா முடியாது ஏற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தார். பைலட் ரேடியோவில் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டார். அவர்களும் பலருடன் ஆலோசித்துவிட்டு ஏற்றிக்கொண்டு வரும்படி பைலட்டுக்கு அனுமதி வழங்கினர்.

பின்னர் அதே கெலிகாப்ரர் திருமலைக்கு வந்தது. அங்கும் ஒரு பெண்ணை ஏற்றினார் புலேந்திரன். ஊர்தி யாழ்ப்பாணம் வந்தது. இரு நாட்கள் கழித்து அப்படி அழைத்துவரப்பட்ட பெண்களுக்கும் குமரப்பா, புலேந்திரனுக்கும் பிரபாகரன் தலைமையில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. ஐ.பி.கே.எப். இவர்களுக்கு பெண் அழைக்கும் வேலையைக் கூட வெட்கப்படாமல் அவர்கள் சட்டத்தையும் மீறி செய்தனர்.

திருமணம் நடந்த ஒருமாதத்தில் அந்தப் போராளிகளை இறந்து போகும்படி அவர்களது தலைவர் விசம் கொடுத்து உத்தரவிடுகிறார்! எதற்காக? கொழும்புக்குக் கொண்டு சென்றால் அவர்களைச் சித்திரவதை செய்து விடுவார்கள். அவற்றை அந்தப் போராளிகள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களை அதிலிருந்து காப்பாற்ற தலைவர் கண்ட வழி மரணம். ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். எந்த மடையன் இப்படி ஓர் உத்தரவினைச் செயற்படுத்துவான்? தனது குழந்தைகள் இவ்விதம் அகப்பட்டால் எந்தப் பெற்றோரால் இந்த வழிதான் சிறந்த வழி என்று தங்கள் குழந்தைகளை இறந்து போகும்படி கூறுவாரா? சக தோழனை ஓர் தலைவன் காப்பாற்றுவானா? அல்லது இறந்து போ என்று கூறுவானா? யாரையும் எந்த நேரத்திலும் கைவிட்டுதான் லாபத்தைப் பார்ப்பார் இந்தத் தலைவர்.

இந்தப் 12 பேரும் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டதனால் புலிகளுக்குக் கிடைத்த லாபம் என்ன? தமிழர்களுக்குக் கிடைத்த லாபம் என்ன? விளலுக்கு இறைத்த உயிர்களானதா இல்லையா? இளம் வயதில் அவர்களது மனைவியர் விதவைகள் ஆக்கப்பட்டனரா இல்லையா? ஒரு தலைவர் தன் சகாக்களை அபாயத்திலிருந்து காப்பாற்றுவானா அல்லது எதிரி செய்ய வேண்டிய வேலையை இவரே செய்வாரா? தனது சகாக்களைக் காப்பற்ற முடியாதவரா தன் மக்களைக் காப்பாற்றப் போகிறார். அந்த இளைஞர்களை செத்துப் போகும்படி உத்தரவிட்டது மன்னிக்க முடியாத குற்றமாகும். இவை கொலை குற்றமாகும்.

சரி தலைவருக்குத்தான் அறிவு இல்லை. அரசியல் ஆலோசகர், அரசியல் ஞானி, கலாநிதி, தத்துவ வித்தகர். விஸ்கி மாஸ்ரர் என்று பல பதவிகளை தன்னகத்தே வைத்திருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்குக் கூட சுய அறிவு இருக்கவில்லை. 12 பேரைக் கொலை செய்யத் தூதுவனாக தானே சென்று, குப்பிகளைக் கொடுத்து மரண தண்டனை வழங்கிவிட்டு வந்து பின்னாளில் அதனைப் பெருமையாக வேறு சொல்லிக்கொண்டார். மகா மோசமான இந்தச் சம்பவத்தை உலகப் பிரசித்திப் பெற்ற சாதனையாக விபரித்தனர் இந்தக் கொலையாளிகள்.

அற்ப பிரச்சினைக்காக தங்கள் சக வீரர்களைப் பலி கொடுக்கும் இவர்கள் மக்களை எப்படி மதிப்பார்கள்? குமரப்பா, புலேந்திரன் போன்றோர் கொல்லப்பட்டதற்கு உள் இயக்க முரண்பாடே அல்லாமல், வேறெந்தக் காரணமும் இல்லை! தங்கள் நலனுக்காக எத்தனை ஆயிரம் பொதுமக்களையும் பலிகொடுக்கத் தயங்கமாட்டார்கள். அதுதான் நடந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில்.

இந்திய அமைதிப்படை கொலை செய்யவில்லை, கற்பழிக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை, புலி விலங்கு அங்கத்தினரும் கற்பழித்தவர்கள்தான். அவர்களுக்கு புலித் தலைவர்கள் தண்டனை வழங்கியுள்ளனர். செல்வாக்கு மிக்கவர்கள் தண்டிக்கப்படாமல் கண்டுகொள்ளாமல் விடபட்டனர். ஐ.பி.கே.எப். கற்பழித்துவிட்டது என்று பிரசாரம் செய்யப்பட்டது. தங்கள் அங்கத்தவர்களின் கற்பழிப்புகளை பிரசாரம் இல்லாமல் மறைக்கப்பட்டது. எனவே மேற்கண்ட பாடல் புலிகளுக்குத்தான் பெருத்தமானதே தவிர ஏனைய இயக்கத்தினருக்கு அல்ல! தேனிசை செல்லப்பா பாடிய பாடல் புலி நடந்துவந்த பாதையினைத் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

துணுக்காய் வதைமுகாமில் குழிகளுக்குள் வைக்கப்படும் ஏனைய இயக்க அங்கத்தினருக்கென்று தனியாக மூன்று விலங்குகள் பொறுப்பாக இருந்தனர். றோஸ், பூட்டோ, பாபு ஆகிய இந்த மூன்று பேரும்தான் குழி தோண்டி மனித வதைசெய்யும் நிபுணர்கள். அங்கிருக்கும் அனைத்துக் குழிகளையும் வெட்டியவர்கள் பிடித்துவரப்பட்ட கைதிகள்தான். இந்தக் குழிகளுக்குள் மொத்தம் எத்தனை பேர் வைக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியாது. எனது கணக்கின்படி ஏறக்குறைய முன்னூறு பேர் வரை இவ்விதம் குழிகளுக்குள் இருந்திருப்பார்கள்.

இந்த வதை முகாமில் வைக்கப்பட்டிருந்தவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள்தான் அதிகமாக இருந்தனர். ஈ.என்.டி.எல்.எப். தோழர்கள் மொத்தம் நூறுபேர் வரை இருந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் குமார் (கொட்டடி), குகன் (யாழ்ப்பாணம்), விக்கி (கிளிநொச்சி), நியூற்றன் (பாசையூர்) பாப்பா (பாசையூர்), வேதநாயகம் (பாசையூர்) நிக்கான் (யாழ்ப்பாணம்) போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் விக்கியைத் தனிக் குழி ஒன்றில் வைத்திருந்தனர். புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முசல்குத்தியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழிகளில்தான் இருந்தனர்.

இப்படிக் குழிகளில் இருந்த பெரும்பாண்மையானவர்களை புலிவிலங்குகள் கொன்று விட்டனர். இவர்கள் அனைவரும் பலவிதமான கொடுமைகளை அனுபவித்தனர். நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு இந்தச் சித்திரவதைகள் இருந்தன. கல்வி, அறிவு, பழக்கவழக்கம், மனிதப்பண்பு, மனித உரிமை, நாகரீகம் போன்ற அனைத்தையும் அறியாத இந்தப் புலிவிலங்குகள் சிறைச்சாலை நடத்துகின்றனர். அகப்பட்ட அனைவருமே இவர்கள் பார்வைக்கு விலங்குகளாகத் தென்பட்டனர் என்றால் தவறில்லை.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன, வாரம் முப்பது முதல் நாற்பது பேர்வரை புதியவர்களைப் பிடித்துவருவார்கள். இடநெருக்கடி ஏற்படும் போது, அதே அளவு சகோதரர்களை இரவு வேளை வெளியே அழைத்துச் செல்வார்கள். அவர்களை முளங்காவில் பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்று எரித்துவிடுவார்கள் என்று கூட இருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஒருநாள் இரவு 10மணியளவில் ஒருவரோடு ஒருவர் கதைத்துக் கொண்டிருந்தனர். புலி விலங்குகள் எல்லாரும் வெளியில் உலா வந்து கொண்டிருந்தனர். எனது பகுதியில் இருந்தவர்கள் கதைக்கும் சத்தம் அதிகரித்துக்கொண்டே போனது. திடீரென சிமெந்த் நிலத்தில் நன்கு காய்ந்த தடி ஒன்றினை ஓங்கி வீசி எறிந்தால் எழும் ஒலி ஒன்று கேட்டது. உடனே அனைவரினதும் கதைக்கும் சத்தம் நின்றது.

உள்ளே புலி சீருடை அணிந்த சராசரி உயரமான ஒருவர் வேகமாக வந்தார். அந்த வேளையில் நான் எழுந்து நின்று எனது சாரத்தை சரிசெய்து உடுத்தி அமர்வதற்குத் தயாரானேன். அனைவரும் அமர்ந்திருக்கையில் நான் மட்டும் எழுந்து நின்றது அவரை அவமதிப்பது போன்று தோன்றியதோ என்னவோ, அதே தடியை எடுத்துக்கொண்டு என்னை நோக்கி வந்தார். நான் அதற்குள் எனது இடத்தில் அமர்ந்து விட்டேன். வந்த வேகத்தில் அந்தத் தடியினால் என்னைத் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தார். அந்தத் தடி நான்கு அடி நீளமானதாக இருந்தது. அடி தாங்கமுடியாமல் நிலத்தில் உருண்டேன். அருகில் இருந்தவர்கள் விலகினர். நான் உருளுவதைத் தடுப்பதற்காக மறுமுனைக்குத் தாவி மீண்டும் வயிறு முதுகு என்று கண்ணில் பட்ட இடமெல்லாம் அடித்தார். ஐந்து ஆறு நிமிடங்கள் வரை என்னை அடித்துவிட்டு இறுதியில் அந்தத் தடியின் முனையால் என் முதுகில் ஓங்கி ஓர் குத்து குத்திவிட்டு, 'இங்க இருக்கும் எந்த நாயும் கதைக்கக் கூடாது' என்று மூச்சுவாங்கக் கத்திவிட்டு வெளியில் சென்றார். இவ்விதம் என்னைத் தாக்கியவர் வேறு யாருமல்ல, புன்னகை மன்னனும், அரசியல் செயலருமான சூனா. பானா. தமிழ்ச்செல்வன்தான். இவர் முதலில் கொலைகாரக் குழுவில்தான் இருந்தார். கால் பழுதுபட்ட பின்னர்தான் அரசியல் பிரிவுக்கு வந்து பல்லிளிக்க ஆரம்பித்தார்.

தொடரும்...

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 5

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 6,7

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 9

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

Read more...

Friday, March 12, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -6,7)

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரைக் காட்டி அவர் யார் என்று கேட்டேன்?அவர்தான் ஈ.பி.ஆர்.எல்.எப். யாழ்மாவட்டப் பொறுப்பாளர் தோழர். முகுந்தன் என்றார். அவர் பட்டிருக்கும் சித்திரவதையை ஒப்பிடும் போது நாம் பட்டவை சாதாரணமாகத்தான் தெரிந்தது எனக்கு. அவரிடமும் ஏதோ விசாரித்துவிட்டு தனியாக அமரவைத்தனர்.

ஏறக்குறைய இரண்டுமணி நேரம் கழித்து மீண்டும் ஒரு பெரிய பேப்பர் கட்டுடன் வந்தனர் வான்மீனும் ஏனைய இரு புலிகளும். எனது பெயர். உறவினர் பெயர் விவரங்கள், நண்பர்களது பெயர் விபரங்கள் போன்றவற்றை எழுதிப் பதிவு செய்து கொண்டனர். இரவு ஏழுமணியளவில் எனது பழைய இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை என்று எதுவும் இல்லை! வெறும் அடியும் சித்திரவதையும்தான் விசாரணை என்ற பெயரில் நடக்கிறது. விசாரணை நடத்துவதற்கான எந்தவிதத் தகுதியும் இல்லாத வெறும் விடலைக் கொலைகாரர்கள்தான் துப்பாக்கிகளுடன் அதிகாரிகளாக உருமாறியிருந்தனர்.

முக்கிய இருப்பிடமான கோடுகளால் வரையப்பட்ட அந்த சதுரத்துக்குள் நான் அமர்ந்தேன். எனக்கு அருகில் றொலக்ஸ் முதலாளி தனது சதுரக் கோட்டுக்குள் நிமிர்ந்து விறைப்பு ஏற்பட்டவர் போல் சப்பணி போட்டு அமர்ந்திருந்தார்.

எனது கால்களை மடித்துக்கொண்டு இருக்க முடியவில்லை. பின்பகுதியிலும் பலமாக அடித்ததால் என்னால் சரியாக அமர முடியவில்லை. வலியினால் சற்றுச் சரிந்தேன். காவலுக்கு நின்ற புலி ஒன்று நேராக என்னை நோக்கி வந்து தனது காலால் எனது விலாப்பகுதியில் உதைத்தார். “எழும்படா” “சரியா அந்தப் பெட்டிக்குள் இருக்கவேனும்” என்றார். மதியம் அடித்த அடிகளால் விலாபகுதியில் கண்டல் ஏற்பட்டிருந்தது. இவர் உதைத்ததும் சதை பிய்ந்து போவது போன்று இருந்தது. கைவிலங்கை அகற்றினால் என்னால் சரியாக இருக்க முடியும் என்றேன். “அது வேறையா” என்று இன்னும் ஓர் உதை விட்டார் நெஞ்சினில். எனது வாயை சற்று அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.

பகலிலும் சாப்பிடவில்லை. எனக்கு என்று உணவு எடுத்துவைத்திருந்தார் மூன்றாவது கோடுபோட்ட கட்டத்துக்குள் இருந்தவர். அந்த உணவுத் தட்டை என்னருகில் தள்ளிவிட்டார் அவர். ஆனால் எனது கைகளால் அந்தத் தட்டை எடுக்க முடியவில்லை. கையும் விரல்களும் விறைத்துப் போய் இருந்தன. நான் விரல்களை முன்னும் பின்னுமாக அசைத்தேன், வலிதான் ஏற்பட்டது. அந்த நேரம் இன்னும் ஓர் புலி வந்தது. உணவுத் தட்டையும் என்னையும் பார்த்துவிட்டு கைவிலங்கை கழற்றிவிடும்படி இன்னுமோர் புலிக்குச் சொன்னார். அவரும் வந்து கழற்றிவிட்டு விலங்கை எடுத்துச் சென்றார். தட்டில் இருந்த உணவை கைகளில் கொட்டும்படி கூறி அப்படியே உண்டேன். தண்ணீர் குடித்ததும் என்னை அறியாமலேயே சரிந்து விழுந்து உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலை எழுந்திருக்க முடியவில்லை. கண்விளித்த போது “ஏன்தான் உலகம் விடிகிறதோ” கடந்த இரவு உறக்கத்தில் இருந்திருந்தால் நல்லது போல் தோன்றியது அன்று. என்னால் எழுந்திருக்க முடியாது என்பதை அங்கே இருக்கும் மருத்துவம் பார்ப்பவர் புரிந்து கொண்டார் போலும், நான் கேட்காமலேயே அவர் “மூவ்” ஓயின்மென்ரைக் கொண்டு வந்தார். அவருக்கும் கால்களில் சங்கிலி விலங்கிட்டு வெல்டிங் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை தூக்கி அமர வைத்து அந்த கழிம்பை எனது உடலில் தேய்த்துவிட்டார்.

அவரது பெயரை மறந்து விட்டேன். அவர் யாழ்ப்பாணம் பொது மருத்துவ மனையில் பணியாற்றியுள்ளார். மருந்துகள்பற்றி அவருக்கு ஓரளவு தெரியும். இவர் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களுக்கு உதவிகள் செய்துள்ளார். அதனால் இவரை அடிமையாக்கி விலங்கிட்டு இங்கு வைத்துள்ளனர். அவரும் பல கண்டங்களைத் தாண்டி உயிருடன் இருப்பதாகக் கூறினார்.

காலைக் கடன் கழிக்க நான் கழிவிடம் செல்லவில்லை. ஏனையோர் தங்கள் கடன்களை கழித்து மீண்டும் வந்து அமர்ந்தனர். புலிகள் வந்தனர், வழக்கம் போல் பட்டியலில் உள்ள இலக்கங்களைப் படித்தனர். 10பேர் வரை எழுந்து சென்றனர். ஏனையோர் அவர்களது முகங்களை அனுதாபத்தோடு பார்த்தனர். அப்படி எழுந்து சென்றவர்களில் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளரும் இருந்தார். இலக்கத்தை அழைத்த புலியின் அருகில் சென்றதும் அந்தப் புலி எப்படியிருக்கிறாய் குகன்? என்று முதுகில் தட்டினார். றொலெக்ஸ் ஹொட்டலின் உரிமையாளின் பெயர் குகன் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

கால்விலங்குடன் 10பேரும் வரிசையாக நடந்து ஏற்கனவே என்னைச் சித்திரவதை செய்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திலெல்லாம் மரண ஓலம் கேட்க ஆரம்பித்தது. இந்த ஓலங்களைக் கேட்டு அங்கிருந்தவர்களுக்குப் பழகிவிட்டது போலும், மரணத்தை நோக்கி இருப்பவர்களுக்கு இவை எல்லாம் வலியாகத் தோன்றவில்லைப் போலும்.

சுமார் 10மணியளவில் மூன்று பேர் எங்கள் பகுதிக்கு வந்தனர். உள்ளே வந்த ஒருவர் அமர்ந்திருக்கும் ஒரு இளைஞரை சைகையினால அழைத்தார். இவர் எழுந்து புலியின் அருகில் சென்றார். இன்னும் அருகில் வரும்படி கூறினார். அருகில் சென்றதும் அந்தப் புலி தனது வலது உள்ளங்கையினால் அந்த இளைஞரது மூக்கில் குத்தினார். இரத்தம் சீறிட்டுப் பாய்ந்தது, “போய் இரடா இடத்தில்” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

எந்தவிதத் தொடர்பும், சம்பந்தமும் இல்லாமல் ஒருவர் வந்து இளைஞர் ஒருவரின் மூக்கை உடைத்துவிட்டுச் செல்கிறார். யார் இவர்? ஏன் இப்படிச் செய்துவிட்டுச் செல்கிறார்? என்பதை அறிய ஆவலாக இருந்தது. எனது சதுரக் கோட்டுக்கு இடது புறமாக 55, 60 வயது மதிக்கத் தக்க ஒருவர் இருந்தார். இவரை எதற்காக அழைத்துவந்துள்ளனர் என்று அவரிடமும் கேட்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே இருந்தது எனக்கு.
முதலில் மூக்குடைக்கும் நபரை அறிவோம் என்ற எண்ணத்தில் அவரிடம், “ஐயா உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன். “ அப்பையா” என்றார். அப்பையா அண்ண, இப்பவந்து ஒரு சகோதரனது மூக்கை உடைத்துவிட்டுப் போகிறாரே அவர் பெயர் என்ன என்று கேட்டேன்.

தன்னைச் சுற்றி நோட்டம் விட்டார் அப்பையா அண்ணன். தலையைக் குனிந்து கொண்டு சொன்னார், இவன் தான் கேடி. இவன் மகா கொடியவன், கொடோனுக்குள் வந்தால் இரத்தம் காணாமல் செல்ல மாட்டான். இன்றைக்கு மட்டும் தான் ஒரு தம்பியின் மூக்கை உடைத்துவிட்டுச் சென்றுள்ளான். கடந்த ஒரு கிழமையாக இவனைக் காணவில்லை, இன்றைக்குத்தான் வந்துள்ளான். ஒவ்வொரு நாளும் வருவான் தனது கண்ணில் யார் படுகின்றனரோ அவரை அழைப்பான் அருகில் சென்றதும் உள்ளங்கையின் அடிப்பகுதியால் மூக்கில் குத்துவான். மூக்கு உடைந்து இரத்தம் வந்தால்தான் விடுவான்.

தப்பிதவறி யாராவது கைகளால் தடுத்தாலோ, தலையை பக்கவாட்டில் சாய்த்தாலோ அவனுக்குக் கோபம் வந்துவிடும். தலை மயிரைப் பிடித்துக்கொண்டு வலது கையை மூடி நேராக மூக்கில் குத்துவான். இரத்தம் கண்டபின் மீண்டும் தலை முடியைப் பிடித்து முன்புறமாக இழுத்து தனது முழங்கையால் முதுகில் குத்துவான். புதிதாக வந்தவர்களைத் தவிர ஏனைய அனைவரும் இவனால் மூக்கு உடைக்கப்பட்டவர்கள்தான். எனது மூக்கையும் இரண்டுதடவை உடைத்துள்ளான். தம்பி உம்முடைய மூக்கையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் என்று எனக்கு ஆலோசனை வழங்கினார்.

இப்போ விசாரணைப் பகுதியில் அலறும் சத்தம் அதிகரித்துக் கொண்டிருந்தது, கேடியும் அப்பகுதிக்குச் சென்று அந்த இளைஞர்களைத் தாக்கிக் கொண்டிருந்தார். எங்கள் பகுதி காவல் புலிகளும் எதையோ சாப்பிட்டுக்கொண்டு விசாரணைப் பகுதியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். நான் அப்பையா அண்ணனிடம், அண்ண, உங்களை எதற்காகப் பிடித்து வந்தவையள்? என்று கேட்டேன்.

தம்பி, என்னுடைய மகளை வரதராஜப் பெருமாளின் தம்பி மூர்த்தி திருமணம் செய்துள்ளார். அவரைத் தேடிவந்த இந்தப் புலிகள் என்னை இழுத்துவந்து கொடுமைப்படுத்துகிறார்கள். உன்னை அடித்தது போன்று என்னையும் கொடுமைப்படுத்தினார்கள். பலதடவை என்னை, இப்படிச் சித்திரவதை செய்யாமல் கொன்று விடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறேன். கொல்கிறார்கள் இல்லை! என்று அழுவதற்கு ஆரம்பித்தார். நானும் அதற்கு மேல் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டேன்.

நான் விறைத்துப்போன எனது கைவிரல்களை முன்னும் பின்னும் ஆட்டி பயிற்சி செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருந்தேன். எனது பகுதிக்கு ஏறக்குறைய அறுநூறு பேருக்கும் மேல் இருந்தனர் விலங்குகள் இடப்பட்டு. மதிய நேரம் வெய்யில் அதிகமாகும் போது மனித வியர்வையும் அதிகரிக்கும். அந்தக் கோடவுண் முழுவதும் வியர்வை நாற்றம் ஏற்பட்டுவிடும், வெறும் உடலில் சட்டை எதுவும் யாருக்கும் கிடையாது. பலர் வெறும் சரத்துடனும், சிலர் வெறும் கால்சட்டையுடனும்தான் இருந்தனர். புலிகள் வரைந்த கோடுகளுக்கு நடுவில் அனைவரும் வரிசையாக அமர்ந்திருப்பதை எழுந்து நின்று பார்த்தால் ஆங்கிலேயர் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்களை அடிமைகளாக்கி விற்பனைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படும் திரைப்படக் காட்சிகள் நினைவுக்கு வரும்.

பிற்பகலில் உணவு வந்தது. சோறு, அதனுடன் சோயா பீன்சும் பருப்பும் கலந்த சாம்பாருக்கும் சொதிக்கும் இடைப்பட்ட ஓர் திரவமாக இருந்தது. நான் வீட்டினில் மூன்று பிளேற் சோறு சாப்பிடுவேன். இப்படி அதிகமாகச் சாப்பிடாதேயடா என்று அம்மா கூட அடிக்கடி சொல்வா, இவர்கள் கொடுத்தது பாதிப் பிளேற் அளவு சோறுதான். பிளேற்றைப் பார்த்ததும் இதயம் கனத்தது. இந்தச் சோற்றைச் சாப்பிட்டு எனது பசி எப்படி அடங்கப் போகிறது என்று பெரும் கவலையாக இருந்தது. வேறு வழி கிடையாது. வலித்துக் கொண்டிருந்த கைகளைப் பயன்படுத்தி சோற்றைக் குழைக்காமல் அள்ளி வாயில் போட்டு உண்டேன். சாப்பிட்டு முடிந்ததும் எல்லாரும் பெட்டிகளுக்குள் சரியாக அமரும்படி புலிக்காவலாளி ஒரு உரத்த குரலில் கத்தினார். அவரது உத்தரவுபடி நாங்கள் நிமிர்ந்து கோடுகளில் நடுவில் அமர்ந்தோம்.

மாலை ஆறுமணியளவில் விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட சகோதரர்களை அழைத்து வந்தனர் புலி விலங்குகள். நடக்க முடியாமல் நொண்டிக்கொண்டும், சரிந்த நிலையிலும், சிலர் கால் சங்கிலி தடக்கி விழுந்து எழுந்தும் எமது மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். எனக்கு அருகில் வந்து நின்றார் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் குகன்.

அவரால் நிலத்தில் அமர முடியவில்லை. அமருவதற்கு முற்பட்டவர் விழுந்து போவேனோ என்று பயந்தார். நான் சற்று அருகாமையில் நகர்ந்து எனது தோளில் கைகளை ஊன்றிக் கொண்டு அமரும்படி கூறினேன். அவரும் எனது தோளில் கையை வைத்தார். அவருக்கும் கைவிலங்கிட்டு அடித்திருப்பார்கள் போலும், ஐயோ, அம்மா என்று அலறிக்கொண்டு அமர முற்பட்டார். அவரது நிறை ஏறக்குறைய 120 கிலோவுக்கும் மேல் இருக்கும். அவர் கைவைத்த எனது தோள்பகுதி ஏற்கனவே புலி விலங்குகளின் அடியால் கண்டலாகி இருந்தது. குகன் அழுத்தி அமர்ந்ததில் எனக்கும் வலி அதிகமானது.

அமர்ந்ததும் குகன் அழுவதற்கு ஆரம்பித்தார். நான் எந்தத் தவறும் செய்ய வில்லை. ஈ.எபி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உயிர்தப்பிச் செல்ல உதவினேன். புலிகள் கூட என்னிடத்தில் உதவிகள் பெற்றனர். ஐ.பி.கே.எப். இருந்த போது புலிகளுக்கு உணவு கொடுத்துள்ளேன். காசு கொடுத்துள்ளேன், வேறுபல உதவிகள் கூட செய்துள்ளேன். தமிழ் இளைஞர்கள் கொல்லப்படும் போது அவர்களைக் காப்பாற்ற உதவி செய்தேன். அதற்காக இப்படிக் கொடுமைப் படுத்துகிறார்களே என்று மீண்டும் மீண்டும் விக்கலெடுத்து அழுதார்.

அவரது உடல் முழுவதும் சிவந்து இரத்தக் கண்டல்களாக இருந்தன. இவரை விசாரித்த புலிவிலங்கின் பெயர் அம்புறோஸ், துணைக்கு நின்ற புலி விலங்குகள் மஞ்சு மற்றும் கௌதமன் ஆகிய இருவரும் ஆவர். குகனை மிக அதிகமாகத் தாக்கியவர் மஞ்சுதான்.

குகன் எந்த இயக்கத்திலும் அங்கத்தினர் அல்ல, தமிழர்கள் அனைவரும் விடுதலைக்காக ஏதாவது ஓர் இயக்கத்தினை ஆதரித்தனர் என்பது நாடறிந்த உண்மை. தமிழ் மக்களது உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டது விடுதலைக்காகத்தான். விடுதலை இயக்கங்களை வழி நடத்தியவர்கள் தமிழ் மக்களது தியாக உணர்வினை சரிவரப் பயன்படுத்தத் தெரியாதவர்களாக இருந்தனர். தொண்டர்களும் உறுப்பினர்களும் தம்மை அர்ப்பணிக்க முன்வந்தனர். தலைமைகளுக்கிடையில் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, கூட்டுத் தலைமை என்பன போன்ற பொதுத் திட்டங்கள் இருந்ததில்லை. துப்பாக்கி ஏந்திய வல்லுநர்கள் ஏனையோரை அழித்துவிட்டு ஆதிக்க வாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்ள தமிழ் இளைஞர்கள் பலியிடப்பட்டனர்.
எனக்கு மருந்து தடவிய அதே தயாபரன் மீண்டும் வின்டோஜனுடன் வந்தார்.
(தொடரும்…)

(பாகம்-7)

எனக்கு மருந்து தடவிய அதே தயாபரன் மீண்டும் வின்டோஜனுடன் வந்தார். விசாரணை முடிந்ததும் இது வழக்கமாக நடைபெறும் சிகிச்சையாக இருந்ததால் அவரும் தமது கடமையை நிறைவேற்ற றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளருக்கும் எனக்கும் இடையில் வந்து அமர்ந்தார். குகன் அவர்களுக்கு மருந்து தடவ ஆரம்பித்தார். அவரும் வலி நிவாரணச் சொற்களான அம்மா, ஐயோ என்று முனகிக் கொண்டிருந்தார். புலி விலங்குகள் விலகிச் சென்று அவர்களுக்குள் ருசிகர கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது தயாபரன் அவர்களது வரலாறுபற்றி அறிந்துவிடலாம் என்ற ஆர்வம் மேலோங்கியது. “அண்ணே” என்று தயாபரன் அவர்களை அழைத்தேன். அவரும் திரும்பிப் பார்த்து என்னவென்று தலையை ஆட்டிக் கேட்டார். உங்களை எதற்காக இவையள் பிடித்துவந்திருக்கினம் என்று கேட்டேன்.

தயாபரன் தொடர்ந்தார் – தம்பி, எனது சொந்த ஊர் அரசடிவீதி, கட்டுடை, மானிப்பாய். நான் யாழ்ப்பாணம் பெரிய ஆசுப்பத்திரியில் வரவேற்புப் பிரிவில் வேலை செய்து வந்தேன். இயக்க உறுப்பினர்கள் யார் வந்தாலும் நான் முன்னின்று அவர்களுக்கு உதவி செய்வேன். முன்னர் புலிகள், ரெலோ, புளொட் என்று யார் வந்தாலும் விழுந்து விழுந்து உதவி செய்வேன்.

பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பல பேரை அழைத்துவந்தனர் ஆசுபத்திரிக்கு அவர்களுக்கும் நான் உதவிகள் செய்தேன். ஐ.பி.கே.எப். (இந்திய இராணுவம்) வெளியேறியதும் புலிகள் வந்து என்னைப் பிடித்து வந்தனர். எதற்காக என்னைப் பிடித்து வந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, “நீ எங்கட ஆக்கள ஈ.பி.க்கு காட்டி குடுத்து கொலை செய்திருக்கிறாய்” என்று பெட்டிசம் வந்திருக்கு. விசாரிச்சுப் போட்டு விடுறம் என்று கூறி இறுதியில் இந்த மரணக் குகைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

விசாரண முடிந்துவிட்டதா என்று கேட்டேன். எந்த விசாரணையும் நடைபெறவில்லை. காட்டிக் கொடுத்தாயா? கற்பழித்தாயா? கொள்ளையடித்தாயா? இவைதான் அவர்களது கேள்வி. என்னை பதினைந்து நாட்களுக்கும் மேலாக அடித்து சித்திரவதைச்செய்தனர். இங்கு வந்து செல்லும் புலிகள் அத்தனை பேரும் எனது உடலைப் பதம் பார்த்தவர்கள்தான். என்ன செய்வது தமிழனாக ஏனடா பிறந்தோம் என்று வருந்துவதைத் தவிர வேறு என்னத்தான் நினைப்பது என்று வருந்திச் சொன்னார்.

அதற்கிடையில் புலி விலங்குகளால் தாக்கப்பட்ட ஏனைய சகோதரர்கள் வலியினால் துடித்துக்கொண்டிருநதனர். அவர்கள் இவரை அழைத்தனர். அங்கு இருக்கும் அத்தனை பேருக்கும் இவர்தான் மருத்துவர். வின்ரோஜனில் சிறிது அளவு என்னிடத்தில் தந்து குகன் அவர்களுக்கு போடும்படி கூறிவிட்டு அவர் தனது கடமையைச் செய்ய அடுத்த சகோதரரிடத்துச் சென்றார்.

என்னிடமிருந்த வின்ரோஜனை குகன் அவர்களுக்கு தேய்த்தேன். விரல்களில் படாமல் உள்ளங்கையின் ஓரமாக கழிம்பை தேய்த்துவிட்டேன். அந்தக் கழிம்பு எனது கையில் படும்போது எனது வலிக்கும் மருந்தாக அமைந்தது. இரவு ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக்கொண்டு நித்திரையானோம்.

காலையில் கடன் கழிக்க வரிசையில் நின்றோம். அந்தவேளை அருகில் இருந்த கொடவுனிலிருந்தவர்களும் வரிசையாக காலை கடன் கழிக்க வந்திருந்தனர். இன்று குளிக்கும் தினம் என்று கூறிக்கொண்டார்கள்.

ஒன்றரை லிற்றர் கொள்ளளவு கொண்ட ரின் ஒன்றைக் கொடுத்தனர். காலைக் கடன் முடிந்து தண்ணீர் தொட்டிக்கு அருகில் வந்து வரிசையாக நிற்கும்படி கூறினர். 10 ரின் தண்ணீர் மட்டுமே எடுக்க வேண்டும். சவற்காரம் கிடையாது துடைக்க துவாய் கிடையாது, வெறும் தண்ணீரை தலையில் ஊற்றி கைகளினால் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஏற்கனவே உடல் அழுக்கேறி இருந்தது. தண்ணீர் ஊற்றியதால் ஈரமானதே தவிர அழுக்கு எதுவும் போகவில்லை. உடுத்தியிருந்த சரத்துடன் குளித்தேன். அனைவரும் அப்படித்தான் குளித்தார்கள். யாருக்கும் சவற்காரம் கிடையாது. குளித்து முடிந்ததும் சரத்தைக் கழற்றி பிழிந்து உதறிவிட்டு மீண்டும் உடுத்திக் கொண்டேன்.

இந்த வேளை அருகிலிருந்த கொட்டகைக்கு மேற்குப் புறத்தில் பல இடங்களில் குழிகள் வெட்டப்பட்டு அதன் மேல் நீலநிற பொலித்தீன் கொண்டு பந்தல் போல் அமைக்கப் பட்டிருந்தது. இடையிடையே பெரிய கிடங்குகளும் தென்பட்டன. ஏறக்குறைய 50அடி நீளம் 50அடி அகலம் 15 அடி ஆழம் வரையிலும் சில கிடங்குகள் இருந்தன. அவற்றிலிருந்து ஏணிகள் மூலம் விலங்குகள் இட்டு கழிப்பிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தனர்.

இது என்ன கொடுமை, நாங்கள்தான் கொடுமையில் உளல்கிறோம் என்றால் இவர்கள் படும் கொடுமை எங்களையும் விட அதிகமாக இருக்கும் போல் தோன்றிற்று. அந்தச் சகோதரர்கள் யாராக இருக்கும் என்று அறிய எனது மனம் அலைபாய்ந்தது. யாரிடத்துக் கேட்கலாம் என்று யோசிக்கும் வேளை, நடவுங்கள் கொடோனுக்கு என்றனர். மெதுவாக நடந்து இருப்பிடம் அடைந்தேன் குகன் அண்ணனும் அப்பையா அண்ணனும் குளித்துவிட்டு அதே ஈரச் சரத்துடன் வந்து அமர்ந்தனர்.

11மணியளவில் அரை றாத்தல் பாண் தரப்பட்டது பருப்புடன். இந்தச் சமையலைச் செய்வதும் எமது சகோதரர்கள் தான். இரண்டு வகையான சமையல் செய்யப்படும். கைதிகளுக்கு என்று தரக்குறைந்த சமையல், புலிகளுக்கென்று தனி மாமிச உணவு, இவற்றை சமைப்பது கைதிகள்தான். அவர்களுக்கான கால்விலங்கு ஏனையோரை விட அரையடி அதிகமாக விட்டு வெல்டிங் செய்யப்பட்டிருந்தது. புலி விலங்குகளுக்கு சமைக்கும் போது புலியின் நபர்கள் கதிரைகள் மீது இருந்து பார்த்துக் கொண்டிருப்பார்களென்று விபரம் கூறினார் அப்பையா அண்ணன்.

நான் இப்போது அங்கு இருக்கும் சகோதரர்களைப் பார்த்துப் புன்னகைக்க ஆரம்பித்தேன். சிலர் என்னைப் பார்த்து புன்னகைத்தனர். இந்தப் புன்னகைகள் மனதளவில் கிடையாது. உதட்டளவில் பதிலுக்கு ஆமோதிப்பது போன்று இருந்தது அவர்கள் புன்னகை. ஏனெனில் இவர்கள் அனைவரது இதயங்களும் அவர்களது கைகளில் இல்லை. புலி என்ற விலங்குகளின் கைகளில் அவர்களது உயிரும் உடலும் இருந்தன!

எனக்கு நேர் முன்வரிசையில் அமர்ந்திருந்தவரது பெயர் பிரசாந்த். இவர் றெலோ இயக்கத்தைச் சேர்ந்தவர். கிளிநொச்சி மாவட்டத்தின் ரெலோ இயக்க அரசியல் பிரிவுப் பொறுப்பாளராக இருந்தவர். இவரது காலில் தொடர்ந்து புண் இருந்து கொண்டே இருந்தது. கால்களில் கட்டைகளால் அடிக்கும் போது இரத்தக் கண்டல் ஏற்பட்டு புண்ணாகியிருந்தது. அதன் மேல் கால்விலங்கும் போடப்பட்டு வெல்டிங் செய்திருந்தபடியால், அந்த விலங்கு தொடர்ந்து அந்தப் புண்களில் உரசிக் கொண்டே இருந்தது. இதனால் இருப்பதும் எழுந்து நடப்பதும் அவருக்கு ஓர் தண்டனையாகவே இருந்தது.

இருந்தாலும் அவர் மனவுறுதியுள்ளவராக இருந்தார். இவர்களால் (புலிகளால்) என்னை சித்திரவதைச் செய்துக் கொல்லத்தான் முடியும், நாங்கள் அனைவரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். இறந்த பின் நாம் எங்கே போகிறோமோ அங்கேதான் இந்தப் புலிகளும் பின்னாளில் வரவேண்டும். அங்கே நான் அப்போ சீனியராக இருப்பேன் என்று எனக்கு விளக்கமளித்தார் பிரசாந் அவர்கள். எனக்கும் இவரது கூற்றுச் சரியாகத்தான் பட்டது. ஏன் பயந்து பயந்து வாழ வேண்டும், இவர் (பிரசாந்த்) சாகும் போது நானும் சேர்ந்து செத்தால் போகிற இடத்தில் சீனியராக இருக்கலாம், இந்த விலங்குகள் அங்கு ஒரு நாள் வரத்தானே வேண்டும் என்று நானும் சிந்திக்கலானேன்!

எனக்கு அருகில் இருக்கும் றொலெக்ஸ் உரிமையாளர் அவ்வளவாக கதைக்க மாட்டார். கேள்வி கேட்டால் மட்டுமே பதில் சொல்வார். அந்தப் பதிலும் இரண்டொரு வார்த்தைகளில் முடிந்துவிடும். மறுபுறத்தில் இருக்கும் அப்பையா அண்ணன் கதைக்கக் கூடியவர், புலி விலங்குகளுக்குப் பயந்து தலையைக் கீழே நோக்கிக் கொண்டுதான் கதைப்பார். அதனால் அவர் சொல்வது பாதி அளவுதான் விளங்கும்.

எனக்கோ அந்தக் கிடங்குகளில் இருக்கும் சகோதரர்களை யார் என்று அறிய வேண்டும் என்ற ஆவல் மிகுதியாக இருந்தது. எனக்குத் தெரிந்த யாராவது இருப்பார்களோ என்ற அச்சமும் இருந்தது. தனித் தனிக் குழிகளும் இருந்தன, பெருங் குழிகளும் இருந்தன. நாளைக்கு எப்படியாவது இதன் இரகசியத்தை அறிந்து விட வேண்டும் என்று தீர்மானித்தேன்.

நான் இருக்கும் மண்டபத்தின் மேற்குப் பகுதிக்குச் சென்றால், அதிலிருந்து முப்பது நாற்பது அடி தூரத்தில்தான் அந்தக் குழிகள் ஆரம்பித்தன. எப்படியாவது மேற்கு நோக்கி நகர வேண்டும். மறுநாள் நாள் நான் எதிர்பார்த்த மேற்கு நோக்கிய பயணம் தானாகவே நடந்தது. ஆம், புலி விலங்குகள் இங்கு இருப்பவர்களை தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பதற்கு விடுவதில்லையாம். ஒரே இடத்தில் இருந்தால் ஒருவருக்கு ஒருவர் பழக்கம் ஏற்பட்டு ஏதாவது திட்டங்கள் போட்டுச் செயற்படுத்த வாய்ப்பு உண்டு என்று யோசனை செய்து ஒரு முனையில் இருப்பவரை மறுமுனைக்கும் வடக்கில் இருப்பவர் கிழக்குக்கும் என்று தலைகீழ் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினர் அந்தப் புலி விலங்குகள்.

நான் எதிர்பார்த்திருந்த மேற்கு மூலைக்குச் சென்று ஒரு சதுரக் கோட்டின் நடுவில் நின்றுகொண்டேன். ஒவ்வொருவரும் அவ்விதம் நின்று கொண்டதும் சத்தம் போடாமல் இருக்கும் படி கூறினர். கடந்த இரவு கூட எம்மவரில் ஏழு பேரது இலக்கங்களையும் பெயர்களைக் கூறி அழைத்துச் சென்றனர். அப்படி அழைத்துச் செல்பவர்கள் மீண்டும் இந்தக் கொட்டகைக்குத் திரும்பி வருவது கிடையாது. இங்கு காவலுக்கு நிற்கும் புலி விலங்குகளும் மனிதப் பண்புகளைக் கொண்ட வார்த்தைகளைக் கதைப்பது கிடையாது. யாரை என்றாலும் வாடா, போடா என்று தூசண வார்த்தைகளைத்தான் பயன்படுத்துவர். இவர்களில் ஒருவர் மட்டுமே தூசண வார்த்தைகள் பேசவில்லை. அவர் சலீம் என்ற சேர்லி அம்மான் ஆவார். இவர்தான் இந்தச் சிறைக்கு பொறுப்பானவர். இவர் பின்னாளில் புலிவிலங்குகளை விட்டு விலகி தனது சொந்தக் குடும்பத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டதாக அறிந்தேன்.

நான் கிடங்கு இருக்கும் பகுதியை நோட்டம் விடுவதையே எனது கடமையாகச் செய்து வந்தேன்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4


1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 5



தொடரும்…

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

Read more...

Wednesday, March 10, 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 5

எனது நண்பன் விஜித்தரன் கூறி முடித்ததும், ரெலோ சகோதரர்கள் மீது செம்மனியில் அடுக்கிவைக்கப்பட்ட மூடைகள் எதுவாக இருக்கும்? எனது அறிவுக்கு எட்டியவரை சிந்தித்துப் பார்த்தேன், விடை தெரியாமல் இருந்தது. இந்தக் கொடியவர்களது கூடாரத்துக்குள் வந்த பின்னர்தான் அறிந்தேன். அன்று எனது நண்பன் கூறிய அடுக்கி வைக்கப்பட்ட மூடைகள் அனைத்தும் சீனி மூடைகள் என்று. மனிதர்கள் உடல் மீது சீனியைக் கொட்டி எரியூட்டினால் உடலில் ஒரு பாகம் கூட மிஞ்சாது எரிந்து விடும். மனிதர்களை அழிக்க வேர்கள் ஆரம்ப காலங்களிலேயே வித்தைகளைக் கற்று வைத்திருந்தனர்.

எனக்கு அந்த வயதில் பெரிய அளவு பகுத்தறிந்து பார்க்க, நன்மை தீமைகளை விபரிக்க இயலாது இருந்தது. பின்னாளில் இவர்களது படுகொலைகளது செயல் முறையைப் பார்க்கும் போது இவர்கள் மனிதர்கள் அல்ல! அரக்கர்கள்! மனித நேயம் அற்ற படுபாவிகள். உலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் யாழ்ப்பாணத்தை சைக்கிளில் சுற்றிப்பார்த்த இடங்கள் கோண்டாவில், திருநெல்வேலி, அராலி, கல்வியங்காடு, மானிப்பாய்“விமாகி”, கட்டப்பிராய், கச்சேரி அடி, அரியாலை இத்தனை இடங்களையும் ஏதோ ஓர் உந்துததால் சென்று பார்த்தேன். இதோ இங்கு வைத்துத்தான் சுட்டார்கள், இங்கு வைத்துத்தான் ரயரில் போட்டு எரித்தார்கள் என்று எனது வயதை ஒத்த பெடியங்கள் காண்பித்துச் சொன்னார்கள். பல இடங்களிலும் இரத்தக் கறை படிந்த சதைகள் தொங்கிக் கொண்டிருந்ததையும் பார்த்தேன்.

ஓ! இதுதான் விடுதலைப் போராட்டமோ? சிங்கள இராணுவத்துக்கு எதிராகப் போராடப் போகிறோம் என்ற எனது வீட்டுக்கு அருகில் இருந்த அண்ணாக்கள் எல்லோரும் இயக்கங்களுக்குச் சென்றார்கள். நாடு கிடைத்துவிட்டது போலும், இப்போது பதவிக்காக ஆக்களை ஆக்கள் சுட்டுச் சண்டைபிடிக்கினம் போல என்று அந்த வயதில் நான் நினைத்துக் கொண்டேன்.

வான்மீன் தனது கேள்விகளைத் தொடர்ந்தார், கேள்விகளில் எந்தவித மாற்றமும் இல்லை. கொலை, கொள்ளை கற்பழிப்பு இதே கேள்விகள்தான். இறுதியில் ஆயுதங்களை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்று கேட்டார்? எனக்கு எதைப்பற்றித் தெரியும் இவர்ளிடத்து சொல்வதற்கு? தெரியாது என்றேன். வான்மீன் என்ற புலிக்கு கோபம் வருவதற்கு முன்னர், அருகில் அடியாட்கள் போல் நின்ற இரு புலிகளுக்கும் கடுங் கோபம் வந்திருக்கும் போல, காலால் உதைத்தனர், முகத்திலும் முதுகிலும். எனது கண்கள் கட்டப்பட்டிருந்ததால் அவர்களைத் தெரியவில்லை. ஆயினும் அவர்கள் கட்டிய துணியின் அடிப்பகுதியால் இவர்கள் இருவரது கால்களையும் அவர்களது முழங்காலுக்குக் கீழ் பார்க்கக் கூடியதாக இருந்தது.

எழும்படா என்று கத்தினார் வான்மீன். கால்களில் சங்கிலி போட்டு வெல்டிங் பண்ணியிருந்ததால் உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை. இரண்டு கால்களையும் ஒன்றாக மடித்து முழங்காலை நிலத்தில் பதித்து கைகளை முன்புறமாக நிலத்தில் ஊன்றி எழுந்தேன். எழுந்து நிற்பதற்கு தாமதம் ஆவதைக் கண்ட அருகில் நின்றிருந்த “திசை” என்ற புலி மீண்டும் எனது பின்பகுதியில் உதைத்தார். நான் முகம் மேசைக் காலில் அடிபட நிலத்தில் விழுந்தேன். மீண்டும் முயற்சித்து எழுந்தேன்.

ஒரு கைவிலங்கை எனது இரு கைகளிலும் பூட்டினர். இரண்டு கைகளின் ஊடாக பெரிய மரக்கட்டை ஒன்றை நுழைத்தனர். அதன் ஒரு பகுதியை அந்தக் கொட்டகையின் வளையில் வைத்தனர். மறு முனையை கயிற்றினால் அருகில் நடப்பட்டிருந்த மரத்தின் மீது கயிற்றைப் போட்டு கீழே இழுக்க நான் கைவிலங்கில் தொங்கினேன். எனது கால் பெருவிரல் மட்டும் மண்ணில் தொட்டுக்கொண்டு இருந்தது. இரு கைகளும் வலியால் மரத்துப் போயின. என்னை அறியாமலேயே கண்களால் கண்ணீர் வடிந்தது.

அந்த வலியில் துடிக்கும் போது “மஞ்சு” என்ற புலியும், ‘திசை” என்ற புலியும் தடிகளால் அடித்தார்கள். பின்னர் வான்மீன் ஓர் தடித்த கட்டை ஒன்றினால் அடிக்க ஆரம்பித்தார். இவர்கள் அடித்த அடியினால் ஏற்பட்ட வலியை விட கைகளில் பூட்டப்பட்டிருந்த விலங்கினால் ஏற்பட்ட வேதனைதான் அதிகமாக இருந்தது. இதே போன்று என்னுடன் அழைத்து வரப்பட்ட ஏனையோருக்கும் இதே கொடுஞ்செயலைத்தான் செய்தனர் இந்தப் புலிகள்.

நேரம் செல்லச் செல்ல அலறல் சத்தம் அதிகரித்தது. இந்த விசாரணை புலிகள் ஒருவரை மிஞ்சி ஒருவர் சித்திரவதை செய்வதில் வல்லூநர்களாக இருநதனர். இவர்கள் இப்போது களைப்படைந்து விட்டனர். எங்களை அப்படியே கைவிலங்களில் தொங்க விட்டுவிட்டு அவர்கள் தேனீர் அருந்தச் சென்று விட்டனர். கட்டப்பட்டிருந்த கண்ணுக்கான துணி இன்னும் மேலே சென்றது.

யாரும் அருகில் இல்லை. அந்த வலியுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். என்னைத் தொங்கவிடப்பட்டிருந்த கொட்டகைக்கு வெளியே பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. சில குழிகளினுள் ஏணிகள் இறக்கப்பட்டிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கு மேற்பட்ட குழிகள் தென்பட்டன.

புலிகள் அந்தக் குழியில் இருப்பவர்களுக்கு எதையோ வாளிகளில் போட்டு கயிறு மூலம் உள்ளே இறக்குகிறார்கள். பின் வாளியை எடுத்துக்கொண்டு அடுத்த குழிகளுக்குச் செல்கிறார்கள். எனது வலியை விட இது பெரும் ஆச்சரியமாக இருந்தது. அந்தக் குழிகளுக்குள் யாரோ எம்மவர்தான் இருக்க வேண்டும். இது என்ன கொடுமை. குழிகள் வெட்டி மனிதர்களை உள்ளே இறக்கி வதை செய்கின்றனரா?

இப்போதுதான் கிற்லரின் ஆட்சியில் நடந்தவை என்று சினிமாக்களில் வரும் காட்சிகளை நான் கண்டேன். மூன்றடி நீளம் அல்லது 2.5 (இரண்டரை) அடி அகலம் கொண்டதும், ஏழு அடி நீளம் 12 அடி ஆழம் கொண்டதுமான ஓர் குழியிலிருந்த நன்கு மெலிந்த ஓர் இளைஞன் எம்மைப் போன்றே வெறும் மேலுடனும் நீல நிற அழுக்கேறிய கால்சட்டையுடனும் ஏணிவழியாக வெளியே வந்தார். அவரை மூன்று புலிகள் சூழ்ந்து கொண்டு அழைத்துவந்தனர், என்னை வைத்திருக்கும் கொட்டகைக்கு அருகிலிருந்த சிறிய கொட்டகை ஒன்றுக்கு. அவர் தனது அடையாளத்தை இழந்திருந்தார். சரியாக அடையாளம் தெரியவில்லை.

இந்த நிலையில் தேனீர் அருந்தச் சென்ற புலிகள் மீண்டும் வந்தனர். மறுபடியும் விசாரணை. அதே கேள்விகள் தான்! அவர்களுக்கு எதைப் பற்றி விசாரிப்பது என்று தெரியாது, ஏனைய தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும், எதைச் சொல்லி அழிப்பது? கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவைகளை இவர்கள் சுலபமாகச் சொல்லலாம். நீங்கள் கேட்பதும், சொல்வதும் தவறு என்று எதிர்த்தச் சொல்ல, எதிர்த்துக் கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. அப்படிக் கேட்டால் அவரும் கொல்லப்படுவார். இந்த விசாரணை அதிகாரிகள் யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது என்பதை அங்கிருந்த நாட்களில் தெரிந்து கொண்டேன். 17, 18 வயதுடையவர்களும் விசாரணை அதிகாரியாக இருந்ததைப் பார்த்தேன். இவர்களால் மனிதனின் உரிமைகள் மிதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

விசாரணையில் நான் மீண்டும் மீண்டும் தெரியாது, இல்லை என்ற வார்த்தைகளையே பதிலாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்களுக்கும் ஆத்திரம் கபாலத்தை பிளந்தது. நாங்கள் கேட்கிறோம், “சொல்கிறான் இல்லை” என்று கூறி முதுகுப் பக்கங்களில் தாக்கினர். ஏனைய இளைஞர்கள் தாக்கப்படும் போது எழுப்பும் அவலக் குரலான “அம்மா”, “ஐயோ” என்ற அவலக்குரலை நானும் எழுப்பினேன்.

இந்தக் கொடிய வலியினைத் தாங்கிக் கொள்ள இறைவனால் வழங்கப்பட்ட வார்த்தைகள்தான் “அம்மா”, “ஐயோ” என்றிருந்த இரு வார்த்தைகளும். துணுக்காய் புலிகளின் சிறையில் தினமும் இந்த வலிதாங்கும் அவலச் சொற்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. சாவுக்கு முன்னால் இந்த வலி அனைவருக்கும் ஏற்படும் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

எனது கைகளில் போடப்பட்ட விலங்கு இரு கைகளையும் பிடுங்குவது போன்று வலித்தது. அடியில் வேதனை ஒரு பக்கம் விலங்கில் தொங்கும் வலி வேறொருபக்கம். எனது கால் பெருவிரல் மட்டுமே நிலத்தில் தொட்டுக்கொண்டு இருந்தது. அவர்களில் ஒரு புலி எனது இடுப்பை தனது இரண்டு கைகளாலும் பிடித்து சுழற்றினார். எனது உடல் முறுக்கப்பட்டது. கைகள் முறுகி உடைந்துவிடும் போல் தோன்றியது. வலியினால் நான் ஓலமிடுவதை அவர்கள் ரசித்தனர். முடிந்தவரை என்னை முறுக்கிப் பிழிந்து முடியாது போனதும் விட்டுவிட்னர்.

இப்படி நான் தொங்கவிடப்பட்டு சுமார் மூன்று மணி நேரமாகிவிட்டது. காலை உணவும் இல்லை. உடல் பலவீனமடைந்ததால் நான் மயக்கமடையும் நிலையை அடைந்தேன். எனது கைகள் இரண்டும் எனது உடலை விட்டு பிரிந்து சென்று விட்டன போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அப்போது வான்மீன் சொன்னார், “டே இவன் மயங்கிற்றா நாங்கள் கஸ்ரப்பட்டுத்தான் இறக்க வேண்டி வரும், இப்பவே இறக்குங்க” என்றார். அவரது உத்தரவைத் தொடர்ந்து மறுமுனை கயிற்றைத் தளர்த்தி எனது கைவிலங்கினூடாக இடப்பட்டிருந்த அந்த மரத்தடியை கீழே இறக்கினர். எனது கைகள் செயலிழந்து இருந்தன. கையை கீழே கொண்டு வர முடியவில்லை. அப்படியே சரிந்து விழுந்தேன்.

பிற்பகல் நான்குமணிவரை மயக்கநிலையிலேயே இருந்தேன். கண்விழித்ததும், இரண்டு புலிகள் அருகில் நின்று “எழும்படா” என்றனர். கைகளை இயக்கமுடியவில்லை, முழங்கை வரை விறைத்துச் செயலிழந்து இருந்தன. எழுந்து நின்றேன். வாடா என அழைத்தனர், கால் சங்கிலியுடன் நடந்தேன். அவர்கள் அடித்த இடங்கள் அனைத்தும் கண்டலடைந்து வீங்கிப் போய் இருந்தது.

என்னை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த இன்னொரு திறந்த குடிலுக்கு வந்தனர். அங்கும் ஆறு முதல் ஏழு பேர்வரை இருந்தனர். கை கால்களில் சங்கிலியும் விலங்குகளும் இடப்பட்டிருந்தன. சற்றுத்தள்ளி, முன்னர் நான் பார்த்த கிடங்கில் இருந்து அழைத்துவரப்பட்டவர் இருந்தார். அருகில் பார்க்கும் போது இந்த விலங்குகளின் கொடுமை அவரது உடலில் தெரிந்தது. ஆங்காங்கே புண்கள் வந்து பாதி காய்ந்த நிலையில் இருந்தன. முகத்திலும் காய்ந்த வடுக்கள் இருந்தன. இவ்வளவு விழுப் புண்களுடன் இவர் எப்படி உயிர் வாழ்கிறார் என்று வியந்தேன்.

என்னை ஏனைய இளைஞர்களுடன் இருக்கும்படி கூட்டிவந்த புலிகள் கூறினர். நானும் அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் அங்கத்தினர்கள் இருந்தனர். கூட்டி வந்த புலிகள் தள்ளிச் சென்றனர். சுற்றுப்புறத்தைப் பார்த்துவிட்டு அருகில் இருந்தவர்களிடம் மெதுவாகக் கதைத்தேன், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரைக் காட்டி அவர் யார் என்று கேட்டேன்?

தொடரும்…...........
1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4



இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

Read more...

Tuesday, March 9, 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4

அவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்! நான்தான் யாழ்ப்பாணம் றொலெக்ஸ் ஹொட்டல் ஓணர் என்றார். எனக்கு றொலெக்ஸ் ஹொட்டலைத் தெரியும், அந்த றொலெக்ஸ் ஹொட்டலில் நான் உணவு அருந்தியிருக்கிறேன். நான் கதைப்பதை தள்ளி நின்ற அட்டை ஒன்று பார்த்து விட்டது. என்ன கதைச்சனி என்னிடத்துக் கேட்டது அந்த அட்டை. நான், ஒன்றுமில்லை என்று தலையாட்டினேன். முறைத்துக் கொண்டு நகர்ந்தது அந்த அட்டை!

காலைக்கடன்கள் முடித்து மீண்டும் எங்களுக்கு வரையப்பட்ட இடத்தில் அமர்ந்து அட்டைகள் இல்லாத நேரம் பார்த்து அவருடன் கதைத்தேன். காலை ஒன்பது மணிக்கெல்லாம் அங்கிருக்கும் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து விசாரணை என்று தாக்குவதன் மூலம் ஓர் பயங்கர சூழல் ஏற்படுத்தப்படும். றொலெக்ஸ் ஓணரும் அன்று காலைதான் இப்படி ஓர் அவல ஓலத்தைக் கேட்டு மிரண்டு போய் கண்களை மூடி இறைவனை ஏதோ வேண்டிக்கொண்டிருந்தார்.

இந்த நான்கு நாட்களும் இரவு 1 மணி அளவில் எங்கள் கொட்டடிக்கு வரும் 10க்கும் மேற்பட்ட அட்டைகள் ஆயுதங்களுடன் வருவார்கள் 10முதல் 12பேர்களது இலக்கங்களைப் படிப்பார்கள். அந்த இலக்கம் உடையவர்கள் எழுந்து நின்றதும் அவர்களை கெட்டவார்த்தைகளால் பேசி இழுத்துச் செல்வார்கள். அவர்களை எங்கு கொண்டு செல்கின்றனர் என்பது எங்களுக்குத் தெரியாது. அப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் யாரும் திரும்பி வந்தது கிடையாது. புலிகளது (அட்டைகளது) நாசி முகாம்களில் கொடுமையானது துணுக்காயில் இருக்கும் இந்தச் சிறைகள்தான்.
கிழக்கு மாகாணத்திலிருந்து கூட ஏனைய இயக்கச் சகோதரர்களையும் இங்குதான் வைத்திருந்தனர். இந்தச் சிறையிலிருந்து தினமும் 10முதல் 15 பேர்வரை இந்த அட்டைகளால் கொல்லப்படுவார்கள் என்று உதயன் என்று கூட இருந்த சகோதரன் என்னிடத்துக் கூறினார். இரவு நேரத்தில் அழைத்துச் செல்லப்படுபவர்கள் இவ்விதம் கொல்லப்படுவார்கள் என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

வழக்கம் போல் அன்று யாருடனும் கதைப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இரண்டு வேளை உணவுடன் அவர்களது கோடு வரையப்பட்ட பெட்டிக்குள் அவர்களது உத்தரவுபடி அசையாமல் இருந்தேன். றொலெக்ஸ் ஓணரும் அப்படியே அன்று முழுவதும் இருந்தார். அவரால் இது போன்று அமர முடியவில்லை. நாங்கள் உழைக்கும் வர்க்கம், எதனையும் தாங்கிக் கொள்வோம், இவர் அப்படி வாழ்ந்திருக்க மாட்டார். அவர் படும் வேதனையைப் பார்த்து என்னால் வருந்தத்தான் முடிந்தது. எம் இனத்தின் இரத்தத்தை உறுஞ்சும் இந்த அட்டைகளுக்கு மனிதனின் வலி எப்படித் தெரியவரும்.

மறுநாள் காலைக் கடன் முடித்து அடிமேல் அடிவைத்து மீண்டும் எனது இடத்தில் அமர்ந்தேன். 10மணியளவில் தீபன் தலைமையில் அட்டைகள் கூட்டம் ஒன்று வந்தது. சிலரது இலக்கங்களை சத்தமாகப் படித்தனர். எனது இலக்கமான “K 87” ம் அதில் இருந்தது. எழுந்து சென்றேன் மொத்தம் 9 பேர், வெளியே அழைத்தனர்.

அந்த இடம் நீளமான ஓலைக்குடில். ஆறடி அகலத்தில் ஆறடி உயரத்தில் முள்ளுக் கம்பிகளால் குடிலினுள் வேலி போன்று அமைத்திருந்தனர். வரிசையாக ஒன்பது கதிரைகளும், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் டெஸ்க்கும் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு டெஸ்க்குக்கும் இடையில் உள்ள தூரம் குறைந்தது 6 அல்லது 7 அடிகள் வரும். ஒவ்வொரு கதிரையிலும் ஒரு களுதையும். மன்னிக்கவும் அட்டையும், அவருக்குத் துணையாக இரண்டு அட்டைகளும் அருகில் நின்றிருந்தனர்.

என்னை நான்காவது மேசைக்கு அழைத்தனர். விசாரித்த அட்டையின் பெயர் வான்மீன். அருகில் நின்றிருந்த இரண்டுபேரின் பெயர்கள் முறையே மஞ்சு (திருகோணமலை) கௌதமன் (திருகோணமலை). இந்த கொளதமன் பின்நாளில் யாழ்ப்பாணத்தில் வைத்து புலிகளின் ஒரு பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இரண்டு யாழ்ப்பாணப் பெண்களை கற்பழித்தார் என்பது குற்றச்சாட்டு. இந்தக் கற்பழிப்பு பொதுமக்களுக்குத் தெரியவந்ததும் வேறு வழியின்றி தங்களை இனத்தின் காவலர்களாகக் காண்பிப்பதற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே போன்ற சம்பவம் ஒன்றினால்தான் உருத்திரபுரம் வதைமுகாம் பொறுப்பாளராக இருந்த அத்தார் என்பவரும் தற்கொலை செய்தார் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

என்னை விசாரணைக்கு அழைத்த வான்மீன் என்ற அட்டை அவருக்கான கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். “இடே வாடா இங்கே” என்று அழைத்த அந்தப் பெருமகன் தன் முன்னிலையில் நிலத்தில் இருக்கும் படி உத்தரவிட்டார். இவர்கள் ஆட்சியாளர்ள், நாங்கள் அடிமைகள். ஏஜமானிய தோரணையில் இந்த அட்டை செயல்பட்டார்.

அமர்ந்தேன் தரையில். பெயர், முகவரி, குடும்ப அங்கத்தவர்கள் விவரங்களை எழுதிக் கொண்டார். விசாரணையை ஆரம்பித்தார், ஆரம்பம் முதலே அவரது வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட நல்ல வார்த்தையாக வெளிவரவில்லை. பெண் உறுப்பை வேறு வார்த்தையில் நினைவுபடுத்தி “மவனே” என்பது முதற்கொண்டு அவர் கேட்கும் கேள்விகளில் அவ்வளவும் அசைவ வார்த்தைகளாக இருந்தன. இவர் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் இருந்த பொறுப்புவாய்ந்த அட்டைகள் அனைவருமே இதே வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினர்.

வான்மீன் - நீ எத்தனை பேருக்குக் கூட்டிக்கொடுத்தாய்? கோத்தை, கொக்கா எல்லாரையும் I.P.K.F க்கு கூட்டிக் கொடுத்தனிதானே? எத்தனை பேரைக் கற்பழித்தனீ? எத்தனை பேரைக் கொலை செய்தாய்? இப்படி இவர் கேட்ட அனைத்துக் கேள்விகளுமே பெண்கள் சம்பந்தப்பட்டதாகவும், கொலை, கொள்ளை சம்பந்தப்பட்டதாகவும் இருந்தன.

பிற இயக்கங்களைப் பற்றி இந்த அட்டைகள் இவ்விதமே விசமப் பிரசாரம் செய்து ஏனையோரை துரோகி என்று நம்பும்படி செய்தனர். ஒருவரை குற்றஞ்சாட்டி விசாரிப்பது என்றால் பாதிக்கப்பட்டவர் முறையிட வேண்டும், கொள்ளை அடித்திருந்தால் அதில் குற்றம் சுமத்தப்பட்டிருக்க வேண்டும், அதில் சாட்சியங்கள் இருக்க வேண்டும், கற்பழித்திருந்தால் அதில் பாதிக்கப்பட்டவர் முறையிட்டிருக்க வேண்டும், சந்தர்ப்ப சாட்சியங்கள் இருக்க வேண்டும், களவு செய்திருந்தால் அதில் முறையீடு இருந்திருக்க வேண்டும், களவு போன பொருட்கள் மீட்கப்பட்டிருக்க வேண்டும்.

இவற்றில் எதுவுமே இல்லாமல் பிற இயக்க அங்கத்தினரைப் பிடித்து வந்து கொடுமைப்படுத்துவதற்கு இவர்கள் சொன்ன குற்றச் சாட்டு சமூக விரோதிகள் என்பதாகும். நாம் எங்கள் நாட்டை மீட்கப் போராடப்புறப்பட்டவர்கள். ஒவ்வொரு இயக்கத்திலும் இளைஞர்கள் இணைந்தது நாட்டின் மீது பற்றுக்கொண்டே அல்லாமல், சுகபோகங்களை அனுபவிக்க இயக்கத்துக்கு வரவில்லை. புலிகளது கைகள் ஓங்கியதால் இவர்கள் ஏனைய இயக்க அங்கத்தினரைப் பிடித்துவந்து படுகொலை செய்கின்றனர்.

இவர்கள் 1986ஆம் ஆண்டு ரெலோ இயக்க அங்கத்தினரை படுகொலை செய்ததை நானே நேரில் பார்த்துள்ளேன். அப்போது எனக்கு பதினாறு வயது படித்துக்கொண்டிருந்தேன். விடுதலைப் போராட்டத்தில் இப்படிக் கொடியவர்களா ஈடுபடுகின்றனர்! ரெலோ இயக்கத்தினரை சுட்டுக்கொன்றனர், வெட்டிக்கொன்றனர், ரயறை எரித்து அதனுள் அந்தச் சகோதரர்களைப் போட்டு எரித்துக் கொன்றனர், கொதிக்கும் தாருக்குள் அவர்களை உயிருடன் போட்டு அவித்துக் கொன்றனர், இவை அனைத்தையும் யாரும் கதை சொல்லி நான் கேட்கவில்லை. என் கண்களால் இவற்றைப் பார்த்தேன். எனது அன்றைய வயதின் ஆர்வக் கோளாறானது இது. இந்தச் செயல்களை நான் நாவாந்துறையிலிருந்து எனது சைக்கிளில் சுண்ணாகம் முதற்கொண்டு பாசை ஊர் வரைக்கும் ஒரே நாளில் தண்ணீர் உணவு எதுவுமின்றி சுற்றித்திரிந்து பார்த்தேன்.

துப்பாக்கிகளுடன் வாகனங்களில் பறந்து திரிந்தனர், சுட்டு வீழ்த்தப்படும் தமிழ் சகோதரர்களை தெருக்களுக்கு இழுத்து வந்து நெருப்பில் போட்டனர். இந்த அட்டைகளை அன்று பார்க்கும் போது மனித இனத்தில் இப்படியான விலங்குகளா? என்று வியந்தேன் எனது நண்பன் ஒருவன் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர், நான் சைக்கிளில் இந்தக் கொடுமைகள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு இரண்டு நாட்கள் கழித்து நண்பன் விஜித்தைப் பார்க்க அங்கு சென்றேன்.

அவன் என்னை அழைத்துக் கொண்டு முத்திரைச் சந்தை வழியாக செம்மணி நோக்கி சென்றான். நான் ஒரு சைக்கிளிலும் அவன் ஒரு சைக்கிளிலுமாக சென்றோம். செம்மணி சுடலையின் எதிரில் சைக்கிளை நிறுத்தி அங்கபார் என்று காட்டினான். அங்கே ஒன்றும் தெரியவில்லை. நிலத்தைப்பார் என்றான், நிலத்தைப் பார்த்தேன், நிலத்தில் அறுபதிலிருந்து எழுபது அடி நீளத்துக்கு இரண்டடி அகலத்துக்கு சாம்பலாக இருந்தது. என்ன இப்படி சாம்பலாக இருக்குதே என்றேன். பார்த்தாச்சுதானே வா சொல்கிறேன் என்றான். திரும்பியும் நாங்கள் கல்வியங்காட்டுக்கு வந்தோம். இப்போது என்றாலும் சொல்லடா என்று ஆவலுடன் அவனிடத்துக் கேட்டேன் நண்பன் ஆரம்பித்தான்:-

நேற்று மாலையில் செம்மணியை நோக்கி வாகனங்களில் புலிகள் அங்குமிங்குமாக ஓடினர். ஒரு லொறியில் விறகுகளும் ஏற்றி அதன் மேல் ரையர்களும் ஏற்றிக் கொண்டு சென்றனர். நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு செம்மணி நோக்கிச் சென்றேன். சுடலைக்கு முன்னால் நான்கு ஐந்து வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. லொறியிலிருந்து விறகுகளையும். ரையர்களையும் இறக்கினர்.

நான் சைக்கிளை பூவரசமரத்தடியில் நிறுத்திவிட்டு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டேன். இருட்டுவதற்கு ஆரம்பித்தது. அந்த நேரத்தில் மூன்று வான்கள் வந்தன. அவற்றிலிருந்து பல அண்ணன்மார்களை கண்களையும், கைகளையும் கட்டியபடி இறக்கினார்கள். அவர்கள் அனைவரும் ரெலோ இயக்க அண்ணன்மார்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அதே வான்கள் மீண்டும் திரும்பிச் சென்று 20 நிமிடங்களில் இன்னும் அதுபோல் அண்ணன்மார்களை அழைத்து வந்தனர்.

லொறியில் எடுத்துவந்த கட்டைகளை வரிசையா ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினார்கள். க கண்கள் கட்டப்பட்டிருந்த அண்ணன்மார்களை இழுத்து வந்து வரிசையாகப் படுக்க வைத்தார்கள். இப்படி நாப்பது முதல் ஐம்பது பேர்வரையிலான அண்ணன்மார்களைப் படுக்க வைத்தார்கள். சில பேருக்கு துப்பாக்கியால் முதுகில் குத்தி தள்ளிச் சென்று படுக்க வைத்தார்கள். பின்னர் அவர்கள் மேல் சில மூடைகளையும் அடுக்கினார்கள். அவை என்ன மூடைகள் என்று தெரியவில்லை. அதன் பின்னர் அந்த மூடைகளின் மேல் ரயர்களை அடுக்கினார்கள். அதனைத் தொடர்ந்து பல கான்களில் எதையோ ஊற்றினார்கள். அது மண்ணெண்னையாக இருக்க வேண்டும் அல்லது பெற்றோலாக இருக்க வேண்டும் ஏனெனில் இவர்கள் ஊற்றும் போது அந்த அண்ணன்மார்களது கால்கள் துடித்தன. வெளியே தெரிந்த கால்களில் கட்டைகளைக் கொண்டு தாக்கினார்கள் புலிகள்.

திடீரென நெருப்புச் சுவாலை அவர்கள் மீது படர்ந்தது. அவர்கள் அலறும் சத்தம் மரத்தில் இருந்த என்னை உதறிக் கீழே தள்ளுவது போன்று இருந்தது. சுற்றி நின்ற புலி அண்ணாக்கள் எல்லாரும் தள்ளி ஓடினார்கள். சிறிது நேரத்தில் அவர்களது அலறும் சத்தம் நின்றுவிட்டது. மேலும் அரைமணி நேரமளவில் புலி அண்ணாக்கள் அங்கு நின்றனர். பின்னர் அவர்கள் வாகனங்களில் ஏறி கல்வியங்காடு நோக்கிச் சென்றனர். எனக்கும் பயமாக இருந்தது. மரத்திலிருந்து இறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வந்துவிட்டேன் என்று கூறி முடித்தான்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3 களை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தொடரும்…



இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

Read more...

Monday, March 8, 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

யூதர்களை கிட்லர் எப்படிக் கொடுமைப்படுத்தினார் என்பது உலகம் முழுவதும் அறியப்பட்டது. புகைப்படங்களாக, திரைப்படங்களாக உலகமக்கள் கண்டு மிரண்டனர். யூதர்கள் மீது இரக்கம் கொண்டனர். ஆனால் தமிழீழம் என்ற சொல்லின் பின்னால் மறைந்திருந்த மிருகங்களான அட்டைகள் (புலிகள்) எங்கள் இனத்தவரை எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கினர் என்பது வெளியுலகுக்குத் தெரியாது. இந்த அட்டைகள் எங்கள் இனத்தை நசுக்கி அதன் இரத்தத்தினை உறிஞ்சிய வரலாற்றினை எங்கள் மக்களுக்கு எடுத்துரைக்க அட்டைகளே வழி கோலியுள்ளனர்.

“தமிழ்வின்” என்ற நாசகார இணையதளத்தில் ஈ.என்.டி.எல்.எப். பற்றிய அவதூறுப் பிரசாரத்தினை இந்தத் தளம் மேற்கொண்டது. ஒட்டுக்குழு என்றும், இலங்கை அரசுடன் இணைந்துள்ளனர் என்றும், கிளிநொச்சியில் முகாம் அமைக்கின்றனர் என்றும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களை இந்தத் தளம் எங்கள் மக்களுக்குத் தெரிவித்து மக்களையும் குழப்பி, இயக்கங்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளனர்.

உண்மையில் இந்தத் தளம் சரியான தகவலை வெளியிட்டிருந்தால் நாம் அதனை எதிர் கொண்டு விளக்கம் அளித்திருப்போம். இப்படிப் பொய்யான தகவல்களை பரப்பிவிட்டு வேடிக்கைப்பார்க்கும் போக்கு நரித்தனமானது. இந்தச் செய்தியைப் பரப்பிய மனிதரை எமக்குத் தெரியாது. ஆயினும் இந்தத் தளம் புலிகளின் ஆதரவுத் தளமாகும். ஆதலால் புலிகள் பற்றிய உண்மைத் தகவல்களை வெளியிட நாம் அவர்களாலேயே தள்ளப்பட்டுள்ளோம். இங்கே வரும் புலிகள் என்ற சொல்லுக்குப் பதிலாக நாம் அட்டைகள் என்று குறிப்பிட்டுள்ளோம். கீழே வரும் தகவல்களில் அட்டைகள் என்ற பதத்தினை புலிகள் என்று எடுத்துக்கொள்ளவும். நாசிகளின் கொடுமைகளை விட அட்டைகள் செய்த கொடுமைகள் பயங்கரமானது.

எங்கள் இணைய தளம் மூலமாக தனது அனுபவங்களை வெளியிடுகிறார், திரு. கிறேசியன். இவர் நாற்பது மாதங்கள் அட்டைகளின் வதை முகாம்களில் இருந்துள்ளார். இதோ அவரே:- எனது சொந்த ஊரான நாவாந்துறை யாழ்ப்பாணம் நகரில் நான் இருந்தபோது ஆயுதம் தரித்த அட்டைகள் இரண்டு பேர் என் வீட்டுக்கு வந்தனர். விசாரணை ஒன்று உள்ளது எங்களுடன் வரவேண்டும் என்றனர்.

எங்கள் ஊரின் தலைவர் முன்னிலையில் இவர்கள் அட்டைகள்தான் என்பதை உறுதி செய்த பின்னர், என்னை நல்லூருக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து ஒரு வானில் ஏற்றி கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றனர். என்னுடன் மூன்று அட்டைகள் ஒட்டிக்கொண்டிருந்தனர்.

மறுநாள் அங்கிருந்து வட்டக்கச்சிக்கு சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றனர். கூடவே இரண்டு அட்டைகள் சைக்கிளில் வந்தனர். அங்கு சென்றதும், வட்டக்கச்சி பொறுப்பாளர் நசீர் என்னும் பெரிய அட்டையிடம் ஒப்படைத்தனர். அவர் என்னுடைய முகவரி, குடும்ப உறுப்பினர்கள் விபரங்களைச் சேகரித்தார்.

ஒருநாள் அங்கு வைத்திருந்தனர். மறுநாள் காலை மீண்டும் சைக்கிளில் உருத்திரபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கே “அத்தார்” என்ற பெரிய அட்டையும் உதவி அட்டை கீதன் என்பவரும் என்னை விசாரித்தனர். 1990 மார்ச் 15ம் திகதி என்று நினைக்கிறேன், உருத்திரபுர வயல்வெளியில் தனியாக ஒரு வீடு இருந்தது. அங்கே அழைத்துச் சென்றனர். அந்தத் தனி வீட்டினுள் ஏறக்குறை 15 தமிழ் இளைஞர்கள் விலங்கு மாட்டப்பட்டு தனித்தனியாக அமரவைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தலையைக் குனிந்து கொண்டிருந்தனர். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இலங்கை ராணுவம்தான் கைவிலங்கிட்டு தமிழர்களை வதைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருந்தேன். முதல் தடவையாக தமிழர்கள் தமிழர்களை கைவிலங்கிட்டு அமரவைத்திருந்ததைப் பார்த்தேன். பின்நாளில் நான் படவிருக்கும் கொடுமைகளை அன்று அறிந்திருக்கவில்லை.

அந்த தனிவிடுதியில் இரண்டு நாட்கள் வைத்திருந்தனர். இந்த இரண்டு நாளும் அங்கிருந்த ஏனைய 15 பேருடனும் கதைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அங்கிருந்தவர்களும் என்னுடன் கதைப்பதற்கு முற்படவில்லை. அந்த அறையினுள் எந்த நேரமும் நான்கு ஐந்து அட்டைகள் எங்களை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மூன்றாவது நாள் ஒரு ட்ராக்ரர் ஒன்று நாம் இருந்த வீட்டின் முன் வந்து நின்றது. அதில் உருத்திரபுரம் பெரிய அட்டை அத்தார் இருந்தார். மாலை ஆறுமணியளவில் அந்த ட்ரக்ரரில் ஏறச் சொன்னார் ஒரு முரட்டு அட்டை. நாம் ட்ராக்ரரில் ஒவ்வொருவராக ஏற்றப்பட்டோம். ஏறுவதற்கு முன்னர் என்னுடைய கண்கள் கட்டப்பட்டன. அதே போன்று ஏனையவர்களது கண்களும் கட்டப்பட்டன. இருட்டு வேளை, வாகனம் நகர்கிறது. எந்தப்பக்கம் அந்த வாகனம் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ட்ராக்ரர் பெட்டி குலுக்கிக் கொண்டும், சிலவேளை எங்களை ஒருவருக்கு மேல் ஒருவர் மோதி விழவும் செய்தது. கண்கள் கட்டப்பட்டிருந்ததால் விழுந்துவிடாமல் இருக்க எதனைப் பிடிக்கவேண்டும் என்று தெரியாது. ஒரு தடவை அத்தனை பேரையும் மூன்றடி உயரத்துக்குத் தூக்கி வீசி நாம் அனைவரும் பெட்டியின் ஓரங்களில் அடிபட்டு விழுந்தோம். இதனைக் கண்டு நகைத்தனர். அவர்களுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க வினோதமாகவும், வேடிக்கையாகவும் இருந்திருக்கும். ஏனென்றால் நாம் அவர்களுக்கு அப்போ மனிதர்களாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் மனிதர்கள் அல்ல என்று பின்னால் கண்டுகொண்டேன்.

மூன்று மணி நேர ஓட்டத்திற்குப் பின்னர் அந்த இருட்டுவேளையில் ஓர் வீட்டினில் வாகனத்தை நிறுத்தி அனைவரையும் இறங்கும்படி அத்தார் என்ற பெரிய அட்டை உத்தரவிட்டார். கட்டப்பட்டிருந்த கண்கள் கழற்றப்பட்டன. அந்த வீட்டில் மல்லி என்ற ஓர் கொடிய அட்டை எங்களைப் பார்த்து முறைத்தது. இந்த அட்டைக்குத் துணை அட்டையாக இருந்தது ராஜன் என்ற அட்டை. எங்களை அத்தார் அட்டை மல்லி அட்டையிடம் ஒப்படைத்துவிட்டு புறப்பட்டார். இந்த அத்தாரை நான் இதன் பின்னர் பார்க்கவே இல்லை. இரண்டு ஆண்டுகளின் பின்னர் இந்த அத்தார் அட்டை தற்கொலை செய்து கொண்டதாகக் கேள்விப்பட்டேன். இராணுவத்திடம் அகப்பட்டுக்கொண்டதால் தற்கொலை செய்து கொண்டதாக எண்ணவேண்டாம். பெண்களுடன் தவறாக நடந்துகொண்டதும், மக்களிடமிருந்து பறித்த பணத்தை இவர் கையாடல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சம்பவங்கள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டதால் அவமானத்தினால் விசாரணைக்கு முன்னரே சைனையிட் உண்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் தெரியவந்தது நாம் இருக்கும் இடம் வவுனிக் குளத்தில் இருக்கும் சிவபுரம் என்பது. இந்த இடத்தில் ஐந்து முதல் ஆறு வீடுகள் வரையில் அட்டைகள் வைத்திருந்தனர். கையில் போடப்பட்டிருந்த விலங்குகள் கழற்றப்பட்டன. அதற்குப் பதிலா சங்கிலி கொண்டு வந்தனர். அந்தச் சங்கிலி 2 அடி நீளம் இருக்கும். என்னுடைய இரண்டு கால்களையும் அதன் இரு முனைகளாலும் சுற்றி முனைகளில் பூட்டுப் போட்டு பூட்டினர். எனது இரு கால்களுக்குமிடையில் இருந்த சங்கிலி நீளம் 10 அங்குலங்களாகும். எனதருமைத் தமிழர்கள் எங்களுக்கு மிருகங்களைப் போன்று கால்களில் விலங்கிட்டனர். நான் ஓர் கிறிஸ்தவன், “ஓ ஆண்டவரே இந்தப் பாவிகளை மன்னிக்க வேண்டும்” என்று இறைவனை வேண்டிக்கொண்டேன். ஏனெனில் இதுவே கொடுமை என்று அப்போது எண்ணிக் கொண்டேன். இதையும் விடக் கொடுமைகள் எனக்கு நடக்கப் போகிறது என்று என்னால் உணர முடியவில்லை!

நான்கு நாட்கள் இந்தச் சங்கிலியுடன் பெரும் அவதிப்பட்டேன். மலம் கழிப்பதற்கு கழிவிடம் ஒரு திசையிலும் கிணறு ஒரு திசையிலும் இருந்தது. கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொண்டு கழிவிடத்துக்குச் செல்ல வேண்டும். நிதானம் தவறி காலை எடுத்துவைத்து ஐந்தாறு தடவைகள் முகம் நிலத்தில் படுமளவு விழுந்து முகத்தில் காயம் ஏற்பட்டது. நான் நடந்து செல்வதை அட்டைகள் தள்ளி நின்று ரசிப்பார்கள். எங்கள் வேதனை அவர்களை மகிழ்வித்தது.

ஐந்தாவது நாள் என்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி எனது கண்களைக் கட்டினர்.

(பகுதி 2)

ஐந்தாவது நாள் என்னை விசாரிக்க வேண்டும் என்று கூறி எனது கண்களைக் கட்டினர். அருகில் இருந்த இன்னொரு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். விசாரணை அதிகாரி அங்கே இருந்த மல்லி என்ற கொடிய அட்டைதான். இந்த மல்லி என்ற அட்டை பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராம். அப்போது அவர் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களை நெத்தியில் சுட்டுக்கொன்ற மாவீரன் என்று சிறிய அட்டைகள் புகழ்ந்து சொன்னார்கள். தமிழர்களைக் கொன்றதில் புகழ்ச்சி கொண்டவர்களா விடுதலைப் போராளிகள்? மனதுக்குள் நினைத்துக்கொண்டு மெதுவாக நடந்து அந்த வீட்டுக்குச் சென்றேன். அங்கே, என்னைத் தரையில் அமரும்படி கூறினர். நானும் அமர்ந்தேன் என் எதிரில் ஓர் கதிரை போடப்பட்டது. அந்தக் கதிரையில் மல்லி என்ற அட்டை அமர்ந்தது.

தடித்தக் குரலில் கேட்டார்:-

மல்லி – உனது பெயர் என்ன?

கிறேசியன் – எனது பெயர் கிறேசியன்.

மல்லி – சொந்த ஊர்?

கிறேசியன் – நாவாந்துறை

மல்லி – எந்த இயக்கம்?

கிறேசியன் – ஈ.என்.டி.எல்.எப்.

மல்லி – எப்போது அதில் சேர்ந்தாய்?

கிறேசியன் – 1987ல்

மல்லி – எங்கே பயிற்சி எடுத்தாய்?

கிறேசியன் – கிளிநொச்சியில்.

மல்லி – எத்தனை பேரைக் கொலை செய்தாய்?

கிறேசியன் – நான் யாரையும் கொன்றதில்லை.

மல்லி – எங்கே எல்லாம் கொள்ளையடித்தாய்?

கிறேசியன் – நான் எங்கும் கொள்ளையடித்ததில்லை.

மல்லி – உன்ர கொக்காவை இந்தியன் ஆமிக்கு எத்தனை தரம் கூட்டிக்கொடுத்தாய்?

கிறேசியன் – பதில் எதுவும் கூறவில்லை.

மல்லி – மீண்டும் – அப்ப கொம்மாவைக் கூட்டிக் குடுத்தியா?

கிறேசியன் – மரியாதையான கேள்வி கேட்டால் நான் பதில் சொல்வேன்.

உடனே மல்லி அட்டைக்கு கோபம் வந்து எனது முகத்தில் அவரது செருப்புக் காலால் உதைத்தார். நான் மறு முனையில் வீழ்ந்தேன். எனது கண்கள் கட்டப்பட்டிருந்ததால் என்னைச் சுற்றி எத்தனை பேர் ,ருக்கின்றனர் என்பது தெரியாது. மல்லி கோபத்துடன் கத்துகிறார். ‘அந்தக் கருங்காலி கட்டையை எடுத்துவாடா’ என்று. அடுத்த நிமிடத்தில் ஓர் முரட்டுத்தனமான கட்டையால் நிலத்தில் கிடந்த என்னைத் தாக்கினார். கைகள், கால்கள், முதுகு. வயிறு என்று அனைத்துப் பகுதியிலும் மாறி மாறி அடித்தார். ஒரு அடி விழும் போது வலியினால் துடித்துத் திரும்புகையில் மறு புறத்தில் அடிப்பார். அந்தப் பக்கம் வலியினால் திரும்புகையில் எதிர்புறத்தில் அடிப்பார். தலையைத் தவிர ஏனைய அனைத்துப் பாகங்களிலும் அடித்தார் அந்தக் கருங்காலிக் கட்டையால்.

மரணத்தின் வேதனை எனக்குத் தெரியாது. ஆனால் சித்திரவதையின் ஆரம்பக்கட்டத் தண்டனையை அனுபவித்தேன். நான் எனது நண்பர்களையோ, உறவினரையோ, என் வயதில் குறைந்தவர்களையோ ‘வாடா, போடா’ என்று கதைப்பது கிடையாது. என்னைத் தாக்கும் போது அந்த மல்லி என்ற அட்டையிடமிருந்து வந்த வார்த்ததைகளை இதில் எழுத முடியாத நிலையில் இருக்கிறேன். தமிழில் அப்படியான கொடிய வார்த்தைகள் இருக்கிறதா என்று வியந்தேன் அந்த வேதனையிலும். குறைந்தது ஐந்து நிமிடங்கள் வரையில் ,வ்விதம் தாக்கிய அந்த அட்டை, களைப்படைந்து விலகிச் சென்றது. சிறிது நேரத்தில் மீண்டும் வந்து அதே கட்டையால் தாக்கினார்.

அவருக்குக் கோபம் வந்தது எதனால் என்றால் நான் ‘மரியாதையான கேள்வி’ என்று கேட்டதுதான். அவர் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் மரியாதையானவை, நான் கேட்டதுதான் மரியாதைக் குறைவான வாசகமாக அவர் அறிவுக்குப்பட்டது.

மீண்டும் களைப்படைந்த அந்த அட்டை சிறிய அட்டைகளிடத்துச் சத்தமாகச் சொன்னார், ‘இவனை இழுத்துக்கொண்டு போய் அந்த அறையில் போற்றா’ என்றார். அவர்களும் எனது கால்ச் சங்கிலியில் பிடித்து இழுத்துச் சென்று அறையினுள் விட்டனர். எனது முதுகு நிலத்தில் உரசியதால் அடி வலியுடன் அதுவும் சேர்ந்து வதைத்தது.

தொடர்ந்து நான்கு நாட்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தேன். இரவு 11மணியளவில் பல அட்டைகள் சேர்ந்து கதைக்கும் சத்தம் கேட்டது. இரண்டு லொறிகள் எங்கள் கைதிக் கல்லறைகள் முன் வந்து நின்றன.

நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றிலுமிருந்த வீடுகளிலிருந்தும் பல பேருக்கு விலங்கிட்டு அழைத்து வந்திருந்தனர். எங்களையும் வெளியில் அழைத்தனர். மெதுவாகச் சென்றோம். என்னுடன் அந்த அறையில் இருந்தவரது பெயர்கள்

(01) திரு. ஈசன் (நெடுந்தீவு)

(02) திரு. நாகேஸ் (புங்குடுதீவு)

(03) திரு. கண்ணன் (அரியாலை)

(04) திரு. பாலசுப்பிரமணியம் அல்லது ஜோதி (காங்கேசன் துறை)

(05) திரு. சிவலிங்கம் (குருநகர்)

(06) திரு. பிரசாந்த் (கிளிநொச்சி)

ஆகியோர் அங்கு நின்ற லொறியினுள் ஏறினோம். எங்கே கொண்டு செல்கின்றனர் என்பதும் எமக்குத் தெரியாது.

இவர்கள் யார்? ஏதற்காக இப்படிக் கொடுமைப்படுத்துகின்றனர்? விடுதலை யாருக்காக? நாங்கள் எங்கள் இனத்தின் எதிரிகளா? சிங்களவருடன் நாம் எதற்காகப போராடவேண்டும், விடுதலை இந்தக் கொடிய அட்டைகளிடமிருந்தா? அல்லது சிங்கள ,ராணுவத்திடமிருந்தா? சட்டம், ஒழுங்கு, விசாரணை என்று இருந்த காலம் போய் மிருகங்களிடம் அகப்பட்டுக்கொண்ட மனிதர்களாகி விட்டோமே என்று எண்ணிக் கொண்டு லொறியின் உள் ஓரத்தில் அமர்ந்தேன்.

வாய் பேசும் மிருகங்களிடம், வாய் பேசும் மனிதன் அகப்பட்டுள்ளான் என்ற எண்ணத்துடன் அடுத்த வதை முகாமுக்கு பயணம் செய்ய தயாராக்கிக் கொண்டேன். ஏறக்குறைய ,ரண்டு லொறிகளிலுமாக 150 பேர்வரை ஏற்றப்பட்டோம். மிருகங்கள் போல் உள்ளே தள்ளி தார்ப்பாயால் லொறியின் பின்பகுதியை மறைத்தனர். இந்தவேளை மல்லி அட்டை அங்கே வந்தார்.

டே, சலீமிட்ட சொல்லடா, ‘ இவர்கள் அத்தனை பேரையும் சுட்டுக் கொல்லச் சொல்லி’ என்று கூறி லொறிகள் இரண்டையும் புறப்படச் சொன்னார்,

இந்த மல்லிப் பற்றி சிறு குறிப்பைத் தருகிறேன்:-

மல்லியின் பிடியில் நான் ஒரு மாதத்திற்கும் மேலாக இருந்தேன். தினமும் அந்த அறையில் ,ருந்த தமிழ் ,ளைஞர்களை தாக்குவதும் சித்திரவதைச் செய்வதுமாகத்தான் இருந்தார். இவர் இப்படி ஓர் பதவியை அடையக் காரணமாக இருந்தது இவர் செய்துவிட்ட கொலைகள்தானாம். யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் இருந்த ஏனைய இயக்க உறுப்பினர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும், சந்தேகப்படுபவர்களையும் இவர் சுட்டுக் கொன்று விடுவாராம். பின்னர் சுட்டுக் கொன்றவர்களது விபரங்களை எழுதி தலைவர் பிரபாகரனுக்கு அனுப்புவாராம். சுட்டுக்கொல்லப்படும் அனைவரும் துரோகிகள் என்று இவரே தீர்ப்பும் கூறி எழுதி அனுப்ப தலைவர் பிரபாகரன் மகிழ்ச்சியடைந்து இவரைத் தேர்வு செய்து பதவி உயர்வு கொடுத்து சிவபுரம் முகாமுக்கு சித்திரவதை வல்லூனராக அனுப்பிவைக்கப்பட்டாராம். இவரை மண்டை மல்லி என்றும் பிணம் தின்னி என்றும் ,வரது சகாக்களால் பெருமையாக அழைக்கப்பட்டனர். தமிழர்களை இவர் தலையில் சுட்டுக்கொல்வதால் ,வருக்கு மண்டை மல்லி என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறினர்.

என்னுடன் இருந்தவர்களை இவர் சித்திரவதை செய்யும் போது நான் பார்த்துக் கொண்டிருப்பேன். எனது மனதுக்குள் நான் வேண்டிக்கொண்டேன், இவனது மரணத்தை நான் பார்க்க வேண்டும், இறைவன் இவனுக்கு உரிய தண்டனை வழங்குவார் என்பது என் நம்பிக்கையாக இருந்தது. இரண்டு ஆண்டுகளின் பின் இரண்டு வாரங்கள் மட்டுமான ஓர் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது. அட்டைகளாக(புலி) அறிவித்த அந்த யுத்தநிறுத்தத்தை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.

யுத்த நிறுத்தம்தானே என்ற துணிச்சலில் மல்லி அட்டையும், வேறு ஓர் அட்டையும் ஒட்டுசுட்டான் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இலங்கை இராணுவம் இந்த இரு அட்டைகளையும் சுட்டது. இதில் மல்லி கீழே விழுந்ததும். கூட வந்த அட்டை மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டது. மல்லியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

தகவல் அறிந்த அட்டைக் கூட்டம் ஒட்டுசுட்டான் சென்று மல்லியின் தலையில்லா முண்டத்தை எடுத்து வந்தனர். மல்லியின் தலைக்காக அட்டைகள் (புலிகள்) மூன்று நாட்களாகக் காத்திருந்தனர். செஞ்சிலுவைச் சங்கத்திடம் அட்டைகள் முறையிட்டு மல்லியின் தலையைக் கண்டுபிடித்துத் தரும்படி மன்றாடி நின்றனர். செஞ்சிலுவைச் சங்கம் ஒட்டுசுட்டான் காடுகளில் தேடிப்பார்த்தனர், ,ராணுவம் மல்லியின் தலையை வெட்டி காடுகளுக்குள் வீசியிருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் சந்தேகப்பட்டது.

சிலவேளை நாய் அல்லது நரிகள் மல்லியின் தலையை இழுத்துச் சென்றிருக்கலாம் என்று செஞ்சிலுவைச் சங்கத்துக்கு சந்தேகம் தோன்றியது. இதனால் செஞ்சிலுவைச் சங்கம் ஒட்டுசுட்டான் காடுகளிலும், நாய்கள் உள்ள வீடுகளிலும் தேடிப்பார்த்தனர் மல்லியின் தலையை! கடைசிவரை கிடைக்கவே இல்லை மல்லியின் தலை. நான்காம் நாள் தலையில்லாத மல்லிக்கு பட்டம் வழங்கப்பட்டு எரியூட்டப்பட்டார்.

லெப்ரினள் கேணல் நவநீதன் (மல்லி) (புதுக்குடியிருப்பு)

மல்லியின் சித்திரவதையை அனுபவித்த போது நான் என்மனதுக்குள் இறைவனிடம் வேண்டிக்கொண்டது என் கண் முன்னாலேயே இவரது மரணத்தைப் பார்க்க வேண்டும் என்று. மண்டை மல்லி மண்டை இல்லாமலேயே மக்கள் முன் மாண்டுபோனார். இறைவன் ஒரு நாள் தண்டிப்பார் என்பது என் நம்பிக்கையாக ,ருந்தது.

வவுனிக்குளம் சிவபுரத்திலிருந்து புறப்பட்ட லொறி இரவு 20 நிமிடங்கள் வரை பயணித்து ஓர் இடத்தில நிறுத்தப்பட்டது.

(தொடரும்….)

(பாகம் -3)

வவுனிக்குளம் சிவபுரத்திலிருந்து புறப்பட்ட லொறி இரவு 20 நிமிடங்கள் வரை பயணித்து ஓர் இடத்தில நிறுத்தப்பட்டது. எங்களை இறங்கும்படி பணித்தனர் அட்டைகள். இறங்கினோம். கட்டப்பட்ட கண்கள் கழற்றப்பட்டன. எங்கும் வெளிச்சமாக இருந்தது.

இந்த இடம் துணுக்காய் என்றனர், அட்டைகள் நடத்திவரும் வதைமுகாம் இதுதான் என்றனர் என்னுடன் விலங்கிடப்பட்டிருந்தவர்கள். இறங்கிய எங்களை ஓர் பழைய அரிசி மில் ஒன்றினுள் அழைத்துச் சென்றனர். அங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தரையில் படுத்திருந்தனர். அவர்களது கால்களில் சங்கிலிகள் மாட்டப்பட்டிருந்தன. இருவர் ஒரு சங்கிலியில் மாட்டப்பட்டிருந்தனர். எங்களது கால் சங்கிலியை கழற்றினர். இருவர் இருவராக நிற்கச் சொல்லி ஒரு சங்கிலியில் இருவரை இணைத்தனர். பின்னர் இவர்களினுடே படுத்துக்கொள்ளும்படி கூறினர். நாளை வருகிறோம் என்று கூறிச் சென்றனர்.

காலை 5.50மணிக்கு எழுந்து காலைக் கடனுக்கு செல்லும்படி பணித்தனர். நாம் இரண்டு பேர் ஒரு சங்கிலியில் இணைக்கப்பட்டிருந்தோம். அப்படியே சென்று கடனைக் கழித்துவிட்டு வரும்படி கூறினர். அங்கே இருந்த அத்தனை பேரும் இவ்விதம் பிணையப்பட்டு இருந்தனர். பலர் மெலிந்து நோய்வாய்ப்பட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.

என்னுடன் விஜயன் என்ற இளைஞர் பிணைக்கப்பட்டிருந்தார். இவர் டெலொ இயக்கத்தைச் சேர்ந்தவர். நாம் இருவரும் காலைக் கடனைக் கழிக்கச் சென்றோம். 15அடி ஆழம் கொண்டதும் முப்பது அடி நீளம் கொண்டதாகவும் அமைந்த குழியின் மேல் மரங்கள் போடப்பட்டு அதன் குறுக்கே பலகைகளைப் போட்டிருந்தனர். பலகைகளின் இடையே அரையடி அளவு இடைவெளியிருக்கும், அதன் ஊடாக நாம் மலம் கழிக்க வேண்டும். வாழ்வின் முதல் தடவை கைதியாக நாசி யேர்மனியரின் வதை முகாம் காட்சிகளைக் நேராகக் கண்டேன் அங்கே!

இருவர் இருவராக பிணைக்கப்பட்ட மாடுகள் போன்று வரிசையாக நடந்து சென்று மலம் கழிக்கும் மையத்தை அடைந்தோம். அருகில் இன்னொருவர் நெருக்கமாக இருக்கும் போது எப்படி காலைக் கடனை முடிப்பது. விஜயன் தனது கடனை முடித்தார். நான் சிறுநீர் மட்டும் கழித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். எங்களது அரிசி மில் போன்ற வேறொரு அரிசிமில்லில் இதே போன்று பல பேர் சங்கிலியால் பிணைக்கப்பட்டு காலைக் கடன் கழிக்க வரிசையாகச் சென்று கொண்டிருந்தனர்.

காலையில் தண்ணீர், தேனீர், உணவு எதுவும் கிடையாது. கொட்டடிக்குள் மீண்டும் வந்ததும் யாருடனும் கதைக்கக் கூடாது, நிலத்தில் கீழே பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும்படி உத்தரவிட்டனர் அட்டைகள். காலை 8.30 மணியளவில் “சலிம்” என்ற செம்பாட்டு சலீம் அல்லது சேர்லி அம்மான் என்ற குள்ளமான அட்டை (புலி) வந்தார். தலை மயிர் செம்பாட்டு நிறத்தில் இருந்தத

நேற்று இரவு இங்க வந்த எல்லாரையும் வெளியில வரச் சொல்லு என்று சத்தமாகச் சொன்னார். சில அட்டைகள் உள்ளே வந்து இரவு வந்த எல்லாரும் வாங்கடா வெளியில் என்றனர். நாம் அனைவரும் (150பேர்) வெளியில் வந்தோம். செம்படை தலை அட்டை அங்கே நின்று கொண்டு எங்களை நோக்கி அறிவுரை வழங்கினார்.

நீங்கள் இங்கு வந்திருப்பது விசாரணைக்காக, விசாரணை முடிந்ததும் நீங்கள் விடுவிக்கப்படுவீர்கள். விசாரணை முடியும் வரை நீங்கள் இங்கேதான் இருக்க வேண்டும். விசாரணை செய்யும் எங்களுக்கு நீங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். நீங்கள் இருந்த இடத்துக்கு திரும்பிச் சென்று இருக்கவும் என்று கூறி அவரது அறிவுரையை முடித்தார்.

இவர் தனது அறிவுரையை முடித்துவிட்டு விசாரணைப் பகுதிக்குச் சென்றார். விசாரணைப் பகுதி எங்கள் இருப்பிடத்திலிருந்து சுமார் 20 அடிகள் தள்ளி இருந்தது. இந்த அட்டை அங்கே சென்றதும் இளைஞர்கள் அலறும் சத்தம் கேட்கத் தொடங்கியது. அம்மா, அய்யோ என்ற இரண்டு வார்த்தைகளும் தொடர்ந்து அபயக் குரலுடன் ஒலித்துக் கொண்டே இருந்தது.

இந்த ஓநாய்கள் எங்கள் இளைஞர்களை வதைக்கிறார்கள், யாராக இருந்தாலும் மனித நேயம் என்பது இயற்கையாக இருக்க வேண்டியது மனிதனுக்கு. இந்த அட்டைகளுக்கு இதயம் என்ற ஒன்றே இருந்ததாகத் தெரியவில்லை. தமிழனை இவ்வளவு அரக்கனாகவா இறைவன் படைத்தான். இளைஞரது அலறும் சத்தம் ஒரு மனிதனால் கேட்கமுடியாததாக இருந்தது. நான் தாக்கப்படும் போது ஏற்பட்ட வலியை விட இந்த இளைஞர்கள் தாக்கப்படும் போது அவர்கள் எழுப்பும் அவலக் குரல் மிருகங்களையும் இரங்கவைக்கும். முதலில் “ஆண்டவரே இவர்களை மன்னித்துவிடும்” என்று கோரிக்கை வைத்த நான் இப்போது, “ஆண்டவரே இவர்களை மன்னிக்காதீர்” என்ற கோரிக்கையை வைத்தேன்.

காலை 9மணியளவில் “தீபன்” என்ற ஒரு அட்டை உள்ள வந்தது. விசாரணைக்கான நபர்களைத் தேர்ந்து கைதிகளாகிய எங்களை இந்த நபர்தான் அவர்களிடத்து அனுப்பிவைப்பார். உள்ளே வந்த இந்த அட்டை புதிதாக வந்த எங்களுக்கு கைதி இலக்கம் வழங்கப் போவதாகக் கூறி ஓர் கதிரையில் அமர்ந்தார். நாங்கள் வரிசையாக நடந்து அவர் முன் ஆஜர் ஆனோம். அவர் ஒவ்வொருவருக்கும் இலக்கங்களை வழங்கினார். எனக்கு வழங்கப்பட்ட இலக்கம் ; K. 87 இந்த அட்டைகளின் சிறை நிர்வாகத்தில் A முதல் Z வரை ஒவ்வொரு எழுத்துக்கும் 100 பேர் வீதம் இருக்கும்.

இலக்கத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் அந்த மில்லுக்குள் சென்று நிலத்தில் அமர்ந்தேன். மறுபடியும் உள்ளே வந்த தீபன் அட்டை கைதிகள் இருக்கும் நிலத்தில் இரண்டடி அகலம் இரண்டடி நீளத்தில் பெட்டி போன்ற வடிவத்தில் நீல நிறத்தில் கோடுகள் வரையும் படி உத்தரவிட்டார்.

சில மணி நேரங்களில் வண்ணப் பெயிண்ட் வந்தது. நான்கு கைதிகளை அழைத்து கோடுகளை வரையச் சொன்னார். சதுரங்க அட்டை போல இருந்தது அந்தக் கோடுகள். இந்த 2X2 அளவில் உள்ள கோடுகளுக்கு நடுவில் கைதிகள் அமர்ந்திருக்க வேண்டும். ஒருவருடன் ஒருவர் கதைக்கக் கூடாது. கால்களை நீட்டக் கூடாது. நிமிர்ந்து சப்பாணி போட்டபடி அமர்ந்திருக்க வேண்டும். இப்படி ஓர் உத்தரவு போட்டார் தீபன் அட்டை!

நாம் இருவர் இருவராக பிணைக்கப்பட்டிருந்தோம். அதனை நீக்கிவிட்டு தனித் தனியாக சங்கிலி கொண்டு இரண்டு கால்களையும் இரு முணைகளாலும் சுற்றி எலக்ரிக் வெல்டிங் செய்தனர். இரண்டு கால்களுக்கும் இடையில் உள்ள சங்கிலியின் நீளம் ஒன்றேகால் அடி இருந்தது. எலக்ரிக் வெல்டிங் செய்யும் போது எனது காலில் வெப்பம் தாக்கியது. நெருப்பு பொறி முகத்தில் சிதறி விழுந்தது. நாங்கள் நடமாட முடியாத மிருகங்கள் ஆக்கப்பட்டோம். எங்கள் சேட்டுகளைக் கழற்றச் சொன்னார்கள். இனிமேல் கைதிகள் மேலாடை அணியக் கூடாது என்று தீபன் அட்டை சத்தமிட்டுக் கூறினார்.

சேட்டைக் கழற்றச் சொன்னதும் நான் மிகவும் பயந்தேவிட்டேன். சில வேளை எங்கள் பகுதியில் மாடுகளுக்கு அடையாளங்களாக பெயர் அல்லது இலக்கத்தினை நெருப்புக் கம்பிகளால் சூடுவைத்து அடையாளம் இடுவார்கள். அப்படித்தான் இந்த கயவர்கள் செய்யப் போகிறார்களோ என்று மிரண்டு போயிருந்தேன்! நல்லவேளையாக அப்படி சூடு போடவில்லை. அப்படி ஓர் அடையாளம் இடும் முறை ஈழத்தில் இருப்பது தீபன் என்ற அந்த அட்டைக்கு ஞாபகம் வராமல் விட்டதற்கு நான் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன் மனதுக்குள்.

முதல்நாள் காலை முதல் இரவு வரை நான் அவர்கள் வரைந்த கோடுகளுக்குள் நடுவில் இருந்தேன். கால்கள் இரண்டும் விறைத்துவிட்டன. இவர்கள் பூட்டிய சங்கிலி விலங்கு கால்களை நெரித்து இழுத்து அண்டிக்கொண்டே இருந்தது. இரண்டு கால்களிலும் சங்கிலி பதிந்து கொப்புளங்கள் ஒரே நாளில் ஏற்பட்டுவிட்டது. மறுநாள் விடிந்ததும் காலைக் கடன் கழிக்க நடந்து செல்லக் கூடாது ஓடிச் செல்ல வேண்டும் என்று அங்கு நின்றிருந்த ஒரு அட்டை உத்தரவிட்டது. சங்கிலியால் பிணைத்திருக்கும் எம்மால் எப்படி ஓட முடியும். இரண்டு கால்களையும் அருகருகில் வைத்து துள்ளித் துள்ளிதான் சென்றேன் கழிவிடத்துக்கு சிலர் மெதுவாக வந்தனர், அவர்களுக்கு முதுகில் கட்டையால் அடித்தது அந்த அட்டை.

அன்று 11மணியளவில் அரை றாத்தல் பாணும் ஒரு தட்டில் பருப்புக் கறியும் கொடுத்தனர். ஒரு தட்டில் இருக்கும் கறியை பாணில் தொட்டு இருவர் உண்ண வேண்டும். ஒரு பிளாஸ்ரிக் கப்பில் தண்ணீர் கொடுத்தனர். மாலை 5மணியளவில் சோறும் பருப்பும் சோயா பீன்சும் கலந்த கறி ஒன்று கொடுத்தனர். பத்துப் பேருக்கு ஒரு பிளேட். ஒருவர் மாறி ஒருவர் உண்ண வேண்டும். பிளேட் கழுவப்படாமல் மாறி மாறிச் சாப்பிட வேண்டும். கைகழுவதற்கு அனுமதியில்லை. விரல்களை நாங்கள் நாக்கினால் நக்கி சுத்தம் செய்தோம்.

காலை மாலை இரு வேளை தவிர இடையில் எக்காரணத்தைக் கொண்டும் இயற்கை உபாதைகளைக் கழிக்க அனுமதிக்க மாட்டார்கள். மலம், சிறுநீர் இரண்டையும் அடக்கிக் கொண்டு இருக்க வேண்டும். அப்படி இடையில் மலம் சிறுநீர் வந்தால் சொப்பின் பையில் அதனை நிரப்பி வைத்திருந்து மாலையோ அல்லது காலையிலோ வெளியில் எடுத்துச் செல்ல வேண்டும்.

நான்கு நாட்கள் இப்படிக் கடந்தன. இரவு ஒரு மணியிருக்கும் ஒரு வாகனம் வந்தது. அதிலிருந்து இந்த அட்டைகள் வேட்டையாடி வந்த தமிழ் சகோதரர்கள் இறங்கினர். அப்படி வந்தவர்களில் ஒருவர் எனக்கருகில் அமர்த்தப்பட்டார். நானும் உறங்கிவிட்டேன். காலையில் எழுந்ததும் அவரை உற்றுப்பார்த்தேன். வெள்ளை நிறம், தடித்த உருவம், குறைந்த உயரம், வெறும் மேலுடன் உறங்கிக் கொண்டிருந்தார். சில இடங்களில் லேசாகக் கண்டங்கள் தெரிந்தன. நான் முதலில் இருந்த சிவபுரம் அட்டைகளைக் கடந்து தான் இவர் வந்திருப்பார் என்று நினைத்துக் கொண்டேன். மல்லி என்ற அந்த அட்டை இவரது இரத்தத்தை உறுஞ்சியிருப்பார் என்பது உறுதியானது.

அவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்!

தொடரும்


இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com