Showing posts sorted by relevance for query T111. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query T111. Sort by date Show all posts

Wednesday, March 17, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்! - கிறேசியன்! (பாகம் -12)

ஒருவாரம் அந்தப்பக்கம் வராமல் இருந்தவர் பழையடி தனது கைவரிசையைக் காண்பித்துக் கொண்டுதான் இருந்தார். கே.டி.யின் சொந்த இடம் வட்டக்கச்சி, இவர் பலதரப்பட்ட ஒழுங்கீனங்களைச் செய்ததாகவும், புலி விலங்குகளின் கட்டுப்பாட்டையும் மீறி தன்னச்சையாகச் செயல்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, புலி இயக்கத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டதாகவும் அறிந்தேன்.

நான் இந்த மில் சிறைக்கு வந்த போது இருந்த கைதிகளில் பாதியளவு குறைந்து அந்தக் குறைந்த அளவைப் புதியவர்களைக் கொண்டு வந்து நிரப்பியிருந்தனர். நான் வருவதற்கு முன்னர் ஏறக்குறைய 1500 பேர்வரையில் புலி விலங்குகள் கொலை செய்துவிட்டதாக அறிந்தேன். நான் வந்த பின்னரும் இதே அளவு சகோதரர்களை புலி விலங்குகள் கொன்றிருப்பார்கள். விடுதலை செய்யப்படுபவர்கள் பகல் நேரங்களில்தான் அழைத்துச் செல்லப்படுவார்கள். அப்படி நான் வந்த இவ்வளவு காலங்களிலும் பகல் நேரத்தில் அழைத்துச் சென்று விடுதலை செய்யப்பட்டவர்கள் இரண்டுபேர் மட்டுமே.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்ன. எங்களுக்கு வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது. செய்தித் தாள்கள் கிடையாது. வானொலி, ரி.வி எதுவும் கிடையாது. அவர்களது சித்திரவதை அவர்கள் கொடுக்கும் இரண்டு வேளை உணவு, அருகில் இருப்பவர்கள் சொல்லும் அவர்களது அனுபவங்கள், கால் விலங்கு இவைகள்தான் எங்களுடன் பிணைந்திருந்தன. நாங்கள் தினமும் பரிதாபப்படும் விடயம் அந்தக் குழிகளுக்குள் வாழும் சகோதரர்கள் பற்றியதுதான். தரையில் வைத்திருக்கும் எங்களுக்கே இவர்கள் இவ்வளவு கொடுமைகள் செய்திருக்கையில் அந்த குழிகளுக்குள் இருக்கும் இளைஞர்களுக்கு எப்படியான கொடுமைகளைச் செய்திருப்பார்கள் என்பது கற்பனைகூட செய்துபார்க்க முடியாது.
விடுதலை இயக்கங்களைச் சேர்ந்தவர்களை புலிவிலங்குகள் எதிரியாகக் கற்பனை செய்து பழிதீர்த்தார்கள். ஆனால் பொதுமக்களை இழுத்துவந்து எதற்காக பிற இயக்கங்களுக்கு உதவி செய்தாய் என்று கொடுமைப்படுத்தி கொலை செய்தது மனிதத் தன்மைக்கும் நியாயத்துக்கும் பொருத்தமில்லாதது.

என்னுடன் செட்டி என்றொரு சகோதரர் எனது பகுதியில் கால்விலங்குடன் பலதுயரங்களைச் சந்தித்து வந்தார். இவர் யாழ்ப்பாணம் கெனடி வீதியைச் சேர்ந்தவர். சிறந்த கடல் ஓட்டி, இவர் அனைத்து இயக்கங்களுக்கும் உதவிகள் பல செய்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் இலங்கை இந்திய நேவிகளின் கண்களில் படாமல் படகு ஓட்டக்கூடியவர். ஆயிரக்கணக்கானவர்களை இந்தியாவுக்கு படகுகளில் ஏற்றி கரைசேர்த்துள்ளார். இறுதியாக ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்களையும் இந்தியாவில் இறக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கம் போல் பெட்டிசன் வர இவரை அழைத்து வந்து கொடுமைகள் பல செய்தனர். இவர்க்கு நான்கு குழந்தைகள்.

இவருக்கு இழைத்துவிட்ட கொடுமைகளை அவர் என்னிடம் விபரித்தார். ஒவ்வொரு சம்பவங்களையும் விபரிக்கும் போதும் அவரால் அழுகையை அடக்கமுடியவில்லை. எனது குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என்று பல தடவை கண்ணீர் வடித்தார். உண்மையில் அவர் தியாக உணர்வு கொண்ட பாமரனாக இருந்தார்.

அவர் என்னிடத்தில் கேட்டார்! எதற்காக புலிகள் இப்படி எல்லாரையும் கொல்லினம்? எல்லாரும் தனிநாடு கேட்டுப் போராடினவர்கள்தானே! நான் எலலாருக்கும் உதவியிருக்கிறேன். எனக்கு இந்த இயக்கங்களுக்குள் உள்ள வித்தியாசங்கள் என்னவென்றே தெரியாது! யாழ்ப்பாணத்தில் எல்லாரும் எல்லாருக்கும் உதவி செய்தினம், நானும் அப்படித்தான் உதவிசெய்தென். கடல் ஓடுவது. எங்களுக்கு நாடு கிடைக்க என்னாலான உதவியைச் செய்தேன். எனக்குப் பெரிய படிப்பறிவு கிடையாது. உடல் உழைப்பை எங்கள் இனத்துக்காக வழங்கினேன். இதில் என்ன குறையைக் கண்டனர் இந்தப் புலிகள். நான் முன்பு நினைத்தேன் புலிகள் இயக்கத்தினர் படித்தவர்கள், பண்புள்ளவாகள் என்று என்னைப் பிடித்துவந்த பின்னர்தான் தெரிந்தது, படிப்பறிவு மட்டுமல்ல, நாகரீகமே தெரியாதவர்கள் என்று. அவ்வளவுக்கு இவர்கள் அரக்கர்களாக இருக்கின்றனர்.

இப்போதே இவர்கள் இப்படி என்றால் நாடுகிடைத்தால்! எனது குடும்பத்தையே அழித்துவிடுவார்கள். நான் இல்லாமல் எனதுக் குடும்பத்தினர் உணவுக்கே கஸ்ரப்படுவார்கள். அவர்களுக்கு யார் உணவு கொடுப்பது? என்னைப் பார்ப்பதற்கு கண்டிப்பாக வந்திருப்பார்கள். இந்த மிருகங்கள் அவர்களைக் காட்டவே இல்லை. எனது மூத்த மகள் என்னைக் கொண்டு வந்த அன்றே புலிகளின் ஒப்பிசுக்கு முன்னால் நின்று சண்டை போட்டவள். தாயை விட என்னுடன்தான் பாசமாக இருப்பாள். நான் இல்லாமல் பள்ளிக்கூடம் கூட போயிருக்கமாட்டாள். எப்படியாவது அவளைப் பள்ளிக்கூடம் போகச் சொல்ல வேண்டும், இந்த விலங்குகளிடம் கேட்டேன், “ஒரு கடுதாசி போடவேனும் என்டு” ‘உண்ட சறத்தைக் கழட்டி கடுதாசி எழுது” என்று ஏசிவிட்டுச் சென்றார்கள். பிள்ளைப்பாசம், குடும்பப்பாசம் பற்றி இந்த மனித விலங்குகளுக்கு எப்படித் தெரியப்போகுது” என்று அழுதான் செட்டி!

இவர் தினம் தினம் தன் உடல் எடையை இழந்துவந்தார். அதிஸ்ரவசமாக இவர் ஒரு நாள் விடுவிக்கப்பட்டார். செட்டி வீடு சென்ற நான்கு மாதங்களில் இறந்துவிட்டார். புலிவிலங்குகளில் சித்திரவதை அவரது நுரையீரலைப் பாதித்திருந்தது. பல மருத்துவர்களைச் சந்தித்தும் முடியாமல் போய் இறந்தார். இவரது இறப்பைப் கண்ட இவரது மனைவி ரூத் மற்றும் குழந்தைகள் புலிகளை வாழ்த்தியிருப்பார்கள்!!

செட்டி எனக்குச் சொன்ன விடயங்கள் அப்பாவித்தனமாக இருந்தாலும் அதில் மறைந்திருக்கும் நியாயம் தமிழர்களைச் சிந்திக்கவைப்பவை! இயக்கங்கள் தங்களுக்குள் மோதிக்கொண்டன. அவர்களுக்குள் என்ன போட்டி என்றே மக்களுக்குத் தெரியாது. ஆனால் இயக்கங்களுக்கு உதவிய பொதுமக்களைச் சித்திரவதை செய்வதைத் தடுத்து நிறுத்துவது யார்? தமிழர்களை வழிநடத்த தமிழருக்கென்று நியாயமான தலைமை என்று இல்லாமல் போனதுதான் தமிழினத்தின் இன்றைய நிலைக்குக் காரணம் என்றே நினைக்கிறேன்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 6,7

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8


1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 9

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -10)

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

தொடரும்…......

Read more...

Sunday, May 31, 2009

ஒரு பாசிஸ்ட்டின் மரணம். -தமிழரசன் பேர்ளின்- பகுதி 1

இலங்கை அரச ஊடகங்கள் 17.5.09 இல் பிரபாகரனின் மரணம் பற்றிய செய்திகளையும் இதற்கு அடுத்த நாள் பிரபாகரன் இறந்த உடலைக் காட்டும் படங்களையும், வீடியோ காட்சிகளையும் வெளியிட்டன. பிரபாகரன் 15.05.09 இலங்கை இராணுவத்தால் பிடிக்கப்பட்டதாகவும் பின்பு பலசித்திரவதைகள் மூலம் உண்மைகள் பெறப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் பல்வேறுபட்ட செய்திகள் புகலிடமெங்கும் உலாவி வந்தன.

மேற்குலக நாடுகளில் புலிகளின் இணையத்தளங்கள், வானொலிகள், தொலைக் காட்சிகள் முதலிரண்டு நாட்களும் பிரபாகரனின் மரணம் பற்றிய செய்திகள் படங்கள் எதையும் வெளியிடவில்லை. சி.என்.என், பீ.பீ.சி, அல்யெசீறா உட்பட சர்வதேச ஊடகங்களில் பிரபாகரனின் சாவு பற்றிய தகவல்கள் வெளிவந்தமையால் இவர்களும் கருத்துச் சொல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

புலிகளின் பிரதான செய்தி ஊடகமான தமிழ்நெற் குமரன் பத்மநாதனின் செய்தியை வெளியிட்டு பிரபாகரனின் மரணச் செய்தியை மறுத்ததுடன் பிரபாகரன் உயிருடன் ஆரோக்கியமாக இருப்பதாக செய்தியை வெளியிட்டதுடன், புலித்தேவன் நடேசன் போன்றவர்களை அரசு நயவஞ்சகமாகக் கொன்றுவிட்டதாக குற்றம்சாட்டியது. பிரபாகரன் 2000 பேருடன் தப்பி வன்னிக்காட்டில் போராட்டத்திற்குத் தயாராவதாகவும் செய்திகள் படிக்கப்பட்டன. தம் தலைவர் சாகவில்லையென்று புகலிடப் புலி மாந்தர்கள் வாதிட்டனர்.

கிட்லர் இறந்தவுடன் அவன் சாகவில்லை அங்கே இருக்கிறான், இங்கே இருக்கிறான் ஒழித்து வாழ்கிறான் என்ற வதந்திகள் திட்டமிட்டும், திட்டமிடப்படாமலும் பல பத்தாண்டுகளாகப் பரப்பப்பட்டன. சுபாஸ் சந்திரபோஸ் இன்னமும் இறக்கவில்லையென்று சொல்லி இருபது முப்பது வருடங்களாக இந்தியாவில் தேடிக்களைத்தார்கள். விசாரணைக் குழுக்கள் நியமித்துக் கூடத் தேடிப் பார்த்தார்கள்.

இதே போலப் பிரபாகரனைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்ட தனிமனிதவழிபாடு, யாராலும் எவராலும் வெல்லப்பட முடியாத பெருவீரனென்ற விம்பம், இத்தகைய கற்பனைகள் பிரபாகரன் இன்னமும் உயிர்தரிப்பதான யதார்த்திற்குப் புறம்பான மனப்பிராந்திகள் உலாவுவதைத் தீவிரப்படுத்தின.

தீபம், ஜி.ரி.வி போன்ற புகலிடத் தமிழ் தொலைக்காட்சிகள் வன்னியில் யுத்தம் தொடங்கியவுடன் காட் இன்றி இலவசமாக மக்களுக்குக் காட்சி தரத் தொடங்கின. இந்தப் புலிப் பாசிசப் புழுகுணி ஊடகங்களையே பெரும்பாலான தமிழ் மக்கள் பார்த்தனர். இலங்கைச் செய்திகளைப் பெற வேறு எந்தத் தொலைக்காட்சிகளும் இருக்கவில்லை. புகலிட நாடுகளில் இயங்கும் புலிகளின் அமைப்பை விட இவை தினசரி மக்களைச் சென்றடைந்தன. புலிகள் இவ் இரு ஊடகங்களையும் பின் புறமிருந்து சிறப்பாகப் பயன்படுத்தினார்கள். புலி அல்லாத எக்கருத்துக்கும் இடமிருக்கவில்லை.

தீபம், ஜீ ரீவி இரண்டினதும் ஊடகப் பயங்கரவாதமானது சுதந்திரமாக இயங்கியது. அனைத்துப் புகலிடத் தமிழ் மக்களையும் புலிப்பாசிசத்தின் கீழ் அணிதிரட்டியது. வெறித்தனமான தமிழினவாதம் பரப்பியது. அண்மையில் புதிதாக இலங்கையில் இருந்துவரும் டான் தமிழ்ஒளி தொலைக்காட்சியின் வருகை இவர்களது தனி இருப்பை அசைக்கத்தொடங்கியது.

தீபம் ஜீ ரீ.வீ இவ்விரண்டு தொலைக் காட்சிகளும் பெரும்பகுதியாக வன்னி அகதிகளின் அவலங்களை சாவை இடைவிடாமல் முழுநாளும் ஒளிபரப்பின. மக்களை சோகத்தை விரும்பும் மனப்பாதிப்புடையவர்களாகமாற்றின. இறந்து காயப்பட்ட மனிதர்களின் உடல்கள் தொடர்ச்சியாகக் காட்டப்பட்டன. சில சமயம் புலிகளின் பயங்கரவாதத் தாக்குதலில் இறந்த சிங்கள மக்களின் இறந்த உடல்கள் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் உடல்கள் என்று காட்டப்பட்டது.

இந்தப் பிரச்சாரப் பொய்கட்கு எதிராகவோ சமமாகவோ எந்த ஊடகமும் இருக்கவில்லை. இவர்கள் சர்வாதிகார ஊடகத் தனி ஆட்சி செலுத்தினர். தமிழ்மக்களைக் கொல்கிறார்கள் பெண்களைக் கற்பழிக்கிறார்கள, தமிழினக் கொலை நடக்கிறது. தமிழ் அகதிகளை வதை முகாங்களில் அடைக்கிறார்கள். தமிழ் இளைஞர்களைக் கொன்று உள் உறுப்புக்களை அபகரிக்கிறார்கள் என்பது போன்ற எண்ணில் அடங்காப் பொய்கள் தினசரி செய்தியாக வாசிக்கப்பட்டன.

புலிகளின் தலைமைப் பிரச்சார ஊடகமான தமிழ்நெற்றின் செய்திகள் இந்த ஊடகங்களில் அப்படியே மறுவாசிப்புப்பெற்றன. மக்களுக்கு புலிப் பொய்களுக்கு எதிராக உண்மை அறியும் வாய்ப்பு இருக்கவில்லை. தமிழ் ஊடகப் பயங்கரவாதத்தின் உச்சமட்டப் பாதிப்புக்குப் புகலிடத்தமிழர் உள்ளாயினர்.

மனிதர்களின் இயற்கையான கருணை, மனித இரக்கம், ஏனைய மக்களினங்களைப் பற்றிய கவனம் ஜனனாயக உணர்வு என்பன மனிதர்களிடம் மந்தித்துப் போயின. சிங்களவர்களைக் கொல்லவேண்டுமென்ற கருத்து வெளிப்படையாக இந்த ஊடகங்களில் கேட்டது.

புலித்தலைவர் எல்லாம் வல்ல இறைவனைப் போல் சகலரையும் அவதானித்துக் கொண்டிருப்பதாக உரிய நேரத்தில் செயற்படுவாரென்று புலிநபர்கள் வாக்குறுதிகளைத் தந்தார்கள் ஐம்பது தமிழனைக் கொன்றால் பதிலாக 500 சிங்களவர்களைக் கொல்லவேண்டுமென்று இந்த ஊடகங்களில் வந்து பேசினார்கள். சிங்களவன் தமிழனின் எதிரியென்ற தமிழரசு காலக் கருத்தமைப்புகள் மீண்டும் தீவிரமாக மறுநடுகை செய்யப்பட்டது.

இந்த ஊடகங்கள் பிரபாகரனின் மரணம் பற்றிய பொய்களை நம்பாதீர்கள் என்று மக்களை எச்சரித்தன. பிரபாகரன் மரணம்கடந்த பெருவீரனாக தமிழ்மக்களை ஆட்கொள்வதற்காகவே உயிர்தரித்திருப்பதாக பொய்கள் பின்னப்பட்டன.
தேசியத்தலைவர், தலைவர் என்ற சொற்பதங்களினூடு இதுவரை தமிழ்மக்கள் கண்டறியாத தீவிரமான தனிமனித வழிபாட்டுநிலை பரப்பப்பட்டது.

புகலிடத் தமிழ்மக்கள் மேற்குலக முதலாளிய ஜனனாயகம் மனிதசுதந்திரம் கருத்துவித்தியாச உரிமை போன்றவற்றிற்கு அருகில் இருந்தனர். புலிப் பிரச்சாரங்கள் இந்தப் பண்புகளைக் கூடத் துறக்கும்படி கட்டாயப்படுத்தின. சுயதீர்மானம் சுயஅடையாளம் இல்லாத மனித மந்தைகளாகப் புகலிடமக்கள் ஆக்கப்பட்டனர். எங்கும் புலி எதிலும் புலி. அவர்களே சர்வவியாபகமாய்த் தமிழ்மக்கள் மத்தியில் வீற்றிருந்தனர்.

2006 ஆம் ஆண்டு கிழக்கில் 300000 தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் புலிகளால் குடியெழுப்பப்பட்டபோது இந்தத் தமிழ் ஊடகக் கும்பல் மக்களை இதில் ஆர்வம்காட்டவிடவில்லை. தமிழ் மக்கள்மட்டுமே பாதிக்கப்படுவதாக ஓரவஞ்சகச் செய்திகள் வாசிக்கப்பட்டன. புலிப்படுகொலைகள் அரசின் கொலைகளாக பெயர்மாற்றம் செய்யப்பட்டன. ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள் என்ற பெயரில் கழுத்துப்பட்டிகள் கட்டியவர்கள் புகலிடத் தமிழ்மக்கள் முன்பு பின்பு கேட்டுப் பார்த்தறியாதவர்கள் எல்லாம் தொலைக் காட்சிகளில் தோன்றித் தமிழனுக்காக வாதாடுவாதாடென்று வாதாடத் தொடங்கினர்.

இருபது வருடமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் கிட்டத்தட்ட 200000 பேர் புத்தளம், மன்னார்ப் பகுதிகளில் ஓலைக் கொட்டில்களில் வாழ்கின்றனர். இவர்களைப் பற்றி ஒரு செய்தியையோ காட்சிப்பதிவையோ இந்த ஊடகங்கள் புகலிடத் தமிழ்மக்களுக்கத் தரவில்லை. ஆனால் வன்னியில் புலிகள் இலங்கை இராணுவத்தால் துவம்சம் செய்யப்படத்தொடங்கியதும் மக்களைக் காத்தல் என்ற கோசத்தில் புலிக்கும்பலைக் காக்க புகலிடநாடுகள் எங்கும் எதிர்ப்பு இயக்கங்களை இவர்கள் ஏற்பாடு செய்தனர்.

இது மேலே தொடர் கட்டுரைகள் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பாகங்கள் தொடரும் .. ..T111

Read more...

Friday, June 5, 2009

ஒரு பாசிஸ்ட்டின் மரணம். -தமிழரசன் பேர்ளின்- பகுதி 4

அரசியலோ பொது அறிவோ இல்லாதவராக, எந்தநூலையும் வாசித்திராதவராக எழுதுவதோ பேச்சாற்றலோ இல்லாதவராகப் பிரபாகரன் இருந்தார். விளையாட்டிலோ படிப்பிலோ வேறு எந்தத் துறையிலோ பிரகாசித்திருந்திராத மனிதனாக மெச்சத்தக்க மனிதப் பண்புகளோ ஒருவிடயத்திலாவது விசேடகவனமோ இல்லாதவர். ரசனையோ மென் உணர்வோ இயற்கை சார்ந்த ஈர்ப்போ இல்லாத வறண்டமனிதர். அக உலகம் இருளடைந்த பிறவியாக உலாவியவர். இளம் வயதுமுதல் யாருடனும் அதிகம் சேராதவராக நண்பர்களைப் பெற்றிராத தனித்தமனிதனாக ஒதுங்கி வாழ்ந்தவர். அதிகம் பேசாத கேட்டதற்கு மட்டும் பதில் சொல்லும் அம்மமுண்டியாக இருந்தவர். பிற்காலத்தில் எவ்வாறு கொடூரமான ஆட்கொல்லியாக மாறியகாரணிகளை இக்கால வளர்பருவத்தில் காணமுடியும். இவர் தமையனான மனோகரனை வல்வெட்த்துறைச்சனங்கள் 'லேடி மனோகரன்' என்று அழைத்தபோது பிரபாகனைப் 'பெட்டையன்'; என்றே ஊர்ச்சனம் பேரிட்டிருந்தது. பிறரின் ஆழுமைக்கு எளிதில் ஆட்படுபவராக எங்கும் எவரையாவது சார்ந்து நிற்கும் தன்மை வாய்ந்தவராக இவர் இளமைப் பருவம் இருந்தது.

பிரபாகரன் ஒரு பிலிஸ்டைன். சுயநலம் பயம் தன்னம்பிக்கை, கோழைத்தனம் இவைகளின் கூட்டுநபராவார். இத்தகையவர் அதிகாரமும் வாய்ப்பும் கிட்டும்போது கனவிலும் எண்ணியிராத கொடுங்கோலர்களாகப் பாசிசப்பண்பு படைத்தவராக மாறுவர். தம் கடந்த காலத்திய சமூகக் கீழ்நிலைக்கு ஒடுங்கி உள்ளிழுத்து ஓட்டுள்பதுங்கி வாழ்ந்த நிலைக்கு பழிஎடுக்கும் இயல்பினராக மாறுவர். பிரபாகரனுக்கு ஆளம்பு சேனை வாய்த்தபோது பாசிஸ்டகளுக்கே உரித்தான எதிர்க்கருத்தோ ஜனநாயகமோயற்ற, தானே ஏகப்பிரதிநிதி ஏகத்தலைவன் ஏகஇயக்கம் என்ற கருதுகோள்களை இலகுவாக வந்தடைந்தார். பிரபாகரனுக்கு இருந்த ஒரே தகுதி நன்றாகச் சுடத்தெரிந்ததாகும்.

அண்மையில் குமுதம் சஞ்சிகையில் பிரபாகரன் பற்றி வந்த கட்டுரையொன்றில் ராகவன் என்பவர் பிரபாகரன் இளமையில் கிட்லரின் மையின் காம்ப் (ஆநin முயஅpக) நூலைப் படித்திருந்ததாக எழுதியுள்ளார். அக்காலகட்டத்தில் 1970பதுகளில் வடபகுதியில் தமிழிலோ ஆங்கிலத்திலோ மைன்காம்ப் (ஆநin முயஅpக) யாராலும் படிக்கப்பட்டது, வாசிப்போர் மத்தியில் உலாவியது அல்லது தமிழ் இளைஞர்களுக்கு அறிமுகமாகி இருந்தது என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அது தடைசெய்யப்பட்டு இருந்ததுடன் இலங்கைப் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான நூலகங்களிற்கூட இருக்கவில்லை. இது கற்பனை என்பதைவிடப் பிரபாகரனின் மாவீரர் இருப்புக்குச் செய்யும் துணைச்செயலாகும். கிட்லர், பாசிசம் இவர்களைப் பற்றி கொம்யூனிஸ்டுகள் மட்டுமே உணர்வுள்ளவர்களாக இருந்தனர். கொல்வின் ஆர் டி சில்வா, பிலிப் குணவர்த்தனா போன்றவர்களது பேச்சிலும் எழுத்திலும் இவை பெருமளவு வெளிப்பட்டன. தமிழ் தேசியவாதிகளினால் செல்வனாயகம் ஜீ.ஜீ பொன்னம்பலம் ,அமிர்தலிங்கம் போன்றவர்கள் பாசிம் அல்லது பாசிச எதிர்ப்பு போன்றவை சார்ந்த படிப்போ பேச்சோ எழுத்துக்களுடனோ தொடர்பில்லாதவர்கள் என்பது மட்டும் உறுதி.

பிரபாகரனின் ஆடம்பரவிருப்பு- சொகுசு, புகழ்விருப்பு, தன்னைப்பரப்புவதில் அக்கறை, அதிகாரவெறி , அதீதமான சுயநலம் என்பன சமுதாயவயப்படாத பாசிசக் குணாம்சகளாகும். பிரபாகரன் தமிழர்களுக்காகப் போராடினார் என்ற சொற்சுலோகங்கள் பிரபாகரனின் தனிப்பட்ட இயல்புகள், அவர் பிரதிநிதித்துவப்படுத்திய வர்க்கம் இவைகளை ஆய்வுக்குட்படுத்த முடியாதவர்களின் விளக்கமாகும். எல்லோரையும் தனக்குக் கீழ்ப்படுத்துதல் தன்னுடன் உடன்படாதவர்களை எதிரியாகப் பிரகடனப்படுத்தி அழித்தல் பழி எடுக்கும் குணம் அரசியலுக்கு வெளியேயான தனிப்பட்ட வன்மங்கள் இவைகள் பிரபாகரனின் இயல்பாகும்.

யாழ் நடுத்தரவர்க்கத்தின் அரசியல் என்பது ஆயுதக் கலாச்சாரமாக கொலைப் பண்பாடாக மாற்றம் பெற்றது. பிரபாகரன் யாழ் நடுத்தரவர்க்கத்தின் புதல்வன் என்ற வகையில் அவர் கொடுங்கோலனாக மாறத்தக்க தமிழ்த்தேசியவாதத்தின் கருத்தோட்டங்கள் சமூகநிலமைகளுள் இருந்தன. புலிகளின் துரோகி ,எட்டப்பன், காக்கைவன்னியன், காட்டிக் கொடுத்தவன,; இனவிரோதி என்ற கருத்தாக்கங்கள் புலிகட்கு முந்திய தமிழரசுக்காலத்திற்கு உரியவையாகும்.

ரெலோ உறுப்பினர்கள் 800 பேர்வரை சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது யாழ் நடுத்தரவர்க்கம் அதை வீரக் காட்சியாகக் கண்டது. 100 இயக்கங்கள் தேவையில்லை ஒரு பலமான இயக்கம் இருந்தாற் போதுமென்று கருதியது. ரெலோ தாக்கப்பட்டபோது புலிகளுக்குச் சோடா கொடுத்து உபசரிக்கப்பட்டதாகவும் வெடிகள் கொழுத்தி மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டதாகவும் வந்த செய்திகள் அரசியல் உணர்வு பெற்றதாகக்கருதும் யாழ் நடுத்தரவர்க்கம் எதிர்கருத்தற்ற பாசிசமயமாகும் சமிக்ஞையை வெளியிட்டதற்கான அடையாளமாகும். சாதாரண கருத்து வித்தியாசங்கள் சமூக யதார்த்தமாகக் கொள்ளப் படாமல் துரோகமாகக் காட்டிக்கொடுப்பாக விளக்கப்பட்டமை தமிழரசுக்காலத்தில் தொடங்கியது.

பிரபாகரன் தன் வாழ்நாளில் ஒருபோதும்; நண்பர்களைப் பெற்றிராதவர். நண்பர்களாக நம்பப்பட்டவர்களை துரோகி, உளவாளி என்று கொன்றார். தன்னைச் சுற்றியுள்ள எல்லோரையும் காலத்துக்காலம் பயன்படுத்திவிட்டுப் பின்பு கழுவில் ஏற்றினார். 'ஒன்றுமே தெரியாதவனுக்கு எல்லாவற்றிலும் சந்தேகம்' என்ற கூற்றிற்கு உதாரணமான மனிதர். தன்னைப் பொலீஸ் தேடும்போது காப்பாற்றியவர்கள், ஒழித்துவைத்துச் சாப்பாடு போட்டவர்கள், வீட்டில் அடைக்கலம் கொடுத்தவர்கள் எல்லாம் இவரின் கையாற்சூடுவாங்கிச் செத்தார்கள்.

தன் சொந்தப் பாதுகாப்பில் கண்ணுங்கருத்துமாக இருந்த பிரபாகரன் தனக்கு என்று ஆரம்பகாலத்திலேயே இந்தியாவுக்கு தேவைப்படும்போது தப்பிச்செல்ல தனி வள்ளமும்; தனக்கென்று ஓட்டியும் இரகசியமாக வைத்திருந்தார். யாழ்பாணத்தில் பொலீஸ் பொடியங்களைத் தேடினால் எமது தேசியத்தலைவர் இந்தியாவுக்கு வல்வெட்டித்துறையிலிருந்து வள்ளமேறிவிடுவார்.

சிலர் தமிழ்தேசியம், புலிப்பாசிசம் இரண்டையும் பிரித்துநோக்கினர். பாலையும் நீரையும் பிரித்து அருந்தும் அன்னப் பறவையென்று தம்மை கருதிக்கொண்டனர். தமிழரசுக் கட்சி கிளப்பிய தமிழரது தேசியவாதமே புலிப்பாசிசமாக இறுதியில் பரிணாமம் பெற்ற வளர்ச்சிப்போக்கை இவர்கள் கவனியாததோடு இவை அனைத்துமே மேற்குலக அரசியலால் வழிநடத்தப்பட்டவை என்பதைக் கணக்கில் எடுக்கவில்லை. புலிப்பாசிசம் என்பது தமிழ் தேசியத்தின் தொடர்ச்சி அதன் இறுதிக்கட்ட வளர்ச்சியாகும். ஏதிர்ப்புரட்சித்தன்மை வாய்ந்ததாகும்.

பிரபாகரனின் இறப்பின் பின்பு பிரபாகரனுக்குச் சில புகலிட ஜனனாயகவாதிகள் மாவீர மரியாதையையும்; அஞ்சலியையும் தெரிவிக்க முனைகிறார்கள். கிட்லரை எதிர்த்துப் போரிட்ட பாசிச எதிர்ப்பாளர்கள் அவன் இறந்த பின்பு அவனுக்கு அஞ்சலி செலுத்தும் அரசியல் அதிசயம் நிகழமுடியுமா? அதுபோல புலிப்பாசிசத்தாற் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்மக்களுக்கு ஜனனாயகம் வேண்டும் என்று போரிட்டவர்கள் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த முடியுமா? கொன்றவனுக்கும் கொல்லப்பட்வனுக்கும் ஒன்றாக அஞ்சலி செலுத்த இயலுமா? பாதித்தவனுக்கும் பாதிக்கப்பட்டவனுக்கும் ஒன்றுசேர அனுதாபக் கூட்டம் கூட முடியுமா? காந்தியவாதிகள் கோட்சேக்குத் தூக்குத் தண்டனை விதித்த தினத்தை துயரநாள் என்று பிரகடனப் படுத்துவார்களா? புலிப்பாசிசமா, இலங்கை முதலாளியஅரசா, என்பதில் புலிப்பாசிசம் என்னவகையிலும் அழியவேண்டும் என்ற அரசியல்நிலை எடுக்காமல் தமிழ் சிங்கள இனவாத வேலிகளுள் கட்டுப்படுபவர்கள் இறுதியில் பாசிசத்திற்கு உதவுவதிலேயே முடிவுறுவர்.

பிரபாகரனும் புலிகளும் இல்லாமற் போனால் தமிழ்மக்கள் நிலை என்னவாவது என்ற கேள்விகள் புலிகள் அல்லாதவர்களிடமிருந்தும் கிளப்பப்படுகிறது. எப்படிக் கிட்லரின் வருகையின் முன்பும் அதன் பின்பும் ஜேர்மானிய மக்கள் வாழ்ந்தார்களோ தமதுவழியிற் போரிட்டார்களோ அதேபோல் தமிழ்மக்களும் பிரபாகரனின் சாவின் பின்பும் சமூகவிடிவுக்காக சிங்கள முஸ்லீம் மக்களின் பொதுப்போராட்டத்தோடு இணைந்து அரசியல் செய்யப் பழகுவார்கள். பிரபாகரன் தமிழ் மக்களை ஏனய இலங்கை மக்களுடன் இணையவிடாமல் ஏற்படுத்திய அரசியற் தடைகளை கடந்துசெல்வார்கள்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் அரசியல் என்பது நாடுதழுவியதாக மாறி ஆசியாதழுவியதாக அதிலிருந்து உலகார்ந்ததாக வளர்ந்து செல்லும். புகலிட நாடுகளிலுள்ள மேற்குலகசார்பு தமிழ் என்..ஜி.ஓக்கள் ஜனனாயகம் பேசும் தமிழ் இனவாதக் குழுக்கள் இவர்களின் அரசியற் தொல்லைகளிலிருந்தும் கருத்தியல் ஆக்கிரமிப்புகளிலிருந்தும் விலகித் தமது சொந்த அரசியலைப் படைத்துக்கொள்வார்கள். தமக்குத்தாமே தலைமைதருவார்கள். இவை இலங்கை முழுவதும் ஒரு சோஷலிச சமுதாயம் வரும்வரை தொடரும். தமிழரசு, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ ஆயுத இயக்கங்களின் கழிவுப் பொருட்களான ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, ஈரோஸ் போன்ற சகல குழுக்களையும் மக்கள் தலை முழுகுவார்கள். அதன் பின்பே அவர்கள் சோஷலிசத்திற்கான முதற்தரிசனங்களை எட்டுவார்கள்.

இது மேலே தொடர் கட்டுரைகள் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பாகங்கள் தொடரும் .. ..T111

Read more...

Monday, March 15, 2010

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -10)

1987 ஆகஸ்ட் மாதத்தில் புலிகளின் முக்கிய உறுப்பினர்களான குமரப்பாவும், புலேந்திரனும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்குச் சென்று வரவேண்டும் என்று விண்ணப்பித்திருந்தனர் அமைதிப்படையிடம். தரைமார்க்கமாகச் செல்வதற்கு பாதுகாப்புகள் அப்போது இல்லை. எனவே உலங்கு ஊர்தியில் இவர்களை அழைத்துச் சென்றுவர ஐ.பி.கே.எப். ஏற்பாடு செய்தது.

அதன்படி இந்த இருவரும் உலங்கு வானூர்தியில் மட்டக்களப்புக்குச் சென்றனர். அங்கே ஒருமணி நேரம் தங்கிவிட்டு மீண்டும் ஊர்தியில் ஏறும்போது ஒரு பெண்ணை அழைத்து வந்து ஏற்றினர். இராணுவக் கெலிகாப்ரரில் பெண்களை ஏற்றக் கூடாது என்று சட்டம் உள்ளது. பைலட் ஏற்றுவதற்கு மறுத்தார். குமரப்பா முடியாது ஏற்றிக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தார். பைலட் ரேடியோவில் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு இதுபற்றி கேட்டார். அவர்களும் பலருடன் ஆலோசித்துவிட்டு ஏற்றிக்கொண்டு வரும்படி பைலட்டுக்கு அனுமதி வழங்கினர்.

பின்னர் அதே கெலிகாப்ரர் திருமலைக்கு வந்தது. அங்கும் ஒரு பெண்ணை ஏற்றினார் புலேந்திரன். ஊர்தி யாழ்ப்பாணம் வந்தது. இரு நாட்கள் கழித்து அப்படி அழைத்துவரப்பட்ட பெண்களுக்கும் குமரப்பா, புலேந்திரனுக்கும் பிரபாகரன் தலைமையில் திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. ஐ.பி.கே.எப். இவர்களுக்கு பெண் அழைக்கும் வேலையைக் கூட வெட்கப்படாமல் அவர்கள் சட்டத்தையும் மீறி செய்தனர்.

திருமணம் நடந்த ஒருமாதத்தில் அந்தப் போராளிகளை இறந்து போகும்படி அவர்களது தலைவர் விசம் கொடுத்து உத்தரவிடுகிறார்! எதற்காக? கொழும்புக்குக் கொண்டு சென்றால் அவர்களைச் சித்திரவதை செய்து விடுவார்கள். அவற்றை அந்தப் போராளிகள் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்களை அதிலிருந்து காப்பாற்ற தலைவர் கண்ட வழி மரணம். ஈழத் தமிழர்கள் சிந்திக்க வேண்டும். எந்த மடையன் இப்படி ஓர் உத்தரவினைச் செயற்படுத்துவான்? தனது குழந்தைகள் இவ்விதம் அகப்பட்டால் எந்தப் பெற்றோரால் இந்த வழிதான் சிறந்த வழி என்று தங்கள் குழந்தைகளை இறந்து போகும்படி கூறுவாரா? சக தோழனை ஓர் தலைவன் காப்பாற்றுவானா? அல்லது இறந்து போ என்று கூறுவானா? யாரையும் எந்த நேரத்திலும் கைவிட்டுதான் லாபத்தைப் பார்ப்பார் இந்தத் தலைவர்.

இந்தப் 12 பேரும் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டதனால் புலிகளுக்குக் கிடைத்த லாபம் என்ன? தமிழர்களுக்குக் கிடைத்த லாபம் என்ன? விளலுக்கு இறைத்த உயிர்களானதா இல்லையா? இளம் வயதில் அவர்களது மனைவியர் விதவைகள் ஆக்கப்பட்டனரா இல்லையா? ஒரு தலைவர் தன் சகாக்களை அபாயத்திலிருந்து காப்பாற்றுவானா அல்லது எதிரி செய்ய வேண்டிய வேலையை இவரே செய்வாரா? தனது சகாக்களைக் காப்பற்ற முடியாதவரா தன் மக்களைக் காப்பாற்றப் போகிறார். அந்த இளைஞர்களை செத்துப் போகும்படி உத்தரவிட்டது மன்னிக்க முடியாத குற்றமாகும். இவை கொலை குற்றமாகும்.

சரி தலைவருக்குத்தான் அறிவு இல்லை. அரசியல் ஆலோசகர், அரசியல் ஞானி, கலாநிதி, தத்துவ வித்தகர். விஸ்கி மாஸ்ரர் என்று பல பதவிகளை தன்னகத்தே வைத்திருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்குக் கூட சுய அறிவு இருக்கவில்லை. 12 பேரைக் கொலை செய்யத் தூதுவனாக தானே சென்று, குப்பிகளைக் கொடுத்து மரண தண்டனை வழங்கிவிட்டு வந்து பின்னாளில் அதனைப் பெருமையாக வேறு சொல்லிக்கொண்டார். மகா மோசமான இந்தச் சம்பவத்தை உலகப் பிரசித்திப் பெற்ற சாதனையாக விபரித்தனர் இந்தக் கொலையாளிகள்.

அற்ப பிரச்சினைக்காக தங்கள் சக வீரர்களைப் பலி கொடுக்கும் இவர்கள் மக்களை எப்படி மதிப்பார்கள்? குமரப்பா, புலேந்திரன் போன்றோர் கொல்லப்பட்டதற்கு உள் இயக்க முரண்பாடே அல்லாமல், வேறெந்தக் காரணமும் இல்லை! தங்கள் நலனுக்காக எத்தனை ஆயிரம் பொதுமக்களையும் பலிகொடுக்கத் தயங்கமாட்டார்கள். அதுதான் நடந்தது முல்லைத்தீவு மாவட்டத்தில்.

இந்திய அமைதிப்படை கொலை செய்யவில்லை, கற்பழிக்கவில்லை என்று நான் சொல்ல வரவில்லை, புலி விலங்கு அங்கத்தினரும் கற்பழித்தவர்கள்தான். அவர்களுக்கு புலித் தலைவர்கள் தண்டனை வழங்கியுள்ளனர். செல்வாக்கு மிக்கவர்கள் தண்டிக்கப்படாமல் கண்டுகொள்ளாமல் விடபட்டனர். ஐ.பி.கே.எப். கற்பழித்துவிட்டது என்று பிரசாரம் செய்யப்பட்டது. தங்கள் அங்கத்தவர்களின் கற்பழிப்புகளை பிரசாரம் இல்லாமல் மறைக்கப்பட்டது. எனவே மேற்கண்ட பாடல் புலிகளுக்குத்தான் பெருத்தமானதே தவிர ஏனைய இயக்கத்தினருக்கு அல்ல! தேனிசை செல்லப்பா பாடிய பாடல் புலி நடந்துவந்த பாதையினைத் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

துணுக்காய் வதைமுகாமில் குழிகளுக்குள் வைக்கப்படும் ஏனைய இயக்க அங்கத்தினருக்கென்று தனியாக மூன்று விலங்குகள் பொறுப்பாக இருந்தனர். றோஸ், பூட்டோ, பாபு ஆகிய இந்த மூன்று பேரும்தான் குழி தோண்டி மனித வதைசெய்யும் நிபுணர்கள். அங்கிருக்கும் அனைத்துக் குழிகளையும் வெட்டியவர்கள் பிடித்துவரப்பட்ட கைதிகள்தான். இந்தக் குழிகளுக்குள் மொத்தம் எத்தனை பேர் வைக்கப்பட்டிருந்தனர் என்பது தெரியாது. எனது கணக்கின்படி ஏறக்குறைய முன்னூறு பேர் வரை இவ்விதம் குழிகளுக்குள் இருந்திருப்பார்கள்.

இந்த வதை முகாமில் வைக்கப்பட்டிருந்தவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப். தோழர்கள்தான் அதிகமாக இருந்தனர். ஈ.என்.டி.எல்.எப். தோழர்கள் மொத்தம் நூறுபேர் வரை இருந்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் குமார் (கொட்டடி), குகன் (யாழ்ப்பாணம்), விக்கி (கிளிநொச்சி), நியூற்றன் (பாசையூர்) பாப்பா (பாசையூர்), வேதநாயகம் (பாசையூர்) நிக்கான் (யாழ்ப்பாணம்) போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களில் விக்கியைத் தனிக் குழி ஒன்றில் வைத்திருந்தனர். புளொட் இயக்கத்தைச் சேர்ந்தவர்களில் முசல்குத்தியைச் சேர்ந்தவர்கள்தான் அதிகமாக இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குழிகளில்தான் இருந்தனர்.

இப்படிக் குழிகளில் இருந்த பெரும்பாண்மையானவர்களை புலிவிலங்குகள் கொன்று விட்டனர். இவர்கள் அனைவரும் பலவிதமான கொடுமைகளை அனுபவித்தனர். நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு இந்தச் சித்திரவதைகள் இருந்தன. கல்வி, அறிவு, பழக்கவழக்கம், மனிதப்பண்பு, மனித உரிமை, நாகரீகம் போன்ற அனைத்தையும் அறியாத இந்தப் புலிவிலங்குகள் சிறைச்சாலை நடத்துகின்றனர். அகப்பட்ட அனைவருமே இவர்கள் பார்வைக்கு விலங்குகளாகத் தென்பட்டனர் என்றால் தவறில்லை.

நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன, வாரம் முப்பது முதல் நாற்பது பேர்வரை புதியவர்களைப் பிடித்துவருவார்கள். இடநெருக்கடி ஏற்படும் போது, அதே அளவு சகோதரர்களை இரவு வேளை வெளியே அழைத்துச் செல்வார்கள். அவர்களை முளங்காவில் பகுதிக்கு அழைத்துச் சென்று கொன்று எரித்துவிடுவார்கள் என்று கூட இருந்தவர்கள் தெரிவித்தனர்.

ஒருநாள் இரவு 10மணியளவில் ஒருவரோடு ஒருவர் கதைத்துக் கொண்டிருந்தனர். புலி விலங்குகள் எல்லாரும் வெளியில் உலா வந்து கொண்டிருந்தனர். எனது பகுதியில் இருந்தவர்கள் கதைக்கும் சத்தம் அதிகரித்துக்கொண்டே போனது. திடீரென சிமெந்த் நிலத்தில் நன்கு காய்ந்த தடி ஒன்றினை ஓங்கி வீசி எறிந்தால் எழும் ஒலி ஒன்று கேட்டது. உடனே அனைவரினதும் கதைக்கும் சத்தம் நின்றது.

உள்ளே புலி சீருடை அணிந்த சராசரி உயரமான ஒருவர் வேகமாக வந்தார். அந்த வேளையில் நான் எழுந்து நின்று எனது சாரத்தை சரிசெய்து உடுத்தி அமர்வதற்குத் தயாரானேன். அனைவரும் அமர்ந்திருக்கையில் நான் மட்டும் எழுந்து நின்றது அவரை அவமதிப்பது போன்று தோன்றியதோ என்னவோ, அதே தடியை எடுத்துக்கொண்டு என்னை நோக்கி வந்தார். நான் அதற்குள் எனது இடத்தில் அமர்ந்து விட்டேன். வந்த வேகத்தில் அந்தத் தடியினால் என்னைத் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தார். அந்தத் தடி நான்கு அடி நீளமானதாக இருந்தது. அடி தாங்கமுடியாமல் நிலத்தில் உருண்டேன். அருகில் இருந்தவர்கள் விலகினர். நான் உருளுவதைத் தடுப்பதற்காக மறுமுனைக்குத் தாவி மீண்டும் வயிறு முதுகு என்று கண்ணில் பட்ட இடமெல்லாம் அடித்தார். ஐந்து ஆறு நிமிடங்கள் வரை என்னை அடித்துவிட்டு இறுதியில் அந்தத் தடியின் முனையால் என் முதுகில் ஓங்கி ஓர் குத்து குத்திவிட்டு, 'இங்க இருக்கும் எந்த நாயும் கதைக்கக் கூடாது' என்று மூச்சுவாங்கக் கத்திவிட்டு வெளியில் சென்றார். இவ்விதம் என்னைத் தாக்கியவர் வேறு யாருமல்ல, புன்னகை மன்னனும், அரசியல் செயலருமான சூனா. பானா. தமிழ்ச்செல்வன்தான். இவர் முதலில் கொலைகாரக் குழுவில்தான் இருந்தார். கால் பழுதுபட்ட பின்னர்தான் அரசியல் பிரிவுக்கு வந்து பல்லிளிக்க ஆரம்பித்தார்.

தொடரும்...

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 5

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 6,7

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 9

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

Read more...

Sunday, May 31, 2009

ஒரு பாசிஸ்ட்டின் மரணம். -தமிழரசன் பேர்ளின்- பகுதி 2

பிரபாகரனும் புலித்தலைமையும் முழுமையாக அழித்தொழிக்கப்பட்ட போதும் எந்த சந்தடியும் இல்லாது இருந்த இந்தஊடகங்கள் அவைகளை மறைத்து அகதியான வன்னித்தமிழ் மக்களைக்காக்கவரும்படி அழைப்புவிட்டன. வெளிநாடுகளிலுள்ள தமிழர்களாலேயே இலங்கைத் தமிழர்களைக் காக்கமுடீயுமென்று கெஞ்சிய இந்த ஊடகங்கள் அரச எதிர்ப்பு இயக்கங்களுக்கு வரும்படி மக்களை அழைத்தன. புலிகளின் மாவீரர் தினங்கள் மாமனிதர் நினைவுகள் ஆகியவற்றை நாள் முழுவதும் காட்டி சோகஇசை பரப்பினர். நேயர்களின் தொலைபேசி நேரடித் நிகழ்ச்சிகளை நடாத்தி கண்ணீர் வெள்ளங்களைக் கரை புரண்டு புகலிட நாடுகளில் ஓட விட்டவர்கள் இப்போ பிரபாகரனின் மரணத்தைக்கண்டு அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு நின்றார்கள். செய்வதறியாது திகைத்தனர். அஞ்சலி நடத்தினால் பிரபாகரனின் மரணச்செய்தி மக்களை எட்டினால் புகலிடத்திலுள்ள புலிகள் முதல் ஊடகவியாபாரிகள்வரை ஒரேநாளில் காணாமல் போய் இருக்கும் நிலை இருந்தது. எனவே இவர்கள் பொய்களைப் பூசிக்கத் தொடங்கினார்கள்.

வன்னியில் தேசியத்தலைவர் கொல்லப்பட்டு அவரின் உடல் நாற்றமெடுக்கத் தொடங்கிய வேளையில் உலக ஊடகங்கள் எல்லாம் பிரபாகரனின் இறந்த உடலைக் காட்டிக்கொண்டிருந்தபொழுதில் தீபம் ஜி.ரீ.வி என்ற இரணடு நேர்மையழிந்த புலிப்பாசிச ஊடகங்களும் அரசு பொய்ப் பிரச்சாரம் செய்துகொண்டிருப்பதாக கூறினர். தமிழ்மக்களின் உண்மை அறியும் உரிமை இவ்வாறாகத் தடுக்கப்பட்டது. செத்துப்போன தேசியத்தலைவருக்கு அஞ்சலி செலுத்த அஞ்சலிக்கூட்டம் நடாத்தி வீரவணக்கம் செலுத்த ஆள் கிடையாமல் போனது.

பிரபாகரன் இராணுவத்திடம் தனது முக்கிய 300 புலிகள் புடை சூழ வெள்ளைக் கொடியுடன் சரணடைந்து பலவித அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. 25 வருடமாகப் பிரபாகரனும் புலிகளும் தமது கழுத்தில் கட்டியிருந்த சைனைட் குப்பியைக்கடிக்கவில்லை. தாமே மனித வெடிகுண்டுகளாக மாறி எதிரிமேல் மோதி வீரமரணம் எதையும் அடையவில்லை. புலித் தலைவர்கள் தாமாகச் சாகத்துணியவில்லை. மாறாக பல பத்தமாயிரம் பேரைப் போராடிச் சாக அனுப்பிவிட்டு தம் உயிர்களை மட்டும் காக்கமுனைந்த கோழைகளாக இவர்கள் தம்மைப்பற்றி மக்களிடம் வடிவமைத்திருந்த பிரமாண்டமான வீரநாயகர்கள் கதையாடல்கட்கு மாறாக அற்பர்களாகச் செத்திருக்கிறார்கள்.

சதாம் உசேன் போன்றவர்கள் தூக்கு மேடையில் தம்முன்பு ஆடிய தூக்குக் கயிறு முன்பு உறுதியோடு நின்று மரணத்தை எதிர்கொண்டார்கள். ஆனால் இந்தப் புலிப்பாசிசத் தலைமைக்குழுவோ 300 மீட்டர் தொலைவில் இராணுவம் வந்துவிட்ட வேளையில் கடைசிக் குண்டு இருக்கும்வரை போராடிச் சாகாமல் சரணடைந்தாவது தம் உயிர்களைக்காக்க முனைந்துள்னர். போரடினால் மரணம் 100 வீதம் நிச்சயம். ஆனால் சரணடைந்தால் உயிர்தப்ப உள்ள சாத்தியம் அதிகமாக உள்ளது என்பதால்தான் இவர்கள் சரணடைந்து மிகவும் இழிவான முறையில் மரணத்தை அடைந்துள்ளனர்.

செம்படைகள் பெர்லினை நெருங்கிக்கொண்டிருந்த போது செம்படைத்தளபதியாக மார்சல் சூக்கோவுக்கு தான் எல்லாவிதமான நிபந்தனைகளையும் ஏற்கத்தயாராக இருப்பதாய் கிட்லர் செய்திக்குமேல் செய்தி அனுப்பினான். பேசுவதற்கு எல்லா வகையிலும் முனைந்தான். ஆனால் செம்படை பாசிஸ்டகளுடன் பேச்சு இல்லை, அவர்களை அழித்து நிர்மூலம் செய்வதே இலக்கு என்று அறிவித்தது. இக்கட்டத்தில்தான் கிட்லர் தற்கொலை செய்தான். பாசிவாதி கிட்லருக்குத் தற்கொலை செய்யுமளவாவது துணிவு இருந்தது. தான் வளர்த்த நாயைச் சுட்டுக் கொன்றுவிட்டு நெருக்கமானவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டான்.

அவன் செம்படைகயின் கைகளிற் சிக்கியிருந்தால் 25 மில்லியன் சோவியத் மக்களைக் கொன்றதற்காக அவனைக் கண்டதுண்டமாக வெட்டியும் சுட்டும் கொன்றிருப்பார்கள். உலகில் மிக மோசமாக வதைபட்டுச் செத்த மனிதனாக அவன் இருந்திருப்பான். இத்தாலியப் பாசிஸ்ட் முசொலினியை அவன் தன் கூட்டத்தோடு தப்ப ஓடியபோது பாசிச எதிர்ப்புப் போராளிகளும் கொம்யூனிட்ஸ்டுகளும் பிடித்துச் சுட்டுக் கொன்று அவன் உடல் அழுகி நாற நாற ஒரு வாரத்திற் மேலாகக் கட்டித் தூக்கியிருந்தார்கள். அந்த வகையில் எமது தமிழீழத்தின் தேசியத் தலைவர் தனது கடைசி நேரத்தில் எதிரிகளிடம் பட்டபாடு மிகச் சாதாரணமானதாகும்.

தமிழ் சிறுவர் சிறுமிகளை உயிரோடு குண்டைக் கட்டி தற்கொலைப்போராளிகள் மனித வெடிகுண்டாக வெடித்துச்சிதற அனுப்பிவிட்டு அதற்கு தற்கொடை, உயிர்க்கொடை, உயிர் ஆயுதம் என்றெல்லாம் விதம் விதமாக தூயதமிழில் வீரவிளக்கம் தந்த பிரபாகரன் அவர்களை மாவீரர்களாக்கிக் கல்லறை கட்டிஎழுப்பிய மனிதன். அவர்களுக்கு எல்லாம் தலைவனாகத் தன்னை வரித்துக்கொண்டவர். இலங்கை இராணுவத்திடம் கை உயர்த்தி வெள்ளைக் கொடியுடன் சரண் புகந்து அவர்கள் கையால் சூடுவாங்கிச் செத்துள்ளார்.
பிரபாகரன் தலையில் இரணடு துவக்குச் சூடுகள் இருந்தததை இந்துப்பத்திரிகையாளர் ரெட்டி பிரபாகரனின் இறந்த உடலை நேரிற்கண்டு எழுதியிருக்கிறார்.

அவை பிரபாகரன் புலிகளின் மாவீரப் பண்புக் கேற்ப ஒரு போதும் தற்கொடை உயிர்க்கொடை எதுவும் செய்யவில்லை. தற்கொலை செய்பவர் இரண்டு தடவை தன்னைத்தானே சுட முடியாது. ஒரு தடவைதான் சுடமுடியும். ஆக மாவீரர்களின் மாபெரும் தலைவர் மாகோழையாக எதிரிகளின் கரங்களால் செத்திருக்கிறார். மாவீரர் நினைவு நாட்களில் புலிகளின் தொலைக் காட்சியிற் தோன்றி மரணத்திற்கு அஞ்சாத பெருவீரராக வீர உரை நிகழ்த்தியவர் எதிரியிடம் மண்டியிடாத தமிழ் மறவர்பற்றி வீரக் காதைகள் உரைத்தவர். இப்போ தன் வாழ்நாள் எதிரியாய் பிரகடனப் படுத்திய சிறீலங்கா சிங்களப் படை முன்பு மண்டியிட்டு தன் உயிர்காக்க முனைந்து சுயநலமியாக சாவால் ஆட்கொள்ளப்பட்டுள்ளார்.

'சுடவேண்டாம் நான்பேசத்தயார்' என்று கைகளை உயர்த்திய படி நிராயுதபாணியாகச் சரணடைந்த ரெலோ சிறீ சபாரத்தினத்தை 38 குண்டுகளால் சூட்டுக்கொன்ற புலிகளின் நினைவுகள் தனது மரணத்தின் கடைசிக்கட்டத்தில் ஒருவேளை எமது தேசியத் தலைவருக்கு நினைவுக்குள் நிழலாடி இருக்கலாம். கிட்டத்தட்ட 60000 பேருக்குமேற்பட்ட மனிதர்களின் மரணத்துக்குக் காரணமாகியிருந்த ஒரு மனிதன், பல ஆயிரம் மக்களை மனிதவதைமுகாம்களில் சிறைவைத்து வதைத்து நீதிவிசாரணையின்றிக் கொன்ற ஒரு பாசிச சர்வாதிகாரி, தன்உயிரும் தன்குடும்பத்தின் வாழ்வு மட்டும் வெல்லமாய் இனித்திருக்கிறது. உயிர்போனாலும் சரண்புகாத தமிழனை 'முதுகுக் கிடான் கவசம்' பேசிய பிரபாகரன் எதிரிகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டு சரண்புகுந்து அவமான சாவை எய்தியுள்ளார். பிரபாகரன் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லாப் பாசிஸ்டுகளும் அதிகாரம் இருந்தபோது இரக்கமற்ற கொடுங்கோலர்களாக இருந்துவிட்டு கடைசிக்காலத்தில் தோற்று ஓடி ஒழித்து அந்தரித்து அவமானப்பட்டு செத்தொழிந்த வரலாறுதான் இருக்கிறது.

புலிகள் வன்னியில் தம்மிடமிருந்து இராணுவபகுதிக்குத் தப்பிஓட முயன்ற 2000 த்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களைக் கொன்றார்கள். ஓரே தினத்தில் உருத்திரபுரத்தில் மட்டும் 200 பேரைக் கொன்றதாக புலிகளிடமிருந்து தப்பிவந்த தயா மாஸ்டர் கூறி இருக்கிறார். புலிகள் மக்களைப் பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு அரசு பிரகடனப்படுத்திய பாதுகாப்பு வலையத்தில் புகுந்து கொண்டு மக்கள் மத்தியில் இருந்துகொண்டு இராணுவத்தைத் தாக்கினர். புலி- இராணுவ யுத்தத்தின் இடையில் மக்கள் சிக்கி மரணம்அடையும் நிலையைப் புலிகளே ஏற்படுத்தினர்.

இறந்த மக்களின் உடல்களையும் காயப் பட்டவர்களையும் தமது ஊடகங்களின் மூலம் புகலிட நாடுகளில் காட்டி சிங்கள அரசு தமிழனைக் கொலை செய்வதாகக் கூறினார்கள். சர்வதேசரீதியாக இதைப் பிரச்சாரப் படுத்தினர். புலிகளின் தமிழ்நெற் பொய்ப் பிரச்சாரங்களை சீ.என்.என், பீ.பீ.சீ, டொச்சவெல வரை வெளியிட்டனர். புலிகள் தொடர் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த சமயம் புலித்தலைமை மேற்குலக ஏகாதிபத்தியங்களை அரசியல் இராணுவரீதியிற் தலையிடும்படி திரும்பத்திரும்பக் கோரியது. ஐநா படைகளும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளையும் அனுப்பும்படி கேட்டார்கள். மேற்கு நாடுகள் இலங்கையில் நேரடியாகத்தலையீடு செய்யத் தக்க மனிதப்பேரவலம் நிகழ்வதான காட்சிகளை உருவாக்கினர். எவ்வளவு தமிழர்கள் அதிகமாகச் சாகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு தம்மைக் காக்கவல்ல சர்வதேச அபிப்பிராயங்கள் திரளுமென்று புலிகள் எதிர்பார்த்தார்கள்.

பிரபாகரன் வன்னியில் மேற்குநாட்டுச் செல்வந்தர்கள்போன்று நவீன நீச்சல் தடாகங்கள் பளிங்குக் கற்கள்பதிக்கப்பட்ட நவீன வசதி கொண்ட வீடுகள் இலங்கையில் எப்பாகத்திலும் மக்கள் கண்டறிந்திராத வகையில் அமைக்கப்பட்ட உலகமெல்லாம் தொடர்புகொள்ளக் கூடிய வகையில் நவீன தொடர்பு சாதனங்களைக் கொண்ட நிலவறைகள் இவைகளுடன் வாழ்ந்தவர். இதற்கு முன்பு கொழும்பு -7 எல்லாம் பிச்சை புகவேண்டும். பிரபாகரன் முதல் புலித்தலைமை எல்லாம் போர்ப் பிரதேசத்தில் பசிபட்டினியில் அடிபட்டுச்செத்தவர்களாகவா தென்பட்டனர்? வண்டி தொந்தியடன் கூடிய கொழுப்பேறி மின்னும் கன்னக்கதுப்புகள் தொங்கும் தாடைகள் வீங்கி முட்டிய களுத்துக்களுடன் உழைப்புக்கு மிஞ்சிய போசனை ஊட்டப்பட்வர்களாகக் காணப் பட்டனர்.

இதே சமயம் வன்னியில் வாழ்ந்த சாதாரண மக்களோ வளர்ந்துகிடந்த தாடி மீசை தலைமயிருடன் பரதேசிகளாகக் காட்சி அளித்தனர். குழிவிழுந்த கண்கள் கன்னங்களுடன் என்பு தோல் போர்த்தியிருந்தனர். வன்னி விவசாயிகள் அரையிற்கட்டிய துண்டுகளோடும் சில சமயம் கோவணங்களோடும் தமது கமங்களிலும் வெண்காயம் மிளகாய் தோட்டங்களிலும் உழைத்தனர். பெண்கள் 20 வயதிலேயே 40 வயதுத் தோற்றத்துடன் வற்றல் தொத்தலாக உயிர்தரித்திருந்தனர். 40, 50 வயதுப் பெண்கள் அந்த வயதிலேயே கிழ ஆத்தைகளாக ஆச்சிமாராக ஆகிப்போயினர். வன்னிக் குழந்தைகள் அரைப்பட்டினி காப்பட்டினியுடன் பேத்தைகளாகத் திரிந்தனர். இம்மக்கள்மேல் வரி வட்டி வேண்டிப் புலிகள் இச்சுரண்டலில் வாழ்ந்தனர். அவர்களின் உழைப்பினைக் கொள்ளை கொண்டனர்.
குடும்பங்களாகப் பிள்ளைகுட்டிகளோடு வயற்காடுகளில் இம்மக்கள் உச்சி வெய்யில் வரும்வரை உழைத்தனர். ஆடுமாடுகள் எருமைகளை மேய்த்தார்கள். பெரும் நெல்வயல்களில் இரவுக்காவற்கொட்டில்களில் பயிர்களை அழிக்கவரும் காட்டுமிருகங்களுக்குக் கண்விழித்துக் காவலிருந்தார்கள். ஆனால் புலித்தலைமையோ சீவியத்திலும் உழைத்திராதவர்களாக மண்வெட்டி, கோடாலி, பிக்கான் பிடித்திராதவர்களாக வெற்றிவேர்வை நிலத்தல் சிந்தியிராதவர்களாக குளிர்சாதன அறைகளிலும் நீச்சல் தடாகங்களிலும் காலங்கடத்த முடிந்திருக்கிறது. இப்படிச் சொகுசு வாழ்க்கையில் இருந்தவர்கள் மக்களைக் கொள்ளையிட்டு வாழ்ந்தவர்கள் எப்படிப் போராடி மரணிப்பர். எப்படி உயிராயுதமாகமாறி எதிரியுள் புகந்து வெடித்துச் சிதறி மடிவர்.

இது மேலே தொடர் கட்டுரைகள் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய பாகங்கள் தொடரும் .. .. T111

Read more...

Saturday, April 18, 2009

கருணா என்கின்ற முரளிதரனுக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும். ( பாகம் 9 ) - யஹியா வாஸித் -


இயந்திரங்கள் வேலைதான் செய்யும் மனிதன்தான் சிந்திக்க வேண்டும்.


ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது,தனிமனித வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்த
தென்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனது நாடு, எமது பொருளாதார வளர்ச்சி, எமது நாட்டின் சுபீட்சம் எனபெரிதாக முழங்கும் பெரிய மனிதர்கள் கூட தமது சொந்த தொழில், திட்டங்கள், நடவடிக்கைகள் என்று வந்து விட்டால் இலாபம் ஒன்றே பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்படுவதை கண்டிருப்பீர்கள். இவர்கள் ஒரு நிமிடத்தையேனும் செயல்ரீதியான நடைமுறைகளுக்கு ஒதுக்கி சிந்திப்பார்களேயானால் இப்போது நாம் எங்கேயோ போயிருப்போம்.
ஆனாலும் இன்றும் எம்மத்தியில் தனிப்பட்ட இலாபம் ஒன்றை மட்டுமே கொள்ளாமல் நமது நாடு, நமது எதிர்காலச் சந்ததி, நாட்டின் உழைப்பாளர் சக்தி, அவர்களது ஜீவனோபாய வசதிகள் என்பவற்றிற்காகவும் சிந்நித்து தொலைநோக்குடன் செயல்படும் தொழிலதிபர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஓவ்வொரு தனி மனிதனும் தங்கள் தொழில் முயற்சியில் நாட்டு நலன்,தொழிலாளர் நலன்,
இயற்கைச்சமநிலை என்பவற்றை மதித்து திடமான திட்டங்களை வகுத்து செயல்படுவோமானால் நாமும் நமது நாடும் இப்போது சிங்கப்பூருக்கு சவால்விட்டுக் கொண்டிருப்போம். எதிர்காலம் ரொம்ப வேகமாக வளரப்போகின்றது. ஒரு வியாபாரி எப்போதும் எதிர்காலத்தை திட்டமிடுபவனாக இருக்க வேண்டும். அடுத்து இரண்டு வருடத்தில் என்ன தேவைப்படும், எந்தப் பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்பதை முன்கூட்டியே திட்டமிடுபவன்தான் ஒரு வியாபாரியாக இருக்க முடியும்.

குறிப்பாக ஆசியாவில் அதுவும் நமது நாட்டில் இன்னொருவர் செய்யும் வியாபாரத்தை தானும் கொப்பிகட் பண்ணி அவரையும் வியாபாரம் செய்ய விடாமல் செய்து. இவரும் மூக்குடைபட்டு இறுதியில் இருவரும் அரபுநாடுகளுக்கோ அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கோ மலையேறுபவர்கள்தான் அதிகம். இதை மாற்ற வேண்டும். தனியாக வித்தியாசமாக சிந்திக்க வேண்டும்.

இன்று உலகமே மின்சாரத்தட்டுப்பாட்டால் திணறுகிறது. நீர்வீழ்ச்சிகளில் நீரில்லை. மழை பொய்த்துவிட்டது, நிலக்கிரி சுரங்கங்களிலும் நிலக்கரி தட்டுப்பாடாகிவிட்டது. ஆம் சோலார் (சூரிய ஒளியை கொண்டுமின்சாரம்) தட்டுக்களுக்குத்தான் இனி மவுசு. சைனா ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்டது. சோலார் கார்பெற்றரி சார்ஜர், சோலார் மொபைல் போன் சார்ஜர், சோலார் வோட்டர் ஹீற்றர், சோலார் வோட்டர் பம்ப் என தொடங்கி சோலார் ஸ்ரீட் லைட் என சைனா இயற்கையை தன் வசப்படுத்திக் கொண்டு விட்டது. உலகில் உள்ள பாரிய பைவ் ஸ்டார் ஹோட்டல்கள் தொடங்கி பெரிய நிறுவனங்கள் எல்லாம் சோலாருக்கு மாறிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாயும் இப்போது சைனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு சோலார் புறடக்ட்களை மிக குறைந்த விலையில் விற்றுக் கொண்டிருக்கின்றார்கள். சூடானில் உள்ள 75 வீதமான வீதி விளக்குகளும், பஸ் நிலைய பெயர் பலகைகளும் சோலார் வெப்பத்திலேயே இயங்குகின்றன.
சோலார் பொபைல் சார்ஜர் 10 யு.எஸ்.டொலர்,சோலார் ஜெனரேட்டர் 1000யு.எஸ்.டொலர், சோலார் ஸ்ரீட் லைட்( எலக்றிக் போஸ்ட்) 1100 யு.எஸ்.டொலர் என வியாபாரம் கொடிகட்டிப்பறக்கிறது.

இதை வாங்கி உபயோகித்தால் ஆயுளுக்கும் நீங்கள் மின்சாரக்கட்டணம் கட்டவேண்டியதில்லை. இப்போதே உங்கள் கிராமங்களில் பெட்டிக்கடைகளை திறந்து விடலாம். அடுத்த ஓரிரு வருடத்தில் நீங்கள்தான் சோலார் கிங். நீங்கள்இப்போது இருக்கும் நாட்டில் உள்ள சைனா அல்லது இந்தியா எம்பஸிக்கு ஒரு விசிட் பண்ணுங்கள்.

முந்தா நாள் (12.04.2009)ஆசியன் டெவலப்மன்ற் பேங் சிறிலங்காவுக்கு 160 மில்லியன் யு.எஸ்.டொலர் மின்சார அபிவிருத்திக்கு ஒதுக்கி உள்ளார்கள். உடனடியாக உங்கள் அமைச்சர்களையோ அபிவிருத்தி சம்பந்தமாக கதைப்பவர்களையோ தேடிப்பிடித்து நிரந்தர சோலார் புறடக்ட்டுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லுங்கள். ஐ.ரி.துறையில் உண்மையிலேயே சிறிலங்கன்தான் நம்பர் ஒன். ஆனால் இந்திய அரசு. இந்திய அமைச்சர்களும் இந்த துறையில் மூக்கை நுழைத்ததால் நாம் அதள பாதாளத்தில் இருக்கிறோம். சிறிலங்காவிலேயே யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.ரி.பார்க் பல ஜீனியஸ்களை உருவாக்கியுள்ளது. இந்த யுத்தம் அவர்களை தூக்கி கடாசிவிட்டது.என்றாலும் காலம் கடந்து விடவில்லை.

உலகம் முழுதும் உள்ள பாரிய நிறுவனங்கள் கொம்பியுட்டர்களை ஒருவருடம் பாவித்துவிட்டு
தூக்கி கிடப்பில் போட்டு விடுவார்கள்.அவைகளை மொத்தமாக 10 அல்லது 20 யு.எஸ்.டொலர் கொடுத்துவாங்கி சிறிது திருத்தி 'யூஸ்ட் கொம்பியுட்டர்' என்ற பெயரில் சில கம்பனிகள் மொத்தமாக விற்பார்கள். அதாவது 65 டொலர் முதல் 125 டொலர் என மொத்தமாக விற்கும் ஆயிரம் கம்பனிகள் புலம்பெயர்நாடுகளில் கொட்டிக்கிடக்கின்றன. பெண்டியம் போர்(4) 98 டொலருக்கு இவர்களிடம்சில சமயம்பெறமுடியும். இவைகளை ஒரு கன்டய்னரில்(20அடி) 348 கம்பியுட்டர் என வாங்கலாம். சிறியளவிலும் வாங்கலாம். இவைகளை எமது நாட்டில் கொள்ளை விலைக்கு விற்கலாம். இன்டர் நெட்டை திறந்து யூஸ்ட் பொம்பியூட்டர் அமெரிக்கா அல்லது யுனைட்டெட் கிங்டம் போய்பாருங்கள். இவ்விரண்டு நாட்டிலும்தான் தரமான பொருள்கிடைக்கும்.

இதில்ஒரு 100ஐ இம்போட் பண்ணி உங்கள் கிராமங்களில் உள்ள பாடசாலை அதிபர்களுடாக
மாணவர்களுக்கு மாதாந்த கட்டண அடிப்படையில் (இன்ஸ்சோல்ட்மென்ட்) வியாபாரத்தை தொடங்குங்கள். அப்புறம் மெதுவாக அதற்குரிய பார்ட்ஸ் என தொடங்கி வியாபாரத்தை விருத்தி செய்யலாம். இதேபோல்தான் பேக்கரி எகியுப்மன்ட் ரொம்ப மலிவாக ஐரோப்பிய நாடுகளில் பெற முடியும். சோலாரில், டீசலில், மின்சாரத்தில், கையினால் இயக்குவது என பல தினுசாக பெறமுடியும். 5000 டொலர் கொடுத்து அனைத்து உபகரணங்களையும் பெற முடியும்.ஒரு வாரம் பயிற்சியும் அளிப்பார்கள். கம்பளை பள்ளிவாசலுக்கருகில் உள்ள பேக்கரிக்கும்,பண்டாரவளை சந்தை சதுக்கத்தில் உள்ள பேக்கரிக்கும் ஒரு குட்டி விஸிட் செய்து பாருங்கள். 4000 டொலருடன் தொடங்கிய இவர்களது வியாபாரம் இப்போது ஐந்து பிறான்ஜ் 40 ஊழியர்கள் என கொடிகட்டிப்பறக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் பத்து வருடத்துக்கு முதல் குதிரைக்கு கொள்ளு போட்டுக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருக்க நாம் ஐரோப்பாவில் இருந்து கொண்டு வீதிகளில் கொடிபிடித்துக் கொண்டு. அண்ண எப்போ சாவார் தின்னை எப்போ காலியாகும் என நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம். அதை மகின்தவும் குடும்பமும் பார்த்துக் கொள்ளுவார்கள். நமக்கு டெய்லிபிறட்டுக்கு பணம் நாம்தான் உழைக்க வேண்டும். அழுதும் பிள்ளை நம்ம பொண்டாட்டிமார்தான் பெற வேண்டும். அரசாங்கம் வந்து பெற்றுத்தரமாட்டாது. நாம் பிள்ளையை பெற்றவுடன் அரசு வந்து தடுப்பூசி,இலவச கல்வி என தரத்தொடங்குவார்கள். எனவே நாம் முதலில் பிள்ளையைப் பெறுவோம். அப்புறம் அரசிடம் போய் உதவிகளை கேட்போம்.

ஒவ்வொரு நாட்டிலும் நூற்றுக்கணக்கான சேம்பர் ஒப் கொமர்ஸ் இருக்கிறது. கட்டாரில்கட்டார் சேம்பர் ஒப் கொமர்ஸ் மிக பிரபல்யம். அதற்குள் யாரும் போகலாம். நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள். ஆயிரக்கணக்கான உற்பத்தி நிறுவனங்களின் கையேடுகள், இலவசமாக இன்டர்நெட் வசதி என தகவல்களை வைத்துக் கொண்டு அரபிக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தரம் இதற்குள் விசிட் பண்ணி வேண்டிய தகவல்களை பெறலாம். இலவசமாக ஒரு கஃவா ( அரேபியர்கள் அருந்தும் காபி) குடித்து விட்டுமும் வரலாம். சில நேரம் ஏதோ ஒரு கட்டார் கம்பனிக்கு நமது நாட்டில் நாம் தூக்கி வீசும் மாங்கொட்டை தேவைப்படலாம்.(அடுத்த பாகத்தில் மாங்கொட்டை பற்றி விரிவாக எழுதுகின்றேன்).

இப்படித்தான் தமிழ்நாடு மெட்ராஸை சேர்ந்த இளைஞர் ஒருவர் இங்கிலாந்தில் உள்ள பேர்மிங்ஹாம் சேம்பர் ஒப் கொமர்ஸ்ஸூக்கு ஒரு முறை பொழுது போக்குக்காக சென்றுள்ளார். அங்குள்ள லைப்ரரியில் புத்தகங்களை படித்துக் கொண்டிருக்கும் போது அருகில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த வெள்ளையர் ஒருவருடன் பேசியதில். அவர் வெப் டிசைனிங் கம்பனி ஒன்று திறப்பதற்கான தகவல்களை திரட்ட வந்த கதையை சொல்லியுள்ளார். பிறகென்ன அப்படியே அந்த வெள்ளையனை அலாக்காக மடக்கி தனது வித்துவ திறமையை எல்லாம் சொல்லி துபாய், இந்தியா, சிங்கப்பூர் என கடை பல திறந்து வெள்ளையன் இன்வெஸ்டர் இவர் அவனது உலகளாவிய கம்பனிக்கு கோ பார்ட்னர் என்ற ரீதியில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மிக விரைவில் துபாயில் வாசனைத்திரவிய மல்டி நெஷனல் கம்பனி திறக்கும் அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஆம் சில நேரம் அதிர்ஷ்டம் காலடியிலிருக்கும். இப்போதே உங்களுக்கருகிலுள்ள சேம்பர்களுக்கு ஒரு நடை போக பழகிக்கொள்ளுங்கள்.

இந்தியா, சைனா இரண்டும் தான் அடுத்த பொருளாதார வல்லரசுகள் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருகிகின்றார்கள். ஆனால் பெல்ஜியம் என்ற ஒரு ஐரோப்பிய நாடு சத்தமில்லாமல் வளர்ந்து கொண்டிருக்கின்றது. அண்மையில் கொடிபிடிப்பு, ஆர்ப்பாட்டம் என நம்மவர்கள் ஊர்வலம் வந்த நாடிது. ரொம்ப கெட்டிக்காறர்கள். பொருளாதாரத்தை மொத்தமாக திறந்துவிட்டு மொத்த உலக உற்பத்தியாளர்களையும் அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பெல்ஜியம் புரூஸல்சில் நம்மவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது அங்கு அன்றோப்பேட்டில் பெரியதொரு வர்த்தக மகாநாடு நடந்து கொண்டிருந்தது. ஐயாவும் அதில் ஆஜர். அவர்களுக்கு நிறைய மூலப் பொருட்கள் தேவை. நாம் வெட்டி வீசும் மீன் செட்டையிலிருந்து நம்மால் எரிக்கப்படும் வைக்கோல் வரை இவர்களுக்கு விற்கலாம். உலகிலேயே மாணிக்கக் கற்களை அதி கூடிய விலைக்கு வாங்கக் கூடிய கம்பனிகளும் இங்குதான் இருக்கின்றன. அமைதியான மக்கள். ஆர்ப்பாட்மில்லாத வாழ்க்கை. ஒரு முறை பெல்ஜியம் எம்பஸி கொமர்ஸியல் டிவிஷனுக்கு விசிட் பண்ணித்தான் பாருங்களேன்.

பிறர் சொல்வதை பொறுமையாக கேழுங்கள். போராடாமல் வளர்ச்சியில்லை. மனமுவந்து கொடுக்கப் பழகுங்கள். தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். தளர்வின்றி செயல்படுங்கள். நன்றியுடன் நடந்து கொள்ளுங்கள். உங்களையும் பிறரையும் மதியுங்கள்.
ஒரு நோக்கம் இருக்கட்டும்.

( நேற்றிரவு என்ட மூத்தாப்பா அதாவது என்ர உம்மாட உம்மாட உம்மாட புருஷன் கனவுல வந்து டேய் பேராண்டி என்ன வெள்ளையனைப்பற்றியே எழுதிக் கொண்டிருக்கின்றாய் நம்மட மூலிகைகளைப் பற்றியும் எழுதேன் என தலையை பிறாண்டி எடுத்து விட்டார். எனவே அடுத்த பகுதி முழுக்க முழுக்க என் மூத்தாப்பா கைகட்டிப் பரிகாரியாருக்கு சமர்ப்பணம். வேப்பிலை, மாவிலை, மாங்கொட்டை, மகாத்மியம்.......)

17-04-2009 T111

Read more...

Tuesday, March 16, 2010

1990 முதல் 2009 வரை புலிகள் ஆட்சியில்……நடந்த வன்கொடுமைகள்!- கிறேசியன்! (பாகம் -11)

சூனா. பானா. தமிழ்ச்செல்வன் அரசியல் தலைவராகி வெளிநாடுகளுக்குச் சென்று பல்லிளித்து வந்ததைத் தவிர வேறு ஏதும் செய்ததில்லை. அரசியல் என்றால் புன்னகைப்பதுதான் என்று இவர் கண்டுபிடித்திருந்தார் போலும். அன்று என்னைத் தாக்கும் போது அவரது முகத்தை நான் நேராகப் பார்த்தேன். மிகவும் கொடூரமானதும், அசிங்கமானதாகவும் இருந்தது.

அங்கே இருந்த ஏனைய இயக்க அங்கத்தினருக்கும் புலி விலங்குகளுக்கும் தன்னை ஓர் பொல்லாத விலங்கு என்று காண்பிப்பதற்காக என்னை அப்படிப் பலமாக அடித்துத் துவைத்தார். என்னை அவருக்கு யார் என்றே தெரியாது. அன்றுதான் இந்தப் பகுதிக்கு வந்தவர். தன்னை ஓர் சூரப்புலியாகக் காண்பிக்க பிறரை வருத்தினார். எனது கையால் ஒரு அடிக்குத் தாங்கமாட்டார் அந்தப் பலிலிளிக்கும் விலங்கு. கைது செய்யப்பட்டிருக்கும் இயக்க அங்கத்தினரைப் பார்வையிட வந்தவராம் அன்று. தனது வீரத்தையும் காண்பிக்க வேண்டும் என்று அவர் எடுத்த முடிவுதான் இது.

யுத்த நிறுத்த காலத்தில் இவர் நான்கு பஸ்களை உறவினர்கள் பெயரில் வாங்கி தொழில் நடத்திவந்தார். இவரது குழந்தை விளையாடுவதற்கு ஒன்றரை இலட்சம் ரூபாயில் லாப்ரொப் கம்யூட்டர் வேண்டி கொடுத்திருந்தார். சாதாரண புலிப் போராளி அங்கத்தினர் இதனைக் கண்டு வேதனை அடைந்தனர்.

புலிகளின் பெருந்தலைகள் எல்லோரும், சொகுசான வீடுகள், வாகனங்கள், ஆடம்பரப் பொருட்கள் என்று வன்னியிலும் ஐரோப்பியர் போன்று வாழ ஆரம்பித்தனர். இந்த வாழ்க்கையை முன்நின்று நடத்திக் காட்டியவர் தமிழ்ச்செல்வன்தான். இவரது அந்த இரக்கமற்ற கொடுந் தாக்குதலை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை. அவர் இறந்த போது பலர் கவிதைகள் பாடினர். இப்படியான கொடியவர்களும் நல்லவர் போல் உலகத்தை ஏமாற்றியுள்ளனர் என்று கண்டேன்.

இந்த அடிக்கும் அதே மருத்துவர் தயாபரன் வின்ரோஜன் தடவி எனக்கு ஆறுதல் கூறினார். தமிழ் செல்வன் இதற்கு முன்னரும் ஒரு தடவை இங்கு வந்து ஒரு பெடியனைப் போட்டு தாறுமாறாக அடித்துவிட்டுச் சென்றார். அவருக்கும் இந்தப் பகுதிக்கும் எந்தவிதச் சம்மந்தமும் இல்லை. இங்கு கைதிகளை மிகவும் சுதந்திரமாக விட்டுள்ளனர். தன்னிடம் ஒப்படைத்தால் காலில் விலங்குபோட்டு இப்படி இருக்கவைத்திருக்க மாட்டேன், வெளவால் போல அனைவரையும் தலைகீழாகத் தொங்கவிட்டிருப்பேன் என்று கூறிச் சென்றார் என்று என்னிடம் கூறினார்.

இப்படியாக ஒருவாரம் கழிந்தது. ஒருநாள் இரவு ஒரு சக கைதிக்கு வயிறு வலி ஏற்பட்டது. காலை மாலை இருவேளை தவிர ஏனைய நேரங்களில் இயற்கை உபாதைகளைக் கழிக்க அவர்கள் அனுமதிப்பது கிடையாது. அந்தச் சகோதரன் வலியில் தான் கழிவறை செல்லவேண்டும், இங்கு சொப்பின் பைகிடையாது எனவே என்னை வெளியிலே கூட்டிச் செல்லுங்கள் என்று சத்தமிட்டார். காவல் விலங்கு அதற்குச் சம்மதிக்காமல் சத்தம் போட்டாமல் இரு! சத்தம் போட்டால் அடிவாங்குவாய் என்று கூறிச் சென்றார். இரவு அனைவரும் தூங்கிவிட்டோம். அந்தச் சகோதரன் அம்மண்டபத்தின் உள் ஓரத்தில் மலம் கழித்துவிட்டார்.

காலையில் புலி விலங்குகள் வந்தனர். யார் மலங்கழித்தது என்று கேட்டனர். பதில் சொல்ல யாரும் முன்வரவில்லை, உங்கள் அனைவருக்கும் இதற்காகத் தண்டனை உண்டு என்று கூறிவிட்டுச் சென்றனர். மாலை உணவு வழங்கப்பட்டப் பின்னர் அனைவரையும் எழுந்து நிற்கும்படி கூறினர் விலங்குகள். அனைவரும் எழுந்து நின்றோம். தலைக்கு மேலே கைகள் இரண்டையும் உயர்த்திக்கொண்டு நிற்கும்படி கூறினர்.

மாலை நான்கு முப்பது மணியளவில் இந்த உத்தரவைப் போட்டனர். ஒரு மணி இரண்டு மணி நேரமல்ல 16மணி நேரம் யாரும் கையைக் கீழே கொண்டுவரக்கூடாது. அருகில் இருக்கும் சுவரில், அல்லது தூணில் சாயக்கூடாது, பத்துக்கும் மேற்பட்ட புலி விலங்குகளை இதற்காகவே காவலுக்குப் போட்டனர். வலி தாங்காமல் கைகளைக் கீழே கொண்டு வந்தவர்களுக்கு அடிவிழுந்தது. 3-4 மணி நேரங்களுக்கு மேல் என்னால் தொடர்ந்து நிற்கமுடியவில்லை. எதிர் முனையில் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் என்னைப் பார்த்து அழுதுகொண்டு நின்றார். இரவு 10மணியைக் கடந்ததும் ஏறக்குறைய 10பேருக்கு மேல் நிலத்தில் இருந்து விட்டனர். இதைப் பார்த்துவிட்ட புலிவிலங்குகள் ஓடிவந்தனர். நிலத்தில் இருந்தவர்களைத் தாக்கினர், எங்களைக் கொன்று விடுங்கள் என்று கத்தினார்கள் நிலத்தில் இருந்தவர்கள்.

இந்தக் கதறல்கள் எவற்றினையும் அவர்கள் காதில் வாங்கவில்லை. தொடர்ந்து அடித்து அவர்களை எழுந்து நிற்கவைத்தார்கள். எனது தோழ்கள் இரண்டும் வலியெடுத்து விறைத்துவிட்டது. கைகளை நேரே தூக்காமல் தலையின் மேல் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்துக்கொண்டேன். இதைபோன்று அனைவரும் வைத்திருந்தனர். உறக்கம் உடலைத் தள்ளாட வைத்தது. புலிவிலங்குகள் ஆள்மாறி ஆள்மாறி எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர். சிலர் தள்ளாடி மற்றவர் மீது விழுந்தனர். இப்படியாக இரவு முடிந்தது.

காலையில் வழக்கம் போல் கடன் கழிக்க வரிசையாகச் சென்று முடித்துவிட்டு வந்தோம். இப்போது கூட விலங்குகள் திருப்தியடையவில்லை. மீண்டும் கைகளைத் தூக்கிக்கொண்டு நிற்கும்படி கூறினர். அவர்கள் உத்தரவுபடி கைகளை தலைக்கு மேலாக உயர்த்திக்கொண்டு நின்றோம். காலை 8.30 மணியளவில்தான் நிலத்தில் அமரும்படி கூறினர். அப்படி நிலத்தில் அமர்ந்தவர்கள் இருந்தபடியே உறங்கலாயினர். இதைக் கவனித்த விலங்குகள் மீண்டும் தடிகள் எடுத்து வந்து உறங்கியவர்களை அடிக்கத் தொடங்கினர்.

பகல் நேரத்தில் நித்திரை கொள்ளக்கூடாது கைதிகள் என்பது அவர்களது சட்டமாம். கொடுமைப்படுத்த வேண்டும் என்பது கொள்கையானால் அனைத்துமே சட்டம்தான்! மிருகவதை என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அது என்னவென்று தெரியாது. இந்தப் புலி விலங்குகளிடம் தான் அதன் உண்மைநிலையைக் கண்டேன். இப்படியான ஓர் தண்டனையைக் கண்டு பிடித்து நடைமுறைப்படுத்திய புலி விலங்கின் பெயர் ரவி என்பதாகும். இவர் செம்படை சலிமுக்கு அடுத்தப்டியான பதவியில் சில காலம் இருந்தார். பின்னர் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார் என அறிந்தேன்.

மீண்டும் பல நாட்கள் இதே போன்று பலதரப்பட்ட தாக்குதல்கள், சித்திரவதைகளுக்கிடையில் வழக்கம் போல் கே.டி. வந்து பலரது மூக்குகளை உடைத்துக் கொண்டிருந்தார். கே.டி. உள்ளே வரும்போது அங்கிருக்கும் சகோதரர்கள் தங்கள் தலைகளைக் கீழே சரித்துக்கொள்வார்கள். கே.டி. திரும்பி வெளியே செல்லும் வரை தலையை நிமிர்த்திப் பார்க்கவேமாட்டார்கள்.

ஒருநாள் நான் விசயம் தெரியாமல் கே.டி.யைப் பார்த்துவிட்டேன். சைகையால் வா என்று அழைத்தார். வேறு வழியில்லை, எழுந்து சென்றேன். அப்பையா அண்ணன் சொன்னது உடனே நினைவுக்கு வந்தது! எனது மூக்கை எப்படிப் பாதுகாப்பது என்று தெரியவில்லை! மூக்கைப் பாதுகாக்கப்புறப்பட்டால் உடல்ப் பாகங்கள் பழுதடையும், ஒரு தடவை வலிதானே! வருவது வரட்டும் என்று அந்த விலங்கின் முன் நின்றேன்.

தூசன வார்த்தைகள் பேசி தனக்குத் தானே கோபத்தை வரவழைத்து தனது உள்ளங்கையால் என் மூக்கின் மீது பலமாகக் குத்தினார். மூக்கு உடைந்து இரத்தம் கொட்டியது, போய் இரடா என்றார், தரை முழுவதும் இரத்தம் வடிய நான் மீண்டும் எனது இருப்பிடத்தில் இருந்தேன். இரத்தத்தைத் துடைக்க எந்தவித துணியும் கிடையாது. எனது சறத்தைக் கழற்றி இரத்தத்தைத் துடைத்தேன். மறுநாள் காலை கடன் கழித்த பின்னர்கூட அந்தச் சறத்தைக் கழுவ முடியவில்லை. ஐந்து நாட்கள் கழித்துத்தான் குளிப்பதற்கு அனுமதித்தனர். அன்றுதான் இரத்தக்கறை படிந்த சறத்தைக் கழுவினேன்.

வாரத்தில் இரண்டு மூன்று தடவை வந்து மூக்குடைக்கும் கே.டி. இப்போது தினமும் வர ஆரம்பித்தார். காலைக் கடன் கழித்துவிட்டு வரும் சகோதரர்களுக்கு வாசலில் நின்று கெட்டவார்த்தைகள் பேசி பெருத்த தடி ஒன்றினால் அடிப்பார். தொடர்ந்து ஒரு வாரமாக இந்தப் பணியை கே.டி. என்ற விலங்கு செய்து வந்தது.

ஈ.பி.ஆர்.எல்.எப். ஆதரவாளர் தர்மலிங்கம் என்பவர், வயது 45க்கு மேல் இருக்கும். வழக்கம் போல் காலைக்கடன் முடித்து வரும்போது கே.டி. வரிசையில் வருபவர்களுக்கு ஓர் தடிப்பான தடியினால் அடித்துக்கொண்டு நின்றார். தர்மலிங்கம் அவர்கள் வந்ததும் அவரை அடிக்கும் போது அவர் தனது இடது கைகளினால் தடுத்து விட்டார். கே.டி.க்கு கோபம் வந்துவிட்டது. தர்மலிங்கம் அவர்களைத் தள்ளிவிட்டார். கால்சங்கிலி தடுக்க அவர் கீழே விழந்தார். சற்று தள்ளி ஓர் மண்வெட்டி இருந்தது. அந்த மண்வெட்டியை எடுத்து பிடியை நிலத்தில் குத்திக் கழற்றினார். அந்தப் பிடியினால் தர்மலிங்கம் அவர்களைத் தாக்குவதற்கு ஆரம்பித்தார். முழங்கைக்குக் கீழ் உடைந்தது. அவர் மீது பட்ட ஒவ்வொரு அடியும் அருகில் நின்ற அனைவரையும் திகைக்க வைத்தது. புலி விலங்குகளும் இதனை தள்ளி நின்று ரசித்துக் கொண்டிருந்தனர்.

மறுநாள் இச்சிறையின் பொறுப்பாளர் சலீம் வந்தார். கே.டி.யை அழைத்து இனிமேல் இந்தப்பக்கம் வரக்கூடாது என்றும் யாரைக் கேட்டு அவரை அடித்தனீ என்றும், நீ இங்கு வரும்போதெல்லாம் இவர்களை அடிக்கிறாய் என்று ஏக வசனத்தில் திட்டி அனுப்பிவைத்தார். ஆனாலும் கே.டி. இந்த உத்தரவை கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஒருவாரம் அந்தப்பக்கம் வராமல் இருந்தவர் பழையடி தனது கைவரிசையைக் காண்பித்துக் கொண்டுதான் இருந்தார்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 5

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 6,7

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 8


1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 9

1990 முதல் 2009 வரை புலிகள்ஆட்சியில்.. நடந்த வன்கொடுமைகள்! கிறேசியன்! (பாகம் -10)

இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

தொடரும்…

Read more...

Sunday, March 29, 2009

கருணா என்கிற முரளிதரனுக்கும்,கிழக்கு மாகாண மக்களுக்கும். ( பாகம் - 6 ) - யஹியா வாஸித் -

சந்தேகம், சந்தேகம். நிறைய சந்தேகம். வெரிகுட். இந்த சந்தேகம் பல வருடங்களுக்கு முன்னால் நமக்கு வந்திருக்க வேண்டும். 1948ல் சுதந்திரம் வாங்கும் போது. இந்த சுதந்திரம் உடரட்ட சிங்களத்துக்கு மட்டுமா. இல்லை பஹல ரட்ட தமிழனும் இதில் குளிர்காயலாமா என வெள்ளையனிடம் கேட்டிருக்க வேண்டும் ,1971 சிறிலங்கா குடியரசு ஆகும் போது.

அம்மா, தாயே வெள்ளையன்ட இலச்சினைக்குள்ள அடங்காத தனி சோஷலிச குடியரசுக்குள்ள இந்த வட கிழக்கும் தண்ணி குடிக்கலாமா. இல்லை தண்ணி காட்டுவீர்களா என கேட்டிருக்க வேண்டும். எம்.எஸ். காரியப்பர் சேனநாயக்கா சமுத்திரம் கட்டும் போது. கருப்பு குஞ்சம் கட்டிய சிவப்பு துருக்கி தொப்பி போட்ட காக்கா. இந்த அணைக்கட்டு மொத்த கிழக்கு மாகாணத்துக்கும் ஆப்பா இல்லை இது நீங்க சிங்களத்துக்கு போடுற சோப்பா என கேட்டிருக்க வேண்டும்.

தேவநாயகத்துக்கு மந்திரி போஸ்ட் கொடுக்கும் போது. ஐயா. வெள்ளை கோட் போடும் கருப்பு ராசாவே நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்குமாங்கே பொசியுமாம் என்று சிங்களம் சொல்லுகின்றதே. பொசிய வைப்பீர்களா என கேட்டிருக்க வேண்டும். எல்லாம் போகட்டும் கழுத இப்போவும் கிழக்கு காட்டுக்குள்ள இருந்து ஆங்காங்கே கொல்லும் புலிக் குஞ்சுகளே எதற்கு ராசா எதற்கு என கேட்டோமா அல்லது கேட்கின்றோமா. ஐயோ அது பெரிய இடம் கேட்க முடியாது. இவர் சாதாரண நபர்தானே ஒரு மண்ணும் பண்ண மாட்டார் என ஆயிரம் கேள்விகள், பதினாறாயிரத்தி சொச்சம் சந்தேகங்கள்.

சந்தேகம் - 1

ஏறாவூர் நண்பர்கள் நம்முடைய பகுதி ரொம்ப சூடான பகுதி ஆயிற்றே அங்கே அவுஸ்திரேலியா பசு வளர்க்கலாமா என அடுத்த வீட்டுக்காறனுகளிடம் போய் சந்தேகம் கேட்டுள்ளனர். இந்தப் பசு எங்கும் வளரும். சுட்ட மண் ஆன தெல்லிப் பழையில் வளரும் போது குறிஞ்சி. முல்லை, பாலை, நெய்தல் நிலங்களை தன்னிடத்தே கொண்டே கிழக்கில் எல்லாமே பொன்னாகும். டோன்ட் வொறி.கோ ஹேட்.

சந்தேகம் - 2

மாட்டு சாணியை வறட்டியாக தட்டி வைத்துக் கொள்ளுங்கள். மாவனல்லை, கடுகண்ணாவ,
திப்பிட்டி, அரணாயக்க ஊதுபத்தி வியாபாரிகள் உங்கள் கொல்லைக்கு வந்து மொத்த சாணியையும் அள்ளிக் கொண்டு போவார்கள். இல்லையே அவர்கள் குறைந்த விலைக்குத்தான் எடுப்பார்களாமே என நீங்கள் சந்தேகப் படுவது புரிகிறது.புதிதாக மூன்று ,நான்கு பதுளை சகோதரயாக்கள் கொலன்னாவ பகுதியில் உரத்தொழிற்சாலை உருவாக்குகின்றார்கள். அவர்களிடம் பேரம் பேசுங்கள். நல்ல விலைக்கு விற்கலாம். டண். விற்று விட்டீர்கள்.அப்புறம் அவன் உங்களுக்கு உரம் விற்பான் வாங்கி வெள்ளாமைக்கு(விவசாயப்பயிர்) விசிறுங்க. ரொம்ப சந்தோஷம்.

சந்தேகம் - 3

ஏன் மாட்டு சாணியை கொண்டு நாங்களே உர உற்பத்தி செய்யக்கூடாது. செய்யலாமே.
ஜப்பானிலும்,இங்கிலாந்திலும் இருக்கும் வடிவேலு ரசிகர்களுக்கெல்லாம் ஈமெயில் பண்ணுங்க.
கிட்டத்தட்ட 4000 டொலருக்கு ஆறடி நீள, ஐந்தடி அகல, ஐந்தடி உயரமான ( நிறை 5 டொன்) உரம் தயாரிக்கும் அந்த இயந்திரத்தை வாங்கி அனுப்ப சொல்லுங்க. இல்ல மச்சான் எங்களுக்கு படம் பார்க்கத்தான் நேரம் இருக்கு உருப்படுகிற ஐடியாவே இல்லை என்று அவர்கள் சொன்னால். உங்கள் ஊரில் உள்ள எக்ரிகல்ச்சர் ஒபீசர்களைத் தேடிப்பிடியுங்க. பேராதனை பல்கலைக் கழகத்துல படிச்ச சரக்குகளை அவிழ்த்துவிட சொல்லுங்க.இப்படியான இயந்திரங்களை அனுராதபுரத்துல செய்கின்றார்களாமே உண்மையா என கேழுங்க. கேழுங்கள்
தரப்படும். தட்டுங்கள் திறக்கப்படும். கேழுங்கள் கிடைக்கும் என்றார். ஏசு கேழுங்கள் கிடைக்கும் என்றார்.

அது ஒரு பொற்காலம். வெள்ளிக்கிழமை பகல் பதின்ரெண்டு மணிக்கு கே.எஸ்.ராஜா பக்கிப்பாடல்கள் என்று தொடங்குவார். நாங்கள் ஜூம்ஆவுக்குப் போக அவசர அவசரமாக சாறனை உடுப்போம். கே.எஸ்.ராஜா ஹிந்து, பாட்டு கிறித்துவம் ,நாங்கள் முஸ்லீம்கள் பள்ளிக்கு போக ரெடியாகுவோம். பாத்த்தீர்களா என்ன ஒற்றுமை. எல்லாவற்றையும் குளிதோண்டி வன்னில கொண்டு போய் பொதச்சிப் போட்டு. இப்போ மலையாள பகவதி,மலையாள பகவதி என முகையதீன் ஆண்டவர் சத்துரு சங்காரம் படித்துக் கொண்டிருக்கிறோம்.

சந்தேகம் - 4

ஆடு வளர்க்கலாம் சரி. அந்த ஆட்டுப் புழுக்கைகளை என்ன செய்வது. ஆட்டுப் பட்டிக்குப் பக்கத்தில் ஒரு குட்டி தண்ணி தொட்டி ( 10 அடி நீளம்,10 அடி அகலம்,3 அடி உயரம் )கட்டி வைத்து. குட்டி விரால் மீன் 25 வாங்கி அதில் போட்டு விடுங்கள். ஆட்டு புழுக்கையை தினமும் மீன் தொட்டியில் அள்ளிப் போடுங்கள். ஒரு கல்லுல ரெண்டு மாங்காய். ஆடு வியாபாரம். அத்துடன் துடிக்கத் துடிக்க விரால் மீன் வியாபாரம். ஆட்டுப் புழுக்கை விரால் மீனுக்கு அல்வா மாதிரி. விரால் மீனில் ஒன்றுக்கு பத்து வீதம் இலாபம் கிடைக்கும்.

சந்தேகம் - 5

செட்டியர் தெரு நித்திய கல்யாணி ஜூவலர்ஸ் தொடக்கம் 157 டைமன் ஹவுஸ் வரையும், டைமன் ஹவுஸ் முதல் 237 பூக்கடை வரையும், பூக்கடை தொடக்கம் புதுச் செட்டித் தெரு வரையும் உள்ள மொத்த மட்டக்களப்பானுக்கும் ஒரு சந்தேகம் வந்திருக்கிறது. நம்முடைய பெரிய போரை தீவைப் பற்றி எழுதி இருக்கிறார். இவர் தமிழனா சோனியா என பட்டி மன்றம் நடாத்துகிறார்களாம். அதை விட்டு விட்டு தொழிலை கவனியுங்கோ. சீட்டுப் பிடித்து சேகரித்து வைத்துள்ள பணத்தை எல்லாம் ஊருக்கு கொண்டுவாங்கோ. அழகான மீன்பண்ணை. இறால் பண்ணை போடுங்கோ.

ஊரில் தரிசாக உள்ள நிலத்தில் ஒரு ஏக்கரில் முயற்சி பண்ணி பாருங்கள். அப்புறம் ஐயோ இந்த கொழும்பும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என ஓடி விடுவீர்கள். இல்லையே கடல் தண்ணியில,உவர்ப்பு மண்ணுலதான் இறால் வளரும் என்று சொல்கின்றார்களே. இல்லை. நமது கிணற்றுத் தண்ணியில் இறால் துள்ளி விளையாடும். கட்டுநாயகா விமான நிலையத்தில் இருந்து மினுவாங்கொட ரோட்டுல வேனைத் திருப்புங்கள். 8 மைல் தொலைவில் 'பொளிபுறப்'கம்பனி என எழுதி ஒரு பெரிய விளம்பரத்துடன் ஒரு பெயர்பலகை பல்லிளிக்கும்.( எந்த இடம் என்பதை மறந்து விட்டேன்).போய் அவன் கதவை தட்டுங்க.மலையளவு நீள அகலத்தில் அவனிடம் பொளிப்புறப் துணி இருக்கும்.இது நமது யூரியா வேக் போன்று தடிமனானது. நீர் கசியாது.இதை வாங்கிவந்து 'சுவீமிங் பூள்'போல் அமைத்து (மூன்றடி உயரம்)இறால் வளர்க்கலாம். இறால் குஞ்சுகளை கொழும்பில் வாங்கலாம். செலவு சிறிது அதிகம். பலன் தங்கத்தை விட அதிகம். 10 லட்சம் ரூபா செலவு செய்தால் 40 லட்சம் ரூபா நிச்சய லாபம். இதற்குரிய ஆலோசனைகளை புத்தளத்தில் உள்ள இறால் பண்ணைகளில் வேலை செய்யும் ஊழியர்களிடம் இலகுவாகப் பெறலாம். உரிமையாளர்களிடம் நிச்சயம் பெற முடியாது. அது ரொம்ப நஸ்டமான தொழிலாச்சே என முகத்தை சுழிப்பார்கள். 'வைட்ஸ்பொட்' என்கின்ற வெள்ளைப் புள்ளி நோய்
வந்து நம்மை ஓட்டாண்டி ஆக்கிவிடும் என சொல்வார்கள். அது காகத்தினால் (அண்டங்காக்காய்) வருவது, காக்காயை துரத்த எங்களிடம் நல்ல சீன வெடி இருக்கிறது.வெடியை கொழுத்தி போட்டு காகத்தை விரட்டுவோம் என தைரியமாகச் சொல்லுங்கள்.

சந்தேகம் -6

கோழிப்பண்ணை போட்டால் நிறைய கோழி எரு சேருமே என யோசிக்காதீர்கள்.மலையகத் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு அது பொன்.தேயிலை மரத்தின் அடியில் இதை தூவினால்
தேயிலை உற்பத்தி இரட்டை மடங்காகும்.


சந்தேகம். – 7

ஊரெங்கும் பழைய,பாவித்த,எதற்குமே உதவாத சைக்கிள் டயர், கார் டயர், வேன் டயர் என குவிந்து கிடக்கிறதே இதற்கு ஒரு வழியில்லையா என பலர் கேட்டுள்ளனர். இவைகளை சேகரித்து கைக்கடக்கமாக துண்டு துண்டாக வெட்டி வீட்டுக் கொல்லையில் சேகரித்து வையுங்கள். இங்கிலாந்தில் இருந்து 'வணங்கா மண்' வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் நீண்ட நாள் கடலில் நிற்க வேண்டியேற்பட்டால் 'கப்பல் ஓயில்' தேவைப்படலாம். கிழக்கு மாகாணத்தில் இருந்து ஒயில் விற்க இந்த டயர்கள் தேவை. ஆம்.இந்த டயர் துண்டுகளை பாரிய இரும்பு சட்டியில் போட்டு எரித்து ஆவியை சேகரிக்க வேண்டும். இந்த ஆவி ஒயிலாக மாறும். அது கப்பல் இன்ஜின்களுக்கு பயன்படுத்தப்படும். பாரிய வெட்டை வெளிகளில் மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளில் இதை தயாரிக்க வேண்டும்.சுற்றுச் சூழல் இதனால் மாசடையலாம். உரிய அனுமதிகளை பெற்று செய்ய வேண்டும். ஏற்கனவே துப்பாக்கி சனியன்களால் ஏற்பட்ட கந்தக வாசனையால் நம்மவர் சுவாசிக்க முடியாமல் இருக்கின்றனர்.அப்புறம் இந்த கந்தக வாசனை மக்களை குழப்பிவிடும். ரொம்ப ஜாக்கிரதை. ஆனால் கைமேல் பலன் நிச்சயம்.

சந்தேகம் -8

மாட்டுத்தோலை என்ன செய்யலாம். ஒரு மாட்டின் தோலை ஏழு அல்லது எட்டாக பேப்பர் மாதிரி பிரிக்கலாம். ஆனால் எம்மவருக்கு அந்த நுணுக்கம் தெரியாது. பாகிஸ்தானியர்கள் இதில் கில்லாடிகள். ஒரு மணிநேரத்தில் பத்து மாட்டின் தோலை உரித்து கடாசி விடுவார்கள். புத்தளத்தில் ஆங்காங்கே பாகிஸ்தானியர்கள் விசிட்டிங் விசாவில் வந்து செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை அழைத்து வந்து இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். உரித்து காயவைத்து கொழும்பு டாம் ஸ்ரீட் வர்த்தகர்களுக்கு ஒரு தூது விட்டால் போதும். தோல் வியாபாரம் களை கட்டும்.

நீ ஒரு நல்ல வியாபாரியாக இருக்க விருப்பமா. நிச்சயமாக நீ ஒரு நல்ல இடிதாங்கியாக இருக்க வேண்டும். அப்படி இருக்க விருப்பமில்லையா. உடனே பணத்தை கட்டி சவூதிக்கு அல்லது ஐரோப்புக்கு போய் அவர்களுடைய டொய்லட் களுவ வேண்டியதுதான். ஊரில் இருந்து நாளுக்கு மூன்று போன் வரும். உழைக்கிற பணத்தை எல்லாம் அனுப்பிக் கொண்டு இருக்க வேண்டியதுதான். இல்லை நான் இடிதாங்குவேன். என்னால் முடியும். ஐ கென் வின் என்றால். கோஹெட். ஆயிரம் வழிகளிருக்கிறது.

( தொடருவேன்.........)


28-03-2009 T111

Read more...

Wednesday, March 10, 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 5

எனது நண்பன் விஜித்தரன் கூறி முடித்ததும், ரெலோ சகோதரர்கள் மீது செம்மனியில் அடுக்கிவைக்கப்பட்ட மூடைகள் எதுவாக இருக்கும்? எனது அறிவுக்கு எட்டியவரை சிந்தித்துப் பார்த்தேன், விடை தெரியாமல் இருந்தது. இந்தக் கொடியவர்களது கூடாரத்துக்குள் வந்த பின்னர்தான் அறிந்தேன். அன்று எனது நண்பன் கூறிய அடுக்கி வைக்கப்பட்ட மூடைகள் அனைத்தும் சீனி மூடைகள் என்று. மனிதர்கள் உடல் மீது சீனியைக் கொட்டி எரியூட்டினால் உடலில் ஒரு பாகம் கூட மிஞ்சாது எரிந்து விடும். மனிதர்களை அழிக்க வேர்கள் ஆரம்ப காலங்களிலேயே வித்தைகளைக் கற்று வைத்திருந்தனர்.

எனக்கு அந்த வயதில் பெரிய அளவு பகுத்தறிந்து பார்க்க, நன்மை தீமைகளை விபரிக்க இயலாது இருந்தது. பின்னாளில் இவர்களது படுகொலைகளது செயல் முறையைப் பார்க்கும் போது இவர்கள் மனிதர்கள் அல்ல! அரக்கர்கள்! மனித நேயம் அற்ற படுபாவிகள். உலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

நான் யாழ்ப்பாணத்தை சைக்கிளில் சுற்றிப்பார்த்த இடங்கள் கோண்டாவில், திருநெல்வேலி, அராலி, கல்வியங்காடு, மானிப்பாய்“விமாகி”, கட்டப்பிராய், கச்சேரி அடி, அரியாலை இத்தனை இடங்களையும் ஏதோ ஓர் உந்துததால் சென்று பார்த்தேன். இதோ இங்கு வைத்துத்தான் சுட்டார்கள், இங்கு வைத்துத்தான் ரயரில் போட்டு எரித்தார்கள் என்று எனது வயதை ஒத்த பெடியங்கள் காண்பித்துச் சொன்னார்கள். பல இடங்களிலும் இரத்தக் கறை படிந்த சதைகள் தொங்கிக் கொண்டிருந்ததையும் பார்த்தேன்.

ஓ! இதுதான் விடுதலைப் போராட்டமோ? சிங்கள இராணுவத்துக்கு எதிராகப் போராடப் போகிறோம் என்ற எனது வீட்டுக்கு அருகில் இருந்த அண்ணாக்கள் எல்லோரும் இயக்கங்களுக்குச் சென்றார்கள். நாடு கிடைத்துவிட்டது போலும், இப்போது பதவிக்காக ஆக்களை ஆக்கள் சுட்டுச் சண்டைபிடிக்கினம் போல என்று அந்த வயதில் நான் நினைத்துக் கொண்டேன்.

வான்மீன் தனது கேள்விகளைத் தொடர்ந்தார், கேள்விகளில் எந்தவித மாற்றமும் இல்லை. கொலை, கொள்ளை கற்பழிப்பு இதே கேள்விகள்தான். இறுதியில் ஆயுதங்களை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என்று கேட்டார்? எனக்கு எதைப்பற்றித் தெரியும் இவர்ளிடத்து சொல்வதற்கு? தெரியாது என்றேன். வான்மீன் என்ற புலிக்கு கோபம் வருவதற்கு முன்னர், அருகில் அடியாட்கள் போல் நின்ற இரு புலிகளுக்கும் கடுங் கோபம் வந்திருக்கும் போல, காலால் உதைத்தனர், முகத்திலும் முதுகிலும். எனது கண்கள் கட்டப்பட்டிருந்ததால் அவர்களைத் தெரியவில்லை. ஆயினும் அவர்கள் கட்டிய துணியின் அடிப்பகுதியால் இவர்கள் இருவரது கால்களையும் அவர்களது முழங்காலுக்குக் கீழ் பார்க்கக் கூடியதாக இருந்தது.

எழும்படா என்று கத்தினார் வான்மீன். கால்களில் சங்கிலி போட்டு வெல்டிங் பண்ணியிருந்ததால் உடனடியாக எழுந்திருக்க முடியவில்லை. இரண்டு கால்களையும் ஒன்றாக மடித்து முழங்காலை நிலத்தில் பதித்து கைகளை முன்புறமாக நிலத்தில் ஊன்றி எழுந்தேன். எழுந்து நிற்பதற்கு தாமதம் ஆவதைக் கண்ட அருகில் நின்றிருந்த “திசை” என்ற புலி மீண்டும் எனது பின்பகுதியில் உதைத்தார். நான் முகம் மேசைக் காலில் அடிபட நிலத்தில் விழுந்தேன். மீண்டும் முயற்சித்து எழுந்தேன்.

ஒரு கைவிலங்கை எனது இரு கைகளிலும் பூட்டினர். இரண்டு கைகளின் ஊடாக பெரிய மரக்கட்டை ஒன்றை நுழைத்தனர். அதன் ஒரு பகுதியை அந்தக் கொட்டகையின் வளையில் வைத்தனர். மறு முனையை கயிற்றினால் அருகில் நடப்பட்டிருந்த மரத்தின் மீது கயிற்றைப் போட்டு கீழே இழுக்க நான் கைவிலங்கில் தொங்கினேன். எனது கால் பெருவிரல் மட்டும் மண்ணில் தொட்டுக்கொண்டு இருந்தது. இரு கைகளும் வலியால் மரத்துப் போயின. என்னை அறியாமலேயே கண்களால் கண்ணீர் வடிந்தது.

அந்த வலியில் துடிக்கும் போது “மஞ்சு” என்ற புலியும், ‘திசை” என்ற புலியும் தடிகளால் அடித்தார்கள். பின்னர் வான்மீன் ஓர் தடித்த கட்டை ஒன்றினால் அடிக்க ஆரம்பித்தார். இவர்கள் அடித்த அடியினால் ஏற்பட்ட வலியை விட கைகளில் பூட்டப்பட்டிருந்த விலங்கினால் ஏற்பட்ட வேதனைதான் அதிகமாக இருந்தது. இதே போன்று என்னுடன் அழைத்து வரப்பட்ட ஏனையோருக்கும் இதே கொடுஞ்செயலைத்தான் செய்தனர் இந்தப் புலிகள்.

நேரம் செல்லச் செல்ல அலறல் சத்தம் அதிகரித்தது. இந்த விசாரணை புலிகள் ஒருவரை மிஞ்சி ஒருவர் சித்திரவதை செய்வதில் வல்லூநர்களாக இருநதனர். இவர்கள் இப்போது களைப்படைந்து விட்டனர். எங்களை அப்படியே கைவிலங்களில் தொங்க விட்டுவிட்டு அவர்கள் தேனீர் அருந்தச் சென்று விட்டனர். கட்டப்பட்டிருந்த கண்ணுக்கான துணி இன்னும் மேலே சென்றது.

யாரும் அருகில் இல்லை. அந்த வலியுடன் சுற்றும் முற்றும் பார்த்தேன். என்னைத் தொங்கவிடப்பட்டிருந்த கொட்டகைக்கு வெளியே பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்டிருந்தன. சில குழிகளினுள் ஏணிகள் இறக்கப்பட்டிருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கு மேற்பட்ட குழிகள் தென்பட்டன.

புலிகள் அந்தக் குழியில் இருப்பவர்களுக்கு எதையோ வாளிகளில் போட்டு கயிறு மூலம் உள்ளே இறக்குகிறார்கள். பின் வாளியை எடுத்துக்கொண்டு அடுத்த குழிகளுக்குச் செல்கிறார்கள். எனது வலியை விட இது பெரும் ஆச்சரியமாக இருந்தது. அந்தக் குழிகளுக்குள் யாரோ எம்மவர்தான் இருக்க வேண்டும். இது என்ன கொடுமை. குழிகள் வெட்டி மனிதர்களை உள்ளே இறக்கி வதை செய்கின்றனரா?

இப்போதுதான் கிற்லரின் ஆட்சியில் நடந்தவை என்று சினிமாக்களில் வரும் காட்சிகளை நான் கண்டேன். மூன்றடி நீளம் அல்லது 2.5 (இரண்டரை) அடி அகலம் கொண்டதும், ஏழு அடி நீளம் 12 அடி ஆழம் கொண்டதுமான ஓர் குழியிலிருந்த நன்கு மெலிந்த ஓர் இளைஞன் எம்மைப் போன்றே வெறும் மேலுடனும் நீல நிற அழுக்கேறிய கால்சட்டையுடனும் ஏணிவழியாக வெளியே வந்தார். அவரை மூன்று புலிகள் சூழ்ந்து கொண்டு அழைத்துவந்தனர், என்னை வைத்திருக்கும் கொட்டகைக்கு அருகிலிருந்த சிறிய கொட்டகை ஒன்றுக்கு. அவர் தனது அடையாளத்தை இழந்திருந்தார். சரியாக அடையாளம் தெரியவில்லை.

இந்த நிலையில் தேனீர் அருந்தச் சென்ற புலிகள் மீண்டும் வந்தனர். மறுபடியும் விசாரணை. அதே கேள்விகள் தான்! அவர்களுக்கு எதைப் பற்றி விசாரிப்பது என்று தெரியாது, ஏனைய தமிழ் இளைஞர்களை அழிக்க வேண்டும், எதைச் சொல்லி அழிப்பது? கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவைகளை இவர்கள் சுலபமாகச் சொல்லலாம். நீங்கள் கேட்பதும், சொல்வதும் தவறு என்று எதிர்த்தச் சொல்ல, எதிர்த்துக் கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. அப்படிக் கேட்டால் அவரும் கொல்லப்படுவார். இந்த விசாரணை அதிகாரிகள் யாருக்கும் எழுதப் படிக்கத் தெரியாது என்பதை அங்கிருந்த நாட்களில் தெரிந்து கொண்டேன். 17, 18 வயதுடையவர்களும் விசாரணை அதிகாரியாக இருந்ததைப் பார்த்தேன். இவர்களால் மனிதனின் உரிமைகள் மிதிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.

விசாரணையில் நான் மீண்டும் மீண்டும் தெரியாது, இல்லை என்ற வார்த்தைகளையே பதிலாகச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்களுக்கும் ஆத்திரம் கபாலத்தை பிளந்தது. நாங்கள் கேட்கிறோம், “சொல்கிறான் இல்லை” என்று கூறி முதுகுப் பக்கங்களில் தாக்கினர். ஏனைய இளைஞர்கள் தாக்கப்படும் போது எழுப்பும் அவலக் குரலான “அம்மா”, “ஐயோ” என்ற அவலக்குரலை நானும் எழுப்பினேன்.

இந்தக் கொடிய வலியினைத் தாங்கிக் கொள்ள இறைவனால் வழங்கப்பட்ட வார்த்தைகள்தான் “அம்மா”, “ஐயோ” என்றிருந்த இரு வார்த்தைகளும். துணுக்காய் புலிகளின் சிறையில் தினமும் இந்த வலிதாங்கும் அவலச் சொற்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. சாவுக்கு முன்னால் இந்த வலி அனைவருக்கும் ஏற்படும் என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன்.

எனது கைகளில் போடப்பட்ட விலங்கு இரு கைகளையும் பிடுங்குவது போன்று வலித்தது. அடியில் வேதனை ஒரு பக்கம் விலங்கில் தொங்கும் வலி வேறொருபக்கம். எனது கால் பெருவிரல் மட்டுமே நிலத்தில் தொட்டுக்கொண்டு இருந்தது. அவர்களில் ஒரு புலி எனது இடுப்பை தனது இரண்டு கைகளாலும் பிடித்து சுழற்றினார். எனது உடல் முறுக்கப்பட்டது. கைகள் முறுகி உடைந்துவிடும் போல் தோன்றியது. வலியினால் நான் ஓலமிடுவதை அவர்கள் ரசித்தனர். முடிந்தவரை என்னை முறுக்கிப் பிழிந்து முடியாது போனதும் விட்டுவிட்னர்.

இப்படி நான் தொங்கவிடப்பட்டு சுமார் மூன்று மணி நேரமாகிவிட்டது. காலை உணவும் இல்லை. உடல் பலவீனமடைந்ததால் நான் மயக்கமடையும் நிலையை அடைந்தேன். எனது கைகள் இரண்டும் எனது உடலை விட்டு பிரிந்து சென்று விட்டன போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அப்போது வான்மீன் சொன்னார், “டே இவன் மயங்கிற்றா நாங்கள் கஸ்ரப்பட்டுத்தான் இறக்க வேண்டி வரும், இப்பவே இறக்குங்க” என்றார். அவரது உத்தரவைத் தொடர்ந்து மறுமுனை கயிற்றைத் தளர்த்தி எனது கைவிலங்கினூடாக இடப்பட்டிருந்த அந்த மரத்தடியை கீழே இறக்கினர். எனது கைகள் செயலிழந்து இருந்தன. கையை கீழே கொண்டு வர முடியவில்லை. அப்படியே சரிந்து விழுந்தேன்.

பிற்பகல் நான்குமணிவரை மயக்கநிலையிலேயே இருந்தேன். கண்விழித்ததும், இரண்டு புலிகள் அருகில் நின்று “எழும்படா” என்றனர். கைகளை இயக்கமுடியவில்லை, முழங்கை வரை விறைத்துச் செயலிழந்து இருந்தன. எழுந்து நின்றேன். வாடா என அழைத்தனர், கால் சங்கிலியுடன் நடந்தேன். அவர்கள் அடித்த இடங்கள் அனைத்தும் கண்டலடைந்து வீங்கிப் போய் இருந்தது.

என்னை அழைத்துக் கொண்டு அருகிலிருந்த இன்னொரு திறந்த குடிலுக்கு வந்தனர். அங்கும் ஆறு முதல் ஏழு பேர்வரை இருந்தனர். கை கால்களில் சங்கிலியும் விலங்குகளும் இடப்பட்டிருந்தன. சற்றுத்தள்ளி, முன்னர் நான் பார்த்த கிடங்கில் இருந்து அழைத்துவரப்பட்டவர் இருந்தார். அருகில் பார்க்கும் போது இந்த விலங்குகளின் கொடுமை அவரது உடலில் தெரிந்தது. ஆங்காங்கே புண்கள் வந்து பாதி காய்ந்த நிலையில் இருந்தன. முகத்திலும் காய்ந்த வடுக்கள் இருந்தன. இவ்வளவு விழுப் புண்களுடன் இவர் எப்படி உயிர் வாழ்கிறார் என்று வியந்தேன்.

என்னை ஏனைய இளைஞர்களுடன் இருக்கும்படி கூட்டிவந்த புலிகள் கூறினர். நானும் அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்களில் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் அங்கத்தினர்கள் இருந்தனர். கூட்டி வந்த புலிகள் தள்ளிச் சென்றனர். சுற்றுப்புறத்தைப் பார்த்துவிட்டு அருகில் இருந்தவர்களிடம் மெதுவாகக் கதைத்தேன், மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரைக் காட்டி அவர் யார் என்று கேட்டேன்?

தொடரும்…...........
1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4



இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

Read more...

Sunday, March 22, 2009

கருணா என்கின்ற முரளிதரனுக்கும் கிழக்குமாகாண மக்களுக்கும். ( பாகம் -5) - யஹியா வாஸித் -

மட்டக்களப்பு ராஜேஸ்வரா தியேட்டருக்கு முன்னால் அல்லது காந்தி சிலைக்கு அருகில் பிற்பகல் ஐந்து மணிக்கு அண்ணாக்கள் காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன், ஈழ வேந்தன், ஐயா ராசதுரை அக்கா மங்கையர்க்கரசி என மேடை ஏறுவார்கள். எங்களுக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கும். நீங்களெல்லாம் தெகிவளை சூ (மிருகக்காட்சி சாலை ) க்கு போயிருப்பீர்கள். இஸட் டபள்ஓ சூ.இங்க மிருகங்களை கூண்டுல அடைச்சிருப்பாங்க. சிங்கத்துக்கு ஒரு கூடிருக்கும். அதற்குள்ள பாராங்கல் மாதிரி ஒன்று செய்திருப்பார்கள். இது சிமெந்தால் செய்யப்பட்டிருக்கும். இது உண்மையான பாறாங்கல் அல்ல. அது மாதிரி. ஆனால் சிங்கம் இது உண்மையான பாறாங்கல் என நினைத்து அதில் தூங்கிக் கொண்டிருக்கும்.

அது போல் புலிக்கு ஒரு குகை சிமெந்தால் செய்திருப்பார்கள். ஆனால் புலியும் இது உண்மையான குகைதான் என நினைத்துக்கொண்டு அந்த குகைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும். அந்த மாதிரி சூ தந்திரம் எங்களுக்கு தேவையில்லை. அதாவது மாதிரி சுதந்திரம் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்குத்தேவை சுதந்திரம். காசிஆனந்தன் அண்ணா மீசையை லேசா நீவி விட்டுக் கொண்டு சொல்ல மங்கையர்க்கரசி அக்கா ஒரு சிரிப்பு சிரிப்பா.

பிறகென்ன மொத்த வோட்டும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குத்தான். இப்படி உசுப்பேத்தி மொத்த தமிழனையும் கூண்டுக்குள்ள அடைத்துவிட்டு காசிஆனந்தன் அண்ணா இந்தியாவிலயும், அக்கா மூத்த மகனோட லண்டனிலயும் ரொம்ப ரொம்ப சுதந்திரமா இருக்கறாங்க. இப்ப காசி அண்ணா புதுசா அறிக்கை விடறார். நீங்க மொத்தமாக சாவுங்க. நாங்க உலகுக்கு அறிக்கை விடுறோம் என்று.

ஊரான் ஊரான் தோட்டத்துல ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக் காகாசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளக்காரன். நாங்க இங்க வியர்வைசிந்தி நாற்றுநட்டு பயிர் செய்வோம். அது விளைந்தவுடன் பிரிட்டிஷ் தொரமார், நாங்கள் சொல்லும் விலைக்குத்தான் நீங்கள் விற்க வேண்டும் என அந்தக்காலத்தில் சேதி அனுப்புவார்கள். அதுமாதிரி இருக்குது கதை. வெள்ளரிக்கா என்றதும் காரைதீவு புட்டு வெள்ளரிப் பழம்தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. இந்த வகை வெள்ளரிப்பழம் உலகில் எங்கும் கிடையாது.

இல்லையே கண்டிக்குப் போகின்ற வழியில உன்னஸ்கிரியவிலும், மொனறாகலையிலும் கிடைக்குதே என்கின்றீர்களா. நம்ம காரைதீவுப் பொருள் குருத்து.அது முத்தின களட்டித் தேங்காய். இதன் விதைகளை கனடா மற்றும் அரபு நாடுகளுக்கு அனுப்பலாம். அரேபிய மண்ணில் இது நன்கு வளரும்.

மாதிரிப் பாறாங்கல்லை விட உண்மையான பாறாங்கற்களும், மலைகளும் நிறைந்த பகுதி கிழக்குமாகாணம். குடுமிமலையில் தொடங்கி அப்படியே பாணமைக்குள்ளால வந்து உல்லையில ஒரு தயிர்வடையும் இஞ்சி பிளேன்டியும் அடித்துவிட்டு பொத்துவில் ஊடாக சியம்பலாந்தொட்ட போய், அங்கு சுடச்சுட சோளம் வாங்கி தின்றுவிட்டு அப்படியே வலதுகைப்பக்கம் பார்த்துக்கொண்டு வரும் போது மகாஓயா சந்தி வந்து முட்டும். அங்க செக்பொயின்ட்டுல இறங்கி செக் பண்ணுவதற்கிடையில் அப்படியே முன்னுக்குப் பார்தாற்போல் நற்பிட்டிமுனையை ஊடறுக்குற மாதிரி ஒரு நோட்டமிடுங்கள். இப்ப செக்பண்ணி முடித்திரிப்பீர்கள். முன்னுக்கு நிற்கின்ற மாம்பழ வியாபாரியிடம் ஒரு மாம்பழத்தை வாங்கி வெட்டி உப்பும் மிளகாய்த்துளும் போட்டு தின்று கொண்டு அப்படியே வண்டியை உன்னிச்சை நோக்கி விடுங்கள். இடையில அந்த வாய்க்கல் இந்த வாய்க்கால், துருசுகள். குட்டிக்குட்டி சிங்கள கிராமங்கள், சேத்துத் தண்ணியில சுதந்திரமாக குளிக்கும் குட்டிப் பையன்கள் என பசுமை கொஞ்சும். அவை எல்லாம் தூக்கி வீசிவிட்டு வந்த வேலையை மட்டும் கவனிக்க வேண்டும். இப்போது உன்னிச்சை சந்தியில நிக்கிறீர்கள்.
இருட்டாகிவிட்டது. வீட்டுக்கு போயிடுங்கோ. அப்புறம் வெருகல், கிண்ணியா. மூதூர் எனச் சென்று திருகோணமலையானைத் தரிசிக்கலாம்.

இப்ப வீட்டுல உட்கார்ந்த கொண்டு கற்பனைக்குதிரையைத் தட்டி விடுங்கோ. எத்தனை வானுயர்ந்த மலைகள். அவ்வளவு மலைகளையும் உடைத்து கருங்கல் எடுத்தால் முழு ஆசியாவுக்குமே கருங்கல் விற்கலாம். கிழக்கில் உருவாகப் போகும் அனைத்து கட்டிடங்களுக்கும் கருங்கல் விற்கின்ற ஐடியா இருந்தால் ஜேர்மனியில் இருக்கும் ஓட்டமாவடி நண்பர்கள் மட்டுமல்ல அனைவரும் அரச அனுமதியுடன் மலைகளை 99 வருட குத்தகைக்கு எடுக்கலாம். அது மட்டுமல்ல பல மலைகளில் கிறனேட் கற்கள் வெட்டக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. இன்று உலகிலுள்ள அனைத்து பாரிய கட்டிடங்களும் இந்த இந்திய கிறனேட் கற்களால் ஜொலிக்கின்றன. சுண்டைக்காய் கால்பணம் சுமைகூலி முக்கால் பணம் கதையெல்லாம் இங்கு கிடையாது. சுமை கூலி கால்பணம் சுண்டைக்காய் பலாப்பழம் கதைதான்.

இதை மஸ்கட் மாதிரி வெட்டுவதற்குரிய இயந்திரங்கள் இந்தியாவில் 'கும்மிடிப்பூண்டி இன்டஸ்ரியல் சோன்'இலும் . பஞ்சாப் லுதியானாவிலும் குறைந்த விலையில் பெறலாம். இல்லை இந்தியப் பொருட்கள் வலுவாக இருக்காதே என யோசிக்கின்றீர்களா ! கொழும்பு ஹில்டன் ஹோட்டல் இரண்டாம் மாடியில் பல வருடமாக சேவை செய்துகொண்டிருக்கும் 'யுரோப்பியன் சேம்பர் ஒப் கொமர்ஸ்'போய் எந்த நாட்டுல 'சீப் அண்ட் பெஸ்ட் புறடக்கட்' கிடைக்கும் என தைரியமாக கேழுங்கள். அவர்கள் பெல்ஜியத்தையும், ஸ்பெயினையும் கைகாட்டுவார்கள் என நினைக்கின்றேன். அதற்குமுதல் ஒரு விடயத்தை மறந்து விட்டேன்.

மலைகளை குத்தகைக்கு எடுக்க வேண்டுமானால் இப்போது ரொம்ப பிஸியாக இருக்கும் உங்கள் மந்திரிகள். எம்பிக்கள், உறுப்பினர்களை விரட்டிப் பிடித்து உரிமைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நேற்று நீங்கள் சியம்பலாந்தொட்ட இருந்து மகா ஓயா சந்தி வரும்போது நிறைய இடங்களில் சோளம் விற்றுக் கொண்டிருப்பதை கண்டிருப்பீர்கள். நீங்கள் பிஞ்சு சோளத்தைத்தான் வாங்கிச் சாப்பிட்டிருப்பீர்கள். முற்றிய சோளனை என்னசெய்வார்கள். அந்த முற்றிய சோளனை கொழும்பு வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றார்கள். மொறோக்கோ காறனுக்கு அது பகல் உணவு. அதற்கப்புறம் பழுதடைந்த, எதற்குமே லாயக்கில்லாத சோளனை என்ன செய்வார்கள். குருநாகலையைச் சேர்ந்தவரும் பொலன்னறுவவில் கோழித்தீன் தயாரிக்கும் பெக்டரி வைத்துள்ளவருமான ஒருவர் வாரத்துக்கொருதரம் வந்து அவைகளை பணம் கொடுத்து வாங்கிச் செல்வார்.

இந்தியாவில் மெட்ராசில் உள்ள அண்ணா நகரில் கோழித்தீன். மாட்டுத்தீவனம், ஆட்டுத் தீவனம் தயாரிக்கக் கூடிய இயந்திரங்களை தயாரிக்கும் பல நுறு கம்பனிகள் உண்டு. 20 ஆயிரம் இருந்து 40 ஆயிரம் இந்திய ரூபா பெறுமதியான சிறிய இயந்திரத்தில் இருந்து 20 லட்ச ரூபா பெறுமதியான பாரிய இயந்திரங்கள்வரை இங்கு உண்டு. பழைய சோளம், மீன் கழிவு, குறிப்பாக நெத்தலி, போன்றவைகளைக் கொண்டு இத்தீவனங்களை தயாரிக்கலாம். நமது அயல் வீட்டுக்காறர்கள் வாங்கிவரும் புண்ணாக்கு, இலுப்பை புண்ணாக்கு என்பன இவரது பெக்டரியில் தயாரிக்கப்படுபவையே. ஒரு இயந்திரத்தின் மூலமே மூன்றுவகையான தீவனங்களையும் தயாரிக்கலாம்.

நாட்டு வைத்தியத்துக்கு பெயர்போன கிராமங்கள் கிழக்கு மாகாணத்திலேயே இருக்கின்றன.
ஆனால் கடந்த கால யுத்தத்தினால் அனைத்துமே குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டன. ஆனால் இப்போதும் காலம் கடந்து விடவில்லை. குப்பைகளைக் கிளறலாம். நிறைய குண்டுமணிகள் கிடைக்கும். உகந்தை முருகன் கோயில் முதல் பாணமை குடும்பிமலை வரை மூலிகைத் காடுகள் செறிந்த பகுதி அது. கொழும்பில் இருந்து 30 மைல் தொலைவில் ஹொரணையில் இருக்கும் குட்டிக்குட்டி யூனானி. ஆயுர்வேத மருந்துக் கம்பனிக்காறர்கள் எல்லாம் ஒரு காலத்தில் குடும்பிமலைக்கு வாரத்துக்கொரு முறை வண்டில் கட்டிக் கொண்டுவந்து மூலிகை வேர்களை கொண்டு சென்றார்கள். இங்கிருந்து கொண்டு சென்ற மூலிகைகள்தான் கேகல்லவிற்கும், மாவனல்லையிற்கும் இடையில் ஆறு ஏக்கர் மூலிகைத்தோட்டமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கின்றது.

1985 இற்கு முன் குடும்பிமலை பகுதியில் காட்டுக்குள் நுழையும் போது வேப்பிலை வாசமும். கற்றாளை வாசனையும்தான் வரும். குடும்பிமலை ஒரு குட்டி ஹிமாச்சலா (இமயமலைப் பிரதேசம்) போல் இருக்கும். குட்டிக் குட்டி ஹாமுதுறுக்கள் (புத்த பிட்சுகள்). சமஸ்கிரதம், திருக்குர் ஆன், ஆரியம், சமணம், பௌத்தம் என படித்த முற்றும் துறந்த சிங்கள முனிவர்கள் என சாந்த பூமியாக இருந்தது. சின்னச் சின்ன குகைகள். மன்னர் காலத்து யானைத்தந்தங்கள், பழைய ஞானிகளின் எலும்புக் கூடுகள், மூலிகை மருந்துகள் தயாரிக்கக் கூடிய மர இயந்திரங்கள், விளாம்பழம், பாலைப் பழம், மாம்பழம், மாதுளம் பழச்சோலை என ஒரு குட்டிப் பழமுதிர்ச்சோலை. வேண்டாம் அழுகை வருகின்றது.

எங்களுக்கு பல நாள் சுத்தமான தேனில் விழாம்பழத்தை பிசைந்து தந்த குட்டிப் பிட்சு தலை வேறு முண்டம் வேறாக...வேண்டாம்...வேண்டாம். இனி நல்லதை நினைப்போம்.
இங்கு உள்ள பாரிய காடுகளில் வானுயர்ந்த எதற்குமே உதவாத மரங்கள் இருக்கின்றன. இந்தமரங்களை விட்டு விட்டு மற்ற மரங்களை எல்லாம் மர வியாபாரிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த ஒன்றுக்குமுதவாத மரத்தை அப்பகுதி மக்கள் வெட்டிவந்து விறகுக்கு பயன்படுத்துவார்கள். இதனால் இதை இவர்கள் விறகுமரம் என்பர். ஆனால் இது சாதாரண மரமல்ல.உலகிகேயே விலை மதிக்க முடியாத 'ஒஊத்'என்று அரபியர்களால் சொல்லப்படுகின்ற ஒரு வகை மூலிகை மரம்.இந்த மரம் கிட்டத்தட்ட 12அடி சுற்று வட்டம் கொண்ட 40 அல்லது 60 அடி உயரமானது. .இந்த மரத்தை வெட்டிப் பிளந்தால் (சிறு சிறு துண்டாக வெட்ட வேண்டும்)ஆங்காங்கே ஒரு அங்குல நீளம் தொடக்கம் 12 அங்குல நீளம் வரை கன்னம் கறுப்பாகத் தென்படும். அதை கொத்தி எடுக்க வேண்டும். ஒரு மரத்தில் கிட்டத்தட்ட 10 கிலோ ஒஊத் எடுக்கலாம். சவூதி அரேபியாவில் இதன் விலை கிலோ 12ஆயிரம் ரியால் முதல் 70 ஆயிரம் ரியால் (ஒரு ரியால் 25 ரூபா).இதை எரித்தால் உருகி எரியும். வாசனை பத்துப்பட்டிக்கு மணக்கும்.. அதனால் இதை விபரம் புரியாத சிங்கள் மக்கள் சாம்புறாணி மரம் (சாம்பறாணி கஸ்)என்பர். குடும்பிமலைக் காட்டுக்குள்ள அப்போ ஒரு காலத்தில ஆயுதம் பிடித்த அன்பர்களே. புறப்படுங்கள்.நமது மொத்த பொருளாதாரமும் அங்கிருக்கிறது.

குடும்பிமலையைச் சுற்றி பாரிய மூலிகைத் தோட்டங்கள் அமைக்கலாமா என சிந்திப்போம். என்ன சிந்திப்பது. இப்போதே அரசியல்,அபிவிருத்தி சம்பந்தமாக பேசுபவர்களின் கதவுகளைத் தட்டுங்கள். ஒரு வருடத்தில் 5000 பேருக்கு வேலை வழங்கக் கூடிய சக்தி உகந்தை முருகனுக்கும்,குடும்பிமலையானுக்கும் உண்டு. இல்லை நாங்கள் பிட்ஷா கடையும், சிப்சுக்கடையும் தான் திறக்கிற திட்டம் வைத்திருக்கிறோம் என்றால் இப்பொழுதே சுகசெவன, அப்பலோ ஹொஸ்பிற்றல் காறர்களுக்கு எக்ஸ்ட்றா சேவிங்குல கொத்தாக பணம் போட்டு வையுங்கோ. நம்மிடம் திருடிய மூலிகையைத்தான் அவன் சேலைன் போத்தலுக்குள்ள போட்டு குத்துவான். (அடுத்த வாரம் சந்திப்போம். தொடர்ந்து எழுதுமாறு இணையத்தளங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பியுள்ள அனைத்து உள்ளங்களுக்கும் அடியேனின் நன்றிகள். )


21-03-2009 T111

Read more...

Tuesday, March 9, 2010

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 4

அவரும் கண்விளித்து என்னைப் பார்த்தார். அவருக்கு சங்கிலி பிணைப்பு இடப்பட்டிருந்தது. கண்கள் கலங்கியபடி பரிதாபமாக என்னை நோக்கினார். உங்கள் பெயர் என்ன? என்று கேட்டேன்! நான்தான் யாழ்ப்பாணம் றொலெக்ஸ் ஹொட்டல் ஓணர் என்றார். எனக்கு றொலெக்ஸ் ஹொட்டலைத் தெரியும், அந்த றொலெக்ஸ் ஹொட்டலில் நான் உணவு அருந்தியிருக்கிறேன். நான் கதைப்பதை தள்ளி நின்ற அட்டை ஒன்று பார்த்து விட்டது. என்ன கதைச்சனி என்னிடத்துக் கேட்டது அந்த அட்டை. நான், ஒன்றுமில்லை என்று தலையாட்டினேன். முறைத்துக் கொண்டு நகர்ந்தது அந்த அட்டை!

காலைக்கடன்கள் முடித்து மீண்டும் எங்களுக்கு வரையப்பட்ட இடத்தில் அமர்ந்து அட்டைகள் இல்லாத நேரம் பார்த்து அவருடன் கதைத்தேன். காலை ஒன்பது மணிக்கெல்லாம் அங்கிருக்கும் இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து விசாரணை என்று தாக்குவதன் மூலம் ஓர் பயங்கர சூழல் ஏற்படுத்தப்படும். றொலெக்ஸ் ஓணரும் அன்று காலைதான் இப்படி ஓர் அவல ஓலத்தைக் கேட்டு மிரண்டு போய் கண்களை மூடி இறைவனை ஏதோ வேண்டிக்கொண்டிருந்தார்.

இந்த நான்கு நாட்களும் இரவு 1 மணி அளவில் எங்கள் கொட்டடிக்கு வரும் 10க்கும் மேற்பட்ட அட்டைகள் ஆயுதங்களுடன் வருவார்கள் 10முதல் 12பேர்களது இலக்கங்களைப் படிப்பார்கள். அந்த இலக்கம் உடையவர்கள் எழுந்து நின்றதும் அவர்களை கெட்டவார்த்தைகளால் பேசி இழுத்துச் செல்வார்கள். அவர்களை எங்கு கொண்டு செல்கின்றனர் என்பது எங்களுக்குத் தெரியாது. அப்படி அழைத்துச் செல்லப்படுபவர்கள் யாரும் திரும்பி வந்தது கிடையாது. புலிகளது (அட்டைகளது) நாசி முகாம்களில் கொடுமையானது துணுக்காயில் இருக்கும் இந்தச் சிறைகள்தான்.
கிழக்கு மாகாணத்திலிருந்து கூட ஏனைய இயக்கச் சகோதரர்களையும் இங்குதான் வைத்திருந்தனர். இந்தச் சிறையிலிருந்து தினமும் 10முதல் 15 பேர்வரை இந்த அட்டைகளால் கொல்லப்படுவார்கள் என்று உதயன் என்று கூட இருந்த சகோதரன் என்னிடத்துக் கூறினார். இரவு நேரத்தில் அழைத்துச் செல்லப்படுபவர்கள் இவ்விதம் கொல்லப்படுவார்கள் என்று நான் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

வழக்கம் போல் அன்று யாருடனும் கதைப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. இரண்டு வேளை உணவுடன் அவர்களது கோடு வரையப்பட்ட பெட்டிக்குள் அவர்களது உத்தரவுபடி அசையாமல் இருந்தேன். றொலெக்ஸ் ஓணரும் அப்படியே அன்று முழுவதும் இருந்தார். அவரால் இது போன்று அமர முடியவில்லை. நாங்கள் உழைக்கும் வர்க்கம், எதனையும் தாங்கிக் கொள்வோம், இவர் அப்படி வாழ்ந்திருக்க மாட்டார். அவர் படும் வேதனையைப் பார்த்து என்னால் வருந்தத்தான் முடிந்தது. எம் இனத்தின் இரத்தத்தை உறுஞ்சும் இந்த அட்டைகளுக்கு மனிதனின் வலி எப்படித் தெரியவரும்.

மறுநாள் காலைக் கடன் முடித்து அடிமேல் அடிவைத்து மீண்டும் எனது இடத்தில் அமர்ந்தேன். 10மணியளவில் தீபன் தலைமையில் அட்டைகள் கூட்டம் ஒன்று வந்தது. சிலரது இலக்கங்களை சத்தமாகப் படித்தனர். எனது இலக்கமான “K 87” ம் அதில் இருந்தது. எழுந்து சென்றேன் மொத்தம் 9 பேர், வெளியே அழைத்தனர்.

அந்த இடம் நீளமான ஓலைக்குடில். ஆறடி அகலத்தில் ஆறடி உயரத்தில் முள்ளுக் கம்பிகளால் குடிலினுள் வேலி போன்று அமைத்திருந்தனர். வரிசையாக ஒன்பது கதிரைகளும், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் டெஸ்க்கும் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு டெஸ்க்குக்கும் இடையில் உள்ள தூரம் குறைந்தது 6 அல்லது 7 அடிகள் வரும். ஒவ்வொரு கதிரையிலும் ஒரு களுதையும். மன்னிக்கவும் அட்டையும், அவருக்குத் துணையாக இரண்டு அட்டைகளும் அருகில் நின்றிருந்தனர்.

என்னை நான்காவது மேசைக்கு அழைத்தனர். விசாரித்த அட்டையின் பெயர் வான்மீன். அருகில் நின்றிருந்த இரண்டுபேரின் பெயர்கள் முறையே மஞ்சு (திருகோணமலை) கௌதமன் (திருகோணமலை). இந்த கொளதமன் பின்நாளில் யாழ்ப்பாணத்தில் வைத்து புலிகளின் ஒரு பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் இரண்டு யாழ்ப்பாணப் பெண்களை கற்பழித்தார் என்பது குற்றச்சாட்டு. இந்தக் கற்பழிப்பு பொதுமக்களுக்குத் தெரியவந்ததும் வேறு வழியின்றி தங்களை இனத்தின் காவலர்களாகக் காண்பிப்பதற்காகச் சுட்டுக்கொல்லப்பட்டார். இதே போன்ற சம்பவம் ஒன்றினால்தான் உருத்திரபுரம் வதைமுகாம் பொறுப்பாளராக இருந்த அத்தார் என்பவரும் தற்கொலை செய்தார் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

என்னை விசாரணைக்கு அழைத்த வான்மீன் என்ற அட்டை அவருக்கான கதிரையில் அமர்ந்திருந்தார். அருகில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தனர். “இடே வாடா இங்கே” என்று அழைத்த அந்தப் பெருமகன் தன் முன்னிலையில் நிலத்தில் இருக்கும் படி உத்தரவிட்டார். இவர்கள் ஆட்சியாளர்ள், நாங்கள் அடிமைகள். ஏஜமானிய தோரணையில் இந்த அட்டை செயல்பட்டார்.

அமர்ந்தேன் தரையில். பெயர், முகவரி, குடும்ப அங்கத்தவர்கள் விவரங்களை எழுதிக் கொண்டார். விசாரணையை ஆரம்பித்தார், ஆரம்பம் முதலே அவரது வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட நல்ல வார்த்தையாக வெளிவரவில்லை. பெண் உறுப்பை வேறு வார்த்தையில் நினைவுபடுத்தி “மவனே” என்பது முதற்கொண்டு அவர் கேட்கும் கேள்விகளில் அவ்வளவும் அசைவ வார்த்தைகளாக இருந்தன. இவர் மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் இருந்த பொறுப்புவாய்ந்த அட்டைகள் அனைவருமே இதே வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினர்.

வான்மீன் - நீ எத்தனை பேருக்குக் கூட்டிக்கொடுத்தாய்? கோத்தை, கொக்கா எல்லாரையும் I.P.K.F க்கு கூட்டிக் கொடுத்தனிதானே? எத்தனை பேரைக் கற்பழித்தனீ? எத்தனை பேரைக் கொலை செய்தாய்? இப்படி இவர் கேட்ட அனைத்துக் கேள்விகளுமே பெண்கள் சம்பந்தப்பட்டதாகவும், கொலை, கொள்ளை சம்பந்தப்பட்டதாகவும் இருந்தன.

பிற இயக்கங்களைப் பற்றி இந்த அட்டைகள் இவ்விதமே விசமப் பிரசாரம் செய்து ஏனையோரை துரோகி என்று நம்பும்படி செய்தனர். ஒருவரை குற்றஞ்சாட்டி விசாரிப்பது என்றால் பாதிக்கப்பட்டவர் முறையிட வேண்டும், கொள்ளை அடித்திருந்தால் அதில் குற்றம் சுமத்தப்பட்டிருக்க வேண்டும், அதில் சாட்சியங்கள் இருக்க வேண்டும், கற்பழித்திருந்தால் அதில் பாதிக்கப்பட்டவர் முறையிட்டிருக்க வேண்டும், சந்தர்ப்ப சாட்சியங்கள் இருக்க வேண்டும், களவு செய்திருந்தால் அதில் முறையீடு இருந்திருக்க வேண்டும், களவு போன பொருட்கள் மீட்கப்பட்டிருக்க வேண்டும்.

இவற்றில் எதுவுமே இல்லாமல் பிற இயக்க அங்கத்தினரைப் பிடித்து வந்து கொடுமைப்படுத்துவதற்கு இவர்கள் சொன்ன குற்றச் சாட்டு சமூக விரோதிகள் என்பதாகும். நாம் எங்கள் நாட்டை மீட்கப் போராடப்புறப்பட்டவர்கள். ஒவ்வொரு இயக்கத்திலும் இளைஞர்கள் இணைந்தது நாட்டின் மீது பற்றுக்கொண்டே அல்லாமல், சுகபோகங்களை அனுபவிக்க இயக்கத்துக்கு வரவில்லை. புலிகளது கைகள் ஓங்கியதால் இவர்கள் ஏனைய இயக்க அங்கத்தினரைப் பிடித்துவந்து படுகொலை செய்கின்றனர்.

இவர்கள் 1986ஆம் ஆண்டு ரெலோ இயக்க அங்கத்தினரை படுகொலை செய்ததை நானே நேரில் பார்த்துள்ளேன். அப்போது எனக்கு பதினாறு வயது படித்துக்கொண்டிருந்தேன். விடுதலைப் போராட்டத்தில் இப்படிக் கொடியவர்களா ஈடுபடுகின்றனர்! ரெலோ இயக்கத்தினரை சுட்டுக்கொன்றனர், வெட்டிக்கொன்றனர், ரயறை எரித்து அதனுள் அந்தச் சகோதரர்களைப் போட்டு எரித்துக் கொன்றனர், கொதிக்கும் தாருக்குள் அவர்களை உயிருடன் போட்டு அவித்துக் கொன்றனர், இவை அனைத்தையும் யாரும் கதை சொல்லி நான் கேட்கவில்லை. என் கண்களால் இவற்றைப் பார்த்தேன். எனது அன்றைய வயதின் ஆர்வக் கோளாறானது இது. இந்தச் செயல்களை நான் நாவாந்துறையிலிருந்து எனது சைக்கிளில் சுண்ணாகம் முதற்கொண்டு பாசை ஊர் வரைக்கும் ஒரே நாளில் தண்ணீர் உணவு எதுவுமின்றி சுற்றித்திரிந்து பார்த்தேன்.

துப்பாக்கிகளுடன் வாகனங்களில் பறந்து திரிந்தனர், சுட்டு வீழ்த்தப்படும் தமிழ் சகோதரர்களை தெருக்களுக்கு இழுத்து வந்து நெருப்பில் போட்டனர். இந்த அட்டைகளை அன்று பார்க்கும் போது மனித இனத்தில் இப்படியான விலங்குகளா? என்று வியந்தேன் எனது நண்பன் ஒருவன் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர், நான் சைக்கிளில் இந்தக் கொடுமைகள் எல்லாவற்றையும் பார்த்து விட்டு இரண்டு நாட்கள் கழித்து நண்பன் விஜித்தைப் பார்க்க அங்கு சென்றேன்.

அவன் என்னை அழைத்துக் கொண்டு முத்திரைச் சந்தை வழியாக செம்மணி நோக்கி சென்றான். நான் ஒரு சைக்கிளிலும் அவன் ஒரு சைக்கிளிலுமாக சென்றோம். செம்மணி சுடலையின் எதிரில் சைக்கிளை நிறுத்தி அங்கபார் என்று காட்டினான். அங்கே ஒன்றும் தெரியவில்லை. நிலத்தைப்பார் என்றான், நிலத்தைப் பார்த்தேன், நிலத்தில் அறுபதிலிருந்து எழுபது அடி நீளத்துக்கு இரண்டடி அகலத்துக்கு சாம்பலாக இருந்தது. என்ன இப்படி சாம்பலாக இருக்குதே என்றேன். பார்த்தாச்சுதானே வா சொல்கிறேன் என்றான். திரும்பியும் நாங்கள் கல்வியங்காட்டுக்கு வந்தோம். இப்போது என்றாலும் சொல்லடா என்று ஆவலுடன் அவனிடத்துக் கேட்டேன் நண்பன் ஆரம்பித்தான்:-

நேற்று மாலையில் செம்மணியை நோக்கி வாகனங்களில் புலிகள் அங்குமிங்குமாக ஓடினர். ஒரு லொறியில் விறகுகளும் ஏற்றி அதன் மேல் ரையர்களும் ஏற்றிக் கொண்டு சென்றனர். நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு செம்மணி நோக்கிச் சென்றேன். சுடலைக்கு முன்னால் நான்கு ஐந்து வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. லொறியிலிருந்து விறகுகளையும். ரையர்களையும் இறக்கினர்.

நான் சைக்கிளை பூவரசமரத்தடியில் நிறுத்திவிட்டு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டேன். இருட்டுவதற்கு ஆரம்பித்தது. அந்த நேரத்தில் மூன்று வான்கள் வந்தன. அவற்றிலிருந்து பல அண்ணன்மார்களை கண்களையும், கைகளையும் கட்டியபடி இறக்கினார்கள். அவர்கள் அனைவரும் ரெலோ இயக்க அண்ணன்மார்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அதே வான்கள் மீண்டும் திரும்பிச் சென்று 20 நிமிடங்களில் இன்னும் அதுபோல் அண்ணன்மார்களை அழைத்து வந்தனர்.

லொறியில் எடுத்துவந்த கட்டைகளை வரிசையா ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினார்கள். க கண்கள் கட்டப்பட்டிருந்த அண்ணன்மார்களை இழுத்து வந்து வரிசையாகப் படுக்க வைத்தார்கள். இப்படி நாப்பது முதல் ஐம்பது பேர்வரையிலான அண்ணன்மார்களைப் படுக்க வைத்தார்கள். சில பேருக்கு துப்பாக்கியால் முதுகில் குத்தி தள்ளிச் சென்று படுக்க வைத்தார்கள். பின்னர் அவர்கள் மேல் சில மூடைகளையும் அடுக்கினார்கள். அவை என்ன மூடைகள் என்று தெரியவில்லை. அதன் பின்னர் அந்த மூடைகளின் மேல் ரயர்களை அடுக்கினார்கள். அதனைத் தொடர்ந்து பல கான்களில் எதையோ ஊற்றினார்கள். அது மண்ணெண்னையாக இருக்க வேண்டும் அல்லது பெற்றோலாக இருக்க வேண்டும் ஏனெனில் இவர்கள் ஊற்றும் போது அந்த அண்ணன்மார்களது கால்கள் துடித்தன. வெளியே தெரிந்த கால்களில் கட்டைகளைக் கொண்டு தாக்கினார்கள் புலிகள்.

திடீரென நெருப்புச் சுவாலை அவர்கள் மீது படர்ந்தது. அவர்கள் அலறும் சத்தம் மரத்தில் இருந்த என்னை உதறிக் கீழே தள்ளுவது போன்று இருந்தது. சுற்றி நின்ற புலி அண்ணாக்கள் எல்லாரும் தள்ளி ஓடினார்கள். சிறிது நேரத்தில் அவர்களது அலறும் சத்தம் நின்றுவிட்டது. மேலும் அரைமணி நேரமளவில் புலி அண்ணாக்கள் அங்கு நின்றனர். பின்னர் அவர்கள் வாகனங்களில் ஏறி கல்வியங்காடு நோக்கிச் சென்றனர். எனக்கும் பயமாக இருந்தது. மரத்திலிருந்து இறங்கி சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடி வந்துவிட்டேன் என்று கூறி முடித்தான்.

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில் நடந்த வன்கொடுமைகள்! பாகம் 1,2,3 களை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

தொடரும்…



இது தொடர் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. T111

Read more...

Sunday, April 26, 2009

கருணா என்கின்ற முரளிதரனுக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும். ( பாகம் 10 ) - யஹியா வாஸித் -


உங்கள் மனம் கடினமான வயல் கடின உழைப்பிற்கு ஏற்ற விழைச்சல் நிச்சயம் கிடைக்கும்.


மேற்கே கொழும்பை அண்டிய பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வர்த்தகர்களும், பிரமுகர்களும், உல்லாசப் பிரயாணிகளும் வந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள், கிழக்கில் ஒருபக்கம் அடை மழை அதோடு போட்டி போட்டுக் கொண்டு வெள்ளம் அதே நேரம் அமோக நெல்விழைச்சல், தெற்கே கடல் வாழ் மீன்களும், மாணிக்க கற்களும், மத்தியில் தேயிலை, இறப்பர், கைவினைப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், வடக்கில் யுத்தம் அதனோடு போட்டி போட்டுக் கொண்டு வெங்காயம், புகையிலை செய்கை என சகல காலநிலைகளையும் தன்னகத்தே உள்ளடக்கிய ஒரு நாடு இருந்ததென்றால் அது சிறலங்கா என்ற நாட்டை தவிர வேறு எந்த நாடுமே கிடையாது. ஆனால் நாம் எல்லாவற்றையும் ரொம்ப அழகாக தொலைத்து விட்டு வாலைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.

எல்லா வளமும் நிரம்பிய நாம் எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்க்கின்றோம். பல்கலைக்
கழகத்தைவிட்டு வெளியேறிய அடுத்த நாளே வேலைதா என அரசை நெருக்க ஆரம்பித்து விடுகின்றோம். பல்கலைக்கழக கல்வி என்பது உன்னையே நீ உணர்ந்து நீயாகவே ஒரு தொழிலை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவே வழங்கப்படுகிறது.

வாழை மரத்தை எப்படி நடுவது, எத்தனை மாதங்களில் காய்க்கும், அதை எவ்வாறு பழுக்க வைப்பது, பழத்தை எவ்வாறு உரித்து தின்பது என வழிகாட்டவே அரசே தவிர மரத்தை நட்டு
பழத்தை கொண்டு வந்து உரித்து உன் வாய்க்குள் வைப்பதற்கல்ல. எனவே கொஞ்ச காலத்துக்கு அரசை மறந்துவிடுவோம். அவர்களுக்கு அடுத்துவரும் வருடங்களில் நிறைய வேலை இருக்கின்றது. அதை அவர்கள் கச்சிதமாக முடிக்கட்டும். நாம் நமது வீட்டுப்பற்றுடையவர்களாக மாறுவோம். ஓவ்வொருவரும் அவ்வாறு மாறும் போது தானாகவே நாடு உருப்படும்.

நாடு பாரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் போகப்போகின்றது. நிறைய வியாபாரங்கள் களைகட்டப் போகின்றது. உலகம் முழுதும் சகல துறைகளிலும் உள்ள நம்மவர்கள் மூட்டைகளில் கட்டிவைத்துள்ள பணங்களுடன் வந்து குவியப்போகின்றார்கள். காணி விலை,
வீட்டு விலை, பழைய இரும்பு விலைகளிலிருந்து உழுத்துப் போன கொட்டப் பாக்குவரை சந்தையை ஆக்கிரமிக்கப் போகின்றது. இப்போதே அடுத்த வருடத்தை டார்கட் பண்ணி வியாபாரத்தில் இறங்குங்கள்.

வட மாகாணம் முழுக்க கட்டுமாணப் பணிகள் தொடங்கப் போகின்றது. இரும்பு பாரிய அளவில் தேவைப்படும். இரண்டு கோடி ரூபா முதல் ஆறு கோடி ரூபாவில் இரும்புகளைத் தயாரிக்க கூடிய இரும்பு ஆலைகள் இந்தியாவில் பஞ்சாப் லூதியானா இண்டஸ்ரியல் சூனில் இருக்கின்றது. இவைகளை வாங்கிவந்து வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நிறுவினால் 75 வீதம் நெட் புறபிட் நிச்சயம். அடுத்த ஓரிரு மாதங்களில் உறவினர்களை பார்க்க வவுனியாவிற்கு புலம்பெயர் நாடுகளிலுள்ளவர்கள் வரப்போகின்றார்கள். அவர்கள் தங்குவதற்கு வாடகை வீடு, உணவு என்பன தேவைப்படப் போகின்றது. அத்துடன் தொலைபேசிவசதி,வாகன வசதி என்பவற்றுக்கெல்லாம் பாரிய தேவை ஏற்படும். இப்போதே அதற்குரிய திட்டங்களை வகுக்கலாம். இணையத்தளங்களுக்கு மெயில் எழுதிய வவுனியா, கிளிநொச்சி சகோதரர்களே இதை கொஞ்சம் சீரியசாக யோசியுங்கள். உங்கள் பொருட்களை உலகத்தரத்தில் சந்தைப்படுத்தி நீங்களும் நிமிர்ந்து நில்லுங்கள். மாற்றாந்தோட்டத்து மல்லிகைக்கு மணமில்லை எங்கள் வீட்டு வாழைப் பூவும் மணக்கும் என தெரியப்படுத்துங்கள்.

வட பகுதியில் உள்ள காய்கறி, குறிப்பாக பழவகைகளை உலர வைக்கக் கூடிய சிறிய இயந்
திரங்கள் உலகம் எங்கும் கொட்டிக் கிடக்கின்றது. புறுட் ட்ரையர் டொட் கொம் என்று இன்டர் நெட்டில் தடவினால் அனைத்தும் விரியும். 100 டொலரில் இருந்து 5000 டொலர் வரை நமது வசதிக்கேற்ப வாங்கலாம்.இனி பழவகைகளை தூக்கி வீச வேண்டிய அவசியமேயில்லை. இவ்வியந்திரத்தில் உலர வைத்து சேகரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யலாம்.

உலகமே சனத்தொகைப் பெருக்கத்தால் திக்கு முக்காடிக் கொண்டிருக்கின்றது. இதற்கு ஒத்த வகையில் விஞ்ஞானமும் வளர்வதால் சுற்றுச் சூழல் மாசடைந்து மக்கள் மத்தியில் புதுப் புது வருத்தங்களும், அசௌகரியங்களும் ஏற்பட்டுக் கொண்டே போகின்றது. இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என பல வகையான மருந்துகள், நுண்உயிர் கொல்லிகள், கிருமிநாசினிகள் என தினம் தினம் வந்து கொண்டே இருக்கின்றது. இவைகளை பணம் கொடுத்து வாங்கி நாமும் உபயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இயற்கை தந்த அவ்வளவு வளமும் நம் கண் முன்னே நமது காலடியிலேயே கொட்டிக் கிடக்க நாம் நெய் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம். இப்போது புதிதாக ஒரு புரளியை கிளப்பி விட்டுள்ளார்கள் ஓசோன் படலத்தில் ஓட்டையாம். இனி அதை சொல்லிக் கொண்டு கொஞ்சம் மருந்து வியாபாரிகள் நமது வேப்பம் பட்டையை அரைத்து, அழகாக வடிவமைத்து மேல் பாகத்தில் இனிப்புத்தடவி நமக்கே விற்கப் போகின்றார்கள்.

ஏன் அதை நாமே தயாரித்தால் என்ன. சிறிலங்காவிலேயே வேப்பமரம் அதிகமுள்ள பகுதி யாழ்ப்பாணம். இதை நாம் ரொம்ப கசப்பானது என்று சொல்லித்திரிகின்றோம். ஆனால் வைத்திய ஏடுகளில் இனிக்கும் வேம்பு என்றுதான் எழுதி ஜமாய்த்திருக்கின்றார்கள். சுற்றாடலுக்கு குளிர்ச்சியையும், சுவாசிப்பதற்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் இந்த வேப்ப மரத்தடியில் தலையிடி, தலைச்சுற்றல், உடம்பு உளைச்சல், மூச்சுத்திணறல் உள்ளவர்கள் ஒரு நாள் முழுக்க உட்கார்ந்திருந்தால் அனைத்தும் பறந்தோடி ஒரு உட்சாகமும், புத்துயிர்ப்பும் வந்து விடும்.

ஆயிரக்கணக்கான டொலர் செலவு செய்து கேரளா போய் இந்த வெள்ளையர்கள் எல்லாம் எடுக்கும் ஹேர்பள் பாத் இன் ரகசியமும் இந்த வேப்பமரம்தான். நம்மட கொஞ்சம் புதுப் பணக்காறர்களும் பேங்கொக் போய் ஹேர்பள் பாத் எடுப்பதாக கேள்வி. வேப்பம் குருத்தை அரைத்து காலையில் உண்டு பெரும் பாடகர்கள் தமது குரல் வளத்தை பேணிவருவதுடன், வேப்பம் பூவை காயவைத்து வடகம் போட்டு உணவுடன் சேர்த்தும் உண்டு தங்களுக்கு மட்டும் தான் கணீர்குரல் என பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள.

கூகை கட்டு வந்தால் கறிமஞ்சளுடன் அரைத்து வீக்கத்துக்கு இதை பூசுவார்கள் என்ற சங்கதிதான் எமக்கு தெரியும் ஆனால் மகப்பேற்றின் போது தாய்மாரை குளிப்பாட்ட வேப்ப இலைகளை நீரில் போட்டு அவித்த தண்ணீரையே முழு ஆபிரிக்காவும் உபயோகித்துக் கொண்டிருக்கின்றது.

வேப்பம் விதைகளை நன்கு சுத்திகரித்து அதிலிருந்து வேப்பெண்ணை பெறுவார்கள். சிறு குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பு,தொண்டை கட்டி வந்தால் இந்த எண்ணையை தடவுவார்கள; பூச்சி கொல்லி, பூச்சி நாசினியாகவும் இவ்வெண்ணை பயன்படுகிறது. சட்டியில் நெருப்புத் தணல்களை போட்டு எரித்து வேப்ப இலையை அல்லது விதையை அதில் தூவி நுளம்பை விரட்ட நமது தாய்மார் உபயோகித்த போது நாம் மூக்கை சுளித்தது ஞாபகத்துக்கு வரலாம். ஆனால் அப்போது நாம் அந்த புகையை சுவாசித்திருந்தால் இப்போது நமக்கு வந்திருக்கும் அரைவாசி நோய் பறந்திருக்கும்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி மட்டுமல்ல இதிலிருந்து எண்ணை எடுத்த பின் மீந்து போகும் சக்கை இலுப்பை பிண்ணாக்கு என்ற பெயரில் உரமாகவும், ஆடு வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் வேப்பம் குழையையும் கலந்து ஆட்டுக்கு கொடுத்தால் ஆட்டு தீவன செலவு குறைவதுடன் ஆடுகளை ஒரு நோய் நொடியும் அண்டவே அண்டாதும் செய்யலாம். வீட்டுத் தளபாடங்களாகவும் இன்று வேப்ப மரம் உலக வலம் வந்து கெண்டிருக்கின்றது.

அது சரி இதனால் என்ன வியாபார இலாபம் அடையலாம் என யோசிக்கின்றீர்களா.அங்குதான் நீங்கள் உங்கள் புத்தியை கொஞ்சம் தீட்ட வேண்டும். கொழும்பு கண்டி வீதியில் கொழும்பிலி
ருந்து 40 மைல் தொலைவில் சித்தாலேப மருந்து கம்பனி இருக்கின்றது. இரண்டாயிரத்துக்கு அதிகமானவர்கள் வேலை செய்கின்றார்கள். உலகம் முழுதும் இந்த சித்தாலேப ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இவர் ஒரு லேகிய வியாபாரி. திடீரென இவருக்கு ஒரு குட்டி ஐடியா வந்து இண்டஸ்ரியல் டெவலப்மென்ட் போர்ட் கதவுகளை போய் தட்டியுள்ளார். நமது நாட்டிலுள்ள மூலிகைகளை நவீனப் படுத்தி ஏற்றுமதி செய்ய முடியாதா என கேள்வி மேல் கேள்வியாக கேட்டு அதிகாரிகளை துளைத்துள்ளார். பிறகென்ன அபுல்கா காசம் அண்டா காகாசம் திறந்துடு கதவே என்ற கதையாக அனைத்துக் கதவுகளையும் திறந்து அவருக்கு ஆலோசனை செய்துள்ளனர். முதலில் நிட்டம்புவயில் ஆரம்பித்த வியாபாரம் மௌ;ள மெதுவாக சூடு பிடித்து இப்போது புலம் பெயர்நாடுகளில் உள்ள கடைகளில் ஜொலிக்கிறது.

அமெரிக்கன் எம்பசிக்கும், பிரிட்டிஷ் எம்பஸிக்கும் முன்னால் தவம் இருப்பவர்கள் இவைகளுக்கு நேர் முன்னால் இருக்கும் இண்டஸ்ரியல் டெவலப்மென்ட் போட்டுக்கும் நாலு வேப்பிலையை எடுத்துக் கொண்டு போய் பாருங்கள். விஸா றிஜக்ட் ஆனாலும் கூட வேப்பிலை மகாத்மியம் பாஸாகலாம். உலகம் முழுக்க நம்மவரின் கடைகள் வேரூன்றி இருக்கின்றது. எவ்வளவுதான் இருமலுக்கு புலம்பெயர் நாடுகளிலுள்ள கோப் சிரப்புகளைக் குடித்தாலும் பனங்கல்கண்டு சிறிதளவை எடுத்து வாய்க்குள் போட்டு உமிழ்ந்தால்தான் இருமலே பறக்கிறது. அது போல் இனி வேப்பிலையையும் ஏதோ ஒரு வடிவில் கொண்டுவருவோம்.

மாம்பழத்தை ஜாலியாக தின்றுவிட்டு அதன் கொட்டையை தூக்கி தூர வீசி விடுவோம். நாம் எப்போதும் அப்படித்தானே இருக்கின்றோம். ஒருவரிடமிருந்து உருப்படியான விடயங்களை எல்லாம் கறந்து விட்டு பிறகு மண்டையில் போட்டு எட்டப்பன் என்று போஸ்டர் ஒட்டி சங்கி
லியன் பஞ்சாயத்து வந்து உரிமையும் கோரிவிடும். ஆனால் மாங்கொட்டையிடம் அந்த பாச்சா பலிக்காது. தூர வீசினாலும் நான் இரும்பையும் கரைப்பேனாக்கும் என முரண்டு பிடித்துக் கொண்டு வந்து நிற்கும்.

ஒரு கிலோ அளவு மாங்கொட்டையை எடுத்து உள்ளே இருக்கும் பருப்பை மிககவனமாக ஜ(ச)
வ்வுகளை எல்லாம் அகற்றி எடுத்து. சிறிது தண்ணீர் விட்டு மைபோல அரைத்து ஒரு குட்டி பாத்திரத்தில் ஊற்றி. லேத் பட்டறைகளிலிருந்து எடுத்துவரப்பட்ட இரும்புத்தூள் 50 கிராமை இதனுடன் நன்கு கலக்கி. வெயிலில் வைத்து விட்டு இரண்டு மணிநேரத்தின் பின்பார்த்தால் பாத்திரத்தில் கரு நீலநிற திரவம் தெரியும்.ஆம் இப்போது எடுத்துப் பாருங்கள். இரும்பு கரைந்து விட்டது தெரியவரும். கரைந்த பின் நன்கு வடிகட்டி வரும் மீதியை மீண்டும் காய வைத்தால் கூழ் போன்ற ஒரு திரவம் வரும். அது தான் துணிகளுக்கு போடப்படும் நம்பர் ஒன் சாயமாகும். அதுமட்டுமல்ல நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் பேனா ரீபிளுக்குள் இருக்கும் மையும் இதுவே. மாங்கொட்டையிலிருந்து பெறப்படும் கொழுப்பினால் வாசனை சோப் தயாரிக்கலாம். உலகின் மிக தரமான சோப்புகள் மாங்கொட்டையினாலேயே தயாரிக்கப்படுகின்றன. மாம் பூவை காய்வதற்கு முன் சேகரித்து ஸ்டீம் டிஸ்ரிலேஷன் என்ற முறையில் பூவில் கலந்துள்ள பொருள்களை பிரித்து அதி உயர்ந்த வாசனைத்திரவியம் தயாரிக்கப்படுகின்றது.

இவ்வாறு பூவிலிருந்து எண்ணையை எடுத்த பின் மீதியாக உள்ள பொருளை மிக நன்றாக காய வைத்து அரைத்து தயாரிக்கப்படுவதுதான் வயிற்றுப் பேதியை நிறுத்துவதற்காக நாம் உபயோகிக்கும் மாத்திரைகள். பெண்களின் தலையில் இருக்கும் ஈரையும், பேனையும் ஒழிக்கும் சக்தி மாம்பூவிலிருந்து தயாரிக்கும் எண்ணைக்குத்தான் உண்டு.இன்னும் பல மகாத்மியம் இங்த மாவிலைக்கு உண்டு.

முட்டாள்கள் விமர்சிப்பார்கள்.குறை கூறுவார்கள்,மறுப்பார்கள் நீங்கள்
தொடர்ந்து செல்லுங்கள்.அவர்களுக்கு நின்று காது கொடுக்காதீர்கள்.
அவர்களுக்கு வேலையே இல்லை.உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.


( தொடருவேன்....) T111


25-04-2009


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com