Showing posts with label cont.kadurai. Show all posts
Showing posts with label cont.kadurai. Show all posts

Saturday, August 3, 2019

ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்தப்பக்கம்? வை எல் எஸ் ஹமீட் - பாகம் 1

பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் யார்? என்ற எதிர்பார்ப்பும் ஊகங்களும் நிலவும் இவ்வேளையில் “ யார் வேட்பாளர்” என்பதைத் தீர்மானிக்கும் சக்தி சிறுபான்மை என்ற முறையில் நம்மிடமில்லாதபோதும் யார் ஜனாதிபதியாக வரவேண்டும்; என்பதைத் தீர்மானிப்பதில் ஒரு பெரும் பங்குதாரராக இருக்கின்றோம்.

இந்த பெரும் பொறுப்பை ஒரு சமூகமென்ற ரீதியில் எவ்வாறு நிறைவேற்றப்போகின்றோம்? எக்காரணிகளை அடிப்படையாக வைத்து அத்தீர்மானத்தை எடுக்கப்போகின்றோம்?
அல்லது ஒவ்வொருவரும் மனம்போனபோக்கில் எந்தவித சமூகம் சார்ந்த காரணிகளும் இல்லாமல் தீர்மானம் எடுக்கப்போகின்றோமா? இவைகள் இன்று நமக்கு முன்னால் இருக்கின்ற கேள்விகளாகும்.

இன்று நமது நிலை

இன்று நமது நிலை எவ்வாறு இருக்கின்றதென்றால், ஒரு கூட்டம் ஏற்கனவே நாம் மஹிந்த தரப்பு; மஹிந்த யாரை நிறுத்தினாலும் அவருக்கு வாக்களிப்போம்; என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அந்த வேட்பாளர் இனவாதியா? அடுத்த வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது அவர் இனவாதத்தில் அவர்களைவிட குறைந்தவராக இருப்பாரா? கூடியவராக இருப்பாரா? என்பதைப்பற்றி எந்தக்கவலையுமில்லை. அடுத்த வேட்பாளர் யாரென்றும் தெரியாது. ஆனால் மஹிந்த யாரை நிறுத்தினாலும் அவருக்கு ஆதரவளிப்போம்; இது அவர்களது நிலைப்பாடு. இது அறிவுபூர்வமானதா? இவ்வாறான நிலைப்பாட்டை சமூகத்திற்கான நிலைப்பாடு எனக்கூறலாமா?

மட்டுமல்ல, ரணிலின் அரசாங்கத்தின்கீழ் முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு பாதிப்பு ஏற்படும்போதும் ரணிலை விமர்சிப்பதோடு, மஹிந்தவைத் தோற்கடித்ததுதான் முஸ்லிம்கள் அந்தப்பாதிப்பை சந்திப்பதற்கான காரணம். மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் அவ்வாறான பாதிப்புக்கள் எதுவும் முஸ்லிம்களுக்கு நிகழ்ந்திருக்காது; என்பதுபோல் அவர்கள் கருத்துக்களைப் பதிவிடுகிறார்கள்.

அவர்களது நோக்கம், முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பாவித்து ரணிலிருக்கெதிரான அதேநேரம் மஹிந்தவுக்கு ஆதரவான ஒரு மனோநிலையை முஸ்லிம்களிடம் ஏற்படுத்துவது. இது ஒரு நேர்மையான நிலைப்பாடா?

முஸ்லிம்களைப் பாதுகாக்க ரணில் அரசாங்கம் தவறுகின்றபோது ரணிலை விமர்சிப்பதில் தவறில்லை. ரணில் பிழை செய்கின்றார்; என்பதற்காக மஹிந்த எவ்வாறு சரியாவார்; என்பதற்கு அவர்களிடம் விடையில்லை. ஒரு கூட்டம் இவ்வாறு அலைகின்றபோது, அடுத்த பக்கம் என்ன நடைபெறுகிறது.

மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம்கள் அனுபவித்த கொடுமை காரணமாகத்தான் ரணில்- மைத்திரி ஆட்சியைக் கொண்டுவந்தோம். நாம் சாதித்ததென்ன? ஏன் சாதிக்க முடியவில்லை. ஆகக்குறைந்தது நமது பாதுகாப்பாவது உறுதிப்படுத்தப்பட்டதா? இனவாதம் கட்டுப்படுத்தப்பட்டதா?

இந்நிலையில் ரணிலை முஸ்லிம் தலைவர்கள் முதற்கொண்டு அனைவரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் ஐ தே க அமைக்கப்போகும் கூட்டணியில் நம்மவரும் இருப்பதாக, இவர்கள் சொல்லாவிட்டாலும் அவர்கள் சொல்கிறார்கள். இக்கூட்டணி தொடர்பான கட்சித்தலைவர் கூட்டங்களிலும் நம்மவர்கள் கலந்துகொள்கிறார்கள். என்ன அடிப்படையில் அங்கம் வகிக்கப்போகிறார்கள்? எவற்றைக் கேட்டு ஒப்பந்தம் செய்ய இருக்கிறார்கள்? ஒப்பந்தம் செய்யவேண்டியவற்றை அடையாளம் கண்டிருக்கிறார்களா? முஸ்லிம் கட்சிகள் ஒற்றுமை பட்டதாக கூறினார்கள்; கூட்டாக சமூகத்திற்காக ஒப்பந்தம் செய்வார்களா? தெரியாது.

மஹிந்த தற்போது எதிர்க்கட்சி. அவருடன் இணைவதாக இருந்தால் ஒரு ஒப்பந்தம் செய்தாக வேண்டும். இவர்களுடன் சேர்வதாக இருந்தாலும் ஓர் ஒப்பந்தம் செய்யவேண்டும்; என்பது அவசியம் என்றபோதிலும் இன்று இவர்கள்தான் ஆட்சியில் இருக்கின்றார்கள். ஏன் அவ்வொப்பந்தத்தில் உள்ளடக்கவேண்டிய பிரச்சினைகள் இதுவரை தீர்க்கப்படவில்லை.

அவ்வாறு ஆட்சியின்போது தீர்க்காதவர்கள் அடுத்தமுறை ஆட்சிக்கு வந்து தீர்ப்பார்கள்; என்பதற்கு என்ன உத்தரவாதம்? அவ்வாறு உண்மையில் தீர்க்கத்தயார் என்றால் அவர்களது ஆட்சிக்கு இன்னும் சில மாதங்கள் ஆயுள் இருக்கின்றது. ஏன் தீர்க்கமுடியாது? ஆகக்குறைந்தது ஒரு சிலவற்றையாவது தீர்த்துவிட்டு எஞ்சியவற்றை ஒப்பந்தத்தில் உள்வாங்கி அடுத்தமுறை தீர்ப்போம் என்று உத்தரவாதம் அளிக்கலாம். ஆனாலும் அவை ஏன் இப்பொழுது தீர்க்கப்படவில்லை என்பதற்கு வலுவான காரணம் கூறப்படவேண்டும்.

இவை எதுவும் செய்யாமல் ஒரு கண்துடைப்பு ஒப்பந்தத்துடன் வருவார்களா? அவ்வாறு வந்தால் தமது கட்சி சொல்கிறது; என்பதற்காக மக்களும் அதனை ஆதரிப்பார்களா? அவ்வாறாயின் மக்கள் சொந்த மூளையால் சிந்திக்க மாட்டார்கள் என்பது பொருளா? இவ்வாறான பல கேள்விகளை நோக்கி நமது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதில் சிந்திக்கவேண்டிய முக்கிய அம்சங்கள்

சிலர் அடுத்து வரப்போகும் ஜனாதிபதி எதுவித அதிகாரமுமற்றவர்; பிரதமர்தான் அதிகாரமுடையவர்; என்கிறார்கள். அது உண்மையா? அது உண்மையெனில் ஜனாதிபதித் தேர்தல் எதுவித முக்கியத்துவமுமற்றதா? அல்லது இன்னும் கணிசமான அதிகாரத்தைக்கொண்டதா?
அவ்வாறாயின் அவ்வதிகாரங்கள் என்ன?

அவ்வதிகாரங்கள் ஆட்சியில் செலுத்தக்கூடிய சாத்தியமான தாக்கங்கள் எவை? அவை சிறுபான்மை மீது எதிரொலிக்கப்போகும் சாத்தியமான தாக்கங்கள் எவை?

ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றப்பலம் இன்னுமொரு கட்சியிலும் இருந்தால் அவற்றால் ஏற்படப்போகும் விளைவுகள் எவை? அவை தற்போதும் அவ்வாறான சூழ்நிலை நிலவியதால் ஏற்பட்ட தாக்களுக்கு ஒப்பானவையாக இருக்குமா? அல்லது மாறுபட்டவையாக இருக்குமா?

ஜனாதிபதியும் பாராளுமன்றமும் ஒரே பக்கம் இருந்தால் ஆட்சியொழுங்கு எவ்வாறு இருக்கும்? சிறுபான்மை நிலை எவ்வாறு இருக்கும்?

இந்த சூழல் ஐ தே க ஜனாதிபதியும் அதே கட்சி அரசாங்கமும் இருக்கின்றபோதும் மாறாக, பொதுபெரமுன ஜனாதிபதியும் அதே கட்சி ஆட்சியும் இருக்கும்போது ஒரே விதமாக இருப்பதற்கான சாத்தியம் இருக்கின்றதா? அல்லது மாறுபட்ட விதமாக இருப்பதற்கான சாத்தியம் இருக்கின்றதா?

இந்த சாத்தியப்பாடுகள் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுகின்றவரைப் பொறுத்து மாறுபடுமா? அவ்வாறாயின் சாத்தியமான மாறுபாடுகள் எவ்வகையானதாக இருக்கலாம்? சிறுபான்மையின் பார்வையில் அவற்றை எவ்வாறு பார்க்கலாம்?

இவ்வாறு பல கேள்விகளுக்கு நாம் தெளிவாக காணுகின்ற விடைகள் நாம் ஆதரிக்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளர் யார்? என்பதைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர நமது வெற்று உணர்வுகளோ, விசுவாங்களோ தீர்மானிக்கக்கூடாது. அவ்வாறு தீர்மானிக்குமாயின் நாமாகவே நமது தலையில் நெருப்பை அள்ளிக்கொட்டியது போலாகும்.

எனவே, இவை ஒவ்வொன்றையும் அடுத்தடுத்த பாகங்களில் விரிவாக ஆராய்வோம். இன்ஷாஅல்லாஹ்.

( தொடரும்)

Read more...

Monday, July 15, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 9 - யஹியா வாஸித்

யாரிந்த முகம்மது நபி- இவர்ர தொழில் என்ன ?

எண்ட ஆண்டவன் ஒரு கில்லாடிதான். இந்த ஒலகத்துல, எங்க,எந்த மூலையில சொல்லுக் கேட்காத, ஒண்டுக்கும் அடங்காத மனுசனுகள், மனுஷ மிருகங்கள் இருக்கானுகளோ, அங்க நீ போகணும், நீ அங்க போய்
அவனுகள திருத்தோணும். This is your duity.Yes, you must go there.

எந்தவித கல்வியறிவும் இல்லாத, ஒரு சுத்த சூனியத்தை, அறிவிலிகள் வாழ்ந்த மக்காஹ் நகருக்கு அனுப்பி, ஏய் முஹம்மதே, நீ அவர்களை மனிதனாக்கோணும்.this is my order.,கட்டளை.

பிறந்த பெண்குழந்தைகளை சுடு மணலில் உயிரோடு புதைப்பது, பல தார மணம், மது, கொலை,வழிப்பறிக் கொள்ளை என வாழ்வாங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சமூகத்தை திருத்தோணும்.

மனுஷன் நிண்டு, நிமிர்ந்து, திருத்தினார். ரொம்ப சிரமங்களின் மத்தியில் திருத்தினார். மெள்ள, மெது மெதுவாக திருத்தினார். கத்தி, கோடாலி, கம்பு, தடி ஆவேசப்பேச்சு எதுவுமின்றி திருத்தினார்.

எந்த கெடுபுடியும் இல்ல. அடியுழுந்தது, விரட்டி, விரட்டி கல்லடித்தார்கள், மேஜிக் மேன், கண்கட்டி வித்தைக்காரன் என்று ஊர விட்டே தொரத்தினார்கள்.

அல்லாஹ் எண்டு ஒருத்தன் இருக்கான், அவன் கண்ணுக்கு தெரியாதவன், எனக்கு அறிவித்தல்கள் தந்து கொண்டிருக்கின்றான். அவன் சொல்றதத்தான் நான் ஒங்களுக்கு சொல்லுறன் எண்டெல்லாம், இவர் சொன்ன
கதைகளை கேட்க எந்த மக்காஹ் வாசியும் தயாராயில்லை.

ராவோட ராவா ஆள விரட்டினார்கள், முஹம்மது நபி அவரை நம்பிய சிலருடன் மதீனாவுக்கு தப்பி ஓடினார்.

அந்தக்காலத்துல ஆம்புளைகளை விட பொம்புளைகள்ற வீதாசாரம் மிக அதிகமாக இருந்தது. அதனால் விபச்சாரம் கொடி கட்டிப் பறந்தது. அவளும் மனிசிதானே, அவளுக்கும் காமம் இருக்கத்தானே செய்யும், ஆம். பாவம்.

பண முள்ளவன் வசதி உள்ளவன் ரெண்டு பொண்டாட்டிய, மூண்டு பொண்டாட்டிய வச்சி சோறு குடுக்கிற தைரியமிருந்தா வச்சிக்கோ எண்டார். ஆம் விபச்சாரம் அடியோடு குறைந்தது.

பணமுள்ளவன் வச்சிக்கிட்டான். கருணாநிதி சின்ன வீடு வச்சிக்கிட்டா அது திறமை, எம்ஜீஆர் பல வீடுகள் வச்சிருந்தா அது பசுமை, நம்ம எம்பிமார், மந்திரிமார், கொஞ்சம் சொத்துபத்து உள்ளவன், மலையகங்களில் மூணரை கோடி, நாலு கோடிகளுக்கு வீடுகள் வாங்கி பெரிய வீடுகளில், சின்ன வீடுகளை வச்சிருந்தா அது கெத்து, பாவம் இந்த சின்ன வீடுகளின் குழந்தைகள்.

நோ சின்னவீடு, நீ பெரிய வீடாகவே வச்சிக்கோ, உன்னால் முடிந்தால் வைத்துக்கொள். களவுல அங்கொண்டும், இங்கொண்டும் வச்சிக்கிட்டு, அவள்ற புள்ளைக்கும் வாப்பா இல்லாம, இவள்ற புள்ளைக்கும் வாப்பா இல்லாம, கள்ள பேர்த் செர்ட்டிபிகட் செய்துக்கிட்டு, வேருத்து விறுவிறுத்து ஒளிச்சி திரியிரத்த விட, this is my first wife, she is second one.Thats all. தைரியமாக சொல்லு என்றார்.

பக்கா ஜெனுவினிட்டி, ஆண் பிள்ளைகள் பொறந்த உடன் சுன்னத்து வை. ஆண் குறியை இழுத்துவச்சு ஒரு அங்குல அளவுக்கு வெட்டி உடு. அதை வெட்டவும் கத்தி பாவிக்கச் சொன்னார்.

அதை வெட்டாம விட்டா அவசரத்துக்கு நீ சிறுநீர் கழித்துவிட்டு ஓடும் போதும், சிறுநீர் கழித்து விட்டு கழுவாம உடும் போதும், அந்த கழிவுநீர் கிருமிகள் ஆண் குறியின் நுனியில் தங்கி நோயை ஏற்படுத்தும். அது அழுகிப்போகும்.

இது உடலுறவுக்கு பாரிய தொந்தரவைத்தரும். அப்புறம் சோனவன் மலட்டுமெசினை எங்க பெண்களுக்கு பொருத்திட்டான் எண்ட எந்த தொந்தரவும் வராது. சோனவனுகளோட அந்நிய பெண்கள் வெளியில பாயிர
பிரச்சனையும் இருக்காது, சிறிலங்காவின் ஏனைய சமூகத்தவரின் சனத்தொகை பரம்பலும் கூடும். சோனவன் ஸீரோ பெர்செண்டேஜ் ஆயிடுவான்.

காத்தான்குடி வரவேற்கின்றது, அதாஉல்லாஹ் மண்டபம், அமீரலி விளையாட்டரங்கு, ஹிஸ்புல்லாஹ் ஹோள் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. ஊரா ஊட்டு கோழியறுத்து வாப்பா பேருல கத்தம், விருந்து கொடுக்கிற சோனவனே இருக்க மாட்டான்.

இவர்கள் எல்லாம் மவுத்தாகி ஆறுக்கு, மூணரடி குழியில பொதைக்கும்போது, இதுகளையும் கட்டி அணைத்து எடுத்து செல்ல அனுமதிப்பேன் என, எந்த இடத்திலும் எண்ட அல்லாஹ் கூறவில்லை. இஸ்லாத்தில் எந்த இடத்திலும் போது சொத்துக்களில், உங்கள் தனிப்பட்ட பெயர்களைப்போட்டு தம்பட்டம் அடியுங்கோ என்று சொல்லவே இல்லை.

இவனுகள்ற சனத்தொகை கூடினதாலதானே ஊரெல்லாம் பெயர் பலகைகளும் , தெருவுக்கு நாலு பள்ளிவாசல்களும்.

இது மாதிரி ஆயிரம் வழிகளை அந்த படிக்காத மேதை சொன்னார். மேலும் ரெண்டு கைகளையும் நன்றாக உயர்த்தி கமுக்கட்டுக்குள் உள்ள மொத்த மயிரையும் வாரா வாரம் வழிச்சு உடு. அந்த கமுக்கட்டு வாசம் / நாத்தம் பறந்து போகும். அப்புறம் மனைவியை அருகில் அழை, அவள் நூறு தரம் உன்னை நெருங்குவாள், அழைப்பாள், உறங்குவாள், உணருவாள், புள்ளகள பெத்து தள்ளுவாள்.

ஏழைகளுக்கு இரங்கு, வட்டிக்கு பணம் வாங்காதே, கொள்ளை லாபம் உழைக்காதே , உழைப்பாளியின் ஊதியத்தை அவனதுவியர்வை வற்ற முதலே கொடுத்து முடி.

ஆசைப் படாதே, ஆசைப்படாதே, ஆசைப்படாதே, இந்த உலகில் ஓரு தூசும் உனக்கு சொந்தமில்ல. என்றெல்லாம் அந்த முஹம்மது நபி சொன்னது அந்த அறிவிலிகளுக்கு புடித்திருந்தது. பக்கென்று பற்றிக்கொண்டார்கள்.

ஒன்று பத்தாகி, பத்து நூறாகி, நூறு முன்னூற்றி பத்துக் கோடியான கதைய பொறவு பாப்பம். இப்ப நாங்க இந்த நாட்டுக்கு வந்த மிச்ச கதைய பாப்பம்.

இந்த முகம்மது நபி பற்றி, வழிப்போக்கர்களும், வியாபாரிகளும் நாடுநாடாக கதை சொல்ல, அவரை பார்க்கவும், தரிசிக்கவும், சண்டை புடிக்கவும் என வந்த பலர் இவரது மார்க்கத்தை, way of life ஐ பற்றி புடித்துக்கொண்டனர். அவ்வாறு சூடான், சோமாலியா, எஜிப்த், துருக்கிஇலிருந்து வந்தவர்கள் எல்லாம் இவரை இறைவனின் தூதர் என நம்பினர். இவரது மார்க்கத்தை பின்பற்றினர்.

இவர்கள் போகுமிடமெல்லாம் உண்மை, நேர்மை என்ற ஒரே பிடிவாத்தத்துடன் வாழ்ந்து வந்தனர். அவ்வாறு நாடுநாடாக, வியாபார நோக்கமாக, குறிப்பாக வாசனைத்திரவியத்துக்காக வந்தவர்கள் பலர் சிறிலங்காவில் காலி தங்கல்ல, ஹம்மான்தொட்டே பகுதிகளில்தான் இறங்கினர்.

அப்பகுதியில் உள்ள சிங்கள மக்களின், அன்பும், அரவணைப்பும், விருந்தோம்பலும் அவர்களை கவர, பலர் அங்கேயே குடியேறினர். சிங்களப் பெண்களை திருமணமும் செய்தனர்.

இப்போது சிறிலங்காவில் இருந்து மாணிக்ககல், வியாபாரத்துக்காகவும், ஏனைய வியாபாரத்துக்காகவும் தன்சானியா, மடகாஸ்கார், நைஜீரியா, போன்ற நாடுகளுக்கு சென்ற பல சோனக வியாபாரிகள், கடந்த பத்துவருடங்களாக அங்கேயே வசிக்கத்தொடங்கி விட்டனர். இது உலக நியதி.

வடகிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களின் பெயர் பதிவுகளையும், வீட்டு உறுதிகளையும் தோண்டி துருவிக்கிட்டுபோனால் அது ஒரு முதியான்சலாவிலோ, உடகெதரவிலோதான் போய் முடிகின்றது.

சோனவன் யாரும் இங்கு வானத்தில் இருந்து வந்து குதிக்கவில்லை. வேடுவர் தவிர மற்ற எல்லா மத, மார்க்கத்தவர்களும் எவ்வாறு இந்தியாவில் இருந்து குடி பெயர்ந்தார்களோ, அவ்வாறே முஸ்லிம்களும் இந்த நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஹம்மன்தொட்டை, தங்கல்லவில் வந்து இறங்கிய வர்களின் வாரிசுகள்தான் ஸ்ரீலங்கா முழுக்க வலம் வந்துள்ளார்கள்.

ஹம்மான்தொட்டை - கதிர்காமம் -கதிர்காமம் ஊடாக பிபில கொட்டபோவ கிராமத்தை அடைந்தவர்கள்தான் அதிகம். இந்த கொட்டபோவேயில் இருந்துதான் நிறையப்பேர் அம்பாறை - கொண்டைகட்டுவான் ( கொண்டைவெட்டுவான் ) ஊடாக சம்மாந்துறை -கருங்கொடித்தீவு (அக்கரைப்பற்று ), கரைவாகுப்பற்று - கல்முனைஇல் குடியேறியுள்ளனர்.

காரியப்பர் பெமிலி, கொட்டபோவையில் இருந்துவந்த கொஞ்சம் சூடான், கொஞ்சம் இந்தோனேசியா கலந்த இவர்களுக்கும், ஜாதி வெறியால் நசுக்கப்பட்டு இந்தியாவில் இருந்து வந்த தமிழர்களுக்கும் எப்போதுமே
ஒரு ஊடலும், கூடலும் நடந்து கொண்டே இருக்கும். அதுதான் இன்றும் தொடருகின்றது.

சாய்ந்தமருது, கரைவாகுப்பற்று, கல்முனைக்குடியில் வாழும் அனைவருமே சோனவன் but இவர்களுக்குள்ளும், தினமும் ஒரு முறுகல் நடந்து கொண்டே இருக்கும். அந்த முறுகல் இந்தியாவில் இருந்து கள்ளதோணி
ஏறி வரும்போது இடையில் சாதி மாறி, மதம்மாறி யதால் ஏற்பட்ட முறுகல்.

கரைவாகுப்பற்று என்கிற, கல்முனை என்கின்ற பகுதியில் உள்ள இந்த முஸ்லிம் ஆண், பெண்களையும் அவர்களது தொழில், கிராம அமைப்புகளையும் தான்சானியாவிலும், சூடானிலும் நேரடியாக காணலாம். அதே கெத்து, அதே முறுக்கு, அதே புத்திசாலித்தனம்.

பிபில கொட்டபோவையில் இருந்தவர்கள், குடியேறியவர்கள் அனைவருமே முஹம்மது நபியின் வழிகாட்டலில் வாழ்ந்த , வளர்ந்த சஹாபாக்களின் நேரடி வாரிசுகள், வழித்தோன்றல்கள், எஜிப்து, சூடான், தான்சானியா, துருக்கி நாட்டவர்கள். இவர்கள் அனைவரும் வாசனைத்திரவிய வியாபாரத்துக்காக வந்தவர்கள். இங்குள்ள சிங்கள, தமிழ் பெண்களைதிருமணம் செய்து சிறிலங்கவிலேயே வாழ்ந்தனர்.

இவர்கள் குட்டி, குட்டி ஆறுகள் , குளங்கள், பாரிய காடுகள், மரச்சோலைகள் உள்ள இடங்களில் குடியேறியதுடன் அப்பகுதிகளில் உள்ள மக்களுடன் மிக அன்பாகவும், நீண்ட நட்புடனும் வாழ்ந்துள்ளனர்.

இவர்களது வாழ்க்கைமுறை, மக்களுடன் பழகும் விதங்களைப் பார்த்து சிங்கள மன்னர்களும், பரம்பரை பணக்காரர்களும், காணிகளையும், நிலங்களையும் வழங்கி அவர்களை அங்கேயே குடியேற விட்டனர்.

ஆம், ஹம்மான்தொட்டே, கதிர்காமம், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, ஒலுவில், கல்முனை (கடத்கரைப்பள்ளி ), காத்தான்குடி தொடக்கம் கண்டி, கம்போல பேருவளை, பலாங்கொட(ஜெய்லானி ) ஊடாக மன்னார்,
ஜாவகர்சேரி (சாவகச்சேரி , வெள்ளைமணல் என ஸ்ரீலங்கா முழுக்க வாழ்ந்துள்ளனர்

இவ்வாறு வாழ்ந்தவர்கள் மரணித்தபின், அப்போது இருந்தவர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் பள்ளிவாசல்களையும், அடக்கஸ்தலங்களையும் அமைத்தனர்.

பின்னாளில் அமெரிக்க நாகரீகம், மேற்கத்தேய நாகரீகம், இஸ்ரேல் நாகரீகம், அரபு நாகரீகம், எகிப்து யுனிவெர்சிட்டி நாகரீகம், மதீனா யுனிவெர்சிட்டி நாகரீகம், இந்திய அரபு மதரசா நாகரீகம் எல்லாம் சிறிலங்காவுக்குள் புகுந்து, இப்போது தேரேர்கள் பலரது கையில் சிறிலங்காவில் உள்ள சோனக நாகரீகம் தொய்யோ தொய்யென தொய்கிறது. ஆனால் என்ன ஒரு வெட்கக்கேடு 2000 / 2500 ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த தொல்காப்பியனையும், சாக்ரட்டீசைய்யும், கான்பூசையும், திருவள்ளுவனையும், புத்தனையும், நாங்கள் படித்து புசித்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஒரு சிறு துளியாவது என் அப்பன் முஹம்மது நபியை பற்றியும், அவனது மார்க்கத்தையும் பற்றி படிக்காமல், எவ்வாறய்யா மொத்த சோனவனும் டம்மிப்பீசு என்கிறீர்கள்.

இதற்கல்லாம் முழு முதல் காரணம் எமது அரசியல்வாதிகள்தான். அவர்களது சொந்த வாக்கு வங்கிகளுக்காக எல்லாத்துக்கும் ஆமா போட்டதன் விளைவுதான் இது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் சமூகத்துக்காக வாழாமல், தமது சொந்த சுக, சங்கல்பங்களுக்காக வாழும் இவர்களை எப்படி, எந்த சோப்பு போட்டு கழுவி துடைப்பது ? Think Big.

( அடுத்தவாரம் அகில இலங்கை ஜிஹாத் அமைப்பு பற்றி விரிவாக பார்ப்போம் )
( இன்ஷாஹ் அல்லாஹ் என் இறைவன் நாடினால் தொடருவேன்..... )
yahiyawasith@ymail.com
13-7--2019

Read more...

Sunday, July 7, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 8 - யஹியா வாஸித்

எப்போது உருப்படும் இந்த தேசம், இனி என்ன செய்வதாய் உத்தேசம் 1983 ஜூலை. மொத்த ஸ்ரீலங்கா மக்களினதும் வாழ்க்கை, வாழ்வாதாரம் அனைத்தையும் வெட்டி குழிதோண்டி புதைத்த மாதம். அந்த நாள் எல்லா நாளையும்போல, பொல பொல எண்டுதான் எங்களுக்கும் விடிஞ்சது, ஆனா நேரம் போக போகத்தான் நாடி, நரம்பு, மூளை, முண்ணான் எல்லாம் செயல் இழக்க தொடங்கியது.

but we all are fully safe. வடகிழக்கு புள் சேப், அடி முழுக்க வடகெளக்குக்கு வெளியதான். இந்த போராட்டத்துக்கு எவ்வித சம்பந்தமுமில்லாத அனைத்து தமிழனும் அடி பட்டான். ஆனா அப்போது உண்மையான,
நேர்மையான ஊடக வியலாளர்களும், ஊடகங்களும் இருந்தன. இப்போது போல பச்சைப் பொய்களை மெருகேற்றும் ஊடகங்கள் இருக்கவில்லை.

மொனராகல மாவட்டத்தில் உள்ள தமிழர்கள் பலர் சகலதையும் தொலைத்துவிட்டு வந்து அக்கரைப்பற்று சந்தை சதுக்கத்தில் குவிந்தனர், உயிர் மட்டும்தான் அவர்களிடமிருந்தது, இன்னொரு தொகையினர் மாத்தளையில் இருந்து வந்து குவிந்தனர்.

மாத்தளை யில் இருந்து வந்த குருப் கொஞ்சம் ஹெல்த் தியாகவும், வெல்த்தியாகவும் இருந்தது. அந்த குரூப்பை மெதுவாக பெரிய கல்லாறுக்கு கொண்டு போய் விட்டோம். அப்போது பெரிய கல்லாற்றில் நம்முடன் பேஷ் to பேஷ் சண்டை புடிக்க கூடிய தமிழ் நண்பர்கள் இருந்தார்கள். நிறைய வாட்டி இந்த பெரிய கல்லாற்றான் , சின்ன கல்லாற்றான், ஒந்தாச் சிமடத்தான் எல்லாருடனும் பேஷ் to பேஷ் தடியடி சண்டை பட்டுள்ளோம். but ஒரு பிரச்சனை எண்டு வந்தா இந்த நன்றி உள்ள நாய்கள் வீட்டில் போய்தான், அவனுகள்ற அம்மாக்களிடம் தைரியமாக போய் ஒரு கவளம் சோறு வாங்கி தின்போம். யெஸ், வீ ஆர் ஓள்வேய்ஸ் பிறண்ட்ஸ். பட் வில்லன்களும் கூட. கல்முனையானையும், காரைதீவானையும், நட்பிட்டிமுனை யானையும்,பற்றி பின்னர் பேசுவோம்.

மொனராகல, பிபில ,பதுள இல இருந்து வந்தவங்க கொஞ்சம் வசதி கொரஞ்சவங்க. உண்ணக்கூட வசதி இன்றி வந்தனர். அப்போது அக்கரைப்பற்று சந்தை கிட்டத்தட்ட 345 கடைகளுடனும், ஆரோக்கியமான மனிதர்களுடனும் மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது. எட்டு தமிழர்களுடைய கடைகள், நாலே நாலு சிங்களவர்களுடைய கடைகள், மீதம் எல்லாமே அக்கரைப்பற்று முஸ்லிம்களுடைய கடைகள்.

தமிழண்ட ஈரக்கொலக்குள்ள, சோனிகளும், சோனவண்ட நெஞ்சுக் கூட்டுக்குள்ள தமிழனும், இந்த ரெண்டு பேருடைய உள்ளங்கைக்குள்ள ஹப்புஹாமி, உப்பாசுகாப்பு, சாரா, சரணபால என்ற நாலு சிங்கள வியாபாரிகளும் வாழ்ந்த காலமது.

நம்மளுக்கு அப்போது வயது கிட்டத்தட்ட இருபத்தி மூணு என்பதாலும், மார்க்கட்டுக்குள்ள ஒரு மதிக்கத்தக்க மொதலாளிர மகன் என்பதாலும் சனம் என்னையும் கொஞ்சம் நம்பும், நம்பினாலும் நமக்கு, குறிப்பாக எனக்கு மரியாத என்பது கொஞ்சமும் கெடையாது. எந்த நேரமும் அந்த சந்தைக்குள்ளேயே சுத்திக்கொண்டு வீணாக திரிவதாலும், படிப்பு நம்மளுக்கு சுத்த சூனியம் என்பதாலும், நம்மள சந்த மாடு, சோத்துமாடு எண்டுதான் யாவாரிகள் கூப்பிடுவாங்க.

ஆனால், இந்த நேரம் மானம் மரியாத ஒண்டும் பார்க்கேலாது. வந்திருப்பது தமிழ் அகதிகள், நானோ சோனவன்,உடனடியாக நமது தமிழ் நண்பர்கள் நாலு பேரை அழைத்து, என்னடா செய்வது என கேட்டேன். வழமை போல் தைரியமாக கையை விரித்தார்கள்.

உடனடியாக அப்புஹாமிட பெக்கேரிக்கு போய் வாப்பாட பேரை சொல்லி பாணும், பருப்பு கறியும் கொண்டு வந்து கொடுத்தேன்.

அவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போதே அப்புஹாமிட மருமகன் ஓடி வந்து, நிலைமைகளை பார்த்துவிட்டு, முப்பத்திரண்டு சோத்துப்பார்சலும், என்ட பொக்கட்டுக்குள்ள இருநூறு ரூவா காசும் பொத்தி
வச்சிப்போட்டு போனான். மல்லி மாமா கிவ்வா, கேமக்கட்ட சல்லி எப்பாலு ( தம்பி, சாப்பாட்டுக்கு சல்லி வேணாம் எண்டு மாமா சொல்ல சொன்னார் என்றார்- ஆம்.இதுதான் இந்த நாட்டின் உண்மையான சிங்களவனின் குறுக்கு வெட்டு முகம் )

மொதலாளிர மகனோட கொஞ்சம் தமிழ் அகதிகள் வந்து நிற்காங்க, என்று அவன் போய் சோனவ மொதலாளிமாருக்கிட்ட சொல்ல , ஒவ்வொருவரும் பறந்து வந்து, இரண்டு மணிநேரத்திற்கும் முப்பத்தி ஏழாயிரம்
ரூபாயை என் கையில் ஒப்படைத்தனர். இது 1983 july 26 ஆம் திகதி அக்கரைப்பற்று சந்தை சதுக்கத்தில் நடந்த ஒரு சோக வரலாறு.

ஆறு தமிழ் நண்பர்களை ( அப்புறம் இவர்கள் எனது எதிரிகளானார்கள், நான் அவர்களது துரோகி ஆனேன், ஒவ்வொரு இயக்கமும் எனக்கு மரண தண்டனை விதித்தது, எட்டப்பனையே மிஞ்சிவிடும் ஒரு பயங்கர
எட்டப்பனாக நான் என பட்டம் சூட்டப்பட்டேன், பல நூறு முறை இவர்கள் என்னை நோக்கி திருப்பிய, அந்த நீண்ட நெடிய தடிகளால் என்னை குறி பார்க்க முடியாமல் போனது ) அழைத்து, அக்கரைப்பற்றில் இருந்து இருபத்தி நாலு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள, சங்கமான்கண்டி பிள்ளையார் கோயிலடிக்கு அவர்களை கொண்டு போய் நிறுத்துமாறு அனுப்பி வைத்தேன்.

நாளை அவர்களுக்கு இருப்பதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி அனுப்பி வைத்தோம். அடுத்தநாள் இவர்களுக்காக அக்கரைப்பற்றில் உள்ள தமிழ் பகுதிகளில் பிச்சை எடுத்தோம்.

அக்கரைப்பற்றில் இருந்த வடமாகான தமிழர்களின் கடைகளானா சண்முகநாதன் ஸ்டோர்ஸ், விநாயகன் ஸ்டோர்ஸ், மணியம் ஸ்டோர்ஸ், முதலாளிகள் -சொறி, தம்பி, வீ காண்ட் ஹெல்ப் தெம் என்று சந்தோஷமாக
சொன்னார்கள்.

அக்கரைப்பற்று பெரிய ஆஸ்பத்திரியில் அப்போது பெரிய டாக்குத்தராக இருந்த ஒரு வடமாகாண டாக்டர் ஒரு ரூபா தந்தார். அதையும் அன்பாக தரவில்லை. ஒரு ரூபாவை தூக்கி என் முகத்தில் வீசி எறிந்தார்.
மாஸா அல்லாஹ், மாஸாஹ் அல்லாஹ், மாஸாஹ் அல்லாஹ்.

என்ன இனிமையிது. அகதியாக வந்திருப்பது மொனராகல தமிழன், அவர்களுக்கு உதவுங்களேன் என்று பிச்சை எடுப்பது ஒரு கேடு கேட்ட சோனகன், பலாலி ரோட், தின்னவேலி சந்தியில எக்ஸ் புளோடற வச்சி, பதினாலு ஆமிய கொன்றது( 1983-July ), நாசமாப்போன புலி, பாவம் அவனுகளுக்கு பசியாற கொடுங்க எண்டு பாணும், சாப்பாடு பார்சலும், இருநூறு ரூவா காசும் தந்தது ஒரு சிங்களவன். என்ன இது, என்ன இது, என்ன கூத்து இது. ஊழிக்கூத்தா...ஆழிக்கூத்தா ....

ஆனா நமக்குத்தான், ரோசம், மானம் மரியாத என்பது கிஞ்சித்தும் கிடையாதே, பல படிகள் ஏறினோம். எல்லாதத்தமிழனும் பணம் தந்தான், சோத்துக்கு வழியில்லாதவன் கூட கம்பு, தடி, கத்தி, சட்டி, பானை என அள்ளித்தந்தனர். இது கிழக்கு தமிழனின் பண்பாடு.

அக்கரைப்பற்று, கோளாவிலை சேர்ந்த சீனித்தம்பி மாஸ்டரின் வீட்டுக்கு அருகில் வந்ததும், நமது தமிழ் நண்பர்கள் எல்லாம் ஜகா வாங்கிட்டானுகள்.

இது கொஞ்சம் வெசர் புடிச்ச கேஷ், இவர் ஒரு மேத்ஸ் மாஸ்டர், பணக்காரர், அக்கரைப்பற்றில் அப்போது இருந்த தமிழ் பணக்காரர்களில் ஒருவர், காணி, வயல், மாடு என ஒரு இறுமாப்பு புடிச்ச தமிழன். காசு விடயத்தில் ரொம்ப கறாரானவர், சோனவனுகளை இந்தாள்ற கண்ணுலேயே காட்ட முடியாது. மோட்ட சைக்கிளை கொண்டுவந்து, எங்கிட கடையடிய நிற்பாட்டி, டேய் சீனி தா, தேயில தா என இறங்காமல் நிண்டு கொண்டு சாமான் கேப்பார். எண்ட வாப்பாவ எல்லாம் "டேய் வெங்காயம் றாத்தல் என்ன வெல" என டேய் போட்டே கேப்பார். தில்லு. தில்லு. தில்லு, அதோடு சேர்த்து கம்பீரம்.

சீனித்தம்பி மாஸ்டர் எண்டா பள்ளிக்கூடமே நடுங்கும். டேய் காக்கா இவன உட்டுப்போட்டு மத்த எடங்களுக்கு போவம்டா, அடிச்சிப்போட்டுத்தான் வெளக்கம் கேப்பான்டா, வாடா எண்டார்கள்.

நம்மளுக்கிட்ட ஒரு கேடு கேட்ட புத்தி இருக்கு. அதான் சோனிப்புத்தி. நடக்காது என ஆராவது சொன்னா, அத நடத்தி காட்டுற. அதுதான். மயிர கட்டி மலைய இழுக்கிற.

சீனித்தம்பி மாஸ்டர்ர ஊட்டுகதவ தட்டினேன். டீ கிளாசுடன் வந்து கதவை திறந்தார். அதே டேய் ? விடயங்களை அக்குவேறு ஆணிவேறாக வெளங்க படுத்தினேன். நாங்க ஆறு பேர் வந்திருக்கம்.

டேய் நீ எப்படிடா தமிழர்களுக்காக பிச்சை எடுக்கிறாய் ? சேர் எல்லாரும் மனிசன்தானே சேர். பாவம் சேர், சீனித்தம்பி மாஸ்டர் எழும்பி என்னை கட்டி பிடித்தார். அழுதார். ஓரு செக்கன். அதை ஒரு செக்கன் என்று கூட சொல்ல முடியாது, அதையும் விட குறைவு.

அவரது வீட்டு சாமி அறைக்குள் என்னை அழைத்து சென்று, இரண்டு லைசென் துப்பாக்கிகளையும், ஆறு பெட்டி தோட்டாக்களையும் ( SG 12 AND SG 16 ) காட்டி இது உனக்குத்தான், any time you can come and collect it.

காசாக எட்டாயிரம் ரூபா எண்ணி தந்தார், நாளைக்கு நாலு றக்டருல கிடுகும், கம்பும் சங்கமங்கண்டிக்கு அனுப்புறன், இனி என்ன வேணுமெண்டாலும் என்னை கேளு, இந்த முன்னுக்கு நிற்கிற மோட்ட சைக்கிள
எடுத்துக்கு போங்க, வேல முடிஞ்சதும் கொண்டு வந்து தாங்க என்றான் அந்த அக்கரைப்பற்று தமிழன். கோளாவில் தமிழன், கிழக்கு தமிழன்.

காலங்கள் கடக்க, கன்னி கழியாத விடலைகளுல்லாம் சுடலைப் பயித்தியம் பிடித்து, அந்த மகானின் கதவுகளை எகத்தாளத்துடன் தட்டி பணம் கேட்டுள்ளனர். Go back... Go back.... இதுக்கெல்லாம் பயந்தவன் இல்ல இந்த சீனித்தம்பி என்று சொல்லி இருக்கின்றான் எனது இன்னொரு அப்பன். அவன் நம்ம ஜா(சா)தி.

ஆம். அவரை, எனது இன்னொரு அப்பாவை, நண்பனை, ரத்தத்தை பல துண்டுகளாக அறுத்து சாக்கில் கட்டி, இந்த பயித்தியம் புடித்த சூரர்கள், சூரசம்ஹாரம் ஆடி உள்ளனர்.

ஆரோக்கியமான கிழக்கு, அப்பழுக்கற்ற தமிழ், முஸ்லிம் உறவு, ஏதோ ஒரு சகதிக்குள் சிக்கிக்கொண்டு, அது பணமா, பதவியா, பகட்டா, படா டோபமா, பச்சை புள்ளைக்கும் பாவம் நினைக்காத எங்கள் உறவுகள்,, ஒரே கூட்டுக்குள் வெள்ளைகருவும், மஞ்சள் கருவுமாக வாழ்ந்த எங்கள் நண்பர்கள்,

இரவு ரெண்டரை மணிவரை அவர்கள் ஊட்டு குசினிக்குள் நாங்களும், அதிகாலை மூணரை மணிவரை எங்க ஊட்டு குசினிக்குள் அவனுகளும் குசு குசு என கதைத்துக் கொண்டு திரிந்த அந்த ஆரோக்கியமான காலம் இனி நமது அடுத்த சந்ததிக்கு கிடைக்குமா ? இந்த வடகிழக்கு அரசியல் பம்மாத்துகள் கிடைக்க விடுவார்களா ?

ஆம். துப்பரவு செய்யப் பட வேண்டும். மிக மிக நிதானமாக, ஆரோக்கியமான கரங்களால் நமது வீடுகளும், வீதிகளும் துப்பரவு செய்யப்பட வேண்டும். yes. clean wash.

Read more...

Sunday, June 30, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 7 - யஹியா வாஸித்.

இப்ப ஒரு நாலு வருசத்துக்கு முதல் வாழைச்சேனைக்கு மீன் யாவாரம் பண்ண போயிருந்தன், அங்க ஒரு ரெண்டுமாதம் தங்க வேண்டி இருந்தது. காலி, மாத்தற, கிரிந்த, வல்வெட்டித்துற ஊர்காவல்துற, மன்னார் மீன் யாவாரிகளுடனல்லாம் பட்டயடிச்சிருக்கம். ஆனா இந்த வாழைச்சேனையானுகள் மாதிரி மீன் யாவாரத்துல பக்கா ஜென்டில்மனுகள நான் எங்கேயும் பார்க்கல. மீனுக்கு ஒரு சங்கம். சங்கத்துக்கு பல லொறிகளும் போட்டுகளும், வாவ். பட்டய கெளப்புறானுகள்.

அவங்க போர்ர சேட்டுகளையும், அந்த பிராண்டுகளையும் பார்த்தால் நமது அய்ரோப்பிய சென் ஜோன்ஸ், சென் லூயிஸ் சேட்டுக்கள் எல்லாம் ஜகா வாங்கும்.

இந்த ஊரகாவல்தொறையிலேயும், வேலனையிலையும் நம்மளுக்கு தெரிஞ்ச கொஞ்சம் சம்மாட்டிமார் இருக்காங்க, இவர்கள வாழைச்சேனை காக்காமாருக்கிட்ட கொண்டுவந்து ஒரு குட்டி கிளாசெடுக்கணும்.

இந்த வாழைச்சேனையான் ஒரு பிளேன் டீ குடிக்கவேண்டுமென்டாலும், டீ குடிக்க வேண்டுமென்டாலும், ஒரு பெட்டீஸ் திங்க வேண்டுமென்டாலும் வாழைச்சேனையில் இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரத்தில உள்ள, கொழும்பு ரோட்டில் அமைந்துள்ள நாவலடி சந்திக்கு மோட்ட சைக்கிளை எடுத்துக்கிட்டு பறப்பாங்க அந்த அளவுக்கு, காரம், மணம், குணம் நிறைந்த பொருட்கள் நாவலடி சந்தியில சுவைக்கலாம்.

நாமும் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு பைக்கில் தொற்றிக்கொண்டு பறப்போம். அது ஒரு தனி ஒலகம். வாய்க்கால் தண்ணில கிளாஸ் கழுவி, வேருவ வடிய வடிய ரொட்டிவீசி, பழைய பஞ்சாய்ப்போன ரப்பர் சீட்டுல கொசு மொய்க்க, மொய்க்க அவர் அத கொண்டு வந்து வைக்க, நாங்க மெய் மறந்து அத திங்க ...அது ஒரு தனி ஒலகம்.

ஆனா அந்த நாட்களில், அந்த நாவலடி சந்தியில் ஒரு அதிசயம் நடந்து கொண்டிருந்தது. அந்த காஞ்சி போன சந்தியடியில் நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் இளைஞர்களும், வயோதிபர்களும், அந்த குட்டி குட்டி கடைகளுக்கு பின்னாலும், முன்னாலும், மரங்களுக்கடியிலும் நின்று சில வரைபடங்களைவைத்துக்கொண்டு குசு குசு என கதைத்துக்கொண்டிருந்தார்கள். நம்ம தொழிலே ஒட்டு கேட்கிறதும், காட்டி கொடுக்கிறதும்தானே..... காது கொடுத்தோம்.

ஆம், அனைவரும் காணி புரோக்கர்ஸ். ஹிஸ்புல்லாஹ் வுக்காக காணி தேடும் காத்தான்குடி மக்களும், அவருக்கு காணி விற்க வந்த புரோக்கர்களும். இதில் நிறைய பேர் தமிழ் இளைஞர்கள், இன்னும் சிலர் முன்னாள்
போராளிகள்.

ஒவ்வொருவரின் கைகளிலும் நூற்றுக்கணக்கான உறுதிகள், ஒப்பினைகள்.

ஒருபக்கம் வாகனேரி, புனானை, ரெதிதென்ன, வெலிகந்த, செவனப்பிட்டி, மன்னம்பிட்டி, கதுருவல மறுபக்கம் காசன்கேணி, பணிச்சம்கேணி,வாகர, பால்சேன, வெருகல், அலியுளுவ, மூதூர் என மொத்த காணி உறுதிகளும் நாவலடி சந்தியில் துள்ளி விளையாடியது.

மட்டக்களப்புகச்சேரியடியில் காணி இலக்கம் பார்க்கிறதுக்கு என்றே ஒரு கூட்டம். கச்சேரிக்குள்ள காணி உறுதி செக் பண்ணி மோட்ட பைசிக்கிள் தொடக்கம் கார், ஆட்டோ வாங்கி முன்னேறியவர்கள் பல பேர் உண்டு.

தமிழன், சோனவன் எந்த பாகு பாடும் கிடையாது, காத்தான்குடியில ஹிஸ்புல்லாஹ் ஹாஜியார்ற ஒபிசடியில, நூறு மோட்ட ச் சைக்கிள், இருநூறு புஸ்சைக்கிள், ஒபிசுக்குள்ள நம்ம முன்னாள் தோழர்கள் ஈச்சம் பழம் திண்டுக்கிட்டு, காஹ்வா( எல்லாமே அரபி ஸ்டைல் - அற்பனுக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது இதுதானோ ) குடித்துக்கொண்டு, ஹிஸ்புல்லாஹ்ட கோளையனுகளுக்கிட்ட கோடிகளில் வியாபாரம் பேசிக்கொண்டிருந்தனர்.

அரபிகள் சிலர் ஹெலிகொப்டர்களில், பலர் பஜிரோக்களில் வந்தார்கள், போனார்கள், ஹிஸ்புல்லாஹ் காலையில் கொழும்பில் இருப்பார், பகல் சாப்பாட்டுக்கு சவுதியில் இருப்பார். அரபிகள் வரும்போது கொண்டு
வரும் ஈச்சம் பழ பொட்டியை தூக்க எண்டே, எயாபோட்டில் இருந்து காத்தான்குடி வரை பஜிரோ ஒண்டு வேலை செய்யும். நாமளும் ரெண்டுதரம் அந்த ஈச்சம்பழ பெட்டிகளுடன் பயணம் செய்திருக்கின்றோம்.

முஸ்லிம் காங்கிரஸ் என்ற விருட்ச்சத்தை உருவாக்க, காத்தான் குடி மெத்தை பள்ளிவாசலடியில் அகமத் லெப்பை, அவரது தம்பி ஜவாத், ஏராவூர், ஓட்டமாவடி ஜீனியஸ்கள் மற்றும் அக்கரைப்பற்று குட்டி குட்டி புள்ளைகள் என ஒரு குழு பிள்ளையார் சுழி போடும்போது, பழைய புஸ் பைக்கில் வந்து தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்த எங்கள் தானைத்தலைவர் ஹிஸ்புல்லாஹ் வையும் இன்றைய அல்லாஹ்ட புள்ள என
சொல்லிக்கொள்ளும் ஹிஸ்புல்லாஹ்வையும் நினைத்துப் பார்க்கின்றேன்.

இந்த கால கட்டங்களில் பழைய ஜி எஸ் மாருக்குத்தான்மார்க்கட். காணி இருக்கின்ற ஏரியாவ சொன்னாலே போதும், அது ரிசேர் வெர்சனா அல்லது ஒரிஜினலா என செவிட்டில் அடிச்சதுபோல் சொல்வார்கள். எல்லாருமே தமிழ் ஜி எஸ் மார்தான். ஒரு தகவலுக்கு ஐநூரில் இருந்து ரெண்டாயிரம் கைமாறும்.

பாவம் வியாளேந்திரனும், மஹா கனம் பொருந்திய அத்துரலிய ரத்னதேரரும். இந்த புதையலை தோண்ட புறப்பட்டால் நிறைய பூதங்கள் கெளம்பும்.. அந்த பூதங்கள் சுப்பர்ர அல்லது சுப்புரமணிங்களிண்ட
கொல்லைகளில் இருந்தே கெளம்பும் என்பதை தாழ்மையுடன் அறிவித்துக் கொள்கின்றோம்.

போன கெளம பணிச்சம்கேணி தமிழ் புரோக்கர் ஒருவருக்கு கோள் எடுத்தேன், தம்பி ஊர விட்டே எஸ்கேப். இந்த தம்பி ஹிஸ்புல்லஹ்வுக்கு ரிசெர்வசன் காணிகளை வாங்கி கொடுத்த ஒரு தும்பி.

நாலரை வருட முயற்சி, நாலாயிரத்து ஐநூறு கோடி முதலீடு, அறுபது ஏக்கரில் பில்டிங், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இரவுபகலாக வேலை, பல நூறு தஸ்தாவேஜுகள் பரிமாற்றம், முதலில் கம்பனி ரெஜீஸ்ரேசன் அப்புறம், குறுக்கு மூளை வேலை செய்துள்ளது, வாப்பாடையும், மகன்டையும் பேருல சரிட்டி ரெஜீஸ் ரேசன் அப்புறம் வங்கிகளில் சட்டப்படியான கணக்குகள்.

அதற்கப்புறம் மகாவலி அபிவிருத்தி நிறுவனத்திடம் சென்று குறைந்த வாடகையில் குத்தகைக்கு காணி, பீ ஓ ஐ ( Bord of Investment )இடம் சென்று ஒப்புதல் என ஒரு ஜீவ மரணப் போராட்டம் நடாத்திய இந்த அதி
புத்திசாலி, குட்டி குட்டி அரசியல்வாதிகளிடம் மாட்டிக்கிட்டு முழி, முழி என முளிக்கிரத பார்த்தா வெட்கமாக இருக்கின்றது.

என்னத்துக்குடா கத்தி வச்சிக்கு இருந்தயள் என்று கேட்டதற்கு..... தற்பாதுகாப்புக்கு .... தற்பாதுகாப்புக்கு ... தற்பாதுகாப்புக்கு என அடித்து சொல்லி மொத்த சோனகனின் மானங்களை காப்பாற்ற தெரியாத,
வங்குரோத்துகளுக்கெல்லாம்.....ச்சீ ...
ஒருவர் ஆளுனராம்...
ஒருவர் தண்ணிக்கு பொறுப்பாம் ...
ஒருவர் வர்த்தகத்துக்கு பொறுப்பாம் ......
ஒருவர் பெட்ரோலுக்கு பொறுப்பாம்...
இவர்கள் எல்லாம் சேர்ந்து மொத்த சோனவனுகளுக்கும்பொறுப்பாம்...

இந்த மொத்த சோனவ, தமிழ் எம்பி, எம்பிமாருகளும் ஸ்ரீலங்கா சிங்கள அரசியல் வாதிகளிடம் பாடம் படிக்கவேண்டும். அவனுகலும் கள வெடுப்பானுகள், ஒரு துரும்பும் சிறிலங்காவில் இன்வெஸ்ட் பண்ணப்
படமாட்டாது. அனைத்தும் இத்தாலி ரோம், மிலான், அவுஸ்திரேலியா, விக்டோரியா, இங்கிலாந்து, மார்பள் ஆர்ச் , அமெரிக்கா நியூ யார்க் போன்ற இடங்களில் மகள், மகன்களின் பேரில் பக்காவாக முதலிடப்படும்.

ஒரு காக்கா குருவிக்கும் தெரியாது. அழகாக முதலிட்டுப்போட்டு, மதுர மீனாட்சிய போய் ஒரு கும்பிடு, திருப்பதி வெங்கடாஜல பதிய ஒரு கும்பிடு.

யாராவது ஒரு சிங்கள எம்பி அல்லது மந்திரி கடவுளே, எங்களையும் எங்க நாட்டு மக்களையும் காப்பாத்து என ஏதாவது பன்சலவுக்கு போய் அழுது வடிந்ததை கண்டிருக்கின்றோமா அல்லது பார்த்திருக்கின்றோமா.
நெவெர். they are always brilliant.

நேரடியாக கண்டி தலதா மாளிகை போய் மகா சங்கத்தினரை சந்தித்து, மஹிந்தவிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று இவர்களும், ரணிலிடமிருந்து எங்களை காப்பாற்றுங்களேன் என்று அவர்களும் அழுவதைத்தான் இந்த உலகமே பார்த்திருக்கின்றது.

கபிலவஸ்துவுக்கு இந்த மொத்த சிங்கள மக்களும் போவார்கள் ஆனால் எந்த சிங்கள எம்பியும் போவது கிடையாது. கபிலவஸ்து போனால் இவர்களது கோவணமும் பறி போய்விடும் என்று ஒரு பழைய கதை உண்டு. ஆம் சகலவற்றையும் துறந்தவந்தானே நாம் விரும்பும் அந்த புத்த பகவான்.

மீனாட்சியிடம் போய் செய்த பாவத்தை மன்னித்து விடு தாயே என அழுதுவிட்டு, நேரடியாக வெங்கடாசலபதியிடம் போய்மண்டியிடுவார்கள்.

இந்தாள்தான் பணக்கார சாமி, திருப்பத்தையும் கொடுப்பார் அடுத்த ரவுண்டு களவெடுக்க ஐடியாவும் கொடுப்பார்.

நம்மளுக்கு இந்தாளையும் புடிக்காது, மீனாட்சியையும் புடிக்காது, மீனாட்சிக்கு பின்னால் உள்ள அறுபத்தி நாலு நாயன்மாரில், அறுபத்தி மூணாவது நாயனாரை மட்டுமே புடிக்கும். அவள்தானே நம்மாள், சோனகத்தி. முஸ்லிம்.

பாவம் ஹிஸ்புல்லாஹ் அறுபத்தி அன்ஜேக்கருல கட்டிடத்தைகட்டிப்போட்டு, இஞ்ச முழி பிதுங்கி இருக்க, ரிதி தென்னயில இருந்து கூப்பிடு தூரத்தில, நூத்தி அம்பது ஏக்கருல பாரிய கோழி பார்ம கட்டி, தினமும் ஒன்ணர லட்சம் ஒமேகா ( எகோ ப்ரீ - நோ கொலோஸ்ற்றோல்) முட்டைகளை, வத்தளையில் உள்ள தனது சொந்த அலுவலகத்தின் ஊடாக வித்துக் கொண்டிருக்கும் அமீரலி காக்காவுலயும் ஒரு கண்
வச்சிகொங்கடாபுள்ளகாள்.

அப்புறம் சோனவன் அதையும் கோமணத்துக்குள்ள ஒளிச்சிட்டான் என சண்டைக்கு வராம. அமீரலிக்கு நூற்றி அம்பது ஏக்கர், பைலா( முன்னாள் முஸ்லிம் காங்கிரஸ் எம்பி )வுக்கு நூற்றி அம்பது ஏக்கர் காணி
with bigest poultry farm.

எல்லாமே நாரே தக்பீர் அல்லாஹ் அக்பர் என்ற கோஷத்துக்கு கிடைத்த கைம்மாறு.

வாழைச்சேனை பேப்பர் பாக்டரியும் பல சடங்குகளுக்கு பிறகுதான் கை மாறியதாம் என்ற ஒரு கதையும் உண்டு. அதற்குரிய கிம்பளம் செங்கலடி -பதுளை ரோட்டில் கிரசெர் மெசின் போட்டு கருங்கல் - கிரனைட் கல் பக்டரிகளாக உருவாகுவதாகவும் செய்திகள் பரவுகின்றது.

இது இப்படியெண்டால் பாவங்களை மொத்தமாக செய்துவிட்டு, உம்ராவுக்கு போய் அல்லாஹ்வையும் ஏமாற்றுகின்ற அதிபுத்திசாலிகளையும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் கண்டுகொண்டுதான் இருக்கின்றார்கள்.

இந்த பரந்த உலகம் பல அதிசயங்களையும் ஆச்செரியங்களையும் கண்டுள்ளது, சானக்கியர்களையும் தரிசித்துள்ளது. இந்தமொத்தத்தையும் முழுங்கி, மென்று, இதொரு தூசிடா எங்களுக்கு எண்டு ஆப்படித்த மஹிந்த அண்ட் கோவுக்கே டுமீல் விட்டாங்க இந்த ரிசாட் வோசஸ் ரவுப் என்கின்ற முன்னாள் எதிரிகள். உம்ராவுக்கு கம்பெனிகள் சகிதமாக போய் எங்க அப்பனுகள் குதிருக்குள் இல்லை என்றார்கள்.

மஹிந்த பொறுத்தார், கோட்டாபாயவும் பொறுத்தார், ஆனால் நம்ம அல்லாஹ் பொறுக்கல்ல. காத்தான்குடியில இருந்து இன்னொரு சைத்தானை கொழும்புக்கு அனுப்பி இந்த மொத்த சைத்தானுகளுக்கும் ஆப்பு அடித்தார்.

wash..wash.....clean wash..... நல்ல தும்புக்கட்டு அல்லது ஈக்கில் கட்டு ( விளக்குமாறு ) கொண்டு, சோனக அரசியல் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

( இன்ஷாஹ் அல்லாஹ் - அல்லாஹ் நாடினால் தொடருவேன் ..........)
yahiyawasith@ymail.com
30-6--2019

Read more...

Wednesday, June 26, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 6 - யஹியா வாஸித்.

நோகாம நொங்குதின்கிற கத இது.

யார் என்ன சென்னாலும் சிறிலங்காவுல இருக்கிற, வாழுற சோனவனுகளுக்கிட்ட ஒரு கெட்ட பழக்கமிருக்கின்றது. இந்த மொத்த காக்காமாரும், ஒரு குட்டி மயிர கட்டி, பாரிய மலகள இழுப்பானுகள். கம்மோ கோ.
கண்ண பொத்திக்கிட்டு தனி ஆளா நிண்டு இழுப்பானுகள்.

தைரியமா இழுப்பானுகள், தமிழ் மக்கள் எல்லாம் இந்த கூத்த ஓரக்கண்ணால, தூரநிண்டு பாப்பாங்க, சிங்கள நண்பர்களோ, ஆச்செரியமா எட்டி நிண்டு பாப்பாங்க. கப்சிப். இவன் இழுப்பான்.

இந்த மடையன் வெறித்தனமா இழுப்பான், ஒரு நேக்கா இழுப்பான். மயிரை கட்டி பெரு மலைகளையே இழுப்பான். மயிருக்கும் நோகாம , மலைக்கும் நோகாம. ஒரு நேக்கா, கொஞ்சம் வாகாக நிண்டு இழுப்பானுகள்.

நேரடியா சொல்றண்டா, பெற்றோளுக்குள்ளால எரியிற லாம்ப கொண்டுபோற வெளையாட்டு இது. லாம் பெண்ணெக்குள்ளால, லாம்ப கொண்டு போறதுக்கே நம்மாள் தயங்குவான், நூறுதரம் யோசிப்பான், படிச்சவன் நாலு பேருக்கிட்ட அய்டியா கேப்பான். பயந்துடுவான். ஐய்யன்னா, நாவவன்னாவுக்கெல்லாம் போவான்.

ஆனா நம்மாள் ஆர்ர அய்டியாவும் கேக்க, கீக்க மாட்டான், பொண்டாட்டி, புள்ள குட்டிக்கிட்டையும் சொல்ல மாட்டான். தனியாளா நிண்டு, நிதானமா, கொஞ்சம் சாக்கிரதையா இழுப்பான். இவன் முருகண்ட பரம்பர, புள்ளயார் மாதிரி டைம் வேஸ்ட் பண்ணமாட்டான்.

சீவன் போகும், கண் ரெண்டும் பிதுங்கும், தொண்டக்குழி வத்தும், நடந்து, நடந்து, கந்தோர் கந்தோறா ஓடி, ஓடி நாடி நரம்பெல்லாம் பதறும், அடுத்த ஊட்டுக்கரன், சொந்தக்காரன், மச்சான், மாமா, நண்பன், நண்பன்ட நண்பன், எல்லாருக்கிட்டயும் மூணு மாதத்துல, ஆறுமாதத்துல திருப்பி தாரன் எண்டு, வாங்கிய கடன்கள் முன்னுக்கு வந்து நிண்டு பல்லிளிக்கும், பொண்டாட்டி ஊட்ட உட்டு தொரத்துவாள், ஓளைக்க தெரியாத நாயே எண்டும் திட்டுவாள் , ஈரக்கொல திமிரும், அல்லாஹ், அல்லாஹ், அல்லாஹ், யா அல்லாஹ், வெல்லோனும், இந்த கேம வெல்லோனும் எண்டு ஓடுவான், மேலிடம், கீழிடம், டையினம், வல்லினம், மெல்லினம் எல்லாத்தையும், ஜாலியா ரூவாவ வீசி மடக்குவான், புரியாணி, வட்டிலாப்பமெல்லாம், ஏலக்கா கம கமக்க, அதிகாரிகளின் குசினி வர பறக்கும், வேணுமெண்டா கால்ல உளுவான், சாஷ்டாங்கமா, நெடுஞ்சான் கெடையா உளுவான். வெட்கமே படமாட்டான்.

ஹ்ம்ம்ம் . சாதிச்சுடுவான், நம்மாள் சாதிச்சுடுவான். அல்ஹம்துலில்லாஹ் சாதிச்சுடுவான். டிகிரி ஹோல்டர், டபுள் டிகிரி ஹோல்டர், டாக்குத்தர், இஞ்சினியர், அற்றோனியற் லோ, பாரீஸ்டர் இருவத்தி அஞ்சி வருசமா
சாதிக்காதத, நம்ம நாலாங் கிளாஸ் ஆறு மாதத்துல சாதிப்பான்.

இதெப்படி மூன்று, நாலினம் வாழும் சிறிலங்காவில், ஜஸ்ட் எட்டே வீதம் உள்ள இந்த குட்டி இனம் மட்டும் புற்றீசல் போல சாதிக்கிறதே !!!! ????

எல்லா இடத்திலும், எல்லா சபைகளிலும், நாங்க ஆளுமையற்ற சமூகமாகவே இருந்துள்ளோம், வாழ்ந்துள்ளோம். ஜஸ்ட் தம்பிலா, கள்ளத் தோணிகள். காக்கா.

புள்ள பூச்சிகளாகவே கணிக்கப்பட்டுள்ளோம். பத்தோடு பதினொன்றாக வாழ்ந்துவிட்டு போகட்டும் என்றுதான், சிங்கள மக்கள், சிங்கள தலைவர்கள், சிங்கள பவுத்த பிட்ச்சுக்கள் எங்களை இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ விட்டுள்ளார்கள்.

யெஸ் கிரேட், அதுதான் நியதியும்கூட. அப்படித்தான் வாழ்ந்தோம், ஆனால் வட கிழக்கில் நெருக்கடி, பாரிய நெருக்கடி, குட்டி குட்டி இன முறுகல்கள், but அது ஒரு, மச்சான், மச்சினன் சண்ட மாதிரி, சக்களத்தி
சண்ட மாதிரி இருந்தாலும், ஒரு வடு, ஆறாத வடு எங்கேயோ புரையோடிக் கொண்டிருந்திருக்கின்றது.

வடக்கில் நாங்க ஒரு கேட்பாரற்ற, பட் மதிக்கப்பட்ட சமுகமாக வாழ்ந்தாலும், கிழக்கில் எப்போதும் கேள்விக் குறியாகவே இருந்துள்ளோம்.

இது கிழக்கில் உருவான முறுகல் அல்ல, ராமநாதபுரம், தேனீ, உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி, திருச்செந்தூர் பகுதிகளில், நாங்கள், இஸ்லாம் மார்க்கத்தை தழுவ முதலும், தழுவிய பின்னும் ஆரம்பித்த முறுகல்.

அந்த முறுகலை, மூர்க்கமாக மாற்றி, மோதி, முட்ட, யாரிடமும் பலமும் இருக்கல, பணமும் இருக்கல. தில்லும் இருக்கல, ஆம் எல்லாருமே கொறஞ்ச சாதி. ஒரே வயிற்ருப் பிள்ளைகள் ,மாமன் மச்சான் உறவு, அவன் பள்ளன் எண்டா நான் பறையன், அவன் நளவன் எண்டா, நான் வண்ணான், அவன் படையாண்ட குடி எண்டா, நான் வடக்கன்னாகுடி, உயர்சாதி ஹிந்துக்களைவிட்டு தூர ஓட வழிதான் தேடினோமே தவிர, மோத வழி தேடவில்லை.

ஓடினோம், ஓடினோம். பொத்துவில் - சோனவன், கோமாரி -கிறிஸ்டியன், திருக்கோயில், தம்பிலுவில் - தமிழர், அக்கரைப்பற்று - தமிழர், சோனவன் , அட்டாளைச்சேனை - சோனவன் , மீனோடக்கட்டு - தமிழர், பாலமுனை, ஒலுவில் - சோனவன் , அட்டப்பள்ளம் - தமிழர், நிந்தவூர் - சோனவன் , காரைதீவு - தமிழர், சாயிந்தமருது - சோனவன் , கல்முனை - சோனவன் ,தமிழர், பாண்டிருப்பு - தமிழர், மருதமுனை - சோனவன், நீலாவணை, ஒந்தாச்சிமடம், கல்லாறு, களுவாஞ்சிகுடி, களுதாவளை, ஆரப்பத்தை - தமிழர், காத்தான்குடி - சோனவன் , மட்டக்களப்பு - தமிழர், ஏறாவூர் - சோனவன், செங்கலடி - தமிழர், வாழைச்சேனை - சோனவன், தமிழர்,

அப்படியே மூதூர், வெருகல், கிளிவெட்டி, கிண்ணியா, திருகோணமலை என மிக்சராக இல்லாமல், புட்டும் தேங்காய்ப் பூவுமாக இருக்க காரணம் என்ன.

எங்கேயோ, எப்போவோ சக்களத்தி சண்டை, மாமா மச்சான் சண்டை, உன் சாதி பெரிசா, எஞ்சாதி பெரிசா என ஒரு குட்டி சண்டை நடந்துள்ளது. சண்டை முற்றி அவனை விட்டு இவன், இவனை விட்டு அவன் கொஞ்ச தூரம் ஒதுங்கி உள்ளான்.

அப்படி ஒதுங்கிய மைனாரிட்டி சோனவன், ரொம்ப யோசிச்சிருக்கான், தலய போட்டு ஓடச்சிருக்கான், யெஸ், இனி நமக்கு யாருமே இல்ல, நாடில்ல, நகரமில்ல, மாமன் மச்சான் உறவுமில்ல, பட் வாழோணும்,
வாழோணும், வாழ்ந்து காட்டோணும், இந்த ஒலகத்துல வாழ்ந்து காட்டோணும், யெஸ், ஐ யம் எலோன், ஐ யம் எலோன். வீ ஆர் எலோன்.

ஒடுக்கப்பட்ட சமுகம், அடக்கப்பட்ட சமூகம், தாழ்த்தப்பட்ட சமூகம், வாழ வழியில்லாத சமூகம், கிடைத்த எல்லாவற்றையுமே பற்றிப்பிடித்திருக்கின்றது. அது கல்லோ, மண்ணோ, புல்லோ, பூண்டோ, கத்தரிக்காயோ, கஸ்தூரியோ எட்டிப்பிடித்து, பற்றிப் படர்ந்திருக்கின்றான். இங்கு இஸ்லாம் மார்க்கமும் அவனுக்கு கொஞ்சம் ஹெல்ப்பண்ணியிருக்கின்றது.

பொய் சொல்றத குறைச்சி இருக்கின்றான், அஞ்சு நேரம் தொழவும் பழகி இருக்கின்றான், மது, மாதில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருந்திருக்கின்றான் கொஞ்சம் நல்லாத்தான் வாழ்ந்திருக்கின்றான்.

தமிழ் சகோதரர்களுடன் நகமும் சதையுமாக உறவாடியிருக்கின்றான், சிங்கள மக்கள் மத்தியில் ஒரு உயர்ந்த ஸ்தானத்தையும் பெற்றிருக்கின்றான்.

இடையில், இடைநடுவில் கொஞ்சம் அரசியல் வந்தது, வந்து எங்களது உள்வீட்டுகளுக்குள் சப்பாணி கட்டி உட்கார்ந்து கொண்டு , கும்மி, கும்மி என கும்மி அடித்து, மொத்த இதயங்களையும் சப்பித்துப்பி, காரி உமிழ்ந்து மண்வெறி பிடித்த சாம்ராட் அசோகனையும் மிஞ்சி, ரத்தவெறி பிடித்த ஹிட்லரையும் விஞ்சி, சாதி, மதம், மானம், மரியாதை எல்லாத்தையும் தொலைச்சி, போகாத ஊருக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றோம்.

எண்ட மூத்தாப்பா, எண்ட உம்மாக்கிட்ட சொல்லுவார், அடியே பைத்தியக்காரி, ஒண்ட புருஷன், அவள், சரஸ்வதிட மகன், பொன்னம்பலத்துக்கிட்ட அந்த ரெண்டேக்கர் காணிய வேண்டுறான், நீயும் படிக்கல, நானும் படிக்கல, பொன்னம்பலமும் படிக்கல, ஒண்ட புருஷன் கொஞ்சம் படிசிருக்கான்.

உறுதிய( ஒப்பினை / காணி பத்திரம் ) டீ ஆர் ஓ கந்தோருக்கு கொண்டு போய், நல்லா படிச்ச யாழ்ப்பாணத்தான் இருக்கானுகள், அவனுகளுக்கு முன்னுக்கு வச்சி , ஒரு தரத்துக்கு, ரெண்டு தரம், பொன்னம்பலத்துக்கு வாசிச்சி காட்டச் சொல்லி, காணிய வேண்டச் சொல்லு, இல்லாட்டி, பொறவு பொன்னம்பலத்துர பேரப்புள்ளகள் வந்து, நம்ம புள்ளகளுக்கிட்ட சண்ட புடிப்பானுகள், நாம அவங்கட அப்பாவ ஏமாத்தி, கீமாத்தி காணிய வேண்டிற்றோம் எண்டு.

வேத வாக்கு. கிளவண்ட வாக்கு வேத வாக்கு. என் நண்பன், தமிழ் நண்பன், என் பள்ளி தோழன், ஊராண்ட ஊட்டு கோழிய அறுத்து ரெண்டுபேரும் ஒண்டா திண்டிருக்கம், சினிமா கொட்டகைகளில் லூட்டி அடிச்சிருக்கம், அவன் தந்த லவ் லெட்டர, விஷயம் தெரியாம, அவன்ட கேர்ல் பிரெண்டுட தங்கச்சிக்கிட்ட குடுத்து, ஊர்காரனெல்லாம் என வெரட்டி வெரட்டி அடிச்சிருக்கானுகள், பாண்டிருப்புல இன்னம் என்ன தேடிக்கிருக்கானுகள், அந்த வடு, அந்த காயம் இன்னம் என்ர ஓடம்பில இருக்கிறது, போடா போய் துப்பாக்கி பயிற்ச்சியாவது எடுதுவாடா நாயே, என்று உத்தரப் பிரதேசத்துக்கு அனுப்பி வச்சவனும் அடியேன்தான்..

வந்து நின்றான், என் உயிரினும் மேலான என் ஆருயிர் நண்பன் வந்து நின்றான், துப்பாக்கி பயிற்ச்சி எல்லாம் எடுத்து முடிந்து, ஊருக்குள்ள வந்து, சோனவனுகளுக்கிட்ட காசு அறவிடுகின்ற ஒரு கால கட்டத்தில, ஒரு நாள் என்ர வீட்டுக்கு முன்னுக்கு வந்து நின்று, ஒரு பழைய கடிதத்தை காட்டி, மச்சான், இந்த அக்கரபத்து மார்க்கட் அமைந்துள்ள மொத்த காணியும், காரதீவை சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணுடையது மச்சான், இந்த சோனவனுகள், அந்த பொம்பளைய ஏமாத்தி அந்த காணிய வாங்கி இருக்கானுகள் மச்சான் .

என்னத்தை சொல்வது, எப்படி சொல்வது, எங்க போய் சொல்வது, எந்த மலையில போய் முட்டுவது, ஆனால் நான் ஒரு சோனவன் என்றும் பாராமல் என்னிடம் வந்து சொன்னதுதான் எமது நட்பின் அதி உச்சம். அந்த அளவுக்கு நான், நாம் தமிழ் நண்பர்களினதும் , தமிழ் மக்களினதும் இதயக்கூட்டுக்குள்ள இருந்தம். இருக்கிறம்.

நண்பன் வெறியோட சொன்னான், நான் கிலியோட சிரிச்சன். போடா நாயே எண்டுப்போட்டு போயிட்டான்.

அப்புறம், ரெண்டு மாதத்துக்கு அப்புறம், ஒரு சுப யோக, சுப தினத்தில், அக்கரைப்பற்று சந்தை சதுக்கம் எரிந்து சாம்பரானது. யெஸ் ...யெஸ் ...யெஸ் ... யெஸ் ...யெஸ் ...யெஸ் ...என் ஆருயிர் நண்பனின் வழிகாட்டலில், முப்பத்தி முக்கோடி இயக்கங்களின் மத்திய செயற்குழுக்களின் தீர்மானத்திட்கேட்ப , சூர சம்ஹாரம் ஆடியதாக என் நண்பன், பின்னொருநாளில், மெட்ராஸ் அங்கப்பனாயக்கன் தெருவில் வைத்து சொன்னான். எரிந்த கடைகளில் முதல் கடை எங்கள் கடை, அந்தக்கடையில் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள், நானும் அவனும், வாழ்வாங்கு வாழ்ந்துள்ளோம் என்பதுதான் ??????. ரொம்ப
சந்தோசமான செய்தி. it is on record....it is on record..... it is on record.....

கிட்டதட்ட மூவாயிரம் பேர் நேரடியாக பாதிக்கப்பட்டார்கள், ஒரு பத்தாயிரம் பேர் மறைமுகமாக பாதிக்கப்பட்டார்கள்.

பின்னாளில், இன்னொரு அந்தி சாயும் வேளையில் என் நண்பனையும், வளர்த்த கடாக்களே, நாலு, குட்டி, த்ரீ பாயிண்ட் டூ குண்டுகளுக்கு இரையாக்கி இருந்தன. என் உயிரினும் மேலான நண்பன், மண்ணில் வீழ்ந்து விட்டான் என்ற செய்தி, ஆறாயிரம் மைலூக்கப்பால் இருந்த எனக்கு, காற்று வாக்கில் வந்து சேர்ந்தது. அந்த நாய், இன்னும், இன்னும் என்னுடன் வாழ்ந்திருக்கலாம். அவன் ஒரு பக்கா ஜென்டில் மேன்.

இது எங்கள்,எனது குட்டி அனுபவத்தின் ஒரு மைக்ரோ துளி. இந்த துளியை, துரும்பாக்கி, துரும்பை, துப்பாக்கியாக்கி, துப்பாக்கிகளை துரியோதனர்களிடம் கொடுத்ததனால் வந்த வினையின், வீம்பின், வீரியங்கள்தான் இன்று, பிரித்துத்தா அல்லது சோனியின் கழுத்தை வெட்டித்தா என்பதில் வந்து நிற்கிறது ..???

நோர்வேக்காரன் கோட்டையும், சூட்டையும் காட்டி, வன்னிகாட்டுக்குள், இருந்த கன்றுக்குட்டிகளை அழைத்த போதே நாம் இலங்கைநெட் இணையத்தளத்தில் ரெண்டாயிரத்து ஆறில், ஏழில் எழுதினோம், கத்தி கூப்பாடு போட்டோம்.

ராசாக்களே, ராஜ குலோத்துங்கர்களே, கொஞ்சம் கோட்ட கீட்ட போட்டு, பழக்கி, சிறு நகரங்களை, மெதுவாக பெரு நகரங்களை காட்டிபுட்டு, நம்ம வன்னி குழந்தைகளை எலெக் ரோனிக் நகரங்களுக்கு அனுப்புங்கள்,
இல்லாவிட்டால், மாறிடுவான், நம்மவன் மாறிடுவான் என்று சொல்லி மன்றாடினோம்...நெத்தின்க் ஹெப்பென்.

கருணா அம்மான் மாறினார், கிழக்குக்கு வந்து அறிக்கை விட்டார், வடக்கு வேற, கிழக்கு வேற. நாங்க சந்தோசப்பட்டோம், நான் சந்தோசப்பட்டேன், கிழக்கின் புதல்வன், கிழக்கை பற்றி யோசிக்க கூடிய ஒரு மாவீரன் வந்துவிட்டான் என்று ரொம்ப சந்தோசப்பட்டோம்.

கொஞ்சம் பயமும் வந்தது. பொத்துவில், பாணமை, குடும்பிமலை தொடக்கம் திருகோணமலை வரையுள்ள சாதாரண தமிழர்களும், அந்த தமிழர்களின் வாழ்விடங்களும், அவர்களின் தொழில்துறைகளும் நொந்து நொம்பலமாகிக் கெடக்கிறதே,

மொத்த சோனவனின் வளங்களும் உச்சானிக் கொம்பில் ஏறி இருக்கின்றதே, இத பார்த்துபோட்டு மனுஷன் தடுமாறுவாரே, சோனவன் மேல கோபம் வருமே என்ற ஆதங்கத்தில் , இலங்கைநெட் இணையத்தளத்தில் கிழக்கு மாகாணத்தை பொருளாதார ரீதியில் முன்னேற்றுவது எவ்வாறு, என்ற அடிப்படையில் "கருணா என்கின்ற முரளீதரனுக்கும், கிழக்கு மாகாண மக்களுக்கும் " என்ற தலைப்பில் பதினாலு தொடர் கட்டுரைகள் எழுதினோம்.

நம்ம கருணா அம்மானும் கண்டு கொள்ளல, அவர்ர பாசறையில் வளர்ந்த பிள்ளையானும் கண்டு கொள்ளல, அந்த பட்டாளங்களுடன் வளர்ந்த அடிப்பொடிகளும் கண்டு கொள்ளல. எல்லோரும் கொழும்புல போய்
ஜாலியா, கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள்.

ஆனால் சோனவன் இந்த கட்டுரைகளை கண்டு வீடு தேடி வந்தான், சில முஸ்லிம் இளைஞர்கள் கட்டார், துபாய்களில் இருந்து வேலைகளை தூக்கி வீசி விட்டு கிழக்கிற்கு போய் தொழில் தொடங்கினார்கள். அந்த
வளங்களை சிறப்பாக பாவித்தார்கள். இத்தாலியில் இருந்த அம்பாறை சிங்கள இளஞர்கள் மூன்று பேர் நேரடியாக என்னை வந்து சந்தித்து, அம்பாறை உகனையில் தொழில்சாலைகளை தொடங்கினார்கள். பலர்
மீன் வியாபாரத்தில் கொடி நாட்டினார்கள்.

ஆம், பொறாமை வரவேண்டும், அது பொல்லாமையாக இருக்க கூடாது. கருணா அம்மானும், பிள்ளையானும் கிழக்கு மாகாண தமிழனுக்கு என்ன செய்தார்கள்,எத்தனை தொழில்சாலைகளை ஆரம்பித்து கொடுத்தார்கள், இந்த மகான்களால் எத்தனை தமிழச்சிகளின் வீட்டில் அடுப்பெரிந்தது, ஏன் அவர்களுக்கு பின் வந்த, வந்துள்ள இந்த எம்பி, தும்பிக்களெல்லாம் எத்தனை காய்களை நகர்த்தி உள்ளார்கள். எத்தனை
சிங்கள எம்பிக்கள், மந்திரிகள், அதிகாரிகளின் காலில் விழுந்து சாதித்துள்ளார்கள்.

தமிழனுக்காக நீ வாழ்வதானால், எந்த குப்பையிலாவது விழுந்து சாதிக்கொனும். ஒவ்வொரு தமிழனின் வீடுகளிலும் அடுப்பெரியோனும். அதுவரை நாம் சாக கூடாது. அரசியல் தொடர்ந்து சோறு போடாது. நாம் தமிழ்
பத்தினிகளுடன் வாழ்ந்துள்ளோம். அவளுகள் வாய் தொரக்கோணும், தொறந்து, அடேய் புள்ளகளே !!!! மொதல்ல எங்களுக்கு சோத்துக்கு வழி பண்ணுங்கடா என்று சாபம் போடணும் ..அதன் பின் தமிழ் கிராமங்கள் தோறும், சோனவனுக்கு போட்டியாக பில்டிங்குகள் வானுயர முளைக்க வேண்டும்.......

அத செய்யுறத உட்டு போட்டு அனைவரும் நோகாமல் நொங்கு திங்கிற வேலைகளைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். சரி ஹிஸ்புல்லாஹ் பள்ளிக்ககூடம் கட்டியிருக்கார் , ஊரா ஊட்டு காணில கட்டி இருக்கார், கிட்டத்தட்ட அது ஒரு மாயாபஜார். அது ஊருக்கே தெரிந்த விடயம்.

ஆனால் அவர் எத்தனை அரபிகளின் காலில் விழுந்திருப்பார், எத்தனை சிங்கள அதிகாரிகளின் பின் புறத்தை நக்கி இருப்பார், எத்தனை தமிழ் கிராம சேவையாளர்கள், சேர்வையர்களுக்கு ஆராத்தி எடுத்திருப்பார்,
இவர்கள் யாரினதும் ஆதரவில்லாமலா ஹிஸ்புல்லாஹ் கண்ணுக்கு தெரியாத அந்த கட்டிடத்தை கட்டி இருப்பார். ரிசாட் பதுயுடீன் மீண்டும், மீண்டும், மீண்டும் வர்த்தக அமைச்சை எடுத்திருப்பார், ஆஸாத் சாலி என்ன வானலோகத்தில் இருந்து வந்தா, கொழும்பு மேயர் கதிரையை பிடித்திருப்பார், கபீர் ஹாசீம் பெற்றோலியம் துறையை மொத்த சிங்கள புத்த பிக்குகளுக்கும் தெரியாமலா பறித்திருப்பார்.

பாவம், தமிழர்களும், சோனவனும் !!!!!! எப்போதுமே, எப்போவுமே சிங்கள புத்திசாலிகளே வென்றுள்ளார்கள், வெல்கின்றார்கள், வெல்லுவார்கள்.

yes, they are always mastermind.
I like them. I love them.


( அடுத்த வாரம் நம்ம தமிழ், சிங்கள எம்பிக்களையும், சோனக அலிபாப்பாகளையும்
பற்றி கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம் ......)

( இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் தொடருவேன் .....)
yahiyawasith@ymail.com
21-6-2019

Read more...

Sunday, June 16, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 5 - யஹியா வாஸித்

கள்ளத் தோணிகளில் வந்த சோனவனும் , நல்ல தோணிகளில் வந்த மகாத்மாக்களும்.

மதம், மதம், அது , உன்மதமா, என்மதமா,சம்மதமா எண்டு யாருக்குமே புரியல, அதப்பத்தி புரிஞ்சவங்களும் புரியாத எங்களுக்கு புரிய வைக்க முயலல. எல்லாரும் நாங்க புடிச்ச முயலுக்கு மூணுகால் எண்டுதான் அடிச்சி சொல்றாங்க.

பெத்தலஹேமில் பொறந்தவனோ, எதிரி ஒண்ட ஒருகன்னத்தில அறைஞ்சா, ஓன்ட மறுகன்னத்தை காட்டி அடிவாங்கு என்டு சொல்கின்றான், லும்பினியில் பொறந்தவன் - குட்டி எறும்புக்கும் தீங்கிளைக்காதே என்டு ஆணித்தரமாக சொல்லிப் போட்டான், ஹிந்துதர்மமோ சாம, பேத, தான, தர்மம் அறிந்தவர்கள் நாங்கள் வீ ஆர் ஆல்வேஸ் கிளீன் என்று சொல்கின்றது, இஸ்லாமோ உன் அடுத்த ஊட்டுக்காரன்கூட பசியோடு இருக்க விடாதே என்கின்றது.

ஆக மொத்தமாக எல்லாருமே,எல்லோருமே தர்மம் பற்றி பேசுகின்றோம், நியாயம் பற்றி மூச்சு முட்ட விவாதிக்கின்றோம், அகிம்சை பற்றி மனம் குளிர சிலாசிக்கின்றோம், ஊருக்கு ஒரு கோயில், தெருவுக்கு ஒரு பள்ளிவாசல், நீண்ட அகன்ற சர்ச்சுகள், தலையை மழுங்க வளித்து, அழகிய செவ்விழனி நிற காவி உடுத்து, புத்த சாதுக்கள் புடைசூழ பன்சல வளாகங்கள்.

ஓ இவ்வளவும் இருந்தும் ஏன் இந்த ??????மதம். மலத்தை கூட தரிசிக்க தயாரா இருக்கோம், பட் மதம்.

நான் நெனைக்கல இஸ்லாம் ஒரு மதமெண்டு, அது ஒரு மார்க்கம். இஸ்லாம், அது ஒரு அழகான மார்க்கம், அன்பான மார்க்கம், அரவணைக்க கூடிய மார்க்கம், அது ஒரு மதமல்ல, மார்க்கம். தெரியாத ஊருக்கு எப்படி போவது, எந்த மார்க்கமாக போவது, அந்த மார்க்கமாக போனால், அந்த தெரியாத ஊரை எப்படி அடையலாம் என்று அடித்து சொன்ன ஒரு மார்க்கம் எண்டுதான் நான் நெனைக்கிறன்.

அம்பாறை சந்தியில நிண்டு, இல்லாட்டி மட்டக்களப்பு பஸ்ஸிஸ்ராண்டுல நிண்டு, இல்லாட்டி ரிங்கோ பத்தாம் நம்பரடிய இருந்து, இல்லாட்டி வவுனியா ரவுண்ட போட்டடிய நிண்டு, கொழும்புக்கு போற வழியெது, கொழும்புக்கு போற மார்க்கமெது என்று கேட்டால் .........தட்ஸ் ஆல்.

மதுர மேலமாசி வீதி சந்தியில நிண்டுகிட்டு, மீனாக்ஷி அம்மன் கோயிலுக்கு இல்லாட்டி தவிட்டு சந்தைக்கு போற மார்க்கம் என்ன என்று கேட்டால் என்ன சொல்வோம்.

இந்த மார்க்கமாக போனா, நீங்க சொன்ன இடத்துக்கு போகலாம். வழி, மார்க்கம், அமைதியாக, அன்பாக, அடக்கமாக வாழ, வழி தெரியாத வர்களுக்கு, சீரான, நேரான வழியை காட்டுவதே இஸ்லாம்.

அந்த வழியை, மார்க்கத்தை தொடர்ந்து பின்பற்றியவர்கள், அரபுநாடுகளிலும், சூடான், சோமாலிய போன்ற தேசங்களிலும் இருந்தார்கள், வாழ்ந்தார்கள்.

அய்யாமுல் ஜாஹிலி ( அறிவிலிகள் காலம் - புத்தி கொஞ்சம் கம்மி )யாக்களாக இருந்த, அந்த அரபு தேசங்களில் வசித்த மக்களுக்கு, நல்லதொரு வழிய, மார்க்கத்தை காட்ட புறப்பட்டவரதான் இன்று மொத்த சிங்கள பவுத்த தேசமும், இப்போது கொஞ்சம், மீண்டும் முருங்கை மரத்தில் ஏற முயற்சி பண்ணும் தமிழ் தம்பிகளும் திட்டித் தீர்துக்கொண்டிருக்கின்ற முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இவர் ஒரு உம்மி, படிக்காத மேதை.

இவர் என்னடா நமக்கு புத்தி சொல்லுறது என்று, அன்றைய அரபு தேசம், மக்கா வாசிகள், அவரையும் அடித்து, மிரட்டி, எரித்து திஸ் இஸ் அவர் லேன்ட் என்று கத்தி, கூப்பாடு போட்டு மக்காவை விட்டு விரட்டியடித்தார்கள், அவரும் மதீனாவுக்கு இரவோடு இரவாக ஒளித்து ஓடினார். அவருக்கு அப்போது தோணி கிடைக்கல, கிடைச்சிருந்தால் அவரும் கள்ளத்தோணியில் போயிருப்பாரோ !!!!!

இயேசு பிரானையும் நாம தானே சிலுவையில அறைஞ்ஞம், வாலியை நோக்கி மறைந்திருந்து பாய்ந்த அந்த அம்பு, உத்தமன் இராமனுடையதல்லவா ? இராமா நீயுமா என்று அந்த காட்டுக்குள் இருந்து, வாலி அலறியது, இன்னும் நமது செவிப்பறைகளை பிளந்து கொண்டல்லவா இருக்கின்றது.

சூதுகளையும், யுத்தங்களையும் பற்றித்தானே மகாபாரதம் திரும்பி, திரும்பி, செப்பி வழிகின்றது, லும்பினியில், கபிலவஸ்துவில், இந்தியாவில் பிறந்த புத்த மகானையும், இந்து சாம்ராஜ்யம் ஏற்றுக்கொள்ளவில்லையே, தெலுங்கானாவில் பிறந்த நாயக்கர்களும், பண்டார(ம்)க்களும்தானே அந்த மகானின் போதனைகளை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆக மொத்தமாக ஸ்ரீலங்கா சோனவன் செஞ்சதெல்லாம் பொள. மற்ற அனைவருமே ரொம்ப சரி.சிவ சிவா.

யாருடா இவர் புதிதாக ஒராள் நம்ம ஊருக்கு( மதினா ) வந்திருக்காராமே ! என கேள்வி கேட்க அல்லது மிரட்ட அல்லது வேடிக்கை பார்க்க வந்தவர்களுக்கு, தான் ஒரு இறை தூதர், ஐ கொட் சம் கோட் வேர்ட் ப்றம் அல்லாஹ். அவர் எனக்கு சில நல்ல செய்திகளை, மார்க்கமொன்றை சொல்லி உள்ளார். அவைகளை மக்கள் மத்தியில் சொல்லவந்தவன் நான். என்றும் சொல்லியுள்ளார்.

இவர் சொன்ன இந்த சேதிகள், தகவல்கள் மெள்ள மெள்ள ஊர் ஊராக, நாடு நாடாக பரவ யெஸ், திஸ் வே டிபரென்ட் ப்றம் அவர் ஓல்ட் வே ..........இண்டரஸ்டிங்....... ரிலாக்ஸ், நிம்மதி என கூறிக்கொண்டு சிலர், மெள்ள மெள்ள பலர், இவரது மார்க்கத்தை வே ஒப் லைப் பின்பற்ற தொடங்கினர்.

அடிமை வியாபாரம், திருட்டு, வழிப்பறி, பலதார திருமணம் என இருந்த அரேபியர்கள், முகம்மது நபியின் வழி காட்டலின் பின் வியாபாரத்தில் இறங்கினர்.

இஸ்லாம் மார்க்கம் பாரசீகம் எங்கும் பரவியது, சூடான், சோமாலியாவிலுருந்தும் மக்கள் வந்து இந்த மார்க்கத்தை படிக்க, கற்க தொடங்கினர்.

நாடுவிட்டு நாடு ஒட்டகங்களில் வியாபாரிகளாக சென்ற இந்த அரேபியர்கள், கப்பல்களை உருவாக்கி கடல் பயணங்களையும், கடல் வியாபாரங்களையும் தொடங்கினர். வாரக்கணக்காக, மாதக்கணக்காக கடல்களில் பயணஞ் சென்று நாடுநாடாக தமது வியாபாரங்களை நடாத்தினர்.

அவ்வாறு நாடு நாடாக வியாபாரத்துக்கு சென்றவர்களின் வியாபார அழகு, அவர்களது நடத்தைகள், நடவடிக்கைகள் மற்ற நாட்டில் உள்ளவர்களையும் கவர, அவர்கள் இவர்களை தங்கள் நாட்டில் உட்கார்ந்து வியாபாரம் செய்ய அனுமதித்துள்ளனர்.

அவ்வாறு ஸ்பெயின், ஜாவா, சுமத்ரா, இந்தோனேசியா, இந்தியா, பிலிப்பைன், மலேசியா, ஸ்ரீலங்கா என அவர்களது வியாபார கப்பல்கள் வந்து போயுள்ளன.

அவ்வாறு வந்தவர்களில் பலர் அந்தந்த நாடுகளில் நிரந்தரமாகவே இருந்ததுடன், அந்த நாட்டில் உள்ள பெண்களையும் திருமணம் செய்து,அங்கேயே வாழ்ந்தனர். இவர்கள் யாரும் நீங்க இஸ்லாத்துக்கு வாங்க, இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றுங்க என்று, எங்குமே, எப்போதுமே சொல்லவே இல்லை. இவர்களது நடை, உடை, பாவனைகளை பார்த்தே பலர்,இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றினர்.

இவ்வாறு வந்தவர்கள் யாரும் கொலம்பஸ், வாஸ்கோடகாமா போல கடல் கொள்ளையர்களோ, அல்லது நாடுகளை பிடிக்கவந்தவர்களோ அல்ல. அய்ரோப்பியர்கள் நம்முட சகல வளங்களையும் கொள்ளை இட்டதுடன், நாடுகளையும் பிடித்து நம்மை அடிமையாக வைத்திருந்தனர். ஆனால் இவர்கள் தாம் உண்டு, தமது வியாபாரம் உண்டு என்றே இருந்துள்ளனர்.

இவர்களது நடத்தையின்பால் கவரப்பட்ட ஜாவா, சுமத்ரா, இந்தோனேசியா, மலேசிய, பிலிப்பைன், இந்தியா என பலர், அந்த, அவர்களது மார்க்கத்தை பின் பற்ற தொடங்கினர்.

குறிப்பாக இந்தியாவில் பிராமணர்களாலும்,ஏனைய உயர் சாதியினராலும் நாயைவிட கேவலமாக மதிக்கப்பட்ட, குறைந்த சாதியினருக்கு இந்த இஸ்லாம் மார்க்கத்தின் வே, வழி புடித்ததால், பலர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.

இந்த பிராமணர்களும், ஹிந்து வெறியர்களும் தங்களுக்குள் குத்து வெட்டு, பட்டுக்கொண்டு எழுநூறு வருஷங்கள் முஸ்லிம்களை, இஸ்லாமியர்களை, மொகலாயர்களை, இந்தியாவை ஆளவிட்டுள்ளனர். இந்த கால கட்டங்களில், எந்த ஒரு சோனவ, இஸ்லாமிய மன்னர்களும் தங்கள் பெயர்களில் வீதிகளையோ, நகரங்களையோ, அமைக்கவும் இல்லை, தங்கள் பெயர்களை எந்த கல்லிலும் பதிக்கவுமில்லை என்பதுதான் அழகிலும் அழகு. பேரழகு.

பாபர் மசூதி கூட எங்களுக்கு சொந்தமே இல்லை, யாரோ ஹிந்துக்களின் நயம் மிக்க கட்டிடம், பிற்காலத்தில் அந்த பகுதிகளில் முஸ்லிம்கள் வசித்துள்ளார்கள். தமது தொழுகைக்கான இடமாக அந்த இடத்தை, பாவித்துள்ளார்கள் என்பதுதான் எனது கருத்து.

வெள்ளிக்கிழமை எங்களுக்கு தொழுவதற்கு இடமில்லை, பாதிரியாரே, என்று சொன்னதும், தனது கிறிஸ்தவ தேவாலயத்தை திறந்து, ஏன் இங்கு நின்று தொழுவுங்களேன் என்று சொல்லும் அநேக, கிறிஸ்தவ பாதிரிகள், மனிதப் புனிதர்கள் இங்கிலாந்து முழுக்க பரவிக்கிடக்கின்றார்கள். இது கிறிஸ்தவத்தின் இன்னொரு வெட்டுமுகம்.

ஏய் முஸ்லிம்களே, நீ எனது படைப்பு, எனது உம்மத், உனக்கு இந்த உலகில் எதுவுமே சொந்தமில்லை, ஆறடி நிலம் கூட சொந்தமில்லை, என்று இஸ்லாம் மார்க்கம் அழகாகவும் தெளிவாகவும் சொல்லிவிட்டது.

ஆனால் நாங்கள் ஆசைப்பட்டோம், தமிழ்நாட்டில் இருந்து ஹிந்து வெறியர்களாலும், ஹிந்து உயர்சாதியினராலும் பூணூல் தாங்கியோராலும் அடித்து, நொறுக்கி, நொங்கி, தொங்கி, நாரான நாங்கள், இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய நாங்கள், எங்கள் முன்னோர்கள், எங்கள் மூதாதையர்கள், அனைவரும் ஓட வழி இன்றி ஆதங்கப்பட்டோம்.

ஆம், ஓடியுள்ளார்கள், இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய எங்கிட பெரியப்பாமார், மூத்தப்பாமார் எல்லாரும் கள்ளத்தோணியிலும், இஸ்லாம் மதத்தை தழுவாத ஆனால் பிராமணர்களிடம் நன்கு வாங்கி கட்டிய பறையர்,
வன்னியர், நளவன், வண்ணான், சாணக்கியன், சாம்புரானிகளும், பவுத்த மதத்தை தழுவிய நாயக்கர்கள், பண்டாரங்கள் எல்லோரும் நல்ல தோணிகளிலும் சயிலான் என்கின்ற, சிலோன் என்கின்ற, இரத்தின துவீபம் என்கின்ற, மலபார் என்று, கடல் கொள்ளையர்களால் பெயர் சூட்டப்பட்ட, அந்த பெரிய கண்டத்தின் ஒரு துளியான இன்றைய சிறிலங்காவில் பொத்தாம் பொதுவாக போய் இறங்கியுள்ளனர்.

தூத்துக்குடி, கன்னியாகுமரி, கொஞ்சம் நாகப்பட்டினம், இன்னம் கொஞ்சம் நகர்ந்து நாகர் கோயில்காரனுகள் எல்லாம் வடக்கில் இறங்க, காயல் பட்டினகாரர்கள் காத்தான்குடியில் இறங்கயுள்ளனர், வேளாங்கண்ணி, நாகூர் காரர்கள் கல்முனை, சாய்ந்தமருது, பெரிய கல்லாறு, சின்னக்கல்லாறு, ஓந்தாச்சிமடம் என கால் ஊன்ற, இன்னும் கொஞ்சம் வேளாங்கன்னிகாரர்கள் கோமாரியில் தடம் பதித்துள்ளனர். யெஸ் வீ ஆள் ஆர் புறம் இந்தியா.

தெலுங்கானாவில் பௌத்த மதத்தை தழுவியவர்களுக்கு ஓடுவதற்கு தோணியும் இல்லை, கண்ணுக்கேட்டியதூரத்தில் கடலும் இல்லை. ரொம்ப சிரமப்பட்டுள்ளர்கள்.

விஜயவாடா வந்து, கிருஷ்ணா ஆற்றில் நல்ல தோணிகளில் தவழ்ந்து ,பல நாட்கள் மிதந்து, வந்தவர்களுக்கு மாத்தற, மிரிஸ்ஸ, ஹிக்கடுவ, திஸ்ஸமஹராம கடல் படுக்கைகள்தான் ஆபத்பாந்தவனாக தெரிந்துள்ளது.

நம்மவன்,குட்டி குட்டி தோணிகளில் வந்து இறங்கி விட்டான், அது ஜஸ்ட் மரக்கலம். இவர்கள் வந்தது கொஞ்சம் பெரிய கலங்கள், அதை சும்மா தோணி என்று சொல்ல மாட்டார்கள், அலி போட்டுவ ( யானை மாதிரி தோணி ) என்றுதான் அழைப்பார்கள். சிங்கள தேசம் எங்கும் இந்த அலி போட்டை காணலாம். தெலுங்கான விஜயவாடா கரைகளில் இந்த அலி போட்டுகளை தரிசிக்கலாம்.

பட் ஆனால், நாங்க எங்கிட முன்னோர்கள், பறையர்களும், சக்கிலியர்களும், தோட்டிக்களுமாக இருந்து, இஸ்லாமிய மார்க்கத்துக்கு மாறிய எங்கள் முன்னோர்கள், இந்த புனித தேசத்துக்கு வர முதலே, தெலுங்கானா வாசிகள், இங்கு வந்து சேர்ந்து குவேனிகளுடனும், ஊரிவரியகே வன்னியாவின் மூதாதையர்களுடனும், ஒன்றுக்குள், ஒன்றாகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த கால கட்டத்துக்கு பின்னர்தான் அரபு தேச வாசிகளின், மார்க்கத்தை பின்பற்றிய இந்தோனேசியா வாசிகள் ஹம்மான்தொட்டையிலும், ஜாவா, சுமத்ராகாரர்கள் பேருவள, காலியிலும், பரங்கிப்பேட்டையில் (பறங்கியர் பேட்டை - பிரான்ஸ் கொலனி ) இறங்கியவர்களின் வாரிசுகள், கொளும்புத்துறை முகத்தையும் வந்தடைந்து, பவுத்த மக்களுடன் இரண்டறக்கலந்துள்ளர்கள்.

அப்படி கலக்கவில்லையானால், பவுத்தர்களின் கோட்டை எனப்படும், கண்டி தலதாமாளிகையை வளைத்து, சுற்றி, அதே கால கட்டத்திலேயே, அறுபது அடிதூரத்தில், முன்னூரடி தூரத்தில், அய்னூறு மீட்டர் தூரத்தில், எழுநூற்றி அய்ம்பது மீட்டர் தூரத்தில் கிட்டத்தட்ட பதினான்கிற்கு மேற்பட்ட முஸ்லிம், சோனக பள்ளிவாசல்கள் கட்டப் பட்டிருக்க நியாயமில்லையே.

நாம் இந்த சிறிலங்காவின் சொந்தக்காரர்களுடன், மிக, மிக அந்நியோன்யமாகவே இருந்துள்ளோம், வாழ்ந்துள்ளோம். பெண்ணெடுத்துள்ளோம்.

ஆனால் இப்போது, எல்லோருக்கும், சகலருக்கும், ஆசை வரத்தொடங்கி உள்ளது, ஆசை பொறாமையாக மாறி, பொறாமை, பொல்லாமையாக தினவெடுத்து,............................
வங்குரோத்து ....அரசியல் ...சமய ...சம்பிரதாய ....வங்குரோத்து என்பது இதுதானோ ????

( இவைகளுக்கெல்லாம் முழு முதல் காரணம் கருணா அம்மானும்,பிள்ளையானும் என்துதான் அடித்து சொல்லலாம். அடுத்த பதிவில் அவர்களை பற்றி ஆராய்வோம்.....
அவர்களுக்கும் கொஞ்சம் திட்டுவோம் )


( இன்ஷாஹ் அல்லாஹ் என் இறைவன் நாடினால் தொடருவேன் ....) 15-6-2019

yahiyawasith@ymail.com

Read more...

Tuesday, June 11, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 4 ( யஹியா வாஸித் )

யார் இந்த பௌசி ஹாஜியார் - நம்மாக்கள் ஏன் அவரது காலில் போய் விழுந்தார்கள்.

1987 டூ 2009 வரை உள்ள காலம்தான் மொத்த முஸ்லிம்களையும் கண் தொறக்க வச்ச காலம். எல்லாமே அதிசயமாவும், ரொம்ப ஆச்சரியமாவும் இருந்தது. எங்களுக்கு, எத நம்புறது, எத கையுடுவது என்டு தெரியாமல் இருந்தது, தாயும், பிள்ளையும், வாயும் வயிறுமாக இருந்த தமிழ் நண்பர்கள், வாடிக்கையாளர்கள், ஆசிரியர்கள், போடிமார், தமிழ் சண்டியர்கள், எல்லோருமே, எல்லாமுமே, தமிழ் சாமான்ய மக்களை தவிர மற்ற எல்லோருமே எங்களை ரெண்டாம் கண் கொண்டு பார்த்தார்கள்.

எங்கள் வயல் காணிகளுக்கு போக முடியல, குட்டி குட்டி தம்பிகள் வந்து, கையில ஒரு வாட்டசாட்டமான தடியுடன் வந்து "டேய் காக்கா அம்பதாயிரம் குடு" என்றார்கள். எண்ட வாப்பா ரொம்ப மவுனமாக முப்பத்தஞ்சாயிரம் ருவாவும், மீதிக்கு உம்மாட நகைகளையும் கொடுத்தபோது எங்கட கையாலாகாத்தனத்தை நினைத்து வெம்பி வெடித்திருக்கின்றோம்.

வயலுக்கு அறுவடைக்கு போன சாச்சா, பெரியப்பாட மகன், மற்றும் ஊரவர்கள் எல்லாம் ஏரியா பொறுப்பாளர்களால் விரட்டப்பட்டு, நெல்லும் வேணாம், பதறும் வேணாம் என உயிரை கையில புடிச்சுக்கிட்டு ஓடிவந்ததை பார்த்து பதறி இருக்கின்றோம்.

எங்க மாடுகளை கூட்டம், கூட்டமாக, சாரி, சாரியாக சாய்த்துக்கொண்டு, எங்க முன்னாள் பள்ளித் தோழர்கள் வெறியுடன் செல்வதை பார்த்து ஏமலிச்சுப்போயிருக்கின்றோம்.

படிப்போ கிடையாது, சிங்களமோ தெரியவே தெரியாது, நகமும் சதையுமாக இருந்த தமிழ் மக்கள் எங்களை கிள்ளுக் கீரையாகவும் மதிக்கின்றார்களில்லை. கொட்டை பாக்கு கூட, பாக்குவெட்டிக்கு டாட்டா காட்டிவிடும், ஆனா நாங்க, உரலுக்குள் உமியானோம், பதறானோம், பஞ்சானோம். நோ வே, நோ வே, நோமோர் வே to மூவ்.

அப்போதுதான் கண்டியும், கொழும்பும் எங்களுக்கு பஞ்சாமிர்தமாக தெரிந்தது, அதோடு சேர்ந்து அஸ்ரப் ஹாஜியாரும் வந்து நாமிருக்க பயமேன் என்று சொன்னது எங்களுக்கு ஒரு தெம்பானது.

இருக்கிற மிச்ச சொச்ச காணியையும், பூமியையும் வித்துப்போட்டு கொஞ்சப்பேர், கொழும்பு, கண்டி ,மாவனல்ல ,அக்குரண எண்டு பொறப்பட, கொஞ்சப்பேர் குட்டி குட்டி கைக்கடக்கமான வியாபாரங்களில் கவனம் செலுத்த, மீதிப்பேர் " அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி" கணக்காக அரசியல் வியாபாரம் செய்யப் புறப்பட்டனர்.

தென்மேற்கை நோக்கி புறப்பட்டவர்களில் சிலர் முழு நேரபடிப்பில் இறங்க பலர் வியாபாரத்தில் இறங்கினர், இப்பகுதிகளில் உள்ள முஸ்லிம்களும் அவர்களுக்கு பூரண ஆதரவு வழங்கினர்.

அடி, அடி, அடியென அடிவாங்கி மெல்லவும் முடியாமல், தனது கஷ்டங்களை மற்றவர்களிடம் கக்கி சொல்லவும் முடியாமல் இருந்த வட கிழக்கு சோனவன், தென்மேற்கில் சூறாவளியாக சுற்றினான், அனைத்தையும் பச்,பச்சென பிடித்துக்கொண்டான் இவனது அரைகுறை சிங்களம், சிங்கள மக்களுக்குநன்றாகவே பிடித்தது,

மற்றொருபுறம் அரசியல், பத்திக்கிட்டு எரிஞ்சது, குட்டி குட்டி தம்பிகளிடமெல்லாம், மைக்கையும் கொடுத்து, கார்களையும் கொடுத்து டமாரம் அடிக்க விட்டார்கள் நம்ம வள்ளல்கள். ராமனாதபுரமாவட்டம், தேனீ மாவட்டம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தமிழக கரையோர மாவட்டங்களில் வாழும் அரசியல் வாதிகள் தேர்தல் காலங்களில் எப்படி கும்மி அடிப்பார்களோ அதைவிட கேவலமாகவும்,

1971 முதல் இன்றுவரையும் மொத்த தமிழ்மக்களையும், கதை பேசி, கடை விரிக்கும் தமிழ் அரசியல் வாதிகளை விடவும் மிக மிக கேவலமாக கதை பேசியும்,

எக்ஸ்ட்ராவாக "நாரேதக்பீர் அல்லாஹ் அக்பர்" அத்துடன் "உஹது யுத்தம்", "பதுரு யுத்தம்" என்ற கதைகளையும் சொல்லி மொத்த சோனவர்களையும் உருவேற்றினர். கல்தோன்றி மண்தோன்றாக்காலத்துக்கு, முன் தோன்றிய மூத்த தமிழ், எங்க தமிழ் என்று சொன்னால் எப்படி தமிழன் சுருண்டு விழுவானோ, உஹது யுத்தம், பதுரு யுத்தங்களை சந்தித்தவர்கள் நாங்கள் என்றால் போதும், அதைவிட ஆயிரம் மடங்கு வெறி ஏறும்
இந்த புண்ணாக்குகளுக்கு. அது ஒரு தரும யுத்தம், இது மலடி புள்ளப் பெத்த கத.

சிங்கள ராணுவதமும், வாட்டசாட்டமான கம்பு தடிகளும் வந்து இறங்கியது, சிங்கள பொறுப்பான இராணுவா சிப்பாய்களால் கிராமங்கள் தோறும் குட்டி குட்டி பயிற்சிகள் அளிக்கப்பட்டது

இப்படி சிங்கள ராணுவ சிப்பாய்களிடம் பயிற்சி பெற்றவர்களைத்தான், பின்னாளில் இன்றுவரையும் நம்ம விதண்டாவாதம் பிடித்த சாதுக்களும், சிங்கள அரசியல் பொறாமைகளும் ஜிஹாத், ஜிஹாத் என்று சொல்லி வாய் கிழிய கத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

ஹாய், ஹாமுதுருணி துருணி, திஸ் இஸ் நாட் அ ஜிஹாத் ஹாமுதுருணி, திஸ் இஸ் அ க்ரூப் ஒப் தக்ஸ். உலக மகா அயோக்கியர்கள், இவர்களால் நாங்கள் வளர்ந்ததைவிட, இழந்தது அதிகம் ஹாமுதுருணி.

அப்போது ஓ ஐ சீக்களாகவும், எச் கிவ் ஐ க்களாகவும், செக்சன் கொமாண்டோக்களாகவும், கேர்ணல்களாகவும் இருந்தவர்கள்தான் இன்று டீ ஐ ஜீ க்களாகவும், மேஜர் ஜெனரல்கலாகவும் இருக்கின்றனர் என்பது ஒரு
கொசுறு செய்தி ஹாமுதுருணி.

கிழக்கு ஜெகஜோதியானது, அஸ்ரப் ஹாஜியாரும், எந்த கொள்கை, கோட்பாடுகளும் அற்ற ஒரு கூட்டமும் யெம்பி,யெம்பி , எம்பி ஆனார்கள், அஸ்ரப் ஹாஜியார் கொழும்பில் லோ பேர்ம் வைத்துக்கொண்டிருக்கும் போது அவருக்கு A4 பேப்பர் வாங்கி கொடுத்தவன், கொழும்பில் குட்டி குட்டி விழாக்கள் நடக்கும் போது, அந்த கூட்ட மேடைகளுக்கருகில் நின்று அஸ்ரப் ஹாஜியாரை பார்த்து சிரிச்சவன், அஸ்ரப் ஹாஜியார் கொழும்பில் இருந்து கிழக்கு மாகாணம் வந்து சேர பண உதவி செய்தவர்கள், கிழக்கில் மேடைகளில், நம்ம வண்ணை ஆனந்தன், காசி ஆனந்தன், மங்கயட்கரசி அக்கா போன்று மூளைக்கும் முன்னானுக்கும் சம்பந்தமில்லாமல் பேசிஉசுப்பேத்தியவர்கள், நல்லா கஞ்சா அடிச்சி,மேளதாளம் அடிச்சி ராகத்தாக பாட்டு பாடியவர்கள் எல்லாம் எம்பி ஆனார்கள்.

எம்பி ஆனதும்தான் தாமதம் அவர்களுக்கு அடியாட்கள் உருவானார்கள், ஒண்டு வெட்டுக் குத்து பார்ட்டி, கஞ்சா, அபின், மஸ்து, மஸ்து என அது மஸ்திலேயே கிடந்தது,

மற்றது பணமொளைக்கிற பார்ட்டி. இந்த வெட்டுக் குத்து பார்ட் டியவிட பணமொளைக்கிற பார்ட்டி ரொம்ப தெளிவாக இருந்தது. அதுதான் இப்ப ஞ்சானசாரதேரோட கிடிக்கிப் பிடிக்குள் மாட்டிக் கிட்டு ததிங்கினதோம்
பாடுது. கோட் இஸ் ஆல்வேஸ் கிரேட். இப்பெல்லாம்அவரும் நிண்டு, நின்றெல்லாம் கொள்வது கிடையாது, அதிரடி வைத்தியம்தான்.

சலாஹுதீண்ட பிலேண்டி கடையில, பிளேன்டி குடிக்க வக்கில்லாம இருந்தவன், கணேசண்ட சலூனுல முப்பது ரூபாய்க்கு பேரம் பேசி முடிவெட்டின எங்கட சோனவன், பம்பலப்பிட்டி பனான லீப் ( Banaana Leaf )புலயும், கொள்ளுப்பிட்டி புஹாரி ஓட்டல்லையும் Buhaari Hotel, மருதானை சாலிமார் ஓட்டல் லை யும் Saalimaar Hotel பேரம் பேசாமல் உண்ணத் தொடங்கினான்.

அந்த நேரம் நம்மாக்களுக்கு ஹில்டன் ஓட்டல், தலதாரி ஓட்டல் பற்றி அவ்வளவா தெரியா, இப்போ எல்லாமே ஹில்டனிலும், தலதாரியிலும், சினமன் கிராண்டிலும், ஹில்டன் ஜெய்க்கிலும்தான் நடக்கின்றது, அரசியல் வியாபார பேச்சுக்களை சொன்னேன்.

இப்போ அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை பெற சென்றால், அவர்களது தம்பிகளையும், தும்பிகளையும், வால்களையும்,வல்லூருகளையும், மேல்படி ஓட்டல் களில் சந்தித்து முடிவெடுக்க சொல்கின்றார்கள், முந்தாநாள் விம்மி விம்மி, நாட்டுக்காக ராஜினாமா செய்த அந்த ராஜாதி ராஜாக்கள். அல்லாஹ்ட பிள்ளைகள். அஸ்தஹ்ர்புர்லால்லாஹ் லலீம் ( நான் வணங்கும் எனது இறைவனே இந்த எட்டப்பனை மன்னித்தருள்வாயாக )

தமிழ் இளைஞ்சர்களின் துப்பாக்கிகளும், எங்க துப்பாகிகளும் சிங்கள அரசியல் வாதிகளுக்கு தேவை ஏற்படும் போதெல்லாம் பேசிக்கொண்டன, சிலாசித்துக்கொண்டன, உயிர்ப்பலிகளை எடுத்துக்கொண்டன.

விபரம் தெரியாமல் அங்கு தமிழ் இயக்கங்கள் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடு பட்டனர், இங்கு நம்மாக்கள் "தமிளன போட்டுட்டம்டா" என ஊருக்குள் பறை சாற்றிக்கொண்டனர்.

ஆம், இக்காலங்களில்தான் முழு அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல மாவட்டமானது, பொத்துவில்ல சோனகர்களின் ஊடுகளுக்கு பக்கத்தில், காபன் திஸ்ஸ மகாராஜாட பொண்டாட்டிட சக்களத்தி, முகுது குமாரிக்கு ( முகுது மஹா ) விகாரை கட்டப்பட்டது, ஒலுவில், பாலமுனை கிராம சேவையாளர் பிரிவுகள் திகாமடுல்ல பிரதேசமானது, ஒலுவில் ஹாபர் என்ற சனியன் மிக கோலாகலமாக நம்ம அதிபுத்திசாலி அஸ்ரபால் ஆரம்பிக்கப்பட்டது, தங்க வேலாயுத புரம் சேருவாவில ஆனது. கந்தளாய் என்ற மாநகரம் உருவானது, நம்மாக்கள் வாய்க்குள் விரல்வைத்தால் கூட சூப்ப தெரியாத நம்ம மாதாக்கள், கரையோர மாவட்டத்துக்கு ப்ளான் பண்ணிக்கொண்டிருந்தார்கள்.

இதை, இவைகளைப்பற்றி விவாதிக்க, கொஞ்சம் கிலாசிக்க அடிக்கடி ஒரு கூட்டத்தை கொழும்புக்கு அழைத்து, ஓள் ஆர் ப்ரீ ஒப் சார்ஜ். பனானா லீபுல வாழயிலைல ஹலால் சாப்பாடு, தலைமையகம் தாருஸ்ஸலாமில், படுக்கை, இருக்கை. மும் மொழி பாண்டித்தியம் பெற்ற தலைவரின் வேத வாக்குகள், மை கோட், மை கோட் இப்படி ஒரு தலைவர் இனி பொறக்கவே முடியாது என, கொழும்பு போய் வந்தவர்கள் ஊர் ஊரா கதை சொன்னார்கள்.

ஒரு பக்கம் தமிழ் நண்பர்கள் துப்பாகிகளைகாட்டி எங்களை அடக்க, மறுபக்கம் ரொம்ப ப்ளான் பண்ணி சிங்கள கொள்கை வகுப்பாளர்கள், எங்கள் காணிகளை, பூமிகளை, நகரங்களை ஆக்கிரமித்தார்கள்.

இங்கு விபரம் தெரிந்த அல்லது புரிந்த சோனவனுகள் விம்மி வெடிக்க, ரொம்ப விபரம் தெரிந்த "நாரே தக்பீர் அல்லாஹ் வக்பர்" என்று அரசியல் செய்ய வந்த கூட்டம் கொழும்பில், டாம் ஸ்ட்ரீட்டிலும், இரெண்டாம் குறுக்கு தெருவிலும், வெள்ளவத்தையிலும் சொத்து சேர்த்து, பில்டிங் கட்டி. வீதி வீதியாக கடை விரித்தார்கள்.

கொசுறு செய்தி - எனது கட்டுரையின் பாகம் - 2 இல் இவ்வாறு எழுதி இருந்தேன்...... மாக்கீன் மார்க்கார், ஜாயா, நைனார் மரைக்கார், பதியுடீன் மஹ்மூத், அலவி மௌலானா குரூப். புல்லுக்கும் நோகாமல், காலுக்கும் நோகாமல் நடந்து, எல்லாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டு, தங்களது புள்ள, குட்டி, குட்டிட குட்டிகளுக்கு, வெளி நாடுகளிலும், உள்நாட்டிலும் சொத்துக்கள் சேர்த்து வைத்து விட்டு, வேடிக்கை காட்டிய வள்ளல்கள்.

செல்வாக்கு மிக்கவர்கள், சொல்வாக்கு தவற மாட்டார்கள். இவர்களை பொறுத்தவரை நாங்கள் கிட்டதட்ட தேர்ட் கிளாஸ் பீப்பிள். ஒரு அரச உத்தியோகம் எடுப்பதற்காக தேனும், திணை மாவும் கட்டிக்கொண்டு இவர்கள தேடிச் சென்றால், வீட்டுக்கு வெளியே உட்கார வைத்து, சிங்கள மந்திரிக்கு ஒரு ரெக்கமெண்டேசன் லெட்டர் எழுதி தருவார்கள். இவர்களுக்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பு அவ்வளவுதான்...............................

ஆம்....நம்ம அரசியல் வியாபாரிகள் அனைவரும் இறுதியில், அத்துரலிய தேரருக்கு பயந்து பௌசியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக போய் விழுந்துதான், அவர்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளார்கள்.

கோட்டு, சூட்டு, டை கட்டிய இந்த மனிதர்கள் எப்போதும் அடக்கியே வாசிப்பார்கள், சிங்கள மக்களை அதட்டியும் பணிய வைப்பார்கள், நம்மாக்கள் மாதிரி பம்மாத்துக்கள் கிடையாது. தே ஆர் ஆல்வேஸ் ஜென்டில்மேன்ஸ்.

ஜாவா, சுமாத்ரா, இந்தோனேசியாதான் இவர்களது பூர்வீகம் என்று சிறிலங்காவில் உள்ள பழைய ஏடுகள் பொய் சொல்கின்றன. நெவெர், தே ஆர் ஒரிஜினலி ப்றம் மொராக்கோ ஓர் யேமன். இல்லை, இல்லவேயில்லை இவங்க நம்ம ஊர் காரங்க, பரங்கிப்பேட்டகாரங்க, இந்தியாவில், இன்னும் பிரான்சின் காலனியாக இருக்கும் பாண்டிச்சேரி இவர்களது முதலாவது தரிப்பிடம், இரண்டாவது தரிப்பிடம்தான் கொழும்பு துறை முகத்தை அண்டியபகுதி, நீண்டமூக்கு, நேரிய பார்வை, சொந்தயிடம், பிறந்த இடம் எல்லாமே மொரோக்கோவும், யேமனும்.

அடிக்கடி பாரியகட்டுமரங்களில் உலக உலாவருவார்கள், வியாபார நோக்குடன் வருவார்கள். இவர்களுக்கு இந்தியா புடிக்கும், அதிலும் பாண்டிச்சேரி ரொம்ப புடிக்கும், பாண்டிச்சேரியில் பரங்கி பேட்டை என்றால் மொரோக்கோ காரர்களுக்கு ஜாலிதான், மூன்று மாதம் ஆறுமாதம் அங்கேயே தங்கி விடுவார்கள். அப்புறம் கொழும்பு துறைமுகத்துக்கு ஒரு குட்டி விசிட். அவ்வாறு கொழும்பு வந்து தங்கியவர்களின் வாரிசுகள்தான் இவர்கள். இவர்கள் அனைவரும் சிறிலங்காவில் அப்போது இருந்த ஸ்ரீலங்கா பெண்களையே மணந்தார்கள். வாழ்ந்தார்கள். இந்த பரங்கிப்பேட்டை கார்கள் இந்தியாவில் எங்கும் வேலை தேடவும் மாட்டார்கள்,
வேலை செய்யவும் மாட்டார்கள். நேராக அரபி நாடுகள்தான். அரபி சேக்குகளின் குசுனி வரை சென்று ஆட்சி செய்வார்கள். நாணயஸ்தர்கள். நா நயம் மிக்கவர்கள்.

(அடுத்த பதிவில் -கள்ளத்தோணியில் அல்லது நல்ல தோணியில் வந்து கொழும்பிலும், ஹம்மான்தொட்டே யிலும், தங்காலயிலும், கல்முனையிலும் இறங்கியவர்கள் யார் ? இந்திய உயர்சாதிகளினால், சாதிவாரியாக விரட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இஸ்லாத்துக்கு மதம்மாறி, சாரிசாரியாக துரத்தப்பட்ட அந்த முஸ்லிம்களுக்கும், ஸ்ரீலங்கா முழுக்க வேண்டத் தகாதவர்களாக பார்க்கப்படும் இந்த சோனவனுக்கும் என்ன தொடர்பு,
தெலுங்கானாவில் இருந்து கள்ளத்தோணியில் வந்து மன்னாரிலும், பேருவலவிலும், மாத்தற ஹக்மனயிலும் இறங்கிய அந்த நாயக்கர்களும், பண்டார(ம்)க்களும் இப்போ எங்கே என தேடுவோம்........சமாவெண்ட மித்துருவருணி )

( இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால் நிட்சயமாக தொடருவேன்...... )
08--06--2019.
yahiyawasith@ymail.com

Read more...

Saturday, June 8, 2019

சுயபரிசோதனை- பாகம்-3 ஜனநாயகமும் சிறுபான்மையின் அவலங்களும். வை எல் எஸ் ஹமீட்

உலகின் ஆட்சிமுறையை பிரதானமாக இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று ஜனநாயகம், அடுத்தது சர்வாதிகாரம். சர்வாதிகாரம் என்பது மன்னராட்சியாக, கம்யூனிசமாக, சோசலிசமாக எந்தவடிவத்தையும் எடுக்கலாம்.

இரண்டுவகை ஆட்சிக்குமான அடிப்படைவேறுபாடு

ஜனநாயகம் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை அனுமதிக்கும். சர்வாதிகாரம் அனுமதிக்காது. உதாரணமாக கம்யூனிச நாட்டில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஜனநாயகம் liberalism மற்றும் human rights ஆகியவற்றை தன்னுடன் எப்போதும் அரவணைத்துச் செல்லும். அதனால்தான் human rights promote democracy என்று கூறுவார்கள்.

Liberalism


இங்கு liberalism என்பது தனிநபர் சுதந்திரத்தைக் குறிப்பிடுகின்றது. இந்த சுதந்திரம் என்பதை தனது ஆட்சியாளரை தான் தீர்மானிப்பது, தனது வாழ்வுமுறையை தான் தீர்மானிப்பது போன்ற பலவிடயங்களை உள்ளடக்கும். தனது வாழ்வுமுறையைத் தீர்மானிப்பதில் ஆட்சியாளரின் தலையீட்டு எல்லை என்பதைப் பொறுத்து இந்த liberalism த்தின் எல்லை தீர்மானிக்கப்படுகிறது.

இங்கு liberalism, அதனைவிட விரிந்த neo liberalism என்கின்ற விடயங்கள் வருகின்றன. இந்த liberalism த்தைக் கட்டுப்படுத்துவதில் socialism இத்தின் பங்கு- அதாவது welfare state இன் பங்கு போன்றவை இருக்கின்றன.

வாக்குரிமை

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இப்பூமியில் எங்கோ ஓர் இடத்தில் சம உரிமையுடன் வாழுகின்ற தகுதி இருக்கின்றது. அத்தகுதி ஒருவருக்கு அதிகமாகவும் ஒருவருக்கு குறைவாகவும் இருக்க முடியாது.

இருவரில் இருந்து பெருகிய மனித இனம் உலகின் பல இடங்களுக்கும் இடம்பெயர்ந்து வாழ்ந்தாலும் எங்கு அவன் சில தலைமுறைகளாக வாழ்கின்றானோ அது அவனது முழு உரிமையுடைய வாழ்விடமாகும்.

நாடுகள் என்ற கோட்பாடு மனித தொடக்கத்தில் உருவானதல்ல. பிற்காலத்தில் உருவானதாகும். காலப்போக்கில் நாட்டின் பிரஜை என்ற கோட்பாடு உருவாகியது. இவைகள் மனிதனால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகள். இந்த அடிப்படையில் ஒரு நாட்டின் அனைத்துப் பிரஜைகளுக்கும் அங்கு சம உரிமை இருக்கின்றது.

ஜனநாயகத்தில் ஒரு நாட்டுப்பிரஜைகள் தனது ஆட்சியாளரைத் தீர்மானிப்பதற்கு வழங்கப்படுகின்ற அந்த உரிமைதான் வாக்குரிமையாகும். எல்லாரும் சமம் என்பதனால்தான் எல்லோருக்கும் ஒரேவிதமான வாக்குரிமை வழங்கப்படுகிறது.

பெரும்பான்மை தத்துவம்

தனது ஆட்சியாளரைத் தீர்மானிக்கின்ற உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இருக்கின்றது. அதற்காக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு ஆட்சியாளன் இருக்கமுடியாது. இந்தக்குழப்பத்தைத் தவிர்க்க உருவான கோட்பாடுதான் பெரும்பான்மைத் தத்துவம் என்பதாகும்.

அதாவது 100 பேரில் 51 பேர் ஒரு முடிவையும் 49 பேர் மாற்றுமுடிவையும் எடுத்தால் 51 பேரின் முடிவு செல்லுபடியாகும். இங்கு 51 பேருக்கும் 49 பேருக்குமிடையில் ஓர் மறைமுக உடன்பாடு ஏற்படுகின்றது. அதாவது உங்கள் 51 பேரின் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்; அடுத்த தடவை நாங்கள் 51 பேராக மாறும்போது அதனை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; என்பதாகும். இதுதான் பெரும்பான்மைத் தத்துவத்தின் அடிப்படையாகும்.

ஜனநாயகம் செயற்படுவதென்பது இந்த பெரும்பான்மைக் கோட்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. இக்கோட்பாடுதான் ஜனநாயகத்தின் பலமாகும். அதேநேரம் இக்கோட்பாடுதான் ஜனநாயகத்தின் பலவீனமுமாகும். இன்று ஜனநாயக உலகில் சிறுபான்மைகளின் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணியே இப்பெரும்பான்மைவாதக் கோட்பாடே!

இந்தப்பெரும்பான்மை என்பது அரசியல் கருத்தின் அடிப்படையிலான பெரும்பான்மையே தவிர இன, மத, மொழி ரீதியான பெரும்பான்மை அல்ல. அதேநேரம் இந்த அரசியல் பெரும்பான்மை அரசியல் சிறுபான்மையை அடக்கியாள முற்படுவதை “ Tyranny of Majoritarianism என்பார்கள். அதனை ஒரு சில அடிப்படை விடயங்களிலாவது தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கோட்பாடுதான் Doctrine of Constitutionalism. இது ஒரு சட்ட ஆய்வுக் கட்டுரை இல்லையென்பதனால் அதற்குள் செல்ல விரும்பவில்லை.

ஜனநாயகம் என்பதே ஒரு அரசியல் கோட்பாடாகும். இங்கு பேசப்படவேண்டியது அரசியல் பெரும்பான்மை, அரசியல் சிறுபான்மை என்பனவாகும். ஆனால் சிறுபான்மைகள் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்ற நாடுகளிலெல்லாம் அவை இன, மொழி, மத, சாதி போன்ற ரீதியான பிரச்சினைகளாகவே இருக்கின்றன.

இவற்றிற்கு காரணம் என்ன? இவற்றிற்கு தீர்வு என்ன? இவற்றை ஆராய்வதுதான் இக்கட்டுரையின் பிரதான கருப்பொருளாகும்.

ஜனநாயகம் தவறாகப் பயன்படுத்தப்படல்

மேலே பார்த்ததுபோல் ஜனநாயகம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை அனுமதிப்பதாகும். எனவே இங்கு முடிவுகள் கருத்தின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆட்சிக்காக போட்டியிடுபவர்களில் யார் சிறந்தவர் என பெரும்பான்மை நினைக்கிறதோ அவர் ஆட்சியாளராக வேண்டும்.

இங்கு கருத்தின் அடிப்படையிலான பெரும்பான்மை, அதாவது அரசியல் பெரும்பான்மையே மையப்பொருளாகும். அப்பொழுதுதான் இன்று 49 பேராக இருப்பவர்கள் நாளை 51 ஆகவும் 51 பேராக இருப்பவர்கள் 49 ஆகவும் மாறமுடியும். ஆனால் அதிகமான பல்லின சமூகங்கள் வாழுகின்ற நாடுகளில் கருத்தினடிப்படையிலான பெரும்பான்மைக்கு இடமே இல்லை; வெளியில் கருத்தினடிப்படையிலான பெரும்பான்மையாக தோற்றியபோதும்.

இங்குதான் ஜனநாயகம் படுதோல்வி அடைகின்றது.

இங்கு கருத்தினடிப்படையிலான பெரும்பான்மைக்குப் பதிலாக இன, மொழி, மத என்று வேறுவகையான பெரும்பான்மையே இந்த “பெரும்பான்மை” என்ற சொல்லை தனதாக்கிக்கொள்கிறது. கருத்தினடிப்படையிலான “பெரும்பான்மைக்கு” அங்கு இடமில்லை.

இதனாலேயே ஆளும் இனம், ஆளப்படும் இனம் என இரண்டு வகையான நிரந்தர இனங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆளும் இனம் ஆளப்படும் இனம் என இரு நிரந்தர இனம் இருக்குமாயின் அது அடிப்படை ஜனநாயக கோட்பாட்டிற்கு முரணானது. அது ஜனநாயகமாக இருக்க முடியாது.

இங்குதான் ஜனநாயகம் படுதோல்வி அடைகின்றது. ஆனால் அதனை யாரும் உணர்வதில்லை.

போலிப்பெரும்பான்மை ஜனநாயக் கோட்பாடு

பல்லின சமூகம் வாழுகின்ற பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் “ கருத்தியல் பெரும்பான்மை” என்பதில் உள்ள “ கருத்தியல் “ என்ற சொல் நீக்கப்பட்டு “ பெரும்பான்மை “ என்ற சொல் மட்டும் தனியாக எடுக்கப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது.

அதாவது, இன, மத, மொழி போன்ற அடையாளங்களின் அடிப்படையில் பெரும்பான்மையாக இருக்கின்ற ஒரு சமூகக்குழு அந்தப்பெரும்பான்மை என்ற சொல்லை தனது சமூகத்திற்குரியதாக வரித்துக்கொள்கிறது. இதனால் அந்த சமூகம் நிரந்தர ஆளும் சமூகமாக மாறுகிறது. கருத்தியல் பெரும்பான்மையை அந்த சமூகத்திற்குள் மட்டுப்படுத்தப்படுகிறது.

இந்த சமூகக்குழுவின் அடையாளங்களிலிருந்து மாறுபட்ட ஏனைய சிறுபான்மையோர் ஆளப்படும் நிரந்த வர்க்கமாக மாற்றப்படுகிறார்கள்.

உதாரணமாக, ஆளப்படும் இனத்தில் இருந்து ஆட்சிசெய்வதற்கு எல்லாவகையிலும் அதிசிறந்தவராக கருதப்படக்கூடிய ஒருவர் போட்டியிட்டாலும் அவர் ஆட்சியளராக தெரிவுசெய்யப்பட முடியாது; ஏனெனில் கருத்தியல் பெரும்பான்மைக்கு அங்கு இடமில்லை. மாறாக, அவரைவிட பலவகையில் தகைமை அல்லது ஏற்புடைமை குறைந்தவராக இருந்தாலும் அவர் அந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தால் அவர்தான் ஆட்சியாளராக வரமுடியும்.

பெரும்பான்மைக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர் போட்டியிடும்போது அவர்களுக்குள் யார் ஆட்சியாளர் என்பதில்தான் கருத்தியல் பெரும்பான்மைக் கோட்பாடு வேலை செய்கின்றது.

எனவே, இந்த ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலயீனமே “ ஆளும் இனம், ஆளப்படும் இனம் என இருவகை இனங்களை உருவாக்குவதாகும். ஆனால் அதன் அடிப்படைத் தத்துவம் அதுவல்ல. அது நிரந்தர ஆளும் இனத்தை உருவாக்க முடியாது. ஏனெனில் கருத்து நிரந்தரமானதல்ல.

மறுபுறம், ஒரு ஜனநாயக நாட்டில் சகலரும் சமம் என்றால் சமூகம் என்ற வேறுபாடுகளுக்கப்பால் எந்தவொரு பிரஜைக்கும் ஆட்சியாளராக வரும் உரிமை இருக்கவேண்டும். அவரின் தகமை, கொள்கை, ஏற்புடமை என்பனதான் அவரைத் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கவேண்டும். ஆனால் சிறுபான்மையைச் சேர்ந்த ஒருவர் எவ்வளவு தகைமையுடையவராக இருந்தாலும் அவர் சிறுபான்மை என்பதற்காக ஆட்சியாளராகும் தகுதியை இழக்கின்றார் சட்டத்தில் அத்தகுதியீனம் இல்லாதபோதும்கூட.

எல்லோரும் சமம் என்றால் எவ்வாறு நிரந்தரமான ஆளும் இனம், ஆளப்படும் இனமென இருவர்க்கங்கள் உருவாக முடியும். ஜனநாயகத்தின் இப்பலயீனம்தான் சிறுபான்மைகளின் பிரச்சினைகளுக்கு அடிப்படையாகின்றன. அறிஞர்கள் ஜனநாயகம்தான் சிறந்தமுறை என்று கூறவில்லை. இருப்பவற்றுள், குறிப்பாக சர்வாதிகாரத்துடன் ஒப்பிடும்போது ஜனநாயகம் சிறந்தது; என்றே கூறுகிறார்கள்.

எல்லோரினதும் சமத்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஒரு புதியமுறை ஒன்றை உருவாக்கமுடியுமா? என்பது எதிர்கால ஆராய்ச்சிகளில் தங்கியிருக்கின்றது. ஆனாலும் தற்போதைக்கு சில தீர்வுகளாகத்தான் மனித உரிமைக் கோட்பாடுகள், அரசியலமைப்புச் சட்டம், சட்டத்தின் ஆட்சி, ஐ நா மனித உரிமை ஆணையம் என்றெல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையும் மீறியதாகவே பெரும்பான்மை வாதத்தின் தாக்கம் பல சந்தர்ப்பங்களில் இருக்கின்றது.

சிறுபான்மை நிலைப்பாடு


ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்பது ஜனநாயகத்தின் பலயீனத்தில் இருந்து பிறக்கும் கோட்பாடானபோதிலும் சிறுபான்மைகள் பெரும்பான்மை இனத்தை ஆளும் இனமாக ஏற்றுக்கொள்வதில் ஒருபோதும் மறுப்புத் தெரிவிப்பதில்லை.

சிறுபான்மையைச் சேர்ந்தோர் ஒருபோதும் தாம் ஆட்சியாளராக வரவேண்டுமென்று கேட்பதில்லை. மாறாக பெரும்பான்மையை ஆளும் இனமாக தாராளமாக ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவருக்கே ஆட்சியாளராக வர இவர்களும் இணைந்து சந்தர்ப்பம் வழங்குகிறார்கள்.

முரண்பாடு

மனிதன், பிரஜை என்ற அடிப்படையில் சம உரிமை இருந்தும் ஆளும் வர்க்கம் என்ற பெரும்பான்மையின் அந்தஸ்த்தை சிறுபான்மையும் ஏற்பதையே சகவாழ்வின் பெரும்பேறாக பெரும்பான்மை கருதவேண்டும். ஆனால் ஆளும் இனம் தன்னை முதல்தர பிரஜைகளாகவும் நாடு அவர்களுக்குரியதாகவும் கருத முற்படும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கின்றது.

சிறுபான்மைகளை அரவணைக்கக்கூடிய பெரும்பான்மை அரசியல் கட்சிகளை சிறுபான்மைகள் அரவணைக்க முற்படும்போது அடுத்த பெரும்பான்மை அரசியல் கட்சிகள் சிறுபான்மைகளின் தயவின்றி தனிப்பெரும்பான்மை வாக்குகளைப் பெறுவதற்காக பெரும்பான்மையிடம் சிறுபான்மைக்கெதிரான உணர்வுகளை ஊட்டுகின்றனர்.

தம் அடிமனதில் தாம் ஆளும் இனம், சிறுபான்மை ஆளப்படும் இரண்டாம்தர பிரஜை என நினைக்கும்போது சிறுபான்மைக்கெதிராக அடக்குமுறையை அட்டாகாசங்களைக் கட்டவிழ்ப்பது அவர்களுக்கு இலகுவாகின்றது.

சட்டம் எல்லோருக்கும் சமம் என்றபோதிலும் சட்டத்தின் ஆட்சி நடக்கின்றது என்ற போதிலும் பெரும் ஊர்களையே அழித்தவர்களை சாதாரண சட்டத்தின்கீழ் கைது செய்து இலகுவாக பிணையில் விடுவித்ததும் அப்பாவிகளைக் கைதுசெய்து கடுமையான சட்டங்களின்கீழ் சிறையில் வாடவைத்ததும் அதே மனோநிலைதான்.

பெரும்பான்மை வாதம்

இந்தப் பெரும்பான்மை வாதம் பல நாடுகளில் பல சந்தர்ப்பங்களில் சிறுபான்மைகளின் தனித்துவ அடையாளங்களை, வாழ்வியல் அம்சங்களை ஏற்றுக்கொள்ள மறுத்து பெரும்பான்மையோரின் வாழ்வியல் முறைகளைத் திணிக்க ஏதுவாக இருக்கின்றது.

புதிய நாடுகள் உருவாதல்


இரண்டாம் உலகமகா யுத்தின்பின் பல நாடுகள் சுதந்திரம் பெற்றன. அவ்வாறு சுதந்திரம் பெற்ற நாடுகளுக்குள் பல இன, மத, மொழி, காலாச்சார வேறுபாடுகளைக்கொண்ட பிரிவினர் இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் தங்களை அரசியல் ரீதியாக ஒரு தேசியமாக அடையாளம் கண்டார்கள். அந்நியரிடம் இருந்து சுதந்திரம்பெற்று ஒற்றுமையாக, ஒரு அரசிசயல் கருத்தின் அடிப்படையிலான தேசியமாக தம்மைத் தாமே ஆள முற்பட்டார்கள். அதன் அடிப்படையிலேயே ஒன்றுபட்ட சுதந்திரத்திற்காக போராடினார்கள்.

அதற்கு உடன்பாடில்லாதவர்கள் சுதந்திரத்தின்போதே பிரிந்து சென்றார்கள். உதாரணம் இந்தியா, பாகிஸ்தான். இவ்வாறு சுதந்திரம் பெற்றதன்பின் தம்மை ஒரு அரசியலடிப்படையிலான தேசியமாக கருதுவதற்குப் பதிலாக, கருத்தியல் பெரும்பான்மைக்கு இடம் கொடுப்பதற்கு பதிலாக இன, மத, மொழி ரீதியான பெரும்பான்மை இனக்குழுக்கள் ஜனநாயகத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி ஆளும் இனம், ஆளப்படும் இனம் என்ற உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்படாத கோட்பாடுகளை உருவாக்கினார்கள்.

அத்தோடு நின்றுவிடாமல் ஆளப்படும் இனங்கள் மீது நேரடி, மறைமுக அடக்குமுறைகளை கையாண்டார்கள். இதன் விளைவாக புதிய தேசியக்கோட்பாடுகள், சுயநிர்ணய உரிமை போன்ற தத்துவங்கள் முன்னுரிமை பெற்றன. நாடுகள் பிரிந்தன.

இலங்கையின் அனுபவம்

சுதந்திர இலங்கையிலும் இதே நிலைதான் தோன்றியது. தனிச்சிங்கள சட்டம்; தமிழருக்கெதிராக தொடராக அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலைகள்; இவ்வாறான நிகழ்வுகள்தான் தமிழர்கள் தங்களை ஒரு தேசியமாகவும் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துள்ள ஒரு சமூகமாகவும் வலியுறுத்தும் நிலைக்குத்தள்ளி தனிநாட்டுப் போராட்டத்திற்கும் வித்திட்டது.

முஸ்லிம்கள்

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களும் பல பாதிப்புக்களை எதிர்நோக்கியபோதிலும் அவ்வாறான போராட்டங்கள் எதிலும் ஈடுபடவில்லை. முடிந்தளவு பெரும்பான்மை சமூகத்துடன் இணைந்துசெல்லவே முற்பட்டார்கள். ஆனால் யுத்தவெற்றி பெரும்பான்மை வாதத்தின் பிரதான இரையாக முஸ்லிம்கள் மாற்றப்படுமளவுக்கு இட்டுச் சென்றது.

பெரும்பான்மை வாதம் முஸ்லிம்களின் ஹலால் உணவைக் கேள்விக்குறியாக்கியது.

முஸ்லிம்களின் ஆடையைக் கேள்விக்குறியாக்கியது.

அவர்களது தனியார் சட்டங்களைக் கேள்விக்குறியாக்கியது.

அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்களது தனித்துவ கட்சிமுறையைக் கேள்விக்குட்படுத்தியது.

அவர்களது வர்த்தகத்தைக் கேள்விக்குட்படுத்தியது.

இவ்வாறு பட்டியல் நீளும்.

இவ்வளவும் நிகழ்ந்தாலும் முஸ்லிம்கள் தமிழர்களைப்போல் தனிநாடு கோரவில்லை. கோரவும் முடியாது. காரணம் அவ்வாறான புவியியல் சூழல் அவர்களுக்கு இல்லை.

பெரும்பான்மையைப் பகைத்துக்கொண்டு வாழமுடியாது. காரணம் அவர்களது மார்க்கம் அமைதி, சமாதானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒருவரைச் சந்திக்கும்போது முகமன் கூறுவதே “ உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக” என்றுதான். மட்டுமல்ல, முஸ்லிம்கள் பெரும்பான்மைக்குள் சிதறிவாழுகின்ற சிறுபான்மை.

இந்நிலையில், ஜனநாயக் கோட்பாட்டின் பலம், பலயீனம் எவ்வாறானபோதிலும் பெரும்பான்மை சமூகத்தின் நிரந்தர ஆட்சியாளர் என்ற அந்தஸ்த்தை அங்கீகரித்து அழகுபார்ப்பதில் ஒருபோதும் எதுவித தயக்கமுமில்லாத ஒரு சிறுபான்மை சமூகத்தின் தனித்துவ அடயளங்கள் ஏன் மறுக்கப்படுகின்றன? அவர்களின் அமைதியான, நிம்மதியான வாழ்வு ஏன் கேள்விக்குறியாக்கப்படுகின்றது?

இவைகளுக்கான தீர்வு எங்கே இருக்கிறது. சபாநாயகர் முஸ்லிம்களின் ஆடைவிடயத்தில் ‘ இலங்கைக் கலாச்சாரம் பின்பற்றப்பட வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவர் அராபிய கலாச்சாரம் கைவிடப்பட வேண்டும்; எனத் தெரிவித்திருக்கிறார். இந்த விடயங்களில் இவ்வாறு உயர்மட்டத் தலைவர்களுக்கு மத்தியிலேயே தவறான புரிதல் இருக்கின்றது.

இவ்வாறு பல விடயங்களில் முஸ்லிம்கள் தொடர்பாக தவறான புரிதல்கள் இருக்கின்றன. இவற்றைத் தெளிவுபடுத்த நாம் காத்திரமாக எதையாவது செய்திருக்கின்றோமா? அரசியல்ரீதியாக நமது கடமைகளைச் செய்திருக்கின்றோமா?

இன்று நமது அரசியலில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்ட தோற்றப்பாடு இருக்கின்றது. அது சில சாதக விளைவுகளைத் தரக்கூடிய சில அடையாளங்கள் தெரிகின்றன. எனவே, இவ்வாறான தவறான புரிதல்களை நிரந்தரமாக களைவதற்கு அரசியல், சமூக ரீதியாக நாம் எதிர்காலத்தில் செய்யப்போகும் பங்களிப்புக்கள் என்ன?

இவைகள் தொடர்பாக நாம் விரிவாக ஆராயவேண்டும்.

Read more...

Monday, June 3, 2019

அல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - பாகம் 3. யஹியா வாஸித்

மொத்த ஸ்ரீலங்கா சோனவர்களினதும் டேர்ணிங் பாயிண்ட் இது. 1983 ஜூலை கலவரம் முடிந்த பின்னும், 2009 புலிகளை அடக்கி, ஒடுக்கி ஊமை களாக்கியபோதும் சிறிலங்காவில் உள்ள மொத்த சிறு பான்மையினருக்கும், ஒரு செய்தி ரொம்ப தெளிவாகவும், கூர்மையாகவும் சொல்லாமல் சொல்லப் பட்டது.

இது சிங்கள தேசம், இங்கு நாங்கதான் ராஜா, ராணி, மெஜாரிட்டி எல்லாமே, நீங்க ரெண்டு பேரும், இந்த நாட்டுக்கு வாழ வந்தவர்களே தவிர, ஆள வந்தவர்கள் அல்ல. ஹ்ம் புரிஞ்சிக்கோங்க.

புரிஞ்சவங்க புரிஞ்சிகோங்க, புரியாதவங்க புரிஞ்சவங்களுக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க என்றும் சொல்லப்பட்டது.

1971 ,1977 தேர்தல் காலங்களில் தமது வாக்கு வங்கிக்காக தமிழ் அரசியல் தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களால் உருவேற்றப்பட்ட அப்போதைய தமிழ் இளைஞர்களும், தரப்படுத்தலால் பாதிக்கப்பட்ட ஒருசிலரும், தம்மை சுற்றியுள்ள நாடுகளில், பிள்ளைகளையும் கிள்ளி தொட்டில்களையும் ஜாலியாக ஆட்டும், இந்திய அரசியல் கொள்கைவகுப்பு சாணக்கியர்களும், சிங்கள ஸ்ரீலங்கா அரச இயந்திரங்களின்
சிக்னல்களை கண்டு கொள்ளவே இல்லை.

1983 ஜூலை தமிழ் மக்களுக்கு ஒருவகையில் அடியாக இருந்தாலும், பல வகைகளில் அவர்களுக்கு பல கதவுகளும் திறக்கப்பட்டன, உத்தரப்பிரதேசத்தின் மலையடிவாரங்களில் இந்திய இராணுவ ஜவான்களால் தமிழ் இளைஞர்களுக்கு இராணுவ பயிற்ச்சி இந்திராகாந்தி அம்மையாரின் பூரண ஆசியுடன் வழங்கப்பட்டது.

எப்போதுமே தங்களை அதிபுத்திசாலிகள் எனக்காட்டிக் கொள்ளும் வடமாகான மேல்தட்டு வர்க்கமும், அரசியல் சாணக்கியம் பேசி மொத்த தமிழர்களையும் பலிக்கடாவாக்கிய அரசியல்வாதிகளின் சொந்தம் , பந்தம், அடுத்த ஊடு, அல்லியல் ஊட்டுக்காரனுகள் எல்லாம் சந்தோஷமாக அயிரோப்பிய, அவுஸ்ட்ரேலிய, அமெரிக்க நாடுகளை சென்றடைய வழிகள் வகுத்துக்கொண்டார்கள்.

ஆனால் ஸ்ரீலங்கா சோனகர்கள் இவைகளை கண்டு கொள்ளவே இல்லை. இவர்கள் பணத்திலும், வியாபாரத்திலும், எங்கள் அல்லாஹ், நாங்க வான லோகத்தில் இருந்து நேரடியாக இந்த நாட்டுக்கு இறக்கப்பட்டவர்கள் என்ற ஒரு இறுமாப்பிலும் சுற்றிக்கொண்டு திரிந்தார்கள்.

1983 இறுதி மாதங்களில் இந்திய ராணுவத்தால் பயிற்ச்சி அளிக்கப்பட்ட, அந்த தமிழ் இளைஞர்கள், வடகிழக்குக்கு திரும்பி வந்து ஒரு காட்டு காட்டும்வரை. ஸ்ரீலங்கா சோனவனுகளுக்கு ஒண்ணுமே புரியல . கண்ணும் தெரியல.

திரும்பிய தமிழ் இளைஞர்கள் தமது துப்பாக்கிகளை அடிக்கடி முஸ்லிம்களையும் நோக்கி சுட்டு, மிரட்டி, ட்ரயல் பார்த்துக் கொண்டார்கள். அந்த துப்பாக்கி சத்தங்கள் முஸ்லிம்களை நோக்கி நீட்டப்படுவது , சிங்கள அரசுகளுக்கும் ரொம்ப ஆரோக்கியமாகவும், ஆறுதலாகவும் இருந்தது. வீ டோன்ட் வான்ட் டு வேஸ்ட் அவர் ஒண் புல்லட்.

அந்த தமிழ் இளைஞர்களுக்கு, முஸ்லிம்களிடம் உள்ளகாணிகள், பூமிகள், வயல்வெளிகள், கடைகள், எல்லாமே, தங்களது முன்னோர்களிடம் இருந்து கபளீகரம் செய்யப் பட்டது, ஏமாற்றி வாங்கப்பட்டது என்று தெளிவாக சொல்லப் பட்டிருந்தது. அது ஒரு வேதமாகவே ஓதப்பட்டுமிருன்தது.

இப்போது அதே தத்துவத்தை முப்பத்தி அயிந்து வருடத்துக்கு பின்னர் தூக்கி பிடித்துக்கொண்டு நம்ம குட்டி தம்பி வியாளேந்திரன் கிளம்பியுள்ளார். பாவம் !!

தமிழ் பேசும், தமிழ் நல்லுலகே அந்தப்பிள்ளைக்கு இந்தமுறை கொஞ்சம் அதிகப்படியாகவே வாக்களித்து, மீண்டும் ஒரு எம்பி ஆக்கி விடுங்கள். அடுத்த பதினைந்து, இருபது வருடத்துக்கு உங்களுக்கெல்லாம் தீனி போடுவார், ஆம் உணர்ச்சித் தீனி போடுவார். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

1983 ஜூலை கலவரத்தின் அதி உச்சமாக, தென் மாகாண சிறைக்கூடங்களில் இருந்த குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உட்பட எண்பதுக்கு மேற்பட்ட, தமிழீழ போராட்டத்தில் முன்னணி வகித்த இளைஞர்கள், சக சிங்கள கைதிகளால் அல்லது அரசால் திட்டமிட்டு கொல்லப்பட்டார்கள். இதனால் மிச்சம் இருந்த தமிழ் கைதிகள் மட்டக்களப்பு சிறைச் சாலைக்கு மாற்றப்பட்டார்கள்.

இவ்வாறு மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ள அந்த தமிழ் இளைஞர்களை, மட்டக்களப்பு சிறையை உடைத்து மீட்டெடுப்போமா என, ஒரு கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர் வடமாகாண தமிழ் இளைஞர்களை பார்த்து கேட்ட போது, அந்த அளவுக்கு நமக்கு ஆயுத பலம் இல்லை எனக் கூறி ஒளித்தோடியவர்கள், மூன்று நாட்களில், அந்த முஸ்லிம் இளைஞரின் தலைமையில், அம்பாறை மாவட்ட தமிழ் இளைஞர்கள் ஆறு பேரின் துணையுடன், அறுபது துப்பாக்கிகள் சேகரித்து வடக்குக்கு செய்தி அனுப்பியதும், கிழக்குக்கு ஓடோடி வந்து, துப்பாகிகளை இரவோடிரவாக எடுத்து சென்று, கிழக்கு மாகாண
இளைஞர்களின் பூரண ஒத்துழைப்புடன், மட்டக்களப்பு சிறையையும் உடைத்து, இளைஞர்களையும் மீட்டு விட்டு, இந்திய கரையோரங்களுக்கு சென்றதும், ரொம்ப வாகாக வட மாகாண இளைஞர்களின் சாதனை இது என, ஜூனியர் விகடனுக்கும், துக்ளக்குக்கும் பேட்டி கொடுத்து, மொத்த கிழக்கு மாகாண மக்களுக்கும், அப்போதே நீங்க வேற, நாங்க வேற என ஆயுத தாரிகள் கோடிட்டு காட்டி விட்டனர், இது புரியாமல் அல்லது தெரியாமல்தான் இருபது வருடத்தின் பின் கருணா என்கின்ற முரளிதரன், கையை சுட்டுக்கிட்டு 2003 களில் கிழக்குக்கு ஓடோடி வந்தார்.

இதில் இன்னும் வேதனையான விடயம், வடமாகான, குறிப்பாக ஆயுத மோகம், பலம் கொண்ட தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கிழக்கு மாகாண இளைஞர்களை இரெண்டாம் பட்சமாக நினைத்தார்களோ, அதைவிட கேவலமாக கிழக்குமாகான முஸ்லிம்களை கிழக்குமாகான ஆயுத பலம் பொருந்திய இளைஞர்களும், மெத்தப் படிச்ச அல்லது பிழைக்க தெரியாத கொஞ்சம் தமிழர்களும் முஸ்லிம்களை கேவலப்படுத்த முனைந்தார்கள்.

எந்த காரணமுமில்லாமல் முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள் கடைகள் எரிக்கப்பட்டன, வீடுகள் கொள்ளையிடப்பட்டன, பாரியளவில் கப்பங்கள் பெறப்பட்டன, கிழக்கில் உள்ள மொத்த காணிகளும், வயல்வரப்புக்களும் தங்களது, பாட்டன் பூட்டன், முப்பாட்டன் களிடமிருந்து பறிக்கப்பட்டது அல்லது ஏமாற்றி பெறப்பட்டது என அந்த கூட்டம் சொல்லி மகிழ்ந்தது, கூத்தாடியது.

இதில் உலக மகா ஆச்சரியம் என்னவென்றால், 1983 ஜூலை கலவரத்தின் பின், இந்திய அரசு டெல்லியில் வைத்து தமிழ் அமைப்புக்களிடம் இளைஞர்களை பயிற்சிக்கு அனுப்புங்கள் என்று சொன்னதும், முதல் தகவல் கிழக்கு மாகாணத்துக்குத்தான் சென்றது. அதுவும் ஒரு முஸ்லிம் இளைஞரிடமே சென்றது.

அவர் அந்த தகவலை பொத்துவில் தொடக்கம், திருகோணமலை, கிளிவெட்டி, ரால்குழி வரை போய் சொன்னதாகவும், அய்யோ ராணுவ பயிற்சிக்கா, எப்படி போவது, அதற்கு யாழ்ப்பாணம் போக பணத்துக்கு எங்கு போவது என அனைவரும் ஓடி ஒளித்ததாகவும், பின்னர் அந்த முஸ்லிம் இளைஞர், தனது தந்தையின் கடையில் ஆறாயிரம் ரூபாவை திருடியும், களுவாஞ்சிக்குடியில் எந்த பொதுமகனுக்கும் பாதிப்பில்லாமல் ஒரு திருட்டு தனத்தை செய்தும், பணத்தை திரட்டிக்கொண்டு, எண்பது தமிழ் இளைஞர்களையும், ஒரே ஒரு முஸ்லிம் இளைஞரையும் யாழ் மயிலிட்டி வரை வழியனுப்பி, அங்கிருந்து உத்தர பிரதேசம் செல்ல ஏற்பாடுகள் நடந்துள்ளன.

உத்தரபிரதேசத்தில் ராணுவ பயிற்ச்சி பெற்ற முதல் குழுவும் இதுவே ஆகும். பயிற்ச்சி முடிந்து மெட்ராஸ் வந்து இறங்கி, ஓரிரு மாதங்களில் வடகிழக்குக்கு வந்த நமது, மண் மீட்பாளர்கள் முதன் முதலில் அடித்த ஆப்பு ஸ்ரீலங்கா சோனகர்களுக்கே ஆகும்.

இந்த அடிகள்தான் மொத்த சோனவனையும் சிந்திக்க வைத்தது, இதுவரை கடைகளும், வயல்காணிகளும், கடலும், மீனும்தான் தமது வாழ்வு என்றிருந்த முஸ்லிம்கள், மெதுவாக கல்வியில் கவனம் செலுத்த தொடங்கியதுடன், கண்டி, கொழும்பு போன்ற மாநகரங்களையும் நோக்கி நகர தொடங்கினர்.

கிழக்கில் ஒரு பக்கமும், வடக்கில் இன்னொரு பக்கமுமாக முஸ்லிம்களுக்கு அடிவிழ, வடகிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்களும், வடகிழக்குக்கு வியாபாரத்துக்கு வருவதை குறைத்துக்கொண்டார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய பிரேமதாச அவர்கள், முஸ்லிம்களை தமிழர்களிடம் இருந்து கூறு போட சரியான ஆளை கண்டு பிடித்தார். கல்முனையை விட்டு 1980 களில் வெளியேறி கம்பளையிலும், கொழும்பிலும் மாறி , மாறி வசித்துக்கொண்டிருந்த அஸ்ரப் அவர்களை 1987 இல் கூர் தீட்டி கிழக்குக்கு அனுப்பினார்.

யார் ஒருவருக்கு மூன்று மொழிகளும் தெரியுமோ, அத்துடன் அவர் ஒரு வழக்கறிஞருமாக இருந்தால் அவர் ஒரு உலக மகா புத்திசாலி என்ற ஒரு எழுதப்படாத தத்துவம் இந்த வடகிழக்கில் வசிக்கும் மொத்த சனத்துக்கும் இருக்கின்றது.

மொத்த தமிழனையும் இந்த லோயர் சமுதாயம்தான் உலகின் உச்சாணிக்கே அழைத்துச் சென்று, தொபுக்கடீர் என போட்டு வீழ்த்தியது, அதேபோல் நம்மாளும் " நாரே தக்பீர், அல்லாஹ் அக்பர்" என்ற ஒரே ஒரு கோசத்துடன் ரொம்ப ஆரவாரமாக வந்து, முந்தா நாளுக்கு முதல் நாள், மொத்த சோனவனின் மானம் , மரியாதை, தொப்பி, தாடி, பர்தா, குல்லா, சொத்து, பத்து, பட்டம், பதவி, கத்தி, கோடாலி, நகம் வெட்ட வெச்சிருந்த வில்லுக் கத்திகளுக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியாமல், பொண்டாட்டிமாரின் முந்தானைகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றார்கள் அந்த சோனவ லோயரின் அடிவருடிகள்.

பணம் அத்துடன் வேண்டியளவு ஆயுதங்கள், கிராமம் கிராமமாக JOC ( ஜாயின்ட் ஒப்பரேசன் கொமாண்டோ) அதிகாரிகளால் பயிற்ச்சி என முஸ்லிம் காங்கிரஸ் ஜெகஜோதியாக கிழக்கில் முளை விட்டது. எந்த கோட்பாடும் கிடையாது, யாப்பு, கீப்பு, கோப்பு என்று எந்த கத்தரிக்காயும் இவர்களது கடைகளில் இல்லை. அப்போதும் இல்லை, இப்போதும் இந்த உலக மகா கொள்ளைக்காரர்களிடம் இல்லை.

தமிழ் இயக்கங்கள் அடிக்க வந்தா அடிக்கிற, ஓட விட்டு அடிக்கிற, ஒரே ஒரு தானை தலைவர், அவர் அஷ்ரப், இதுதான் மொத்த கொள்கையுமே. அந்த அஸ்ரப் அரனாயகே மலையுச்சியில் வெடித்து சிதறிய, அன்றிரவு தாருஸ்சலாமில் அரங்கேறிய இந்த கொள்கை கொழுந்துகளின் வண்டவாளங்களை பின்னர் பார்ப்போம்.

இந்த ஜெகஜோதியில் தமது பிள்ளைகளை சிக்க வைக்க கூடாது என்று எண்ணிய வாப்பாமரும், உம்மாமாரும் சத்தமில்லாமல், கொழும்பு, கண்டியை நோக்கி நகர்ந்தார்கள், வியாபாரம், உயர் கல்வி என தங்கள் கவனங்களை செலுத்தினார்கள்.

( இன்ஷாஹ் அல்லாஹ் தொடருவேன்......... )
yahiyawasith@ymail.com

Read more...

Friday, May 24, 2019

சுயபரிசோதனை- பாகம் 2 எங்கே சென்றுகொண்டிருக்கின்றோம்? வை எல் எஸ் ஹமீட்

உலகம் உருண்டை

இருளில் நிலவாகப் பிறந்து வையகத்தை ஒளிரவைத்து விண்ணும் மண்ணும் வியந்துரைக்க வாகுடன் தௌஹீத் ஏந்தி வாழ்க்கைக்கோர் வரலாறு படைத்து சாதனைக்கோர் சரித்திரம் படைத்த சர்தார் நபி ( ஸல்) அவர்கள் மீதுகொண்ட உகப்பின் வெளிப்பாடாக அவர்களது மீலாதில் தெருக்களை கொடிகளால் அலங்கரித்ததை பித்அத், ஹறாம் என்றார்கள். இன்று அடுத்த சமய விழாவுக்கு ஜுப்பாவும் தொப்பியும் போட்டு கொடியும் கட்டி, கட்டியதற்கு ஆதாரமாக அதனை முகநூலிலும் போடும்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இறைவனின் நேசர்களை அவனது அடியார்களும் நேசிப்பதில் தவறேது? அவர்களின் நினைவு தினங்களில் தம் காலச்சார முறையில் கொடியேற்றி மகிழ்ச்சி தெரிவிப்பதை ஹறாம், பித்அத் என்றார்கள். இன்று அடுத்த சமய கொடிகளை தன்வீட்டிலேயே ஏற்றும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.

அன்று தன் தந்தையின் விடுதலைக்காக ஆசாத்சாலியின் மகள் பதட்டத்தில் பல இடங்களுக்கும் ஓடினார். அப்பொழுது பூத்தட்டு ஏந்தவேண்டிய ஒரு சூழ்நிலையும் ஏற்பட்டுவிட்டது. எத்தனைபேர் எத்தனை பத்வாக் கொடுத்தார்கள். ஒரு பெண்பிள்ளையென்றும் பாராமல் விமர்சனக் கணைகளால் குருரமாகக் குதறினார்கள். ஆனால் இன்று ...........?

அன்று இறைத்தூதரின், இறைநேசர்களின் மேல் நமக்கிருந்த அன்பை, கண்ணியத்தை வெளிப்படுத்துவதற்காக, நமது கலாச்சாரப் பின்னணியில் நாம் செய்த சில செயல்களை மார்க்கத்திற்கும் கலாச்சாரத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் எள்ளிநகையாடியவர்களை, அதே செயல்களை அடுத்த சமயத்தின் பெயரால் செய்யவைத்தானே அந்த வல்ல இறைவன்! இது நமக்கு படிப்பினைக்காக என்பதை சிந்திப்போமா? இறைவன் திருமறையில் பல இடங்களில் “ சிந்திக்கமாட்டீர்களா?” என்று கேட்கிறானே! சிந்திப்போமா?

திருந்தமாட்டோமா?

அண்மையில் கற்பிட்டியைச் சேர்ந்த ஒரு சகோதரி முகத்திரை அணிந்து சென்றதற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு சற்று முகத்தை திறப்பதற்கு மறுத்து சிறையில் அந்த சகோதரி முகமும் மூடாமல் மஹ்றமும் இல்லாமல் வாடும் நிலைமை எவ்வளவு வேதனையானது.

அதே தினத்தில் ஒரு மௌலவியின் பயானை சமூகவலைத்தளத்தில் கேட்டேன். மௌலவியின் பெயர் தெரியவில்லை. அதில் அவர் உமர் ( ரலி) காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார். துருக்கித் தொப்பிக்காக நம்மவர் நடாத்திய போராட்டம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு பல போராட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டு, எது நடந்தாலும் தலையைத் திறக்கவேண்டாம், முகத்திரையைக் கழட்டவேண்டாம்... என்று மிகவும் உணர்ச்சியாகப் பேசுகின்றார். பயந்தவர்கள் எங்காவது நாட்டிற்கு சென்று வாழுங்கள். நாங்கள் இங்கு வாழுகின்றோம்; என்று கூறுகின்றார்.

இதைக் கேட்ட இன்னும் எத்தனை பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு தெருவால் செல்வார்களோ! அல்லது எத்தனை கணவன்மார் அப்படிச் செல்ல வற்புறுத்துவார்களோ!!

இங்கு நாம் சிந்திக்க வேண்டியது:

தலையை மூடுவது தொடர்பாக மார்க்கத்தில் கருத்துவேறுபாடே கிடையாது. தலையை மூடுவதற்கு சட்டரீதியான தடையும் கிடையாது.

முகமூடுதல்: பெரும்பான்மையான உலமாக்கள் முகம் மூடுவது கட்டாயம்; என்று கூறவில்லை. அது கட்டாயமாக இருந்திருந்தால் தலையைமூட முக்காட்டை அறிமுகப்படுத்திய முன்னோர் அதனையும் அறிமுகப்படுத்தியிருப்பர். ஒருவர் விரும்பி மூடுவது வேறுவிடயம்.

குறிப்பாக அண்மைக்கால கடும்போக்குவாத இஸ்லாமியக் கருத்துக்கள் முன்வைக்கப்பட ஆரம்பித்த பின்னர்தான் முகம் மூடுவது கட்டாயம் என்ற கருத்தும் மிகக்குறைந்த ஒரு சிலரால் முன்வைக்கப்பட்டது.

இங்கு சிந்திக்க வேண்டியது:

(1)இந்த மௌலவி முன்னோர்களால் கட்டாயம் என்று கூடப்படாத, தற்போதும் மெரும்பான்மையான உலமாக்களால் அவ்வாறு கட்டாயம் என்று கூறப்படாத, இதுவரை காலமும் பழக்கத்தில் இருக்காத ஒரு நடைமுறை அவரது அறிவுக்கு கட்டாயமாகப்படுகிறது; என்பதற்காக அதனை அவர் மக்களிடத்தில் திணிக்கின்றார். அதாவது தனது தலைக்கு தட்டுப்படுவதெல்லாம் இஸ்லாம்; என்று நினைக்கின்றார். அதைத்தான் மற்றவர்கள் பின்பற்ற வேண்டும் என்று திணிக்கின்றார். இதற்கு குர்ஆன், ஹதீசை பாவிக்கின்றார்.

(2)அதுவும் நாட்டுச் சட்டம் அதனைத் தடைசெய்து இருக்கின்ற ஒரு காலகட்டத்தில் திணிக்கின்றார்.

(3) போராடவேண்டும்; என்கின்றார். அதற்கு கடந்தகால நிகழ்வுகளை ஆதாரமாக காட்டுகின்றார்.

போராடுவதென்றால் எப்படி? அப்பாவிப் பெண்கள் சட்டத்தைமீறி முகத்தைமறைத்து சிறையில் வாடுவதன்மூலமா?

முகத்தை மூடுவது மார்க்கத்தில் கட்டாயம்; என்பது ஏகோபித்த அபிப்பிராயம் என்று ஒரு எடுகோளுக்கு வைத்துக்கொள்வோம். எப்படிப்போராடுவது? அரசியல் ரீதியாக மக்கள் பிரதிநிதிகளூடாக போராட வேண்டும்; அல்லது மக்கள் நேரடியாக வெகுஜன போராட்டம் நடாத்தவேண்டும்; அல்லது நீதித்துறை ஊடாக போராட வேண்டும், அவ்வாறு ஒரு போராட்டத்தைச் செய்து அந்த உரிமையைப் பெற்றதன்பின் பெண்களை முகத்தை மூடச்சொல்ல வேண்டும்.

அதைவிடுத்து அப்பாவிப்பெண்களை சட்டத்தை மீறச்சொல்லி சிறையில் வாடவைப்பது போராட்டமா? அப்பெண் சிறைக்குச் சென்றால் இஸ்லாம் சொன்ன மஹ்றத்தை இந்த மௌலவி வழங்குவாரா? அப்பெண்ணிற்கு தாய்ப்பால் குடிக்கும் குழந்தை இருந்தால் அதற்கு இந்த மௌலவி தீர்வு தருவாரா? அல்லது அப்பெண்ணின் ஏனைய குழந்தைகளுக்கு, குடும்பத்திற்கு இந்த மௌலவி ஆறுதல் கூறுவாரா?

சிறை சென்றதால் அப்பெண்ணுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சினைக்கு இந்த மௌலவி தீர்வு வழங்குவாரா? எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு பெண் என்ன காரணத்திற்காகவென்றாலும் சிறைசென்று மீண்டால் இந்த சமூகம் அவளை எப்படிப் பார்க்கும்; அவளுடைய, அவளது குழந்தைகளுடைய எதிர்காலத்தை அது எவ்வாறு பாதிக்கும்; என்பவற்றிற்கு இந்த மௌலவி பதில் கூறுவாரா?

சரி, இவரது சொல்லைக்கேட்டு சட்டத்தைமீறி முகத்திரை அணிந்ததனால் அப்பெண் சிறை சென்றுவிட்டார், போராடச்சொன்ன இவரது பங்கிற்கு இவர் செய்யப்போகும் போராட்டம் என்ன ? இவரும் ஒரு புர்க்காவை அணிந்து தெருவால் சென்று இவரது பங்கிற்கு சிறைக்குப் போவாரா?

நிர்ப்பந்தம்

முகம் மூடுவது சட்டவிரோதமாக்கப்பட்ட நிலையில் முகம் மூடத்தான் வேண்டுமென்றால்கூட மூடமுடியாத ஒரு நிர்ப்பந்தம் இருக்கின்றதா? இல்லையா? நிர்ப்பந்த சூழலில் மார்க்க சட்டம் என்ன?

செத்த பிராணியின் அல்லது பன்றியின் இறைச்சியை உண்பதைத் தடைசெய்த இஸ்லாம் உயிர்பிழைப்பதற்காக இக்கட்டான சூழ்நிலையில் உண்பதை ஆகுமாக்கியது மட்டுமல்லாமல் சில சூழ்நிலையில் வாஜிபாகக்கூட இஸ்லாம் கூறியிருக்கின்ற சட்டம் இந்த மௌலவிக்குத் தெரியாதா? சஜதா ஆயாக்கள் என்பது ஏன் என்பதை அறியாதவரா இந்த மௌலவி? ஏன் இந்த மௌலவி இவ்வாறான இக்கட்டான நிலையில் முகத்திரையை கழட்டவேண்டாம்; என்று பயான் பண்ணினார்?

அவர் நினைப்பது அவருக்கு மார்க்கம். போராட்டமும் தெரியாது. இவர்களும் மௌலவிகள் என்று சமூகத்தைக் குழப்பி இன்று சமூகம் அனுபவிப்பது போதாதா? எத்தனை அப்பாவிகள் இன்று சிறையில் வாடுகிறார்கள்! இவர்களைப் போன்றவர்களால் வந்தவினையில்லையா? சட்டத்தைமீறும்படி பெண்களுக்கு பயான் செய்யும் இவர்களைப் போன்றவர்கள் ஏதோவொரு விதத்தில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்கள், இல்லையா? இவர்களைப் போன்றவர்களை இவ்வாறே தொடரவிட்டு சமூகம் இவ்வாறான அழிவுகளை சந்திக்க வேண்டுமா?

ஒருவழி சிந்தனையாளர்

மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள். ஒரு விடயத்தை ஏதோ ஒரு கோணத்தில் இருந்து பார்ப்பார்கள். அந்தக் கோணத்தில் அவர்களுக்கு அது எவ்வாறு தெரிகின்றதோ அதுதான் நிஜம் என்று நம்புவார்கள்.

குருடர்கள் யானை பார்த்த கதை கேள்விப்பட்டிருப்போம். காதைத் தொட்டுப் பார்த்தவன் யானை “சுழகைப்போல” என்றான். அவன் சற்று பின்னோக்கிச் சென்று வாலையும் தொட்டுப்பார்த்திருந்தால் யானை சுழகைப்போலவா? அல்லது தும்புத் தடியைப்போலவா? ஒரே நேரத்தில் இரண்டு விதமாகவும் இருக்கமுடியாதே! அல்லது இரண்டும் இல்லாத வேறுஒரு வடிவமா? எதற்கும் நம்மைவிட யானையை சிறப்பாகத் தெரிந்த ஒருவரிடம் கேட்டுப்பார்ப்போமே என்று சிந்தித்திருப்பான்.

இவ்வாறுதான் இன்று சமூகத்தைக் குழப்பும் மார்க்க இயக்கங்களும் சில மௌலவி என்பவர்களும் இருக்கின்றார்கள். தமக்கு புரிவது அல்லது தாம் நினைப்பது மாத்திரமே சரியென நினைக்கிறார்கள். அதற்குப் பின்னால் சில ஒற்றைவழி சிந்தனையாளர்கள் செல்கின்றார்கள்.

விளைவு சமூகத்திற்குள் பிரிவுகள். பல நாட்கள் பெருநாள். ஊருக்குள், குடும்பத்திற்குள் குழப்பம். ஒரு வீட்டிற்குள் தாய் இந்த மகனுக்கு பெருநாளைக்கு ஒரு நாள் சமைக்கவேண்டும். அடுத்த மகனுக்கு பெருநாளைக்கு அடுத்த நாள் சமைக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம் கடந்த காலங்களில் குழப்பி, குழப்பி இறுதியில் இன்று எங்கே நிற்கின்றோம்?

எதிர்காலம்

இப்பொழுது கூறுகின்றார்கள்.

எங்களைப்போல் வாழுங்கள்; இல்லையெனில் நாட்டைவிட்டு வெளியேறுங்கள்.

தனியார் சட்டமெல்லாம் சரிவராது; எல்லோரும் பொதுச்சட்டத்தைப் பின்பற்றுங்கள்.

உங்களுக்கு தனிக்கட்சி சரிவராது. தேசியக்கட்சிகளில் இணையுங்கள்.

சமூக ரீதியான பாடசாலை கூடாது. பொதுப்பாடசாலையில் படியுங்கள்; என்கிறார்கள். ஆமாம், பொதுப்பாடசாலையே சரி; என்று நம்மவர்கள் சிலரும் கூறுகின்றார்கள்.

எல்லாம் நமக்கிருந்தது. ஒரு கூட்டம் மார்க்கத்தின் பெயரால் செய்த பித்தலாட்டங்கள் எல்லாவற்றையும் இழந்த ஒரு சமூகமாக நம்மை மாற்றிவிடுமோ? என்கின்ற ஒரு அச்ச நிலைக்கு நம்மைத் தள்ளியிருக்கின்றது. ஆனாலும் நமது சில இயக்கங்களுக்கும் சில மௌலவிகளுக்கும் எதைப்பற்றியும் கவலையில்லை.

பெருநாள் வந்தால் தெரியும். நம்மவர்கள் திருந்துவார்களா? என்று.

எங்கே சென்றுகொண்டிருக்கின்றோம்?

எனவே, சமூகம் சிந்திக்கவேண்டும்.
( தொடரும்).

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com