வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள ஐயனார் ஆலயத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் சீர் கெட்ட நிலைகள் பற்றி 26.10.2014ம் திகதி எமது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் இரண்டாம் இணைப்பாக இச்செய்தி பிரசுரிக்கப்படுகின்றது. குறிப்பிட்ட ஐயனார் ஆலயத்தில் நிர்வாகம் முறைகேடாக நடந்துகொள்கின்றது என்று பொது மக்கள் விசனம் தெரிவிப்பதும், 18 வருடங்களாக பொதுக்கூட்டம் கூடாது சர்வாதிகார போக்கை ஆலய நிர்வாகம்கடைப்பிடிப்பதாகவும் கடந்த செய்தியில் வெளியிட்டிருந்தோம். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் பெரும் மாறறங்கள் நிகழ்ந்தள்ளதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 21.11.2014 வெள்ளிக்கிழமை தாண்டிக்குளம் கிராம சேவையாளர் திரு.கோணேஸ்வரலிங்கம் தலைமையில் பொதுக்கூட்டம் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அந்த கூட்டம் முற்றுக்கு வராமலேயே முடிவடைந்தது. அந்த கூட்டத்தை தொடர்ந்து அவரும் இந்த விடயத்தில் எந்த அக்கறையும் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. அந்தக் கூட்டத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்ட போதும் நிர்வாக உறுப்பினர்களால் அக் கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை. குறிப்பாக நிர்வாக சபை சார்பாக தலைவர், செயலாளர், பொருளாளர் மட்டுமே கலந்துகொண்டிருந்தனர். மற்றையோர் நிர்வாகத்திற்கு எதிரக வெளிநடப்புச் செய்துள்ளனர்.
அவசர அவசரமாக தவறான இடத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது ஏன்?
தான்தோன்றித்தனமாக கட்டடங்களை முறையில்லாமல் கட்டுவது ஏன்?
ஐயனாருக்கு என்று அடியவர்கள் கொடுத்த நகைகள் எங்கே?
ஐயனார் ஆலய கணக்குகள் எங்கே?
யாருடைய அனுமதியின் பெயரில் திரு.பகீரதன் தனியாக கோயில் உண்டியல் உடைத்தார்?
அதி;ல் இருந்த கணக்குகள் எஙகே? ஆதை எவ்வாறு நம்புவது?
கோயில் மூலஸ்தானம் தனி நபரால் ஏன் கட்டப்படுகின்றது?
18 வருடமாக ஏன் பொதுக்கூட்டம் கூட்டவில்லை?
போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இருந்துள்ளனர். இக்கேள்விகளுக்கு பொது மக்கள் தொடர்ச்சியாக கேள்விகளை கேட்டபோதும் இதற்கு யாரும் பதில் அளிக்கவில்லை.
தாண்டிக்குளம் கிராம சேவையாளர் கோணேஸ்வரலிங்கம் தொடர்ச்சியாக எந்த முடிவுகளையும் எடுக்காது இவ்விடயங்ளை கவனிக்காது உள்ளார். தோடர்ச்சியாக கலாச்சார உத்தியோகத்தர்களுக்கு இது தொடர்பாக அறிவித்தல் கொடுத்தும் அவர்களும் தங்கள் பொறுப்பற்ற தனமையை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
குலாச்சார உத்தியோகத்தரான திரு.நித்தியானந்தன் கலாச்சாரம் பற்றி அறிந்தவரா? அவருக்கு ஆலய நடைமுறைகள் தெரியும்? ஏன்ற சந்தேகம் சமூகத்தில் தோன்றியுள்ளது. அரச அதிகாரிகள் தங்கள் பொறுப்புகளை சரியாகச் செய்ய வேண்டும் என்ற நிலை இருக்க இவர்களே அசட்டையாக இருப்பது, இவர்கள் இலஞ்சம் வாங்கும் அதிகாரிகளாக இருக்கின்றார்களா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.
ஆலயத்தில் தலைவராக இருப்பவரும் ஒரு கிராம சேவையாளர்தான். அதனால் அவருக்கு சார்பாக அரச அதிகாரிகளான பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோர் செயற்படுகின்றனர். இவற்றை மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சரஸ்வதி மோகனாதன் அவர்களிடமும் மக்கள் முறையிட்ட போதும் அவர் தனது வேலை இது இல்லை என்று கைகழுவிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அரசாங்க அதிபர் திரு.பந்துல ஹரிச்சந்திர அவர்களிடம் பொதுமக்கள் சிலர் சென்ற வேளை அவர்களை உள்ளே செல்ல விடாது காலாச்சார உத்தியோகத்தர் தடுத்துள்ளதாகவும், அது தங்கள் வேலை தாங்கள் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்து திருப்பி அனுப்பியுள்ளார். இவற்றை அரசாங்க அதிபர் கவனத்திற் கொள்ள வேண்டும்.
ஆலய பிரச்சனைகள் சூடு பிடிக்கத் தொடங்கி ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்டன. இந் நிலையில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோர் திட்டமிட்டு மக்களுக்கு பதிலளிக்காமல் காலம் தாழ்த்துகின்றனர். இவர்கள் பற்றிய ஒலிப்பதிவுகள் மூன்றாம் இணைப்பில் பிரசுரிக்கப்படும்.


ஒலிப்பதிவுகளை உடன் தரலாமே. சர்வாதிகார போக்குடைய யாரும் வாழ்வதற்கு தகுதி அற்றவர்கள். கோயிலில் இலாபம் தேடும் இவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
ReplyDeleteஇலண்டனில் இருந்து தேவன்.
தொடர்ச்சியாக இந்த கட்டிரையை படிக்கும் போது அரச அதிகாரிகள்தான் இத்தகையதொரு நிலைக்கு காரணம் என்று புரிகிறது. பக்க சார்பாக நடக்கும் இந்த அதிகாரிகள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் கோயில் விசயத்தில் கீழ் தரமாக செயற்படும் நிர்வாகத்தை மக்கள் அடித்து விரட்டினால் தான் சரி போல் இருக்கிறது. இங்கு இப்படி நடந்தால் தான் சமுகத்தில் இது போன்ற கேவலமான செயற்பாடுகள் இடம்பெறாது இருக்கும்.
ReplyDeleteலண்டனில் இருந்து நாதன்.
சரியாக சொன்னீர்கள் நாதன். அத்தோடு இலங்கை நெற் செய்தியாளரே, தகவல்களை புட்டு புட்டு வைகிரீர்களே, ஏதேனும் மாற்றத்தை உங்களால் ஏற்படுத்த முடிகிறதா? இதற்கும் ஏதாவது ஒரு ஐடியாவை கண்டுபிடியுங்களேன்.
ReplyDeleteஜனஹன்
வவுனியா