இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் ஜெனீவா மாநாட்டில் பிரேரணை முன்வைக்கப்பட்டபோதும், உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளிநாட்டு மாமாமார், சின்னப்பாமார் எங்களுக்குத் தேவையில்லை… அவர்களுக்கு ஏற்றாற்போல ஒன்றும் நடைபெறாது என அமைச்சர் சிரிபால த சில்வா குறிப்பிடுகிறார்.
உள்ளகப் பிரச்சினைகள் இருந்தால் அதனை வெளிநாடுகளுக்குக் கொண்டுசென்று தீர்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவ்வாறான நிலைமை ஏற்பட்டால் அவற்றை நாட்டினுள்ளேயே தீர்த்துக்கொள்ள ஆவன செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிடுகிறார்.
யாரேனும் ஒருவர் அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவாராயின், அவர் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலில் ஈடுபடுகின்றார் என்றே அர்த்தமாகும் எனக் குறிப்பிடும் அவர், நாட்டில் தற்போது அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன எனவும் குறிப்பிடுகிறார்.
(கேஎப்)

TNA is LTTE TERRORIST ONLY
ReplyDelete