Thursday, January 24, 2013

கஞ்சாவுக்கு ஆயுதங்களுடன் காவல் இருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.- பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

தீய செயல்கள் தடுப்பு பிரிவைச்சேர்ந்த பொலிஸார் இருவர் ஆயுதங்களுடன் காவலுக்கு இருந்த போது கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியுமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய வனாந்தரத்தில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சாவை அழித்தொழித்து கைப்பற்றுவதற்கு 22 பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்று உடவளவு தேசிய வனாந்தரப் பகுதிக்கு சென்றிருந்தது

கஞ்சா பயிர்செய்கையை சுற்றிவளைத்து கைப்பற்றிய அந்த குழு ஆயுதங்களுடன் இரண்டு பொலிஸாரை காவலுக்கு நிறுத்திவிட்டு மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு திரும்பிவிட்டது.

இவ்வாறு பொலிஸாரால் காவலுக்கு வைக்க்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளுமே வனஜீவராசிகள் அதிகாரிகளினால் கடத்தப்பட்டுள்ளனர் என்றார்.

1 comment: