Friday, December 7, 2012

கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க கோரி விஞ்ஞானபீட ஆசிரியர்கள் போராட்டம்

கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி, யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீட ஆசிரியர் சங்கத்தினர் பல்கலைக்கழக வளாகத்தினுள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.ஏற்கனவே மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் விடுதலை செய்யப்படாத நிலையில், தேடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்ட மாணவர்களில் சிலரை பொலிசாரிடம் பல்கலைக்கழக நிர்வாகம் ஒப்படைத்ததையும், மிகுதி மாணவர்களை அவ்வாறு ஒப்படைப்பதற்கு முயற்சிப்பதையும், கண்டிப்பதாக விஞ்ஞானபீட ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இத்தகைய சம்பவங்களைக் கண்டித்தும், எதிர்காலத்தில் மாணவர்களின் கைதுகளைத் தடுக்கக் கோரியுமே இன்றைய போராட்டம் நடைபெற்றுள்ளது.

1 comment:

  1. Those who were behind the scenes and
    encouraged the students , now making impassioned plea for their release

    ReplyDelete