Saturday, December 8, 2012

வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர் பதுளையைச் சேர்ந்த நபரென அடையாளங் காணப்பட்டார்

கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் பலியானவர் பதுளையைச் சேர்ந்த ஒரு சிங்களவர் என அடையாளங் காணப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தில். பதுளைச் சேர்ந்த ஆர்.டபிள்யூ.டி.நிஷாந்த சம்பத் ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு பலியானவராவார் என அடையாளங்காணப்பட்டுள்ளது.

இவர் தனியார் என்ஜினியரிங் நிறுவனமொன்றில் கடமையாறி வந்துள்ளார்.; இவரது சடலத்தை மேற்படி நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் அடையாளம் காண்பித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. Either singhalese or tamil a worthy
    and precious life being taken by the ruthless murderers.They should be taken into the hands of justice
    and the maximum capital punishment
    should be given to those dangerous criminals.

    ReplyDelete