எனினும் இது குறித்து Hoax Call முறையிலான போலி தொலைபேசி அழைப்பின் மூலம், ஆஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்கள் இருவர் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் போல் குரலை மாற்றி பேசி கேட் வில்லியம்ஸ் குறித்த தகவல்களை கேட்டுள்ளனர். பின்னர்தான் இது தவறான அழைப்பு என்று புரிந்து கொண்ட மருத்துவ தாதி ஜெசிந்தா மனமுடைந்து போனார். ராஜகுடும்பத்து ரகசியங்களை வெளியே சொன்னதற்கு தான் தான் காரணமென மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வானொலி அறிவிப்பாளர்கள், ஜசிந்தா இம்முடிவை எடுப்பார் என தாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என கூறியதுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீருடன் மன்னிப்பு கோரியிருந்தனர்.
இந்நிலையிலேயே அவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை அவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதுடன், 10 பிரத்தியேக பாடிகார்ட்களை நியமித்துள்ளனர்.
ஜசிந்தா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவரது மறைவுக்கு காரணமாகிவிட்டதால், ஆஸ்திரேலிய குறித்த 2Day Fm வானொலி நிலையம், தனது விளம்பரங்களில் வரும் அனைத்து லாபத்தையும் அவரது குடும்பத்திற்கு வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. குறைந்தது, 320,000 அமெரிக்க டாலர்கள் நிதியுதவியிலிருந்து இவை கிடைக்கப்பெறும் எனவும், கிரிஸ்மஸ்தை முன்னிட்டு ஒழுங்கு செய்திருந்த விருந்து நிகழ்வையும் தாம் இரத்து செய்து,அதற்கு செலவிடவிருந்த பணத்தையும் ஜசிந்தாவின் குடும்பத்திற்கே கொடுக்க போவதாகவும் குறித்த ரேடியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை நேற்று பெங்களூரில் மாணவ மருத்துவ தாதிகள் ஒன்றிணைந்து ஜசிந்தாவுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
உங்களது பணம், ஜசிந்தாவை திரும்பத்தருமா?, உங்களது அலட்சியப்போக்கான காமடி நிகழ்ச்சியை அப்பாவி மக்களுடன் விளையாடாதீர்கள் போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை குறித்த மருத்துவ தாதிகள் ஏந்தியிருந்தனர்.

Meaningless cruel fun which gave you a joyful time.This could be a life time psychological torture for
ReplyDeleteyou.Beleive One is above.