Monday, May 17, 2010

அமைச்சுப்பதவியை நானாக கேட்க மாட்டேன் தந்தால் எடுப்பேன் காதர்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆழும் கட்சிக்குத்தாவவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர், தான் ஜனாதிபதியிடம் அமைச்சுப்பதவியினை கேட்கமாட்டேன் எனவும் அவராக அதை கொடுத்தால் பெற்றுக்கொள்வேன் எனவும் நேற்று மல்வத்துபீட மகாநாயக்கர்களை சந்தித்தபின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியினுள் இடம்பெறவுள்ள கட்சியின் மீள் அமைப்பு வேலைகள் எதிலும் பங்கெடுக்க மாட்டேன் எனவும் கூறியுள்ளார்.

1 comment: