Showing posts sorted by relevance for query VIII. Sort by date Show all posts
Showing posts sorted by relevance for query VIII. Sort by date Show all posts

Sunday, November 1, 2009

புலிகளின் அரசியல் முகமூடி தமிழ் தேசிய கூட்டமைப்பு! -முகுந்தன்.

வியப்பான பல விடயங்களை உள்ளடக்கி இன்றைய நவீன யுகத்திலும் தமிழர்களை வெறும் உணர்சியூட்டி மேலும் மேலும் அடிமையாக்க புலி தலைவர் பிரபாகரனால் பலாக்காரமாக உருவாக்கப்பட்ட சில கட்சிகளின் இணைப்பே தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இக்கூத்தமைப்பு இன்றும் மிகக்குறுகிய நோக்கங்களையும் கொள்ளை அரசியல் இலாபமடையவும் தமிழரின் அபிலாசைகளோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. இதில் வியப்பென்னவெனில் இக்கூத்தமைப்பில் அங்கம்வகிக்கும் கட்சிகளின் முதுகெலும்பை கடந்தகாலத்தில் புலிகள் உடைத்தெறிந்ததுதான்.

பழம்பெரும் கட்சியாகவும் மக்கள் மத்தியில் பிரபலமானதுமான தமிழர் விடுதலைக் கூட்டணி, பிரதான விடுதலைப்போராட்ட இயக்கங்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் தமிழ் காங்கிரஸ் என்பன இதில் அங்கம் வகிக்கின்றன. இந்த கட்சிகளின் இயக்கங்களின் தலைமைகள் புலிகளினால் நயவஞ்சகமாக அழிக்கப்பட்டன. இருப்பினும் அரசியல் என்ற சாக்கடையில் வாக்குகளைப் பெற்று பல்வேறுபட்ட சுகபோகங்களை அனுபவிக்கவும் கேவலம் புலிகளிடமிருந்து தங்களின் உயிர்களைக் காத்துக்கொள்ளவும் புலிகளின் காலடியில் மண்டியிட்டனர்.

ஆனால் இன்றோ புலிப்பயங்கரவாதம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இக் கூத்தமைப்பின் நிலைப்பாடு என்ன?

பாசிசப் புலித் தலைவரால் இக்கூட்டமைப்பினருக்கு உபதேசிக்கப்பட்ட தமிழ் தேசியம், தமிழ் தேசிய தலைமை, ஏகபிரதிநித்துவம், தமிழீழம், ஆயுதப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுதல், இனவெறிப்பிரச்சாரம், நிதிசேகரித்தல் போன்றவற்றின் நிலை என்ன?

உண்மையில் இக் கூத்தமைப்பினர் புலிகளுக்கு பயந்து சுயத்தை இழந்து நடைபிணமாகவே இருந்தனர். இனிவரும் காலங்களில் தமிழர்களை ஏமாற்ற என்னவித்தை காட்டப்போகிறார்கள் என்பதே இன்றைய கேள்வி.

புலிகளின் அழிவையடுத்து இக்கூத்தமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவநாதன் கிஷோர் பின்வருமாறு கூறிய விடயம் சற்று கவனத்திற்கொள்ளதக்கது. 'தந்தை செல்வவால் உருவாக்கப்பட்ட தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சிகளின் அகிம்சை போராட்டம் இலங்கை தமிழர்களுக்கு எந்த விமோசனத்தையும் பெற்றுக்கொடுக்வில்லை. பிரபாகரனால் இறுதிவரை கொண்டு செல்லப்பட்ட ஆயுதப்போராட்டமும் எதனையும் பெற்றுக்கொடுக்கவில்லை. மாறாக வரலாறுகாணாத மாபெரும் அழிவுகளையே தமிழ் சமூகத்திற்கு சமாப்பணம் செய்துள்ளது'

தமிழ் கட்சிகளின் அகிம்சை வரலாறும் சிங்கள மக்களுடன் சேர்ந்து உரிமையோடு வாழும் வழியை சொல்லவில்லை. பிரிவினை மற்றும் இனவாதத்தை ஊக்குவிக்கும் செயற்பாடாகவே தொடர்ந்தன. ஈற்றில் இதுவே துப்பாக்கி கலாசாரத்திற்கு வித்திட்டது. பிரபாகரன் என்ற விஷ விருட்சத்தை தமிழ் சமூகத்திற்கு காணிக்கையாக்கி அவ்விஷத்துக்கு கட்டுண்டுபோன வரலாறே தமிழ் கூத்தமைப்பினதும் வரலாறு.

அண்மையில் புளொட் தலைவர் த. சித்தாத்தன், தமிழ் கூத்தமைப்பு புலிகளால் பலாத்காரமாக உருவாக்கப்பட்டது என்றும் புலித்தலைமை அழிந்த பின்னர் இக்கூட்டத்தின் யதார்த்தமற்ற, நடைமுறை சாத்தியப்படற்ற கோரிக்கைகளும் துவேஷ கருத்துக்களும் தேவையற்றது எனவும் புதிய சிந்தனை உருவாக கடந்தகாலப் படிப்பினைகளை வைத்து இக்கூத்தமைப்பு கலைக்கப்பட வேண்டும் எனவும் கருத்துத்தெரிவித்தார்.

இக்கருத்து வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். இதில் அங்கம் வகித்த கட்சிகள் சுயமாக இயங்கி தங்களை சுயவிமர்சனம் செய்யத்துணிந்தால் நல்ல பல பயனள்ள கருத்தாக்கங்களும் பலாபலன்களும் தமிழ் சமூகத்திற்கு கிட்டும் என்பதில் ஐயமில்லை. புதியபாதை புதிய சிந்தனையே இன்றைய தேவை. இல்லையே தமிழினத்துக்கு மீட்சியில்லை.

தமிழ் நாட்டிலும் திராவிட சிந்தனையை தோற்றுவித்த திராவிட கழகங்களும் பிரிவினை கோரிக்கையை ஒதுக்கிவிட்டு மத்திய கூட்டாட்சி மானிலத்தில் சுயாட்சி என இணைந்து வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு உச்சளவு வளர்ச்சி பெற்றுள்ள வரலாறை நாம் அலட்சியம் செய்துவிடமுடியாது. அதுவே நல்லதோர் முன் உதாரணம்.

நல்ல சந்தர்ப்பங்களை பெறுவதற்கு தனித்துவம் பிரிவினை என வாக்குக்காக இனவாதம் பேசுவதை விடுத்து ஆட்சியாளர்களுடன் நிபந்தனையுடன் ஆட்சியில் பங்கேற்கும் வகையில் தமிழர்களின் பலம் கட்டியெழுப்பப்படவேண்டும். 1977ல் பெறப்பட்ட அரசியல் பலத்தை ஆயுதக்குழுக்களை உருவாக்கி அழிவை தேடவே பயன்படுத்தினார்கள். எதிர்காலத்தில் இப்படியொரு பலத்தை பெற்ற அரசியல் உரிமைகளையும் பொருளாதார சபீட்சத்தையும் வடகிழக்கு பெறகூடியவகையில் புதிய சிந்தனை, புதிய தலைமையே இன்றைய தேவையாகும்.

எந்தவொரு இனத்தையும் பயமுறுத்தி பணியவைத்து காரியம் சாதிக்கமுடியும் என்பது அறிவீனம். இந்த முட்டாள்தனமானதைத்தான் புலிகள் கடைசிவரை கையாண்டார்கள். பிரபாகரனது சண்டித்தனத்திற்கும் கொலை வெறி அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து தனிநாட்டையோ அல்லது ஓரங்குல நிலத்தையோ வழங்கும் அளவிற்கு எந்த நாட்டின் ஆட்சியாளனும் முட்டாளாக இருக்கப்போவதில்லை.

இலங்கைத் தமிழர்களுக்கு சமத்துவ உரிமைகள் இல்லை என்பது உண்மையே. கிடைத்த சந்தாப்பங்களனைத்தும் பிரபாகரனின் முட்டாள்தனத்தால் நாசமாக்கப்பட்டன. ஏற்கனவே தமிழருக்கு இருந்த நலன்களும் சிதைக்கப்பட்டன. இணைந்த வடக்கு கிழக்கும் பிரிக்கப்பட்டது. இது நல்ல எடுத்துக்காட்டு.

பிரதேச வேறுபாடுகளையும் தமிழ் இனவாதத்தையும் புலிகள் தாரளமாகவே விதைத்தனர். தீர்வு என்று வந்தபோதும்கூட அதற்கு தீர்வுகான முடியாதபடி யாழ் மேலாதிக்க சிந்தனை வழிவகுத்தது. அனைத்து அரசியல் வழிமுறைகளையும் வன்முறையாலும் கொலைகளாலும் அடைத்துவைத்திருந்த பிரபாகரனின் இறப்பின் பின்னராவது புதிய அரசியல் வெற்றிடத்தை நிரப்பும் வழிவகைகளை காண அனைவரும் உழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

மேலும் புலிகளுக்கு பயந்த ஊடகத்துறையினரும் பணத்துக்காக தார்மீகத்தை தாரைவார்த்த எழுத்தாளர்களும் சமூகத்தின் நலன் கருதி விழித்துக்கொள்ள வேண்டும். இனிமேல் அச்சமின்றி சிந்தனைகளை விழிப்புணர்வுகளை ஊடகத்துறையினர் மேற்கொள்வது அவசியமனதாகும். இந்தியாவில் ஓரளவுக்கு ஊடகங்கள் அச்சமின்றி இயங்குகின்றன. கடந்த காலங்களில் தமிழ் ஊடகங்கள் புலிகளின் இரும்புப் பிடியிலிந்தவை.

தமிழர்களை நந்திகடலில் பிரபாகரனுடன் சேர்த்துத் தள்ளியவர்களில் முக்கியமானவர்கள் இந்த ஊடகத்துறையினரே. இந்தியக் கோமாளிகளும் புலன் பெயர் குஞ்சுகளும் நாடுகடந்து தமிழீழம் அமைக்கவிருப்பர்களும் இன்னும் தமிழர்களை ஏமாற்றி பிழைப்புநடத்தவே துடிக்கின்றனர்.

புலிகளின் ஒவ்வாத கருத்துக்களையும் அவர்களின் அரசியல் முகமூடியாகிய தமிழ் தேசிய கூத்தமைப்பினர்களையும் சீர்திருத்த உண்மையான பத்திரிகையாளர்களே நேர்மையுடன் முன்வரவேண்டும். தமிழ் சமூகத்திற்கான சமஉரிமை போராட்டம் ஒய்ந்துபோகமுடியாது. உண்மை வழியில் அறிவு ரீதியான சிந்தனைகளுடன் செயற்பாடே அவசியமானது. VIII

Read more...

Monday, February 23, 2009

புலி புல்லைத்தின்னுமா?

பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்நியத்தூதரகம் முன்பாக கடந்த வாரம் (பெப்ரவரிமாதம்) பிரான்ஸ்வாழ் புலி ஆதரவுத்தமிழர்கள் இந்திய அரசைக்கண்டித்து கோசம் எழுப்பி ஆர்பாட்டம் செய்து கண்டன அறிக்கை ஒன்றை கையளிக்க முற்பட்டுள்ளார்கள். அதிகாரிகள் அவ் அறிக்கையினை பெற்றுக்கொள்ள முன்வாராமையினால் தூதரகத்தினுள் நுழையவும், தாக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளளர்கள். இதை பொலிசார் தடுத்து நிறுத்த முற்பட்டபோது பொலிசாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. அந்நேரம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டசிலர் தம்கையில் இருந்த குளிர்பானங்களை பொலிசாரை நோக்கி வீசியுள்ளனர். இதனால் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்து ஆர்பாட்டக்காரர்களை கலைத்துள்ளனர். இதன்போதும் கலைந்து செல்ல மறுத்தவர்களை கைது செய்துள்ளார்கள் என பிரான்ஸில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போல் பிரித்தானியாவிலும் சில வாரங்களுக்கு முன்பு அத்து மீறி அரசாங்க அதிபர் மாளிகை முன்சென்று ஆர்பாட்டம் செய்த புலி ஆதாரவுத்தமிழர்கள் மீது பொலிசார் தடியடிப் பிரையோகம் மேற்கோண்டு கலைத்தனர்.

இவை போல் பல நாடுகளிலும் இவர்களால் பலசம்பவங்கள் நடைபெற்றவண்ணம் உள்ளன.

புலிபசித்தாலும் புல்லைத்தின்னாது என்ற பழமொழியை புலிகளும், புலிஆதரவுத்தமிழர்களும் கூறுவதுண்டு இவர்கள் எந்த அடிப்படையில் அதைக் கூறுகின்றார்கள் என்றால் த.வி.புலிகள் எக்காலத்திலும் எவ்விடத்திலும் பயங்கரவாத, பாசிச நடவடிக்கைகளை நிறுத்தி மனிதப்பண்புடன் நடக்கமாட்டார்கள் என்பதற்காக.

ஆனால் புலி கடவாய்நக்காமல் புழுத்துச்சாவதுண்டு என்பதும் இவர்களுக்கு பொருத்தமானதே. இவ்வளவும் இருந்தும் தான் என்ற அகங்காரம் கொண்டு தவறுகளை உணர்ந்து திருத்திக்கொள்ளாமல் தொடர்ந்தும் புலிகள் தவறுகள் செய்வதும் அதை ஆதரவாளர்கள் ஆதரித்து வருவதுமே ஈழத் தமிழர்களின் இன்றைய அவல நிலைக்கு காரணமாகும்.

கிழட்டுப்புலி இரைதேடத் தென்பின்றி ஏமாற்றி பிழைப்பதுபோல் தோல்வியின் விழிம்பில் நிற்கும் புலிகள் ஈழத்தமிழர்களின் மரண அவலங்களை காட்டி தப்பிப்பிழைக்கப்பார்க்கின்றார்கள். இந்த அவலங்களின் மூல காரண கர்த்தாக்களே இவர்கள் தான் என்பது தெரிந்தும் ஆதாரவுப் புலிகள் ஏற்க மறுக்கின்றார்கள். இருபைத்தாண்டுகளுக்கு மேலாக சொந்த இனந்தவர் பல ஆயிரம் பேரை புலிகள் கொலை செய்து வரும்போது ஆதரித்து அள்ளிக்கொடுத்து ஆரவாரம் செய்தவர்கள் இன்று புலித்தலைவர் வீட்டுக்கதவை மரணம் தட்டும் போது தமிழ்மக்களின் அவலங்களை விற்று அவரைக் காப்பாற்ற முயற்சிக்கிறர்கள். எந்த சக்தியையும் தனித்து நின்று எதிர்த்து வெல்லக்கூடிய தானைத் தலைவர்தானே எங்கள் தலைவர் என்று தம்பட்டம் அடித்த நீங்கள் இன்று ஏன் தலையிலை அடித்து ஒப்பாரிவைத்து காப்பாற்றுங்கோ என்று கத்துறியள்.

நரிகளும், கழுகுகழும் போல இலங்கைத்தமிழர் மரணத்தில் அரசியல் பிழைப்புநடத்தும் சில தமிழக அரசியல், சினிமா பிழைப்பு நடத்தும் தற்குறிகளினால் எமக்கு எதுவும் ஆகாது.

மற்றவர்களை கொலை செய்து புறந்தள்ளி உங்கள் தலைவனாலும் சரி உங்களாலும் சரி தனித்து நின்று தமிழ்மக்களை காப்பாற்ற முடியாது என்பதை இப்போதாவது உணர்ந்துகொள்ளுங்கள் மாயயை கலையுங்கள் உங்களால் முடியாது என்பது உங்கள் மூலமாகவே புலப்படுகின்றது எப்படியென்றால் இப்போ உங்கள் ஊர்வலங்கள் , ஆர்பாட்டங்களில் புலிக்கொடியையும் புலித்தலைவரது படங்களையும் காணகிடைப்பதில்லை மாறாக பாரா முகமமாக இருக்கும், இலங்கை அரசுக்கு உதவிசெய்யும் வல்லரசுகள் ஆதிக்க சக்கதிகள் என்று நீங்கள் குற்றம்சாட்டும் உங்களை தடைசெய்த அமெரிக்க, ஜரோப்பிய நாட்டு தலைவர்களின் படங்களையும் தீயிலில் மாண்டு மரணத்தை மேலும் மலினப்படுத்துவர்களின் படங்கiயும் எமதுமக்களின் அவலங்களையுமே காணமுடிகிறது. இதிலிருந்து ஒன்று புலப்படுகிறது நீங்கள் இன்றும் தூர கண்ணோட்டத்துடன் செயற்படவில்லை. உலகநிலையை உணர்ந்து கொள்ளவில்லை, உண்மையான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை மாறாக மக்களின் உங்கள் கூட்டத்தை மட்டும்காப்பாற்றி யுத்தத்தை தொடரச்செய்து வெளிநாடுகளில் உங்கள் இருப்பை தற்காத்துகொள்ளவும் சுகமாக வாழவுமே விரும்புகின்றீர்கள்.

நாங்கள் விரும்புவதெல்லாம் எங்கள் இனம் அழிவது உடன் நிறுத்தப்படவேண்டும். முடியுமானவரை எங்கள் உரிமைகளை பெற்றக்கொண்டு மேலும் கிடைக்கவேண்டிய உரிமைகளை பெறுவதற்கு ஒற்றுமையாக சாதகமான வழிகளை கையாளவேண்டும்.

இதற்கு புலிகள் உடன் செய்யவேண்டியதும் செய்யக் கூடியதும் ஒன்றே நம்பிக்கையானவரை சாட்சியாகவைத்து ஆயுதத்தை ஒப்படைத்து அரசியல் வழிக்கு வருதல் வந்தால் மக்களின் மரணத்தை நிறுத்த முடியும் இல்லையேல் மக்களையும் அழித்து நீங்களும் அழியும் நிலையே தோன்றும் அதன் பின் எதுவும் கிடையாது கிடைத்தாலும் பலன் கிடையாது.

இருபக்கத்தாக்குதலிலும் கிக்கி சிதைந்து மரணமாகும் பாலகர்கள் பெண்கள் உட்பட அனைத்து மனிதர்களின் கோர மரணங்களையிட்டு மனம் வருந்துகின்றோம்.

நீங்களும் மனதார சிந்தியுங்கள்

புலிக்காக மட்டும் ஒப்பாரிவைக்கும் தமிழர்களே புலியை மக்கள் நலன் கருதி போராட்டத்தை கைவிடும் படி வற்புறுத்துங்கள். இல்லையேல் நீங்கள் உங்கள் உறவுகளின் வேதனைத் தீயில் குளிர்காய்பவர்கள். நீங்களே எங்கள் இனத்தின் கொள்ளிக்கட்டைகள்.

புலிபசித்தாலும் புல்லை தின்னாது

த.வி.புலிகள் கொலைகாணாது வாழாது

புரிந்தும் புரியாது புலிகளுக்காய் புலம்புபவர் புலம்பட்டும் புலி விழுந்தால் நரிக்கு தாயம் என்பது போல் இல்லாமல் மற்றளவர்களாயினும் எம்மக்களின் அவலம் போக்க ஒற்றமையாய் செயற்படுவோம். VIII


Read more...

Monday, March 9, 2009

பெண்கள் எனும் சமூகப் போராளிகள்! -கிழக்கான்-ஆதம்-



இதை எழுத முனையும்போது பல முறை யோசிக்க வேண்டி வந்தது காரணம் எழுத முற்படும் நான் ஒரு ஆண். ஆண்கள் பெண்கள் விடுதலை பற்றி எழுதத் தகுதியற்றவர்கள் என்பது பெரியாரின் வாதம்

“ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன், என்றும் விடுதலை பெறமுடியாத கட்டுப்பாடுகள், பலப்பட்டுக் கொண்டு வருகின்றன, பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சிகளே ஒழிய வேறல்ல. எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா?” -பெரியார் ஈ.வே.ராமசாமி-

08ம் திகதி மார்ச் மாதம் உலக மகளீர் தினம் இதே நாளில் 1857ம் ஆண்டு அமெரிக்காவின் தலை நகரான நியூயொர்கில் பெண்கள் தினத்திற்காக விதையிடப்பட்டது. என்றாலும் உலகில் பெண்களின் உரிமைகள் என்பன இன்னும் கேள்விக் குறிதான்.

அதற்கு பெண்கள் உடலியல் ரீதியாக அல்லது உணர்வு ரீதியாக தங்களுக்கு தாங்களே வேலிக்குள் வாழ்வதும் ஒரு காரணமாகி விட்டது.சமூகம் கலாச்சாரம் மதம் என்ற பெயரிலேயே அதிகமாக பெண்கள் அடிமைப் படுத்தப் படுகின்றனர் அல்லது தாங்களே தங்களை கட்டுப் படுத்திக் கொள்கின்றனர்.

என்றாலும் ஈழத்தை பொறுத்தவரை பெண்கள் ஆண்களுக்கு நிகரவோ அல்லது ஆண்களை விட மேலாகவோ சமூகப் போராளிகளாவே காணப்படுகின்றனர்.

ஈழத்தை பொறுத்தவரை சமூகப் விடுதலைப் போராடங்களை வித்திட்டு நடத்திய பெருமை பெண்களுக்கு உண்டு.

ஈழத் தமிழருக்கான போராட்டம் ஆயுதபோராட்டமாக மாற்றம் பெற்ற போது அதில் கனிசமான அளவு பெண்கள்போராடி வீழ்ந்துள்ளனர். அவர்களின் போராட்டம் சரியானதா? தவறானதா என்பதை விட அவர்களின் தியாகங்கள் மதிக்கப்பட வேண்டியவையே.

இப் ஆயுத போராட்டம் பாசிஸவாதமாக மாற்றம் அடைவதை உணர்ந்து உடனே எதிர்த்து ஒரு பேனாக்காரியாக களத்தில் நின்று போராடியவர் கலாநிதி. ராஜினி திராணகம.

ஒரு சமூகப் போராளியான பெண் பேனாவை எதிர்கொள்ள திரானியற்று துப்பாக்கியால் எதிர் கொண்டதானது பாசிச வாதிகள் தங்களை தாங்களே அன்றே வீழ்திக் கொண்தற்கான அடையாளம் எனலாம்.

“என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கி விடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப் படுவதாக இருக்காது. மாறாக என் வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் இச் சமூகத்தில் வாழும் பெண்ணின் கருவரையில் இருந்து பிரசவிக்கப் பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப் பட்ட துப்பாக்கியாகவே அது இருக்கும்” –ராஜினி திராணகம, முறிந்த பனை-

என்று தன் முடிவையும் பாசிச வாதத்தின் போக்கையும் சரியாகக் கணித்தவர் இவர். அவரின் கணிப்பை நாம் கண் முன்னால் இன்று காண்கிறோம்.

அவர் மட்டும் இன்று உயிருடன் இருந்திருந்தால் பல பெண்களையும் பல மனித உயிர்களையும் அவரின் பேனா போராட்டம் என்ற சர்வதிகாரத்திற்கு பலியாகாமல் காப்பாற்றி இருக்கும்.

ஈழத்து பெண்கள் மிகவும் சமூகப் பற்றுள்ளவர்களாகவே காணப்பட்டுள்ளார்கள் உலகில் எங்கும் இப்படிப் பட்ட பெண்களைக் கான முடியாது.

தங்களின் சமூக விடுதலைக்காக போராட்ட இயக்கம்கள் முளையிட்ட போது அதற்காக தங்கள் குழந்தைகளை மனதார கொடுத்து சமூகத்தின் விடிவுக்காக தங்களின் வாழ்வை இருட்டாக்கிக் கொண்டார்கள்.

இன்னும் ஒரு சாரார் தங்களின் வாழ்கையை வளங்களை ஆசைகளை மறந்து சமூகத்திற்காக தங்களை கருக்கிக் கொண்டார்கள்.

“கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்” என்றான் பாரதி. ஆனால் அவன் கற்பு நிலைக்கு கண்ட கனவை அதையும் தான்டி சமூக நிலைக்கும், போராடத்திற்கும் கொணர்ந்தவர்கள் நம் ஈழத்து பெண்கள்.

சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயும் ஈழத்து வரலாற்றில் இன்னுமோரு ராஜினிக்கு உதாரணம். தமது மக்களின் விடிவுக்காக மட்டுமே தன்னால் ஆன முழுவதையும் துப்பாக்கிகளுக்கு எதிராக துணிந்து செய்தவர்.

பாஸிஸ வாதிகளின் துப்பாக்கிகள் இந்த போராளியை வீழ்த்தினாலும் அவரின் போராட்டதுக்கு முன்னால் அவை தோற்றுப் போய் விட்டது.

இந்தப் பாஸிஸ வாதமானது பெண்களால் தங்களை நிலை நிறுத்தி அதே பெண்களை வீழ்தியதன் ஊடாக தங்களின் வீழ்சியையும் கண்டு கொண்டது.

இதை பற்றி எழுதுவதாக இருந்தால் இன்னும் எத்தனையோ ராதிகா குமாரசாமிகளைப் பற்றி எழுதலாம்.உலகில் உள்ள பெண்கள் அதிகமானவர்கள் குடும்பம் என்ற அல்லது சமூகக் கலாச்சாரம் என்பவற்றால் அடிமைப்படுத்தப் பட்டிருக்க ஈழத்தில் பெண்கள் தனது சமூகத்தின் விடுதலைக்காக போராடி சமூகத்தையும், கலாச்சாரத்தையும் அடிமைத்தனத்தில் சர்வாதிகாரதில் இருந்து மீட்டுள்ளார்கள்.

அன்று கல்லோயாவில் தொடங்கி இன்று வெள்ளாவெலி முதல் தங்கள் சமூகத்தின் விடுதலையின் பெயரால் சிதைக்கப்பட்ட போது எல்லாம் உயிர்த்தெழ அவர்களால் முடிந்திருக்கிறது உயிர்தெழுந்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்ணைக் கொல்ல ஆணுக்கு உரிமை இருந்தால் ஆணைக் கொல்லப் பெண்ணுக்கும் உரிமை வேண்டும். ஆணைத் தொழுதெழ பெண்ணுக்கு நிபந்தனை இருந்தால், பெண்ணைத் தொழுதெழ ஆணுக்கும் நிபந்தனை இருக்க வேண்டும். – பெரியார் ஈ.வே ராமசாமி -

என்ற பெரியாரின் கனவு மெய்படும் காலம் ஈழத்தில் மிகவும் தொலைவில் இல்லை.
காலத்தின் கட்டாயத்திலும் பொருளாதார சிக்கல்களாலும் திரைகளை கிழித்து பெண்கள் வெளிவரத் தொடங்கியதில் இருந்து இப்படிப் பட்ட பெண்களை இழிவாக நினைக்கும் அல்லது இழிவாகப் பேசும் ஒரு ஆணாதிக்க சாரார் நம்மில் உண்டு.அவர்களின் அத்தகைய தூற்ருதலானது நாளைய பெண்களின் விடிவை இன்னும் விரைவாக்கும்.

இவ்வாறு ஈழத்து பெண்கள் விடுதலை, சமூகம், குடும்பம் என்று நாங்கள் எங்கு நோக்கினாலும் ஆண்களை விட மிகவும் உயரிய ஸ்தானத்திலயே நின்று வாழ்கின்றனர்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்தி

காட்சி கெடுத்திடலாமோ

பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்

பேதமை அற்றிடும் காணீர் –
பாரதியார்.
VIII

Read more...

Tuesday, December 16, 2008

பயங்கரவாதியையும் பயங்கரவாதத்தையும் எதிர்ப்போம்: இயற்கையைக் காப்போம் அதை இரசிப்போம்: மனிதத்தை காப்போம் அதை நேசிப்போம். இராவணன்

மக்களின் வாழ்வுரிமைக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் தடைபோடும் புலிகள் இந்திய பேரரசையும் சர்வதேச சமூகத்தையும் தங்களின் தடை நீக்கச்சொல்லிகேட்பதில் என்ன நியாயம் உண்டு.

தமிழரசுக்கட்சியும் தமிழர்விடுதலைக் கூட்டணியும் தமிழ் மொழி வார்த்தை அலங்காரத்தினால் மேடையை அலங்கரித்து தமிழ் மக்களை தன்மான உணர்ச்சியின் உச்சிக்கே கொண்டடு சென்றனர்.கவிஞர் வைரமுத்து தமிழ் வார்த்தை அலங்காரத்தினால் கவிதையை எழுதி வைத்து பார்த்து வாசித்து குறிப்பிட்ட ஒரு மக்களை வட்டத்தை தனது ரசிகர்கள் ஆக்கிவைத்திருப்து போன்று பிரபாகரனும் தமிழ் வார்த்தை அலங்காரத்தினால் யாரும் எழுதிக்கொடுக்கும் உரையை பார்த்து வாசித்து தனது கூட்டத்தை திருத்திப்படுத்துவது வழமை. அதே போல் (2008) இவ்வருட உரையையும் அலங்கரித்து பேசியுள்ளார்.

இந்த உரையில் இலங்கைத் தமிழ் மக்களை சுய நிர்னய உரிமையுடன் வாழவைக்கக் கூடிய எந்த இராஜதந்திர நகர்வும் இருக்கவில்லை. மாறாக உலக நாடுகள் விதித்துள்ள தடையை நீக்கி தங்களை ஏகபபிரதிநிதிகளாகவும் ஒரு ஆதிக்க சக்தியாகவும் எற்றுக்கொள்ளவே கேட்டுள்ளார்.இத்தோடு பழங்கதை சொல்லி எல்லாத் தமிழ் மக்கள் காதிலையும் கார்த்திகைப்பூ வாக்கப்பார்க்கிறார் பிரபாகரன்.

இது மட்டுமல்ல பாட்டன் கொப்பாட்டன் வாழ்ந்த பூமி என்கிறார். நான் கேட்கிறேன் நீங்கள் கூறுகிறவாறு யாழ்பணத்தில் காலம் காலமாக வாழ்ந்த தமிழ் மொழி பேசும் முஸ்லீம் மக்களை உங்கள் தலைமையிலானவர்கள் அசையும், அசையா பொருள் எல்லாவற்iயும் அவ்விடத்தே விட்டுவிட்டு கட்டிய புடவையுடன் கால் நடையாக அனுப்பிய பெருமை உங்களுடையதே அம்மக்கள் இப்போதும் அகதிமுகாம்களில் சொல்லொணா துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள்.

இந்த யாழ் முஸ்லீம்களை வெளியேற்றியது ஏன் என பல தமிழர்களுக்கு தெரியாது.
ஆனால் காரணம் அரபுநாடுகளுக்கு தெரியும். இஸ்ரேல் புலனாய்வுப்படையான மொசாட்டின் கட்டளைக்கு இணங்கியே முஸ்லீம்களை வெளியேற்றும் நடவடிக்கையை புலிகள் செய்தனர்.
இதற்காக புலிகளுக்கு பல கோடி பணமும் சிலருக்கு ஆயதப்பயிற்சியும் கொடுத்தனர்
இதையறிந்த அன்றைய முஸ்லீம் காங்கிரஸ்தலைவர் அஸ்ரப் அரபு நாடுகளுடன் தொடர்கொண்டு அவர்கள் மூலமாக பிரேமதாசா அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக கொழும்பில் இருந்த இஸ்ரேல் தூதரகத்தை இலங்கையில் இருந்து வெளிறே;றினார் என்பது பல நாட்டு அதிகாரிகளுக்கும் தெரியும்.

பேச்சு வார்த்தைகளையும் போர்நிறுத்தத்தையும் மீறாதவர்கள் போலும். தான் ஒரு மகாத்மா போல் காட்டுவது நீதி தேவதையை பெற்றோல் ஊற்றி உயிருடன் எரிப்பது போல் உள்ளது.

புலிகளின் ஆதாரவான நோர்வே நாட்டுக் கண்காணிப்பாளர்களே கூறியுள்ளார்கள் புலிகள் ஜயாயிரம் தடவைகள் போர் நிறுத்தத்தை மீறியுள்ளார்கள் என்று. ஆனால் பிரபாகரனோ தாம் யுத்தநிறுத்தத்தை ஒழுங்காகவே கடைப்பித்ததாகவும் தனது வெளிநாட்டு கிளைகள் அவ் நாட்டு சட்டதிட்டங்களை மீறாது நடக்கிறார்கள் என்றும் மக்களுக்கு பொய்சொல்லி ஜோக் அடிக்கின்றார்.

சர்வதேச நாடுகளும் இந்தியப் பேரரசும் புலிகள் இயக்கத்தை தடைபண்ணி பயங்கரவாத பட்டியலில் சேர்த்து பிராபாகரனையும், பொட்டனையும் சர்வதேசப் பொலிசாரும் இந்திய பேரரசின் புலனாய்வுப் படையும் தேடிக்கொண்டு இருக்கும் இவ் வேளையில்.
பிரபாகரன் 2008 வருடாந்த உரையை வன்னியில் பிரத்தியேக பதுங்கு குழியில் இருந்து உரையாற்றும் வேளையில்.இந்திய பேரரசின் சர்வதேச வர்த்தக பெருநகரான மும்பையில் பயங்கரவாதிகள் பொது மக்களை சுட்டுக்கொன்றும் பணயக்கைதியாகவும் பிடித்துவைத்து சுடுவதையும் இந்திய பேரரசு பஸிசவாதத் தவைன் பிரபாகரன் பேசுகின்ற ஒவ்வொரு நொடியம் பயங்கரவாதத்தை உணர்ந்துகொண்டு இருந்தது.

இந்திய மண்ணில் பிரபாகரன் தலைமையிலான பயங்கரவாதப் புலி இயக்கத்தால் செய்த தற்கொலை படுகொலை இந்திய பேரரசின் வரலாற்றில் என்றுமே ஒலித்துக்கொண்டிருக்கும, இருக்கிறது. இதையெல்லாம் புறம் தள்ளி இந்தியப் பேரரசு பாஸிசவாதப் புலிகளுக்கு விதித்துள்ள தடையை நீக்கச்சொல்லி பயங்கரவாதி பிரபாகரன் கேட்பது தான் ஒரு முட்டாள் என்பதை மேலும் மேலும் நிருபித்து காட்டியுள்ளது.

புலிகள் இயக்கத்தால் வன்னி மண்ணில் வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்தது எல்லாம் இந்தியாவின் புலனாய்வுப் பிரிவுக்கு தெரியும். இதுமட்டுமல் சர்வதே கடல்பரப்பில் கடல் கொள்ளையர்களுடன் புலிகளுக்கு உள்ள தொடர்புகள் ஆயுதப்பரிமாற்றங்கள் அனைத்தும் சர்வதேச புலனாய்வு படைளுக்கும் தெரியும். இந்நிலையில் பிரபாகரன் சர்வதேச நாடுகளிடம் தங்களின் தடையை நீக்கச்சொல்லி கேட்பது வேடிக்கையாகவுள்ளது.

புலிகள் கொழும்பு நகருக்குள் புகுந்து பொதுமக்களை சுட்டுக்கொன்று அங்குள்ள பத்திரிகை அலுவலகம் ஒன்றின் ஊழியர்களையும், விகாரை ஒன்றின் மதகுருமாரையும் பணயக்கைதிகளாக்கி சுட்டுக்கொன்றனர். அதே பாணியில் மும்பாயில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.இது மட்டுமல்ல புலிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை தாக்கிய அதே பாணியில் அல்கைடா பயங்கரவாதிகள் அமெரிக்க வர்த்தக மையத்தை தாக்கினர். ஓட்டு மொத்தத்தில் புலிகளே எல்லாப் பயங்கரவாதிகளுக்கும் முன் உதாரணமாக செயல்படுகின்றார்கள் என்பதே உண்மை.

கொடுத்த கூலிக்கு தமிழ்நாட்டில் வேலை செய்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார் புலிகளின் தலைவர். புலிகளின் பல கோடிபணம் சில அரசியல் வாதிகளிடமும், சினிமாக்காரர்களிடமும் பாதுகாப்பாக உள்ளது. தனது மனைவி பிள்ளைகளை பாதுகாப்பாக வெளிநாடுகளில் விட்டுள்ளார்.ஆனால் வன்னி மக்களை கண்ணீரும் கம்பலையுமாக விதிகளில் விட்டுள்ளார் பிராபாகரன்.

இளையோருக்கு நன்றி கூறும் பிரபாகரன் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இங்கிலாந்தில் இரண்டு மூன்று தலை முறையாக வாழ்ந்து வந்த பாகிஸ்தானியரின் இன்றைய இளையோர்தான் இந்தியாவில் மும்பையில் 62 மணி நேரத்திற்கு மேலாகபயங்கரவாத செயலில் ஈடுபட்டு மனிதப் படுகொலைகளையும் அழிவுகளையும் உண்டுபண்ணினார்கள். இதனால் வேறுபாடு இல்லாமல் பலதரப்பு மக்களும் பயரங்கரவாதத்தின் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.இதே போலத்தான் பிரபாகரன் தன் காலடியில் இருக்கும் மாணவர்களையும், சிறார்களையும் , இளையோர்களையும் கட்டாயப்படுத்தி கடத்திக் கொண்டு சென்று யுத்த முன்னரங்குகளில் நிறுத்தி பலி கொடுக்கின்றார்.
இவர்களைப் பெற்ற பெற்றோர் வன்னி மண்ணில் மனநோயாளிகளாகி வீதிகளில் திரிகின்றனர்.
இதையெல்லாம் நினைவில் கொள்ளாத பிரபாகரன் வெளிநாடுகளில் வாழும் இளையோருக்கு நன்றியாம. இந்த இளையோர்தான் புலிகளின் வெளிநாட்டு வன்முறைக் கும்பல். இவர்கள் ஊடாகத்தான் வெளிநாட்டில் உள்ள புலி பினாமிகள் மாற்றுக்கருத்தாளர்கள் மீது வன் முறையை கட்டவுழ்த்து வீடுவது வழக்கம்.

மொக்காடு போட்டு அனாகரிக உடையணிந்து மக்களை அருவருக்கச் செய்யும் இந்த வெளிநாட்டு இளையோர் வன்முறைக் கும்பலுக்கு நன்றி சொல்லும் தலைவர் உரை பிரமாதம் உன் புகழ் மண்ணோடு மண்ணாகப் போகட்டும்.

என் அன்பார்ந்த இணையத்தள வாசகர்களே பயங்கரவாதம் எந்த மூலையில் இருந்தாலும் அதை நாம் எதிர்ப்போம்.

இந்தியாவில் பம்பாயில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு உங்கள் சார்;பாகவும் என்சார்பாகவும் கண்டனத்தையும் இதில் கொல்லப்பட்ட மக்கள் குடுபங்களுக்கு அனுதாபத்தையும் தெரிவிக்கும் அதேவேளை காயப்பட்டவர்கள் குணமடைய என் ஜயன் கோணேஸ்வரரை வேண்டி நிற்கின்றேன். VIII

பயங்கரவாதியையும் பயங்கரவாதத்தையும் எதிர்ப்போம்

இயற்கையைக் காப்போம் அதை இரசிப்போம்.

மனிதத்தை காப்போம் அதை நேசிப்போம்.

இராவணன்

Read more...

Thursday, February 12, 2009

மகிந்தா தமிழ்மக்களைக் காப்பாற்றுவாரா? - விருகோதரன்.


ஈழ விடுதலைப் போராட்டம் தடம்புரண்டு தலைவர் விடுதலைப்போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்மக்களின் உரிமைப்போராட்டத்தினுள்
சிவபூசையில் கரடி நுழைந்தது போல் நுழைந்த பிரபாகரன் இன்று தன்னைப் பாதுகாக்க தன்னுடன் மனிதகேடயங்களாக நிற்கமறுக்கின்ற மக்களை தற்கொலைக்குண்டுதாரி கொண்டு தாக்கியழிக்கும் அளவுக்கு போராட்டத்தை மாற்றியமைத்திருக்கின்றான்.

புலிகளின் பாசையில் இப்போராட்டம் பரிணாமவளர்ச்சி கண்டிருக்கின்றதென எதைக் குறிப்பிடுகின்றார்கள் என்றால், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் எனவும், மக்களின், இனத்தின், சுதந்திரத்திற்கான விடுதலைப்போராட்டம் எனவும், மாவீரர்கள் மரணிப்பதில்லை: மக்களின் விடுதலைக்காக விதைக்கப்படுகின்றார்கள் எனவும் மூளை சலவை செய்யப்பட்டு கரும்புலிகள் ஆக்கப்பட்டார்கள். ஆனால் எந்த மக்களுக்காக தம்மை கரும்புலிகளாக்கிக் கொண்டார்களோ (போராளிகள்) அந்த மக்கள் மீதே இன்று கரும்புலித்தாக்குதல் மேற்கொள்ளும் அளவிற்கு அவர்களின் மூளையைச் சலவை செய்திருக்கிறான் பிரபாகரன் என்றால் அதுதான் புலிகளின் பாசிச போராட்ட பரிணாமவளர்ச்சியாகும்.

புத்தபிக்குகள் தொட்டு சிங்களக் கிராமங்களைத் தாக்கியழித்து, அந்த அப்பாவிப் பொது மக்களை சுட்டும் வெட்டியும் கொத்தியம் தீயிட்டுக் கொழுத்தியும் படுபாதகமாகக் கொலை செய்தார்கள். ஆனால் அது தமிழின அழிப்புக்கு எதிரான தாக்குதல் என்றும், நில ஆக்கிரமிப்புக்கெதிரான தாக்குதல் என்றும் நியாயம் கற்பிக்கப்பட்டது.

யாரிந்த கரும்புலி? எதற்காக இந்தத் தாக்குதல்? தாக்குதல் எவ்வாறு நியாயப்படுத்தப்படப் போகின்றது? இப்போராட்டத்திற்கு தமிழ்மக்கள் விரும்பியோ விரும்பாமலோ செய்த தியாகங்கள் யாவை?

கடலாலும் தரையாலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ள பிரபாகரனைப் பிடிப்பதென்பது அரசபடைகளுக்கு சில மணித்தியாலங்களில் முடித்துவிடக்கூடிய விடயம். ஆனால் பிரபாகரன் மனிதகுல விரோதி என்பதையும் அவன் அங்கு மனிதகேடயங்களாக பணயம் வைத்துள்ள மக்கள் இப்பந்தயத்தில் பலியாகிவிடக்கூடாது என்பதற்காகவும் அரசாங்கம் தன்னால் முடியுமான விட்டுக் கொடுப்புகளைச் செய்து வருகின்றது.

இன்று பிரபாகரன் படுதோல்வியடைந்துள்ளான் என்பதையும் அவன் தோற்கடிக்கப்பட்டு விட்டான் என்பதையும் அவனுக்கு சீர்வரிசை செய்து வந்த நோர்வே உட்பட பல நாடுகளும் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், மனிதாபிமானமற்ற வெல்ல முடியாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து எஞ்சியுள்ள போராளிகளையும் அவன் மனிதகேடயங்களாக வைத்துள்ள 250,000 மக்களையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.

இன்று முழு உலகமே இவனது கொடுமைகளைக் கண்டித்து வன்னியிலுள்ள மக்களுக்காகக் கொடுக்கும் குரல், அம்மக்களின் காதுகளில் விழாது பிரபாகரன் தடுத்து வைத்திருந்தாலும் கூட அம்மக்களினால் எவ்வாறு இத்தனை சுமைகளையும் தாங்கமுடியும்? ஏறக்குறைய 15 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் உக்கிர சண்டைகளுக்குள் ஓட்டமும் ஒழிவுமாக இருந்த மக்கள் தற்போது கிட்டத்தட்ட 200 சதுர கிமீ நிலப்பரப்பினுள் ஆடுமாடுகள் போல் அடைக்கப்பட்டுள்ளதையும் , இச்சிறுநிலப் பரப்பையும் கூட புலிகளினால் தக்கவைத்துக் கொள்ள முடியாதென்பதையும் உணர்ந்த பின்பு தமக்கு பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்வதில் என்ன தவறு?

இம்மக்கள் இப்பூமியில் பிறக்கும் போது வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரன் சாகும் வரை அவனது உயிரை நாம் பாதுகாப்போம் என்று உறுதிபூண்டோ இங்கு வந்து பிறந்தார்கள்?

தனிநாடு எனும் ஓர் மாயயைக் காட்டி தமிழ்மக்களுக்கு பிரபாகரன் கொடுத்த துயரங்கள் உலகிலே எந்த மூலையிலும் இடம்பெற்றிராதவை. வன்னியின் குறிப்பிட்ட பிரதேசத்தினுள் உலகவெளிச்சம் தெரியாமல் கிணற்றுத்தவளைகளாக அடைத்து வைத்திருந்த மக்களை கட்டாய போர்ச்சேவையில் ஈடுபடுத்தினான். அவர்களது பொருளாதாரத்தைச் சுரண்டினான்.
அவர்கள் பெற்ற பிள்ளைகளை பலவந்தமாக கட்டாயப்படுத்திப் போருக்காக பெற்றுக்கொண்டான். மறுத்தவர்களை சித்திரவதைக் கூடங்களில் அடைத்தும், கொன்றும் கொடுமைபுரிந்தான்.

பிரபாகரன் தனது தோல்வியை தன் கண்முன் கண்;டு கொண்டுள்ளபோதும் மக்களை வாழ விடுவதாக இல்லை. ஓரு சிறிய நிலப்பரப்பினுள் ஒடுக்கப்பட்டுள்ள பிரபாகரன் தனது நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றான். இவ்விடத்தில் எனக்கு ஓர் விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. அது: கடைசித்தமிழன் இருக்கும்வரை தமிழீழ போராட்டம் தொடரும் என புலிகள் கூறி வந்திருக்கிறார்கள். கடைசித் தமிழன் இருக்கும் வரை பிரபாகரன் உயிரைக் காப்பாற்ற எத்தனிக்க வேண்டும் என்பதாகவே இன்றைய நிலைமை அதை அர்த்தப்படுத்துகிறது.

இனி;மேல் தனது ஆயுதபோராட்டத்தால் எதுவுமே சாதிக்கமுடியாதென்பதை பிரபாகரன் நன்கு உணர்ந்திருந்தும் தான் இன்னும் உயிர்வாழக்கூடிய சொற்ப காலங்களுக்காக ஏறக்குறைய 250,000 மக்களையும் எஞ்சியுள்ள கடைசிப் போராளிவரையும் பலி கொடுக்கத் திடசங்கற்பம் பூண்டு கொண்டு நிற்பதைக் கண்டும் பிரபாகரனை சூரியதேவனாகவும் தேசியத்தலைவனாகவும் மகுடம் சூடிநிற்கின்ற மக்கள் இன்னும் மௌனத்தை கலையாதது ஏன்?

சுதந்திரபுரம் தற்கொலைத்தாக்குதல் சொல்லும் செய்தி என்ன? இந்தத் தற்கொலையாளிக்கு மக்கள் பெரிதா? பிரபாகரன் பெரிதா?

சொல்லணாத்துயரங்கள் சுமந்த மக்கள் பிரபாகரனுடன் இருப்பதில் தமக்கு பாதுகாப்பில்லை என்ற உண்மையை உணர்ந்த பின்பு பாதுகாப்பு தேடிச் செல்கையில் அவர்களைச் சுட்டு வீழ்த்தியும், அவர்கள் நகர்கின்ற பிரதேசங்களில் ஆட்லறி nஷல்களை செலுத்தியும் கொன்றொழித்த பிரபாகரன் இன்று அவர்களை தற்கொலைக் குண்டுகள் மூலமும் கொன்றொழிக்க முற்பட்டுள்ளமை பிரபாகரனைப் போன்ற சர்வாதிகாரி உலகில் எந்த மூலையிலும் இல்லை என்பதைக் காட்டுகிறது.

வன்னி சுற்றிவளைக்கப்பட்ட போது அரசாங்கம் மக்களை விடுவிக்குமாறு புலிகளுக்கு வேண்டுகோள் விடுத்தது. அதற்கு செவிமடுக்காத பிரபாகரன் மாறாக தனது நம்பிக்கைக்குரியவர்களை இராணுவத்திடம் சரணடையுமாறு அனுப்பினான். அவர்கள் மூலம் நாசகார வேலைகளை செய்வதினூடாக தமிழ்மக்கள் மீது படையினரின் கெடுபிடிகளை அதிகரிக்கலாம் என்பதும், அக்கெடுபிடிகளை ஒன்றுக்கு பத்து மடங்காக்கி மக்களுக்கு காட்டுவதன் மூலம் மக்கள் காதில் தொடர்ந்தும் பூச்சூட்டலாம் என்பதும் திட்டமாகவிருந்தது.

ஆனால் பிரபாகரனது அத்திட்டம் தோல்வி கண்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த நேரத்தில் வடகிழக்கின் வெளிப்பிரதேசங்களுக்கு நாசகார நோக்குடன் அனுப்பிவைக்கப்பட்ட புலிகள் யுத்தம் தொடங்கியவுடன் கையில் கிடந்தவற்றை சுருட்டிக்கொண்டு வெளிநாடுகளுக்கு சென்றது போல், பிரபாகரனால் அண்மையில் படையினரிடம் சரணடைய அனுப்பி வைக்கப்பட்ட புலிகளும் காலை வாரிவிட்டுள்ளனர்.இன்று படையினரிடம் சரணடைந்து வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள அப்புலிகள் வன்னியின் உண்மை நிலைமைகளை ஒப்புவித்துள்ளனர். குறிப்பாக தமக்கு வழங்கப்பட்டிருந்த தாக்குதல் இலக்குகளை தெரிவித்ததோடு தாம் தொடர்ந்தும் யுத்தத்தில் ஈடுபட விரும்பவில்லை: உயிர் வாழவே விரும்புகிறோம் எனவும் கூறியுள்ளனர்.

இவ்வாறு பிரபாகரனது இறுதி வியூகமும் படுதோல்வியடைந்த நிலையிலேயே இன்று பொதுமக்களைக் கொன்றொழித்து வருகின்றான். ஆக ஒட்டுமொத்தத்தில் அவன் இத்தனை காலமும் மேற்கொண்டுவந்த படுகொலைகள் யாவும் தமிழின விடுதலையை கொண்டதல்ல என்பதையும் அவனது தனிமனித இராட்சியத்தையும், தனது வாழ்க்கை நலன் சார்ந்தது என்பதையும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டு, பிரபாகரனது பசப்பு வார்த்தைகளுக்காக இத்தனை காலமும் செய்து வந்த உதவிகளையும் வாபஸ் பெற்று ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாம் இலங்கையர் என வாழமுடியும் என்கின்ற மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

வன்னியில் புலிகளால் கொல்லப்படுகின்ற, வதைபடுகின்ற விதத்தைக் கண்ணுற்றுள்ள நாட்டின் ஜனாதிபதி அவர்கள் பிரபாகரன் ஒட்டுமொத்தத்தில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்கின்ற வேற்றுமையின்றி தனது சுயநலத்திற்காக மனிதகுலத்தின் மீது பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்திருக்கிறான் என்பதைக் கருத்தில் கொண்டு வன்னி மக்களை அவன் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டும்.VIII

Read more...

Wednesday, April 8, 2009

ஜஸாகல்லாஹ் ஹைர் -அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக. - யஹியா வாஸித் -

சற்லைட்டில் ரீ.வீ.யில் உலகை மிரட்டிய தலைவன் இன்று லவுட்ஸ்பீக்கர் வைத்து கூப்பிடும் தூரத்தில்.

தீபன் இறந்து விட்டார், விதுஷா பிணமாக கிடக்கிறார். 250 புலிகள் செத்து விழுந்து விட்டார்கள். ஆனால் இன்னும் இறுமாப்பும், கொழுப்பும் அடங்கவில்லை. நாளைக்கு சங்கிலிப் போராட்டம், நாளை மறுதினம் ஊர்வலம், அதற்கடுத்த நாள் கையெழுத்துப் போராட்டம். அதற்கப்புறம் அய்யன்னா நாவன்னாவுக்கு தந்தியடிப்பு போராட்டம், அதற்கும் அப்புறம்........

இவையெல்லாம் சரி வராது ஆயுதம் தூக்கினால்தான் இந்தஅய்யன்னா நாவன்னாவும், உலக நாடுகளும் கேட்பானுகள் போல் இருக்கிறது. எனவே மீண்டும் உலக நாடுகளில் ஆயுதம் தூக்குவோம். மீண்டும் தொடக்கப் புள்ளிக்கா? எத்தனை உயிர்கள், எத்தனை அழிவுகள், எத்தனை கொடுமை, எத்தனை வேதனை!

பல ஆயிரம் உயிர்களை சாவாகாசமாக காவு கொண்டவர்கள் இப்போது உயிர்களின் பெறுமதி பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். ஒரு தாய்க்குத்தான் தெரியும் ஒரு பிள்ளையின் வேதனை. இன்று அடிவயிற்றை பிடித்துக் கொண்டு அழும் தீபனின் தாயும், விதுஷாவின் தாயும் இன்னும் இருநூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின்
தாய்மாருக்கு யார் ஆறுதல் கூறுவது.

அவளுகள் என்ன கல்லையா பிள்ளையாக பெற்றார்கள். முத்துக்களை அல்லவா பெற்றார்கள். அவளுக்கு அது பொன்குஞ்சு அல்லவா. கலிங்கம் சென்றான் கடாரம் கொண்டான். திரைகடல் ஓடினான், திரவியம் தேடினான். உலக நாடுகளை உருவாக்கித்தந்தான் என்ற தமிழன் இன்று ஐரோப்பிய புலம் பெயர் நாடுகளில் ஒரே
ஒரு தலைவருக்காக காவடி ஆடுகின்றான். அன்று எல்லாம் எமக்குத் தெரியும் என்று உலக நாடுகளைப் பார்த்து இறுமாந்த தமிழன் இன்று ஐயகோ எங்களுக்கு கை கொடுங்களேன் என
வீதிகளை ஆக்கிரமித்து அர்த்த நாரீஸ்வரம் பாடுகின்றான்.

தவறான அஸ்திவாரம், சறுக்கலான நிர்மாணம், கூறுகெட்டத்தனமான கோப்பிஷம், தான்தோன்றித்தனமான நிர்வாகம் என ஆல விருட்சமாக வளர்ந்த விடுதலைப் புலிகளின் கோட்டைகள் சரிந்து அஸ்திவாரம் பிடுங்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. 25 வருடமாக வெளியே பெயின்ட் மேல் பெயின்ட்டாக அடித்து வேடிக்கை காட்டியவர்கள் இப்போதுதான் அஸ்திவாரம் பற்றி சிந்திக்கின்றனர். தொடர் போராட்டம் நடாத்துகின்றனர்.

கையிலே கொடி முகத்திலே வெறி மீண்டும் வருகிறது அகிம்சை போராட்டம்
அய்யன்னா நாவன்னாவும், இங்கிலாந்து பாராழுமன்றமும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனவாம். இது இன்றைய தலைப்பு செய்தி. அவர்களுக்கு இப்போது வேறு வேலையே இல்லை. இங்கிலாந்து பாராளுமன்றத்துக்குள் தூங்கிக் கொண்டிருந்த கோர்டன் பிறவுணும், அய்யன்னா நாவன்னாவில் பேய்க்குப்பேன் பார்த்துக் கொண்டிருந்த பான் கீ மூனும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனராம். இப்படி எத்தனைமுறை இவர்களை திகைக்கவைத்துள்ளீர்கள். அந்த திகைப்பின் உச்சம்தானே உங்கள் மீது விதிக்கப்பட்ட உலகத்தடைகள்.

சற்லைட்டில் ரீ.வீ.யில் உலகை மிரட்டிய தலைவன் இன்று லவுட்ஸ்பீக்கர் வைத்து கூப்பிடும் தூரத்தில்.

உங்களால் செய்யப்பட்ட அனைத்து பழிவாங்கல்களையும் நாங்கள் மன்னித்து விட்டோம். இன்னும் நீங்கள் ஆயிரம் பேரை கொல்லுங்கள் நாங்கள் யாரும் கேட்கப் போவதில்லை. நாங்கள்தான் வக்கற்றவர்களாச்சே. பணபலம், முப்படை பலம், புலம்பெயர் நாடுகளை கிலி கொள்ளச் செய்யும் ஊடக பலம் எல்லாமே உங்கள் கையில்தானே இருக்கிறது. நடக்கட்டும், நடக்கட்டும் எல்லாமே நன்றாகவே நடக்கட்டும். சிங்களவனின் ரத்தம் குடியுங்கள், அப்பாவி தமிழனை பணயம் வைத்து சாகடியுங்கள், சோனிக்காக்காமாரை சுட்டுத்தள்ளுங்கள். ரொம்ப ஜாலியாக இருக்கிறது. எல்லோருடைய பிள்ளைகளும் உங்களுக்கு சும்மா. வேலுப்பிள்ளையர்ர மகன்மட்டும் கைம்மா(கொம்பன்யானை).

ஆனால் ராஜீவ் காந்தி என்ற ஒரு மனிதனை கிழித்து சுக்கு நூறாக்கி விட்டு பத்தோடு பதினொன்றாக இறுமாந்ததின் பலனைத்தான் இன்று மொத்த தமிழனும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் மறந்து விடாதீர்கள். பார்த்தீர்களா ஒரு தாயினதும் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளினதும் இத்தனூண்டு வைராக்கியம் 18 வருடத்தின் பின் விஷூவரூபம் எடுத்து தமிழனை சந்தி சிரிக்க வைத்து விட்டது.

கலி சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் என்ற ரூபத்தில் பிறந்து விட்டது. எனவே மகனே எதிர்கால தமிழீழம் இப்படித்தான் இருக்கும் என்று ஒருவன் அறம்பாடியிருந்தான்.

காவலாம் வேலியே பயிர்களை மேயும்
மோஷமும் வேஷமும் மணிமுடி சூடும்
படித்தவர் பண்டிதர் பசியால் துடிப்பர்
பஞ்ஞமா பாதகர் பால் பழம் குடிப்பர்
ஆலையம் பெரும்பாலும் பாழாய் கிடக்கும்
எங்குமே என்கின்ற ஆணவம் நிறையும்
பிள்ளைகள் பெற்றோரை தெருவிலே வீசுவர்
குலம் மாதர் பண்பாடோ வேடிக்கை ஆகும்
மரம் செடி கொடி எல்லாம் துப்பாக்கிகள் சாய்க்கும்
தானியம் குறையும் சரித்திரம் குனியும்
தளை கனி காய் எல்லாம் விஷமாய் விழையும்


அவன்ட வாய்க்கு சக்கரை போட வேண்டும். இப்போது, அகிம்சை தேடி அலைகின்றனர்
கொலை செய்யும் மனிதர்கள் இன்னுமா புன்னகைக்கின்றாய் தமிழ்த்தாயே. என்று இன்னுமொருவன் பாடமுதல் எல்லாம் முடிய வேண்டும். முடிந்த முடிவாக வேண்டும்.

முப்பதுவருடக் கனவு, பல கற்பனைகள், ஆயிரம் எண்ணப் பொருமல்கள், நூறாயிரம் வார்த்தைபிரயோகங்கள், இதயங்களை சல்லடையாக்கிய இரவுகள், விடியுமா, இனி விடியுமா என பெரிய முள் சின்ன முள்ளை புரட்டி எடுத்த சூரிய உதயங்கள் எல்லாம், எல்லாமே சிறுபிள்ளை வேளாண்மை வீடு போய் சேராதாம் என்பதை குத்திக்காட்டி.......மீண்டும் தொடங்கிய இடமா? இல்லை, முடிந்த இடத்தில் இருந்து தொடங்குவதா? யார் தொடங்குவது? தொடங்கி விட்டார்களா? அது அதுவா இல்லை. வேறெதுவுமா?

இது அதுவாக இருக்கக் கூடாது. அதுகளையும், அவைகளையும் மறந்துவிட்டு புதிதாக பக்குவமாக. ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கும் தமிழ் சமூகம். நாட்டை துறந்து, மொழியை துறந்து, உற்றார் உறவினரை துறந்து இப்போது காத தூரத்தில் இருந்து கொண்டு அந்த மக்களுக்காக குரலெழுப்பும் ஒரு கூட்டம். அதே வெளி நாட்டு மந்தையில் இருந்து கொண்டு அதே மக்களை பலிகடாவாக்கித்தான் தீருவோம் என பிடிவாதமாக அடம் பிடிக்கும் இன்னொரு கூட்டம். ஒன்றுமே புரியாமல் மேய்ப்பர் பக்கமெல்லாம் போய்க் கொண்டு சூனியத்தை நோக்கி வன்னியும், தமிழ்த்தாயும். அவனுக்கு இப்போது தேவை

விலை பேசப்படாத அரசியல்
விற்கப் படாத கட்சி
அடகு வைக்கப்படாத ஓட்டுரிமை
உள்ளதை செய்யும் ஆட்சியோர்
நல்லதை செய்யும் ஆளத்துடிப்போர்.
கறை வேலிக்குப் படியாத சட்டம்
காசுக்கு பணியாத நீதி
அனைவரையும் அரவணைக்கும் தமிழன்
புகழ்ச்சிக்காக புலமை விடுத்து
தமிழ் வளர்ச்சிக்காக புலமை.
உங்களை கைபிடித்து வழிநடக்க நாங்கள் தயார்

எங்களை கை கொடுத்து வழி நடாத்த நீங்கள்தயாரா??? என ஒரு கூட்டம். அதை மகிந்த செய்தாலும் சரி. மகிந்தவின் வாரிசுகள் செய்தாலும் சரி. ஏதோ ஒரு மனிதம் அதை செய்ய வேண்டும்.


8-4-2009 VIII


Read more...

Monday, December 8, 2008

ரிபிசியின் தற்காலிக இடைநிறுத்தத்துள் புகையும் செய்திகள். - நகுலன்



08.12.2008 லிருந்து ரிபிசியை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக நிர்வாக பணிப்பாளர் வீ. இராமராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் கடந்த 10 வருடங்களாக புலிகளுக்கெதிராக ரிபிசி வானொலி பணியாற்றிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வடிப்படையில் வீ. ராமராஜ்ஜின் இக்கூற்று உண்மை அற்றது. ஐரோப்பாவில் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் பிறந்ததின உரையை ஒலிபரப்பியதற்காக புலிகளின் குரல் வானொலியால் பாராட்டு வேண்டியவர் வீ. இராமராஜ்.

இந்நிலையில் வெறும் பணத்திற்காகவே வீ.ராம்ராஜ் இத்தொழிலை செய்கின்றார் என்பதை உணர்ந்து கொண்ட புலம்பெயர்ந்து வாழும் மாற்றுக்கருத்தாளர்கள் ராமராஜனை மடக்கிப்பிடித்து புலிகள் வழங்கும் பணத்திலும் கூடுதலான தொகையை வழங்கியதுடன் வானொலியில் நேரடியாகவே தமது நேரங்களைச் செலவுசெய்து நிகழ்சி தயாரிப்பாளர்களாகவும், அரசியல் ஆய்வாளர்களாகவும், அறிவிப்பாளர்களாகவும், நேயர்களாகவும் பங்கெடுத்ததன் மூலம் இவ்வானொலியை ஓர் மாற்றுக்கருத்துக்கான மையமாக வளர்த்தெடுத்தனர். ஆனால் இவ்விடயத்தை தலைகீழாக மாற்றி ராமராஜ் ரிபிசி வானொலியில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடம் கொடுத்ததாக மார்தட்டுவது கேலிக்குரியவிடயமாகும்.

இவ்வாறு முற்றுமுழுதாக மாற்றுகருத்தாளர்களின் முழு அர்பணிப்பில் வளர்த்தெடுக்கப்பட்ட வானொலியை தனது சொத்தாக்கிக்கொண்ட ரிபிசி வானொலி நிர்வாக பணிப்பாளர் வீ. இராமராஜ் அவ்வானொலியின் வளர்சிக்காக உழைத்துக்கொண்டிருந்த மாற்றுக்கருத்தாளர்கள் எவருக்கும் தெரியாமல் ஜாதிக கெல உறுமிய ஊடாக புதிய நிதி வரவை பாரிய அளவில் ஏற்படுத்திக் கொண்டார். இந்நிதி விவகாரம் கட்டுக்காடங்காமல் சென்றதுடன் புலிகளிடமும் திரை மறைவில் பணம் பெறப்பட்டது. புலிகளின் பணத்தை பெற்றுகொண்ட இராமராஜ் இவ்வானொலியினூடாக புலிகளின் விசமப்பிரச்சாரங்களுக்கு இடம் விடவும் உண்மையான ஜனநாயகவாதிகளை நியாயத்திற்கு மாறாக விமர்சிக்கவும் இலங்கை அரசை எல்லைகளுக்கப்பால் சென்று விமர்சிக்கவும் நிர்பந்திக்கப்பட்டார்.

மேற்படி இவரது செயற்பாடுகள் மாற்றுக்கருத்துக்கள் மக்கள் மத்தியில் செல்ல வேண்டும் என்ற தேவையின் நிமித்தம் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு பணங்கள் மற்றும் இலங்கை வானொலியினூடான நிகழ்ச்சிகள் என யாவற்றையும் தடைசெய்தது.மறுபுறத்தில் புலிகளின் ஊடுருவலை உணர்ந்து கொண்ட மாற்றுக்கருத்தாளர்கள் வானொலியில் இருந்து விலகிச் சென்றனர். ஆனால் இவர்கள் அவ்வானொலியில் இருந்து விலகிச்செல்ல முன்பு இவ் இருதரப்பு நிதி கையாளுகை விடயமாக ராமிடம் கேட்டிருந்த போதும் அதை அவர் மறுதலித்தே வந்துள்ளார். ஆனால் அவர் அவ்வாறு பணம் வாங்கியவிடயத்தை (இலங்கை அரசிடமிருந்து) பின்நாட்களில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ராம்ராஜ் இவ்வாறு மாற்றுக்கருத்தாளர்களை உதாசீனப்படுத்தியதற்கான காரணம் அவர் புலிகள் மீது வைத்திருந்த அதீத நம்பிக்கையேயாகும். மாற்றுக்கருத்தாளர்கள் வெளியேறினால் இவ்வானொலி தடம்அற்றுப் போகும் என்னபதை இவர் உணர்ந்திருந்தும் புலிகள் தன்னை தொடர்ந்தும் காப்பாற்றுவர் என்ற நம்பிக்கையிலேயே மாற்றுக்கருத்தாளர்களை ராம்ராஜ் உதறித்தள்ளினார். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி புலிகள் இவ்வானொலிக்கு விலைபேசி உள்ளனர். காரணம் அவ்வானொலியில் புலிகளுக்கு எதிராக கருத்து கூற எவரும் இல்லாத இடத்து புலிகளின் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்காக ராமராஜிடம் பணம்கொடுத்து அதைசெய்விக்க வேண்டும் என்ற தேவை புலிகளுக்கு இல்லை. புலிகளுடைய கருத்துக்கள் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கு தமது சொந்த ஊடகங்களுடாக சென்றுகொண்டிருக்கினறது. ஆனால் இவ்வானொலியூடாக புலிகளை எதிர்த்து நிற்கின்றவர்களுக்கு தமது கருத்தை திணிப்பதுவே புலிகளின் நோக்கம்.

இந்நிலையில் இவ்வானொலி தொடர்ந்தும் செயற்படுவதென்பது மிகவும் கடினமானதென்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் அந்த சுமையை அங்கு எஞ்சியிருக்ககூடிய நேயர்கள் தாங்குவதென்பதும் மிகவும் கடினமானவிடயமாகும். குறிப்பாக அங்கிருக்ககூடிய நேயர்கள் அனைவரும் புலிகளின் வானொலி ஒன்றுடன் தமது பொழுதைபோக்க விரும்பவில்லை என்கின்ற அவர்களது மனோவலிமையை தனக்கு சாதகமாக பயன்படுக்தும் ராம்ராஜ் அவர்கள் மீது ஓர் பாரிய சுமையை சுமத்த எத்தனிப்பது முறையற்ற செயலாகும்.

இங்கு ஓர் விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். TBC நேயர்களை முழு முட்டாள்கள் என்று ராமராஜால் எவ்வாறு எடைபோட முடியும்? கடந்த இருவாரங்களுக்கு முன்பு இடம்பெற்ற ரிபிசியின் பொருளாதாரம் சம்பந்தமான கலந்துரையாடலில் வானொலியின் அனுமதிப்பத்திரம் டிசம்பர் மாதம் 05 திகதியுடன் முடிவடைவதாகவும் நேயர்கள் பணம்தராவிட்டால் அனுபதிபத்திரத்தை புதிப்பிக்க முடியாதநிலை ஏற்படும் என்றும் கூறியிருந்தார். பின்னர் பொருளாதார நெருக்கடி காரணமாக தற்காலிகமாக நிறுத்துகின்றேன் என கூறுகின்றார். மேற்படி இருகருக்துக்களுக்கும் இடையில் உள்ள முரண்பாட்டை நாம் சற்று சிந்திப்போமாக இருந்தால் இவர் பணத்திற்காக இன்று நேயர்களின் விருப்பத்திற்கு மாறாக அவ்வானொலியை பூட்டி அவர்களை பணம்வேண்டி வற்புறத்துகின்றார் என்பது தெளிவாகின்றது.

அத்துடன் அவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கிடைத்துள்ள தகவல்களின்படி எதிர்வரும் வாரம் லண்டனில் பாடசாலைகள் விடுமுறை விட இருப்பாதாகவும் பாடசாலை விடுமுறைக்காக வானொலியை பூட்டிவிட்டு சுற்றுலா செல்ல உள்ள ராம்ராஜ் நேயர்களிடம் நேரடியாக சென்று வசூலிப்பில் இறங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இவரால் இவ்வானொலியை தொடர்ந்து கொண்டு செல்லமுடிமா? என்பதை நேயர்கள் இருமுறை சிந்திக்க வேண்டும். இவ்வானொலியை வைத்து பலரிடமும் பிழைப்பு நாடாத்திவரும் இந்நபர் தனக்கு சாதகமான ஓர் சந்தர்பம் கிடைக்கும்போது நேயர்களை பற்றி சிந்திக்கப்போவதில்லை. எனவே ரிபிசி ஒன்றேதான் எமக்கு பொருத்தமான வானொலி எனும் நிலையில் இருக்கும் நேயர்கள் தமது மனநிலையை மாற்றிக்கொள்வது சிறந்தாகும். VIII

Read more...

Wednesday, January 5, 2011

பள்ளோத்தெக்க நிதாகத்தனங் மக்கோத்தெக்க நகிடின்டவென்னே. பீமன்.

விளங்கிறவர்களுக்கு தலையங்கம் விளங்கியிருக்கும், விளங்காதவர்களுக்க தலைகிறுகிறுக்கும் என நானும் நம்புகின்றேன். நாய்களுடன் படுத்துறங்கினால் தேள்களுடன் எழுந்திருக்க நேரிடும் என்பது ஓர் சிங்கள முது மொழி அதுவே மேலே சொல்லப்பட்டுள்ளது. நாய்களுடன் படுத்துறங்கி உடம்பு முழுக்க தேள்களுடன் எழும்பினால், தேள்கள் இரத்தத்தை குடிக்கும், கடிக்கும், கடிக்கிற இடத்தை சொறிந்தால் இரத்தம்வரும், பின்பு சொறி சிரங்கு வரும் இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகள் உண்டு.

இந்நிலைதான் அன்று புலிகளுடன் படுத்துறங்கிய அரச அதிகாரிகளுக்கு இன்று உருவாகியிருக்கின்றது. அதற்கு சிறந்ததோர் உதாரணமாக இன்று யாழ் அரச அதிபர் எமில்டா சுகுமாரன் வலம்வருகின்றார். அப்பெண்மணி வன்னியில் இருந்தகாலத்தில் புலிகளின் தாளத்திற்கு ஆடினார், இப்போது அரசின் தாளத்திற்கு ஆடுகின்றார். ஆனால் அரசின் தாளத்திற்கு அவர் ஆடியே ஆகவேண்டும். இது சட்டத்தின் நியதி. அளவிற்கு மிஞ்சி ஆடுகின்றாரா, அரசு தாளம் போட முன்பே ஆடத் தொடங்கி விடுகிராரா என்பதெல்லாம் நான் இங்கு விவாதிக்கவரவில்லை.

ஆனால் அரச பணத்தில் புலிகளுக்கு சேவகம் செய்த அரச அதிகாரிகள் யாவரும் இன்று தாம் கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாக அரசிற்கு நல்ல சேவகர்களாக வலம்வர எத்தனிப்பது புலிகளிடம் கற்றுக்கொண்ட பாடமாகும்.

எது எவ்வாறாயினும் கடந்த காலங்களில் யாழ் அரச அதிபர் எமில்டா சுகுமாரன் புலிகளின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பாகவும், இன்றைய நடைமுறைக்கு பொருத்தமான விடயங்கள் தொடர்பாகவும் மனம் திறந்து பேசியிருந்தார்.

புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது அரசு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் , சர்வதேச ஊடகங்கள் , புலம்பெயர் தமிழர் என்போருக்கு தவறான தகவல்களை வழங்கியிருந்தவர்கள் தற்போது உண்மைகளை மனம்திறந்து பேசுகின்றனர்.

மேற்படி அதிகாரிகள் மற்றும் வைத்தியர்களினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட தகவல்களை வைத்தே புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தமிழ் மக்களை ஏமாற்றி வந்தது.

நிலைமைகள் மாறுக்கின்றபோது தமது பிழைப்பு கேள்விக்குறியாகும் பயத்தில் அதிர்வு எனும் இணையம் அதிர்ந்துபோயுள்ளதையும் ஊடக தர்மம் என்பனை காதால்கூட கேட்டிருந்ததில்லை என்பதை தனது செயலினூடாக காட்டியுள்ளது. புலிகளின் பாணியில் யாழ் அரச அதிபருக்கு நடத்தை சம்பந்தமான குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளது.

புலிகள் அபாண்ட பழி , குற்றச்சாட்டுக்களை சுமத்துவதில் வல்லவர்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். எவரும் தம்மிடம் இருக்கும் வரை அவர்கள் சிறந்த தியாகிகள், பொதுநலவாதிகள். ஆனால் அவர்கள் புலிகளின் சுயரூபத்தை அறிந்து எதிர்க்க முயன்றால், நடத்தை கெட்டவர்களாக , காட்டிக்கொடுப்பவர்களாக, துராகிகளாக மாறிவிடுவர்.

இதே பாணியில்தான் அதிர்வும் யாழ் அரச அதிபரின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி அவர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி அதாவது „ எமில்டா சுகுமாரன் வன்னியில் இருந்தபோது தனது சாரதியுடன் தவறாக நடந்து கொண்டதாகவும் அதற்காக புலிகளால் எச்சரிக்கப்பட்டமையாலேயே அவர் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகின்றார்" என்ற வகையில் புலம்பெயர்ந்த தமிழருக்கு கதை சொல்ல வெளிக்கிட்டுள்ளார் அதிர்வுக் கண்ணன்.

புலிகள் தமிழ் மக்களுக்காக போராடப்புறப்பட்டவர்களா, எவன் எவளுடன் அல்லது எவள் எவனுடன் படுக்கிறான் என்று பார்த்து எச்சரிப்பதற்கு புறப்பட்டவர்களா என்பது எனது கேள்வி.

புலிகளுக்கு எவரையும் எச்சரிக்கும் அதிகாரத்தை அல்லது தண்டனை வழங்கும் அதிகாரத்தை யார் வழங்கியது.

தன்னை லண்டனில் ஊடகவியலாளர் எனச் சொல்லிக்கொள்ளும் கண்ணன் பயங்கரவாத இயக்கம் ஒன்று அரச அதிகாரியை நடத்தைக்காக எச்சரித்தது என கேள்விகேட்பதற்கு சட்டத்தில் இடமுண்டா? அவர் ஒர் அரச அதிகாரி. அரசியல்வாதியல்ல. பொதுவாழ்விற்கு வந்துள்ள அரசியல்வாதிகளிடமும், அரச அதிகாரிகளிடமும் ஊடகங்கள் அணுகுவதில் வித்தியாசம் உண்டு என்பதனை கண்ணன் எவ்வாறு அறிந்திருப்பார்.

ஓரு தனிநபருடைய அந்தரங்க விடயங்கள் தொடர்பான கொலைபேசி அழைப்பபை அவரது அனுமதியின்றி ஒலிப்பதிவு செய்த கண்ணன் எனும் விதுரன் தாமோதரன் மீது யாழ் அரச அதிபர் எமில்டா சுகுமாரன் அவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாது வழக்கு தாக்கல் செய்யவேண்டும். இவர்கள் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றுவதை எமில்டா சுகுமாரன் அனுமதிப்பாரா அன்றில் இவரை சட்டத்தின் முன்கொண்டுவந்து கம்பியின் பின்னால் நிப்பாட்டுவாரா? நிச்சயம் செய்தே ஆகவேண்டும்.

அதிர்வு இணையத்தளத்தினை நடாத்தும் கண்ணன் எனப்படும் விதுரன் தாமோதரன் கீழ்காணும் முகவரியில் உள்ளவர். இவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க விரும்புபவர்களுக்கு அவரது விலாசம் கீழே தரப்படுகின்றது.

Mr.Viduran Thamodaran
4 barrar house
heartford, Herts
WD18 6GB
00447950301200
0044 787 331 4360


தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைத்துப்பழகிய இவர் தமிழ் மக்களை எவ்வளவு மடையர்கள் என நினைத்திருக்கின்றார் என்பதற்கு தகுந்ததோர் தடயத்தை ஆதாரத்துடன் நான் இங்கு முன்வைக்கின்றேன்.

அதிர்வு இணையத்தில் எமில்டா சுகுமாரன் தொடர்பான செய்தியும், ஒலிப்பதிவும் ஒரே ULR இன் கீழ் தரவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அச்செய்தியை நான் இறுதியாக பார்கும்போது 33588 பேர் பார்வையிட்டுள்ளதாக பதிவு செய்துள்ளார். உள்ளே சென்றால் Youtube இல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்று உள்ளது. அதிலே உள்ள Youtube லோகோவில் கிளிக் செய்து Youtube பின் பிரதான பக்கத்திற்கு சென்றால் அந்த வீடியோவை பார்த்தவர்களின் எண்ணிக்கை தெளிவாக தெரியும். அந்த எண்ணிக்கை 5946 ஆகும். என்ன செய்வது தனது இணையத்தளத்தில் பார்த்தவர்களின் எண்ணிக்கையை தான் விரும்பிய கணக்கிற்கு கூட்டிப்போட்ட கண்ணனால் யூரியுப்பில் பார்த்தவர்களின் எண்ணிக்கையை கூட்டிப்போட முடியாதே!






இந்த சிறியதோர் விடயத்தில்கூட புலம்பெயர் தமிழருக்கு புலிவால் இணையங்கள் விடுகின்ற புலுடாக்களை இதைவிடவேறு எந்த ஆதாரத்துடன் தெளிவுபடுத்த முடியும்??. புலிகள் 1 இராணுவத்தை கொண்டுவிட்டு 32 இராணுவத்தை கொண்டுவிட்டோம் என புலன்பெயர்ந்தவர்களுக்கு புலுடா விட்டால்போல்தான் இந்த புலுடாக்களும். இவர்கள் இன்னும் தமிழ் மக்கள் என்றால் ஒன்றும் தெரியாத மடைமைகள் என்ற எண்ணத்திலேயே உள்ளனர். அதனாலேயே இந்த சுத்துமாத்துக்களை செய்கின்றனர்.

ஆதாரங்களை இங்கே இணைக்கப்பட்டுள்ள படங்களில் சிவப்பால் வட்டமிட்ட இடங்களில் பாருங்கள். கட்டுரையை வாசித்தவர்கள் 33588 பேர். ஆனால் வீடியோவை பார்த்தவர்கள் 5936 பேர். இவ்விடயத்தை எவ்வாறு எடுத்துக்கொள்வது. 33588 பேர் செய்தியில் கிளிக் செய்திருந்தாலும் அதிர்வின் பொய்புழுகுகளை மக்கள் அறிந்துள்ளால் அதன் வீடியோவை கிளிக்செய்யவில்லை என எடுத்துக்கொள்ளலாமா?

அத்துடன் எமில்டா சுகுமாரனின் ஆதரவு ஊடகவியலாளர்கள் சிலர் அதிர்வுக் கண்ணன் மீது ஆத்திரம் அடைந்துள்ளதாக அறியமுடிகின்றது. அதிர்வுக் கண்ணனின் சகோதரி நோர்வேயிலே நெடியவனுக்காக வேலை செய்கின்ற சிவகணேஸ் என்பவரின் மனைவியாகும். இந்நிலையில் இவ்வூடகவியலாளர்கள் கண்ணனின் மனைவி அல்லது சகோதரியை தொடர்பு கொண்டு நீங்கள் நெடியவனுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகவே தொடர்ந்தும் கண்ணன் இவ்வாறு ஊடக தர்மத்தை மீறுநெடியவனுக்கு வக்காலத்து வாங்குவதாக பேசப்படுகின்றது. உங்கள் கருத்து என்னவெனக் கேட்டு அவற்றையும் சில இணையத்தளங்களில் தரவேற்றம் செய்ய முனைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனவே சம்பந்தப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுப்பதை விடுத்து இவ்வாறு ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வது சிறந்ததாகும்:


படங்ளில் மிகவும் தெளிவாக பாருங்கள் எமில்டா தொடர்பான செய்தி அதிகம் வாசிக்கப்பட்டவை எனும் பகுதியில் பதிவு செய்யப்பட்டிருந்தது. நாம் கட்டுரையை வெளியிட்ட கையுடன் சிலவேளை Youtube uploads மற்றும் குறிப்பிட்ட செய்திகள் காணாமலும் போகலாம்.

VIII

Read more...

Thursday, July 9, 2009

புலிகளின் அனைத்துலகச் செயலகமும்.. அடம் பிடிக்கும் ஜெர்மன் பணியகமும்.. - சாத்திரியார்

புலிகளின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவிற்கு வந்தவுடன் புலம் பெயர் தேசத்து ஈழத்தமிழர் மற்றும் உலகத்தமிழர்களிடமும் எழுந்து நின்ற ஒரோயொரு கேள்வி அதன் அடுத்த கட்டம் என்ன என்பதுதான். இப்படியான கட்டத்தில்தான் அடுத்த கட்டத்தினை அரசியல் ரீதியாக நகர்த்தப்போவதாகவும் அதற்கு உலகத்தமிழர் அனைவரினதும் ஆதரவினைத் தரும்படி புலிகளின் தலைமையை கைப்பற்றி மக்களின் காதில் பூசுத்த நினைக்கும் கே.பி பத்மநாதனின் அறிக்கை வெளியானது..

அவரது அறிக்கைகள் இரண்டு குழம்பி அல்லது குழப்பியிருந்தது உண்மைதான் ஆனாலும் .. அடுத்து ஆளாளிற்கு வந்த அறிக்கைகளோ ஜயோ.. போதுமடா சாமி என்கிற அளவிற்கு குழப்பிவிட்டிருந்தது.

இந்த அறிக்கைக் குழறுபடிகளில் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரே நெடுமாறன் மற்றும் வைகோ ஊடாக அறிக்கைகைகளை வெளியிட்டு மக்களை தலைவலி குளிசைகளை போட வைத்தார்கள் என கேபி தரப்பினர் புலம்புகின்றனர். .

புலிகளின் புலனாய்வுத்துறையிலிருந்து வெளியேறி தற்சமயம் ஜரோப்பிய நாடொன்றில் வசித்துவரும் ஒருவர் வேறு பெயர்களால் விட்ட அறிக்கைகளால் நித்திரை குளிசையே போடவைத்துவிட்டார்.

புலிகள் அமைப்பின் அழிவிற்கு இந்தியா சீனா உட்பட மேற்குலக நாடுகள் பாதிப்பங்கினை வகித்தார்களென்றால்.. மீதிப்பாதி பங்கினை புலிகள் அமைப்பின் அனைத்துலகச்செயலகத்தின் பொறுப்பாளர் கஸ்ரோவும் அவரது நேரடித் தொடர்பில் நோர்வேயிலிருந்து செயற்பட்ட நெடியவனும் ஜெர்மனியிலிருக்கும் வாகீசனும் கனடாவில் தமிழ் என்பவருமே அங்கம் வகித்தனர்.

அத்துடன் நெடியவன் புலிகளின் ஆயதக்கொள்வனவு விவகாரங்களுக்கு நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கே.பி க்கும் கஸ்ரோவிற்கும் இடையில் உருவான முரண்பாடுகள் ஆயுதக் கடத்தல் விடயத்தை முற்றாக பாதித்ததாகவும் அவற்றின் பலாபலனாகவே புலிகளின் பல ஆயுதக்கப்பல்கள் நடுக்கடலில் வெடித்துச் சிதறியதாகவும் புலி ஆதரவாளர்கள் மேற்படி நபர்கள் மீது குற்றஞ்சுமத்தி வருகின்றனர்.

இதுபற்றி நான் தனியாகவே ஒரு பதிவை பின்னர் எழுதுகின்றேன். ஆனால் தற்சமயம் புலிகள் அமைப்பின் அனைத்துலக செயலகத்திற்கு வெளிநாடுகளின் பொறுப்பாளரான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன், கேபி யினால் உருவாக்கப்படும் கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு கொள்கையளவில் இணங்கிருந்தாலும் புலிகளின் தலைவர் இறந்துவிட்ட செய்தியை வெளியிடுவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்திருக்கின்றார்.

நாடுகடந்த தமிழீழ அரசு என்கிற கட்டமைப்பில் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது பற்றி அனைத்துலக செயலகத்தின் அனைத்து நாட்டுப் பொறுப்பாளர்களுடனும் இணைந்து நெடியவன் நோர்வேயிலிருந்து நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் நடாத்திய ஆலோசனைக்கூட்டத்தில் அனைத்து நாட்டு புலித்தொழிலாளர்களும் நாடு கடந்த தமிழீழ அரசிற்கு ஆதரவு வழங்குவதென்று முடிவுகொண்டுள்ளபோதும் எவ்வாறு மக்கள் முன்செல்வதென்றும் மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதற்கு தம்மிடையே பிளவு இல்லை என வெளிக்காட்டவேண்டம் என்ற பொதுக்கொள்ளையில் உடன்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஜெர்மனிய பொறுப்பாளர் வாகீசன் மட்டும் தான் ஆதரவு வழங்கமுடியாதெனவும் தான் தனித்தே இயங்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.. அதற்கு அவர் கூறியுள்ள காரணம். தலைவர் இல்லையென்று அறிவித்துவிட்டு இனி மக்களிடம் நிதி சேகரிக்க முடியாதென்பதே..இவரது வாதமாகும்..

இவர் தொடர்ந்தும் மக்களை ஒரு மாயை உணர்வுத்தளத்தினுள் வைத்துக்கொண்டே தன்னுடைய சுயலாபநோக்கங்களிற்காக வேலை செய்கின்றாரே தவிர, இனியாவது மக்களிடம் உண்மை கூறிவிட்டு, மக்களை வேறு விதமாக கையாள தகுந்த தந்திரோபாயங்கள் தெரியாதவர் என எதிர்தரப்புப் புலிகள் கூறிவருகின்றனர்.

தற்சமயம் வாகீசனின் தலைமையை ஏற்று அவருடன் தொடர்ந்தும் செயற்பட மானிலப் பொறுப்பாளர்களான ஆனந்தராசா..சிவநாதன்..சங்கர்..அகிலன்(இவர் ஜெர்மன் பரப்புரைப் பொறுப்பாளர்) சிறிரவி..சிவம்..ஆகியோர் தீர்மானித்துள்ளனர்.

இதே நேரம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்து முடிந்த யுத்தத்தின் வடுக்களால் மனிதாபிமானமுள்ள உலகத்தவரும் உலகத்திலுள்ள அனைத்து தமிழருமே அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்திருந்த சமயம்..

ஜெர்மனிய தமிழ் இளையோரமைப்பினைச் சேர்ந்த ஒருவரின் திருமணத்தில் வாகீசன் என்பவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடிப்பாடியதை பார்த்து மனம் கொதித்த சிலர் வாகீசன் தற்கொலை செய்து கொண்டதாக அஞ்சலிப் பிரசுரம் ஒன்றினை அடித்து அவரது இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்தின் முகவரியாக அவர் ஆடிப்பாடிய திருமண மண்டபத்தின் முகவரியையே போட்டு அச்சடித்து ஜெர்மனியில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் எசன் மற்றும் டோட்மண் பகுதிகளில் ஒட்டியிருந்தனர்.

அந்தப்பிரசுரம் ஒன்று எனக்கும் மின்னஞ்சலில் கிடைத்தது.. ஆனாலும் நாகரீகம் கருதி நான் இங்கு இணைக்கவில்லை. இப்படி இவரது ஈழவிடுதலைப் போராட்டத்திற்கான அர்ப்பணிப்பு எத்தனை உண்மையானதென்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன..

எனவே ஜெர்மன் வாழ் தமிழர்களே இனிவரும் காலங்களில் புலிகள் எனும் நாமம் தாங்கிவரும் நபர்கள் தொடர்பாக சுயமான முடிவெடுங்கள் நன்றி.. VIII

Read more...

Tuesday, June 16, 2009

புலிகளின் பாசையில் யார் தியாகிகள் ?

சேதுவுக்கு அடி, புதினம் பிளைப்புக்கு புலிச்சாயலாம், சண்தவராசா துரோகியாம், ஜிரிவி விலை போட்டுதாம்.

புலிகளுள் உருவாகியிருக்கும் உள்முரண்பாடுகள் புலிகளுள் இருந்த துரோகிகளை இனம் காட்டுவதுடன் தாமாகவே இத்தனை காலமும் மக்களுக்கு செய்து வந்த துரோகங்களை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பிரபாகரனின் மரணத்தின் பின்னர் தலமையை தமது கையில் எடுத்து மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் புலிகளுக்கும், பிரபாகரனது பெயரால் மாத்திரமே தம்மால் மக்கள் முன் நிற்க முடியும் என எதிர்பார்க்கும் புலிகளுக்கும் இடையில் ஊடகச் சமர் ஆரம்பமாகி இரு தரப்பு வண்டவாளங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

இதன் வெளிப்பாடாக புதினம் இணையத் தளத்தில் பிரபாகரன் இறந்து விட்டார் எனும் விடயத்தை வெளிப்படுத்திய வழுவி எனும் பெயரில் முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே... ஈழப் போர் - 3! எனும் கட்டுரை ஒன்றை எழுதியவர் தொடர்பாக, சிறிலங்கா புலனாய்வுப் பிரினர் அறிந்திராத செய்திகளை புலிகளின் தலமைக்காக அடிபடும் ஒரு தரப்பினர் மாற்று கருத்துக்களை வெளிக்கொணரும் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்கள் அனுப்பி வைத்துள்ள தகவல்களில் சிலவற்றை கிழே தருகின்றோம் :


வழுதி என்ற புனைப்பெயரைக்கொண்ட பரந்தாமன் முன்னைய அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனோடு அரசியல் துறையில் பணியாற்றியவர். இவர் பெண்களோடு தவறான நடத்தையில் ஈடுபட்டமை, நிதி விவகாரங்களில் பெரும் மோசடி செய்தமை போன்ற காரணங்களினால் தமிழ்ச்செல்வன் இவரை தன்னுடன் பணிக்கு வைத்திருக்க முடியாது என வி.பு தலைமைக்கு தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமைப்பீடம் புலனாய்வுத்துறையிடம் பரந்தாமன் (வழுதி) பற்றி விளக்கம் கேட்டது. பரந்தாமன் (வழுதி) பற்றி முழுமையான விசாரித்தும் பின்தொடரும் பணியிலும் இருந்தவர், புலனாய்வுத்துறை சார்ந்த அதியமான்.

இவர் தனது அறிக்கையில் தமிழ்ச்செல்வன் கூறியவையை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாது தமிழ்ச்செல்வன் குறிப்பிடாத பல செய்திகளையும் தலைமைக்கு தெரிவித்தார். அத்தோடு இவரை மேலும் இயக்கத்தில் அனுமதிக்க முடியாமைக்கு உரிய காரணங்களையும் குறிப்பிட்டார்.

இவருக்கான தண்டனை பற்றி தலைமைபீடம் யோசித்து வந்தபோது. தலைவர் குறுக்கிட்டு இவர் நீட்ட காலம் பணியாற்றியமையை கருத்தில் கொண்டு குறைந்த தண்டனையுடன் இவரை இயக்கத்தில் இருந்து நீக்கி செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார்.

ஆனால் சிறீலங்கா தவிர்ந்த ஏனைய நாட்டில்தான் பரந்தாமன் ஐந்து ஆண்டுகள் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வழுதியின் வேண்டுதலுக்கு இணங்க இவரை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் தலைவர்.

நாட்டை விட்டுவெளியேறியதும் பரந்தாமன் என்ற வழுதி மேற்கண்டவர்கள் மேல் வக்கிரம் கொள்ள ஆரம்பித்தார்.

இவ்வளவு சம்பவங்களும்தான் வழுதி (பரந்தாமன்) புதினம் இணையத்தளத்தில் தலைவர் பிரபாகரன் அவர்களை விமர்சிக்க காரணமாக இருந்தது.

புதினம் இணையத்தளம் இக்கட்டுரையை ஏன் வெளியிட்டது....

புதினம் இணையத்தளம் அவுஸ்திரேலியாவில் இருந்து கரன் என்பவரினால் இயக்கப்பட்டுவருகின்றது. இவர் ஒரு விடுதலைப் புலி ஆதரவாளர் கிடையாது. இவர் சார்திருக்கும் நபர்களில் பெரும்பாலனவர்கள்
புலி எதிர்ப்பாளர்கள். அவரின் முக்கிய நண்பவர்கள் சிலர் விவரம்

அவ் மின்னஞ்சல் மூலமாக தனிநபர்கள் தொடர்பாக அனுப்பப்பட்ட தரவுகளை தற்போது தவிர்த்துக் கொள்கின்றோம். அத்துடன் புதினம் எனும் இணையத்தளம் தொடர்பாக எழுதப்பட்டிருந்த விடயங்களை தணிக்கை செய்துள்ளோம்.

மறு புறத்தில் புலிகளின் சுவிஸ் கிளைப் பேச்சாளரும், விடுதலைப் புலிகள் சார்பாக பல தரப்பினருடனும் பல்வேறு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டவருமான நபரொருவரை புலிகளது நெருடல் இணையத்தளம் துரோகியெனக் குறிப்பிட்டுள்ளது. அதில் அவர் புலிகளது எவ்வித ஒப்புதலும் இல்லாமல் சுயமாக அறிக்கைளை விடுவதாகவும் அவர் வெளிநாட்டு உளவு அமைப்பொன்றிற்கு துணைபோயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நபர் காலம் காலமாக தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டிருந்த ஜனநாயகவாதிகளை துரோகிகள் என குறிப்பிட்டு வந்திருந்தார். ஆனால் அவர் இன்று புலிகளாலேயே துரோகியாக்கப்பட்டுள்ளார்.

புலிகள் இதுவரை காலமும் தமக்கு வேண்டாதவர்கள் மீது எவ்வாறான பொய்குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள் என்பது தற்போது அவர்களது உள்வீட்டு பிரச்சினையின் போது இடம் பெறுகின்ற கல்லெறி பொல்லெறிகளில் இருந்து உணர முடிகின்றது. VIII

Read more...

Friday, April 10, 2009

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

தோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன்

காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீணாகத் தொலைத்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் உங்களுக்கு இந்தப்பணிவான வேண்டுகோளை விடுப்பதில் எனக்கு முழு உரிமையும் இருக்கின்றது என நான் நம்புகின்றேன்.

கனேடியன் தமிழ் வானொலிக்கு தாங்கள் வழங்கிய செவ்வி கேட்டு ஒரு கணம் திகைத்துவிட்டேன்.

உங்களின் உணர்ச்சிகரமான பேச்சினாலும் பாராளுமன்ற ஆசையினாலும் நீங்கள் தமிழினத்திற்கு செய்துதொலைத்த அநியாயங்களை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகின்றேன். ஆனாலும் நீங்கள் சொல்கின்றீர்கள்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.

1980 காலப்பகுதியில் வீறுகொண்டெழுந்த விடுதலைப்போராட்டம், இன்று முற்று முழுதாக சிதைக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான போராளிகளை இழந்து, மக்களை அநியாயமாக இழந்து, உன்னதமான பல தலைமைகளை இழந்து, கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து பரிதவிக்கும் தமிழினத்திற்கு இத்தகைய ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள் யார்?

மக்களுக்கான விடுதலையை வென்றெடுக்கப் புறப்பட்ட மாற்றியக்க இளைஞர்களை தெருக்களிலும் காடுகளிலும் சுட்டும் வெட்டியும் கொலை செய்துவிட்டு சகல அமைப்புக்களையும் தடைசெய்து, ஜனநாயகத்தலைவர்களை படுகொலை செய்து, மாற்றியக்கங்களை ஆதரித்தவர்கள், உணவு கொடுத்தவர்கள் அனைவரையும் துரோகிகளாக்கி தமக்குத்தாமே மகுடம் சூட்டி இன்று மறைந்து வாழ்வதற்கே காடுகள் கூட இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள் யார்?

உங்களைப்போன்ற ஒருசில சுயநல சந்தர்ப்பவாதிகளினால் அன்று தமிழர் விடுதலைக்கூட்டணி உடைக்கப்பட்டது. ஒற்றுமையாக இருந்த மட்டக்களப்பு மக்கள் பிரிக்கப்பட்டார்கள்.

காசி அண்ணா! உங்களின் வீர வசனங்களை சிறுவயது முதல் கேட்டுவந்தவர்களில் நானும் ஒருவன். கிழக்கிலங்கையில் மக்களின் உண்மையான செல்வாக்கை தன்னகத்தேகொண்டு வளர்த்து நிமிர்ந்து நின்ற இராஜதுரையை அகற்றி நீங்கள் அந்த இடத்திற்கு வரமுயன்றதும்,
மட்டக்களப்பு இளைஞர்களை வீதிக்கு இறக்கி சிங்கக்கொடியை எரிக்க வைத்து கைது செய்யப்பட்டு வாழ் நாளில் இலங்கையில் எந்த ஒரு பாடசாலையிலும் கல்விகற்க தடைவிதிக்கப்பட்டு மட்டக்களப்பில் ஒரு சிறந்த மாணவனாகத் திகழ்ந்த எனது தாய் மாமன் இரா. பரமதேவாவின் வாழ்க்கையை புதை குழிக்குள் தள்ளியதன் மூலம் கல்வியழிப்பினை நீங்கள் ஆரம்பித்து வைத்ததும். இவற்றையெல்லாம் சிந்திக்காமல் மஹற சிறையில் எட்டாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த பரமதேவாவை ஒவ்வொரு வருடமும் 14 நாட்கள் மட்டக்களப்பு சிறைக்கு கொண்டுவந்தபோதெல்லாம் நீங்களும் மட்டக்களப்பில்தான் இருந்தீர்கள் என்பதும் எனக்கும் தெரியும். உங்களுக்கும் தெரியும். ஆனால் ஒரேயொரு தடவை நீங்களும் சறோ அக்காவும் உங்கள் கைக்குழந்தியுடன் வந்து அந்த சிறைக்குள்ளும் தாடி மாமா வாழ்க என்று உங்கள் மகளுக்கு சொல்லி உங்களின் வீரவசன நாடகத்தை அரங்கேற்றிய நீங்கள் அதன் பின்னர் தமிழகம் சென்றீர்கள். அங்கு உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தினீர்கள்.

இன்றும் அதே தமிழ் நாட்டில் இருந்துகொண்டு எல்லாமே முடிந்த பின்பும் சொல்லுகிறீர்கள்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

காசி அண்ணா நீங்களோ அல்லது மற்றவர்களோ சிந்திக்கலாம் பரமதேவா எனது மாமன் என்ற வகையில் நான் உங்கள் மீது பழிசுமத்த முனைகின்றேன் என்று! ஆனால் பரமதேவா ஒரு உதாரணம் மட்டுமே! உங்களினால் வாழ்க்கையை தொலைத்தவர்களின் நீண்ட பெயர்ப்பட்டியல் என்னிடம் உண்டு.

உங்களின் சுயநலத்திற்காக எத்தனை இளைஞர்களை தவறான வழிக்கு நீங்கள் அழைத்துச்சென்று அவர்களின் வாழ்க்கையையே அநியாயமாக அழித்துவிட்டு வன்னிக்குள் புலிகளினால் பலாத்காரமாக மனிதக் கேடயங்களாக தவித்துக்கொண்டிருக்கும் மக்களை ஒரு கணமாவது சிந்திக்காமல் புலம் பெயர் தமிழர்களுக்கு சொல்கின்றீர்கள்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

கிழக்கை இழந்த போது அது முக்கிய தளமல்ல என்றீர்கள், கிளிநொச்சி பறிக்கப்பட்டபோது அது ஒரு தற்போதைய பின்னகர்வு என்றீர்கள். இப்போ முழுமையாக வன்னி உட்பட தமிழ மக்களின் பூர்வீக பிரதேசங்களான அனைத்தும் அரச கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலையத்திற்குள் வந்து நின்றுகொண்டு அந்த மக்களையும் வெளியேறவிடாமல் உங்களின் தலைவர்களைப் பாதுகாக்க எந்த மக்களின் விடுதலைக்காக புறப்பட்டீர்கள் என்று கூறிய நீங்களே அந்த மக்களை மனிதக் கேடயங்களாக பணயம் வைத்துக்கொண்டு நன்றாகக் கதை சொல்கின்றீர்கள்.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்


நீங்கள் ஒரு சிறந்த கவிஞன், பாடலாசிரியர், எழுத்தாளன் என்பதில் எனக்கு எந்த விதமான மாறான கருத்தும் இல்லை. உங்கள் மீது தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் இல்லை. அனால் மிகவும் தயவாக உங்களிடம் கேட்கின்றேன். பொங்கலுக்கு தமிழீழம்... தீபாவளிக்கு தமிழீழம்... நத்தாருக்குத் தமிழீழம்... றம்ஸானுக்குத் தமிழீழம்... என்ற கதைகள் எல்லாம் கேட்டு தமிழ் மக்களின் செவிப்பறைகள் எப்போவோ இறந்துவிட்டன.

நீங்கள் என்ன? கடவுளே நேரே வந்து சொன்னாலும் இனிமேலும் தமிழ் மக்கள் இன்றென்ன நாளையென்ன எப்போதுமே தமிழீழம் பிறக்காது என்பதை மிகத்தெளிவா புரிந்துவைத்துள்ளனர்.

எனவே உங்கள் வாழ்க்கையில் மிஞ்சியுள்ள காலத்தில் தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்தால், உங்களின் எழுதாற்றல் திறமையை வெளிப்படுத்துங்கள்.

அதில் நீங்கள் சொல்லும் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற உன்னதமான சொல்லையே அழித்தவர்கள் நீங்கள் இன்னும் இன்னும் ஆதரிக்கும் புலிகள் தான் என்பதையும் தயக்கமின்றி வெளியே சொல்லுங்கள்.

அப்படியான ஒரு மாற்றம் உங்களில் வந்தால் நிச்சயமாக உங்களை மக்கள் போற்றுவார்கள். மீண்டும் நீங்கள் மட்டக்களப்புக்கு வந்து தேர்தலிலும் போட்டியிடலாம்.

வெற்றி தோல்வியை மக்கள் தீர்மானிப்பார்கள்.

VIII

Read more...

Saturday, July 4, 2009

இலக்கியச் சந்திப்பில் தேசத்துரோகிகளும் பாஸிஸ்டுக்களும் ஒன்று சேர்ந்தனர். -விருகோதரன்-

இலக்கியச் சந்திப்பு. புனிதமான பெயர். எல்லோரும் தலைப்பைப் பார்த்தவுடன் ஒருகணம் திகைத்துப்போயிருப்பர். நான் கூறவில்லை அவர்கள் கூறியதைத் திருப்பிக் கூறுகின்றேன். கடந்த 1986ம் ஆண்டு தொட்டு தமிழ் மக்களுக்கு சொல்லித்தரப்பட்ட விடயத்தை திருப்பிக் கூறியிருக்கின்றேன். தமிழ் மக்களில் பல தரப்பு. அதில் மாபெரும் இரு தரப்பு. ஒரு தரப்பு தேசத்துரோகிகள், தீண்டத்தகாதோர், ஓட்டுக்குழு, கைக்கூலிகள், என செல்லமாக அழைக்கப்பட்டோர். மறுதரப்பு பாஸிஸப் புலிகள் என திட்டித்தீர்க்கப்பட்டோர்.

ஓட்டு மொத்தத்தில் இவ் இலக்கியச் சந்திப்பில் கலந்துகொள்வோர் தேசத்துரோகிகள் என புலித்தலைமை அறிவித்திருந்ததுடன் அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான சபாலிங்கம் என்பவர் இவ்வாறான நிகழ்வொன்றை ஒருங்கமைத்த குற்றத்திற்காக புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இலக்கியச் சந்திப்பு (புலிகள் இயக்கிய சந்திப்பு) 37 ம் தடவையாக இம்முறை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள குருறூட் சந்திப்பு மண்டபத்தில் 26ம் திகதி முதல் 30ம் திகதி வரை இடம்பெற்றிருக்கின்றது. அங்கே மேற்குறிப்பிடப்பட்டோர் ஒன்று கூடியிருக்கின்றனர். அங்கு என்ன கதைத்தார்கள்? ஏது கதைத்தார்கள?; என்பது தொடர்பாக கலந்து கொண்டோரில் பலரும் பலவாறான தகவல்களை கூறுகின்றனர். (பல முறைகள் அக்கூட்டத்திற்கு சென்றிருந்த ஒருவரிடம் நீங்களும் சென்றுரந்தீர்களா எனக் கேட்டேன், தற்போது உடம்பு நிலை சரியில்லை இனி குடிக்கக் கூடாது என்பது வைத்தியரின் ஆலோசனை என பதில் வந்தது.)

இருநாள் சந்திப்பு முடிவில் ஏகமனதாக ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சில இணையத்தளங்களில் காணப்படுகின்றது.

1. இலங்கை முழுவதும் தொடரும் மனித உரிமை மீறல்களை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டுவதுடன், ஜனநாயகம், மனித உரிமைகள், சிறுபான்மை இன மக்களின் அடிப்படை அரசியல் அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.

2. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான முழுமையான அதிகாரப் பரவலாக்கலை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். இதன் முதற்கட்டமாக ஏலவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண சபைக்குரிய அதிகாரங்களை உடனடியாக கையளிக்கப்படவேண்டும்.

3. இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்கள், மலையக மக்கள் தலித் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவுசெய்யப்படுவதனுடன் அவர்களின் சமூக இருப்புக்கான உத்தரவாதங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.


4. அகதிகளாக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் கவனத்திற்கொள்ளப்பட்டு அவை நிறைவேற்றப்படுவதுடன் அம்மக்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதும், அவர்களின் பாதுகாப்பையும், சுதந்திரமான நடமாட்டத்துக்கானதுமான உத்தரவாதத்தையும் வழிவகைகளையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும்.

5. மலையக தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கோரிக்கையை நடைமுறைப்படுத்தவேண்டும்.

6. இலங்கையில் கருத்துச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரத்துடனும் கூடிய உரிமையை பாதுகாப்பதுடன் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் தொடரும் அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

என்பனவே அத்தீர்மானங்கள் ஆகும். இந்த ஆறு தீர்மானங்களில் தமிழ் கலாச்சாராம், தமிழ் மொழி, இலக்கியம் சார்ந்த விடயங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் முற்றிலும் திட்டமிட்டமுறையில் இலங்கை அரசை நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்துகின்ற மற்றும் விமர்சிக்கின்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருகின்றது. இதில் மிகவும் சுவாரசியமான விடயம் யாதெனில் இத்தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பவர்களில் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் முன்னணி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து அம்முன்னணியில் அங்கம் வகிப்பவர்கள் தொட்டு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப் புலிகளே என்ற கொள்கையை ஏற்று நின்று விடத்தல்தீவை இராணுவம் கைப்பற்றி அங்கு பிடிபட்ட 1500 க்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப்படகுகளை ரீவி யில் பார்த்து விட்டு தமிழ் கூட்டமைப்பில் இருந்து விலகி முன்னணியில் சேர்ந்துகொண்டோர் வரை அடங்குகின்றனர்.

ஆம், நாங்கள் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்றோம். அது காலத்தின் கட்டாயம். எம் தமிழ் மக்களுக்கு, நாங்கள் உயிரிலும் மேலாக நேசிக்கின்ற தமிழ் மக்களுக்கு, நாங்கள் எல்லோரும் சேர்ந்து நடுத்தெருவில் நிறுத்தியிருக்கும் தமிழ் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க கூட்டுச்சேர்ந்துள்ளோம் (சிரிப்பு) ஆனாலும் நாங்கள் தவறு இடம்பெறுகின்றபோது அவற்றை சுட்டிக்காட்டத் தவறப்போவதில்லை. நாங்கள் அங்கம் வகிக்கின்ற முன்னணி தவறிழைத்திருக்கின்றது அதை நேரடியாகவே சுட்டிக்காட்டியிருந்கின்றோம் அதில் என்ன தப்பிருக்கின்றது என்ற கேள்வியை முன்வைப்பார்களேயானால் என்னிடம் பதில் இல்லை. முன்னணியில் இருந்து வெளியேறுங்கள் என்பேன். பொடியளுக்கு சாப்பாடு போடுவீர்களா என்பார்கள் (ஏமாற்றப் பிறந்தவாகள் ஆயிற்றே) (என்னிடம் வக்கில்லை என்பேன்.)

மேலே குறிப்பிடப்பட்ட தீர்மானங்ளை நிறைவேற்றியோர் அத்துடன் சேர்த்து,

7. புலிகள் இத்தேசத்திற்கு செய்திருக்கும் துரோகங்களை பட்டியலிட்டு பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்.

8. புலிகள் இன்று அறிவித்திருக்கும் நாடுகடந்த தமிழீழம் என்கின்ற விடயம் மக்களை மேலும் அழிவிற்குள் தள்ளுமாகையால் அவர்கள் அதை கைவிடவேண்டும். அத்துடன் மக்களும் இவ்விடயத்தை மக்கள் முற்றாக நிராகரிக்கவேண்டும்.

9. புலிகளால் போராட்டத்தின் பெயரால் மக்களிடம் அறவிடப்பட்ட பணத்திற்கு கணக்கு காட்டி அப்பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க முற்படவேண்டும். அல்லது அவற்றை இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.

10. ஐரோப்பிய தேசத்திலலே புலிகள் வங்கிக்கடன்களை பெற்று நடுத்தெருவில் விட்டுள்ள மக்களது கடனை மீளச் செலுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

11. இன்று பிளவுபட்டுள்ள புலித்தலமையின் சர்வதேச வலையமைப்பு கலைக்கப்படவேண்டும்.

12. தொடர்ந்தும் ஐரோப்பாவில் பணம் கேட்டுவரும் புலிகளை பொலிஸாரிடம் காட்டிக்கொடுக்கவேண்டும்.

போன்ற விடயங்களையும் வலியுறுத்தி இருப்பார்களேயானால் இச்சந்திப்புக்குச் சூட்டப்பட்ட பெயருக்காவது மதிப்பிருந்திருக்கும். ஆனால் மேற்படி ஒன்றுகூடலில் கலந்து கொண்ட துரோகிகள் எனும் தரப்பினர் முழு விட்டுக்கொடுப்புச் செய்ய பாஸிஸ்டுக்கள் என்போர் தமது விடயங்களை நிறைவேற்றியிருக்கின்றனர்.

மாற்றுக்குழக்களுடன் சேர்ந்து செயற்படப்போகின்றோம் என புலிகளால் ஏன் அறிவிக்கப்பட்டது. புலிகளுடைய துரோகங்களை மக்கள் உணர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொண்ட புலிகள், தாம் தமது தவறுகளை உணர்ந்து கொண்டுள்ளதாகவும் அவற்றை எதிர்காலத்தில் திருத்தி சகல கட்சிகளுடனும் இணைந்து செயற்படுவோம் எனக் கூறி மக்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் புலம்பெயர் புலித்தொழிலாளர்களுடன் எமக்கு எந்த சமரசமும் இல்லை என மக்களின் நலனில் நின்று தமது கொள்கையில் தெளிவாக இருக்கும் நபர்களையும் தமது அரசியல் வங்குரோத்து மற்றும் சுயலாபங்களுக்காக புலிகளின் ஏமாற்றுக்கு துணைபோவோரையும் மேற்படி சந்திப்பும் தீர்மானங்களும் இனம் காட்டியுள்ளது.

மேற்படி சந்திப்பில் கலந்து கொண்ட துரோகிகள் என்போரும் பாஸிஸ்டுக்கள் என்போரும் எவ்வாறு ஒன்றிணைய முடியும் என்பதை அவர்கள் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். பாஸிஸ்டுக்கள் தாம் தமது சுயலாபத்திற்காகவே எண்ணற்ற உயிர்களை துரோகிகள் என சுட்டுத்தள்ளியதுடன் அவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த மக்களையும் பல இன்னல்களுக்கு உள்ளாக்கினோம் எனவும் துரோகிகள் என்போர் நாம் மக்களை ஏமாற்றுவதற்காகவும் பிறதேவைகளுக்காகவுமே புலிகளை பாஸிஸ்டுக்கள் என்றோம் என்பதையும் தெளிவாகவும் பகிரங்கமாகவும் கூறி தமது உண்மை முகத்தை காட்டவேண்டும். VIII

Read more...

Wednesday, March 3, 2010

பெண்கள் மீதான வன்முறைகள். -வி.ரி.சகாதேவராஜா-

நூறாவது சர்வதேச பெண்கள் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகம் பூராகவும் கொண்டாடப்படுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் பெண்களின் அறிவாற்றல், தலைமைத்துவம், பங்கேற்பு போன்ற பல உரிமைகள் அதிகரித்து வந்தாலும் அவற்றுக்கெதிராக பெண்களுக்கெதிரான உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான உரிமைகள் உலக நாடுகளில் பெண்களுக்கு எட்டாக்கனியாவே காணப்படுகின்றது.

1789 ஆம் ஆண்டுகளிலேயே பெண்களின் உரிமை மீறலுக்கு எதிராக புரட்சிகள் ஆரம்பிக்கின்றன. அக்காலப்பகுதிகளில் வேலைக்கேற்ற ஊதியம், வேலைநேரம், வாக்குரிமை, அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தல் போன்ற சம உரிமைகளைக் கோரி பிரான்சில் ஆரம்பித்து ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பெண்கள் உரிமைகள் தொடர்பான பரந்தளவான பிரசாரங்களை மேற்கொண்டனர். ஆனால் தற்காலத்திலும் பெண்கள் தமது உரிமைகளை அனுபவித்து வருகின்றனரா என்பது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.

எமது இதிகாசங்களை உற்று நோக்கும் போது ஆரம்ப கால பெண்கள் மிகக் கௌரவத்துடனும் சுதந்திரமாகவும் காணப்பட்டதற்கான ஆதாரங்கள் கூறப்படுகின்றது. இடைக்காலப் பகுதியில் அந்நிய நாட்டினரின் ஆக்கிரமிப்புக்கள், பொருளாதார நெருக்கடி போன்ற சமூகக் காரணங்களால் பெண் அடிமைத்துவம் அல்லாவிட்டால் பெண்ணிற்குரிய வேற்றுமை அதிகரித்து வந்ததாகக் கருதப்படுகின்றது. தற்போதைய நிலையிலும் இது தொடர்கின்றது என்பதை பல தரப்பட்ட மட்டங்களிலிருந்து அறியக்கூடியதாய் உள்ளது. இன்று ஊடகங்களில் நாளொன்றுக்கு ஆகக்குறைந்தது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான ஒரு வன்முறையாவது அறிய முடிகின்றது. பெண்ணாக பிறப்பதாலேயே பெண்களுக்கெதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் பல்வேறு வடிவங்களில் அதிகரித்து வருகின்றன.

இத்தகைய பின்னணியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனம், சீடோ எனப்படும் பெண்களுக்கெதிரான சகல விதமான பாரபட்சங்களுக்கும் எதிரான பிரகடனம் ஆகியன பெண்களின் உரிமைகளை வலியுறுத்துகின்றன.

சீடோவின் முகவாசத்தின் பின்வருமாறு குறிப்பிடுகின்றது. எல்லா மனிதரும் சமமாகவே பிறக்கிறார்கள். உரிமைகளைப் பொருத்தவரையில் எல்லா மனிதர்களும் சுதந்திரமும் சமத்துவமும் உடையவர்கள். இருந்தும் பெண்களுக்கெதிரான உரிமை மீறல்கள் இன்றும் தொடர்கிறது. உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச ஏற்பாடுகள் இருக்கின்ற போதும், பெண்களுக்கெதிராக, சகல வடிவங்களிலும் காட்டப்படும் பாகுபாடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்படுவது அவசியம். அத்தோடு பெண்களுக்கெதிரான பாகுபாடுகள் என்பது ஆண்களுக்குள்ள மனித உரிமைகளையும் (அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, குடியியல் மற்றும் வாழ்க்கையின் பிற துறைகள் சார்ந்த) சுதந்திரங்களையும் அனுபவிக்கவிடாது மகளிரைத் தடுக்கும் எப்பொருளும் அல்லது எச்செயலும் ஆகும் என வரைவிலக்கணப்படுத்துகின்றது.

மேலும் பெண்கள் தொடர்பான அரசின் பங்கும் பொறுப்பும், அரசியலில் பங்குபற்றுதல், அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவபடுத்துதல், தேசியம், கல்வி, வேலை மற்றும் நியாயமான தொழில் உரிமைகள், சுகாதாரம், பொருளாதார, சமூக வாழ்வு, கிராமப்புற மகளிர், சட்டத்தின் முன் சமத்துவம், திருமணத்திலும் குடும்ப உறவுகளிலும் சமத்துவம் போன்ற உரிமைகளை சீடோ பிரகடனம் வலியுறுத்துகின்றது. இலங்கை உட்பட பெரும்பாலான நாடுகள் சீடோவை ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்கின்றன.

பெண்களுக்கெதிராக நடைபெறுகின்ற வன்முறைகள் பல மட்டங்களிலும் பல விதமாக இடம்பெற்று வருகின்றன. அதாவது குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை, பாலியல் தொல்லைகள், உடல் உள ரீதியான துன்புறுத்தல்களாக பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். பெண்களுக்கெதிரான வன்முறையானது உலகளாவிய ரீதியில் அதிகரித்துக் காணப்படுவதற்கான காரணங்களாக

* யுத்தமும் இடப்பெயர்வும்
* பாதுகாப்பற்ற நிலமை
* அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை
* பொருளாதார நெருக்கடிகள்
* முகாம்களில் முறையான முகாமைத்துவமின்மை
* ஆண்கள் தனது ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் செலுத்துதல்
* நல்ல சுகாதார வசதிகளின்மை
* மகளிர் உரிமை தொடர்பாக போதிய தெளிவின்மை

போன்றவை காணப்படுவதோடு, பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு இலகுவாக ஆளாகக் கூடிய பெண்களாக பின்வருவோர் காணப்படுகின்றனர்.

* வறுமைக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள்
* வலது குறைந்த பெண்கள்
* கர்ப்பிணிப் பெண்கள்
* வயோதிபப் பெண்கள்
* சிறு குழந்தையின் தாய்மார்
* சிறுமியர்

போன்றோர் முக்கியமானவர்களாகக் காணப்படுகின்றனர். உலகளாவிய முறையில் நடாத்தப்பட்ட 50 ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மூன்றுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் உடல், உள பாலியல் ரீதியான வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

பெண்களை வன்முறையில் இருந்து பாதுகாத்தல்

குடும்பத்திலும் யுத்தம் இடப்பெயர்வின் போதும் ஏற்படும் வன்முறைக்கு பெண்கள் ஆளாகின்றனர். ஆனால் பெண்களுக்கெதிரான வன்முறைகளில் குற்றவாளிகள் தண்டனைகள் இன்றியே தப்பித்து விடுகின்றனர். உரிமை மீறல்களுக்குட்டபட்ட கலாசார ரீதியான தடைகள், நிதி வசதியின்மை, பிறரில் தங்கி வாழ்தல், சட்ட நிவாரணங்களைப் பெறுவதற்கான வழி வகைகள் பற்றி அறியாதிருத்தல், உரிமை மீறல்கள் பற்றிய அறியாமை காரணமாக பெண்கள் மீதான வன்முறைகள் பதிவு செய்யப்படுவதில்லை. எனவே பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழிக்கும் நாளாக வருடந்தோறும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாளில் பெண்களுக்கெதிரான ஏற்படும். வன்முறைகள் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தற்கால கட்டத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கெதிராக ஏற்படும் வன்முறையில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.

சர்வதேச மகளிர் தினம், பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் போன்றவை பெண்களுக்கெதிரான அடக்குமுறைகளுக்கும், வன்முறைகளுக்கும் எதிரான வெளிப்பாடுகளாகும். எனவே இத்தகைய தினங்களில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க தமது பங்களிப்பை குடும்பம், வேலைத்தளம், சமூகம், அரசு உள்ளிட்ட அனைவரும் வழங்குதல் வேண்டும்.

இவ்வாக்கம் கட்டுரைகள் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. VIII

Read more...

Saturday, September 24, 2011

த.தே.கூ டையே பெருகிவரும் குடும்ப அரசியல் கலாச்சாரம். கல்முனை கீரன்

யாழ்பாணத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வருகைதரும் ஒவ்வொரு தடவையும் தங்களுக்கு உணவு, உறையுள், பொழுதுபோக்கு வசதிகளை செய்து கொடுக்கும் சந்தர்ப்பவாத வள்ளல்களை தங்கள் கட்சி தூண்களாக கருதுகின்றனர்.

தலைமையை தக்க வைத்துக்கொள்வதற்காக புத்திஜீவிகளை ஒதுக்கி காவாலி கடப்புளிகளை உள்வாங்குகிறது.


ஈழப்போரின் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பு முன்னெடுக்கும் செயற்பாடுகள் அனைத்தும் அதனை மக்களிடமிருந்து அன்னியப்படுத்துவதாகவே உள்ளன. இதுவரை காலமும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் நேசிக்கக்காரணம் அதன் கொள்கைகளோ அதில் அங்கம் வகிக்கும் தலைவர்களது தகுதிகளோ அல்ல என்பதும், ஏதோ ஒரு சக்தி கடிவாழத்தை கையில் எடுத்து அவர்களை கட்டுப்பாட்டுடன் வாழ வைத்ததே உண்மை என்பதும் புலனாகியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைக்குள் ஏற்கனவே புதைந்து கிடந்த எஜமான சிந்தனையும் ஆசாபாசம்களும் அடாவடித்தனங்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. கிழக்கில் இது உச்ச நிலையிலுள்ளதென்றால் மிகையாகாது 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தமி;ழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி
பெற்ற மக்கள் பிரதிநிதி கொரவ. பியசேனவின் தெரிவில் தொடங்கி , நடைபெறவுள்ள கல்முனை மாநகர சபை தேர்தலுக்கு வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளமை வரை அவர்களது தூரநோக்கற்ற செயற்பாடு தொடர்கிறது.

நூறு வீதம் மக்களின் வாக்குகளினால் வெற்றி பெற்ற இப்பிரதிநிதி தற்போது இப்பிரதிநிதி தற்போது தமிழ் மக்களின் பக்கம் திரும்பிப் பார்பதேயில்லையாம். ஏனெனில் தமிழ் மக்கள் தன்னை அழைத்து மாலை அணிவித்து கௌரவப்படுத்தியதில்லையாம் அதனால் தன்னை நாடி வந்து தனக்கு கௌரவமளிக்கும் முஸ்லிம் சகோதர இனத்துக்கே உதவப்போவதாக கூறுவதுடன் உதவியும் வருகிறாராம்.

அம்பாரை மாவட்ட தமிழ்பிரதேசங்களின் அபிவிருத்தி நிலை என்ன? இதற்கு ஒரு தீர்க்கமான முடிவுகளை தெரியாத தமிழ்தேசிய கூட்டமைப்பினர், ஒட்டுமொத்தமாக தமிழினத்துக்கு எவ்வாறு தலைமை தாங்க முடியும்? யாழ்பாணத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகள் வருகைதரும் ஒவ்வொரு தடவையும் தங்களுக்கு உணவு, உறையுள், பொழுதுபோக்கு வசதிகளை செய்து கொடுக்கும் சந்தர்ப்பவாத வள்ளல்களை தங்கள் கட்சி தூண்களாக கருதும் இவர்கள், தங்கள் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்பதற்காக புத்திஜீவிகள் மட்டத்திலுள்ளோரை வேட்பாளர் பட்டியலில் சேர்த்து விடுவதில்லை.

கட்சி கொள்கை பற்றிய சிந்தனை கட்சி தலைமைகளிடமே இல்லாத நிலையில் கல்வியறிவில் இடைநிலையிலுள்ள இத்தரகர்களிடம் இருக்குமென நினைப்பது தவறல்லவா? அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் தமது வியாபாரத்தையோ ஒப்பந்த தரத்தையோ உயர்த்துவதற்காக கட்சியையும் மக்களையும் விற்கலாம்தானே. ஆதலால் கட்சி தலைமைகள் தமது சட்டைப்பைகளையும், அரைகுறை வயிற்றையும் அவ்வப்போது நிரப்பக்கூடியவர்களையும் தங்களது பிழைப்புக்காக அதிகாரிகளின் கால்களைப்பிடித்து குறுக்கு வழியில் உளைப்போரென சமுகத்தால் இனம்காணப்பட்டோரையும் வேட்பாளராக்கி மக்களிடம் ஆணைகேட்கும் பழக்கத்தை விட்டுவிடவேண்டும்.

தவறினால் மக்களின் ஆணை மாறாக அமைந்துவிடும் என்பதனை மனதில் கொள்ளவேண்டும். சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றவனும் , குறிப்பறிய மாட்டாதவனுமாகிய நன்மரங்கள் மக்கள் சபைக்கு சென்று மக்களுக்காக எதுவும் செய்ய முடியமா? இந்த மரம்கள் பற்றிய அறிவு கட்சித் தலைமைகளுக்கு உண்டோ என்னவோ? ஆனால் மக்களுக்கு நிறையவேஉண்டு. ஏனெனில் இம்மரங்கள் மக்களிடையேதான் போலியாக வாழ்கின்றனர். மக்கள் இப்போது தாராளமாக சிந்திக்கின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகளிடையே குடும்ப அரசியல் கலாசாரமும் பெருகத் தொடங்கிவிட்டது. பாராளுமன்றத்துக்கு தன்பெயரையும், மாகாண சபைக்கு தன் சகோதரன் பெயரையும் உள்ளூராட்சி சபைக்கு மக்களது பெபயரையும் முன்மொழிவதன் மூலம் வாக்களிக்கும் தமிழர்களை இழிச்சவாயர்களென நினைக்கின்றார்கள்.

இன்று புதிய கட்சிகளின் உதயத்துக்கும், சுயேட்சைகளின் தோற்றத்துக்கும் இதுவே காரணம் என்பதை உணரக்கூடிய அறிவு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்களிடம் இல்லாமையால்தான் இந்நிலை தொடர்கிறது. ஆசாபாச போதை அவர்களது அறிவுக்கனிகளை மறைக்கிறது. இந்தப்போதைக்கும் பதிலடி கொடுக்க ஓர் இளந்தலைமுறை உதயமாகியுள்ளமை காலத்தின் தேவையே. ஆனால் அதன் விளைவு நிச்சயம் தமிழ்தேசியத்துக்கு சாவு மணியாகிவிடும் என்பதே கவலை தருவதேயாயுள்ளது.

வேட்பாளர்கள் எவரும் தலைமையின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பது அவர்களால் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனம்களின் மூலம் வெளியாகிறது. தீர்த்தக்கரையில் கடைவைத்திருக்கும் பொம்மை வியாபாரி தன் பொருளை விற்பதற்காக சொல்லும் விளம்பரம் போல், கூட்டமைப்பு வேட்பாளர் ஒவ்வொருவரும் கட்சியின் இயலுமையை கடந்து தனித்தனி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடத் தொடங்கி விட்டனர். மகுடிக்கு மூடும் பாம்பு போல் தம்மை நினைத்து விட்டார்களென மக்கள் நமட்டு சிரிப்புடன் அவற்றை வாசிப்பது எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கு கட்டியம்
கூறுகிறது.

ஆதலால் புத்திஜீவிகளால் இனம்காணப்பட்ட பின்வரும் விடயங்களில் அவர்கள் தீர்க்கமான முடிவெடுத்து செயற்படவேண்டும்

1. மக்களது உரிமைக்காகவும் தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய புத்திஜீவிகளை வேட்பாளர்களாக முன்மொழிய வேண்டும்

2. படிப்பு வாசனையற்ற வியாபாரிகளையும் அரைகுறை ஒப்பந்த காரர்களையும், உறவினர்களையும் கட்சியின் நிரந்தர உறுப்பினாராக மாத்திரம் வைத்துக்கொள்ள வேண்டும்

3. நிறைவேற்ற முடியாத திட்டங்களை தேர்தல் விஞ்ஞாபனமாக வெளியிடும் வேட்பாளர்களை கண்டித்து மக்கள் மத்தியில் உண்மையின்படி நடக்கக்கூடியவவர்களை முன்நிறுத்த வேண்டும்.

மக்கள் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்தேசிய கூட்டமைப்புக்கே வாக்களிப்பர் எனும் தவறான புரிதல் இன்னும் கூட்டமைப்பு தலைமைகளிடம் இருக்குமாயின் அவர்கள் யதார்த்தத்தை புரியவில்லை என்றே கொள்ளவேண்டும். VIII


Read more...

Sunday, October 23, 2011

JR ரிடம் பார் லைசன் கேட்ட சம்பந்தன் கிலாரியிடம் என்ன கேட்கப்போறாரோ? S.S.கணேந்திரன்

அமெரிக்கா கனடா செல்லும் சம்பந்தன், சேனாதிராசா போண்றவர்கள் இன்னும் பல நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட வண்ணமே இருப்பார்கள். எமது பிரச்சனையும் தொடர்ந்துகொண்டே இருக்கும் பாராளுமண்ற ஆசனத்தினை மட்டுமே மையமாகக்கொண்டு செயற்படும் தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியகட்சிகள் ஆரம்பகாலம் தொட்டே பிரதேச வேறுபாடு, சாதிய வேறுபாடுகளுக்கு மிகமுக்கியம் கொடுத்து செயற்பட்டார்கள் சொல்லிலடங்காத இழப்புக்களை சந்தித்ததன் பின்னரும் அதனை தொடர்ந்துகொண்டே இருக்கிண்றார்கள் என்பதே மிகவும் வேதனையான விடயம்.

சில தினகளில் அமெரிக்கா மற்றும் கனடா போண்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளையோ அல்லது வன்னி மாவட்ட பிரதிநிதிகளையோ முற்றாகத்தவிர்த்திருப்பதன் மூலம் அவர்களின் பிரதேசவாத வெறியை மீண்டும் மக்கள் முன் தாமாகவே அம்பலப்ப்டுத்தியுள்ளனர்.

இவர்களின் விஜத்தினுடன் சம்பந்தமான எந்த விடயங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெறும் பாராளுமண்ற உறுப்பினர்களுக்குகூட தெரியாத பரிதாப நிலையில் சக பாராளுமண்ற உறுப்பினர்கள் இருக்கிண்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சில புத்திஜீகள் அமெரிக்க விஜயத்திற்கு முன்னர் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ள விடுத்த வேண்டுகாளையும் சம்பந்தன் நிராகரித்துவிட்டார்.

இந்த விஜயத்தின் முழு விடயத்தினையும் சம்பந்தன் சேனாதிராசா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மூவர்மட்டுமே மிகவும் இரகசியமாக கையாளுகிறார்கள்.

இத்தகைய விடயமானது மிகவும் பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் பாராளுமண்ற உறுப்பினர்களே அச்சம் தெரிவிக்கும் நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வன்முறையையும் சர்வாதிகாரப்போக்கையும் எடுத்துக்காட்டுகின்றது.

நான்கு சுவர்களுக்குள் அரச பாதுகாப்புடன் கொழும்பிலும் இந்தியாவிலும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த சம்பந்தன் மற்றும் சேனாதிராசா போண்றவர்களின் கீழ்த்தரமான அரசியல் வாழ்க்கையை அம்பலப்படுத்தவேண்டிய தேவையை சரியாக உணர்ந்து ஊடகங்கள் செயற்படாவிட்டால் ஏற்படப்போகும் அழிவிற்கு அவர்களும் ப ங்காளிகளாவர்.

தந்தை செல்வா அமிர்தலிங்கம் ஆகியோரின் அரசியல் வாரிசு என மார்தட்டிக் கதை சொல்லும் சேனாதிராசா தமிழர் விடுதலைக் கூட்டணியில் சம்பளம் பெற்று வேலை செய்த ஒரே நபராவார். இவரது மரியாதையை காக்கவேண்டும் என்பதற்காக இவரது சம்பளக் கணக்கு விபரங்களில் எஸ்.ராஜா எனப் பெயரைப்போட்டு சேனாதியின் மானம் காத்தவரான ஆனந்தசங்கரியைக்கூட இந்த சேனாதியால் இலகுவாக மறக்கமுடியும் என்றால் வாக்களித்த மக்களையோ கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளையோ உதறி எறிவதென்பது இவருக்கு எவ்வளவு சுலபம் என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

அமிர்தலிங்கம் இறந்தவுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியும் பாராளுமண்ற உறுப்பினர் பதவியும் தனக்கேதரவேண்டும் என்று கட்சிக்குள் பிரச்சனையைக் கிழப்பி ஒருவாறு ஆனந்தசங்கரியின் விட்டுக்கொடுப்பால் பின் கதவால் முதற்தடவையாக பாராளுமண்றம் சென்ற சேனாதி மக்களுக்கு செய்த ஒரே நல்லவிடயம் தனது சகோதரியை தனது செயலாளர் எனக்கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச்செண்று குடியமர்த்தியது மட்டுமே.

நீலன் திருச்செல்வத்தின் இழப்பின் பின்னர் இரண்டாவது தடவையும் மீண்டும் பின்கதவால் பாராளுமண்றம் செண்றார்.

தேர்தலில் புலிகளே மக்களின் ஏகபிரதிநிதி தந்தையும் இல்லை தளபதி அமிரும் இல்லை தலைவர் சிவசிதம்பரமும் இல்லை பிரபாகரனே மக்களின் தலைவர் எனக் கூறி களம் இறங்கிய புலிகளால் உருவாக்கம் பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த நிலையில் கச்சேரிக்குள் அளுது ஒப்பாரிவைத்து பின்னர் இளம்பருதியின் ஆசீர்வாதத்தோடு சிறிகாந்தாவை பின் தள்ளி கடைசிப்பாராளுமண்ற உறுப்பினரானார்.

இவரைப்பற்றி சொல்வதானால் பல மாதங்கள் தேவைப்படும். இத்தகைய போலி அரசியல் வாழ்க்கை நடாத்தும் சேனாதியின் தனிமனித வாழ்வும் மிகக்கேவலமானது என்பது தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தவர்களுக்கு மிக நண்றாகத் தெரியும். இப்படியானவர்தான் இன்று மக்களின் பிரதிநிதியாக மக்களுக்கு நன்மை தேட அமெரிக்காவுக்கு செல்கிண்றார்.இதுதான் தமிழ் மக்களின் தலைவிதி.

அடுத்து சம்பத்தன் பக்கம் செல்வோம். எனக்குத் தெரிந்திராத ஒரு அதிர்ச்சித் தகவலை நன்பன் அரவிந்தனின் பின்னூடலினூடாக அறிந்தேன் . அதாவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிடம் தனது தங்கு விடுதிக்கு மதுபான அனுமதி கேட்டாராம் சம்பந்தன். அதில் எனக்கு சந்தேகமே வரவில்லை காரணம் இது எல்லாம் சம்பந்தனுக்கு கைவந்த கலை. இனப்பிரச்சனை இனப்பிரச்சனை என கூறிக்கொண்டு சந்திரிக்காவிடம் குண்டு துளைக்காத வாகனத்தை வாங்கி சுகபோக வாழ்வு கண்ட சம்பந்தன் தான் செயலாளர் நாயகமாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்திற்கு வருவதெண்றாலே விசேட ஜனாதிபதி கொமாண்டோ படையை அனுப்பி அலுவலகத்தை சல்லடை போட்டு சோதனை செய்த பின்னரே அலுவலகம் வருவது வழமை. அப்படியான இவர் தற்போதும் தானே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என தேர்தல் ஆனையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த பதவிகளை தக்கவைப்பது ஒன்றும் மக்கள் பிரச்சனைகள் தீர்ப்பதற்கோ உரிமை பெற்று தனி மாநிலம் அமைப்பதற்கோ அல்ல மாறாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வங்கிக் கணக்கிளுள்ள பணத்தில் ஒரு பகுதியையும் கட்சிகுச் சொந்தமான யாழ்ப்பாண அலுவலகத்தின் பெறுமதியில் ஒரு தொகையும் தனக்கும் சேனாதிக்கும் பெற்றுக்கொள்ளும் முயற்சிதானம். இதற்கு இண ங்குகிறவர்களுக்கு செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராகவும் இருக்கிண்றாராம் மக்களின் பிரதிநிதி இரா.சம்பந்தனார்.

சந்திரிக்கா கொண்டுவந்த தீர்வுப்பொதியினை பாராளுமண்றத்தில் எதிர்க்கவேண்டும் எண்ற கோரிக்கை மத்திய செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவேளை தான் கட்சித் தீர்மானத்தை கவனத்தில் எடுக்கப்போவதில்லை எனது விருப்பப்படியே வாக்களிப்பேன் எனக் கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பந்தனை வாசல் வரை சென்று வெளிநடப்புச்செய்வதை தவிர்த்து கட்சியின் நிலைப்பாட்டில் உறுதியாய் இருங்கள் எண்று தடுத்தவன் என்றவகையில் சம்பந்தனின் அரசியல் வாழ்வு எப்படியானது என்பதை நான் அறிவேன்.

பாராளுமண்றத்தில் தீர்வுப்பொதியினை தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்த்தால் தோல்விகாணும் நிலை இருந்ததினால் சந்திரிகாவின் சலுகைகளை அனுபவித்து வந்த சம்பந்தனால் அந்த நடவடிக்கையை தாங்கமுடியாமல் சந்திரிக்காவை தொடர்பு கொண்டு பாராளுமண்றத்தில் வாக்கெடுப்பு நடாத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார் இந்த மாபெரும் தமிழ்த் தலைவன் சம்பந்தன்.

தான் அங்கம் வகித்த கட்சியின் கொள்கையையோ அல்லது தீர்மானங்களையோ கடைப்பிடிக்கத்தெரியாத சம்பந்தனுக்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளை அரவணைத்து செல்லக்கூடியவர் என கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைப்புக்கள் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையே காரணம்.

சம்பந்தனோ சேனாதியோ தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளும் அல்ல புனிதர்களும் அல்ல. தங்களுடைய குடும்பம்கள் சுகபோக வாழ்வு வாழவேண்டுமென்றால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் நிரந்தரமாக இருக்கவேண்டும் என கருதும் இவர்களை மக்கள் தொடர்ந்தும் தம் பிரதிநிதிகளாக தெரிவு செய்கின்றனர்.

மக்கள் இத்தவறினை தொடர்ந்தும் செய்யும்வரை இப்பச்சோந்திகள் தொடர்ந்தும் மக்களின் பெயரால் உலகம் சுற்றிக்கொண்டே இருப்பர். எமது பிரச்சனையும் தொடர்ந்துகொண்டே இருக்கும். VIII

Read more...

Monday, February 23, 2009

சிவனுக்கு ஓர் இராத்திரி



சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் சிறப்புவாய்ந்த விரதம் சிவராத்திரி ஆகும். இதன் சிறப்புக் கருதி இவ்விரதத்தை மகா சிவராத்திரி என்றும் அழைப்பதுண்டு.

இஃது மாசி மாதத்து கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் இடம்பெறும். இப் புண்ணிய தினத்திலே உபவாசமிருத்தல், சிவாலய தரிசனம் செய்தல், சிவ தோத்திரங்கள் பாடல், சிவ மந்திரங்கள் செபித்தல், இரவு சிவ சிந்தனையுடன் கண் விழித்தல் ஆகிய கருமங்களைச் சிரத்தையோடு செய்தல் மிகப் புண்ணியம் வாய்ந்ததாகும்.

இவ்விரதத்தை சிவாலயத்தில் அனுஷ்டித்தல் சாலச் சிறந்ததாகும். இயலõதவர்கள், இல்லத்திலே புனிதமான முறையில் அநுட்டிக்கலாம்; ஆனால் அன்றைய தினம் சிவாலய தரிசனம் செய்தாக வேண்டும். பகல் முழுவதும் உண்ணாவிரதமிருந்து பின் இரவு முழுவதும் கண்விழித்து நான்கு யாமப் பூசைகளையும் சிவாலயத்திலே தரிசித்தல் வேண்டற்பாலது. சிவராத்திரியின் போது மூர்த்திக்கு அபிடேகம் செய்தல், வில்வத்தால்அர்ச்சித்தல், வேதம் ஓதுதல், சிவ புராணங்கள் படித்தல் பயன் சொல்லல், ஆகியனவும் மிகுந்த நற்பலன்கள் அளிக்கும். சிவராத்திரியன்று நித்திரை விழிக்கும் போது அப்பொழுதை ஆத்மீக முறையில் சிவ வழிபாட்டிலேயே கழித்தல் வேண்டும். கேளிக்கைகளில் இத் தவப் பொழுதைக் கழித்தலைத் தவிர்த்தல் அவசியம். சிவராத்திரி சிவ சிந்தனையிலே கழிக்கப்பட வேண்டும். சிவராத்திரியன்று இரவு 14 நாழிகைக்கு மேல் உள்ள முகூர்த்தம் இலிங்கோற்பவ காலம் எனப்படும். சிவ இராத்திரி முழுவதும் நித்திரை விழிக்க இயலாதவர்கள் இலிங்கோற்பவ முகூர்த்தம் முடியும் வரை தன்னும் நித்திரை விழித்தல் நன்று. சிவராத்திரி

நித்திய சிவராத்திரி,

பட்ச சிவராத்திரி,

மாத சிவராத்திரி,

யோக சிவராத்திரி,

மகா சிவராத்திரி

என 5 வகைப்படும்.

மாசி மாதம் கிருஷ்ண சதுர்த்தசியில் நள்ளிரவில் சிவபிரான் இலிங்கத்தில் தோன்றினார். இத்தினமே மகா சிவராத்திரியாகும். இத்தினத்தில் சிவ பூசை செய்து சிவ புண்ணியம் பெறலாம். சிவன் அபிடேகப்பிரியராதலால் இரவு நான்கு யாமமும் இலிங்கோற்ப மூர்த்திக்கு நல்லெண்ணெய், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம் கருப்பஞ்சாறு, இளநீர் ஆகியவற்றால் நான்கு யாமமும் அபிடேகம் செய்து அர்ச்சித்தல் முறையாகும்.

விரதமனுட்டிப்போர் அதிகாலை துயிலெழுந்து தூய நீராடி இல்லத்தில் சிவ வணக்கம் செய்த பின் சிவாலயம் சென்று தரிசித்தல் வேண்டும். அன்று முழுவதும் உபவாசம் இருத்தல் மிகச் சிறப்பõகும். மாலையில் மீண்டும் சிவாலயம் சென்று இரவு நான்கு யாமமும் சிவதரிசனத்தில் ஈடுபட்டு அபிஷேக அர்ச்சனை பூசைகள் கண்டு களித்து மறுநாட் காலை சூரியன் உதிப்பதற்கு 6 நாழிகைக்கு முன் பாரணை செய்ய வேண்டும். அந் நேரத்தில் அந்தணர் ஏழைகளுக்கு தானம் செய்தலும் உகந்ததாகும்.

சிவலிங்கத்தில் சிவன், விஷ்ணு, பிரமன் ஆகிய மும்மூர்த்திகளுமே அடங்கியுள்ளனர். சிவலிங்கத்தின் பீடம் ஆவுடையார் எனப்படும். இஃது சக்தியின் ரூபம். பாணம் சிவரூபம், பீடம் கிரியாசக்தி வடிவம், இலிங்கம் ஞான சக்தி வடிவம், பீடத்தின் அடிப்பாகம் பிரம்ம ரூபம், நடுப்பாகம் விஷ்ணு பாகம், இக் கருத்தை பின்வரும் பாடல் மூலம் திரு மூலர் விளக்கியுள்ளார்.

மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன் பலம் தரு ஐம்முகன் பரவிந்து நாதம் நலம் தரும் சக்தி சிவன் வடிவாகிப் பலம் தரு லிங்கம் பரா நந்தியாமே சிவ இரவில் இடம்பெறும் நான்கு யாமப் பூசை முறைகள் பற்றி நோக்குவோம்.

முதலாம் யாமத்தில் பால், தயிர், நெய், கோமயம் கோசலம் ஆகியவை கலந்த பஞ்ச கவ்வியத்தால் இலிங்கோற்பவ மூர்த்தியை அபிடேகம் செய்து பின்னர் வில்வம் தாமரை ஆகியவற்றால் மூர்த்தியை அர்ச்சித்தல் வேண்டும். நிவேதிக்க வேண்டியது பயத்தம் பருப்பு, ஓத வேண்டியது யசுர் வேதம். இரண்டாம் யாமத்தில் பஞ்சாமிர்தத்தால் மூர்த்தியை அபிடேகித்த பின் சந்தனம் தாமரை சாற்றி துளசியால் அர்ச்சித்து பாயாசம் நிவேகித்து யசுர்வேதம் ஓத வேண்டும்.

மூன்றாம் யாமத்தின் போது மூர்த்திக்கு தேனால் அபிஷேகம் செய்து கற்பூரம் சாதி முல்லை மலர்கள், சாற்றி முக்கிளை வில்வத்தால் அர்ச்சித்து எள் அன்னம் நிவேதித்து சாம வேதம் ஓதி வழிபாடு செய்ய வேண்டும். நான்காம் யாமத்தில் கருப்பஞ்சாற்றினால் சுவாமியை அர்சித்து அரைத்த குங்குமப்பூ, நந்தியாவட்டை மலர் சாற்றி, நீலோற்பவ மலரால் அர்ச்சித்து சுத்த அன்னம் நிவேதித்து மூர்த்தியை வழிபட வேண்டும். ஓத வேண்டியது அதர்வேதம். சிவராத்திரியின் பின்னணியில் உள்ள சம்பவங்கள் பலவற்றுள் ஒன்றை நோக்குவோம். ஒருகால் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்குமிடையே தாமே பரம் பொருள் என்ற கர்வம் ஏற்பட்டது. இவர்களது அறியாமையை நீக்க சிவபெருமான் திருவுளங் கொண்டு தான் ஒரு மாசி மாத அபர பக்கத்தில் சதுர்த்தசியில் பெரியதோர் சோதிப் பிழம்பாக பிரம்ம விஷ்ணுக்கள் முன் தோன்றி இச்சோதியின் அடி முடியை எவர் காண்கின்றாரோ அவரே உண்மை பரம் பொருள் என அசரீரி மொழிந்தார்.

அசரீரி வாக்குக் கேட்ட அவர்கள் பிரம்மன் அன்னப்பட்சி வடிவமெடுத்து சோதிப் பிழம்பான நுனியைத் தேடி மேல் நோக்கிப் பறக்கலானார். விஷ்ணு பன்றி வடிவமெடுத்து சோதியின் அடியைத் தேடிப் பூமியைக் குடைந்த வண்ணம் கீழே செல்லலானார். ஆனால் இருவருமே தமது முயற்சியில் வெற்றியடையவில்லை. விஷ்ணு தனது தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால் பிரம்மனோ தான் சோதிப் பிழம்பின் முடியை கண்டதாகவும் தனது கூற்றை நிரூபிக்க தாழம் பூவை சாட்சி கூறவும் வைத்தார்.

பொய்யுரைத்த பிரம்மனுக்கு பூவுலகில் ஆலயங்கள் அமைக்கப்படமாட்டா, என்றும் பொய்சாட்சி கூறிய தாழம்பூ சிவ பூசைக்கு தவிர்க்கப்பட வேண்டும் என்றும் சிவபிரான் சாபமிட்டார். தமது அறியாமையும் அகந்தையும் ஒழிந்து சிவனே பரம்பொருள் என்னும் உண்மையை அவர்கள் உணர்ந்தனர். சோதிப் பிழம்பு மலையாக இறுகி, சிவனார் இலிங்க வடிவில் காட்சி தந்தார். இந்த வகையில் சிவ முக்கியத்துவம் பெற்ற சிவராத்திரி விரதத்தை சைவ சமயிகள் யாவரும் முறைப்படி அனுஷ்டித்து எல்லாம் வல்ல ஈசன் இன்னருள் பெற்றுய்ய வேண்டும். VIII
Thanks virakesary

Read more...

Wednesday, April 21, 2010

சிறுபான்மையினரின் எதிர்காலம் - புன்னியாமீன்.

விகிதாசார முறையில் ஆளும் ஐ.ம.சு.மு. வரலாற்று வெற்றி. இனி இலங்கைச் சிறுபான்மையினரின் எதிர்காலம் குறித்து தெரிவுசெய்யப்பட்;ட பிரதிநிதிகள் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றார்கள்?

விகிதாசார முறையின் கீழ் 7ஆவது பாராளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் உத்தியோகபூர்வமாக வெளியான நிலையில் ஆளும் ஐ.ம.சு.முன்னணிக்கு 144 ஆசனங்களும், ஐ.தே. முன்னணிக்கு 60 ஆசனங்களும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 14 ஆசனங்களும், ஜனநாயக தேசிய முன்னணிக்கு 07 ஆசனங்களும் கிடைத்துள்ளன. விகிதாசார முறையின் கீழ் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சியொன்று 144 ஆசனங்களைப் பெற்றிருப்பது இதுவே முதற்தடவை.
பாராளுமன்றப் பொதுத் தேர்தல் பிரச்சாரங்களின்போது ஐ.ம.சு.மு. தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக வேண்டியும், அரசியலமைப்பை மாற்றியமைப்பது மற்றும் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வைப் பெறுவது ஆகிய நோக்கங்களுக்காகவும் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரும்பான்மைப் பலத்தை மக்களிடம் வேண்டிநின்றார். விகிதாசார தேர்தல் முறையின் கீழ் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தைப் பெறுவதென்பது இலகுவான காரியமல்ல. இலங்கையில் பல கட்சிகள் காணப்பட்டபோதிலும்கூட, கடந்த கால தேர்தல் முறைகளை ஒப்புநோக்கும்போது இரு கட்சி முறைக்குரிய பண்புகளே இலங்கையில் பெருமளவிற்கு வெளிப்படுவதினால் மூன்றில் இரண்டு பலத்தைப் பெறுவதென்பது மிகவும் கடினமான ஒரு விடயமே. இருப்பினும், 144 ஆசனங்களை ஆளும் கட்சிக் கிடைத்திருப்பதென்பது ஒரு விசேடத்துவமான வெற்றி என்றே கருத வேண்டும். பாராளுமன்றத்தின் மொத்த ஆசன எண்ணிக்கை 225 ஆகும். இதில் மூன்றில் இரண்டு என்று கூறும்போது குறைந்தது 150 ஆசனங்களையாவது பெற்றாக வேண்டும்.

தற்போது ஆளும் கட்சி 144 ஆசனங்களைப் பெற்றுள்ள நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்காக வேண்டி மேலும் 06 ஆசனங்கள் தேவைப்படுகின்றன. எதிர்க்கட்சியிடமிருந்து இந்த 06 ஆசனங்களையும் பெற்றுக் கொள்வது ஆளும் கட்சிக்கு பெரிய சவாலாக அமையாது என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். தற்போது எதிர்க்கட்சியில் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் தமது கட்சி தலைமைத்துவத்திற்கு விரோதமாக இருப்பதுடன், இவர்கள் சிலநேரங்களில் ஆளும் கட்சிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு வழங்குவார்களெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ஸவால் மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பலத்தை பெற்றுக் கொள்ள கணிசமான வாய்ப்புக்கள் உண்டு. இந்நிலையில் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சியில் தெரிவாகியிருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் நிலைப்பாடுகள் எவ்வாறிருக்கும் என்பதையும் இலங்கையில் வாழக்கூடிய சிறுபான்மையினர் எதிர்பார்த்துள்ளனர்.

இலங்கையில் தமிழ் மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்தவர்கள். தமது இனத்தின் உரிமைக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை பழிகொடுத்தவர்கள். தற்போதைய நிலையை யதார்த்தபூர்வமாக சிந்திக்கும்போது வெளிநாட்டு நிகழ்ச்சித்திட்டங்களால் அல்லது கற்பனை திட்டங்களாலும் தமிழ் மக்களின் உரிமைகளையும், அபிலாஸைகளையும் வென்றெடுப்பதென்பது மிகவும் ஒரு கடினமான நிலையே. இத்தகைய நிலையில் ஆளும் கட்சியுடன் இணக்கப்பாட்டிற்கு வந்து வடக்கு கிழக்கில் அபிவிருத்தியை மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை வென்றெடுத்துக் கொள்வதே காலத்தின் தேவையென ஆய்வாளர்கள் கருத்து வெளியிடுகின்றனர். கடந்தகால அனுபவங்களை எடுத்துநோக்கும்போது ஐரோப்பிய நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தபோதும்கூட இலங்கை அரசு அதற்கு உட்பட்டு சென்றதை காணமுடியவில்லை.

இந்தக் காலகட்டத்தில் ஆசியா சர்வதேச அரங்கில் பலமட்டங்களிலும் உயர்வடைந்தே வந்துள்ளது. எதிர்காலத்தில் ஐ.நா.சபைக்கு கட்டுப்பட்டு ஆசிய நாடுகள் அனைத்தும் நடந்து கொள்ளும் எனவும் எதிர்பார்க்க முடியாது. கடந்த சில ஆண்டுகளாக ஆசிய நாடுகளின் போக்குகளையும் ஆசிய நாடுகளில் ஏற்பட்டு வரக்கூடிய துரிதமான வளர்ச்சிகளையும் அவதானிக்கும்போது தமது வளையத்தின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையையொத்த ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகள் சபையின் வீடோ அதிகாரமுள்ள சீனாää ரஸ்யா போன்ற நாடுகளுடனும் அதேநேரம்ää ஆசியாவில் துரிதமாக வளர்ச்சியடைந்துவரும் இந்தியாவுடனும் நெருக்கமான உறவுகளை வைத்துள்ளதை யாராலும் மறுப்பதற்கு முடியாது. இத்தகைய பின்னணியில் ஐரோப்பிய நாடுகளோ அல்லது ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களோ அன்றேல் சர்வதேச நிகழ்ச்சித்திட்டங்களோ இலங்கையில் காணப்படக்கூடிய தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்ப்பது பகற் கனவாகவே இருக்கும்.

இத்தகைய நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவாகியுள்ள அங்கத்தவர்களுக்கு விசாலமான பணியொன்று காத்திருக்கின்றது. சுயநல நோக்கங்களைக் கருத்திற் கொள்ளாது இணக்கப்பாட்டுடன் செயற்பட்டு தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இவர்கள் யதார்த்தபூர்வமாக சிந்திக்க வேண்டியதும்ää செயல்பட வேண்டியதும் மிகவும் அவசியமானதொன்றே. அரசியல் ரீதியான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் அதேநேரத்தில் கடந்தகாலங்களில் யுத்தத்தால் அழிவுற்ற வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யும் பணியும் இவர்களின் பொறுப்புக்களில் ஒன்று என்பதை மறந்துவிடக்கூடாது.

மறுபுறமாக இலங்கையில் வாழக்கூடிய மற்றுமொரு சிறுபான்மையினமான முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதில் முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியாகக் காணப்படக்கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரிய பொறுப்புண்டு.
எவ்வாறாயினும் கடந்தகால அரசியல் அனுபவங்கள் தற்போது இலங்கை அரசியலில் காணப்படக்கூடிய பெரும்பான்மை சார்பு கட்சிகளின் போக்குகள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றை சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் மாத்திரமல்லாமல் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அனைத்து சிறுபான்மை பிரதிநிதிகளும் தூரதிருஸ்டி நோக்குடன் சிந்தித்து தமது இனங்களைப் பற்றியும்ää தமது இனங்களின் எதிர்காலம் பற்றியும்ää தமது சமூகத்தின் எதிர்காலம் பற்றியும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் இன்னும் ஆறாண்டுகளுக்கு ஆளும் ஐ.ம.சு.மு. பதிவியிலிருக்கப் போகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு அரசியல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமிடத்திலும் சரி ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளின் போதிலும் சரி தத்தமது சமூக நல உரிமைகளைப் பேணிக் கொள்ள வேண்டியது தெரிவுசெய்யப்பட்ட அனைத்து சிறுபான்மை சமூகப் பிரதிநிதிகளுக்கும் உள்ள விசாலமான பொறுப்பும், பணியுமாகும். VIII

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com