Thursday, April 27, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பால் தவறவிடப்பட்ட அருமையான சந்தர்ப்பங்கள். ஸ்ரீரங்கன்.

நேரிடையாக தமிழரசு கட்சியை மட்டும் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக கூட்டமைப்பையும் சேர்த்து குற்றம் சாட்டுவது காரணத்துடனே தமிழரசு கட்சியின் தவறுகளை தட்டி கேட்க்காமல் அவர்களுடன் சேர்ந்து பயணித்து தவறுக்கு துணை போனது.

2015 ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு சர்வதேச சக்தியுடன் இணைந்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்த தென்னிலங்கை அரசியல் தலைமைகள் பல ரகசிய சந்திப்புகளை மேற்கொண்டதை யாவரும் அறிவர் குறிப்பாக ஐயா சம்பந்தனும் பிரதமர் ரணிலும் முன்னால் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் ஜனாதிபதி மைத்திரியுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் சம்பந்தன் ஐயாவால் ஆட்சியை மாற்ற காட்டிய ஆர்வத்தில் சிறிதளவு கூட தமிழ் மக்களின் நலன் சம்மந்தமாக கலந்துரையாட படவிலை என்ற கசப்பான உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும். ஏன் இந்த தவறை விட்டனர்? இங்கு இவர்களின் பேரபேச்சில் அரசிடமும் சர்வதேசத்திடம் எதிர்பார்த்தது பண வெகுமதிகள் மட்டுமே.

சிறப்பான ராஜதந்திரத்தை கையாண்டு பல விடயங்களில் குறைந்தபட்சம் காணி விடுவிப்பு. கைதிகள் பிரச்சினை. யுத்தத்தால் நலிவுற்றர்களுக்கு இழப்பீடு போன்ற விடயங்களில் எழுத்து மூல உறுதி மொழிகளை பெற்றிருக்கலாம். அரசுடன் மட்டுமல்லாது ஆட்சி மாற்றத்துக்கு தூண்டிய சர்வதேச சக்திகளுடன் பேசி சிறப்பாக காய் நகர்த்தியிருக்கலாம் ஏன் செய்யவில்லை?

நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கி தமிழர்களை கோமண்துடன் நட்டாற்றில் விட்டுவிட்டு இன்று அரசு ஏமாற்றினாலும் சர்வதேசம் நம்மை கைவிடாது என்று புதிய வியாக்கீனம் பேசுகீறிர்கள்.

இதே வாயால் தான் இதயத்தால் இணைந்துள்ளோம் என்றீர்கள். பல விடயங்களை சாதிப்போம் என்று கூறினீர்கள் தற்போது என்னாச்சு?

எங்களுக்கு தெரியும் நாங்கள் மீண்டும் டொலர் காகங்களால் (தமிழரசு கட்சி தலைமை) ஏமாற்றபட்டுள்ளோம் என்பதை அடிக்கடி உங்கள் கட்சியினர் கூறும் சொற்பிரயோகம் (தமிழ் மக்கள் அரசால் ஏமாற்றப்பட்டால்) இது தவறான பதம் தமிழரசுகட்சியால் தவறாக வழி நடத்தி ஏமாற்றபட்ட மக்கள் என்பதே சரியான சொற்பதம். இதை கருத்து பதிவிடும் நன்பர்கள் யாரவது இல்லை என்று மறுதலிக்க முடிந்தால் சரியான காரணத்தை கூறி எனது கருத்தை நிராகரியுங்கள்.

அரசால் முற்றாக தாம் முட்டாள்கள் ஆக்கப்பட்டுவிட்டோம் என்பதை தமிழரசு கட்சி தலைமை நன்றாக உணர்ந்துவிட்டது. கிளிநொச்சியில் மாவையின் வாயால் வெளிவந்து விட்டது. இவர்களை பொறுத்தவரை கிடைத்தவரை லாபம்.

நிபந்தனைகள் ஏதுமின்றி மைத்திரியை ஆட்சிக்கு கொண்டுவர இதர கூட்டமைப்பு அங்கத்துவ கட்சி தலைவர் சுரேஸ் பிறேமசந்திரனுக்கு 35 லட்சம் தமிழரசு தலைமையால் வழங்க முற்படும் போது இவர்கள் எவ்வளவு பேரத்துக்கு விலை போயிருப்பார்கள் என்பதை அறியமுடியும்.

மாற்று தலைமைக்கான தேவை எதற்காக உணரபடுகின்றது என்பதை பின்வரும் நிகழ்வுகள் எடுத்தியம்புகிறது. மக்களின் உரிமைக்கான எமது போராட்டத்தில் சம்மந்தபட்ட தரப்பு எதிர் தரப்புடன் பணப் பட்டுவாடா செய்வதென்பது முற்றாக விலை போகும் தன்மையே.

ஐ நா சபை நிகழ்வுகளில் இவர்களின் நெகிழ்வு தன்மையை பலர் விமர்சித்திருந்தனர் ஆனால் இதன் பின் உள்ள உண்மை தன்மை யாதனில் பெரும் பணத்தொகை கைமாறியுள்ளது இவர்களின் மௌனத்துக்கான காரணம் இதுவாகத்தான் இருக்கமுடியும்.

இன்னும் இரு வாரங்களில் பாமரனுக்கு கூட வழிநடத்தல் குழுவால் தாம் ஏமாற்ற பட்டுள்ளோம் என்பதை அறிய முடியும் இனி என்ன செய்யமுடியும்?

தற்போது எமக்கான தேவை சலுகைக்கும் பணத்திற்கும் விலை போகாத தலைமையே வார்த்தை ஜாலங்களுக்கு மயங்கி எம்மையும் வார்த்தை ஜாலங்களால் ஏமாற்றும் அரசியல்வாதிகளை அடியோடு நிராகரிப்போம்.
மாற்றங்களை சிந்திக்கும் மக்களால் சிறப்பான மாற்றத்தை கொண்டுவர முடியும். மாற்றத்தால் உரிமை இலக்கை அடைய முயற்சிப்போம்.

Read more...

Wednesday, April 26, 2017

நினைவில் வாழும் விசுவானந்ததேவன். நடேசன்

77 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் மார்ஸ் மண்டபத்தில் தங்கியிருந்தேன். நான் கலகா வீதியைக்கடந்து எதிர்ப்பக்கமாக புகையிரதநிலையம் அமைந்த பகுதியில் உள்ள மிருகவைத்தியத்துறைக்கு செல்லும்போது பலதடவைகள் விசுவானந்ததேவனைக் கண்டிருக்கிறேன்.

துணிப்பையை தோளில் கொழுவியபடி குறைந்தது இரண்டு நண்பர்களுடன் எதையோ தொலைத்துவிட்டதுபோல் புற்களோ அல்லது ஊர்வனவோ நசிந்துவிடாதிருக்கவேண்டும் என்பதுபோல் கால்களை எட்டி எட்டி வைத்தபடி சிரிப்பைத் தழுவ விட்டபடி என்னைக்கடந்து நடக்கும் விசுவானந்ததேவன் எப்பொழுதும் நினைவில் நிற்கிறார்.

அவரது உருவம், முகம், அவரது புதுமையான பெயர் , அத்துடன் கம்யூனிஸ்ட் என எனக்கு மற்றவர்களால், முக்கியமாக ஜனதா விமுக்தி பெரமுனையைச் சேர்ந்த சிங்கள நண்பன் ஜோதிரத்தினவால் அறிமுகப்படுத்தப்பட்டது எல்லாம் பசுமையான நினைவுகள்.

எனக்கு முன்பே பல்கலைக்கழகம் வந்தவர், எங்களது காலத்திலும் அவர் படிப்பதைத் தொடர்ந்தமையால், படிப்பதைவிட அதிகமாக புரட்சிகரமான வேலைகளில் ஈடுபடுகிறார் என்பதும் எனக்குப் புரிந்தது. நான் பல்கலைக்கழகம் பிரவேசித்த காலம், ஏற்கனவே 71 புரட்சியில் ஈடுபட்டவர்கள் தோல்வியடைந்து சிறையிலிருந்து விடுபட்டுப் படிக்க வந்த காலம் என்பதால் நான் சிரிப்புடன் மட்டுமே விசுவானந்ததேவனைக் கடந்து விடுவேன்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அவர் சீனச்சார்பான கொள்கை உடையவர் என அக்காலத்தில் அவர் மீது முத்திரை குத்தப்பட்டிருந்தது. நாங்கள் எல்லாம் உயிர் தமிழுக்கு, உடல் மண்ணுக்கே என்ற ஈழத் தேசியக் கவிஞர் காசி ஆனந்தனது கோசங்களைக்கேட்டு வளர்ந்தவர்கள். மருத்துவ, மிருகவைத்தியத்துறைகளில் படித்துக் கொண்டிருந்த எங்களுக்கு இடதுசாரி அரசியல் பிரயோசனமற்றது என்ற எண்ணமிருந்தது.
தோட்டம் செய்யத் தண்ணிரோ, தொழில் செய்ய தொழிற்சாலையோ இல்லாத தீவுப்பகுதியில் பிறந்தவர்கள் படித்தால் அரச உத்தியோகம் படிக்காவிடில் தென்னிலங்கையில் சோற்றுக்கடை அல்லது சுருட்டுக்கடை எனத்தேடும் பாரம்பரியம் எமது இரத்தத்தில் ஓடியது.

84 இல் தமிழகத்திற்கு வந்ததும் பெரும்பாலான ஈழவிடுதலை இயக்கத் தலைவர்களுடன் நேரடியாகப்பழக வாய்ப்புக்கிடைத்தது. ஆனால் எனக்கு ஏற்கனவே பேராதனையில் படித்த காலத்தில் அறிமுகமான மாணவரான, பிற்காலத்தில் தமிழ்விடுதலை இயக்கமொன்றின் பொறுப்பாளராக இருந்த விசுவோடு இந்தியாவிலும் பெரிதளவு நெருங்கிப்பழகவில்லை.

84 இறுதியில் அகதிகளுக்கும் இயக்கப்போராளிகளுக்கும் மருத்துவ உதவிகளை செய்வதற்கு அக்காலத்தில் விடுதலைப்புலிகள், புளட் டெலோ , ஈ.பி .ஆர் .எல் .எஃப். மற்றும் ஈரோஸ் அமைப்பினர் ஒன்றாகச் சேர்ந்து உருவாக்கிய அமைப்பிற்கு நான் செயலாளரானேன். அவர்கள் அந்த அமைப்பில் தமிழீழத்தேசிய முன்னணி (என் எல் எவ் ரீ) என்ற அமைப்பை ஒதுக்கிவிட்டார்கள்.

அப்பொழுது அதைப்பற்றி விசாரித்தபோது என். எல் .எவ் .ரீ.யின், இந்திய நக்சலைட்டுகள் தொடர்பும், இவர்களது சீனச்சார்புக் கொள்கையும் இந்தியாவில் சரிவராது என்ற காரணம் சொல்லப்பட்டது.

எனினும் பலமுறை விசுவை சந்தித்திருக்கிறேன். நலம் விசாரிப்பதோடு எமது உரையாடல் முடிந்துவிடும். அதன் பின்பு ஒருநாள் நான் ஈபிஆர் எல் எஃப். செயலதிபர் பத்மநாபாவைக் காணச் சென்றபோது அங்கு அவர் என்னை விசுவுக்கு அறிமுகப்படுத்த முயன்றபோது ” ஏற்கனவே பேராதனையில் தெரிந்தவர்” என்றார்.

பிற்காலத்தில் சில ஈபி எல்ஆர் எஃப். நண்பர்கள் ” விசு எங்களிடம் ஆயுதம் கேட்கிறார். ஆனால் எங்களுக்கே இன்னும் கிடைக்கவில்லை ” என்றார்கள்.

86இல் நான் இந்தியாவில் இருந்தபோது விசு கடலில் மரணமடைந்ததாக அறிந்து மிகவும் வருந்தினேன். நான் அறிந்தவரை விசுவை எவரும் குறை சொன்னது கிடையாது. ஆனால், பிற்காலத்தில் விடுதலைப்புலிகளால் அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் வலுத்ததாக அறிந்தேன்.

விசர் நாய் கடிக்கவில்லை என்றால்தானே அதிசயம்? யாரைத்தான் அவர்கள் விட்டு வைத்தார்கள் என்பது ஒருவிதமான மனச்சாந்தி.

அத்தோடு விசுவின் படகில்பயணம் செய்த 30 பேர்அளவிலான சாதாரண மக்களையும் நாம் நினைவு கூரவேண்டும். விசுவானந்ததேவன் என்ற விசுவின் நினைவுக் கட்டுரைகள் கொண்ட நூல் எனக்குத் தபாலில் வந்தது.

இந்தப்புத்தகம் இரு விடயங்களில் முக்கியமாகிறது. புத்தகத்தைத் தொகுத்தவர்கள் அதன் பின்பகுதியால் இணைத்திருந்த அவர்களது இயக்கத்திலிருந்து இறந்தவர்கள் 31 பேரது விபரக்கொத்து. அதில் 18 போராளிகள் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்கள். அதைவிட விசு உட்பட 3 பேர் விடுதலைப்புலிகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் பலமாக நம்பப்படுகிறது.

5 பேர் இலங்கை இராணுவத்தால் கொலை செய்பட்டார்கள். மொத்தமாக 250 போராளிகளை மட்டும் தமது உச்சக்காலத்தில் வைத்திருந்தது இச்சிறிய இயக்கம். இவர்கள் சுவரொட்டிகளும், துண்டுப்பிரசுரங்களிலும் ஆர்வம் காட்டியவர்கள். ஆக மிகுதியாக சில துருப்பிடித்த ஆயுதங்களை தங்கள் பாதுகாப்புக்கு வைத்திருந்திருப்பார்கள். நான் கேள்விப்பட்டவரை ஒரு வங்கியைக் கொள்ளையடித்திக்கிறார்கள். அவர்கள் விடுதலைப்புலிகளின் எதிரிகளா?

இதுபோல் மற்ற இயக்கங்களும் தங்களது போராளிகளது பெயர்களை வெளியிடுவது மிக மிக அவசியமானது. எமது போராட்டம் யாரால் சிதைக்கப்பட்டது என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை.

நான் புரிந்துகொண்ட மற்றைய விடயம் இலங்கையில் கமியூனிஸ்ட் கட்சிகள் சம்பந்தமானது. வரலாற்றைப் பேசுபவர்கள் கட்சிகள் சம்பந்தமாக பேசுவது அரிது. ஆனால், கொள்கை சார்ந்திருந்த முக்கியமானவர்களையிட்டு பேசுவார்கள்.

சிங்களவர்கள் மத்தியில் பீட்டர் கெனமன், டாக்டர் விக்கிமசிங்கா சண்முகதாசன், யாழ்ப்பாணத்தில் வி.பொன்னம்பலம், மாஸ்டர் கார்திகேசு , அதைவிட பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சிவத்தம்பி கைலாசபதி அதில் குறிப்பிடத்தக்கவர்கள். யாழ்ப்பாணத்தில் கார்த்திகேசு மாஸ்டருடனும் சென்னையில் வி. பொன்னம்பலமுடனும் பழகியதை எனக்குக் கிடைத்த கொடையாக நினைக்கிறேன்.

இந்தத் தனிமனிதர்களுக்கு அப்பால் என் போன்றவர்களுக்கு புரியும் வகையில் இலங்கையில் இடத்துச்சாரியத்தின் வரலாறு பொதுவெளியில் பேசப்படவில்லை. இந்தப்புத்தகம் அந்தக்குறையைத் தீர்த்து வைக்கிறது. இந்த நூலில் இடது சாரிகள், நாங்கள் படித்த விலங்கியலில் அமிபா போன்ற ஒரு கல உயிர்கள்போல் பிளவுபட்டுக்கொண்டிருந்தார்கள் என்பது புரிந்தது.

ஆரம்பத்தில் சீன- ரஷ்ஷிய பிளவு உருவாகியது. அப்பொழுது இரண்டு பகுதியிலும் இரு மொழி , பல மதங்கள் சார்ந்தவர்கள் கமியூனிஸ்ட் கட்சிகளில் இருந்தனர். அதன்பின் சீன சார்பில் இருந்து சிங்கள இளைஞர் அணி, ரோகண விஜயவீராவின் தலைமையில் போய்விட்டதையும் பிற்காலத்தில் சண்முகதாசன் போன்றவர்கள் தொழிற்சங்கவாதிகளாக மாறி, இறுதியில் விடுதலைப்புலி ஆதரவாளர்களாகத் திரிபடைந்ததாக அறிந்திருந்தேன்.

இந்தப் புத்தகத்தின் மூலமே பிற்காலத்தில் சண்முகதாசனது தலைமையில் இருந்து பிரிந்து மாக்சிய –லெனினிச கட்சி உருவாகியதும் அதில் காலஞ்சென்ற விசு தீவிரமாக இயங்கியதும் அதன் பின்பு தமிழர் பிரச்சினை கூர்மையடைந்தபோது தமிழ் மக்கள் தேசிய முன்னணி உருவாகி பிற்காலத்தில் விசுவால் தமிழீழத் தேசிய மக்கள் ஜனநாயக முன்னணி என்ற ஒரு ஆயுத அமைப்பாகியிருப்பதும் தெரியவருகிறது.

ஹட்டன் நேஷனல் வங்கிக் கொள்ளையின் பின்பு அதனில் இருந்து பிரிந்து தமிழீழ மக்கள் விடுதலை முன்னணியாக அந்த இயக்கம் பரிணமித்த போதே விசுவின் இறப்பு நடக்கிறது. வலதுசாரி அரசியலுக்கு சமாந்தரமாக இடதுசாரிகள் பிளவு, அழிவு என்ற வரலாறு உள்ளது. இதில் சண்முகம் சுப்பிரமணியத்தின் வரலாற்றுக்கட்டுரை சிறப்பானது. ஒருவர் எழுதாமல் பலர் எழுதும்போது தொகுப்பு நூல்களில் சொல்வது சொல்லல் என்பது சில இடங்களில் சகிப்புத்தன்மையை சோதித்தாலும் படிக்கவேண்டிய நூலாகவும் அத்துடன், நாம் நினைவில் வைத்திருக்கவேண்டிய மனிதராகவும் விசு உள்ளார்.

விசுவின் சொந்த ஊர் எது என்பது எனக்கு முன்பு தெரியாது. அவரது ஊரான வடமராட்சி கல்லுவம் பற்றிய ஒரு நினைவு வருகிறது.

77இல் பல்கலைக்கழக நண்பர்களான நாங்கள் பத்துப் பேர் உடுப்பிட்டித்தொகுதியில் இராஜலிங்கத்திற்காக பிரசாரத்திற்குப்போனபோது எங்களைத் தலைவர் சிவசிதம்பரம் கல்லுவத்திற்கு அனுப்பினார். அந்த ஊரின் வீதியில் நாம் செல்லும்போது, ஒரு வீட்டு முன்றலில் மிளகாய் காயவைத்துக்கொண்டிருந்த ஒரு மூதாட்டி ” எங்கிருந்து வாறியள் தம்பிமாரே? ” என்று கேட்டார்
” பேராதனை பல்கலைக்கழகம் ” என்றோம். ” பள்ளனுக்கு வோட்டுக் கேட்டு மட்டும் வராதீர்கள் ” என்றார் அந்த மூதாட்டி.

அதிலிருந்தே சாதித்திமிர் பிடித்த ஊர் கல்லுவம் என்ற சித்திரமே எனது மனதில் உருவானது. அதுவே விசுவானந்ததேவனது ஊர் என்பதையும் இந்தப்புத்தகம் நினைக்க வைக்கிறது. அதற்கப்பால் தமிழகத்திலும் பார்க்க இலங்கையில் சாதிப்பாகுபாடு குறைந்தது என நாம் நினைத்தால் அதற்கு இடதுசாரிகளே நன்றிக்குரியவர்கள். இதற்குமேலாக வட இலங்கையில் உருவாகிய தமிழ்த்தேசியவாதிகளான தமிழரசுக்கட்சி, தமிழ்க்காங்கிரஸ், மற்றும் பிற்கால சிறிய, பெரிய போராளி அமைப்புகள் மற்றும் விடுதலைப்புலிகள் எல்லோரும் இழைத்த நாசவேலைகளோடு ஒப்பிடும்போது மிகச்சிறிய அளவில் உருவாகிய ஒற்றைக்கல அமிபாக்களான இடதுசாரிகள் எமக்கு விட்டுச் சென்றவை அதிகமானவை.

மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் என்பதை எங்களுக்கு எமது மாணவப்பருவத்தில் புரியவைத்தவர்கள் இலங்கை இடதுசாரிகள். அந்தவழியில் குறுகிய காலத்தில் பலரது நினைவுகளில் கலந்த ஒருவராக விவானந்ததேவனை நாம் நினைவு கூர்வோம்.

Read more...

Sunday, April 23, 2017

வடமாகாணசபை: அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் - கருணாகரன்

வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் பற்றிப் பகிரங்கத்தளத்தில், பரவலான உரையாடல்கள் நடக்கத்தொடங்கியுள்ளன. இதனால் மாகாணசபையின் மந்தமான அல்லது வினைத்திறனற்ற செயற்பாடுகள் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியிருக்கின்றன. வடக்கு மாகாணசபையைப் பற்றிய விமர்சனங்களும் கண்டனங்களும் எல்லோருடைய எழுத்திலும் வாயிலும் மிகச் சாதாரணமாகவே புழங்குகின்றன.
மாகாண நிர்வாகத்தைப் பற்றியும் அதற்குப் பொறுப்புச் சொல்லவேண்டிய முதலமைச்சர் விக்கினேஸ்வரனையும் முகப்புத்தகத்தில் கிழித்துத் தோரணம் கட்டுகிறார்கள். இதெல்லாம் ஏதோ பேக் ஐடியில் நடக்கிறது என்று எண்ண வேண்டாம். சொந்த முகத்தோடுதான் நடக்கிறது. தமிழ் அதிகாரச் சூழலில் இப்படி அதிகார அமைப்பொன்றுக்கு எதிராக, மக்களின் அபிமானத்தைப் பெற்ற தரப்பு ஒன்றை விமர்சித்துச் சொந்த முகத்தைக் காட்டுவது எளிதானதல்ல.

ஆனால், மிக இளைய வயதினர் கூட மாகாணசபையின் கீழிறக்கம்பற்றி துணிச்சலாக எழுதுகிறார்கள். பலர் கடுமையான தொனியில் கேள்விகளை எழுப்புகிறார்கள். புலம்பெயர் நாடுகளில் இருப்போர் கூட விக்கினேஸ்வரனுடைய நிர்வாகத்தைப் பற்றிச் சோர்வுடனேயே விசாரிக்கிறார்கள்.

வட மாகாணசபையின் பொறுப்பின்மைகளைப் பற்றியும் மந்தத்தனத்தைப்பற்றியும் இந்தப் பத்தியாளர் உள்படச் சிலர் ஏற்கனவே குறிப்பிட்டு வந்திருக்கின்றனர். மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராஜா உள்பட வேறு சில உறுப்பினர்களும் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்கள். மாகாணசபை அமைச்சர்கள் மீது மாகாணசபையின் உறுப்பினர்களாலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கல்வி, விவசாயம், கூட்டுறவு போன்ற துறைகளில் மிகப் பெரிய சீர்கேடும் ஊழலும் மலிந்திருப்பதாகச் சொல்லப்பட்டது.

இதைப்பற்றியெல்லாம் ஏராளம் ஆதாரங்களை ஊடகங்கள் பொதுவெளியில் பகிரங்கமாக முன்வைத்தன. இருந்தபோதும் எதைக்குறித்தும் விக்கினேஸ்வரனின் நிர்வாகம் பொருட்படுத்தியதில்லை. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காவது ஆறுதலாக இருங்கள் என்று உருக்கமாகக் கேட்கப்பட்டது. போரை நடத்திய அரசே அதற்கான நிவாரணத்தைக் கொடுக்க வேணும் என்று, கோரிக்கையை இடம்மாற்றியது வடக்கு மாகாணசபை. முன்னாள் போராளிகளுக்கு உதவி, மாற்றுவலுவுள்ளோருக்கு ஆதரவு என்று பெரிதாக மேளமடித்துச் சொல்லப்பட்ட அளவுக்கு காரியங்கள் எதுவும் சிறப்பாக நடக்கவில்லை.

“ரோம் எரியும்போது நீரோ மன்னல் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப்போல” சனங்கள் அவலப்பட்டுக்கொண்டிருக்கும்போது, முதலமைச்சரும் அமைச்சர்களும் விழாக்கள், கொண்டாட்டங்கள், பிரேரணைகள் என்று கலகலப்பாகக் காலம் கடத்திக் கொண்டிருக்கிறார்கள். எந்த நாளும் விழா நாயகர்களாகவே காட்சியளிக்கின்றனர்.

மாகாணசபையின் கீழிறக்கம் பற்றி முன்வைக்கப்பட்ட இந்த விமர்சனைங்களை அப்போது கவனிக்க விரும்பாதவர்கள், இன்று முன்னிலையில் நின்று தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அன்று விக்கினேஸ்வரனைப்பற்றி இருந்த மதிப்பும் கீர்த்தியும் இன்று காணாமல் போய் விட்டது. இதற்குக் காரணம் சனங்களின் எதிர்பார்ப்பைக் குறைந்த பட்சமாகவாவது நிறைவேற்றுவார் என்று நம்பப்பட்டு ஏமாந்ததேயாகும். உண்மையில் மாகாண நிர்வாகத்தைத் திறமையாக இயக்கிக் காட்டியிருக்க வேண்டிய விக்கினேஸ்வரன் வழிமாற்றப்பட்டார். அல்லது வழிதவறினார். அதனால் தன்னுடைய ஆட்சியில், நிர்வாகத்தில் விக்கினேஸ்வரன் கோட்டை விட்டார் எனலாம்.

மாகாணசபையைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் தமிழ்ச்சமூகத்தினால் மிக அதிகமாக மதிக்கப்பட்டவர் விக்கினேஸ்வரன். பல நல்ல முன்மாதிரிகளை உருவாக்கக்கூடியவர் எனப் பலரும் நம்பினார்கள். ஆனால், ஆட்சிப்பொறுப்பை ஏற்று நான்கு ஐந்து மாதங்களாக எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த விக்கினேஸ்வரனுக்குச் சக உறுப்பினர்களால் நெருக்கடிகள் உருவாகத்தொடங்கின. இதற்குக் காரணம், தொடக்கத்தில் மாகாணசபையை இயக்குவதற்கு அப்போதைய மகிந்த ராஜபக்ஸ ஆட்சி மந்த நிலையிலான ஆதரவையே வழங்கியது.

இதனால் விக்கினேஸ்வரனுடைய நிர்வாகம் விரைந்த செயற்பாட்டை மேற்கொள்ள முடியாமலிருந்தது. இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்ட தமிழ்த்தேசிய தீவிர நிலை அரசியலாளர்கள் விக்கினேஸ்வரனுக்கு நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கினார்கள். குறிப்பாக சிவாஜிலிங்கம், அனந்தி போன்றவர்கள். இதனால் ஒரு எல்லைவரையில் பொறுமை காத்த விக்கினேஸ்வரன், வேறு வழியில்லாமல், தானும் எதிர்த்தரப்பின் நின்று முகத்தைத் திருப்பி, அரசாங்கத்தை எதிர்க்கத் தொடங்கினார். இது மாகாணசபையைத் தவிர்க்க முடியாத அளவுக்கு முடக்கியது. பதிலாக விக்கினேஸ்வரனுக்கிருந்த உடன்கால நெருக்கடியைத் தவிர்த்தது.
ஆனால், மாகாண நிர்வாகத்தைச் செயற்படுத்துவதற்கான கரிசனைகளை எடுப்பதற்குப் பதிலாக, மாகாணசபைக்கான அதிகாரத்தைப்பற்றிப் பேசுவது தொடக்கம், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான வியாக்கியானங்களை உரைப்பது என்றொரு திசையில் விக்கினேஸ்வரன் நகர்ந்தார். மாகாணசபையும் கூட அப்படித்தான் செயற்படத்தொடங்கியது. அளவுக்கு அதிகமான பிரேரணைகளை உற்பத்தி செய்யும் ஒரு இயந்திரமாகியது. அது உற்பத்தி செய்யும் பிரேரணைகளின் நடைமுறைச் சாத்தியங்களைப்பற்றி அது ஒரு போதுமே சிந்தித்ததில்லை. இவற்றின் கூட்டு விளைவே இன்று வடக்கு மாகாணசபை மிக மோசமான சீரழிவில் வந்து நிற்கிறது.

கல்வியில் கடைசி மாகாணமாகவும் விவசாயம், மீன்பிடித்துறையில் மிகப் பின்தங்கியதாகவும் வடக்குமாகாணம் உள்ளது. குறைந்த பட்சம் மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருந்த, மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய வேலைத்திட்டங்களில் கூட மாகாணநிர்வாகம் சரியாகச் செயற்படவில்லை. வடக்கிற்கான பொருளாதார அபிவிருத்தி மைய நிர்மாணம், வவுனியா பேருந்து நிலையம், கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள வணிகச் சந்தையை இயங்க வைத்தல், இரணைமடுக்குள நிர்மாணம் மற்றும் யாழ்ப்பாணத்துக்கான குடிநீர் விநியோகம், மீன்பிடித் துறைமுக விருத்தி என எதிலும் குறிப்பிடத்தக்க வகையில் மாகாணசபை தன்னுடைய வினைத்திறன் மிக்க செயற்பாட்டுத்திறனை வெளிப்படுத்தவில்லை. எல்லாமே பலவீனமான நிலையில்தான் உள்ளன.

பெரும் நிதி ஒதுக்கீட்டில் வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட பேருந்து வளாகம் கைவிடப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி மையம் பற்றிய பேச்சையே தற்போது காணவில்லை. கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள வணிகச் சந்தை திறக்கப்படாத நிலையில் நான்கு ஆண்டுகளாகப் புட்டப்பட்டிருக்கிறது. இரணைமடுவில் மட்டுமல்ல, அக்கராயன் குளம் உள்பட வன்னிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளப்புனரமைப்புகளில் முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றனர். இந்தக் குளப்புனரமைப்புகளை மேற்பார்வை செய்வதற்கான விவசாயிகளையும் துறைசார் வல்லுநர்களையும் கொண்ட கட்டமைப்பு எதையும் மாகாணசபை உருவாக்கியிருக்க வேணும். ஆனால், அப்படி நடக்கவில்லை.

வன்னியின் ஆதாரம் குளங்களே. அங்குள்ள குடியிருப்புகளும் விவசாயத் தொழில்துறையும் குளங்களை ஆதாரமாகக் கொண்டவையே. இருந்தும் குளப்புனரமைப்புகளில் உரியவாறு கவனம் கொள்ளப்படவில்லை. விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பல்வேறு விதமான உள் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த முரண்பாடுகள் நிச்சயமாகக் குளப்புனரமைப்புகளைப் பாதிப்புக்குட்படுத்தும் என்பது அனைவருக்கும் தெரியும். இதையிட்டு விவசாயிகள் பெரும் கவலையடைந்திருக்கிறார்கள். இந்த மாதிரிப் பல தரப்பிலும் ஏராளம் கவலைகள் உண்டு. ஆனால், இதையெல்லாம் விக்கினேஸ்வரனோ, மாகாணசபையோ கவனத்தில் எடுப்பதில்லை. என்னதான் வந்தாலும் எதையும் நாம் பொருட்படுத்தவே மாட்டோம் என்ற தீவிரப் பிடிவாதத்தில் இருக்கிறார்கள். இது ஏன் என்றுதான் யாருக்குமே விளங்கவில்லை.

இதனால்தான் மாகாணசபையைப் பற்றி எல்லோரும் விமர்சிக்கத் தொடங்கியிருப்பதாகும். தமிழ்ச்சூழலில் இப்போது மெல்ல மெல்ல விமர்சனத்துக்கான களச் சூழல் ஒன்று மெல்ல மெல்ல உருவாகி வருகிறது. மாகாணசபையைப் பற்றி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளைப்பற்றி, தமிழ்த்தலைமைகளைப்பற்றியெல்லாம் விமர்சனங்கள் பகிரங்கத்தளத்தில் முன்வைக்கப்படுகிறது. பல சந்தர்ப்பங்களில் தலைவர்களை நோக்கி மக்கள் கேள்விகளை எழுப்புகிறார்கள். கண்டனங்களைத் தெரிவிக்கிறார்கள். மாகாணசபையின் கல்வி அமைச்சர் இரண்டு தடவை அவருடைய பணிமனையில் வைத்துச் சுற்றி வளைக்கப்பட்டது இந்த அடிப்படையிலான எழுச்சியின் விளைவே. மாகாணசபைக்கு முன்பாகக்கூட பல தடவை தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை பல தரப்பினரும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஊடகங்களும் விரும்பியோ விரும்பாமலோ இப்போது மாகாண நிர்வாகத்தைப்பற்றியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பற்றியும் அதனுடைய தலைமையைப் பற்றியும் விமர்சித்து எழுத்தித்தான் ஆக வேணும் என்ற நிலை உருவாகியுள்ளது. பெரும்பான்மை பலத்தோடு அதிகாரத்துக்கு வந்த, வடக்கின் முதலாவது மாகாணசபை, தன்னுடைய வரலாற்றுக்காலத்தில் ஏராளமான குற்றச்சாட்டுகளையும் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்த ஒரு அமைப்பாகவே இருக்கப்போகிறது. இதை மாற்றியமைப்பதற்கு ஏன் யாருமே முன்வரவில்லை? அல்லது தமிழ்த்தேசியவாதத்தை வலியுறுத்திப் போரிடும் மிதவாதத் தமிழர்களிடம் இப்படியான ஒரு செயலின்மைத்தன்மை தொடர்ச்சியாகவே வளரத்தான் போகிறதா?

அரசியல் தலைமைத்துவம் இல்லாத வெற்றிடம் என்பது மிகப் பாரதூரமான விளைவுகளை உண்டாக்கும். அரசியல் பிரதிநிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் அமைச்சர்களும் இருப்பது வேறு. அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவோராக இருப்பது வேறு.

அரசியல் தலைமைத்துவத்தை வழங்க முடியாமல், அரசியல் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் அதிகாரத்தைத் தங்களுக்கு இசைவாக வைத்திருப்பார்களே தவிர, அதைச் சமூக முன்னேற்றத்துக்காகவும் வரலாற்றின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தமாட்டார்கள். அதில் அவர்களுக்கு ஆற்றலும் ஆளுமையும் அக்கறையும் இருக்காது. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் அதிகாரமும் புகழும் வளங்களுமே.

அரசியல் தலைமைத்துவத்தை வழங்குவோரின் நிலை இதற்கு முற்றிலும் மாறானது. அவர்களுக்கு மக்களும் சூழலும்தான் முக்கியமானது. தங்களிடமுள்ள அதிகாரத்தை வைத்து பிரதேசத்தையும் மக்களையும் எந்த வகையில் எல்லாம் மேம்படுத்தலாம் என்று பார்ப்பார்கள். வளங்களையும் அதிகாரத்தையும் இணைத்துச் செயல் வடிவமாக்குவதன் மூலமாக, வரலாற்றை முன்னகர்த்தக் கூடியவர்களாக இருப்பர். துரதிருஸ்டவசமாக இவ்வாறானவர்களை தமிழ் மக்கள் தங்களுடைய அரசியலில் தெரிவு செய்து கொள்வதில்லை. வினைத்திறனும் செயற்திறனும் இல்லாதவர்களே அரங்கில் ஏற்றப்படுகிறார்கள். அப்படியானவர்களால் சமூகத்தேவைகளை நிறைவேற்ற முடிவதில்லை. இதுதான் வடக்கு மாகாணசபைக்கும் தமிழர் அரசியல் சூழலுக்கும் நேர்ந்துள்ளது.

இதையிட்ட கவலைகளும் கவனமும் தமிழ்ப்பரப்பில் ஏற்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியது. உரையாடல்கள் தொடர்கின்றன. உரையாடல்கள் தொடரும்போது மக்களிடத்திலே அநீதிக்கும் மந்தத்தன்மைக்கும் எதிரான கொதிப்பு உயர்ந்து வரும். கொதிப்பு உயரும்போதே வரலாறு சரியாக உருப்பெறுவதுண்டு. அநீதிக்கும் மந்தத்தன்மைக்கும் தவறுகளுக்கும் எதிரான கொதிப்பு என்பது உருக்கை உருமாற்றி ஆயுதமாக்கும் உலைக்குச் சமமாகும். அதுவே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

Read more...

Sunday, April 9, 2017

புலிகளின் இனவழிப்பும் இலங்கை அரசின் கையாலாகத்தன்மையும். பீமன்.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் 34 வது அமர்வுகள் நிறைவுற்றவுடன் புலிகளின் இனவழிப்பு கோஷம் மீண்டுமொருமுறை அடங்கியிருக்கின்றது. மேலும் இக்கோஷம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வழமைபோல் கேட்கக்கூடியதாக இருக்கும்.

கடந்த பங்குனி மாதம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பமானபோது இலங்கையிலே இனவழிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக உலகமக்களுக்கு சொல்லும் பொருட்டு புலிப்பினாமிகள் ஓர் புகைப்படக்கண்காட்சியை நடாத்தினார்கள். ஐநா முன்றலிலுள்ள இடமொன்றுக்கு பெரும்தொகைப் பணத்தை செலுத்தி அவ்விடத்தில் கூடாரமொன்றை அமைத்து இக்கண்காட்சி இடம்பெற்றது. கூடாரத்தின் இருமருங்கிலும் சில நிறுத்திகளில் பதின்ம வயது யுவதிகள் சிலரின் புகைப்படங்கள் „இலங்கையில் தமிழினவழிப்பு – Genocid of Tamil in Sri Lanka“ என்ற வாக்கியத்தின் கீழ் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அங்கே சுமார் 40 யுவதிகளின் படங்கள் காணப்பட்டன.

அப்புகைப்படங்களை பார்க்கச் சென்றவர்களுக்கு வாய்மூல விளக்கமுமளிக்கப்பட்டது. படத்திலுள்ள யுவதிகள் தொடர்பில் வினவப்பட்டபோது, இவர்கள் செஞ்சோலை என்ற அநாதைகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்றும் இலங்கை அரசாங்கத்தின் குண்டுவீச்சில் இறந்த அநாதைக்குழந்தைகள் என்றும் சொல்லப்பட்டது.

புலிகளின் இராணுவப்பயிற்சி முகாம் ஒன்றின் மீதான வான்தாக்குதலை செஞ்சோலை என்ற அநாதைகள் முகாம் என்றும் அங்கு கொல்லப்பட்டவர்கள் அம்முகாமிலிருந்த அநாதைகள் என்றும் எவ்வித இங்கிதமுமின்றி தொடர்ந்தும் பிரச்சாரம் செய்து வருகின்றமை புலிகளின் இயலாமையை பறைசாற்றுகின்றது. இப்பிரச்சாரமானது புலம்பெயர் தேசத்தில் வளர்ந்துவரும் இளைய தமிழ் தலைமுறையினர் மீது மிகுந்த பாதிப்பை செலுத்தியது. தமது வயது அநாதைகள் இலங்கையிலே இவ்வாறு கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்ற செய்தி அவர்களது மனங்களில் பசுமரத்தாணிபோல் பதிந்தது. அவர்கள் இலங்கை அரசுக்கெதிரான வேலைகளில் இறங்கினர். ஆனால் இலங்கை அரசோ புலிகளின் இப்பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து உண்மையை உணர்த்துவதில் தனது இயலாமையை இன்றும் நிருபித்துவருகின்றது.

இங்குள்ள பதின்ம வயது யுவதிகள் யார்? இவர்கள் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயம், விசுவமடு மாகாவித்தியாலயம், உடையார்கட்டு மகாவித்தியாலயம், முல்லைத்தீவு மகாவித்தியாலயம், குமுளமுனை மகாவித்தியாலயம், வித்தியானந்தா கல்லூரி – முள்ளியவளை, மேமாலை மகாவித்தியாலயம், ஒட்சிசுட்டான் மகாவித்தியாலயம், தர்மபுரம் மகாவித்தியாலயம் மற்றும் பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவர்கள்.

புலிகளால் பலவந்தமாக வள்ளிபுனம் முகாமில் இராணுவப்பயிற்சி வழங்கப்பட்டுக்கொண்டிருந்தபோது இலங்கை வான்படையினரின் வான்தாக்குதலால் இவர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள் என்பது முழு வன்னி பிரதேசமும் அறிந்திருந்த உண்மை. அத்துடன் இங்கு வேதனைக்குரிய விடயம் யாதெனில் இவர்கட்கு பலவந்தமாக இராணுவ பயிற்சிகளை வழங்கிய காளி மாஸ்டர் என்பவர் தற்போதும் எவ்வித குற்ற உணர்வுமின்றி வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இருந்தபோதும் புலிகள் இன்றும் இம்மாணவர்கள் செஞ்சோலை என்ற அநாதைகள் இல்லத்தை சேர்ந்தோர் என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

மாணவர்கட்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டமை ஓர் சூட்சுமமான கதை. இச்சூட்சுமத்திற்கு அன்று வன்னியிலிருந்த கல்வித்திணைக்கள அதிகாரிகள் உட்பட பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் புலிகளுக்கு சார்பாக செயற்பட்டுள்ளனர். 15 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் அனைவரும் முதலுதவிப்பயிற்சியை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் முதலுதவிப் பயிற்சி பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சியை பாடசாலை நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கத்தவறுவோர் எந்தவொரு பரீட்சைக்கும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் நிபந்தனையொன்றை (மிரட்டலை) பாடசாலை நிர்வாகம் விதித்துள்ளது. பாடசாலை நிர்வாகத்தின் நிபந்தனையை தட்டிக்கழிக்கமுடியாத மாணவர்கள் முதலுதவிப் பயிற்சிக்கென சென்றபோதே அவர்களுக்கு அங்கு இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றுவரை இம்மாணவர்களை புலிகளின் கட்டாயப் பயிற்சிக்கு நிர்பந்தித்த கல்வித்திணைக்களத்தை சேர்ந்த எந்தவொரு நபரும் தண்டிக்கப்படவில்லை.

அக்காலகட்டத்தில் குறித்த இளைஞர்-யுவதிகளின் பெற்றோர் தமது பிள்ளைகளை புலிகளிடமிருந்து காப்பாற்றுமாறு ஐ.நா வின் சிறுவர் காப்பகத்திற்கு (யுனிசெப்) சென்றபோது, மேற்படி கல்வி அதிகாரிகள் மாணவர்கள் சுயமாக முதலுதவிப் பயிற்சிக்கு சென்றுள்ளார்களென ஐ.நா அதிகாரரிகட்கு பொய்கூறி புலிகளை காப்பாற்றியதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் இலங்கை அரசினால் வழங்கப்படும் நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டுள்ளனர். பெற்றோர் இப்பணத்தை பெற்றுக்கொள்ள முனைந்தபோது, தமது போலிமுகத்திரை கிழியப்போகின்றது என அறிந்த புலிகள் பெற்றோர் நஷ்டஈடு பெறுவதனை தடுப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் புலிகளின் தடையை மீறி பெற்றோர் நஷ்டஈட்டு கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

இவ்விடத்தில் கவலைக்குரிய விடயம் யாதெனில் இலங்கை அரசாங்கம் இச்சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த தவறியுள்ளது. இறந்தவர்கள் அநாதைகள் என்று பிரச்சாரம் செய்யப்பட்டதன் பின்னணியையும் அதனால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தையும் கவனத்திலெடுத்து இழப்பிற்கான நஷ்டஈட்டை பெற்றுக்கொண்ட பெற்றோரை உலகிற்கு அறிமுகம் செய்துவைக்க தவறியுள்ளது. கடந்த அரசாங்கம் இவ்விடயத்தில் தவறுவிட்டிருந்தாலும் இப்போதிருக்கின்ற அரசாங்கமாவது எதிர்வரும் மனித உரிமைகளை அமர்விற்கு முன்னர் குறித்த மாணவர்களின் பெற்றோரை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து அவர்கள் எவ்வாறு புலிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உரத்துசொல்லவைக்க ஆவன செய்யவேண்டும்.

புலிகள் கொல்லப்பட்ட மாணவர்களின் படங்களை இலங்கையில் தமிழ் இனவழிப்பு எனப்பிரச்சாரம் செய்கின்றனர். இங்கு நான் கேட்கும் கேள்வியாதெனில் , இம்மாணவர்கள் கொல்லப்பட்டமை தமிழினவழிப்பாயின் அதற்கு பொறுப்பாளிகள் யார்? இலங்கை வான்படையினரா? இல்லை இம்மாணவர்களை பலவந்தமாக பிடித்துச் சென்று தாக்குதல்களிலிருந்து தப்பிக்கக்கூடிய எவ்வித முன்னேற்பாடுகளுமில்லாத காட்டுப்பகுதியில் அவர்களின் வாழ்வை அபாயத்திற்குள் தள்ளிய புலிகள் தமிழினவழிப்பாளிகளா?

குறித்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மாணவர்களின் பெயர்ப்பட்டியலும் ஜெனீவா ஐநா முன்றலில் காட்சிப்படுத்தப்படும் படங்கள் சிலவும் கீழே தரப்படுகின்றது.












The Name list of killed school girls at Sencholai.

School: Puthukkudiyiruppu Mahavidhyalayam

Thambirasa Lakiya DOB: 26-03-89, Mullivaikal west
Mahalingam Vensidiyoola DOB: 07-10-89, Mullivaikal west
Thuraisingam Sutharsini DOB: 28-07-89, Ward 10, PKT

School: Visuvamadu Mahavidhyalayam

Nagalingam Theepa DOB: 29-03-87, Puthadi, Visuvamadu
Thambirasa Theepa DOB: 07-02-87, Valluvarpuram, Redbarna
Thirunavukkarasu Niranjini DOB: 29-11-88, Puthadi, Visuvamadu
Raveenthirarasa Ramya DOB: 14-11-88, Thoddiyadi, V. madu
Kanapathipillai Nanthini DOB: 05-10-88, Koddiyadi, Visuvamadu
Vijayabavan Sinthuja DOB: 24-05-88, Koddiyadi, Visuvamadu
Naguleswaran Nishanthini DOB: 11-04-89, Thoddiyadi, V.madu
Tharmakulasingam Kemala DOB: 09-09-87, Kannakinagar,
Arulampalam Yasothini DBO: 18-01-88, Puththadi, Visuvamadu

School: Udayarkaddu Mahavidhyalayam

Muthaih Indra DOB: 08-08-88, Suthanthirapuram centre
Murugaiah Arulselvi DOB: 14-07-88, Suthanthirapuram centre
Sivamoorthy Karthikayini DOB: 13-02-88, Vallipunam
Santhanam Sathyakala DOB: 20-08-86, Vallipunam
Kanagalingam Nirupa DOB: 11-02-89, Visuvamadu
Kanagalingam Nirusa DOB: 11-02-89, Vallipunam
Navaratnam Santhakumari DOB: 28-05-88, Kaiveli
Nagalingam Kokila DOB: 12-02-87, Vallipunam
Sivamayajeyam Kokila DOB: Kuravil
Shanmugarasa Paventhini DOB:
Balakrishnan Mathani DOB: 09-05-88, Vallipunam

School: Mullaitivu Mahavidhyalayam


Sivanantham Thivya DOB: 30-05-88, Vannankulam
Thambirasa Suganthini DOB: 18-02-88, Alampil,
S Vathsalamary DOB: 20-11-86, Manatkudiyiruppu
Thanabalasingam Bakeerathy DOB: 03-02-87, Mullivaikal west
Thanikasalam Thanusa DOB: 02-12-87, Kallappadu
Pathmanathan Kalaipriya DOB: 23-09-88, Kovilkudiyiruppu
Markupillai Kelansuthayini DOB: 14-07-88, Vannankulam
Hamsana DOB: 29-05-87, Alampil

School: Kumulamunai Mahavidhyalayam

Vivekanantham Thadchayini DOB: 31-01-88, W 10, PTK
Santhakumar Sukirtha DOB: 08-08-87, Ward 7, Kumulamunai
Uthayakumaran Kousika DOB: 22-08-87, Kumulamunai
Nallapillai Ninthija DOB: 03-03-88, Ward 6, Kumulamunai
Veerasingam Rajitha DOB: 28-02-88, Ward 5, Kumulamunai

School: Vidhyananda College, Mulliyavalai

Thamilvasan Nivethika DOB: 02-12-88, Ward 2, Mulliyavalai
Suntharam Anoja DOB: 12-09-89, Kumulamunai
Puvanasekaram Puvaneswari DOB: 06-06-89, W 4, Mulliyavalai
Kiritharan Thayani DOB: 28-12-89, Thannerutru, Mulliyavalai

School: Chemmalai Mahavidhyalayam

Mahalingam Vasantharani DOB: 23-03-88, Alampil, Chemmalai
Thuraisingam Thisani DOB: 06-12-88, Alampil, Chemmalai
Vairavamoorthy Kirithika DOB: 12-07-87, Alampil, Chemmalai
Chandramohan Nivethika DOB: 04-01-89, Alampil, Chemmalai

School: Oddusuddan Mahavidhyalayam

Sellam Nirojini DOB: Koolamurippu, Oddusuddan

School: Muruhananda Mahavidhyalayam

Tharmarasa Brintha DOB: 06-01-89, 189/1 Visuvamadu
Thevarasa Sharmini DOB: 09-03-89, 90, Periyakulam, Kandavalai

School: Tharmapuram Mahavidhyalayam

Varatharaja Mangaleswari DOB: 24-07-89, 577, 13 U, T.puram
Rasenthiraselvam Mahilvathani DOB: 04-12-88, Tharmapuram
Nilayinar Nivakini DOB: 04-04-89, Kaddakkadu, Tharmapuram

School: Piramanthanaru Mahavidhyalayam

Kubenthiraselvam Lihitha DOB: 05-02-87, Kalaveddithidal, Puliyampokanai

Read more...

Friday, April 7, 2017

றிசாட் பதுயுதீனின் மக்கள் சந்திப்பை சாய்தமருதில் தடுத்து நிறுத்தினர் ஹக்கீமின் ஆதரவாளர்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு எதிராக பிரச்சாரத்தினை மேற்கொள்ளும் பொருட்டு ஹசன் அலி, அன்சில் போன்ற முஸ்லிம் காங்கிரசின் அதிருப்தியாளர்கள் சாய்ந்தமருதில் பொது கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்காக இடம் ஒன்றினை பெற்றுக்கொள்ள பல வாரங்களாக அலைந்து திரிந்ததனை காணக்கூடியதாக இருந்தது.

இந்த மு.கா. அதிருப்தி குழுவினருக்காக கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து கொடுப்பதில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சாய்ந்தமருது பிரமுகர்களே அதிகம் தீவிரமாக செயல்பட்டதனையும் காணக்கூடியதாக இருந்தது. கூட்டம் நடாத்துவதற்காக பொதுவான இடங்கள் பல தெரிவு செய்யப்பட்டிருந்தும் அதற்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எதிர்ப்பு தெரிவித்ததனால் அமைச்சர் ரிசாத்தின் சாய்ந்தமருது பிரமுகர் ஒருவர் பிரதேச செயலாளருடன் வாக்குவாதப்பட்டு தாங்கள் நீதி மன்றம் செல்லப்போவதாக எச்சரிக்கை விடுத்ததாகவும் அறியக்கிடைக்கின்றது.

இறுதியில் பாரிய இழுபறிக்கு மத்தியில், இன்று மாலை (07.04.2017) கூட்டம் நடாத்துவதற்காக சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தீவிர ஆதரவாளர் ஒருவருக்கு சொந்தமான இடம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு அதற்கான அனுமதியினை கோரியிருந்தபோது, அந்த பிரதேசத்தினை சுற்றியிருந்த பொது மக்கள் பாரிய எதிர்ப்பினை தெரிவித்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்கள்.

இந்த பொதுமக்களின் முறைப்பாட்டினை அடுத்து கூட்டம் நடாத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளார்கள். பின்பு நீதிமன்றம் சென்று அனுமதியினை பெற்றுக்கொள்ள முயற்சித்தும் அனைத்தும் தோல்வியிலேயே முடிவுற்றுள்ளது.

‘விழுந்தும் மீசையில் மண் படவில்லை’ என்பது போல, எவ்வளவுதான் முயற்சிகள் செய்தும் கூட்டம் நடாத்துவதற்கு சாய்ந்தமருதில் இடம் ஒன்று கிடைக்கவில்லை என்ற காரணத்தினை வெளியே சொல்லிக்கொள்ள வெட்கத்தினால், இறக்காமத்தில் ஏற்ப்பட்ட அசம்பாவிதத்தினை காரணமாக கூறி சாய்ந்தமருதில் கூட்டம் நடாத்துவதனை ஒத்திப்போட்டுள்ளதாக முடிவுரை எழுதியுள்ளார்கள்.

இதைவிட அதிகமானவர்கள் கிண்ணியாவில் டெங்கு காய்ச்சலினால் மரணித்தபோது நிந்தவூரிலும், பாலமுனையிலும், பொத்துவிலிலும் தொடர்ச்சியாக கூட்டம் நடாத்த முடியுமென்றால், இன்று கூட்டம் நடாத்துவதில் எந்த பிரச்சினையும் இல்லையே! இறக்காமத்தினை சாட்டாகவைத்து கூட்டத்தினை ஒத்திப் போட்டுள்ளதாக பொய் கூறுவது போன்றதுதான், ரவுப் ஹக்கீமுக்கு எதிரான இவர்களது பிரச்சாரமுமாகும்.

இங்கே முக்கிய விடயம் என்னவென்றால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பிழை செய்துள்ளதாகவும், அவரை திருத்திக்கொள்ளவுமே நாங்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரத்தினை மேற்கொள்வதாக கூறிக்கொள்ளும் இவர்களுக்கு, அமைச்சர் ரிசாத் பதியுதீனின் ஆதரவாளர்கள் ஏன் பின்னணியில் தீவிரமாக செயல்பட வேண்டும்? இதன் மூலம் அமைச்சர் ரிசாத் இவர்களுக்கு பின்னால் இருக்கின்றார் என்பது உறுதிப்படுத்த படுகின்றதல்லவா?

ரவுப் ஹக்கீமுக்கு எதிரான தங்களது விசம பிரச்சாரம் போதாது என்ற காரணத்தினால், முஸ்லிம் காங்கிரசில் உள்ளவர்களை பிரித்தெடுத்து அவர்கள் மூலமாகவே அவர்களது தலைவருக்கு எதிராக பிரச்சாரத்தினை மேற்கொள்ளும் போது அது முஸ்லிம் மக்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற புதிய அரசியல் தந்திரோபாயமே இதுவாகும்.

முகம்மத் இக்பால் - சாய்ந்தமருது

Read more...

இராஜபக்சாக்கள் செய்த அதே ஊழல் மோசடி ஆட்சியே நல்லாட்சி என்று சொல்லப்படும் ஆட்சியிலும் நடைபெறுகின்றது. விஜிதகேரத்

நாம் அதிகாரத்திற்கு வந்தால் ஜனாதிபதி அமைப்ப்பு முறையை இல்லாமல் செய்வோம், ஊழல் மோசடிக்கு எதிராக பாரபட்சம் அற்ற விசாரணை நடத்திதண்டனை வழங்குவோம் என மக்களுக்கு வாக்குறிதிகளை வழங்கி அதிகாரத்திற்கு வந்த மைத்திரி ரணில் அரசு இன்று இராஜபக்சாக்கள் செய்த அதே ஊழல் மோசடி ஆட்சியையே தொடர்ந்து செய்கின்றார்கள் அத்துடன் பழைய கள்வர்களுடன் ஒப்பந்தங்களையும் செய்து கொண்டுள்ளார்கள் என நீர்கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் ஜேவிபி யின் பாராளுமன்ற உறுப்பினர் விஜிதகேரத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடந்து உரையாற்றிய அவர் பேசுகையில் , தனி தனி கட்சி அதிகாரத்திற்காக இவர்களுக்கு இடையே பனி போரும் இடம் பெற்று வருகின்றது ஏற்றுமதி இறக்குமதி வருமான நிலைக்கு இடையே பாரிய இடை வெளி காணப்படுகின்றது. உதாரணமாக பெரும் கடல் வளத்தை கொண்டுள்ள எமது நாட்டில் சென்ற ஆண்டு மொத்த கடல் உற்பத்தி பொருட்களின் இறக்குமதி 1 லட்சத்து 15000 தொன் ஆகும். அதேவேளை உள்நாட்டு உற்பத்தி 26000 தொன் ஆகும். இதே மாதிரியே மற்றைய துறைகளிலும் இடம் பெறுகின்றது.

வெளி நாட்டு முதலீடுகள் வரும் 10 லடசம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்றார்கள் அதுவும் இந்த நாட்டில் காணப்படும் ஊழல் மோசடி அரசியல் ஸ்திரதன்மை, லஞ்சம், ஒழுங்கான உட்கட்டமைப்பு வசதி இன்மை போன்றகாரணதால் வியட்னாம் மலேசிய போன்ற நாடுகளை நோக்கி நகருகின்றன.

காதலர்களுக்கு இலகுவாக காதல் செய்வதற்கு கார் வாங்கலாம் என்றார்கள். ஆனால் நடந்தது என்ன வைத்திருந்த போனில் S.M.S அனுப்பக் கூட முடியாமல் 49% வரியை அதிகரித்துள்ளார்கள்:

எனவே இவர்களின் ஆட்சி வரி வட்டி தண்டப்பணம் அதிகரிப்பு, மானிய குறைப்பு, தேசிய வளங்களை விற்பனை செய்தல் போன்ற அபிவிருத்திக்கு எவ்வகையிலும் உதாவாத முறைமையிலேயே இடம் பெறுகின்றது. நாம் கேட்கிறோம்? இவர்களின் பின்னால் சென்று நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்ல போகிறீர்களா? அல்லது எம்முடன் இணைந்து உங்கள் எதிகால வாழ்வை வழம்படுத்தப் போகிறீகளா?

ஜனவரி 8 ன் பின் நாம் சில நன்மைகளை அடைந்து உள்ளோம் இதை பின்நோக்கி செல்ல விடாது, இராஜபக்சாக்களின் இருண்டயுகத்திற்கு மீண்டும் செல்லவிடாது தடுத்து; உற்பத்தி பொருளாதார முறைமையை அடிப்படையாக கொண்டு முன் நோக்கி நகர்வோம். இன மத மொழி கட்சி பேதங்களை மற்ந்து எங்கள் பின்னால் அணிதிரளுங்கள் என்றார்.

முழுப் பேச்சு




Read more...

Thursday, April 6, 2017

நாங்கள் பிறேமதாஸவிடம் ஆயுதங்களைப் பெற்றுத்தான் இந்திய இராணுவத்துடன் போர் புரிந்தோம். புலிகளின் முன்னாள் தளபதி

பிரேமதாச வழங்கிய 1000 துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு கிழக்கிற்கு செல்லுமாறு பிரபாகரன் பணித்தார் : கருணா

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஆயுதங்களை வழங்கியதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில் ....

பிரேமதாச அந்தக் காலத்தில் இராணுவத்தை அதிகளவில் நம்பவில்லை. மாறாக அவர் விசேட அதிரடிப்படையினர் மீதே அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். பிரேமதாசவிற்கு விசேட அதிரடிப்படையினரே பாதுகாப்பினை வழங்கியிருந்தனர்.

புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கிய விவகாரம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரட்ன உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது.

எமக்கு ஆயுதங்களை வழங்கத் தீர்மானித்த போதும் பிரேமதாச இராணுவத்தினர் ஊடாக ஆயுதங்களை வழங்கவில்லை. அவர் விசேட அதிரடிப்படையினரைக் கொண்டே ஆயுதங்களை வழங்கியிருந்தார்.

விசேட அதிரடிப்படையினர் வழங்கிய ஆயுதங்களை சென்று நானே பொறுப்பேற்றுக்கொண்டேன். பெரிய ட்ரக் வண்டியொன்றில் கொண்டு வரப்பட்ட ஆயுதங்களை மணலாறு பகுதியில் வைத்து நான் பொறுப்பேற்றுக் கொண்டு தோள்களில் சுமந்து சென்றோம்.

சுமார் 5000 துப்பாக்கிகளும், ரவைகள், தோட்டாக்கள், ஆர்.பீ.ஜீக்கள், கைக்குண்டுகள் உள்ளிட்டன காணப்பட்டன. ஐயாயிரம் துப்பாக்கிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அப்போது எமது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை (300) வெகு குறைவாக காணப்பட்டது.

ஆயுதங்கள் மட்டுமன்றி பிரேமதாச எமக்கு பெருந்தொகைப் பணத்தையும் வழங்கியிருந்தார். எவ்வளவு பணம் வழங்கினார் என்பது எனக்கு நினைவில்லை.

இந்த ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு புலிகளின் தரப்பில் அன்ரன் பாலசிங்கமே தலையீடு செய்திருந்தார். இந்திய அமைதி காக்கும் படையினரை விரட்டியடிப்பதில் பிரேமதாச தீவிர முனைப்பு காட்டி வந்தார்.
இந்திய அமைதி காக்கும் படையினர் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால் படையினருடன் இணைந்து நாமும் தாக்குதல் நடத்துவோம் என்பதனை புரிந்து கொண்டனர்.

பிரேமதாசவின் திட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் இந்தியாவும் ஓர் திட்டத்தை வகுத்திருந்தது. தமிழ்த் தேசிய இராணுவம் அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பினை உருவாக்கி அரசியல் மற்றும் ஆயுத சக்திகளாக அதனை இந்தியா வளர்த்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களை விடவும் அதிகளவான ஆயுதங்களை இந்தியா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியிருந்தது.

இலங்கையில் பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட்டது. இந்தியா இந்த சம்பளத்தை வழங்கியது. வரதராஜ பெருமாள் வடக்கு கிழக்கு முதலமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இவ்வாறு சம்பளம் வழங்கப்பட்டது.

இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டு வெளியேறிய போது தாம் இருந்த அனைத்து இடங்களிலும் தமிழ்த் தேசியக் இராணுவத்தை நிலைநிறுத்தி விட்டே சென்றிருந்தனர்.

தமிழ்த் தேசியக் இராணுவம் அப்போது இயங்கிய பல்வேறு அமைப்புக்களை ஒன்றிணைத்திருந்தது. இதனால் அதன் ஆள் பலம் சுமார் 5000 மாக உயர்வடைந்திருந்தது.

1988ம் ஆண்டில் திருக்கோயில் பிரதேசத்தில் எமக்கும் தமிழ்த் தேசிய இராணுவத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. தமிழ் சகோதரர்களே இரண்டாக பிளவடைந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த மோதலின் போது உயிரிழந்தவர்களை எண்ணிய போது தமிழ்த் தேசிய இராணுவத்தின் 500க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்ததனை கண்டு கொண்டேன். தமிழ்த் தேசிய இராணுவத்தின் இளைஞர்கள் எம்முடன் இணைந்து கொண்டனர்.

தமிழ்த் தேசிய இராணுவத்தைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், எமது தரப்பில் மிகவும் சொற்பளவு உயிர்ச் சேதங்களே பதிவாகியிருந்தன.

இந்த மோதல்களின் போது நாம் 10000 அயுதங்களை மீட்டிருந்தோம். மாவிலாறு பகுதியிலிருந்த பிரபாகரனுக்கு நான் ஆயுதங்களை அனுப்பி வைத்தேன்.

கரடினாறு பிரதேசத்தில் தமிழ்த் தேசிய இராணுவம் மீது நாம் தொடர் தாக்குதல்களை நடத்தியிருந்தோம், சுமார் எட்டு நாட்கள் சமர் நீடித்தது. நாம் முன்னால் தாக்குதல்களை நடத்திச் சென்ற போது இராணுவப் படையினர் பின்னிருந்து எமக்கு உதவிகளை வழங்கியிருந்தனர்.

எமக்கு துப்பாக்கி தோட்டாக்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்ட போது கமால் குணரட்ன உள்ளிட்டவர்கள் எமக்கு தோட்டாக்களை வழங்கியிருந்தனர்.

புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நட்புறவு காணப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், இரு தரப்பிற்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் காணப்பட்டன.

1987ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தையும், தபால் நிலையத்தையும் எரித்து படையினருக்கு சவால் விடுத்திருந்தனர்.

“இவை தமிழ் மக்கள் கஸ்டப்பட்டு உருவாக்கியவை. இவை அனைத்தும் எமது. இல்லையெனில் அவை யாருக்கும் கிடைக்கக்கூடாது. நாம் வீரசிங்கம் அரங்கையும், தபால் நிலையத்தையும் தீக்கிரையாக்குகின்றோம் முடிந்தால் தடுக்கவும்” என புலிகளின் தலைவர்களில் ஒருவரான ரஹீம் சுபாஸ் ஹோட்டல் தொலைபேசியலிருந்து யாழ்ப்பாண முகாம் ஒன்றுக்கு அழைப்பினை ஏற்படுத்தி கூறியிருந்தார்.

உடனடியாக செயற்பட்ட படையினர் தீயை தடுக்க முயற்சித்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என கருணா நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Read more...

யுத்தக் குற்றங்கள் குறித்து உரத்துத் தொனிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது பரம்பரைக் குற்றங்கள் குறித்தும் பொது மன்னிப்புக் கேட்கவேண்டும்! : யோகா – ராஜன்

குறிப்பாக இக்கட்டுரையில், ஐ. நா. வின் நடைமுறை குறித்தும், சர்வதேச அரசியல் நுணுக்கங்களை புரிந்துகொண்ட வகையிலும் சுமந்திரனால் முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் (சாணக்கியம்) ராஜதந்திரம் குறித்து ஆழமான அழுத்தத்தை பிரயோகிக்க முனைகிறோம். அதேவேளை மொப்பிங் முறையிலான பேச்சுக்கள் மற்றும் அறிக்கைகள் மூலம், சுமந்திரனின் கருத்துக்ளை முறியடிக்க முனையும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரின் அப்பட்டமான அரசியல் பொறுக்கித்தனத்தை வெளிப்படுத்துவதும், அம்பலப்படுத்துவதுமே இங்கு எமது பிரதான நோக்கம் ஆகும்!

தமிழரசுக்கட்சி மற்றும் தமிழர் கூட்டமைப்பின் மிதவாத நடவடிக்கைகளுக்கேற்ற இளையவராக சுமந்திரனை கொண்டுவந்தார் சம்மந்தன். மாவை சேனாதிராசாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சியின் ஏனையவர்களின் மௌனம்; சம்மதத்தின் அறிகுறியாயின.

இன்று கட்சியின் தலைவர் சம்மந்தன் கூட சுமந்திரனின் ஆலோசனைக்குட்பட்டுத்தான் தமது நகர்வுகளை மேற்கொள்கிறார் என்றால் மிகையாகாது. சுமந்திரனின் திறன் மீது அவ்வளவுக்கு நம்பிக்கையுடையவராக இருக்கிறார் சம்மந்தன்.

சர்வதேச மற்றும் ஐ.நா நடைமுறைகளைப் புரிந்துகொண்ட முறையிலமைந்த, சுமந்திரனின் ராஜதந்திர முறைமைகளை கொச்சைப்படுத்தும் விதமாக மொப்பிங் செய்து வருவதன் மூலம், தமிழ் அரசியலில் தமக்கான இடத்தை தக்கவைத்துவிட நினைக்கின்றனர் புலம் பெயர்ந்த தமிழர் கூட்டமும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் வகையறாக்களும்!

புலம்பெயர்ந்த தமிழரை தமது கட்டுக்குள் வைத்திருந்த புலிகள், கோப்பை கழுவியும், கக்கூசைத் தேய்த்தும் கஷ்டப்பட்டு உழைத்த மக்களிடம் வரி, வங்கிக் கடன், கப்பம், நகை நட்டு என்று பணத்தை வசூலித்ததை உலகறியும். அதே புலிகள், 2009ல் யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து, தமது சூட்கேசுகளை நிரப்பிக்கொண்டு, கடை கண்ணியென்று பல்வேறு தொழில்களில் முதலீடுகளைக் குவித்துக்கொண்டு வசதியான சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இப்புலிகள், மீண்டும் தமிழர் மீது மேலாண்மை செலுத்த முயற்சிக்கின்றனர். தமிழரின் பணத்தைக் கொள்ளையடித்த இக் கூட்டம் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதை நோக்காகக் கொண்டு!

சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்படி விவகாரங்களில் சுமந்திரனுக்கு எதிர் முனையில் நின்றுகொண்டு கஜேந்திரகுமாருக்குச் சமனாக தமிழ் மக்கள்மீது அதிகாரத்தைச் செலுத்த முனையும் இன்னொரு நபர்!
இலங்கையில் இந்திய இராணுவம் அட்டகாசம் புரிந்த காலத்தில், புலிகள் மீதும் மக்கள் மீதும் படு கொலைகளை நடாத்திய மண்டையன் குழுவுக்கு பொறுப்பாக இருந்தவர் என்று இன்றும் பேசப்படுபவர். தாம் மேற்கொண்ட குற்றங்களுக்காக வருத்தத்தை தெரிவிக்காத இவரெல்லாம் மீண்டும் அதிகாரத்துக்கு வர முனைவதில் என்ன நியாயம் இருக்கிறது?

மற்றவர் முதலமைச்சர் விக்கினேஸ்வரன்.  முன்னாள் பிரதம நீதிபதி, இன்னாள் முதலமைச்சர் அரசியலை கற்பதற்கு ஆரம்பித்திருப்பவர், 30 ஆண்டுகால தமிழர் போராட்ட அரசியல் நடவடிக்கைகள் சார்ந்து எந்தவொரு உழைப்பையும் செலுத்தாதவர், கல்வி மற்றும் சாதிய பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்டு பதவிக்கு வந்தவர்…

முதலமைச்சர் பதவி என்பது நிர்வாகப்பொறுப்பு மிக்க பதவி. அதாவது எக்சிகுயூரிவ் போஸ்ற் (Executive Post) முன்னாள் பிரதம நீதிபதியாக கடமையாற்றியவர் என்ற வகையில் நடுநிலை தவறாத சிறந்த நிர்வாகியாகத் தொழிற்படுவார், மாகாணத்தை வளப்படுத்துவார் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர்நிர்வாகத்திறனில் தமது இயலாமையை மறைக்கும் பொருட்டு, மற்றவர் மீது பழிகளைச் சுமத்துவது மட்டுமின்றி, தமிழ் அரசியலின் தொங்கு தசையாகவும் தூங்கிக்கொண்டிருக்கின்றார்.

அதிஷ்டவசமாகக் கிடைத்த அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைக்கும் முனைப்பில் புலம்பெயர் தமிழரின் புனைவுகளுக்குப் பின்னால் கஜேந்திரகுமாரின் வாலில் தொக்கியபடி தனது அரசியலை நகர்த்தி வருகிறார்.
யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்  இன்று   விடலைகளாகத் தோற்றமளிக்கும் இவர்கள், 2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த வேளை பால்முகம் கூட மாறாத சிறிசுகளாக இருந்திருப்பர். அப்படியிருக்க… சுமந்திரன் மீது மேலும் அதூறுகளைப் பொழியும்பொருட்டும், அவரது கருத்துகளுக்கு எதிராகவும், வீராவேசப் பேச்சுக்களைக் கக்கித் தள்ளும் வகையிலும் அம் மாணவக் குஞ்சுகளை முடுக்கிவிட்டிருக்கிறது, சாயிற பக்கம் சாயிற செம்மறி ஆடுகளைப்போல  “அறிவை வளத்து”  வைத்திருக்கின்ற அக் கல்லூரி ஆசிரியர் கூட்டம்!

1970களில் „ஆண்டபரம்பரை மீண்டும் ஆள்வதில் என்ன தவறு  என்று கேட்டு  ”மரம் பழுத்தால் வெளவால் வரும், பாதுகாப்புத் தரும்“ என்று வீராவேசமாகப் பேசி, வாலிபங்களை உசுப்பேத்திவிட்ட காசிஆனந்தன், வண்ணை ஆனந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா வகையறாக்கள், இன்றும் உயிருடன்தான் இருக்கின்றனர்!

அதுவும் மனைவி பிள்ளைகளுடன் சுகமாக வாழ்ந்துகொணடு! போர்க்களத்தில் இவர்கள் தமது விரல் நுனியைத்தன்னும் பதித்திருப்பார்களா?

ஆனால் இவர்களது உணர்ச்சிவயப்பட்ட பேச்சைக்கேட்டு ஆயுதத்தைக் காவிக்கொண்டு புறப்பட்ட பிரபாகரன்…? கைகளைத் தூக்கிக்கொண்டு அபத்தமான முறையில் ஆமிக்காரனிடம் சரணடைந்த, ஆண்டு 2009ன் நிலைமை மீண்டுமொரு முறை தமிழனுக்கு வேண்டுமா?

உண்மையான விடுதலை உணர்வோடு இண்டைக்கு பிரபாகரன் எழுந்துவரும் நிலையேற்பட்டால், கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன், இந்துக் கல்லூரி ஆசிரியர் கூட்டம் மற்றும் புலம்பெயர்ந்த புலிக்கூட்டத்தையும் நோக்கித்தான் பிரபாகரனது முதல் வெடி பாயும்!

வேண்டாம்.  இத்தகைய ஒரு சூழல் தமிழனுக்கு மீண்டுமொருமுறை வந்தவிடக்கூடாது என்பதில்தானே மிக எச்சரிக்கையாக இருக்கிறார் சுமந்திரன். அதேவேளை அவருக்கும் எல்லைகள் உண்டு என்பதையும் தமிழ்ச் சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.

சர்வதேசத் தரப்பிலும் பரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நபர் சுமந்திரன். சர்வதேசம் ரணில், மைத்திரி அரசுக்கு கால அவகாசம் வழங்கியிருந்த நிலையில் அதனை கூர்மையாகப் புரிந்துகொண்டு, தனது நிலைப்பாட்டை நகர்த்திக்கொண்டவர். சர்வதேசப் பரப்பில் அவர்களுடைய தரத்திற்குச் சமனாக பேச்சுக் கொடுக்கக் கூடிய நபராகவும் அவர் இருக்கின்றார் என்பதை நேர்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதுதான் அரசியல் நேர்மையும் கூட. அத்தகைய ஒருவர் மீது, அவதூறுகளைப் பொழிவதென்பது, கடைந்தெடுத்த கடைநிலை அரசியல் வழிமுறை.

பொன்னம்பலம் கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் வகையறாக்கள் சுமந்திரன் மீது மொப்பிங் செய்வதற்கான காரணம் வேறொன்றுமில்லை. “எப்போ அண்ணன் சாவான்? திண்ணை காலியாகும்” என்ற மன நிலைதான். அதன்பொருட்டு அதற்கான கொலை முயற்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன.

பாரிய போராட்டங்களுக்கு மத்தியிலும் மிதவாதத் தலைமைகளுக்கென்று ஓர் இடமிருப்பது இயல்பு. சிறந்த உதாரணம் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம். ஆரம்பத்தில் ஆயுதப் போராட்டப் பாதையில் பயணித்தவர்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் ஜசீர் அரபாத். (தென் ஆபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவையும் இவ் வரிசையில் இணைத்துக்கொள்ளலாம்) பின், காலப்போக்கில் மிதவாத அரசியலுக்குள் நுழைந்த இவருக்கென்று பாலஸ்தீன விடுதலைப் போராட்ட வரலர்ற்றில் தனியிடமும், மதிப்பும் இருப்பதை அறிவோம்.

அவரின் இறுதிக்காலம் வரை ஹமாஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் கூட அவரை போட்டுத்தள்ளுவதற்கு எண்ணியதில்லை. அதிஷ்டசாலிகள் பாலஸ்தீன மக்கள். அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம் போன்றவர்களின் நிலை அவருக்கு ஏற்பட்டதில்லை. (அரபாத் போன்ற பொறுப்புமிக்க தலைவராக அமிர்தலிங்கம் இருந்தாரா என்பதை (அரசியற் தவறுகளை) ஆய்வதற்கான தருணம் இதுவல்ல.)

ஆனால் இன்னும் பாடங் கற்றுகொள்ளாத தமிழர் சமூகம், மீண்டுமொரு மிதவாத அரசியல் வழிகாட்டியை தமது கொலைவெறிக்கு உட்படுத்த எத்தனித்திருக்கிறது. சுமந்திரன் மீதான கொலை முயற்சி தடுக்கப்பட்டதன் மூலம், தமிழர் மத்தியில் இடம்பெறக்கூடிய எத்தனையோ அழிவுகள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.

புலம் பெயர்ந்த தமிழ் மக்கள், புலம்பெயர்ந்து வாழும் புலிக்கூட்டத்தின் அவஸ்த்தைக்கு ஆளாகும் நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களும், ஒட்டுமொத்த புலம்பெயர்ந்த தமிழருக்குப் பின்னால் இழுபடும் அவலநிலை இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது. அவ்வகையில் இக் கொலை முயற்சியைத் தடுக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டிருந்த தனிநபர், பொலீசார் மற்றும் அனைவர்க்கும் ஒட்டுமொத்த தமிழர்களினதும் நன்றிகள் உரித்தாகட்டும்!

உண்மையில் புலம்பெயர்ந்த தமிழரின் தீவிரவாதக் கருத்துக்களுக்கு செவிசாய்ப்பது போல் நடிப்பவர்தான் கஜேந்திரகுமார். ஆனால் இவரது பேரன் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் அடியொற்றி நோக்குவோமானால், தமிழ் மக்கள்மீது தனது அதிகாரத்தை நிறுவும்பொருட்டு எந்தவொரு எல்லைக்கும் செல்லக்கூடியவர் இவர் என்பதை அறியமுடியும். அவ்வகையில்தான், இன்றைய இவரது வழிநடத்தல் இளைஞர் பரம்பரையை மீண்டுமொருமுறை ஆயுதமேந்த வைப்பதாக நகர்கிறது. இப்போக்கு இன்னுமொருமுறை எமது மக்களை அழிவுக் குழியில் வீழ்த்திவிடும். இத்தருணத்தில், வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாகத்தான் அமிர்தலிங்கத்தின் வாழ்வு முடிவுக்கு வந்ததை கஜேந்திரகுமார் எண்ணிப்பார்ப்பது சிறப்பு!

ஐ.நா. வின் நடைமுறை குறித்து கஜேந்திரகுமார் ஒன்றும் அறியாதவரல்லர். இருந்தும் சுமந்திரனுக்கு எதிராக எதிர் வாதம் புரியும் சுரேஸ் பிரேமச்சந்திரன், விக்கினேஸ்வரன் வகையறாக்களையும் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் கூட்டத்தையும் ஒருங்கமைத்துக்கொண்டு, தமிழ்மக்கள் மீது முழு அதிகாரம் செலுத்துவதுதான் பொனம்பலம் கஜேந்திரகுமாரின் அப்பட்டமான உள்நோக்கம். இது இன்று நேற்று உருவான ஒன்றல்ல. இவரது பரம்பரை இலக்கு இது. பேரன் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் மிச்சமாகத் தொடருகின்ற அதிகார வெறி!

ஆழ்ந்து நோக்கின் மக்கள்மீது அதிகாரம் செலுத்துவதற்கு எந்தவித அடிப்படைத் தகுதியும் அற்றவர் கஜேந்திரகுமார்!

பேரன் பொன்னம்பலம் அப்பாவி வழக்காளிகளை சுரண்டிக் குவித்த பரம்பரைச் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பவர் கஜேந்திரகுமார். அப்பணத்தில் இருந்து, காலிழந்து, கையிழந்து அவதிப்படும் வன்னி மக்களினதும், முன்னாள் போராளிகளினதும் வாழ்வாதாரத்தை சரிசெய்யும்பொருட்டு ஐந்து சதத்தைத் தன்னும் கொடுத்திருப்பாரா பொன்னம்பலம் கஜேந்திரகுமார்?

”தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்”  அரசியல் நடவடிக்கைகள் பலவும், புலம்பெயர்ந்த புலிகளின் பணத்தில்தான் நிகழ்வதாக அறியக்கூடியதாக இருக்கிறது. இப்போக்கு உண்மையாக இருந்தால் உங்களைப் போன்ற பணமுதலைகள் கோப்பை கழுவி கஸ்ரப்பட்டு உழைக்கின்ற மக்களின் பணத்தை அபகரிப்பதென்பது எவ்வளவு அபத்தம்!

இன்றைய உலகில், பரம்பரை ரீதியான, பழைய, பழைய தவறுகளையும், குற்றங்களையும் ஏற்றுக்கொண்டு, அவற்றிற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் சர்வதேச அரசியல்வாதிகள். ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவரது பேரனார் ஜீ.ஜீ. பென்னம்பலம் செய்த வரலாற்றுத் தவறுகள், குற்றங்கள் குறித்து இதுவரை எங்கேயாவது பிரஸ்தாபித்தது கிடையாது.

1945ல் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பாக சோல்பரிக் கமிஷனுக்கென்று ஆங்கிலேயருடன் இணைந்து தயாரிக்கப்பட்ட அறிக்கையை, சோல்பரி அரசியல் சாசனத்தில் இடம்பெறவிடாது தடுத்ததன் மூலம், அம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை தடுத்து நிறுத்தியவர் இவரது பேரனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம்  அது மட்டுமல்ல, 1948ல் யூஎன்பி அரசுடன் இணைந்து 10 இலட்சம் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமையைப் பறித்ததன் மூலம், அவர்களுக்கான வாக்குரிமையையும் இல்லாமல் செய்வதற்கு கால்கோலாக இருந்தவர்தான் இவரது பேரனார் ஜீ.ஜீ. பொன்னம்பலம்!

இவ்விதங்களில் தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குத் தடையாக இருந்து, மாபெரும் வரலாற்றுக் குற்றங்களை வரைந்து சென்றவர்தான் பேரனார் ஜீ.ஜீ. இன்று அதே தமிழ் இனத்தின் தலைவனாக வலம் வர எண்ணுகிறார் கஜேந்திரகுமார். பரம்பரை வழியில் மக்கள்மீது அதிகாரம் செலுத்திவிடலாம் என்ற துடிப்புடன்!

இலங்கை அரசின் மீது யுத்தக் குற்றம், இன அழிப்பு, மனித உரிமை மீறல் என்று குற்றங்களை சுமத்தி, ஜெனிவா வரை வந்து நீதி கோரும் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரிடம் நாம் கேட்பது, (1945ல் சோல்பரி அரசியல் சாசனத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் அறிக்கையை பதியவிடாது தடுத்தது மற்றும் 1948ல் மலையகத்தமிழரின் பிரஜாவுரிமையைப் பறித்தது உள்ளிட்ட) மேற்படி உங்கள் பரம்பரை விட்டுச் சென்ற குற்றங்களுக்காக யாரிடம் பாவ மன்னிப்புக் கேட்கப்போகிறீர்கள்?

அறிவோடு இருந்துகொண்டு தவறிழைத்தவர்கள் நீவிர்! அதிகாரத்திலும் இருந்துகொண்டு மாபெரும் குற்றங்களை புரிந்த பரம்பரையின் வரிசு நீங்கள்! அரசியலுக்கு வருவதற்கு முன்பே மக்களிடம் பொது மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும்!

உங்கள் பேரனாரின் சொத்துக்களில் சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டு, அவரது புகழுக்கும் பேருக்கும் (பொன்னம்பலம் கஜேந்திரகுமார்) அதிபதியாக விளங்கும் நீங்கள், இனிமேலாவது உங்கள் பேரனின் சகல விதமான குற்றங்களுக்கும் தார்மீகப் பொறுப்புடைய நபராக உங்களைப் பிரகடனப்படுத்திக்கொண்டு, அடிப்படை மனித அறத்தின் பிரகாரம் ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் பொது மன்னிப்புக் கேட்பதே சிறப்பு!

நன்றி தேசம்நெற்

Read more...

Wednesday, April 5, 2017

நேற்றைய அதிர்வு நிகழ்ச்சியில் வெளிச்சத்துக்கு வந்த சில வில்பத்து நாடகம். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது

நேற்றைய அதிர்வு நிகழ்ச்சியில் வில்பத்து விவகாரம் சம்பந்தமாக எமது முஸ்லிம் மக்களுக்கான பல படிப்பினைகளையும், உண்மைகளையும் அறியக்கூடியதாக் இருந்தது. வில்பத்து பிரச்சினை எப்போது ஆரம்பமானதோ அன்றிலிருந்து ஊடகங்களில் ஒன்றுக்கொன்று முரணான பல செய்திகளை கண்டிருக்கின்றோம். இப்பிரச்சினையில் அதனுடன் சம்பத்தப்பட்ட பிரதேசத்தின் அமைச்சரான ரிசாத் பதியுதீன் அவர்கள் தமிழ் ஊடகங்களில் மட்டும் வில்பத்து பற்றி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான அறிக்கைகளையும், போராட்டங்களையும் நடாத்தி வந்தார் என்று அறிந்துள்ளோம்.

அதாவது ஜனாதிபதியுடன் சீறிப்பாய்ந்தார், பைல்களை தூக்கி வீசினார், ஜனாதிபதியுடன் வாக்குவாதப்பட்டார், புயலானார், போராட்டம் நடாத்தினார், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போனார் என்றெல்லாம் தமிழ் ஊடகங்கள் மூலமாக பல புனையப்பட்ட கதைகள் எல்லாம் கேள்வியுற்றோம். ஆனால் இந்த கதைகள் எல்லாம் கட்டுக்கதைகள் என்பது நேற்றைய அதிர்வு மூலம் அறிந்திருந்தும் நாங்கள் அதிர்ந்துபோகவில்லை.
அதாவது வில்பத்து விவகாரம் சம்பந்தமாக இதுவரையில் ஜனாதிபதியுடன் பேசியதுமில்லை, அங்கு முஸ்லிம் மக்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான ஆதாரபூர்வமான ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவுமில்லை. மாறாக அனைத்து போராட்டங்களும், அறிக்கைகளும் தமிழ் ஊடகங்களில் மட்டுமே, என்பதுதான் அந்த அதிர்ச்சிதராத விடயமாகும். இதனை ஜனாதிதியின் செயலாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியதாக ஆதாரபூர்வமாக வை.எல்.எஸ் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதியுடன் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து அங்கு முஸ்லிம் மக்கள் வாழ்ந்தார்கள் என்ற உண்மை நிலவரத்தினை விளக்கி பேச்சுவார்த்தை நடாத்தியிருந்தால், முசலி பிரதேசத்தில் உள்ள எந்தவொரு நிலங்களும் அரச காணிகளாக வர்த்தமானி அறிவிப்பு செய்யப்பட்டிருக்க மாட்டாது என்ற உண்மையை ஜனாதிபதியின் செயலாளர் கூறியதாக வை.எல்.எஸ் அங்கு குறிப்பிட்டிருந்தார்.

ஒவ்வொரு தேர்தல்கள் நெருங்கும்போது வில்பத்து விவகாரத்தை தேர்தலுக்கான ஓர் வியாபாரப் பண்டமாக பாவிக்கப்படுகின்றது என்று கடந்த காலங்களில் பல கட்டுரைகளை எழுதி இருந்தேன். ஆனால் இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களது விசுவாசத்தினை அமைச்சருக்கு காண்பிக்கும் பொருட்டு என்னை விமர்சிப்பதிலேயே அமைச்சர் ரிசாத்தின் முகநூல் எழுத்தாளர்கள் கவனத்தினை செலுத்தினார்கள்.
அத்துடன் அங்கு இருக்கின்ற அரச காணிகளை ஒரு அமைச்சர் தனக்கு சொந்தமாக்கிக் கொண்டதனால், மீதமாக இருக்கின்ற அரச நிலங்களை பாதுகாக்கும் பொருட்டே ஜனாதிதி அவர்கள் வர்த்தமானி அறிவித்தல் வழங்கியுள்ளார் என்ற உண்மையினை வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்கள் வெளிப்படுத்தினார்.

மேலும், வில்பத்து பிரச்சினை சம்பந்தமாக கடந்த தேர்தல்களின்போது ஏன் அமைச்சர் ரிசாத்தினால் தேர்தல் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும், அப்படி ஒப்பந்தம் செய்திருந்தால் அதனை காண்பிக்குமாறும் வை.எல்.எஸ் அவர்கள் கேள்வி எழுபியபோது, அதற்கு விடை வழங்கத் தெரியாமல், வட்சப் மூலமாக அனுப்பப்பட்ட இரண்டு கையொப்பங்கள் மட்டும் போன் (phone) மூலமாக காண்பிக்கப்பட்டது.
ஆனால் அந்த கையொப்பம் எதற்குரியது என்றும், அந்த கையொப்பத்துக்கான கடித தலைப்பினை காண்பிக்குமாறும் வை.எல்.எஸ் மீண்டும் கோரியபோது அமைச்சர் ரிசாத்தின் பிரதிநிதியாக வருகைதந்திருந்த சட்டத்தரணி ருஸ்தி அவர்களுக்கு குளிரூட்டிய அறைக்குள் வியர்வை வெளியானதுடன் தடுமாரியதனை காணக்கூடியதாக இருந்தது.

எது எப்படி இருப்பினும் வில்பத்து விவகாரம் என்பது அரசியல் தேவைக்காக தெற்கில் உள்ள இனவாதிகளை தூண்டிவிட்டு அரசியல் குளிர்காய முற்ப்பட்ட ஒரு நாடகமாகும். இந்த வில்பத்து பிரச்சினை சம்பந்தமாக முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி என்ற அடிப்படையில் இன்று தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழு உரிய ஆவணங்களுடன் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்துகின்றார்கள்.

எனவே போலிகளும், பொய்களும் அழிந்து உண்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்க வேண்டும் என்றும் அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக.

Read more...

விக்கியின் தலைமையில் அழிக்கப்படும் யாழ்ப்பாணம்: மல்லாகம் நீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து..

வட மாகாண சபையின் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும், சாமி வேடம் போடும் அதன் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இணைந்து நடத்திய அழிப்பு நாடகத்திற்கு எதிராக மல்லாகம் நீதி மன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. மலேசிய பல்தேசிய வியாபார நிறுவனத்தின் இலங்கைக் கிளையான எம்.டி.ரி வோக்கஸ், நோதேர்ண் பவர் என்ற வியாபாரப் பெயரில் சுன்னாகம் பகுதியில் நடத்திய மின் உற்பதியின் போது வெளியேற்றப்பட்ட கிறீஸ் மற்றும் அதிபார டீசல் கழிவுகளை மக்கள் குடியிருப்புக்களில் வெளியேற்றி இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் பாவனைக்கு உட்படுத்தும் நீரை நாசப்படுத்திமை தெரிந்ததே.

இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சுன்னாகம் பகுதியைச் சூழ வரவுள்ள நிலத்தடி நீரை நஞ்சாக்கியமையைப் பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டு, அதற்குக் காரணமாகவிருந்த நிறுவனம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன் பின்னர் சுன்னாகம் பகுதியிலிருந்து பாதிக்கப்பட்டதாகக் கருதப்ப்பட்ட சுற்றாடலில் வாழ்ந்த மக்களுக்கு குடி நீர் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், வட மகாண சபையின் சாமி முதலமைச்சர் விக்னேஸ்வரனும் அவரது நெருங்கிய சகாவும் விவசாய அமைச்சருமான ஐங்கரநேசனும் போலி நிபுணர் குழு ஒன்றை அமைத்து சுன்னாகம் பகுதியில் எண்ணைக் கழிவுகளால் நீர் மாசடையவில்லை என்றும் அங்கு மலக் கழிவுகளே மாசடைதலுக்குக் காரணம் என்றும் அறிக்கை வெளியிட்டனர். இதனால் குற்றவாளியான நிறுவனம் காப்பாற்றப்பட்டமை அனைவரும் அறிந்ததே.

இது தொடர்பாக மல்லாகம் நீதி மன்றம் துணிச்சலுடன் செயற்பட்டு, பல தடவைகள், ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிரான காத்திரமான தீர்புக்களை வழங்கியிருந்தது.

கடந்த பெப்ரவரி மாதம் 1ம் திகதி வழங்கப்பட்ட தீர்பில் நீரில் எண்ணையும் கிறீசும் கலந்திருப்பதும், அது மக்கள் பாவனைக்கு உகந்தது அல்ல எனவும் மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தவிர, “பல அரச அதிகாரிகள், மற்றும் பிழையான அறிக்கைகளைத் தயாரித்து வெளியிட்டவர்கள் ஏதாவது பணங்களையும் பெற்றுக்கொண்டு அவ்வாறு செயற்பட்டனரா என்ற கேள்வியும் மன்றுக்கு தோன்றுகிறது”. எனத் தனது தீர்ப்பின் இறுதியில் குறிப்பிட்டுள்ளது.

எம்.டி.ரி வோக்கஸ் என்ற நிறுவனம் அதன் துணை நிறுவனமான நோதேர்ன் பவர் இன் ஊடாக நடத்திய அழிப்பை மூடி மறைப்பதற்கு வட மாகாண சபையின் முதலமைசர் விக்னேஸ்வரன் மற்றும் ஐங்கரநேசன் ஆகியோர் செயற்பட்டமை இங்கு வெளிப்படையானது. “பிழையான அறிக்கை” என்பது வட மாகாண சபை மட்டுமே தயாரித்து வெளியிட்டது என்பது தரவு. ஆக, நீதிமன்றம் தனது சட்ட எல்லைகு உட்பட்டு சந்தேகங்களை வெளியிட்டுள்ளது.

ஐங்கரநேசன், விக்னேஸ்வரனைத் தவிர அவுஸ்திரேலியாவிலிருந்து விக்னேஎஸ்வரனை இயக்கும் மர்ம மனிதன் நிமலன் கார்த்திகேயனுக்கும் இந்த ஊழலில் பங்கு உண்டு என்ற சந்தேகத்தை இனியொரு… சுட்டிக்காட்டியிருந்தது.

விக்னேஸ்வரன் வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் அவருடன் நிழல் போன்று பின் தொடரும் நிமலன் கார்த்த்கேயன் அவுஸ்திரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கையர். எதிர்வரும் மாதங்களில் நிமலன் கார்த்திகேயனுக்கு வட மாகாண சபையில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிமலன் கார்த்திகேயனுடன் தொடர்புடைய மற்றொரு கும்பல் இலங்கையில் செயற்பட்டுவருகின்றதும் தெரியவருகிறது. அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை சென்று அங்கு கிளிநொச்சிப் பகுதியில் தனது அழிவு அரசியலை ஆரம்பித்துள்ள இக் கும்பல் தனது உள்ளூர் சகாக்களுடன் இணைந்து ஐங்கரநேசனை மையப்படுத்திய அழிவரசியலை ஆரம்பித்துள்ளது. சுன்னாகம் நிலத்தடி நீர் பணப் பரிமாற்றத்தில் இவர்களும் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற தரவுகளும் இனியொருவிற்கு கிடைத்துள்ளன.

ஒரு புறத்தில் இனப்படுகொலை நடக்கிறது எனக் கூச்சலிடும் விக்னேஸ்வரனும், ஐங்கரநேசனும் அவர் சார்ந்த கும்பலும், மறுபுறத்தில் பேரினவாத அரசின் நடவடிக்கைகு நிகரான அழிப்பு நாடகத்திற்குத் துணை சென்றுள்ளனர். இந்த இருவர் மட்டுமன்றி, வட மாகாண சபை அமைத்த போலி நிபுணர் குழுவின் அங்கத்தவர்கள். நிமலன் கார்த்திகேயன் என்ற மர்ம மனிதன் உட்பட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். வட மாகாண சபை தனது நடவடிக்கைக்காக மக்களிடன் மன்னிப்புக் கோர வேண்டும். எம்.டி.ரி வோக்கஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும். சுன்னாகம் பகுதியிலுள்ள நிலக்கீழ் நீர் சுத்திகரிக்கப்படுவதற்கான செலவுத் தொகையை எம்.டி.ரி வோக்கஸ் இடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டு. இதனை நீதிமன்றம் நிறைவேற்றும் என உறுதிபட நம்புவோம்.

நீதிமன்றத் தீர்ப்பு:



Read more...

Monday, April 3, 2017

பிணங்களுடன் கிடந்து மீண்டேன் : 1983 கறுப்பு ஜூலையை ஒத்த “1987 மார்ச் 30 இல் ” கந்தன் கருணை படுகொலை”

இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது என்பதை உணராமல், நாளாந்தம் கடந்து போகும் சாதாரண இரவு போலக்கருதி மறுநாளைத் தரிசிக்கத் துயில்வதற்காகத் தமது இரவு உணவைப் புசித்து கொண்டிருந்தார்கள்… அவர்கள் புலிகள் இயக்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள்.

கைதிகள் என்போர் குற்றவாளிகள். அல்லது குற்றத்துக்காக சந்தேகிக்கப்படுவோர். ஆம் இவர்களும் அத்தகைய ஒரு குற்றத்துக்கு உரியவர்களே! அது என்னவென்றால், தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடப் புறப்பட்டதுதான்! விடுதலைப் புலிகள் செய்த அதே காரியம் ஏன் அவர்களாலேயே குற்றமாக்கப்படுகிறது என்றால்…

அதை விளக்க அவர்களின் பக்கவாத்தியக்காரர்களால் தான் முடியும்! சில படித்த மனிதர்களுக்கு இது மிகச் சுளுவான காரியமாக இருக்கலாம். ஆனால், ஒன்று இங்கு கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் யாவரும் தமிழ் தாயின் புத்திரர்கள், ஒருவேளை இவர்களின் சகோதர சகோதரிகள் யாரும் புலிகள் இயக்கத்தில் கூட இருந்திருக்கலாம் இவர்கள் எல்லோருமே தத்தம் விடுதலை இயக்கங்களில் சோரும் போது தமிழ் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தமது உயிரையும் கொடுக்கத் தயாராகவே முன்வந்த இளைஞர்கள். தமது குடும்பம் வறுமையில் உழன்றாலும், திருமணம் முடிக்காத சகோதரிகள் இருந்தாலும் மனைவி மக்கள் இருந்தாலும் சொந்த வாழ்க்கையைப் பொருட்படுத்தாமல் பள்ளிபடிப்பை சில வேளை பல்கலைக்கழகப் படிப்பையும் உதறித் தள்ளிவிட்டு ஒரு சிலர் தொழிலையும் உதறித் தள்ளிவிட்டு போராட்டத்தில் இணைந்தவர்கள்.
அவர்கள் இணையும் போது தாமும் போராட வேண்டும் என்ற எண்ணம் ஒன்றைத் தவிர வேறெந்த நினைப்புமின்றி எழுந்தமானமாகத் தமக்கு எட்டிய விடுதலை இயக்கங்களில் சேர்ந்தார்கள். இங்கு எமக்கு உணரக்கூடியதாக இருந்த ஒரு பிரதான விடயம் யாதெனில் 1983 ஜுலை இனக்கலவரம் உந்தித் தள்ளிய போராட்ட வேகத்தில் விளைந்த இப்போராளிகள் அப்போராட்டத்தாலேயே குற்றவாளிகளாக நிறுத்தப்பட்ட முரண் நிலைதான்!
இக்கைதிகள் யாவரும் எப்படி இந்த சிறை முகாமில் அடைக்கப்பட நேர்ந்தது என்பதே எமது போராட்ட வரலாற்றின் ஒரு பகுதிதான் கசப்பான பகுதி.

1986 ஆம் ஆண்டு தமிழ் ஆயுதப் போராட்டத்தில் புதியதொரு குணாம்சம், மிக மோசமான வடிவில் வெளிப்பட்ட ஆண்டு ஏப்ரல் மாதம் டெலோ அமைப்பின் மீதான புலிகளின் தாக்குதலுடன் இது ஆரம்பித்தது. அடுத்தடுத்து புளொட், ஈ.பி.ஆh.எல்.எவ் என, ஈரோசைத் தவிர அனைத்து இயக்கங்களையும் அவ்வாண்டுக்குள் தடை செய்து முற்றுப்பெற்றது. (ஈரோஸை சில காலம் பயன்படுத்திவிட்டு பின்னர் இயக்கத்தைக் கலைத்துவிட்டு தம்முடன் சேர்ந்து விடும்படி புலிகள் உத்தரவிட்டனர்.)

இவ்வாறு புலிகளால் தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் உறுப்பினர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். அவர்களில் பலர் இச்சிறை முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இறுதியாக 1996 டிசம்பர் 13ம் திகதி புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க உறுப்பினர்களே இங்கு அதிகளவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 30 பேர் புலிகளால் விடுவிக்கப்பட்ட பின் இந்தியாவுக்குச் செல்வதற்காக படகு ஏற்பாடு செய்துவிட்டு, அதற்காகப் புங்குடுதீவுக்கு வேன் ஒன்றில் சென்றுகொண்டிருந்த வேளை, மீண்டும் புலிகளால் இடைமறிக்கப்பட்டு, பாதுகாப்பாக அனுப்பி வைப்பதாக தந்திரமாகப் பேசி, ஏமாற்றி அழைத்து வரப்பட்டு இச்சிறைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டவர்கள். அவர்களுடன் புலிகளால் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டவர்களில் ஒருவரே இச்சம்பவத்தில் தப்பிவந்து இத்தகவல்களைக் கூறிய தைரி.

இதேபோல் இன்னும் ஒரு பகுதியினர் இந்தியாவிலிருந்து ஏமாற்றி வரவழைக்கப்பட்ட 30 ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள். மன்னாரில் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் தொலைத்தொடர்பு பரிவர்த்தனையாளர்களை துப்பாக்கி முனையில் வைத்து, அவர்கள் மூலம் தம்மை ஆபத்திலிருந்து காக்கும்படி இந்தியாவிலிருந்த தலைமைக்கு செய்தி அனுப்பச் செய்தனர்.

இதனை நம்பி படகில் வந்த 30 பேரைச் சுற்றிவளைத்துக் கைது செய்து, மன்னாரில் வைத்து விசாரணை நடத்திவிட்டு யாழ்ப்பாணத்தின் இச்சிறை முகாமுக்கு அனுப்பியிருந்தார்கள்.

இதைவிட, யாழ்ப்பாணத்தில் கைதான பல ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்களும், பொதுமக்களில் சிலரும் அச்சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நகைக்கடை முதலாளி. புலிகள் கேட்ட பணத்தைக் கொடுக்காததால் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

அனைவரும் வௌ;வேறு அறைகளில் அடைக்கப்பட்டிருந்ததால் மொத்தமாக எத்தனை பேர் இருந்தனரெனச் சரியாக அறியக் கூடியதாக இருக்கவில்லை. சுமார் 30 இறாத்தல் பாண் வாங்குவதைக் கருத்தில் கொண்டு 60க்கு மேற்பட்டோர் இருந்தனரெனக் கணக்கிட முடிந்தது. இங்கிருந்தோரை உற்றார், உறவினர் அல்லது வெளியார் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை. அங்கிருந்த சின்னதயான் என்பவரது மனைவிக்குக் குழந்தை பிறந்ததை அறிந்தும், மனைவி, குழந்தையைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர் சாகும்போதும் தனது குழந்தையைப் பாராமலே சாக நேர்ந்தது.

அந்த இருளில் கடந்து கொண்டிருக்கிற கடிகார முட்களின் கணங்கள் ஒவ்வொன்றையும் காலன்தான் நகர்த்திக் கொண்டிருந்தான் என்பதை அறியாமல் அடைபட்டுக் கிடந்தார்கள் அவர்கள்.

இன்னும் எத்தனையோ ஆண்டுகளுக்கு வாழவேண்டிய வயது அவர்களுக்கு. ஆனால் அவர்களின் விதியை மாற்றி எழுதிய எழுதுகோலாக எமது விடுதலைப் போராட்டத்தின் துப்பாக்கி மாறியது. அது இரத்தத்தையே மையாக்கி தனது மரணத் தீர்வை வரலாற்றில் பதிந்தது.

அன்று 1987 மார்ச் 30, இரவு சுமார் 9 மணியிருக்கும், யாழ்ப்பாணத்தை ஓர் அதிர்ச்சிச் செய்தி மெல்லக் கிலியிலாழ்த்தியது.

அன்றைய காலத்தில் புலிகளின் யாழ்ப்பாண இராணுவத் தளபதியான கிட்டுவின் வாகனத்தின் மீது கிரனேட் தாக்குதல் நடந்துவிட்டது என்பதுதான் அச்செய்தி. இத்தாக்குதலை யார் நடத்தினர் என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. பின்னர் அது புலிகள் இயக்கத்துக்குள் கிட்டுவுக்கும் மாத்தையாவுக்குமிடையிலான அதிகாரப் போட்டியில் மாத்தையாவின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது என்று ஊகிக்கக் கூடியதாயிருந்தது.
இத்தாக்குதலின் பின் கிட்டுவை உடனடியாகப் பொறுப்பிலிருந்து நீக்கி இந்தியாவுக்கு எடுத்து பின் லண்டனுக்கு அனுப்பியதும், மாத்தையாவிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்ததும் இதனை உறுதிப்படுத்துவதாக அமைந்தன. இத்தாக்குதலில் கிட்டு காலொன்றை இழக்க நேரிட்டது. அவரின் மெய்ப்பாதுகாவலர் பலியானார்.

இச்சம்பவத்தையடுத்து என்ன விபரீதம் நிகழப் போகிறதோவென யாழ் நகரமே அச்சத்தில் ஆழ்ந்திருந்தது. ஆனால், இச்சம்பவத்துடன் உருக்கொண்ட அந்த விபரீதம் தம்மை நோக்கி திசை திரும்பப் போகிறது என்ற ஆபத்தை அந்தச் சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை. உண்மையில் அவர்களுக்கு வெளியே என்ன நடந்திருக்கிறது என்பதே தெரியாதிருந்தது.

தைரி மேல் மாடியில் உள்ள அறையில் அடைக்கப்பட்டிருந்தார். சாப்பாட்டு வேளைகளில் அவர்களைத் திறந்து விடுவர். அதுவும் சாப்பாட்டு வேளையாக இருந்ததால் அவர்கள் கீழே இறங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சுமார் 9.15 இருக்கும்,திடீரென அம்முகாமை நோக்கி வெடிச்சத்தங்கள் கேட்டன. முதலில் அது மிஸ்ஃபயர் (தவறுதலான துப்பாக்கி வெடி) என்று தான் யாவரும் எண்ணினர். அம்முகாமில் நீண்ட நாள் இருந்ததில் தாம் கொல்லப்படுவோம் என்று எவரும் எண்ணியிருக்கவில்லை. ஆனாலும், ஏதோ ஒரு உள்ளுணர்வால் உந்தப்பட்ட தைரி குசினியை அண்டிய முடுக்கொன்றில் மறைந்துகொண்டார்.

அவ்வேளை அருணா என்ற புலி உறுப்பினர் தனது 5, 6 உதவியாளர் சகிதம் மூர்க்காவேசத்துடன் உள்ளே புகுந்தான். அவன் வந்த வேகத்தில் வலது புற மூலையிலிருந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மீது, எம்-16 யந்திரத் துப்பாக்கியால் ஹிப் பொஸிஷனில் நின்று சரமாரியாகச் சுட்டான்.

துப்பாக்கியின் மகஸீன் தீர்ந்ததும், உதவியாளர்களிடமிருந்து மறு மகஸீன் வாங்கிப்போட்டு மறுபடி சுட்டான், சுட்டுவிட்டு அருகில் இருந்த மாடிப்படிகளால் ஏறி மேல் மாடிக்குச் சென்றான்.

அந்த வீட்டின் முகப்பில் பெரிய ஹோலிருந்தது. அதில் எதிரே இரு அறைகளிலும் கைதிகள் இருந்தனர். ஒரு அறையிலிருந்து மறு அறைக்கு வர வழியிருந்தது. இடப்புறமாக குசினியும் வலப்புற அறைக்கு அருகே மாடிப்படிகளும் இருந்தன.

வலப்புற அறையில் சூடுபட்டவர்கள் இடப்புற அறைக்குள் ஓடினார்கள் மேல் மாடிக்குச் சென்ற அருணா அங்கும் வெடிகளைத் தீர்த்துவிட்டு திரும்ப இறங்கி வந்து இடப்புற அறைக்குள்ளிருந்தவர்களை நோக்கிச் சுட்டான் சிறிது நேரம் தொடர்ந்து சுட்டுவிட்டு திரும்பிப் போய்விட்டான்.

சூடுபட்ட அஜித் என்பவருக்கு கைமுறிந்து எலும்பு தெரிய, வயிறு பிரிந்து குடல் வெளியே தள்ளியது, அதை முறிந்த கையின் எலும்பால் அழுத்திப் பிடித்துக்கொண்டு ‘தண்ணீர் தண்ணீர்’ எனக் கத்தினான் வலப்புற அறையில் றெஜி என்ற நெடிய சிவலைப் பொடியனுக்கு ரத்தம் ஒழுகியபடியிருந்தது. பலருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. யார் யார் சூடுபட்டனர், யார் யார் கொல்லப்பட்டனர் என்பதும் தெரியவில்லை.
தைரியும் இன்னும் சிலரும் வெளிக்கதவால் தப்பி ஓடினர். காவலில் நின்ற புலிகள் யாரடா என்று கத்தியபடி திரும்பச் சுட, ஓடி வந்தவர்கள் வெடிபட்டு கதவருகே விழுந்தனர். அவர்களோடு சேர்ந்து படுத்துவிட தைரிமேல் விழுந்திருந்த கங்கா என்பவருக்கு தலையில் வெடி பட்டு மூளை சிதறி தைரியின் முகம் மீது வடிந்தது. இரத்தம் வெள்ளம் போல் பரவியிருந்தது. தைரி அப்படியே இறந்தவர்களோடு இறந்தவன் போல் படுத்தபடி இருந்துவிட்டார். சென்றிக்கு இருந்தவர்கள் எஞ்சியிருந்தவர்களை இஷ்டப்படி எஸ்.எம்.ஜி களால் சுட்டனர். மேலே இருந்த மற்றைய இறந்த உடல்களும் இரத்தமும் தைரியை மறைத்திருந்தன.

அப்படிச் சடலங்களின் கீழ் புதைந்து கிடக்கையில் வெடிபட்டவர்களின் ஓலங்களும் முனகல் சத்தங்களும் கேட்டபடி இருக்கிறது. உயிர் பிரிகையில் ஒவ்வொருவரது மரண ஓசையும் அடங்கிச் செல்வது கேட்கிறது. அந்த ஓசை, குரல்வளை அறுபட்ட ஓர ஆட்டின் கதறல் போல், மனிதக் குரலேயற்ற வேறோர் பயங்கர குரலாக ஒலித்து, மூச்சிழுத்து, ஓய்வதைக் கேட்கும்போது உடல் அச்சத்தால் சில்லிட்டுப் போய்விடுகிறது.
கதிர் என்பவரும் வேறு சிலரும் மலசல கூடத்தின் மேல் இருந்த தட்டு ஒன்றுக்குள் ஏறி அங்கிருந்த புலித்தோலால் போர்த்தபடி பதுங்கிக் கொண்டனர்.

அருணா சுட்டு அதன்பின் சென்றிக்கு நின்ற புலிகளும் சுட்டு ஓய்ந்துவிட்டிருக்க, அடுத்ததாக சத்தியா என்பவன் வந்தான். சத்தியாவின் கீழ் தான் அந்த முகாம் இருந்தது. முகாமின் பொறுப்பாளராக பாலு என்பவன் இருந்தான்.

சந்தியா வந்ததும் அரைகுறையாய் உயிரோடிருந்தவர்களைச் சுட்டுக் கொன்றான். சத்தியா பிஸ்டலால் தான் சுட்டான். பின்னர் மலசல கூடத்துக்குப் போய் அங்கே மேலே ஒளித்திருந்தவர்களை நோக்கி இறங்கடா கீழே என்று கத்தியபடி சுட்டான், சூடு பட்டவர்கள் தொப்பென விழும் ஓசை கேட்டது. கதிர் குப்புற விழுந்து கிடந்ததை பின்னர் தைரி தப்பிச் செல்லும் போது காணமுடிந்தது.

இவ்வேளையில் வாகனச் சத்தம் கேட்டது வெளியே சென்ற அருணா திரும்பி வந்தான். அவன் வேறொரு முகாமில் வைத்திருந்த ராசீக், பாப்பா இருவரையும் இழுத்து வந்தான். வழமையாக இவ்விருவரையும் அருணாவும், சத்தியாவும் இம்முகாமுக்கு கொணர்ந்து மிக மோசமாகத் தாக்கிவிட்டு திரும்பக் கூட்டிச் செல்வது வழக்கம். ராசிக் என்பவன் மிகவும் நெஞ்சுறுதி கொண்டவன். எவ்வளவு அடித்தாலும் ‘நானும் ஆண் மகன் தான்ரா, போராடத்தான் வந்தவன், சாவுக்கு பயப்பிட மாட்டன். நீ கொல்லுறதெண்டா கொல்லு’ என்று எதிர்த்துக் கூறுவான். அவனை இனியில்லை என்ற அளவுக்கு அடித்து நொருக்குவார்கள்.

இந்த தடவை அழைத்து வரப்பட்ட போது முகாமிலிருந்த நிலைமையைப் பார்த்ததும் தமக்கு என்ன நேரப்போகிறதென்பது அவர்களுக்குப் புரிந்துவிட்டது. ‘உங்களால என்ன செய்ய முடியும் சுடத்தான்ரா முடியும். நீங்கள் அழிஞ்சுதான்ரா போவியள், இருக்க மாட்டியளடா, எங்களை அவிழ்த்து விட்டுப்பாருங்கடா…’ என்று கத்தி இழுபறிப்படுகின்ற சத்தம் கேட்டது. சத்தத்தோடு சத்தமாக வெடி கிளம்ப ஐயோ ஐயோ என்ற ஓலம் எழும்பி படிப்படியாக ஓய்ந்து அடங்கியது.

அதையடுத்து அங்கு மௌனம் நிலவியது. அனேகமாக அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். இரத்தம் கணுக்கால் அளவு உயரத்துக்கு இருந்தது. இரத்த வாடையும், வெடி மருந்து நாற்றமும் மண்டி இருந்தது.
அருணாவும் சத்தியாவும் இறந்த உடல்களை ஏற்றிச் செல்வதற்காக வாகனம் எடுத்துவர வெளியே சென்றனர். ஒரே அமைதி சிறிது நேரத்தில் தலை நிமிர்ந்து பார்த்த தைரி உயிரை கையில் பிடித்துக்கொண்டு மெதுவாக எழுந்து குசினிக்குச் சென்று பின்புறமாக இருந்த கதவால் பாய்ந்து ஓடி அடுத்த வீட்டு வளவுக்குள் ஏறி விழுந்து தப்பிச் சென்றார். பின்புறமாக இன்னும் சிலர் தப்பிச் சென்றிருக்கக் கூடும். யார் யார் தப்பினார்கள் என்பது தெரியாது. ஆனால் முன்புறமாகத் தப்ப முயன்றவர்கள் சென்றியிடம் வெடிவாங்கி இறந்தார்கள்.

தைரி ஓடும்போது மீண்டும் வாகனம் வரும் சத்தம் கேட்டது. அநேகமாக உடல்களை அப்புறப்படுத்தவே வாகனங்களை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும்.

இந்த உடல்கள் எங்கு புதைக்கப்பட்டன அல்லது எரிக்கப்பட்டன என்பது தெரியாது. கல்லுண்டாய் பகுதிக்குக் கொண்டுபோய் எரித்ததாகச் சிலர் கூறுகிறார்கள். ஆனால் சம்பவ தினமன்று காலை கைதிகளைக் கொண்டு பாரிய ஒரு குழி வெட்டுவித்தார்கள். இது மலசல கூடத்துக்கான குழி என்றே அவர்களுக்குச் சொல்லப்பட்டது. இது இவர்களைப் புதைப்பதற்கானதாக இருந்தால், கிட்டு தாக்கப்படுவதற்கு முன்னரே இக்கொலைத்திட்டம் தீட்டப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். கிட்டு மீதான தாக்குதல் அக்கொலைத்திட்டத்தை அன்றே நிகழ்த்த வழிசெய்திருக்கலாம். எவ்வாறாயினும் சுமார் 60 தமிழ் இளைஞர்கள் அந்த ஒரே இரவில் ஒரு வீட்டிற்குள் வைத்து புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வரலாற்றுக் கறையை எப்படி எம்மவரால் நியாயப்படுத்த முடியும்?

இப்படி ஒரு படுகொலைச் சம்பவம் நிகழ்ந்ததை எப்படியோ அறிந்த அக்கைதிகளின் உறவினர்கள் சிலர் புலிகளின் முகாம்களுக்குச் சென்று வினாவினர். அப்படிக் கேட்ட போது புலிகள் பதிலளித்த முறை இப்படித்தான் இருந்தது.

(அவ்வாறு கேட்கச் சென்ற ஒருவர் கூறியது இது)

புலிகள்:
கைதிகள் கொஞ்சப்பேர் தப்பியோடப்பாத்தவை. அவையளைத் தடுக்க சுடுபாடு நடந்ததில கொஞ்சப்பேர் செத்தவை.

உறவினர்: (ஒருவரது பெயரை குறிப்பிட்டு) அவருக்க என்ன நடந்தது.

புலிகள்: அவரில்லை

உறவினர்: இல்லையென்றால் செத்திட்டாரோ?

புலிகள்: ஓம்!

உறவினர்: அப்ப பொடியை (உடம்பை) எண்டாலும் தாங்கே, தாய் தகப்பனுக்கு அனுப்ப வேணும்.

புலிகள்: (உறுக்கி) அப்ப இருங்கோ…

போனவர்கள் நீண்ட நேரமாக பதில் ஏதும் சொல்லாதிருக்கக் கண்டு, அவ்உறவினர்கள் உள்ளே போய் மீண்டும் அவர்களைக் கேட்டனர்.

உறவினர்: தம்பி, ஒண்டும் பேசாமல் இருக்கிறியள்.

புலிகள்: உங்களுக்கெல்லே சொன்னனாங்கள் ஆள் இல்லையெண்டு.

உறவினர்: பொடியையெல்லே கேட்டனாங்கள்

புலிகள்: நாங்கள் எரிச்சுப்போட்டம்.

உறவினர்: (சற்றுக் கோபத்துடன்) அப்ப எழுதித் தாங்கோ, இப்பிடி நடந்திட்டுதெண்டு.

புலிகள் முறைத்துப் பார்க்க ஏனையோர் விபரீதத்தை உணர்ந்து அவ்வுறவினர்களை சாந்தப்படுத்தி திருப்பி அனுப்பிவைத்தனர்.


இங்கே மனுக்கள், முறைப்பாடுகள், நீதிமன்றங்கள், விசாரணைகள், விசாரணைக்கமிஷன் எதுவுமில்லை. இந்தப் பதிலோடு விடயம் முடியவேண்டியது தான்.
ஏப்ரல் 2000 வெளியான அமுது சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ‘பிணங்களுடன் கிடந்து மீண்டேன்’ என்ற ஆக்கம் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜுலை படுகொலைகளை ஒத்த மார்ச் 30 படுகொலையின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக பிரசுரிக்கப்பட்டது.

கற்பனை சம்பவம் அல்ல. நிதர்சனமான உண்மை சம்பவம்
.




கந்தன் கருணைப் படுகொலைகள் (சாகரன்)


30 விநாடிகளில் 60 இற்கும் மேற்பட்ட உயிர்க் கொலைகள். உலகின் பிரசித்தி பெற்ற ஆயுதம் SMG (ஏகே 47, (ஏனையவர்களின் தகவல் அடிப்படையில் திருத்தப்பட்டுள்ளது) இனால் தொடர்ச்சியான குண்டுப் பாய்ச்சல்கள். தொடர்ந்தாற்போல் குற்றுயிராய் இருந்தவர்கள், தப்பி ஓடி மதகிற்குள் புகுந்து மறைந்தவர்களை குண்டு வீசி மரணத்தை உறுதி செய்த கொலைகள். எல்லாம் 30 நிடத்திற்குள் முடிக்கப்பட்டுவிட்டன. பிணக் குவியலுக்குள் பிணம் போல் இரத்த வெள்ளத்திற்குள் முழ்கி அசையாமல் இருந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பிய கோர நிகழ்வு. இவரின் வாக்கு மூலமும் அதனைத் தொடர்ந்த பதிவுகளும் பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் குறிப்பீடுகள் சம்பவத்தை உறுதி செய்திருக்கும் பதிவுகளும் நடைபெற்று 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. மனித உரிமை அமைப்புக்களோ ஐ.நா. சபையே ஏறெடுத்துப் பார்க்காத படுகொலைகள் இது. வெலிக்கடைப் சிறைப்படுகொலையை விஞ்சிய வீச்சுப் படுகொலை. கறுப்பு ஜுலையை பின்னுக்கு தள்ளிய மார்ச் 30 படுகொலை அது கந்தன் கருணைப் படுகொலை. எம்மவர்களால் எம்மவர்கள் மீது எமது மண்ணில் எமது சுற்றத்தவர் பார்த்திருக்க நடைபெற்ற கைதிகளின் படுகொலை இது.

பலரும் அறிந்ததும் உலகம் முழுவதும் பிரசாரப்படுத்தப்பட்டதும் இலங்கையின் வெலிக்கடை சிறைப் படுகொலை. இது இரண்டு நாட்கள் நடைபெற்று 57 உயிர்களை கொன்ற சம்பவம். இது எம்மவர் மீது எம்மவர்களால் நடத்தப்பட்ட படுகொலை அல்ல. எமது மண்ணில் நடைபெற்ற கொலையும் அல்ல எம்மவர் முன்னிலையில் நடைபெற்ற கொலையும் அல்ல இதில் உயிர் தப்பிய கைதிகள் பலர் இன்றும் உயிருடன் வாழும் சாட்சியங்களாக இருக்கின்றனர். உயிர்தப்புவதற்குரிய எதிப்புப் போராட்ட வாய்புக்கள் இருந்த கொலை இது. ஆனால் கந்தன் கருணைப் படுகொலையில் உயிர் தப்புவதற்குரிய வாய்ப்புக்கள் எல்லாவகையிலும் அடைகப்பட்டிருந்த நிலையில் நடாதப்பட்ட கொலை.

வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள்; சிறையில் இருந்த தமிழ் கைதிகள் சிறை அதிகாரிகளின் உறுதுணையுடன் சிறையில் இருந்த பேரினவாத சமூக விரோதமிகளால் நடாத்தப்பட்ட படுகொலை. இதற்கு பின்னால் இலங்கையின் அன்றைய ஜேஆர் அரசு இருந்து. ஆனால் இதனைவிட அதிகமான கொலைகள் வெறும் விநாடிக்குள் தமிழ் மொழி பேசுபவர்களால் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகள் மீது தாமும் மக்களுக்காக போராடப் புறப்பட்டவர்கள் என்பதினால் நடாத்தப்பட்ட படுகொலை. இதற்கு பின்னால் விடுதலை அமைப்பு என்று தன்னபை; பிரகடனப்படுத்திய பாசி புலிகள் அமைப்பும் அதன் தலைமைப் பீடமும் இருந்தது.
வெலிக்கடை படுகொலையை சர்வதேச சமூகமும் மனித உரிமை அமைப்புக்களும் கண்டனமும் விசாரணையும் கோரி நிற்கின்றன. இலங்கை அரசின் தரப்பில் சந்திரிகா பண்டாரநாயக்காவால் மன்னிப்பும் வருத்ததும் தெரிவித்தாகிவிட்டது. ஆனால் எம்மவரால் சிறைப் பிடிக்கப்பட்டு போராடும் உரிமை மறுக்கப்பட்ட போராளிகளின் கொலைக்கான விசாரணையோ வருத்தங்களே எத்தரப்பிலிருந்து இதுவரை வந்ததாக அறிய முடியவில்லை. ஏன் இந் நிகழ்வு நடைபெற்றதாக பலரும் அறிந்திருக்கவும் இல்லை. அன்றைய தமிழ் பத்திரிகைகளும் கைதிகள் தப்பி ஓட முற்பட்ட வேளையில் 17 துரோகிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று ‘சுடச் சுடச்’ செய்திகளை வெளியிட்டு தமது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றியதாக புழுகாங்கிதம் அடைந்து ‘பத்திரிகா தர்மத்தை’ தோண்டிப் புதைத்துக் கொண்டன.

கந்தன் கருணை படுகொலை என அறியப்பட்ட இக் கொலையை புலிகளின் தளபதி கிட்டுவின் காலை உடைத்த குண்டெறிவின் தொடர்சியாக அவனின் விசுவாசி அருணாவினால் நிகழ்த்தப்பட்டது. நல்லூருக்கு அருகில் இருக்கும் கந்தன் கருணை என்ற இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்து பின்பு யாழ் இந்துக்கல்லூரி ஆரம்ப பாடசாலைக்கு அருகாமையில் இருக்கும் சிவப்பிரகாசம் ஒழங்கை என்ற பிரதான விதியிற்கு அருகில் இருந்த வீடு ஒன்றில் நிகழ்த்தப்பட்டது. இதில் அதிகம் மரணத்தை தழுவியவர்கள் பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் என்ற விடுதலை அமைப்பு போராளிகள். மேலும் புளொட், ரெலோ அமைப்பினரும் சில பொதுமக்களும் இதில் அடங்குவர்.

இலங்கை அரசின் இராணுவத் தளபதி கொத்தலாவலை இற்கும் புலிகளின் கிட்டு என்ற கிருஷ்ணமூர்த்தியிற்கும் இடையே மலர்ந்த உறவில் இலங்கை அரசின் சிறைக் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்டவன் அருணா. தனது நேரடித் தலைவன் கிட்டிற்கு செய்த விசுவாசச் செயற்பாடு இந்த கொடுங் கொலைச் சம்பவம் ஆகும்.

கல்வியங்காடு செட்டி மீது கொண்ட பயம் என்று ஆரம்பித்து கண்ணாடி பத்தனை வவுனியாக் காட்டிற்குள் வைத்துக் கொலை செய்தது என்ற ஆரம்பித் கொலைகள் காதலித்தான் என்பதற்காக பற்குணத்தை காவுகொண்டு தனது பயணத்தை ஆரம்பித்தது. இறுதியில் காதலுக்காக உயிரைக் காவு கொள்ள கொள்கை வகுத்தவனே மையல் கொண்டு காதல் மணம் புரிந்தது தண்டனை இல்லை என்று சட்டம் இயற்றக் காரணம் ஆகிற்று என்பது வக்கிர வரலாறு ஆயிற்று.

இன்பம், செல்வம், இறைகுமாரன், உமைகுமாரன் என்று விரிவடைந்து சுந்தரத்துடன் வீரியம் கண்ட கொலை சர்வ தேசப் பாசறையில் பயிற்சி பெற்ற போராளி றேகனின் கொலை வடிவில் மாற்றம் பெற்று யாழ் கோட்டடை இராணுவத்தின் செயற்பாட்டை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட தோழர் அமீன் கொலை என்று விரிவாக்கம் அடைந்து. சகோதரப் படுபொலையை விரும்பாதவர்கள் என்பதை தமக்கு சாதமாக்கி ஐக்கிய? முன்னணியிற்குள் இருந்த வண்ணமே கொலைகளைச் செய்தனர்.

ரெலோவை தடை செய்கின்றோம் என்று அதிகாரத்தை தமது கைகளில் எடுத்தவர்கள் யாழ் வீதியெங்கும் உயிருடனும் குற்றயிராகவும் போரளிகளை ரயற் போட்டுக் கொழுத்திய போது கேள்விகளை எழுப்பாது நின்றதன் விளைவுகள் இன்றைய நிலமைகளுக்கு அத்திவாரத்தை போட்டுவிட்டது. நாகரீக சமூகம் என்று தம்மை தம்பட்டம் அடிக்கும் யாழ்ப்பாண மேலாதிக்க சக்திகளின் மௌனம் இந்தக் படுகொலைகளை தடுத்து நிறுத்தும் அளவிற்கு புலி பாசிசம் அவ்வளவு வீரியம் குறைந்ததாக இருக்கவில்லை.

பத்மநாபா தலமையிலான ஈபிஆர்எல்எவ் அமைப்பின் போராட்ட செயற்பாட்டை தடைசெய்து போரளிகளை முடிந்தவரை சிறைபிடித்து பின்பு கொன்றும் குவித்தனர இதே விடுதலைப் புலிகள். இதில் ஒரு உச்சக்கட்ட நிகழ்வுதான் கந்தன் கருணைப் படுகொலை. யாதும் தாமாக நின்ற பின்பு மாற்றுக் கருத்தாளர்கள் பொதுமக்கள் என்று கேள்வி எழுப்பியவர்களை சிறையில் அடைத்து வெளியில் விடாமல் கொலைகள் செய்ய மனித உரிமை மீறல்கள் இதுவரை எந்த ஜநா சபையிலும் கேள்விகளுக்குள் உள்ளாக்கப்படவில்லை.

துணுக்காயில் 1990 களில் நடாத்திய புலிகளின் வதை முகாமிலிருந்து உயிருடன் தப்பியவர்கள் பல ஆயிரம் பேரில் சில பத்துப் பேரே. இதுவே ஈழவிடுதலைப் போராட்டத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மனித அவலமாகும். கணக்கு காட்டப்பட முடியாக சிறைச்சாலை வதைகளும் படுகொலைகளும். இவர்களின் ஆத்மசாத்திக்கு சடங்குகள் செய்யப் புறப்பட்டால் எம்நாட்டில் உள்ள பூசகர்கள்ஆண்டு பூராக செய்தாலும் முடிவடையாத நிகழ்வாக நீண்டு செல்லும் வரலாற்றை இது பதிவு செய்து நிற்கும்.

சிறைபிடித்து வைத்திருந்தவர்களை இலங்கையில் அதிகம் கொன்றவர்களை இன்று ஜநாவில் நிறுத்த வேண்டிய காலம் மனித உரிமை பேசும் பலரும் யுத்தக் குற்றம் பேசும் பலரும் இதற்கான திகதிகளை 1980 களில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைப்பதே சரியானது. கொலைகள் அது எந்த அமைப்பினால் நடைபெற்றிருந்தாலும் எந்த நாட்டு இராணுவத்தினால் நடாத்தப்பட்டிருந்தாலும் அதற்கான விசாரணைகள் நடைபெற்றே ஆகவேண்டும். மாறாக 2009 மே மாதம் என்று திகதியை குறுக்கிக் கொள்வது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல.

விடுதலை அமைப்புக்கள் பலவும், தமது தவறான செயற்பாடுகளால் ஏற்பட்ட மரணங்களுக்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டிருக்கும் நிலையில் இதுவரை எந்த வருத்தமும் தெரிவிக்காது இருப்பவர்கள் புலிகளும் அவர்களின் பிரநிதிகளுமே. புலிகளால் வலிந்திழுக்கப்பட்ட ஆயுத மோதல்களின் போது ஏற்பட்ட தவறுகளுக்காக குறிப்பாக இந்திய இராணுவ பிரசன்ன காலத்தில் நடைபெற்ற தவறுகளுக்காக ஈபிஆர்எல்எவ் தமது வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டிருக்கும் நிலையில் மற்ற எவரும் அவ்வாறு செயற்பட்டதாக அறிய முடியவில்லை. புலிகளையத் தவிர ஏனைய விடுதலை அமைப்புக்கள் தமது அமைப்புக்களின் கொள்கை வழித்தவறுகளாக அல்லாமல் நடைமுறைத் தவறுகளாக ஏற்பட்ட மரணங்களுக்கு காரணமாக இருந்தவர்கள் என்பதுவும் இங்கு கவனத்தில் எடுகப்படவேண்டும்.

புள்ளி விபரங்களின் படி இலங்கை இராணுவத்தினால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை விட புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகம் என்பது எமது ஆயுதப் போராட்டம் சம்மந்தமான மீள்பார்வையில் கருத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கிய விடயம் ஆகும்,



Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com