Saturday, April 18, 2015

ஒன்றரை பில்லியன் மக்கள் நாளொன்றுக்கு 1.25க்கு குறைவான டாலரில் வாழ்கின்றனர். By Zaida Green

உலக வங்கியால் ஏற்கனவே மதிப்பிடப்பட்ட மலைப்பூட்டும் 1.2 பில்லியனை விட, உலகளாவிய அளவில் மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் நாளொன்றுக்கு 1.25க்கு குறைவான டாலரில் வாழ்வதாக இங்கிலாந்தின் Overseas Development Institute (ODI) இன் புதிய ஆய்வு ஒன்று அறிவிக்கிறது.

அதீத வறுமையில் வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கை ஏறத்தாழ 350 மில்லியன் அளவுக்கு குறைத்து எண்ணப்பட்டிருக்கலாமென அறிவுறுத்தி, அந்த அறிக்கை, “நாளொன்றுக்கு 1.25க்கு குறைவான டாலரில் வாழ்பவர்களைக் குறித்து தற்போதைய மதிப்பீடுகள் எடுத்துக்காட்டுவதை விட, அங்கே ஏறத்தாழ கால் பங்கிற்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள், ஏனெனில் அந்த ஆய்வுகளில் அவர்கள் விடுபட்டுள்ளனர்,” என்று குறிப்பிடுகிறது.

அந்த அறிக்கை குறிப்பிடுவதைப் போல, உலகளாவிய வறுமை மீதான புள்ளிவிபரங்கள் "ஏறத்தாழ ஒரு கால் பங்கு அளவிற்கு குறைவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்றால், பின் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள், அல்லது உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர், நாளொன்றுக்கு 2க்கும் குறைந்த டாலரில் வாழ்கின்றனர் என்றாகும்.

சமூகத்தின் மிகவும் பின்தங்கிய அடுக்குகளை—அந்த ஆய்வாளர்களால் அணுக முடியாது போன வீடற்றவர்கள், அல்லது அபாயகரமான நிலைமைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை—அதன் வடிவத்திலேயே உள்ளடக்க இலாயகற்ற அந்த குடும்ப ஆய்வுகளில் அவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்படாமல் விடப்பட்டுள்ளனர்.

“வறுமை, குழந்தை இறப்பு மற்றும் பிரசவகால இறப்பு மீதான புள்ளவிபரங்களின் மோசமான தரம்", அந்த அறிக்கையின் சில மிக முக்கிய கண்டுபிடிப்புகளாகும் என்று அந்த அறிக்கையின் முன்னனி ஆசிரியர் எலிசபெத் ஸ்டௌர்ட் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்துள்ளார்.

உலக வங்கி மதிப்பீடுகளின்படி, நாளொன்றுக்கு 5க்கு குறைவான டாலரில் வாழ்வதை வறுமையென ஒருவர் வரையறுத்தால், நான்கு பில்லியனுக்கும் மேலானவர்கள், அதாவது, மனிதயின மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வறுமையில் இருப்பவர்களில் வருகின்றனர்.

இதற்கிடையே உலகின் பல கோடி மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள், இவர்களின் பங்கு மதிப்புகள் உயர்ந்து கொண்டிருப்பதுடன், சொகுசு கார்கள், ஆடம்பர கப்பல்கள் மற்றும் சாதனையளவிலான எண்ணிக்கையில் ஆடம்பர அடுக்குமாடி கட்டிடங்களில் செலவிட்டு வருகின்றனர். ஓர் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் பிரபுத்துவத்தின் கஜானாக்களுக்குள் கற்பனை செய்யவியலாத அளவில் செல்வத்தைப் பாய்ச்சும் நாணயக் கொள்கைகளை உலக மத்திய வங்கிகள் பின்பற்றுகின்ற அதேவேளையில், மனிதயினத்தின் பெரும்பகுதியினர் வறுமை, சிக்கன நடவடிக்கை மற்றும் போருக்கு இடையே, உயிர்வாழ்விற்கே போராடி வருகின்றனர்.

உலக பில்லியனர்களின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு 2015 இல், 7.05 ட்ரில்லியன் டாலராக ஒரு புதிய உயரத்தை எட்டியதாக மார்ச்சில் Forbes அறிவித்தது. 2000க்கு பின்னரில் இருந்து, உலக பில்லியனர்களில் மொத்த செல்வவளம் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. அந்த இதழ் அறிவித்தது, “எண்ணெய் விலைகளின் வீழ்ச்சி மற்றும் ஒரு பலவீனமடைந்திருக்கும் யூரோவுக்கு இடையே, உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களின் பட்டியல்கள் உலக பொருளாதார கொந்தளிப்பிலிருந்து விலகி, மீண்டுமொருமுறை விரிவடைந்தது.”

ஆஃஸ்போம் அறக்கட்டளையின் தகவல்படி, மக்கள்தொகையின் மேலே உள்ள 1 சதவீதத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் செல்வத்தின் அளவு, அடுத்த ஆண்டு வாக்கில் அடியிலுள்ள 99 சதவீதத்தினரிடம் இருப்பதைக் கடந்து செல்லும்.

இந்த வாரம், சர்வதேச நாணய நிதியம் அதன் அரையாண்டு உலக பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது, அதில் அது 2008 நிதியியல் முறிவுக்கு முன்னர் மேலோங்கி இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் ஒரு காலவரையற்ற காலத்திற்கு திரும்பாதென எச்சரித்தது.

சர்வதேச அளவில் பிரதான பெருநிறுவனங்களால் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பெரும் தொகைகளும் மற்றும் சாதனையளவிலான இலாபங்களுக்கும் இடையே, நிதியியல் நெருக்கடிக்குப் பிந்தைய மந்தநிலைமை உத்தியோகப்பூர்வமாக முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து ஆறு ஆண்டுகளில் தனியார் முதலீடு வீழ்ச்சி அடைந்துள்ளது என்பதை சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வறிக்கை மேற்கொண்டு குறிப்பிடுகிறது. உலகின் உற்பத்தி சக்திகள் மற்றும் பரந்த பெருந்திரளான மனிதயினத்தை விலையாக கொடுத்து உலகளாவிய நிதியியல் மேற்தட்டை மேற்கொண்டும் செழிப்பாக்குவதன் மீது பொதுவாக அரசாங்கங்களும், மத்திய வங்கிகளும் மற்றும் கொள்கை உருவாக்குனர்களும் ஒரேமனதாக ஒருமுனைப்பட்டிருப்பதாக அந்த அறிக்கை ஆவணப்படுத்துகிறது.

ODI அறிக்கை எடுத்துக்காட்டுவதைப் போல, சிதைக்கப்பட்ட உள்கட்டமைப்பு, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல், மற்றும் ஜனநாயக உரிமைகள் அரித்தெடுக்கப்படுவது, வறுமை குறித்த ஆழமான ஆய்வுகளே தடுக்கப்படுவது ஆகியவை உலகெங்கிலும் நிலவும் சமத்துவமின்மையின் படுமோசமான மட்டங்களை வெளிப்படுத்துகின்றன.

குழந்தை இறப்பு மற்றும் பிரசவகால இறப்புகளை துல்லியமாக கணக்கிடுவதைச் சாத்தியமில்லாமல் செய்யும் வகையில், 100க்கும் அதிகமான நாடுகள் பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்யும் அமைப்புமுறையே செயல்பாட்டில் கொண்டிருக்கவில்லையென அந்த ODI அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பத்தி ஆறு நாடுகள் 2009க்கு பின்னரில் இருந்து குழந்தை இறப்பு மீதான புள்ளிவிபரங்களை சேகரிக்கவே இல்லை. தற்போதைய மதிப்பீடுகளின்படி, 2014 இல் எங்கெங்கிலும் 220,000இல் இருந்து 400,000 பெண்கள் குழந்தை பிறப்பின் போது உயிரிழந்தனர். ஐந்து பிறப்புகளில் ஒன்றுக்கும் குறைவானதே, முழுமையான உள்நாட்டு பதிவு அமைப்புமுறைகளைக் கொண்ட நாடுகளில் உண்டாகிறது.

பல ஆய்வறிக்கைகள் காலங்கடந்தவையாக உள்ளன. இதனால் ஆய்வாளர்கள் பழைய புள்ளிவிபரங்களைப் புறமதிப்பீடு செய்தோ அல்லது இதர புள்ளிவிபர தொகுப்புகளுக்கு இடையிலான தொடர்புகளைக் குறித்து அனுமானங்களை மேற்கொண்டோ செயல்படுவதற்கு நிர்பந்திக்கப்படுகின்றனர். பெரும் வறுமையில் வாழும் மக்களைக் குறித்த சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட மதிப்பீடு, ஏறத்தாழ நான்காண்டுகளுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்டது. துணை-சஹாரா ஆபிரிக்காவில் உள்ள 49 நாடுகளில் வெறும் 28 மட்டுமே 2006 மற்றும் 2013க்கு இடையே ஒரு குடும்ப வருமான ஆய்வறிக்கையைச் கொண்டிருந்தன. போட்ஸ்வானாவின் வறுமை மதிப்பீடுகள் 1993இல் எடுக்கப்பட்ட குடும்ப ஆய்வறிக்கையை அடிப்படையாக கொண்டதாகும்.

வறுமை மீதான மதிப்பீடுகள், வறுமை உச்சவரம்புகள் மீதான கருத்துவேறுபாடுகளால் மேற்கொண்டும் சிக்கலாகின்றன. சில அரசு-சாரா அமைப்புகள் அவற்றின் சொந்த தேசிய வறுமை கோடுகளை அமைத்துள்ளன. சான்றாக, தாய்லாந்தில், உத்தியோகப்பூர்வ தேசிய வறுமை கோடு நாளொன்றுக்கு 1.75 டாலராகும் என்பதோடு, அதன் வறுமை விகிதம் 1.81 சதவீதமாகும். ஆனால் நகர்புற சமூக குழுக்கள் வறுமை கோட்டை நாளொன்றுக்கு 4.74 டாலராக நிர்ணயித்துள்ளன, இது அந்நாட்டின் வறுமை விகிதத்தை மொத்த மக்கள்தொகையில் அண்மித்த பாதியளவிற்கு 41.64 சதவீதமாக உயர்த்துகிறது.

போர்கள் மற்றும் ஏனைய வன்முறை மோதல்கள், ஆய்வுகளைத் தடுத்தும், உள்கட்டமைப்பைச் சீரழித்தும், மற்றும் ஆவணங்களை அழித்தும், எந்தவிதமான ஆராய்ச்சியின் மீதும் ஒரு பேரழிவுகரமான தாக்கத்தைக் கொண்டுள்ளன. போருக்காக செலவிடப்படும் பெரும் தொகைகள், சமூக அவலநிலையைக் கணிசமாக குறைப்பதற்கு அவசியமாகும் தொகையை மிகச் சிறியதாக்கிவிடுகின்றன. கடந்த ஆண்டு பாதுகாப்பு துறையில் அமெரிக்கா மட்டுமே 496 பில்லியன் டாலர் செலவிட்டது, அதேவேளையில், ஐநா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தகவல்படி, “பட்டினி துயரைத் தீர்க்க உலகிற்கு ஆண்டுக்கு வெறும் 30 பில்லியன் டாலர் மட்டுமே அவசியமாகும்.”

வறுமை, சமத்துவமின்மை மற்றும் இராணுவ வன்முறையின் இத்தகைய மலைப்பூட்டும் மட்டங்கள், முதலாளித்துவ அமைப்புமுறையின் மீது ஓர் அதிர்ச்சியூட்டும் குற்றப்பத்திரிக்கையாக நிற்கின்றன. மனிதயினத்தின் பெரும் பெரும்பான்மையை விலையாக கொடுத்து சமூகத்தை மேலாதிக்கம் செய்கின்ற நிதியியல் செல்வந்த தட்டுக்களைச் செழிப்பாக்குவதே இந்த அமைப்புமுறையின் ஒரே நோக்கமாக உள்ளது.

Read more...

இந்தியாவுக்கு இலங்கையர்கள் விசா இல்லாத பயண முறை அமலுக்கு வந்தது

இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா பிரயாண அனுமதி எடுக்க வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இது நடைமுறைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தினால் புதனன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த மாதம் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் அறிவித்ததற்கு அமைவாக ஏப்ரல் 14 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் உல்லாசப் பயணிகளான இலங்கையர்கள், மின்னியல் பிரயாண அனுமதியின் ஊடாக இந்தியாவுக்குச் சென்றதன் பின்னர் விசா பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆயினும், இராஜதந்திர அலுவலக மட்டத்திலான கடவுச்சீட்டைக் கொண்டிருப்பவர்களும், பாகிஸ்தானிய வம்சாவளி இலங்கை பிரஜைகளும், இந்தியாவில் தொழில் செய்பவர்கள், அங்கு வசிக்கின்ற இலங்கைப் பிரஜைகள் ஆகியோர் இந்த இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க முடியாது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தடவை மாத்திரமே பிரயாணம் செய்யக் கூடிய இந்த முறையின் மூலம் பெறுகின்ற விசா 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இந்தியத் தூதரகம் கூறியிருக்கின்றது.

இந்தப் பிரயாண நடைமுறையின் மூலம் பெங்களுர், சென்னை, டெல்லி, கோவா, ஹைதராபாத், கொச்சி, கொல்கொட்டா, மும்பை, திருவனந்தபுரம் ஆகிய 9 விமான நிலையங்களின் ஊடாக மாத்திரமே இந்தியாவுக்குச் செல்லக் கூடியதாக இருக்கும். எனினும் இந்த நடைமுறையின் மூலம் விசா பெறுபவர்கள், இந்தியாவில் இருந்து வெளியேறும்போது கட்டுப்பாடுகளின்றி, எந்தவொரு விமானத்தளத்தின் ஊடாகவும் அங்கிருந்து பிரயாணத்தை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் புதிய நடைமுறை இலங்கைப் பயணிகளுக்கு பல வழிகளில் நன்மை பயக்கத்தக்கதாக அமைந்துள்ளது என்று, கொழும்பில் உள்ள கிளாச்சிக் ட்ரவல்ஸ் என்ற பிரயாண முகவர் நிலையத்தின் சிரேஸ்ட முகாமையாளர் ரிம்ஸான் மொகமட் தெரிவித்தார்.

பொதுவாக, இந்தியாவுக்கு உல்லாசப் பயணிகளாகச் செல்பவர்கள், தமது நிதி நிலைமையை உறுதிப்படுத்துவதற்காக, வங்கிக் கணக்கின் விபரங்களுக்குரிய ஆவணம் உள்ளிட்ட சில ஆவணங்களைத் தமது விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

ஆனால் அந்த நடைமுறை இந்தப் புதிய ஏற்பாட்டில் இல்லையென்று தெரிவித்தார். எனினும், இது சிங்கப்பூரில் உள்ள நடைமுறையைப் போலல்லாமல், மின்னியல் பிரயாண அனுமதியைப் பெற்றுச் செல்ல வேண்டியுள்ளது என்றும், சாதாரண மக்கள், பிரயாண முகவர்களை நாட வேண்டிய தேவை உள்ளது என்றும் ரிம்ஸான் மொகமட்தெரிவித்தார்.

-சித்தன்-

Read more...

Tuesday, April 14, 2015

இலங்கையில் 'நல்லிணக்கத்துக்கு குறுக்கு வழி இல்லை'-ஐ நா அதிகாரி

இலங்கையில் வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு தீர்வு காண சில நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டாலும், செய்ய வேண்டியவை இன்னும் நிறைய இருப்பதாக இலங்கை சென்றிருந்த ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதியான பாப்லோ டி கிரீப் தெரிவித்துள்ளார். இராணுவ வெற்றியின் மூலமே அனைவரும் ஒன்றாக வாழ்ந்துவிட முடியும் என்பது தவறான அணுகுமுறை என்பதை இலங்கை புரிந்துகொள்ளத் தொடங்கியிருந்தாலும் அனைத்து மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய விஷயத்தில் ஏராளமான பணிகள் இன்னும் உள்ளன என்று அவர் தனது அதிகாரபூர்வ பயணத்துக்கு பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். நாட்டில் முன்னெடுக்கப்பட்ட வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் ஆகியவைற்றுக்கு பொறுப்புக் கூறுவது தொடர்பில் அரசு இன்னும் நிறைய செய்யவேண்டியுள்ளது என்றும் டி கிரீப் தெரிவித்துள்ளார்.

"அரசின் மீதான அவநம்பிக்கை மாற வேண்டும்"

அவ்வகையில் நீண்ட கால அடிப்படையில் அரசு கொள்கைள் மற்றும் அதற்கான ஆலோனைகளை வடிவமைக்கும்போது, அவை பொறுப்புக்கூறலுக்கு அப்பாற்பட்டு இனியும் வன்முறைகள் நிகழாதவாறு பார்த்துக் கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவித் திட்டங்களுக்கான உத்தரவாதத்தை உறுதிப்படுத்தல் போன்றவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்ற மிகப் பெரிய அளவிலான துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளை ஆராயும் பொருட்டு, பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டாலும் பல குழுக்களின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவில்லை என்று கூறியுள்ள அவர், எனினும் பரந்த அளவிலான பரிந்துரைகளுடன் அளிக்கப்பட்ட சில அறிக்கைகள் வெளியாயின என்றும் கூறியுள்ளார். ஆனாலும் அவ்வாறு வைக்கப்பட்ட அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை அல்லது நடைமுறைபடுத்தப்படவில்லை என்பதே பொதுவான நிலைப்பாடாக இருந்துள்ளது எனறும் அவர் கூறுகிறார்.

அரசால் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை பாதுகாக்கவோ அல்லது அவ்வாறான சூழல் மீண்டும் ஏற்படாது என்பதை அரசு உறுதி செய்யும் வகையிலோ காத்திரமான பங்களிப்பைச் செய்யவில்லை என்பதையும் பாப்லோ டி கிரீப் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக அரசு எடுத்த முயற்சிகள் மீது மக்களுக்கு அவநம்பிக்கையே ஏற்பட்டுள்ளது எனவும் அவரது அறிக்கை கூறுகிறது.

"இடைக்கால நிவாரணம் எனும் எண்ணம் கூடாது"

இலங்கை மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும்போது இடைக்கால நிவாரணம் எனும் மனோபாவத்திலிருந்து அரசு வெளிவந்து, உண்மை மற்றும் நியாயத்தின் அடிப்படையில் பிரச்சினைகளை ஆராய்ந்து நீடித்திருக்க கூடிய வகையில் தீர்வுகளை முன்வைத்து அதை நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நாட்டில் நீதித்துறையை பலப்படுத்தவும் காத்திரமான நடவடிக்கைகள் தேவை எனவும் அப்படியாக செய்வதன் மூலமே அரச நிறுவனங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் எனவும் அவரது அறிக்கை கூறுகிறது. இலங்கை முன்னேறிக் கொண்டு வரும் வேளையில் அண்மைக் காலமாக நல்லிணக்கம் எனும் சொல் அங்கு மிகவும் கவனத்தை ஈர்த்திருந்தாலும், குறுக்கு வழி மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது எனவும் பாப்லொ டி கிரீப் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நீதிக்கு கட்டுபட்ட வகையில், உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு, இழப்பீடுகள் வழங்கப்பட்டு, தவறுகள் மீண்டும் நடைபெறா வண்ணம் உறுதிப்படுத்தப்பட்டாலே நல்லிணக்கம் ஏற்படும் என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நல்லிணக்கத்துக்கு குறுக்கு வழிகள் இல்லை"

நல்லிணக்கம் ஏற்படுவதற்கு மாற்று வழிகளை ஆராயாமல் அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

சில ஆதாயங்களுக்காக பலதை விட்டுவிடுவது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்காமல் நடைமுறைக்கு ஒவ்வாத மாற்று வழிகளை தெரிவு செய்யுமாறு கூறுவதெல்லாம் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு உதவாமல் எதிர்மறையாகவே அமையும் எனவும் ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதி கூறுகிறார். நாட்டில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அடுத்தவர்கள் மறந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு என்பது அடிப்படை உரிமை என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு தீர்வு காண அரசு முன்னெடுக்கும் கொள்கையானது, அந்த முடிவை எடுக்கும் அரசின் கொள்கையாக இல்லாமல் ஆட்சியில் யார் இருந்தாலும் மாறாத அரச கொள்கையாக இருக்க வேண்டியது அவசியம் என்றும் அவரது அறிக்கை வலியுறுத்துகிறது. அப்படியான கொள்கை முடிவுகள் அடுத்து வரும் அரசுகளால் அழித்தொழிக்க முடியாத வகையில் இருப்பதும் மிகவும் அவசியம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. அரசு எடுக்கும் கொளை முடிவுகளானது அடிப்படை உரிமைகள், உண்மைகளுடன் தொடர்புடையவை, நீதி மற்றும் நியாம் சார்ந்தவை, இழப்பீடுகளுடன் சம்பந்தபட்டவை, இனியும் அவ்வாறானத் தவறுகள் நடைபெறாது எனும் உத்திரவாதங்கள் தேவைப்படுபவை என்பதை கவனத்தில் கொண்டு உருவக்கப்ப்ட வேண்டும்.மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசு எடுக்கும் முடிவுகள் குறுகிய அரசியல் இலாபங்களுக்காகவோ அல்லது இனம் மதம் மொழி அடையாளங்கள் போன்றவற்றை மனதில் வைத்தோ எடுக்கப்படக் கூடாது எனவும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு பிரதிநிதி பாப்லோ டீ கிரீப்பின் அறிக்கை கூறுகிறது.

அவர் இலங்கை அரசின் அழைப்பின் பேரில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி முதல் இம்மாதம் 3ஆம் தேதி வரை நாட்டின் வடக்கு கிழக்கின் பல பகுதிகளுக்கு பயணம் செய்து, பல்தரப்பினரைச் சந்தித்து உரையாடி தகவல்களை சேகரித்ததன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அறிக்கையின் முன்னுரையில் கூறியுள்ளார்.

-சித்தன்-

Read more...

மைத்திரி அரசு மீது டிரான்ஸ்பெரென்ஸி விமர்சனம்

இலங்கையில் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசு பொதுமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றத் தவறிவிட்டதாக டிரான்ஸ்பெரென்ஸி இண்டர்நேஷனலின் இலங்கைக் கிளை தெரிவித்துள்ளது. உலகளவில் ஊழலுக்கு எதிராகவும், அரசுகள் வெளிப்படைத் தன்மையைப் பேண வேண்டும் என்பதைக் கோட்பாடாகக் கொண்டும் இயங்கும் டிரான்ஸ்பெரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு, இலங்கை அரசு மீது சில விமர்சனங்களை வைத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டபோது, நாட்டில் பல மாறுதல்களைக் கொண்டுவரும் நோக்கில் 100 நாள் வேலைத்திட்டத்தில் சில திட்டங்களை அவர் அறிவித்திருந்தார். அதில் ஊழலை ஒழிப்பது, செலவினங்களைக் குறைப்பது, ஜனநாயக அமைப்புகளை மீண்டும் கட்டியெழுப்பவது போன்ற பல அம்சங்களை அடங்கியிருந்தன. புதிய அரசு வேலைத்திட்டங்களை அறிவித்திருந்தாலும், ஊழல் ஒழிப்பு போன்ற விஷயங்களில் போதிய முன்னேற்றம் இல்லை என டிரான்ஸ்பெரன்ஸி இண்டர்நேஷனலின் இலங்கைக் கிளையின் மூத்த அதிகாரியான ஷான் விஜேதுங்க தெரிவித்தார்.

அரச செலவினங்களை குறைப்பது என்பதும் மைத்திரிபால சிறிசேன அவர்களின் 100 வேலைத் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகப் பார்க்கப்பட்டது. அமைச்சரவையில் 25 அமைச்சர்களே இருப்பார்கள் என்று அவர் கூறியதற்கு மாறாக இப்போது பிரதமர் உட்பட 40 பேர் காபினெட் அமைச்சர்களாகவும் மேலும் பலர் இராஜாங்க மற்றும் துணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்தும் டிரான்ஸ்பெரென்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது

-சித்தன்-

Read more...

Monday, April 13, 2015

வவுனியா மகாறம்பைக்குளத்தில் உதயதாரகை விளையாட்டுக் கழகம் திருஞானசம்பந்தர் வித்தியாலயத்தில் சமூக சீர்கேடு

வவுனியாவில் இதுவரை அண்ணளவாக 120 விளையாட்டுக் கழகங்களுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனால் அத்தனை கழகங்களும் சரியான முறையில் இயங்குவது இல்லை எனற குற்றச்சாட்டை யாரும் மறுக்க முடியாது. இதே வேளை விளையாட்டுக் கழகங்கள் தமது கழக அபிவிருத்தி என்ற பெயரில் நிதிகளை பல வழிகளில் திரட்டி அவற்றை தவறான வழிகளுக்கு பயன்படுத்துகின்றனர். இத்தகைய சம்பவம் ஒன்று வவுனியா நகர் பகுதியில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மகாறம்பைக்குளம் பகுதியில் உள்ள உதயதாரகைவிளையாட்டுக் கழகத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த உதயதாரகை என்ற விளையாட்டுக்கழகம் சில ஆண்டுகளுக்கு முன் வவுனியா பிரதேச செயலக விளையாட்டுப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. அதே நேரம் மூன்று வருடங்களுக்கு முன் இந்த விளையாட்டுக் கழக வீரர் ஒருவர் அதே விளையாட்டுக் கழக சிறுவர்கள் சிலரால் அடித்து கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்க விடயமாக இருக்கின்றது. இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள இந்த விளையாட்டுக் கழகத்தில் மீண்டும் ஒரு குற்றச் செயல் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

அதாவது கடந்த சில வாரங்களாக இந்த விளையாட்டுக் கழகம் தமது கழக அபிவிருத்திக்காக என்று மென்பந்து கிரிகட் சுற்று போட்டி ஒன்றை நடாத்தி வருகின்றது. இதற்கு எழுபது அணிகளுக்கு மேல் பங்குபற்றியுள்ளதாக அந்த கழகத்தின் ஆரம்பகால உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். நடாத்தப்படும் இந்த போட்டியில் இதுவரை ரூபாய் 85000.00 வரை சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இதை விட அனுசரணையாளர்களிடம் இருந்து குறிப்பிட்ட தொகைப் பணம் பெறப்பட்டுள்ளதாகவும் ஊர் மக்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

இந்த பணம் எதற்கு பயன்படுகின்றது என்று கேள்விக்குறியாகவே இருக்கின்றது. அத்தோடு இந்த கழகம் வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியால மைதானத்திலேயே நடைபெறுகின்றது. இங்கு போட்டிகளில் கலந்துகொள்ள வரும் வீரர்களும், உதயதாரகை அணி வீரர்களும் பாடசாலை வளாகத்தை புகைத்தல் மற்றும் சமூக சீர்கேட்டு வேலைகளுக்கும் பயன்படுத்துவது அறியப்பட்டுள்ளது. இதற்கு பாடசாலை சமூகம் கூறபோகும் பதில் என்ன?

வலயக்கல்வி அதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு எம் நிருபர் குழு சென்ற வேளை வரும் புதன்கிழமை

மகாறம்பைக்குளத்தில் இருந்து
கண்ணன்

Read more...

Sunday, April 12, 2015

'சிறுபான்மை மக்களுக்காக குரல் தந்த ஒரே மஹாநாயக்கர்'

காலஞ்சென்ற அஸ்கிரிய பீடாதிபதி வண. அக்கமஹா பண்டித உடுகம சிறி புத்தரகித்த மஹாநாயக்கர் சிறுபான்மை சமூகங்களுக்காக குரல் கொடுத்த ஒருவர் என்று பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் கூறியுள்ளார். காலஞ்சென்ற மஹாநாயக்கரின் இறுதி நிகழ்வுகள் இன்று அரச மரியாதையுடன் கண்டி அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் நடந்தன. அதற்காக தேசிய துக்கதினமும்இலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கையின் முக்கிய பௌத்த பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய பீடத்தின் தலைவர் குறித்து கருத்து தெரிவித்த, பேராதனை பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் தகைமைசார் பேராசிரியரான சி. பத்மநாதன் அவர்கள், ''ஜனநாயகம் பற்றியும் சிறுபான்மை மக்களின் நலன்கள் குறித்தும்'' அவர் வலியுறுத்தியிருந்ததாகவும் குறிப்பிட்டார்

- சித்தன் -

Read more...

ஆடை அவிழ்க்கும் அனந்தியும் வெட்கித் தலைகுனியும் மக்களும் !

நான் எந்த சந்தர்ப்பத்திலும் புலிகள் அமைப்பில் இருக்கவில்லை என திருவாய்மலர்ந்துள்ளார் அனந்தி சசிதரன். எழிலன் என்ற புலிகளின் திருமலை அரசியல் துறை பொறுப்பாளராக இருந்து, மாவிலாறு தண்ணீரை மறித்து இறுதி யுத்தத்தத்திற்கு வித்திட்ட சம்பவத்தை ஆரம்பித்து வைத்த நாயகனும் பின் முள்ளிவாய்க்காலில் எம் உறவுகள் பலரை பரலோகம் அனுப்பிய வாள் வீரனின் மனைவி தான் அவ்வாறு பத்திரிகையாளர் மாநாடு நடத்தி .பகிரங்கபடுத்தியுள்ளார். 

மாகாணசபை தேர்தலில் காலத்தில் அக்காவை வெல்லவைக்க புலம்பெயர் புலி தம்பிகள் உண்டியலில் பணம் அனுப்ப புலிகளின் மஞ்சள் நிறத்தில் சிவப்பு கரை சேலைகட்டிய சிங்காரி மேடை ஏறி சன்னதமாடினார்.

கோவலன் கொலைக்கு கண்ணகி போராடியதில்அவளிடம் நியாயம் இருந்தது அதை அவள் கால்சிலம்பு நிரூபித்தது. ஆனால் எழிலன் நிலைமைக்கு யார் காரணம் என்பதை அறிந்தும் இந்த அடங்காபிடாரி ஆடிய கூத்தை வாய்பிளந்து பார்த்த வாக்களா பெருமக்கள் அள்ளிப்போட்ட (கள்ள வாக்குகள் உட்பட ) வாக்குகளால் அனந்தி மாகாண சபையின் ஆஸ்தான பெண் உறுப்பினர் ஆனார்.

இப்போ தான் எப்போதுமே புலிகள் அமைப்பில் இருக்கவில்லை தான் உடுத்த மஞ்சள் நிற சிவப்பு காரை சேலை நான் வேசம் கட்டிய மாற்று சேலை என அவிழ்த்து வீசிவிட்டார். எழிலன் என்ற புலியுடன் கூடி குலவி குடும்பம் நடத்தியதால் மட்டுமே அவருக்கு வாக்களிக்க சொன்னவர்களும் வாக்களித்தவர்களும் புலிகளின் அடையாள சின்னமான சேலையை அவிழ்த்தெறிந்த அவரது அம்மண அரசியல் செயலை பார்த்து வெட்கித் தலைகுனிகின்றனர் .

அனந்தி அவர்களே ஒரு கண்ணியமான வேண்டுகோள் இன்று நீங்கள் என்றுமே புலி அமைப்பில் இருக்கவில்லை என கூறியதுபோல் நாளை சசிதரன் என்ற புலி எழிலன் எனது பிள்ளைகளுக்கு தகப்பன் இல்லை. அந்த சசிதரன் வேறு எழிலன் என்ற புலி அமைப்பு பெயர் கொண்ட சசிதரன் வேறு என கூறி அதை நிரூபிக்க டி என் ஏ ரெஸ்ற் வரை போவதாக சவால் விட்டு விடாதீர்கள்தீர்கள். அப்படி செய்தால் உங்கள் நிலை கிழிஞ்சிது கிஷ்ணகிரி போலாகிவிடும்.

வட மாகாண சபை தேர்தலில் அனந்திக்கு வாக்களித்த வட்டுக்கோட்டை உட்பட்ட வாக்காளப் பெருமக்களே சுட்டாலும் சங்கு வெண்மைதரும் என்ற உண்மை உங்களிகளிற்கு தெரியாதா ?

எத்தனை இடர் வந்தாலும் துயர் துன்பங்கள் பெரும்சோதனை வந்தாலும் இன்றுவரை நெஞ்சுரத்துடன் சொந்த மண்ணில் நின்று நிலைத்து வாழும் உங்களை

புலம் பெயர் நாடுகளில் புகலிடம் தேடியவர் இங்குள்ள உண்மையான கள நிலவரம் அறியாமல் தரும் அறிவுறுத்தல்களை சீர்தூக்கி ஆராயாமல் மதி மயக்கும் மாத்திரையாய் செயல்படும் அவர்கள் அனுப்பும் சில லட்சம் பணம் உங்களை செயல் படுத்தவிடலாமா ?.

அதன் விளைவாக சிறுமதி படைத்த அனந்தி போன்ற மேடை தோறும் வேசம் போட்டு சேலை மாற்றும் சிங்காரிகள் உங்கள் வாக்குகளால் பதவிக்கு வரலாமா ?

தேர்தலுக்காக உண்டியலில் வந்த பணம் வட்டிக்கு விடப்பட்டு அது குட்டி போடும் தைரியத்தில் தான் அவ துள்ளுகிறா என்பதை அயலவர் அறிவார்கள்.

சேர்க்க வேண்டியது சேர்த்தாகிவிட்டது இனி பிள்ளைகளுடன் பத்திரமாய் வாழ்வதற்கு போய் சேர வேண்டிய இடத்தில் சிக்கல் வரக்கூடாது என்பதற்க்காகவே புலிச்சாயா சேலையை பத்திரிகையாளர் முன் அவிழ்க்கிறார் ஆனந்தி அவர்களும் வாய்பிளந்து பார்த்து எழுதுகிறார்கள்.

அரசியல் புலுடாவின் ஆரம்ப செயல் இது என்பது உங்களுக்கு புரியாதா அனந்திக்கு வாக்களித்த மக்களே ?

அன்று வட மாகாண சபை தேர்தலில் இதை கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது வெள்ளிடை மலை.

நாம் வீடுகளில் நாய்க்கு உணவு கொடுப்பது எம்மை காக்கவும் நன்றிமறக்காமல் இருக்கவும் தான்.

அதே போல் எம்வாக்குகளை போடுவது எம் நலன் சார்ந்த பணிகளை செய்யவும் எம்மை விலை பேசாமல் இருக்கவும் தான்.

ஆனால் அனந்திக்கு வாக்களித்த மக்கள் விசர் நாய்க்கு உணவளித்த நிலைக்கு வந்துள்ளனர்.

விசர் வந்தால் நாய் நன்றி பாராட்டாது. கடித்து உங்களுக்கும் விசர்வர வைக்கும். மேலதிகமாக திண்டதை எம் வீட்டு வாசலிலே கக்கி வைக்கும்.

வீட்டு சின்ன கட்சி தலைவர் மாவையார் செய்த செயலால் அனந்தி மயங்கி விழுந்ததாகவும் பின் அது பிரசர் மயக்கம் எண்டும் ஒரு செய்தியும்வந்தது. அதுக்கு பிறகு சேனாதியார் விதைவைகளை மணமுடிக்க வாங்கோ அவர்களின் பிள்ளைகளை பராமரியுங்கோ எண்டு இளைஞர்களுக்கு விட்ட அழைப்பும் பரவலா இப்ப பேசப்படுற விசயம்.

ஆனா அவற்ற கொடும்பாவியும் இப்ப கொழுத்துப் படுது. அனந்தி அதுக்கும் தனக்கும் சம்மந்தமில்லை எண்டு சொல்லுறது எங்கப்பன் குதிருக்குள்ள இல்ல என முந்திக்கொள்வது போலத்தான் என்பதை அனந்திக்கு வாக்களித்த மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

செத்தயில இருந்தத கொண்டுவந்து மெத்தையில கிடத்தினாலும் அது செத்தயில செய்தத தான் மெத்தையிலயும் செய்யும்.

அது மாதிரி அனந்திய மாகாண சபைக்கு அனுப்பினாலும் அவ சேலை அவிழ்க்கும் செயலை தான் செய்யிறா.

அதுக்கு நடுக்கடலிலும் நக்குத்தண்ணி தான் என்ற முனோர் அனுபவ வாக்கு பொய்த்து போகாது.

போலிகளை கண்டு ஏமாறும் எம் மக்களுக்கு மீண்டும் பட்டை நாமம் போட்டுவிட்டார் அனந்தி அக்கா.

நான் தான் கையளித்தேன் என்கணவரை திருப்பித்தா என இராணுவத்திடம் கேட்கும் அதே

நிலைமையில் தான் எழிலனால் தம் கண்முன்னால் பிடிக்கப்பட்டவர்களின் தாய் தகப்பன் சகோதரர் மற்றும் உறவுகளின் நிலை. அவர்களும் புலிகளின் எச்ச சொச்சங்களிடம் தான் தம் உறவுகளுக்கு நடந்ததை உறுதிப்படுத்த முடியும்.

அதனால் தான் அனந்தி தரும் தகவல் அறிய அவர்கள் சென்றால் புலனாய்வு பிரிவு துரத்துவதாக புலம்புகின்றா அனந்தி. உறவுகளை தொலைத்தோர் ஆற்றில் போட்டதை குளத்திலா தேட முடியும்.

எழிலன் பிடித்து சென்றவரின் உறவுகள் பற்றி அவரிடம் கேட்டால் அதற்கு பதில் கூறும் திராணி கூடவா அனந்திக்கு இல்லை. அதில் இருந்து தப்பவா இன்று புலிச்சாய சேலை அவிழ்க்கும் அறிவிப்பு.

புலிகள் அமைப்பில் எதிரியிடம் சிக்கும் நிலை வந்தால் சயனைட் கடிக்க வேண்டும் என்பது கட்டாய விதி. அந்த விதி மீறல் ஆரம்பத்தில் அருணா என்ற புலி பிடிபட்டு பூசாவில் இருந்து பின் கிட்டுவிடம் இருந்த இராணுவதிற்கு பிடிபட்ட புலிகளை பரிமாறும் போது தெரியவந்தது.

அன்று பிடிபட்ட அருணா சயனைட் கடிக்கவில்லை ஆனால் பின்பு பொதுமன்னிப்பு வழங்கியபின் ஆயுதம் கடத்தியதாக பிடிபட்ட குமரப்பா புலேந்திரன் உட்பட தடுத்துவைக்கபட்ட புலிகள் கடிக்க சயனைட் பிரபாகரனால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விந்தையான விதிமுறையால் வீழ்ந்து பட்ட பல போராளிகள் நம்பிக்கெட்டவர்கள்.

ஏனென்றல் பிரபாகரன் மரணம் கூட சயனைட் கடித்ததால் ஏற்படவில்லை என்பது உறுதியான செய்தி. அவர் சண்டையில் சாகவில்லை என்பது சனல் 4 கொலம் மக்றே கூறும் செய்தி.

எது எவ்வாறாயினும் சண்டையில் செத்திருந்தால் ஒரு குண்டாவது அவர் பருத்த உடலின் முன்பகுதியில் பாய்ந்திருக்கும் புறமுதுகு இட்டு ஓடினால் எங்கு பாயும் என புற நானூறு சொல்கிறது. இறுதி வரை தன் உயிரை காப்பாற்ற ஓடி தன் பிடரியில் வெடி அல்லது வெட்டு வாங்கிய பிரபாகரன் எந்த வகையறா ? சரணடைந்த எழிலன் தந்த வகையறா ? சிந்தியுங்கள் மக்களே

எழிலனின் மனைவி என்ற ஒரே காரணத்தால் வட மாகாண சபை தேர்தலில் களமிறக்கப்பட்டு மாவீரர்களின் வீரத்தை புகழ்ந்து மேடைதோறும் பேசி மக்களின் வாக்குகளை பெற்று மாகாணசபைக்கு தெரிவான அனந்தி,

நீதிபதியாய் தொழில் புரிந்தபோது சட்டப்படி தண்டனை வழங்கியவர் பின் தன் மனசாட்சி படி பிரபாகரன் மாவீரன் என பேசுகிறார் என மக்கள் நம்பியதால் முதலாம் இடத்தில் வந்தவர் முதல்வர் ஆனதால்

தான் இரண்டாம் இடத்துக்கு வந்ததை கவனத்தில் கொண்டு மந்திரி பதவிக்கு அனந்தி ஆவலோடு காத்திருந்தார்.

தியாகிகளான மாவீரர்களின் ஆத்மா தான் அது நிகழாமல் உங்களை காத்தது என்பதை அனந்திக்கு வாக்களித்த மக்கள் அனைவரும் இப்போது அவவின் ஆடை அவிழ்ப்பிற்க்கு பின்னாவது உணர்ந்து கொள்ளுங்கள்.

உண்மையில் அந்த இன்னுயிர் நீர்த்தவர்களை நினைவில் கொண்டுள்ளீர்கள் என்றால் இனி வரும் தேர்தலிகளில் உங்கள் நலன் பேணும் கொள்கையை கொண்ட அதை பகிரங்கமாக செயல்ப்படுத்தும் கட்சி வேட்பாளரை தெரிவு செய்யுங்கள்.

அவர்கள் மீது சுமத்தப்பட்ட கொலை பழிகள் ஒவ்வொன்றாக விசாரிக்கப்பட்டு உண்மை நிலைமைகள் வெளிவர தொடங்கிவிட்டது.

கேள்விச் செவியன் ஊரை கெடுத்தான் என்பது போல வீண் வதந்திகளை நம்பி உங்கள் நலன் பேணுபவர்களை விட்டு ஆடை அவிழ்ப்பவர்களுக்கு வாக்களியாதீர்கள்.

கூடிய விரைவில் உங்களால் தெரிவு செய்யப்பட்ட போலி தமிழ் தேசியம் பேசுபவர்களின் அம்மணமும் உங்களை வெட்கி தலைகுனிய வைக்கும்.

அவர்களை விரட்ட உங்கள் வீட்டில் உள்ள பழைய விளக்குமாறு தும்புத்தடிகளை இப்போதே சேர்த்து வைக்க தொடங்குங்கள். தேர்தல் காலத்தில் அவை தேவைப்படும்.

காரியச்சித்தன்

Read more...

Saturday, April 11, 2015

தற்போது நீதியரசர்கள் தீர்ப்பு பற்றி கலந்துரையாட அலரி மாளிகைக்கு செல்வதில்லை!

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் சவால்களுக்கு உட்படுத்தப்படுவதில்லை எனவும், தாம் வழங்கும் தீர்ப்புத் தொடர்பில் கலந்துரையாட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் அலரி மாளிகைக்குச் செல்வதில்லை எனவும் அமைச்சர் சஜீத் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

நாம் நீதிபதிகளுக்கு கல் வீசுவதோ, சேறு பூசுவதோ இல்லை எனக் கூறிய அவர், 19வது திருத்தச் சட்டம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

தங்காலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தற்போது எந்தவொரு வழக்குத் தொடர்பிலும் நீதிபதிகளுக்கு நாட்டை பற்றி சிந்தித்து, சுயாதீனமான முடிவை எடுக்க முடியும் எனவும் சஜித் பிரேமதாஸ இங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கடந்த அரசாங்கத்தைப் போல நீதிமன்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Read more...

ஞான சார தேரரின் மறுபக்கத்தை போட்டுடைக்கின்றார் முன்னாள்! சகா.. மகள், மனைவி! பரபரப்பூட்டும் அதிர்ச்சித் தகவல்கள்..??

(ஏ எம் எம் முஸம்மில்- பதுளை-) கடந்த ஆட்சியின் போது “ பொது பல சேனா ” பௌத்ததீவிரவாத அமைப்பின் மூலம் இந் நாட்டில் இனவாத தீயை மூட்டி நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல முயன்றது நாடறிந்த உண்மையாகும். இவ்வியக்கத்தின் பிரதான தலைவர்களுள் செயலாளர் ஞான சாரவின் வகிபாகம் மிக முக்கியமானதாகும்.

இவர் முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் நேரடி கட்டளைப் படி இயங்கியவர் என்று பரவலாக பேசப் படுகின்றது.

ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் இவ்வமைப்பு பற்றியும் இவ்வமைப்பின் பின்னணி பற்றியும் அவ்வப்போது பல ரகசியங்கள் வெளிவர தொடங்கியது. இவ்விரகசியங்களின் உச்சகட்டமாக “ பொதுபலசேனா ” அமைப்பின் மிக முக்கிய தொண்டராக செயற்பட்ட ஜா எல பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்த அஞ்சு பெரேரா என்பவரால் தற்போது வெளியிடப் பட்டிருக்கும் தகவல்கள் ஞான சார தேரரின் மறுபக்கத்தை தோலுரித்து காட்டியுள்ளது. அவர் கூறிய அதிர்ச்சித் தகவல்கள் கீழ்வருமாறு ……..
.

ஞான சாரவுக்கு தேவைப்பட்ட பி எம் டப்ளியு (BMW- Car) கார்வண்டியும், டிபென்டர்ரக கெப் வண்டியும்.

“ இந் நாட்டில் எம்மைவிட்டுப் பிரிந்த சோம தேரரை போன்ற ஆளுமை மிக்க பௌத்த தேரர் ஒருவர் இந் நாட்டிற்கு மிகவும் தேவை என நான் உணர்ந்திருந்தேன். அந்த இடைவெளியை நிரப்ப பிறப்பெடுத்தவர் தான் ஞானசார என்று எனதுள்ளம் சொல்லியது. அப்படி என் மனம் சொன்ன போதே நான் பொதுபல சேனாவுடன் இணைந்து கொண்டேன்.

பொது பல சேனாவின் பதுளை மாநாட்டின் பின்பே நான் ஞான சாரவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தேன். நெருங்கிபழக ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் இருந்தே பொது பல சேனாவின் எல்லாவகையான வேலைத்திட்டங்களிலும் மிகவும் விருப்பத்துடன் பங்கேற்றேன். ஞான சாரவுடன் நெருங்கிபழக ஆரம்பித்த கட்டத்தில் அவருக்கு தூர பயணங்களுக்காக தனிப்பட்ட வாகனம் ஒன்றிருக்க வில்லை என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அத்துடன் அப்போதைக்கு அவருக்கான அத்தியாவசிய தேவைகள் இரண்டினை மையப்படுத்தி எனக்கு உணர்த்தப் பட்டது. ஒன்று அவருக்கான பிரத்தியேக வாகனம், மற்றையது அவரது பாதுகாப்பு.

என்னிடத்தில் பி எம் டப்ளியு (BMW- Car) கார் ஒன்றும், டிபென்டர் ரக கெப் வண்டியுமாக இரண்டு வாகனங்கள் இருந்தன. ஞான சார தேரருக்காக அவ்வாகனங்களை வழங்குவதில் எனக்கு எந்த சிரமும் இருக்க வில்லை. ஆகவே அவற்றை நான் அவருக்காக வழங்க விருப்பத்துடன் முன்வந்தேன். மற்ற விடயம் நான் ஒரு அரசியல்வாதி என்ற ரீதியில் என்னுடன் எப்பொழுதுமே இளைஞர் கூட்டமொன்று கூடவே இருப்பார்கள். ஆகவே பாதுகாப்பிற்கு அவர்களை பயன்படுத்த நான் முன்வந்தேன். ஆகவே நாங்கள் பயணங்கள் போகும் போது ஞான சார தேரரை எனது கார்வண்டியின் முன் ஆசனத்தில் அமரச் செய்து, கெப் வண்டியில் இளைஞர் கூட்டத்தையும் ஏற்றிக்கொண்டு நாங்கள் பயணங்களை சென்று வந்தோம்.

ஆக, பி எம் டப்ளியு (BMW- Car) கார் ஒன்றும், டிபென்டர் ரக கெப் வண்டியும் ஞானசாரவுக்கு கிடைத்தாயிற்று. அத்துடன் ஞானசார ஹாமுதுருவுடன் மேலும் அண்மித்து பழகக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

முறையான தொரு வேலைத்திட்டமோ, திட்டமிட்ட செயற்பாடோ இல்லாத பொது பல சேனா

நாங்கள் வாகனத்தில் பல பயணங்களை சென்றோம் . பயணம் நெடுகிலும் பல விடயங்களைப் பற்றி பேசினோம். பி பி எஸ் சுக்கு வெளிநாட்டு பணம் வருகின்றது என்பதை ஆரம்பத்தில் நான் நம்ப வில்லை. அனால் இவர்களுக்கு பல வெளிநாட்டு தொடர்புகள் உண்டு, நான் ஞானசார ஹாமுதுருவுடன் ஒன்றாக இருந்தாலும் பி பி எஸ் பற்றி நான் அவதானித்த விடயம் தான் இவர்களுக்கென்று திட்டமிட்ட செயட்படொன்று கிடையாது. மாநாடுகள் செய்கின்றார்கள், கூட்டங்கள் நடத்துவார்கள் ஊடக சந்திப்புகளை நடத்துவார்கள், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை செய்வார்கள், ஆனால் அதற்கு அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று தேசிய ரீதியிலானதொரு முறையான திட்டம் கிடையாது. நான் இதுபற்றி ஹாமுதுருவுடன் நேரடியாகவே பல முறைகள் கதைத்துள்ளேன். ஆனால் ஒன்றும் பலனளிக்க வில்லை.


பிரான்சில் இருந்து வந்த ஞான சாராவின் மகளும், மகளின் தாயும்.

ஞானசார ஹாமுதுருவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிழைகள் பிரச்சினைகள் இருப்பதை நான் அறிந்து கொண்டேன் . ஆனாலும் இவர் பற்றிய உண்மைத்தகவல்கள் வெளியுலகத்திட்கு தெரிய வருவதால் எமது இயக்கத்திற்கும் அதன் தேசிய வேலைத்திட்டத்திட்கும் பாதிப்புகள் ஏற்படும் என்ற காரணத்தால் இவரின் குறைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடிவு செய்திருந்தேன்.

இவர் பற்றிய உண்மைத்தகவல்கள் எனக்கு எவ்வாறு தெரிய வந்ததென்றால், ஒருநாள் ஞானசார ஹாமுதுரு என்னிடத்தில் சொன்னார், “ தம்பி பிரான்சிலிருந்து அக்கா ஒருவர் வருவார், அவர் எமக்கு மிக வேண்டியவர். எமது இயக்கத்திற்கும் நிறைய உதவி செய்பவர். அவர் வந்தால் நாங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும், நீங்கள் உதவி செய்வீர்கள் தானே.” என்று என்னிடம் கேட்டார். நானும், “ நீங்கள் எந்த உதவியைகேட்டாலும் நான் செய்து தர காத்திருக்கின்றேன் வேண்டியதை கேளுங்கள் ” என்று அவருக்கு தெரிவித்தேன்.

பிரான்சிலிருந்து அந்த அக்காவும் வந்தார். பொல்கஹவலயில் உள்ள கிரிபத்கொட ஞானானந்த ஹாமுதுருவின் சமய மத்தியச்தானமொன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வழிபாட்டு நிகழ்வொன்றில் வைத்தே நான் அந்த அக்காவை முதன் முதலில் சந்தித்தேன். அவரின் பெயர் “மனோஜா” என்று எனக்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. அவருடன் இன்னும் இரண்டு பெண் பிள்ளைகளும் கூட இருந்தார்கள்.

பொலன்னறுவைக்கு சுற்றுலா சென்ற ஞானசார ஹாமுதுருவின் குடும்பம்

பொல்கஹவெல சமய நிகழ்வு முடிந்தவுடன் ஞானசார ஹாமுதுரு என்னிடம் சொனார்,” தம்பி அக்காமார்களை இன்னும் எங்கும் கூட்டி போகவும் இல்லையே. நாங்கள் அப்படியே கொஞ்சம் பொலன்னறுவைக்கு சென்று வருவோம். காடு, மரமட்டைகளை அவர்களுக்கு காட்டிய மாதிரியும் இருக்குமல்லவா ? என்று. நானும், “ஆம் சென்று வரலாம்” என்று கூறியதும் நாங்கள் பொலன்னறுவைக்கு சென்றோம். எனது வாகனத்தின் முன் ஆசனத்தில் ஞான சார ஹாமுதுரு அமர்ந்திருந்தார். பின் ஆசனத்தில் மனோஜா அக்காவும் பெண் பிள்ளைகள் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களின் பெரிய பிள்ளைக்கு சுமார் பதினாறு வயது மதிக்க கூடியதாக இருந்தது. இளைய பிள்ளைக்கு சுமார் பதினான்கு வயது இருக்கும்.

பயணத்தில் இடையில் வாகனத்தை கொஞ்சம் நிறுத்துமாறு ஞானசார என்னிடம் கூறினார். வாகனத்தை நிறுத்தியதும் ஞானசார ஹாமுதுரு பின் ஆசனத்திட்குச் சென்று பெரிய பெண் பிள்ளையை முன் ஆசனத்திற்கு அனுப்பினார். இரண்டு பிள்ளைகள் இருக்கும் போது இளைய பெண்பிள்ளைக்கு அளவில்லா அன்புகாட்டுவதை அவதானிக்க முடிந்தது. நன்கு புஷ்டியாக வளர்ந்திருந்த அந்த பிள்ளைக்கு ஞான சார ஹமுதுருவின் முக சாயல் அப்படியே இருந்தது, அப்பிள்ளையின் முகத்தை தனது மடியில் சாத்திய ஞானசார அவளின் தலையை கோதிவிட்டு ஆதரவுடன் தழுவிக் கொண்டு வந்தார். அப்போது தான் இந்த பிள்ளை ஞானசாரவுடையதாக இருக்குமோ என்று எனக்குள் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.

இளைய பெண்பிள்ளை தனது மகள் என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்த ஞானசார

பொலன்னறுவைக்கு சென்ற நாங்கள் மாலை நேரம் ஓய்வு எடுப்பதற்கு தனியானதொரு ஹோட்டல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நந்த ஹாமுதுருவின் வண்டி ஓட்டுனர் மற்றும் அந்த வாகனத்தில் வந்த இன்னும் சில ஹாமுதுருமாரும் ஒரு பிரத்தியேக அறையில் தங்கினார்கள். நாங்கள் பிறிதொரு பக்கத்தில் வேறொரு அறையில் தங்கினோம். இவ் ஏற்பாடுகளை ஞானசார ஹாமுதுரு தொலைபேசி மூலம் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தார். என்பது குறிப்பிடத் தக்கது. சற்று நேரம் ஓய்வெடுத்த நாம் மீண்டும் எழுந்து மின்னேறிய யானைகள் பார்க்கச் சென்றோம் . யானைகள் பார்த்துவிட்டு நாங்கள் கொழும்பை நோக்கி பயணமானோம். வரும் வழியில் இவர்களின் நடத்தைகளை வைத்து, குறிப்பிட்ட பெண் பிள்ளை ஞானசாரவினுடையது தான் என்பதை நான் ஊர்ஜிதப் படுத்திக் கொண்டேன். ஓரிடத்தில் வைத்து ஞானசார ஹாமுதுருவே என்னிடத்தில் சொன்னார், “அந்த பிள்ளையின் தந்தை நான்தான்” என்று. எனது ஊகமும் சரியாகிட்டு.

கொழும்பில் டெனிஸ் விளையாடிய ஞானசாரவின் மகள்

குறிப்பிட்ட பெண் பிள்ளை தன்னுடையது என்று கூறிய ஞானசார ஹாமுதுரு, அவள் ஒரு டெனிஸ் வீராங்கனை என்றும் அவள் பிரான்சிற்கு திரும்பி சென்றதும் டெனிஸ் போட்டித் தொடரொன்றில் ( tennis tournament ) விளையாட இருப்பதாகவும் என்னிடம் சொன்ன அவர் போகும் வரைக்கும் அவளுக்கு டெனிஸ் பயிற்சி பெற நல்லதொரு இடத்தை தெரிவு செய்து தருமாறும் வேண்டினார்.

ரத்ன பிட்டி சிங்காரா டெனிஸ் கழகத்தின் எனக்கு தெரிந்த என் நண்பர் ஒருவர் மூலமாக நான் அந்த ஏற்பாட்டை செய்து கொடுத்தேன். பின்பு நானே அவளை தினமும் மாலையில் டெனிஸ் விளையாட வாகனத்தில் கூட்டிச் செல்வதும் விளையாடி முடிந்ததும் மீண்டும் கூட்டிவருவதுமாக பல உதவிகளை செய்தேன். அந்த நாட்களில் ஹாமுதுரு சொல்லும் இடங்களுக்கெல்லாம் அவர்களை நான் கூட்டிச் செல்வேன். அவர்களின் குடும்பத்தில் ஒருவனாகவே பல உதவிகளை செய்து கொடுத்தேன்.

தனது குடும்பத்துடன் தனியாக வாடகை வீடொன்றில் தங்கிய ஞானசார

நாங்கள் மஹியங்கனையில் நடைபெற்ற பௌத்த மாநாடிட்கு சென்று திரும்பி வருகையில் ஞானசார தேரரின் ஆலோசனைப்படி கண்டியூடாக சென்று மடவளை பன்சலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் நுவரெலியா சென்று சில நாட்கள் தங்க திட்டமிட்டிருதோம். நாங்கள் நுவரலியா செல்லும் வழியில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு வாடகை வீட்டில் ஞானசார தேரர் மனோஜா அக்கா மற்றும் பிள்ளைகளுடன் தனியாக தங்குவதாக சொன்னார். என்னுடன் இருந்த எனது நண்பர்களை திருப்பி அனுப்பிவிடும்படி என்னிடம் வேண்டினார். அவர்கள் சென்று விட்டால் என்னால் தனியாக இருக்க முடியாது என்று கூறி நான் அதை மறுத்து விட்டேன். பிறகு நாங்கள் எனது சொந்த செலவில் தனியாக வேறொரு இடத்தில் தங்கினோம்.

ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாவீதம் செலவழித்து நான்கு நாட்கள் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கிய ஞானசார தேரர்.
அடுத்த நாள் காலை என்னை சந்தித்த ஞானசார ஹாமுதுரு, “ தம்பி இந்த வீடு எங்களுக்கு செட்டாக வில்லை . நாங்கள் வேறொரு வீட்டை வாடகைக்கு ட்ரை பண்ணுவோம் என்று கூறினார். பிறகு நாங்கள் பண்டாரவெல வீதியில் இருந்த ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்தோம் அதற்கு ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்தாயிரம் ருபாய் வாடகை செலுத்த தீர்மானிக்கப் பட்டது. அதில் அவர்கள் நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள். நாங்கள் வேறாக தங்கினோம். அதன் பிறகு அந்த வீட்டிற்கு நான் அடிக்கடி செல்வதை தவிர்த்து வந்தேன். ஏன் என்றால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கு தெரிந்திருந்தது. அடிக்கடி சென்று அவரை அசௌகரிய படுத்த நான் விரும்ப வில்லை.

ஒரு சுற்றுலா பயணியைப் போல் பெண்களுடன் சேர்ந்து நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த ஞானசார

பிறகு நாங்கள் நுவரேலியா வழியாக ரம்பொட பாஸ் நீர்வீழ்ச்சியின் அருகினால் திரும்பி வருகையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் எண்ணம் ஏற்படவே ஆண்கள் பெண்கள் எல்லோரும் சேர்ந்து குளிக்க ஆரம்பித்தோம். எங்களுடன் சேர்ந்து ஞானசாரவும் குளிக்க ஆரம்பித்தார். இவரின் செயற்பாடுகள் எனக்கு அருவருப்பாக இருந்தது. நாடறிந்த ஒரு பௌத்த தேரர், பௌத்த அமைப்பொன்றின் பிரதான தலைவர், எவரும் கண்டவுடன் அடையாளம் காணக்கூடிய ஒரு முன்னணி துறவி இவ்வாறு எந்த வித அச்சமும் இன்றி பெண்களுடன் சேர்ந்து பகிரங்கமாக குளிப்பது எந்த வகையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது.

வாகனம் ஓட்ட ஆசைப்பட்ட ஞான சார தேரர்

குளித்து முடிந்து நாங்கள் மீண்டும் பயணப்பட்டோம். மனோஜா அக்கா மற்றும் பிள்ளைகள் முன்னால் வந்த வாகனத்தில் ஏறி இருந்தார்கள் . முன்னாள் ஞானசார ஹாமுதுருவும் நானும் எனது வாகனத்தில் புறப்பட்டோம். பின்னால வந்த வாகனத்தை தாண்டி சற்று தூரம் முன்னால் நாங்கள் சென்று கொண்டிருக்கையில் ஞானசார ஹாமுதுரு என்னிடத்தில் கேட்டார் , “ தம்பி நான் வாகனம் ஒட்டி ரொம்ப நாள் ஆகுது. எனக்கு கொஞ்சம் ஓட்ட தாருங்கள் என்று” நானும் வேறு வழியின்றி வாகனத்தை பக்கத்தில் நிறுத்திவிட்டு அவருக்கு வண்டியை ஓட்ட இடமளித்தேன். அவர் வாகனம் ஓட்ட ஆரம்பித்து சற்று நேரத்தில் எனது கைப்பேசிக்கு மனோஜா அக்கவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர் கேட்டார் தம்பி யார் வாகனம் ஒட்டுவதென்று . நான்தான் என்று நான் அவருக்கு பொய் சொன்னேன். பின் அவர் மீண்டும் என்னிடம் சொன்னார், “தம்பி பொய் சொல்ல வேண்டாம் . உடனே நீங்கள் வாகனத்தை எடுக்க வேண்டும் . நீங்கள் வாகனத்தை எடுக்காவிட்டால் நான் ஒரு அடி கூட முன்னால் நகர மாட்டேன் என்று அவருக்கு சொல்லுங்கள் ” என்று திட்டவட்டமாக மனோஜா அக்கா என்னிடம் தெரிவித்து விட்டார். நான் ஞானசார ஹாமுதுருவிடம் நிலைமையை விளக்கிச் சொன்னேன்.

மனோஜா வுக்கு தூசணத்தால் திட்டிய ஞானசார

பிடிவாதமாக வாகனத்தை எனக்கு எடுக்க சொன்ன மனோஜா வாகனத்தை நான் எடுக்காவிட்டால் ஒரு அடி கூட முன்னால் நகர மாட்டேன் என்று சொன்னதால் வேறு வழியின்றி வாகனத்தை நிப்பாட்டி விட்டு, “ இந்த பெண் பிராணன்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று கூறிவிட்டு தூசன வார்த்தை ஒன்றையும் கூறி மறுபக்கத்தால் வந்து அமர்ந்து கொண்டார். ஒருவாறு இப்படி நடந்ததும் நல்லது என்றே என் மனது சொன்னது. ஏன் என்றால் ஞானசார தேரருக்கு முறையாக வாகனம் ஓட்டத் தெரியாது. எங்காவது சென்று மோதிவிடுவாரோ என்று உள்ளத்தால் பயந்துகொண்டே அப்போது நானிருந்தேன்.

குறிப்பிட்ட அந்த பயணத்தின் போது எனக்கு மாற்றி அணிய ஆடைகளைக் கூட எடுக்காமல் தான் நான் இவர்களுடன் இணைந்திருந்தேன். அதே போல் அந்த பயணத்தின் போது எனது இளைய மகன் சுகவீனமுற்றிந்தான். அதனையும் பொருட்படுத்தாது மிகவும் சிரமத்திற்கும் தியாகத்திற்கும் மத்தியில் தான் இவர்களோடு சேர்ந்து பயணப் பட்டிருந்தேன்.

நான் ஞானசாரவை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வெகுவாக உணர்ந்திருந்தேன் ஏன் என்றால் தேசிய மட்டத்திலான பௌத்த வேலைத்திட்டமொன்று எமது நாட்டிற்கு மிகவும் தேவை என்று உணர்ந்திருந்ததால். பௌத்த மக்கள் பல வேலைத்திட்டங்களிலும் இணைந்திருது ஏமாற்றப் பட்டு ஏமாற்றப் பட்டுத்தான் இப்போது பி பி எஸ் சுடன் இணைந்துள்ளார்கள். இவர்களின் உண்மை முகம் தெரிய வந்தால் மக்கள் மீண்டும் விளகிச் சென்று விடுவார்கள். அதனால் தான் மனசாட்சிக்கு எதிராக இருந்தாலும் இவரை பாதுகாத்துக் கொண்டு நான் இவர்களுடன் சேர்ந்திருந்தேன். ஆனால் இவர்களின் உண்மையான தேவைப்பாடு ஒரு பௌத்த ராஜ்ஜியம் இல்லை. தமது சொந்த நலனிற்காக சௌகாிய வாழ்க்கையை அனுபவிக்க இவர்கள் இந்த பி பி எஸ் சை நடத்துகின்றார்கள். இது நிறுத்தப் படவேண்டும். இவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்டவேண்டும்.

நான் மேற்சொன்னவை பொய் என்று நிரூபித்து காட்டுமாறுஞான சார தேரருக்கும் பி பி எஸ் தலைவர்களுக்கும் பகிரங்க சவால் விடுகின்றேன். மனோஜாவை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் பேஸ் புக்கிலும் சில ஊடகங்களிலும் வெளிவந்தன. அவை இந்த மனோஜா பிரான்சிலிருந்து பி பி எஸுக்கு உதவி செய்பவர் என்றுதான் இவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள் . ஆனால் ஞாசாரவுக்கும் மனோஜாவுக்கும் உள்ள தொடர்பை பற்றி பி பி எஸ் தலைவர்களுக்கு தெரியுமா என்பது பற்றி நான் அறியவில்லை..

முடியும் என்றால் நான் குறிப்பிட்ட பெண் பிள்ளை ஞானசாரவின் மகள் இல்லை என்பதை ஒரு “டி என் ஏ ” பரிசோதனை மூலம் நிரூபிக்க முடியுமா என்று நான் இவர்களுக்கு சவால் விடுகின்றேன். இதற்காக இந் நாட்டின் எந்தவொரு நீதி மன்றத்தையும் நான் சந்திக்கத் தயார்” என்றும் “ பொதுபலசேனா ” அமைப்பின் மிக முக்கிய தொண்டராக செயற்பட்ட ஜா எல பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்த அஞ்சு பெரேரா சவால் விட்டு ஞானசாரவின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டியுள்ளார்.

Read more...

Thursday, April 9, 2015

வாஷிங்டனின் "மனித உரிமைகள்" ஏகாதிபத்தியம் அம்பலமானது. Joseph Kishore

ஒபாமா நிர்வாகம், 125 டாங்கிகள் செய்வதற்கு தேவையான உட்பொருட்கள், 12 F-16 போர் விமானங்கள், மற்றும் ஏவுகணைகளை அனுப்புவதில் இருந்து தொடங்கி, எகிப்திய இராணுவ சர்வாதிகாரத்திற்கு ஆயுதங்கள் அனுப்புவதை அது மீண்டும் தொடங்கவிருப்பதாக செவ்வாயன்று அறிவித்தது. எகிப்திய ஆட்சியாளர் ஜெனரல் அப்தெல் பத்தாஹ் அல்-சிசி உடனான ஒரு தனிப்பட்ட தொலைபேசி உரையாடலில், இராணுவ உதவியாக ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் அனுப்புவதை மீண்டும் தொடங்குவதன் மீதும் ஒபாமா வாக்குறுதி அளித்தார்.

எகிப்து "ஓர் உள்ளார்ந்த, ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட படைத்துறைசாரா அரசாங்கத்தை நோக்கி நம்பகமானரீதியில் முன்னேறி" உள்ளதென்று வாதிடுமாறு செய்ய, வெள்ளை மாளிகை எந்த முயற்சியும் செய்யவில்லை, இதுவே அக்டோபர் 2013 இல் கொண்டு வரப்பட்ட இராணுவ உதவி நிறுத்தத்தை, முடிவுக்குக் கொண்டு வருவதற்குரிய சட்டபூர்வ நிபந்தனையாகும். அதற்கு மாறாக, அது இந்த தேவையை நீக்குவதற்காக கடந்த ஆண்டு இறுதியில் காங்கிரஸில் ஒரு விதிவிலக்களிப்பு நிறைவேற்றுவதைக் கையிலெடுத்தது.

இஸ்ரேலுக்கு அடுத்து, அமெரிக்காவிடமிருந்து இராணுவ உதவிகளைப் பெறும் இரண்டாவது மிகப்பெரிய நாடான எகிப்துக்கு மீண்டும் அதுபோன்ற உதவிகளைத் தொடங்கி இருப்பதால், அந்நாடு "அமெரிக்க தேசிய பாதுகாப்பு நலனுக்காக" இருப்பதாக ஒரு வெள்ளை மாளிகை அறிக்கை அறிவித்தது. "அமெரிக்க மற்றும் எகிப்திய நலன்களுக்கு… பொதுவான சவால்களைச் சந்திக்க நமது இராணுவ ஒத்துழைப்பு உறவுகளை சிறந்த இடத்தில் நிலைநிறுத்தும் வகையில் அதை செப்பனிடுவது" எகிப்திற்கும் அமெரிக்காவிற்கும் அவசியமாகுமென ஒபாமா அல்-சிசிக்கு தெரிவித்தார்.

எகிப்து ஜனநாயகத்தை நோக்கி திரும்பியுள்ளதாக ஒரு சாக்குபோக்கை கூட அந்த நிர்வாகம் வழங்கவில்லை. இரத்தத்தில் ஊறிய அல்-சிசி ஆட்சி இம்மியளவிற்கு கூட அதன் கொலைகார ஒடுக்குமுறையை நிறுத்தி இருக்கவில்லை. அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து, அது போராட்டங்களைக் கொடூரமாக ஒடுக்கி உள்ளது. அரசியல் எதிர்ப்பாளர்கள் அடிக்கப்பட்டு, கொல்லப்பட்டு, திரள் திரளாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கணக்கின்படி, 2013 இல் முஸ்லீம் சகோதரத்துவத்தின் ஜனாதிபதி மொஹம்மது முர்சி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பின்னர் 41,000க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 1,000க்கும் அதிகமான அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளன.

எகிப்திற்கு மீண்டும் ஆயுதங்களை வழங்குவது என்ற முடிவு, உக்ரேனிய உள்துறை மந்திரி ஆர்சென் அவகொவ்வின் அறிவிப்புக்கு வெறும் இரண்டு நாட்களுக்குப் பின்னர் வந்தது. அவர், பாசிச அஜொவ் துணை இராணுவப்படை உட்பட கியேவ் ஆட்சியால் ஒழுங்கமைக்கப்பட்ட வலதுசாரி தேசிய பாதுகாப்பு போராளிகள் குழுக்களுக்கு அமெரிக்க இராணுவ படைகள் நேரடியாக பயிற்சியளிக்கத் தொடங்கும் என்பதை அறிவித்திருந்தார். நவ-நாஜிக்களால் ஸ்தாபிக்கப்பட்டு தலைமை கொடுக்கப்படும் அஜொவ் அமைப்பு, ரஷ்ய-ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிரான கிழக்கு உக்ரேனிய போரில் முன்னணி வரிசையில் இருந்துள்ளது.

இவை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் "மனித உரிமைகள்" பாசாங்குதனங்களின் வெறும் இரண்டே இரண்டு மிக அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளாகும். அதிகரித்துவரும் திமிர்தனத்துடன், அமெரிக்கா இராணுவவாதத்தின் மற்றும் உலகெங்கிலுமான மொத்த பிற்போக்குத்தனத்தின் தாக்குமுகப்பாக செயல்படுகிறது. அது உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அதன் வேலைத்திட்டத்தை இராணுவ பலத்தைக் கொண்டு பின்தொடர, மிக மோசமான ஆட்சிகளை ஆதரிக்க முனைந்துள்ளது.

ஒபாமா நிர்வாகத்தால் ஆதரிக்கப்பட்ட ஏமனுக்கு எதிரான சவூதி அரேபியா தலைமையிலான வான்வழி போரே, எகிப்திற்கு மீண்டும் ஆயுதங்கள் வழங்குவதற்கான உடனடி தூண்டுதலாக உள்ளது. எகிப்தும் சவூதி அரேபியாவும், ஈரானால் ஆதரிக்கப்படும் ஹௌதி படைகளை வெளியேற்றும் இலட்சியத்துடன், குண்டுவீச்சு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதோடு சேர்ந்து சாத்தியமான ஒரு தரைவழி படையெடுப்புக்கான திட்டங்களையும் அறிவித்துள்ளன. எகிப்திற்கு வாஷிங்டன் அனுப்பும் கூடுதல் இராணுவ தளவாடங்கள் ஐயத்திற்கிடமின்றி அதுபோன்றவொரு தரைவழி தாக்குதலில் பயன்படுத்தப்படும்.

இந்த நடவடிக்கையை முன்னெடுத்து செல்லும் அந்த இரண்டு அமெரிக்க கூட்டாளிகளே, அந்த கூட்டு-முயற்சியின் குணாம்சத்தைத் தொகுத்தளிக்கின்றன. மிகக் கோரமான வழக்கமாக தலை துண்டிப்பை நடத்துகின்ற, இரும்புக்கரம் கொண்டு ஆளுகின்ற மற்றும் சிரியாவில் அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கையின் பாகமாக, அல் கொய்தா மற்றும் ஏனைய இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு பணத்தைப் பாய்ச்சியுள்ள, சவூதி முடியாட்சியினது காட்டுமிராண்டித்தனத்துடன் எகிப்திய ஆட்சியின் காட்டுமிராண்டித்தனம் பொருந்துகிறது.

உக்ரேனைப் பொறுத்த வரையில், பாசிச சக்திகளுக்கு பகிரங்கமாக ஒத்துழைப்பு அளித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய-ஆதரவு ஜனாதிபதியை பதவியிலிருந்து வெளியேற்றியமை கடந்த பெப்ரவரியில் தொடங்கிய அமெரிக்க தலைமையிலான நடவடிக்கையில் தனித்தன்மையாகும். ரஷ்யாவைத் தனிமைப்படுத்த, பலவீனப்படுத்த மற்றும், இறுதியாக, உடைக்க அதன் இராணுவ-பொருளாதார இராஜாங்க முனைவின் பாகமாக, அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா எங்கிலும், வலதுசாரி, தேசியவாத, இனவாத மற்றும் யூதவிரோத இயக்கங்களையும் அரசாங்கங்களையும் சார்ந்துள்ளது.

உலகின் மறுபக்கத்தில் ஹோண்டுராஸில், அமெரிக்க-ஆதரவு ஜூவான் ஓர்லாண்டோ ஹெர்னான்டெஸின் அரசாங்கத்துடன் தொடர்புபட்ட கொலைப் படைகள், படிப்புதவி மீதான வெட்டுக்களுக்கு எதிராக போராடிவரும் மாணவர்களுக்கு எதிராக அச்சுறுத்தும் ஆட்சிமுறையை நடத்தி வருகிறது. கடத்தல், சித்திரவதை, மற்றும் குறைந்தபட்சம் நான்கு இளைஞர்களின் படுகொலை ஆகியவையும் அதில் உள்ளடங்கும். 2009 இல் அமெரிக்க ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து அதிகாரத்திற்கு வந்த ஜனாதிபதி போர்ஃபிரியோ லோபோவுக்கு (Porfirio Lobo) அடுத்து தான் ஹெர்னான்டெஸ் அதிகாரத்திற்கு வந்தார்.

சமீபத்தில் Foreign Policy இதழால், “அரசாங்கத்தின் உயர்மட்டங்கள் பின்னிப் பிணைந்துள்ள ஊழல் மற்றும் திட்டமிட்ட குற்றங்களின் ஒரு சேற்றுக்குளமாக" வர்ணிக்கப்பட்ட ஓர் ஆட்சியால் வழிநடத்தப்படும் ஹோண்டுராஸ் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு அமெரிக்கா ஆண்டுதோறும் பத்து மில்லியன் கணக்கான டாலர்களை வழங்குகிறது. ஹெர்னான்டெஸ் மற்றும் லோபோ இருவருமே போதை கும்பல்களுடன் தொடர்புபட்ட பொலிஸ் போராளிகளை ஸ்தாபிப்பதை மேற்பார்வை செய்துள்ளதோடு, உள்நாட்டு ஒடுக்குமுறையில் நேரடியாக இராணுவத்தை தலையிட செய்துள்ளனர்.

அமெரிக்க பணத்தைக் கொண்டு நிதியுதவி வழங்கப்பட்ட வலதுசாரி கொலை படைகள் மற்றும் போதைப்பொருள் கும்பல்களுடன் பொலிஸ் மற்றும் இராணுவம் ஒருங்கிணைந்து வருவதானது, அதேபோல ஏனைய இலத்தீன் அமெரிக்க நாடுகளிலும், மிக குறிப்பாக மெக்சிக்கோவிலும், நடக்கிறது. கடந்த ஆண்டு 43 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதில் ஒட்டுமொத்த மெக்சிக்கன் அரசும் உடந்தையாகும், மேலும் சித்திரவதைகளுக்கான ஐநா சிறப்பு தூதர் இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கையில், சித்திரவதை பிரயோகம் அந்நாட்டில் "பொதுவான" ஒன்றாகிவிட்டதாக தெரிவித்தார். இவற்றில் எதுவுமே மெக்சிக்கன் ஜனாதிபதி பெனியோ நியாட்டோ அரசாங்கத்திற்குப் பொருந்திய ஒபாமா நிர்வாகத்தினது முழு ஆதரவில் எந்த பாதிப்பையும் கொண்டிருக்கவில்லை. அந்த அரசாங்கமோ வெளிநாட்டு மூலதனத்திற்காக எரிசக்தி துறையைத் திறந்துவிடும் நோக்கில், பொருளாதார "சீர்திருத்தங்களை" உந்தி வருகிறது.

இத்தகைய போக்குகளுக்கு இணைந்த விதத்தில் ஒருவரால் டஜன் கணக்கான சான்றுகளைக் காட்ட முடியும். அமெரிக்க நிதியியல் பிரபுத்துவம் அது எங்கெல்லாம் மேலாதிக்கம் கொள்வதற்கும் கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும் முயல்கிறதோ —இந்த உந்துதலில் இருந்து உலகின் எந்த பகுதியும் விதிவிலக்காக இல்லை என்பதுடன்— அதன் சமூக இருப்பிலேயே கலந்துவிட்ட இரத்தம், வெறுக்கத்தக்க தீமைகள், குற்றகரதன்மைகளை அது ஏற்றுமதி செய்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உயர்வு தொடங்கியதில் இருந்தே, அதன் ஆளும் வர்க்கம் "சுதந்திரம்,” “மனித உரிமைகள்" “அமெரிக்க மதிப்புகள்" என்ற மொழியில் தான் சூறையாடும் அதன் அபிலாஷைகளை அரங்கேற்ற முனைந்துள்ளது. 1924 இல் டிரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, “அமெரிக்கா எப்போதும் யாரையாவது விடுதலை செய்து கொண்டே இருக்கிறது. அது தான் அதன் தொழில்,” என்றார். ஆனால் ஆக்ரோஷதிற்கான சித்தாந்த நியாயப்பாடுகள் இந்தளவிற்கு ஒருபோதும் கிழிந்து போனதில்லை.

ஒரு இறுதி புள்ளி. அமெரிக்க ஏகாதிபத்திய குற்றகரதன்மையின் முன்பினும் கூடுதலான அப்பட்டமான வெளிப்பாடு, தனிச்சலுகை கொண்ட மத்தியதர வர்க்க அமைப்புகள் —ஒபாமா நிர்வாகத்தின் தாராளவாத மற்றும் போலி-இடது ஆதரவாளர்கள்— மேற்கொண்டு வலதிற்குத் திரும்புவதுடன் பொருந்தி உள்ளது.

ஒருகாலத்தில் தங்களைத்தாங்களே "போர்-எதிர்ப்பாளர்களாக" காட்டிக்கொண்ட அவர்கள், லிபியா, எகிப்து, சிரியா, உக்ரேன் மற்றும் ஈராக், ஏனையவற்றிலும் நடத்தப்பட்ட அமெரிக்க-தலைமையிலான நடவடிக்கைகளை ஆதரித்து, நேரடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குப் பின்னால் அணிதிரள, ஒபாமாவைத் தேர்ந்தெடுப்பதை வாய்ப்பாக பற்றி இருந்தனர். அமெரிக்க மக்கள் மற்றும் ஒட்டுமொத்த உலக மக்களின் முன்னால் தீர்க்கமாக அது அம்பலப்பட்டு நிற்கின்ற புள்ளியில், துல்லியமாக அவர்கள் "மனித உரிமைகள் ஏகாதிபத்தியத்தின்" முழக்கங்களுக்குள் குதித்துள்ளனர்.

Read more...

வேரில் விழுந்த விசம். நோர்வே நக்கீரா

பிரிவினைவாதம், துவேசம், இனமுரண்பாடுகள், கலவரங்கள், போர் போன்றன இன்று நேற்று இலங்கையில் உருவானதல்ல. இவை ஆதியில் இருந்தே ஆணிவேரில் ஊற்றப்பட்ட நஞ்சுகள். இவற்றைச் சரியாக இனங்கண்டு செயற்பப்படாவிட்டால் இருவினமும் அழியும் என்பது திண்ணம். அன்று நடந்தவைதான் மீண்டும் மீண்டும் இன்றுவரை நடக்கிறது என்பதே இதற்கு ஆதாரம். பொதுவெதிரியான வெள்ளையர்களை வெளிறே ற்றுவதற்காக தமிழ் சிங்களம் இணைந்ததே தவிர உதிரத்தில் ஊறிய நஞ்சு இருந்து கொண்டேதான் இருந்தது. வடக்கு தெற்குப்பகுதிகளை இருசாராரும் மாறிமாறி ஆண்டு வந்தாலும் மதரீதியாக நம்பிக்கைகளும் முரண்பாடுகளும் ஆரம்பித்தில் இருந்தே வளர்ந்து வந்திருக்கிறது. இந்தியாவின் ஏற்பட்ட மத, அரசியல் மாற்றங்கள் இலங்கை யில் அன்றில் இருந்து இன்றுவரை பிரதிபலிப்பதை அவதானித்திருப்பீர்கள். தேவநம்பி தீசனின் மதமாற்றத்துக்குப்பின்னரே வடக்குத் தெற்கு என்ற பிரவும், பெருமுரண்பாடு களும் மிகவேகமாகவும் ஆளமாகவும் வேரூன்றியதை அவதானிக்க முடிகிறது.

எழு என்று இன்று மருவிய ஈழு என்ற முற்றுப்பெறா மொழியைப் பேசிவந்த ஒரேயின மக்களான இயக்கர் நாகரின் நம்பிக்கைகள் வேறுபட்டிருந்தன. ஈழுமொழி பேசியவர் கள் வாழ்ந்தநாடு என்பதாலே இலங்கை ஈழம் என்று அழைக்கப்பட்டது என்கிறர் கலாநிதியும் பேராசிரயருமான செங்கiயாளியான். தமிழர்களாகிய நாகர்கள் நாகங்களை வளிபட்டுவந்தமை சான்றுக்குரியது. புத்தர்பெருமான் ஐந்துதலை நாகங்க த்தின் கீழ் சயனத்திலும், நிஸ்டையிலும் இருப்பது நாகர்கள் பௌத்தமத்தைத் தழுவி யிருந்தார்கள் என்பதற்குச் நற்சான்றாகக் கூட அமையலாம். கடவுளை ஒரு மனிதனா கவோ தத்துவமாகவோ கருதாத, விஞ்ஞானமே எட்டிப்பார்க்காத காலத்தில் மனிதர்கள் இயற்கையுடன் ஒன்றியும், தமது சக்திக்கு மீறிய இயற்கையின் சக்திகளை கடவுளா கவும், தேவதைகளாகவும் கொண்டு வணங்கினர் என்பது ஆய்வு.

காதாநாயகத்துவம்

காமினி எனும் துட்டகைமுனுவை கதானாயனாக்க எழுத்தப்பட்ட மித்துக்கதையே மகாவம்சம் என்று தெரிந்தும் அதை சரித்திர மதவாதாரமாக காட்ட முயலும்போது அதையே வைத்து அவை தவறானவை என்று நிரூபிக்க வேண்டிய தேவையும் எமக்கு ஏற்படுகிறது. பாழிமொழியில் மகாநாம எனும் பல்லவதேரரால் எழுதப்பட்டு கிடக்கை யில் கிடந்த மகாவம்சத்தை ஆங்கிலேயரின் காலணித்துவ காலத்தில் தூசு தட்டி 1837ல் கியோர் துநோர் என்பவரால் ஆங்கிலத்தில் புத்துயிர் கொடுத்த பொல்லாமை நிகழ்ந்தது. துட்டகைமுனு கதாநாகனாகிறான் என்றால் அவன் மோதியவனும் அவனைவிட அதிபலசாலி என்பதே மறைமுகமான அர்த்தமாகிறது. வெல்லப்பட முடியாததை வெல்வதுதானே கதாநாயகத்துவம்.

மகாவம்சத்தில் பாரபட்சம்

44ஆண்டுகள் நல்லாட்சி புரிந்த எல்லாளனை 21செய்யுள்களுக்குள் அடக்கும் மகாநாம என்ற பல்லவப்பிக்குவால் எழுதப்பட்ட மகாவம்சம் 24வருடங்கள் மட்டம் அரசாண்டு துட்டகாமினியை 843 செய்யுள்களில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறது. இங்கேயே தெரிகிறது மாகாவம்சத்தின் நம்பத்தன்மையும் நடுநிலையும். ஆனால் துட்டகைமுனு வின் காலத்திலோ அன்றி மகாவம்சத்தின் காலத்திலோ சிங்களவர் என்றொரு இனம் இருந்ததாக எங்குமே அடையாளம் காணப்படவில்லை என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது. துட்டகாமினி இயக்கன் என்தற்கான ஆராரங்களை எந்த ஆய்வாளர் களும் இன்னும் முன்வைக்கவில்லை. இவனுடைய அடி முத்துசிவன் (மூத்தசிவன்-ஊத்தைசிவன்)எனும் நாககுலத்திலிருந்தே ஆரம்பமாகிறது ஆதாரம் மகாவம்சம் இதன்படி பார்த்தால் இலங்கையில் நடந்த போர்களும், படுகொலைகளும் சகோதரப்படு கொலைகளே. இந்தமகாவம்சம் செய்த ஒரு கைங்கரியம் ஒரினமாக இருந்த ஈழமக்களை துண்டாடி, முரண்பாடுகளுக்கு உள்ளாக்கி, போர்களுக்குக் காரணமாகி கொடுங்கோண்மைக்கு வித்திட்டது. மகாநாம என்ற பல்லவ வந்தேறியின் புனைவு இலக்கியமாக உருப்பெற்றிருக்கிறது.

பௌத்தத்தினதும் சிங்ளப்பேரினவாத்தினதும் கைநூலான மகாவம்சம் பல அசிங்க மான வரலாற்றுப்பின்னணியைக் கொண்டது. சிங்கத்துக்கும் வங்கநாட்டு அரசிக்கும் பிறந்த பிள்ளைகளான சிங்கபாகு சிங்கவல்லி என்ற சகோதரங்கள் கலந்த 16பிள்ளைகளில் மூத்தவன் விஜயன் என்கிறது மகாவம்சம். அவன் குவேனியுடன் பிறந்தபிள்ளைகள் சிங்களவர்கள் என்றால் சிங்களப்பிறப்பு எப்படிப்பட்டது என்பதை எண்ணித்துணிக. சகோதரியில் இச்சைகொண்டு பிறந்த இந்தவம்சத்தினர் முள்ளிவாய்க் கால் இறுதிப்போரில் தமிழ்பெண் பிணங்களில் இச்சைகொண்டார்கள் என்பது பரம்பரை க்குணம் வம்சக்குணம் உதிரத்தில் ஊறியவிசம் என்றே கருதவேண்டியுள்ளது.

இந்தவேர்கள் எங்கிருந்து உருவாயின என்பதை பார்ப்போம். சரித்திரம், வரலாறு என்பது மிக மிக நீட்டது என்பதனால் தேவநம்பியதீசனில் தொடங்கி எல்லாளனுடன் நிறுத்துகிறேன்

இடப்பெயர்கள்: உருகுணை- கதிர்காமத்தை அண்டிய தென்மாகாணப்பகுதி
கல்யாணி ஆறு -களனி ஆறு
உத்தரதேசம்- பூநகரியை அண்டிய வன்னிப்பகுதி

மேற்குறிப்பிட்ட பெயர்கள் அடிக்கடி கட்டுiரையில் இடம்பெறுகிறது என்பதால் முன்கூட்டியே அவற்றை இங்கே தருகிறேன்.

வடக்குத் தெற்கு பிரிவினை, தேவநம்பியதீசனின் பரம்பரை

மானைத்துரத்திக் கொண்டிருந்த மூத்துசிவனின் (சைவப்பெயர்) மகன் தேவநம்பியதீசன் (தீசன் என்பது ஈசன் என்றும் பொருள் கொள்ளும்) மகிந்த (காலபதியான அரசின் ஜனாதிபதியும் மகிந்தவே- இனமத அழிப்பின் ஆணிவேர்கள்) எனும் பௌத்தபிக்குவின் குரலால் "மானைத் தொடரும் மன்னரே மதியைத் தொடர்வீராக" தடுத்து நிறுத்தப்பட் டான். கொல்லாமையை முதன்மைப்படுத்தும் பௌத்தம் போதிக்கப்பட்டு அவன் பௌத்தனாக மாறினான். மன்னனைத் தொடர்ந்து மக்கள் பௌத்தத்தைத் தழுவிக் கொண்டனர். பௌத்தர்கள் அனைவரும் சிங்ளவர்கள் அல்ல என்பதை சிங்களவர் களும் தமிழர்களும் அறிவது அவசியம். பெரிய பௌத்த மடாலங்களுக்கு தமிழர்கள் தலைமை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுண்ணாகத்திலுள்ள கந்ததேராடை என்ற பகுதியில் இருந்தே பௌத்தசங்கங்கள் மதம்பரப்பு வேலையைச் செய்தன. அன்றும் அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் சிங்களவர்கள் அல்ல. உலகின் கிழக்குநோக்கி பௌத்தப்பரம்பலான திராவிடப்பௌத்தத்தின் ஆணிவேராக இருந்தவர்கள் தமிழர்களும் பல்லவர்களும் என்பதை மறந்துவிடலாகாது. பௌத்தமத காலத்திலேதான் தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது என்பதை ஐம்பெரும்காப்பியங்கள் கட்டியம் கூறி நிற்கின்றன. ஈழத்தின் வடக்குக் கிழக்கில் வளர்ந்த பௌத்தம் அதிககால் அங்கே நிலைகொள்ளவில்லை. காரணம் இந்தியால் ஏற்பட்ட இந்துமதத்தின் மீள்வளர்ச்சியும் வாத விவாதங்களின் தோல்வியும் பௌத்தத்தை இந்தியாவை விட்டு ஓட ஓட விரட்டின. இதற்கு சமயகுரவர்களின் பங்கும் அதிகம். இந்தமாற்றம் வடகிழக்குப் பகுதிகளில் பரவியிருந்தமையால் இந்து பௌத்த முரண்பாடு ஈழத்துக்கு இறக்கு மதியானது. இதுவே அடிப்படையில் வேரில் ஊற்றப்பட்ட நஞ்சாகும்.

தேவநம்பிய தீசனுக்குப்பின் நடந்த போர்கள் அனைத்தும் வடக்கு தெற்கு என்ற நிலையிலேயே இருந்தது. தேவநம்பிய தீசனின் தம்பியான மகாநாகன் தேவநம்பிய தீசனுக்குப்பின் பட்டத்துக்குரிய இளவரசனாவான். இதை விரும்பாத தேவநம்பியதீச னின் மனைவி தன்மகனே முடிக்குரியவனாக வேண்டும் எனவிரும்பினாள். அதனால் மகாநாகனுக்கு (மச்சான்-கணவனின் தம்பி) மாம்பழத்தினுள் நஞ்சுவைத்துக் கொல்ல நஞ்சூட்டிய மாங்கனியைக் கொடுத்தனுப்பினாள். அதை மகாநாகனின் மகன் உண்டு உயிரைவிட்ட தந்தையும் (மகாநாகன்) மனைவி, மக்களும் உருகுணைக்கு சென்று மகாகமம் (தோட்டத்தை நாம் கமம் என்ற சொல்லைக்கொண்டு இன்றும் பாவிக்கிறோம்) என்ற நகரத்தை நிறுவி உருகுணைக்கு அரசனானான். அவனின் மகன் ஜத்தலாயதீசனும் அவனின் மகன் கோதபாயனும் (மகிந்த அரசின் பாதுகாப்புச் செயலாளரின் பெயரும் இதுவே) உருகுணை மன்னர்கள் ஆயினர். இவன் கதிர்காமப்பகுதியில் அரசனார்களாக இருந்து 10சத்திரியமன்னர்களை பலத்தபோரின் பின் அழித்தே அரசனானான் என்கிறது தட்டுவம்சம்( கிஸ்ரி ஆவ் சிலோன் தலைப்பு 111 பக்கம் 146). கோத்தபாயனின் பேரனான மகாநாகன் அநுராதபுத்தில் இருந்து ஆதரவற்றுத் ஓடிவந்தபோது அபயமளித்து காத்த கதிர்காமப்பகுதியின் குறுநிலமன்னன் கமணியை பிள்ளைகளே இந்தப் 10சத்திரிய மன்னர்கள் என அறியமுடிகிறது. இதனுடைய படிமத்தை எமது அரசியலிலும் காணமுடிகிறதா? நம்பிக்கைத் துரோகம், நன்றியின்மை உண்டவீட்டுக்கு இரண்டகம் என்பனவற்றை தமிழ் அரசியல் உணர்ந்திருக்கிறது. சேர் பொன் இராமநாதன் சிங்களவர்களைத் மாசல்சட்டத்தில் இருந்தும், ஆங்கிலேய இராணுவத்திடமிருந்து காத்து விட்டார். அவரை தேரிலும் தோழிலும் தூக்கிவந்த சிங்களம் எம்மக்களுக்கு என்ன செய்தது. நாட்டை எடுத்தபின் பிரிப்போம் என்று வாக்குறுதியளித்த ஐ.தே.கட்சியில் தந்தை தன்வாக்குக்கு எதிராகவே செய்யற்பட்டார். பிரிவினைக்கு எதிராக நடேசன் மகாதேவ போன்றவர்களை வாங்கி சோல்பரித்திட்டத்தில் பிரினைக்கு மண்ணள்ளிப்போட்டனர். பின் என்ன நடந்தது என்பதை அறிவீர்கள். இதேபோன்று புலிகளின் ஆதரவுடன் வந்த மகிந்தவும் இன்றைய கோத்தபாயனும்; புலிகளை என்ன செய்தார்கள் என்பதையும் அறிவீர்கள். நம்பிக்கைத் துரோகம், செய்நன்றி மறத்தல் என்பன இது வேரில் விழுந்த விசங்களே.

இருப்பினும் தமிழ்சத்திரியர்களை அவர்களால் அடியோடு அழிக்க முடியவில்லை. இம்மன்னர்களின் மூத்தவனான தர்மராஜனின் மகன் மாகாதீசன் சத்திரிய மன்னன் ஒருவனின் மகளை அபி அனுரதியை மணந்ததாக பிராமிக்கல்வேட்டில் கண்டெடுக் கூறுகிறது. (மகாவம்சம் தலைப்பு111 பக்கம் 147) இந்த அடியோடு அழித்தல் என்பது முள்ளிவாய்க்காலை நினைவு படுத்துகிறது அதையும் இதையும் செய்தவர்கள் கோத்தபாயர்களே. வேரில் விழுந்த விசங்கள் இவர்கள்.

கோத்தபாயனின் மகன் காக்கவண்ணதீசன் ஈழராஜனான எல்லாளனின் ஆட்சியை ஏற்று திறைசெலுத்தி வாழ்ந்தான். இலங்கை முழுவதும் எல்லாளனின் ஆட்சி இருந்தற்கான சாட்சி இதுவே. இவன் திருமணம் குறுநிலமன்னனான கல்யாணி அதாவது இன்றைய களனியை ஆண்ட களனித்தீசனின் மகள் மகாதேவியையே.

களனித்தீசனின் மனைவிக்கும் அவன் தம்பி அய்யவுத்திகனுக்கும்; உள்ள கள்ளதொடர்பு தெரியவர அவன் தலைமறைவாகி காதல் கடிதம் ஒன்றை பிக்குகள் மூலம் அனுப்பியபோது அது பிடிபடவே கடிதத்தைக் காவிவந்து பிக்குக்கள் இருவரின் தலைவெட்டுப்பட்டு கடலில் எறியப்பட்டது. செகுவேரா கலவரத்தில் தம்மினம் என்றும் பாராமல் சிங்கள இளைஞர்களை வெட்டி களனிகங்கையில் எறிந்தது நினைவுக்கு வருகிறது. புத்தபிச்சுக்களின் தலையை வெட்டி கடலில் எறிந்ததால் தான்; கடல்கொந்தளிப்பு கல்யாணிமேல் (களனிகங்கை) ஏற்படுகிறது என்ற மூடநம்பிக்கையில் தனது மகளான மகாதேவியை ஒரு வள்ளத்தில் ஏற்றி கடலில் விட்டான் களனிதீசன். அந்தவள்ளம் மகாகமத்தின் விகாரைகள் உள்ள கரையை அடைந்தது. அதனால் மகாதேவியாக இருந்தவள் விகாரமகாதேவி என்று அழைக்கப்பட்டாள். இவளை திருமணம் செய்தவன்தான் கோத்தபாணனின் மகன் காக்கவண்ணதீசன். இவளின் மசக்கை ஆசைதான் துட்டகைமுனுவை எல்லாளனுக்கெதிராக வளர்த்தது. அவளின் 3 மசக்கை ஆசையில் ஒன்றுதான் எல்லாளனின் முதன்மைத்தளபதியின் தலையை வெட்டிய வாளைக்கழுவிய தண்ணீரைக் குடிக்கவேண்டும் என்பது. இந்தக் கொலைவெறிகள் எங்கிருந்து ஆரம்பமாகின்றன என்பதை இனியாவது உங்களால் உணரமுடிகிறதா? இவளுக்குப்பிறந்த மூத்தவன்தான் கைமுனு எனும் காமினி. துர்நடத்தையின் காரணமாகவே துட்டகைமுனு என்று அழைக்கப்பட்டான். அவனுடைய தம்பி சதாதீசன். பிள்ளைகள் இருவரும் தாயினால் எல்லாளனுக்கெதிராக மனதில் நஞ்சூற்றியே வளர்க்கப்பட்டார்கள். குழற்தைகளான இவர்களின் ஆணிவேரில், மரபணுவில் தாயாரால் ஊற்றப்படுகிறது.

எல்லாளனின் நல்லாட்சி

இலங்கை முழுவதும் பரவியிருந்த எல்லாளன் நல்லாட்சியில் பௌத்தமதம் மற்றைய மதங்களைப்போல் பாதுகாக்கப்பட்டதால் இந்நல்லாட்சியை மறுக்க மகாவம்சத்தை எழுதிய பல்லவ மகாநாமதேரரால் முடியவில்லை. எல்லாளன் மனுநீதிச் சோழனுக்கு நிகராக ஒப்பிடப்பட்டான். எல்லாளனை சோழ அரசன் என்பது முற்றிலும் தவறா னது இந்திய வரலாறுகளிலோ, கல்வெட்டு, அகழ்வாய்வுகளிலே எல்லாளனைப் பற்றிக் எதுவும், எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவன் தமிழீழத்தைச் சேர்ந்த தனித்தமிழ் உத்தரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அரசன் என்பதற்கான பல ஆராரங்கள் உள்ளன. பாளிமொழியில் எலாரா என்பதே எல்லாளன் ஆனது இதன் அர்த்தும் ஈழராஜன் என்பது என பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள் கருதுகிறார்.

சேனன், குத்திகன் எனும் தமிழ் மன்னர்களிடம் இருந்து அனுராதபுரத்தை அசேலன் கைப்பற்றி 10 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான். கி.மு 145ல் எல்லாளன் அவனை வென்று அனுராதபுரத்தை மீண்டும் கைப்பற்றிக் கொண்டான். எல்லாளனின் சொந்த இடமாக பூநகரியின் தெற்கெல்லையிலுள்ள பாலியாறுப்பகுதி என்று எண்ணித்துணியலாம். வவுனிக்குளத்தின் தோற்றமே எல்லாளனில் இருந்துதான் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லாளன் பயிற்செய்கையை ஊக்குவிக்கும் முகமாக பலகுளங்களை நிறுவி கடலில் வீணாகப்போகும் நீரைத் தேக்கினான் என்கிறது பலவராறுகள்.

துட்டகைமுனுவின் படையெடுப்பு.

தனது தந்தையான காக்க வண்ணதீசனின் மரணத்தின் பின் அவன் வைத்திருந்த படையுடனும், தான் தயாரித்து வைத்திருந்த படையுடனும் தன்தாய் விகாரமாதேவியு டனும் 500பிக்குக்களுடனும் அனுராதபுரத்திற்குத் தெற்கில் இருந்து புறப்பட்டான் துட்டகாமினி. எல்லாளன் போன்ற நீதிதவறா ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளப்ப இயலாது என்பதை உணர்ந்த இவன் இனத்துடன் இணைத்து மதத்தையும் சேர்ந்து யுத்தகோசத்தை அமைத்தான். இந்த இன மத வெறி என்பது தெற்கிலே துட்டனான காமினியால் முதன் முதலில் முன்னெடுக்கப்பட்டது என்பதை இங்கே காணலாம். இதுவும் அடிவேரில் ஊற்றிய நஞ்சே. ஐதேகட்சி, சுதந்திரக்கட்சி, பண்டாரநாயக்கா, ஜேஆர், போன்றவர்களால் துவேசம் மத இனவெறி ஏற்றப்பட்டது என்பதை விட வேரில் பரம்பரையாக சிங்கள இரத்தத்தில் ஏற்றப்பட்ட விசமே இது. ஜேஆர் பண்டாரநாயக்கா போன்ற கிறிஸ்தவர்களும் அரசியலுக்காக பௌத்த வெறிக்குள் அகப்பட்டுக் கொண்ட சந்தர்ப்பவாதிகளே. புத்தபிக்குகளை போருக்கு அழைத்துச் சென்ற துஸ்டன் இந்தக்கைமுனுவே. இந்த விசம் இன்றுவரை பிக்குக்களை அரசியலில் கால்பதித்து நிற்கவைத்தது. கௌதம புத்தரோ அரசசைத் துறந்து வந்தவர். போரை வெறுத்துவர். பௌத்தத்தை உலகெங்கும் பரப்பிய அசோகன் போரே வேண்டாம் அது பாவச்செயலென்று பௌத்தத்தைத் தழுவியவன். ஆனால் இந்தத் துஸ்டன் காமனியோ போருக்கே எதிரான பௌத்தத்தை போருக்காகப் பாவித்தான். இவன் பௌத்த மதத்தின் எதிரியாகத், துரோகியாகப் பார்க்கப்படவேண்டிவன்.

கைமுனுவின் படை முதன்முதலில் மகியங்களையில் எல்லாளனின் படையை சந்தித்தது. இப்படி சிறுசிறு இராவத்தளங்களை அழித்துக் கொண்டு சென்ற கைமுனு படை அம்பதீர்த்தத்திலுள்ள எல்லாளனின் படையை முற்றுகை இட்டும் 4மாதங்களு க்கு மேல் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. காரணம் எல்லாளனின் படைத்தளபதி தித்தம்பம் அதிவல்லவனாக இருந்தான். இருப்பினும் பெண் விடயத்தில் அவன் பலவீனனாக இருந்ததை அறிந்த கைமுனு தன்தாய் விகாரமாதேவியை அரக்கு காயாகப் பாவித்தான். தன்தாயை அன்னியனுக்கு காட்டியும், கொடுத்தும் ஒரு போர் மக்களுக்கோ மனிதர்களுக்கோ மனிதத்துக்கோ தேவையா? இந்த அசிங்கமான, கேடுகெட்ட செயலை இந்தக் கெட்ட ஜென்மம் கைமுனு செய்தான். இதை மாகாவம்சமே தலையில் சரித்திரம் என்றும் கைமுனுவை கதாநாயகன் என்றும் கொண்டாடுகிறது. ஒருதாயை விபச்சாரியாக்கிய பெருமை சிங்களம் தம்பரம்பரை என்று தலையில் வைத்து கொண்டாடும் துட்டகைமுனுவுக்கு உள்ளது. தாயையே விபச்சாரியாக்கியவனின் பரம்பரை பிணங்களுடன் உறவு கொள்ள முயன்றது அதிசயத்துக்குரியதல்ல என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். சென்ற பேரினவாத அரசியலில் பெண்கள் அரக்கு காய்களாக இருந்ததை அவதானித்திருப்பீர்கள். கருணா அம்மான் டக்லஸ் போன்றவர்களுக்கும் புலத்தில் இருந்து சென்றவர்களுக்கு மதுவும் மாதுவும் பரிசளிப்கப்பட்டு இரகசியப் படங்கள் எடுக்கப்பட்டு வெருட்டி அரசியல் நடத்திய விதம் வேரில் ஊறியிருந்த விச இரத்தத்தை காட்டுகிறது.

அவன்படை பொலநறுவையில் எல்லாளனின் படையை முறியடிக்க முடியாது திண்டாடியது. பலமான கோட்டைகள், கொத்துளங்கள், அகழிகள் பாதுகாப்பரண்கள் என்று பாதுகாப்புப் பலமாக இருந்ததனால் மேலும் நான்கு மாதத்தக்கு மேல் போர் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இருபடையினருக்கும் பேரழிவு நிகழ்ந்தது. அதன்பின் எல்லாளனின் தலைநகரான அனுராதபுரத்தை நோக்கி நகர்ந்தபோது கிரலகம், மகிலநகர் எனுமிடங்களில் துட்டகைமுனுவின் படு படைதோல்வி கண்டது. பேரழிவைச் சந்தித்த அவன்படை உதவிகளை, ஆளணிகளை தெற்கில் உருகுணையில் இருந்து பெறவும், தம்மைத்தயாராக்கிக் கொள்ளவும் காசபர்வதம் எனுமிடத்தில் பாசறை அமைத்துக் கொண்டான். இதை எல்லாளன் அனுமதித்தான் என்பது பெருந்தன்மைக்குரியது. அடியோடு அடியாக துண்டகைமுனுவின் படைகளை முழுமையாக நாசமாக்கியிருக்க முடியும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மைதரும். நஞ்சி பட்டாலும் தொட்டாலும் நஞ்சு நஞ்சாகவே இருக்கும். எமது ஆயுதப்போராட்ட வரலாற்றில் போர்நிறுத்தம், புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற போர்நிறுத்தங்கள் போருக்கான தயார்படுத்தல்களே இதுவரை இருந்திருக்கிறது என்பதையும் காணலாம்?

மீண்டும் தன்னையும், தெற்கிலிருந்து பெற்ற உதவிகளுடன் அனுராதபுத்திலுள்ள எல்லாளன் கோட்டையை கைமுனு படைகள் சுற்றிவளைத்தாலும். முன்னேறமுடிய வில்லை. பலவீனமான படையை வைத்து வெற்றியை எட்டமுடியாது என்று கண்ட துட்டனான கைமுனு எல்லாளனை தனிச்சமருக்கு அழைத்தான். பெருமனதுடன் 72வயது நிரம்பிய கிழவனான எல்லாளன் ஒரு துஸ்ட இளைஞனின் வேண்டுகோளை ஏற்று களம் புகுந்தான். இதுவே எல்லாளன் செய்த முட்டாள் தனமான செயலும் தன் தலையிலேயே வாரி மண்ணைப்போட்ட செயலுமாகும். பெருந்தன்மை என்பது பொறுக்கித்தனத்துக்கு ஏதுவாக இருக்கக்கூடாது.

தனிச்சமரை ஏற்ற எல்லாளன் தனது மகாபர்வதம் என்ற பட்டத்துயானையிலும், துட்டன் கண்டுலன் எனும் யானையிலும் இருந்தபடி சமரை எதிர்கொண்டிந்தனர். 72வயது எல்லாளனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது துட்டகைமுனு யுத்த தர்மத்துக்கு எதிராக தனது யானையை எல்லாளனின் யானைமேல் ஏவிவிட்டான் அது தன்தந்தத்தால் எல்லாளனின் யானையைத்தாக்க மகாபர்வதம் நிலத்தில் சாய்ந்தது. அத்துடன் மாமன்னன் எல்லாளனும் சாய்ந்தான். அந்த வேளைபார்த்து, எல்லாளன் எழுந்திருப்பதற்கு முன்னால் மீண்டும் யுத்ததர்பத்தை மீறி தனது ஈட்டிகளை எறிந்து மாவீரன் எல்லாளனை கெட்ட கைமுனு கொன்றான்.

தனிச்சமருக்கு ஒருவரை அழைக்கும் போது பலமும், வயது, அனைத்தும் ஏறக்குறைய சமனாக இருக்கவேண்டும். இதை துட்டன் செய்யவில்லை. மாவீரன் எல்லாளனிடம் பெருந்தன்மை இருக்கலாம் ஆனால் அது நீதியற்ற ஏமாற்றுத்தனத்துக்கு துணை போயிருக்கக் கூடாது. யானைப்போர் என்பது ஆயுதபலத்திலும் அதைக் கையாளும் திறமையிலேயே போர் வெற்றி அமையும். இங்கே முதலில் யானையை எல்லாளன் யானை மீது ஏவி விட்டதே போர்தர்மத்தை மீறிய செயலாகும். அன்றைய யுத்த தர்மமானது மிருகங்களைப் போருக்குப் பாவிக்கலாம் ஆனால் அவற்றுக்கெதிராக ஆயுதங்களைப் பாவிக்கக் கூடாது. இதைக் கடைப்பிடித்தானா கடையனா கெட்ட துட்டன் கைமுனு? அதுமட்டுமல்ல நிராயுதபாணிமேல் ஆயுதம் பாவிப்பது உயரிய யுத்தமீறலாக அன்றும் இன்றும் கணிக்கப்படுகிறது. யானையால் விழுந்த எல்லாளன் எழுந்திருப்பதற்கு முன்ரே யுத்தர்மத்தை மீறி எல்லாளன் மீது ஈட்டியை ஏவினான் சிறுமதி கொண்ட கெட்ட துட்டன். எல்லாளன் என்றும் சரணடைந்திருக்க மாட்டான். அப்படி சரணடைவற்குக் கூட அனுமதிக்கவில்லை இந்தத் துட்டன் கைமுனு. இவனை கதாநாயகனாகப் போற்றும் பொன்சேகாவும், கோத்தபாயவும் மகிந்தவுமா அனுமதிப்பார் கள். இந்தத் துட்டனின் வாரிசுகளா, அவன் உதிரத்தில் உதிர்த்தவர்களா, வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை கொல்லாமல் விடுவார்கள். இப்படிச் சரணடைந்தவர் களைக் கொல்லாது விட்டிருந்ததால் தான் இது அதிசயம். அன்று மாகாவம்சத்தில் இருந்து வேர்களில் ஊற்றிய விசங்கள் இன்று விழுதுவிட்டு விருட்சங்களாக இயக்கபரம்பரை அரக்கர்களாக, சிங்களப்படையாக பௌத்தபேரின வாதமாக எழுந்து நிற்கிறது. எது அன்று எல்லாளனுக்கு நடந்ததே அதுவே முள்ளிவாய்காலில் எமக்கும் நடந்தது.

போரின்பின்

வரலாற்றுப் பாடங்களை நான் திருப்பிப் பார்க்கும் போது எது அன்று நடந்ததே அதுவே இன்றும் மீண்டும் மீண்டும் நடக்கிறது. அதாவது பழைய நாகரீகங்கள் மீண்டும் புத்துயிர் பெறுவது போல போர், வாழ்வியல், படைப்புக்கள் மீண்டும் மீண்டும் பிறக்கின்றன. இந்த வட்டத்தை வெட்டவேண்டமாயின் சரித்திரங்களை அறிவதும், அனுபவங்களை திரட்டி ஆய்வதுமே வெற்றிக்கான பாதையாக அமையமுடியும். இறந்த பின்னர் செய்யும் மாலை, மரியாதையை துட்டகைமுனு செய்தான் ஆனால் துட்ட கைமுனுவின் வாரிசுகள் செய்தார்களா? அரை உயிருடன் கிடந்தவர்களை உயிருடன் புதைத்தார்கள். இறந்தவர்களின் உடல்களை தெருக்தெருவாக நிர்வாணப்படுத்தி தமது பெண்களுக்கு காட்சிக்குக் காட்டி மகிழ்ந்தார்கள். பெண்களை நிர்வாணமாக்கி கொலை செய்தார்கள். பிணத்துடன் இச்சை கொண்டார்கள். விதை விசவிதையாக இருந்தால் நற்பயனுள்ள மரத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்? எல்லாளன் இறந்ததை அறிந்த அவனின் மருமகன் பாலுகன் ஏழாம் நாள் 6000 படை வீரர்களுடன் பூநகரியில் இருந்து படையெடுத்து வந்து கைமுனுபடைகளைத் தாக்கி தோல்வியடைந்தான்.

போர்களின் பின் மனமுடைந்த கைமுனு தனது கொலைகளை எண்ணி மனம்வருந்தி அமைதி வேண்டி பௌத்ததேரர்களிடம் துயரைச் சொன்னபோது பௌத்தத்தை நேர்மையாகக் கடைப்பிடிக்க முடியாத தேரர்கள், பிச்சாந்திகள் கைமுனுவைத் தேற்றினார்கள் இப்படி "பௌத்தத்தை நம்பாத அனைவரும் நரகவாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய, விலங்குகளுக்குச் சமமானவர்கள் இவர்களைக் கொன்றால் பாவம் சேராது" என புத்தசங்கத்தால் உரைக்கப்பட்டதாக மகாவம்சத்தில் அதிகாரம் எக்ஸ் எக்ஸ் வி, பக்கம் 175 வரி 75ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பரனவிதான தான் எழுதிய புத்தகமான இலங்கைச் சரித்திரம் (கிஸ்டறி ஆவ் சிலோன்) 3ம் அதிகாரத்தில் பக்கம் 162ல் விளக்கியுள்ளார். இந்தப் போதனை இஸ்லாத்தை நினைவுபடுத்தவில்லையா? எல்லா மதங்களும் ஏறக்குறைய அண்ணன் தம்பிகள் தான்

துட்டகைமுனு 24வருடங்கள் மட்டுமே அனுராதபுரத்தை ஆண்டான். இவனுடன் சேர்த்து 44வருடங்கள் தமிழர் அல்லாதவர்களின் கையில் அனுராதபுரம் இருந்தது. வடக்கில் இருந்து 7குறுநிலமன்னர்கள் படையெடுத்து வந்து மீண்டும் அனுராதபுரத்தைக் கைப்பற்றினர் என்பதே வரலாறு.Read more...

20ம் திகதி 19வது திருத்தம் சமர்பிக்கப்பட்ட பின் பாராளுமன்றம் கலைக்கப்படும் - ஜனாதிபதி

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகளின் பரிகாரம் 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட பின் பாராளுமன்றை கலைக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்வரும் 20ம் திகதி 19வது திருத்தச் சட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாகவும் அதன்பின் பொதுத் தேர்தல் ஒன்றுக்கு தயாராகும் வகையில் பாராளுமன்றை கலைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் எதிர்காலம் குறித்து தாம் மிகவும் பொறுப்புடன் செயற்படுவதாகவும் பாராளுமன்றில் தற்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றை கலைத்த பின் நடைபெறும் பொதுத் தேர்தலில் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதேநேரம் உத்தேச 19ம் தீர்வுக்கு எதிராக 7 வழக்குகள் உச்ச நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பிரதம நீதியரசர் உட்பட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு 19ம் திருத்தச்சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றின் தீர்ப்பை இன்று சபாநாயகர் பாராளுன்றில் உறுதி செய்துள்ளார்.

19வது திருத்தச் சட்டத்தின் 11 சரத்தின் 42 (3), 43 (1), 43 (3), 44 (2) , 44 (3), 44 (5) உப பிரிவுகள் மற்றும் 26வது சரத்தின் 104 (ஆ) மற்றும் 5 (ஏ) ஆகிய பிரிவுகளும் மக்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் என சபாநாயகர் உயர் நீதிமன்ற தீர்ப்பை அறிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறித்த சிக்கலான பிரிவுகளை நீக்குவதாக கூறியுள்ளார்.

19ம் திருத்தச் சட்டம் குறித்த உயர் நீதிமன்றத்தின் கருத்தை அண்மையில் அரசாங்கம் வினவியிருந்தது.

நீதிமன்றம் இது பற்றிய தன் பரிந்துரையை சபாநாயகருக்கு அனுப்பியிருந்தது. இதனை அவர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் இன்று மாலை 03.00 மணியளவில் இது பற்றி கலந்துரையாட கட்சித் தலைவர்கள் சந்திப்பு பாராளுமன்றில் இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.

Read more...

மாவையின் எழுதுவினைஞர் பொட்டுவால் நியமிக்கப்பட்ட புலிகளின் புலனாய்வாளன். போட்டுடைக்கின்றார் சங்கரியார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பதத்தை உயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையாளருக்கு மடல் ஒன்றை எழுதியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி மாவையின் எழுதுவினைஞர் புலிகளின் புலனாய்வாளன் என்றும் அவர் பொட்டு அம்மானால் தன்னை இலக்கு வைத்து நியமிக்கப்பட்டவர் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

'தமிழ் தேசிய கூட்டமைப்பு' அல்லது த.தே.கூ என்ற பதத்தை முதன் முதல் உபயோகித்து ஓர் கூட்டமைப்பாக இணைத்த தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் ஈழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றைத் தவிர வேறு எந்த அரசியல் அமைப்பும் இப்பதத்தை உபயோகிப்பதை மிக்க வன்மையாக ஆட்சேபிக்கிறேன்.

எனது ஆட்சேபனைக்குரிய காரணத்தை தங்களை இலகுவாக விளங்க வைக்க த.தே.கூ ஆரம்பித்த காலம் தொட்டு கடைசியாக உபயோகிக்கப்பட்ட வட - கிழக்கு மாகாண சபை தேர்தல் நடந்த வரை உள்ள அதன் வரலாற்றை தெளிவுபடுத்த வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கென உரிய சின்னம் இல்லாதமை பெருங் குழப்பத்தையும் தப்பபிப்பிராயங்களையும் ஏற்படுத்தும் வேட்பாளர்கள் மத்தியில் ஏற்படும் குழப்பங்களுக்கு இதுவே முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

2001ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ம் தேதி ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு கட்சிகளாகிய தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தழிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி முறையே த.வி.கூ, அ.இ.த.கா, த.வி.இ, ஈ.ம.பு.வி.மு ஆகியவை ஒன்றிணைந்து ஓர் பொதுத் திட்டத்துக்குள் இயங்க தீர்மானித்து திருவாளர்கள் இரா.சம்பந்தன், நா.குமரகுருபரன், சு.பிரசன்னா, க.பிறேமச்சந்திரன் ஆகிய செயலாளர்கள் ஒப்பமிட்டு சில ஊடகங்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதால் இவ் அமைப்பு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாகிய உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதாக அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு விடுத்தன.

அப்புரிந்துணர்வுக்கு அமைய நான்கு கட்சிகளும் அத் தேர்தலில் போட்டியிட்டு 5.12.2001 இல் நடந்த தேர்தலில் த.வி.கூ - 6, அ.இ.த.கா -.3 த.வி.இ- 4 ஈ.ம.பு.வி.மு - 1 தேசிய பட்டியலில் 1 பெற்றன. மாவை சேனாதிராசா தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஓர் இடத்தைப் பெற்றார்.

5.06.2002 காலமான தமிழர் வி.கூ தலைவர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்களின் இடத்துக்கு புதிய தலைவரை தெரிவு செய்யும் வரை எல்லாம் நல்லபடியே நடந்தது. புதிய தலைவரின் தெரிவுக்கு கூட்டதினம் நிர்ணயிக்கப்பட்டு நானே அப்பதவிக்கு புதிய தலைவராக தெரிவானேன். அக்கூட்டத்திற்கு சமூகம் கொடுக்காத முக்கிய பேர்வழி திரு.மாவை. சேனாதிராசா அவர்களே. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 3,000 வாக்கு வித்தியாசத்தில் அவர் எனக்கு அடுத்ததாக தெரிவானார். அதற்கு முன்பு படுகொலை செய்யப்பட்டு காலியாக இருந்த திரு. அ.அமிர்தலிங்கம்; அவர்களின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கும் அதன் பின் காலியாகிய கலாநிதி.நீலன் திருச்செல்வம் அவர்களின் காலியான இடத்துக்கும் திரு.மாவை சேனாதிராசாவையே நியமித்திருந்தோம் என்பதும் கவனிக்க வேண்டிய விடயமாகும்.

திரு.மாவை சேனாதிராசா அவர்கள், அவருக்கு மட்டும் தெரிந்திருந்த காரணத்துக்காக அவர் அடிக்கடி வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளைச் சந்தித்து வந்தார். அப்படி ஒரு சந்திப்பின்போது 'மாவை கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளைச் சந்தித்தார்'. என்ற தலைப்பில் ஓர் செய்தி வெளியிட்டிருந்தது. அச் செய்தி இதுதான். 'தமிழரசுக் கட்சியை புனருத்தாரணம் செய்து கொண்டிருக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் உப தலைவர் தங்கனுடன் 14.10.2003 அன்று பல சந்திப்புக்கள் மேற்கொண்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் புனரமைப்பு விடுதலைப் புலிகளின் பணிப்பிலேயே நடைபெறுகிறது' என்பதே. அந்த வேளையில் அவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தபோது அவருக்கு விசேட பணி கொடுக்கப்பட்டிருந்தது. 19.10.2003 அன்று ஞாயிறு ரைம்ஸ் பத்திரிகையில் வெளியாகிய அவரின் பேட்டி ஒன்றில் அந்த நிருபரின் கேள்வியானது ' தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமையை இல்லாது செய்வதற்காகவா தமிழரசுக் கட்சியை புதுப்பிக்குமாறு விடுதலைப் புலிகள் உங்களைப் பணித்துள்ளனர்'. என்று கேட்டபோது அவரின் பதில் 'அதில் உண்மை இல்லை. அக் குற்றச் சாட்டை நான் முற்றாக நிராகரிக்கிறேன்' என்பதே. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஆவணத்தில் ஆங்கிலத்தில் உள்ள பகுதி எனக்கு தீங்கு விளைவிப்பதற்கு அவரை விடுதலைப் புலிகள் பாவிக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. 'கொழும்பில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள்' TOSTS தலைவர் பொட்டு அம்மானின் பணிப்புக்கமைய இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும் 1983ம் ஆண்டு தொடக்கம் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவருமான முருகன் கலைச்செல்வன் என்பவரை யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்களுக்கு எழுதுவினைஞராக கடமையாற்றவென கையளிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தெகிவளை, நெடுமால் 129ஃ9 கடவத்தை வீதியில் திருமதி.ளு.பாக்கியத்துடன் இருந்து கொண்டு கொழும்பு 3 இல் உள்ள 30ஃ1ஃயு அல்விஸ் பிளேசில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி காரியாலயத்திற்கு மாவை சேனாதிராசாவுடன் வருவார். அவருக்கு வழங்கப்பட்ட பணி திரு. வீ.ஆனந்தசங்கரி (தலைவர் தமிழர் வி.கூ.)யை இலக்கு வைப்பதே.

இச்சதியில் அவரை ஈடுபடுத்த வேண்டும் என்பதல்ல என் நோக்கம் விடுதலைப் புலிகளின் கட்டளைக்கிணங்கி செயற்படுகிறார் என்பதையும் எனக்கு இலக்கு வைத்து செயற்பட்டவர் தப்பியோடினார் என்பதையும் நிரூபிக்க எனக்கு அந்த பத்திரிகை செய்தியைவிட வேறு எதுவித ஆதாரமுமில்லை.

அவருக்கு வழங்கப்பட்ட கையாளின் முயற்சி தோல்வி கண்டதும் திரு.மாவை. சேனாதிராசா தன்னிச்சையாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை அகற்றிவிட்டு அந்த இடத்திற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியை சேர்த்துக் கொண்டு புதிய தமிழ்.தே.கூ உருவாக்கினார். ஆனால் அவரின் இச் செயலால் 22.10.2001 இல் உருவாக்கப்பட்டிருந்த த.தே.கூ. தானாக செயல் இழந்தவிட்டது. திரு. சேனாதிராசாவால் உருவாக்கப்பட்ட அமைப்பு முற்று முழுதாக புதிய அமைப்பாகும். ஆகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரால் எதையும் செய்ய முடியாது என்பதே.

புதிய கூட்டமைப்பு மோசடி மூலம் முறையான அதிகாரமும் இன்றி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெயரை உபயோகித்து அதன் பெயரில் 2004 ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு ஓர் தேர்தல் விஞ்ஞாபனம் தயாரித்து அதில் விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களின் தேசிய தலைமை என்றும் அவர்களே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என ஏற்றுக் கொண்டுள்ளதாக பிரகடனப்படுத்தியுள்ளனர். 2004 ம் ஆண்டு சித்திரை மாதம் நடந்த தேர்தலில் மிகப் பெரும் அளவில் வாக்களிப்பில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டது. தேர்தல் அவதானிப்புக் குழுவினாரால் இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாக்களிப்பு நிலைய முகவர்களால் தமது கடமைகளை செய்ய முடியவில்லை. தமக்குரிய வாக்குகள் அன்றி பிறரின் வாக்குகளை ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் தாராளமாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலைமை கூட்டமைப்பு கட்சிகளுக்கு 22 ஆசனங்களைப் பெற உதவியது. இத்தேர்தலை நிராகரிக்குமாறு தேர்தல் கண்காணிப்பு குழுவினரால் விடப்பட்ட கோரிக்கை சட்டத்தினால் அதற்கு இடம் இல்லையென கூறி தேர்தல் ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.

மோசடி மூலமாக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பு பிழையான ஓர் செயலை திரும்ப திரும்ப செய்தால் குறிப்பிட்ட ஓர் காலத்தின் பின் அதை சட்டபூர்வமான செயலாக உரிமை கொண்டாட முடியாதல்லவா. அவர்களால் அனுபவிக்கப்பட்டு வந்த வசதி அவர்களுக்கு சர்வதேச அரங்கில் புதியதோர் அந்தஸ்தை பெற்றுத்;தந்துள்ளது. அப்பாவித் தமிழ் வாக்காளர்கள்தான் இப்போது கிரிமினல்வாதிகள் என்ற அவப் பெயரை சுமக்கின்றனர்.

குற்றம் செய்தவர்கள் என்ற பெயரை அப்பாவித் தமிழ் வாக்காளர்களே தற்போது சுமந்து நிற்கின்றனர். ஏப்பிரல் 2004 தேர்தல் நடந்ததில் இருந்து திரு.பிரபாகரன் இறந்தது வரையான காலத்தில் செய்த குற்றங்கள் அத்தனைக்கும் பொறுப்பென நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இவற்றுள் திரு.லக்ஸ்மன் கதிர்காமர், யோசெப் பரராஜசிங்கம், சந்திரநேரு,, கிங்ஸி இராசநாயகம். சட்டத்தரணி ரவிராஜ், தியாகராசா மகேஸ்வரன் ஆகியோரின் படுகொலைகள் உட்பட இன்னும் பல அடங்கும்.

இந்த சூழ்நிலையில் தங்களுக்குரிய அதிகாரத்தை உபயோகித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பதத்தை எவரும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு உபயோகிக்காது தடைவிதிக்குமாறு வற்புறுத்தி வேண்டுகிறேன். நான் உங்களை மேலும் மன்றாட்டமாக கேட்பது இந்த நான்கு கட்சி கூட்டமைப்பினரால் அப்பாவி வாக்காளர்களுக்கு சூட்டப்பட்டிருக்கும் புலி என்ற பட்டியும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் கடந்த காலத்தில் த.தே.கூ அளித்த வாக்குகள் புலிகளுக்கு அளிக்கப்பட்டவை என கணிக்கப்படாதுபோகும். இந்த வியாபாரத்தில் மிக்க பயன் அடைந்தவர்கள் தமிழ் அரசுக் கட்சியினரே என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எல்லா விடயங்களிலும் சிங்கத்தின் பங்குபோல் அவர்களுக்கு கிடைத்தன. தமிழரசுக் கட்சி, விடுதலைப் புலிகளின் கட்டளைக்கு அமையவே, அதன் ஸ்தாபகர் இறந்து 26 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன் ஸ்தாபகரும், அவருடன் இணைந்து செயற்பட்டவர்களும் தமிழரசுக் கட்சியை செயலிழக்கச் செய்து, அதன் வாரிசாக தமிழர் விடுதலைக் கூட்டணியே இயங்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயற்பட்டனர் என்பதை, சுட்டிக் காட்டுவதில் தப்பில்லை என எண்ணுகிறேன். இந்த நிலைப்பாட்டை தந்தை செல்வாவுடன் இணைந்து தமிழரசுக் கட்சியை ஆரம்பித்து அதன் பொதுச் செயலாளராக செயற்பட்ட அமரர் அமிர்தலிங்கம் அவர்களின் பாரியார் மங்கையற்கரசி உறுதிசெய்கின்றார். திருமதி அமிர்தலிங்கம் தனது அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்.

விரும்பத்தகாத சக்திகள் எவையும் தமிழரசுக் கட்சியின் சின்னத்தையும் அதன் பெயரையும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே எனது கணவர் தமிழரசுக் கட்சியின் பதிவைப் பாதுகாத்து வைத்தார். தமிழரசுக் கட்சியை அவர் ஒரு போதும் புனரமைக்க எண்ணவில்லை.

அவரால் வளர்க்கப்பட்ட சிலர் தமிழரசுக் கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்யவும் அதனைப் புனரமைக்கவும் முயல்வது கவலைக்குரியது. இவர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையே இவர்கள் முறியடித்திருக்கிறார்கள்.

எனவே, தமிழரசுக் கட்சியின் புனரமைப்புக்கு நான் அங்கீகாரமோ அல்லது ஆதரவோ அளிக்கவில்லை என்பதை எல்லோருக்கும் திட்டவட்டமாக தெளிவுபடுத்திக்கொள்கின்றேன். அத்துடன் இது எமது பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒழித்துவிடும் ஒரு தந்திரோபாயம் என்ற கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது ஆதங்கம் அவர்கள் என்னை விடுதலைப் புலிகளை உபயோகித்து வெற்றிகரமாக சதி செய்து அரசியலில் இருந்து ஒதுங்க வைத்தனர் என்பதேயாகும். தமது சொந்த நலனுக்காக விடுதலைப் புலிகளாகவும், புலிகளின் ஆதரவாளர்களாகவும் இயங்கி வந்த சிலர் அப்பாவித் தமிழ் மக்களையும், விடுதலைப் புலிகளின் பெயரையும் பயன்படுத்தி பெரும் இலாபம் அடைந்துள்ளனர்.


நன்றி.

அன்புடன்,


வீ. ஆனந்தசங்கரி,
செயலாளர் நாயகம்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

Read more...

Saturday, April 4, 2015

சர்வதேச தொழிலாளர் உரிமைகள் மாநாட்டில் சிறப்புரையாற்ற புறப்படுகின்றார் றக்கீப்.

மருதமுனைனைச்சேர்ந்த சிரேஸ்ட சட்டத்தரணியும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிஉயர் பீட உறுப்பினரும் சர்வசதே தொழிலாளர் உரினமகள் மையத்தின் ஆலோசகருமாகிய சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் அவர்கள் எதிர்வரும் 7ம் ஆம் திகதி கட்டார் நாட்டில் சர்வதேச தொளிலாளர் உரிமைகள் மையத்தினால் அன்நாட்டின் வெளிநாட்டு தொளிலாளர்களின் உரிமைகள் சம்மந்தமாக நடைபெறவிருக்கும் தொளிலாளர் உரிமைகள் மாநாட்டில் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவதற்காக விசேட அழைப்பின் பேரில் எதிர்வரும் 6ம் ஆம் திகதி திங்கட்கிழமை கட்டார் நாட்டிற்கு பயணமாகின்றார்

மேலும் இவர் கட்டார் நாட்டில் தொளில் புரியும் இலங்கையர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் சம்மந்தமாக இலங்கை தொளிலாளர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் விசேட நிகழ்வில் கலந்து கொண்டு இலங்கை தொளிலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கான சட்ட ஆலோசனைகனளயும் அதற்கான தீர்வுகளையும் வழங்கவுள்ளார்.

கட்டார் நாட்டில் சட்ட ஆலோசனை வேண்டி நிற்கும் நம்மவர்கள் மேற்குறித்த சந்திப்புக்கள் இடம்பெறும் இடத்திற்கு சென்று தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.


Read more...

Friday, April 3, 2015

அமெரிக்க ஏகாதிபத்திய நெருக்கடியில் ஒரு தீர்க்கமான திருப்புமுனை. Nick Beams

சீன ஆதரவிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் (AIIB) ஸ்தாபக உறுப்பினர்களாவதற்கு கையெழுத்திட, நாடுகளுக்கு 31.03.2015 இறுதிநாளாக இருந்தது. அது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய வெளியுறவு கொள்கை மற்றும் மூலோபாய நோக்கங்களுக்கு ஒரு முக்கிய தோல்வியைக் குறிக்கும் வகையில், வரலாற்றில் இடம் பெறும்.

வாஷிங்டனின் கடுமையான எதிர்ப்புக்கு எதிராக, 40க்கும் மேற்பட்ட நாடுகள் அவை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) இன் பாகமாக இருக்க விரும்புவதாக இப்போது சுட்டிக் காட்டியுள்ளன. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உட்பட பிரதான ஐரோப்பிய சக்திகளும், அத்துடன் நோர்வே, டென்மார்க் மற்றும் நெதர்லாந்து ஆகியவையும் அவ்வங்கி குழுவில் இடம் பெற்றுள்ளன. சீனாவைத் தங்களின் பிரதான வர்த்தக பங்காளியாக கருதும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஏறத்தாழ எல்லா நாடுகளும், கூட கையெழுத்திட்டுள்ளன. தாய்வானுடன் சேர்ந்து, இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.

அதன் முதன்மை ஐரோப்பிய கூட்டாளியான பிரிட்டனால், அமெரிக்காவிற்கு எதிராக மிக முக்கிய அடி கொடுக்கப்பட்டது. பிரிட்டன் மார்ச் 12 இல் அதில் சேருவதற்கான அதன் முடிவை அறிவித்தது. அது, ஆசிய-பசிபிக்கில் உள்ள இரண்டு முக்கிய அமெரிக்க கூட்டாளிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா உட்பட ஏனையவையும் அதை பின்தொடர அணைமதகுகளைத் திறந்துவிட்டது. ஜப்பானும் அனேகமாக ஜூனுக்கு முன்னதாக இணைய பரிசீலித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தோல்வியின் முழு முக்கியத்துவமும் மற்றும் அதன் நீண்டகால தாக்கங்களும் ஒரு வரலாற்று முன்னோக்கில் இருந்து பார்க்கையில் மிக தெளிவாக வெளிப்படுகின்றன.

அந்த புதிய வங்கி மீதான ஒபாமா நிர்வாகத்தின் பிரதான ஆட்சேபணைகளில் ஒன்று, அது சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கிக்கு குழிபறிக்கும் என்பதாகும். 1944 இன் பிரெட்டென் வூட்ஸ் உடன்படிக்கையுடன் ஒருங்கிணைந்து, அந்த அமைப்புகள் அமெரிக்காவினால் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய உலகளாவிய பொருளாதார ஒழுங்கமைப்பை ஸ்தாபிப்பதில் மையத்தூண்களாக இருந்தன. அமெரிக்கா 1920கள் மற்றும் 1930களின் சீரழிவுகள் மற்றும் அது உருவாக்கிய புரட்சிகர போராட்டங்களைத் தொடர்ந்து, உலக முதலாளித்துவத்தை மறுகட்டமைப்பு செய்வதில் மைய பாத்திரம் வகித்தது.

சொல்லப் போனால், போரால் நாசமாக்கப்பட்ட ஐரோப்பாவினது மறுஸ்திரப்பாட்டிற்கான மார்ஷல் திட்டத்துடன் ஒருங்கிணைந்து, அவ்விரு அமைப்புகளுமே அமெரிக்க ஏகாதிபத்தியதின் பொருளாதார மற்றும் மூலோபாய நலனுக்காக செயல்பட்டன.

ஆனால் போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பிலிருந்து அமெரிக்கா பெரும் ஆதாயங்களைப் பெற்ற போதினும், அவற்றை அது குறுகிய பார்வையில் கருத்தில் கொள்ளவில்லை. அமெரிக்க முதலாளித்துவம் உயிர் பிழைக்க வேண்டுமானால், ஏனைய முதலாளித்துவ அதிகாரங்கள், அனைத்தினும் மேலாக, அது எவற்றுக்கு எதிராக கடுமையாக இரத்தக்களரியிலான மோதலில் சண்டையிட்டதோ அவற்றின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை உறுதிப்படுத்த, அதன் தரப்பிலிருந்து பெரும் ஆதாரவளங்களை உபயோகிக்க வேண்டும் என்பதை ஆளும் அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் உணர்ந்திருந்தன.

போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு ஜேர்மனியின் விரிவாக்கத்திற்கு உதவியதுடன், அதை மீண்டுமொருமுறை ஐரோப்பாவின் தொழில்துறை அதிகாரமையமாக மாற்றியது. அதே நேரத்தில், ஜப்பானிய செலாவணி மதிப்பின் மீது —ஒரு டாலருக்கு 360 யென் என்றளவில் அது கட்டுப்படுத்தப்பட்டு இருந்ததில் இருந்து— அதற்கு வழங்கப்பட்ட விட்டுக்கொடுப்புகள், அதன் தொழில்துறைக்கு ஏற்றுமதி சந்தைகளைத் திறந்துவிட்டது. கொரிய போரின் போது, ஜப்பானில் டிரக்குகள் மற்றும் ஏனைய இராணுவ தளவாடங்களை உருவாக்குவதென எடுக்கப்பட்ட முடிவு, ஜப்பானின் வாகன தொழில்துறையின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்ததுடன், அது அமெரிக்காவில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த நவீன உற்பத்தி நுட்பங்களோடு ஒருங்கிணைக்கப்பட்டு, பின்னர் அபிவிருத்தி செய்யப்பட்டது.

அமெரிக்காவின் தொழில்துறை மற்றும் பொருளாதார தகைமை, கொரிய போர் விடயத்தில் பிற்போக்குத்தனமான வடிவங்களை ஏற்றிருந்த போதினும் கூட, அது உலகளாவிய முதலாளித்துவ விரிவாக்கத்தின் புதிய கட்டத்திற்கு —அதாவது போருக்குப் பிந்தைய வளர்ச்சிக்கு— அனுகூலங்களைக் கொண்டு வர பயன்பட்டது.

தற்போதைய நிலைமையோடு என்னவொரு முரண்பாடு! அமெரிக்க முதலாளித்துவமோ இப்போது உலகின் தொழில்துறை அதிகாரமையமாக இல்லை என்பதோடு, ஒட்டுமொத்தமாக முதலாளித்துவ பொருளாதார விரிவாக்கத்தையும் உறுதி செய்வதற்குரியதாக இல்லை. அதற்கு மாறாக, அது உலகளாவிய ஒட்டுண்ணித்தனத்தின்-தலைமையகமாக செயல்படுகிறது. அதன் பேராசைமிக்க வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீட்டு நிதியங்கள் புதிய செல்வத்தை உருவாக்குவதில் ஈடுபடாமல், ஏனைய இடங்களில் திரட்டப்படும் செல்வ வளத்தை, பெரும்பாலும் குற்றகரமான அல்லது பாதி-குற்றகரமான நடவடிக்கைகள் மூலமாக அபகரிப்பதில் ஈடுபட்டு, உலகில் இலாபம் தரும் வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றன.

அண்டைநாடுகளிடம் கையேந்தும் 1930களின் கொள்கைகள் மற்றும் தடையாணைகள் ஒரு பேரழிவை உண்டாக்கி இருந்தன என்பதை புரிந்து கொண்டு, போருக்குப் பிந்தைய உடனடிக் காலகட்டத்தில், அமெரிக்கா தடையற்ற வர்த்தகத்தின் பாதுகாவலனாக விளங்கியது. இன்றோ, பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை மற்றும் ஐரோப்பாவைச் சார்ந்து உருவாக்கப்பட்டு வருகின்ற அதுபோன்ற ஏற்பாடுகள் போன்ற நடவடிக்கைகள் மூலமாக, வாஷிங்டன் அமெரிக்க பெருநிறுவனங்களின் ஏகபோக அந்தஸ்தைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டு பிரத்யேகவாத உடன்படிக்கைகளைப் (exclusivist agreements) பெற முயல்கிறது. 21ஆம் நூற்றாண்டிற்கான வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கு உலகளாவிய விதிகளை அமெரிக்காவே எழுத வேண்டுமென ஒபாமா அறிவித்துள்ளார்.

போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அமெரிக்க மேலாளுமை, உடனடி பொருளாதார செயலெல்லைக்குள் மட்டுப்பட்டு இருக்கவில்லை. தசாப்த கால போர், பாசிசம் மற்றும் இராணுவ ஆட்சி வடிவங்கள், அத்துடன் பொருளாதார சீரழிவுகளால் பாதிக்கப்பட்டிருந்த உலகிற்கு, அதன் எல்லா முரண்பாடான அம்சங்களுக்கு இடையிலும், அமெரிக்க சமூகத்தால் ஏதோவொன்றை ஒட்டுமொத்தமாக வழங்க முடியும் என்பதாக தெரிந்தது.

மீண்டும், தற்போதைய நிலைமையுடனான இந்த முரண்பாடு இந்தளவிற்கு தெளிவாக இருக்க முடியாது. ஒருகாலத்தில் உலகின் ஏனைய பகுதிகளுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக விளங்கிய அமெரிக்க ஜனநாயகம், அதன் முந்தைய தன்மையிலிருந்து தேய்ந்துபோன கேலிச்சித்திரமாக, இப்போது நிதியியல் மற்றும் பெருநிறுவன மேற்தட்டுக்களின் சர்வாதிகாரத்தை மூடிமறைக்க தகைமையற்று உள்ளது.

அன்றாடம் பொலிஸ் படுகொலைகளில் குறைவில்லாமல் பிரதிபலிக்கப்பட்டு சமூக நிலைமைகள், இழப்புகளாலும் அரசு வன்முறையாலும் குணாம்சப்பட்டுள்ளன. உலகின் மிக உயர்ந்த சிறையடைப்பு விகிதத்தைக் கொண்டுள்ள அமெரிக்காவில், ஒருகாலத்தில் மிக உயர்ந்த ஊதியங்கள் வழங்கிய, மற்றும் அமெரிக்க தொழில்துறை பொருளாதாரத்தின் மையமாக விளங்கிய டெட்ராய்டில், குடிநீர் நிறுத்தப்படும் நடவடிக்கைகள் திணக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க அரசாங்கம் அதன் சொந்த மக்களையும் மற்றும் உலகின் ஏனைய இடங்களிலும் சித்திரவதை, அத்துமீறல், படுகொலைகள் மற்றும் பாரிய உளவுவேலைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களது குற்றங்களுக்காக கணக்கில் கொண்டு வரப்படாத குற்றவாளிகளால் அந்நாடு ஆட்சி செய்யப்படுகிறது.

1991 சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, அதன் உலகளாவிய எதிராளி காட்சியிலிருந்து நீங்கியதை அடுத்து, அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பொருளாதார இடம் கடுமையாக பலவீனப்பட்டிருந்த போதினும் —1987 பங்குச்சந்தை பொறிவு வரவிருந்த விடயங்களுக்கு ஒரு முன்னறிவிப்பாக இருந்த நிலையில்— அமெரிக்க மேலாதிக்கத்தை எவ்வாறாயினும் இராணுவ வழிவகைகளைக் கொண்டு பேண முடியும் என்ற சிந்தனை அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் பதிந்திருந்தது.

ஆனால் "படை தத்துவத்தின்" (force theory) மற்றொரு விளக்கவுரையாளரை மறுத்து பிரெடெரிக் ஏங்கெல்ஸ் முன்னரே விவரித்ததைப் போல, பொருளாதார அபிவிருத்திகளையும் —அதாவது தொழில்துறை, கடன் வழங்கல் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சியும்— அவை உயர்த்திக் கொண்டு வரும் முரண்பாடுகளையும் "குருப் (Krupp) துப்பாக்கிகள் மற்றும் மாசெர் ரக கைத்துப்பாக்கிகளைக்" கொண்டு அவை "பிழைத்திருப்பதை அழிக்க" முடியுமென்ற கருத்து ஒரு பிரமையாகும்.

பொய்களின் அடித்தளத்தில் நடத்தப்பட்ட படையெடுப்புகள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுடன் சேர்ந்து, ஏவுகணை தாங்கிய போர்க்கப்பல்களையும் டிரோன்களையும் பிரயோகித்ததன் அடிப்படையில் அமைந்திருந்த, கடந்த 25 ஆண்டுகால அமெரிக்க வெளியுறவு கொள்கையானது ஒன்று மாற்றி ஒன்று என அழிவுகளை உண்டாக்கி உள்ளன.

கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்தாக வேண்டும் என்பதைப் போல, இப்போது ஏனைய முதலாளித்துவ சக்திகள், அவை பெரிதோ அல்லது சிறிதோ, அமெரிக்க பலிபீடம் நாசப்படுவதற்குரிய நிச்சயமான பாதை என்று தங்களைத்தாங்களே அதிலிருந்து விடுவித்துக் கொள்வதென முடிவெடுக்க தொடங்கிவிட்டன. அது தான் AIIB இல் இணைவதென்று அவர்கள் முடிவெடுத்ததன் வரலாற்று முக்கியத்துவமாகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் எவ்வாறு விடையிறுக்கும்? உலகை மீண்டுமொரு முறை போருக்குள் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலுடன், அதன் இராணுவ ஆத்திரமூட்டல்களை அதிகரிப்பதைக் கொண்டு விடையிறுக்கும்.

1920களின் இறுதியில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உயர்ந்தெழுவதை ஆவணப்படுத்தி லியோன் ட்ரொட்ஸ்கி குறிப்பிடுகையில், “வளர்ச்சிக் காலகட்டத்தை விட" நெருக்கடி காலகட்டத்தில், அதன் மேலாதிக்கம் "இன்னும் அதிக பகிரங்கமாகவும் அதிக பொறுப்பற்றரீதியிலும்" செயல்படும், மேலும் அதன் விரோதிகளை விலையாக கொடுத்து, அவசியமானால் போர் வழிவகையைக் கொண்டேனும், அதன் சிக்கல்கள் மற்றும் சீரழிவுகளிலிருந்து அது தன்னைத்தானே விடுவித்துக் கொள்ள முயலும் என்பதைச் சுட்டிக்காட்டினார்.

ஆனால் பகுப்பாய்வின் இறுதியில், நேற்றைய சம்பவங்களில் மிகவும் பலமாக எடுத்துக்காட்டப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வீழ்ச்சியில், அங்கே மற்றொரு தீர்மானகரமான அம்சமும் உள்ளது.

தொடர்ச்சியாக அதிகரித்துவரும் பலம் —அமெரிக்காவின் "சிறந்த காலங்கள்" எப்போதும் முன்னால் உள்ளன— என்ற கருத்து, தசாப்தங்களாக, அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை நோக்குநிலை பிறழ செய்திருந்தது. எதார்த்தம் இப்போது முன்பினும் கூடுதல் பலத்தோடு திரும்பி வந்து கொண்டிருக்கிறது.

கடந்த காலத்தின் பிரமைகளைச் சம்பவங்கள் உடைத்தெறிந்து வருவதுடன், உலக சோசலிச புரட்சிக்கான போராட்டத்தில் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கு நிலைமைகளை உருவாக்கி, அவை அமெரிக்க தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர போராட்ட பாதைக்கு உந்திச் செல்லும்.

Read more...

மீனவர் பிரச்சினை:"சென்னை செல்லவும் இலங்கை ஜனாதிபதி தயார்"

இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினையை தீர்க்கத், தேவைப்பட்டால் தமிழகம் சென்று அனைத்து தரப்புடனும் பேசத் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்வந்துள்ளார் என சம்பந்தர் கூறுகிறார். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்படிப்பது தொடர்பில், நீண்ட காலமாக நிலவி வரும் சர்ச்சைகள் குறித்து விவாதிப்பதற்கு இலங்கை ஜனாதிபதி தலைமையிலான உயர்மட்டக் கூட்டம் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தரின் வேண்டுகோளை அடுத்தே இந்தக் கூட்டம் நடைபெற்றது என அதன் தலைவர் கூறுகிறார்.

இந்தக் கூட்டத்தில் இலங்கை மீனவர்களின் நலன்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும், வட மாகாண சபையும் தமிழக அரசும் இந்த விஷயம் குறித்து பேசி முடிவெடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது எனவும் சம்பந்தர் தெரிவித்தார்.

இந்திய மத்திய அரசுடன் இலங்கை ஜனாதிபதி மீனவர்கள் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்துவார் என்றும், தேவையேற்பட்டால் தமிழகம் செல்லவும் அவர் தயாராக உள்ளார் எனவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக கூட்டமைப்பின் தலைவர் கூறுகிறார்.

இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடல் வளங்களை சுரண்டுவது தொடர்பிலான சட்டங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அதை முழுமையாக அமல்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதித்து சில முடிவுகள் எட்டப்பட்டன எனவும் சம்பந்தர் தெரிவித்தார்.

இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினையில் அரசுடன் மீனவர்கள் பிரதிநிதிகள் நடத்தும் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்வது இதுவே முதல்முறை.

Read more...

திருடியோடும் போது கூடச் சில்லறையும் தொலையவிடார்! லோகநாதன் - ஜேர்மனி

இலங்கைத் தமிழர்களின் புலம் பெயர்வு இலங்கைத் தமிழ் சாமான்யர்களுக்கு எந்த அனுகூலங்களையும் தரவில்லை. தம்மையும் தம் தனித்துவத்தையும் அழித்துக்கொள்ள மட்டுமே உதவியுள்ளது! இயக்கங்களுக்குப் பணம் சேர்த்தவர்கள், தூள் கடத்தல், ஆட்கடத்தல் என்ற 2ம் தர மோசடி வர்த்தகங்களில் ஈடுபாடு கொண்டு உழைத்த கறுப்புப் பணங்களை முதலீடாக்கி வர்த்தக நிலையங்கள் வைத்திருக்கும் சில புலம்பெயர் திருடர்கள் தொடர்ந்து தம்மைத் தக்க வைத்துக்கொள்ளவும் பணம் பண்ணவும் இந்தியப் பிரபலங்களைப் பாவிக்கிறார்கள். விளம்பரத்துக்கு தொலைக் காட்சிகளும் இவர்களுக்குத் தேவை. புலம் பெயர் புலிப் பினாமித் திருடர்கள் வாந்தியெடுத்தால் அதை வழித்து நக்குவதற்கென வைக்கோ சீமான், நெடுமாறன் என சில வகையறாக்கள் நாக்கைத் தொங்கப் போட்டு புலிக்கதை பேசி அலைகிறார்கள், அடிக்கடி விஜயம் செய்கிறார்கள்.

புலம்பெயர் தமிழர் விடும் தவறுகள் புலத்தில் வாழும் மக்களை எப்படிப் பாதிக்கின்றது என்பதை சுகிசிவம் சுட்டிக்காட்டி விமர்சித்தது போல் இவர்கள் யாரும் சுட்டிக்காட்டுவதில்லை பதிலாகத் தவறுகளை மேலும் தட்டிக்கொடுக்கிறார்கள். ஏனென்றால் தாம் வயிறு வளர்ப்பதற்கு! இது போல் நாமிருக்க முடியாது.

அதேவேளை தென் இந்தியச் சராசரி தமிழ் மக்கள் ஈழத் தமிழர்களை அவதானிக்கிறார்கள். தவறுகளைத் துல்லியமாகக் கணித்து வெறுக்கிறார்கள் என்பதற்கு ஒரு சிறு உதாரணம்! புதுக்கோட்டையிலுள்ள இலங்கைத் தமிழர் அகதி முகாமுக்குப் போயிருந்த போது அயலில் நான் சந்தித்த ஒரு குடும்பப் பெண்ணின் உரையாடல் இது . . . .

„உங்க சிலோண்காரப் பொம்பிளைங்க தண்ணி பிடிக்க வருவாங்க சார், குடங்கள முதவே குடிக்க உதவாத தண்ணியில அலசி எடுத்து வரமாட்டாங்க இங்க வந்து குழாய் தண்ணியில இல்ல லாறித் தண்ணியில அலசுவாங்க கொஞ்சம் கூட மனசில்லாதவங்க . . . . . .' என்றார் வெள்ளந்தித் தனமாக. இதுபோல ஐரோப்பா, கனடா, அமெரிக்காவிலிருந்து இந்தியா உலாவரும் இலங்கைத் தமிழரின் படாடோபங்களைப் பார்த்து முகம் சுழிக்கும் இந்திய மக்களிடம் அருவப்பான அன்னியப்பாடு தொனிக்குமே தவிர அனுதாபம் துளி கூட வராது.

என்றால், சுப்பர் சிங்கரில் திறமை மிக்க பிள்ளைகளை வஞ்சித்து! அவர்களின் நியாயமான வெல்லும் உரிமையை மறுத்து, கோடிக் கணக்கான வாக்குகளைப் அள்ளிப் போட்டு கனடிய இலங்கைத் தமிழ் அகதியான யசிக்காவை ஜெயிக்க வைத்த நிகழ்வு இலங்கைத் தமிழர் பற்றி எத்தகைய வெறுப்பையும் அருவருப்பையும் இத்தனை கோடி இந்தியத் தமிழர் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் என எண்ணிப்பாருங்கள் தாக்கம் புரியும்?

தகுதிமிக்க நடுவர்களாகப் பணியாற்றிய சித்திரா, மனோ இவர்கள் கூட புலம் பெயர் இலங்கைத் தமிழர்களால் முகப்புத்தகங்களிலும் இணையங்களிலும் பண்பற்ற வார்த்தைகளால் அணுகியதும், வாக்களிப்பால் திறமைக்கான அவர்களது மதிப்பீடுகள் தரம் தாழ்ந்து போனதுமான வேதனை அவர்களிருவரதும் இறுதிநேர முகபாவங்களே காட்டி நின்றன.

அதோடு எமது மக்கள் எக்கேடு கெட்டு என்ன கெட்ட பெயர் வாங்கினாலும் சரி. லாபம் மட்டுமே குறியாக இருந்த ஏதையல ரிவி நிறுவனத்தினரால் யசிக்கா என்ற பிள்ளை பாவிக்கப்பட்டிருக்கிறாள். முதல் தெரிவில் தரமிழந்த போதும் மீண்டும் உட்கொண்டு வருவதற்கான 14 இலட்சம்;, இறுதிப் போட்டியில் ஒன்றரைக்கோடி(15000,000) எனத் தொலைபேசி வாக்குகள். இவை அத்தனையும் ஏதையல க்கு ஒரு குவியல் பணம்! பித்தளை கலந்து கொடுத்த ஒரு கிலோத் தங்கத்தை(விளம்பரத்)விடப் பல மடங்கு பெறுமதியான வருமானம். இதே வேளை ஈழத் தமிழர்கள் பற்றிய கேவலமான எண்ணக்கரு உலகம் பூராவும் விதைக்கப்பட்டது பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் சூட்டோடு சூடாக ஈழத் தமிழரிடம் உழைக்க கலைக் கழியாட்டத்துக்கு இன்று லண்டன் வந்திருக்கிறார்கள்?

இந்திய கலைத்துறை என்றால் சினிமா அதிலும் தென்னிந்திய சினிமா, திரைத் தொடர் நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்வுகள், உப விற்பனைகள் என்ற எண்ணக்கரு விதைக்கப்பட்டு நாளுக்கு நாள் இறுக்கமாகி வருகிறது. இது கூத்தாடித் தொழில் முதலாழிகள் தாமாகவே புலன் பெயர் தமிழர்களிடம் உருவாக்கிவிட்டிருக்கும் பாரிய-லாபமிக்க சந்தை. இந்தியாவில் எத்தனை மாநில மொழிகளில் சினிமாத் தொழிலும் கலைஞர்களும் இருந்த போதும் அடிக்கடி ஐரோப்பிய, கனடிய அரினா மண்டபங்கள் நிரம்பி வழியும் வருமானம் மிக்க கழியாட்டத் திருவிழாத் திருட்டை தென்னிந்திய கலைத்துறையால் மட்டுமே செய்ய முடிகிறது. காரணம் இலங்கைத் தமிழ் இழிச்ச வாயர்கள் பெறுமதி மிக்க பணமுலாவும் நாடுகளில் வாழ்வது.

அறம், நீதி, நேர்மை இவைகளைத் தள்ளி வைத்து இவைகளை ஏற்பவனைத் தண்டித்துக் கொன்று, பலாத்காரமாகக் குழந்தைகளை இழுத்து வந்து பயிற்சியே இல்லாமல் சுடுகலன்களைக் கையில் கொடுத்து அனுப்பியவனையும் தங்கள் தலைவனாக ஏற்றுப் போற்றிய வாத்துக் கூட்டமான ஈழத் தமிழர்கள் தானே? இசை நிகழ்ச்சியில் மட்டும் நீதியற்று வாக்களிக்கிறோம் சிறுவர் உரிமையை மீறுகிறோம் என்பதை எப்படி உணரமுடியும்? ஆண்ட பரம்பரை என்று சொல்வார்கள் முள்ளிவாய்கால் வரை தொடர்ந்து தோற்ற பரம்பரை! எதிலாவது வென்றுவிடவேண்டும் என்ற வேணவா! அதற்காக நேர்மையற்றாவது? என்பதன் விளைவாக விழுந்தது தான் யசிக்காவுக்கான வாக்கெண்ணிக்கை! இதை வாய்ப்பாக்கியது ஏதையலவுஏ.

„திருடாதே பாப்பா . . . . . . . . .'

தன்னுடைய நிகழ்ச்சி அட்டையின் அங்கீகாரமற்ற விற்பனையைத் தவிர்ப்பதற்காக இந்தப் பாடலை அடிக்கடி விளம்பரம் செய்கிறது ஏதையலவுஏ. ஆனால் மிகப்பெரிய திருடர்கள் இவர்கள் தான். இவர்களால் திருடப்படுபவை . .

• சுப்பர்சிங்கர் முதல் தேர்வில் சிறுவர்களின் எதிர்பார்ப்புகள்
• சரியான திறமையை வெளிப்படுத்தும் உரிமை
• கல்வி, கல்வி மீதான அக்கறை
• கல்வியில் காலவரையற்ற விடுப்பு(கல்யில் விடுப்பு உரிமை மீறலே)
• குழந்தைகளின் உழைப்பு
• எதிர்காலம் பற்றிய உண்மையற்ற எதிர்பார்ப்பு.

இப்படிப் பல விடயங்கள் குழந்தைகளிடமிருந்து திருடப்பட்டாலும் இலகுவான, செலவு குறைந்த, விளம்பரம் மிக்க நிகழ்ச்சி சுப்பர்சிங்கர் என்பதால் அதியுயர் வருமானம், விளம்பரங்கள் என அள்ளுகொள்ளை! குழந்தை தொழிலாரைக் கொண்டு உழைக்கும் தீப்பெட்டித் தொழில் போல இது சுருதிப்பெட்டித் தொழிலில் சிறுவர் உழைப்பு! சிறுவர்கள் சுரண்டப்படுகிறார்கள்!

• சினிமா, சினிமா, சினிமா என முழுமையும் அதுவாகவே! தமிழ் சினிமாவில் சமூகம் முன் செல்லவென வைக்கப்படும் அம்சம்? நூறாண்டாகியும் இன்றுவரை கேள்வியே தான்!

• சினிமாக் கலைஞர்களைத் தங்கள் வீட்டுப் பிள்ளைகளாக்கிப் போற்றுதலுக்குரிய அளவு முக்கியத்தும் கொடுக்கிறது ஏதையல ஏனோ?

• புறக்கணிக்கக் கூடிய சிறிய பிரச்சனைகளைப் பெரிது படுத்தல், சதா ஒட்டுக்கேட்டல், சாப்பாட்டில் விஷம் வைத்தல், கொலை, வில்லத்தனம் ஒருத்தி புருசனை ஒருத்தி பிடிக்கிறது இவைகளிலெல்லாம் அனேகம் பெண்களையே காட்டும் சின்னத்திரைத் தொடர்கதைகள் தேர்வு ஏதும் இன்றி ஒளிபரப்பிப் பெண்களைக் கேவலப்படுத்துகின்றது! . . . . .

அதோடு தொலைக் காட்சித் தொடர்கள் சினிமா மோகம் என்பன குடும்பப் பெண்களின் ஓய்வைத் திருவதோடு, குழந்தைகளை நேர்த்தியாகப் பராமரிக்க, வீட்டுப் பாடம், கல்விக்குதவுதல் போன்ற அனைத்துக் கடமைகளும் திருடப்படுகின்றன.

„ஒரு வார்த்தை ஒரு லட்சம்' வாரமொரு தமிழ் வளர்க்க „கனெக்ஸன்' னில் தினமும் தமிழ்ப் படுகொலை அரங்கேறுகிறது. தமிழ் நடிகர்களை மட்டுமே உள்வாங்கும் „நடுவிலகொஞ்சம் . . .' அவர்களின் தரத்துக்கான கேள்விகளின் மூலம் தமிழ் நடிகர்களின் அறிவுத்திறனை உலகறிய வைக்கிறது. „அது இது எது' அதிலும் சினிமாக் கலைஞர்களே! இது நோக்கமற்றிருப்பதோடு அது பேசும் வார்த்தைகள் பகிடிகள் பண்பு கடந்து போவது பல தடவைகள் நடந்திருக்கிறது.

படங்கள், சின்னத் திரைத் தொடர்கள், தினசரி நிகழ்சி பூராவும் சினிமாக் கலைஞர்களையே உள்வாங்கல் முலம் சினிமாக் கலைஞர்களின் அமைப்புக்களால் நடத்தப்பட்ட பெரு விழாக்கள், வெளிநாட்டுக் கழியாட்ட வருகைகள், விளம்பரங்கள் என ஒட்டுமொத்தமாகத் திருடிவிட்டது ஏதையல!.

சார்பு நிலையற்ற எந்த ஊடகமும் இருக்கமுடியாது. அந்த வகையில் ஏதையல யின் சார்பு மக்களை நோக்கியதல்ல. ஒரு நலவாழ்வு நிகழ்ச்சியோ, குறைந்த படசம் தினச் செய்தியோ கூடக் கிடையாது. „நீயா நானா' இது கூட மத்திய தர மேல் தட்டு மக்களின் பிரச்சனைகள் பிணக்குகளே தலைப்புகளாகவே தேடப்படுகிறது. ஆங்கிலம் கலந்தோ முழுமையும் ஆங்கிலத்திலோ பேசுவது மதிப்புகுரியதாக ஒரு பாணி பழக்கப் படுத்தப்பட்டதால் கீழ்த்தட்டு அனுபவங்கள் பங்கிடப்படுவது அரிதாகவேயுள்ளது.

எது எப்படியோ சுமைகள் மிகுந்த இன்றைய மனிதன் பொழுபோக்கு எனும் இருட்டுக்குள் அழைத்துத் திருடப்படுகிறான். இதைத் திறம்படச் செய்கிறது ஏதையல. எனவே „திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது . . . „ என்ற பாடல் வரியைப் பயன்படுத்தும் இவர்கள் தாமே திருந்துவார்களா? இல்லை! தவறு சிறிதாக இருக்கும் போதே நாம் இவர்களைத் திருத்த வேண்டும்.

தொலைக்காட்சி, அட்டைகள், கழியாட்ட நிகழ்வுகள், விளம்பரங்கள் புலம் பெயர் தமிழர்களிலேயே பெருமளவு தங்கி நிற்கும் இவர்களை முடக்கும் ஆயுதமும் நாமே! நாம் பகிஸ்கரித்தால்? சினிமா மோகம், தவறான வழி நடத்தல் என்பவற்றிலிருந்து சமூகத்தை காப்பாற்ற முடியும்! செய்வீர்களா? யசிக்கா மூலம் உழைத்து உருசி கண்டவர்கள் இனிவரும் ஒவ்வொரு சுப்சிங்கரிலும் புலம் பெயர் ஈழத் தமிழரை இடம் பெற வைப்பார்கள்.

ஓடியோடித் திருடுகிறார்களே தவிர திருடும் பணத்தில் சிறு துளி கூடநலப்பணிகளுக்காக ஏதையல செலவிட்டதாக அறியமுடியவில்லை.

(தொடர்)


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com