Tuesday, September 30, 2014

வாக்குகளில் அரைக்கோடி சிங்கள பௌத்தர்களுக்காக குரல்கொடுப்பவருக்கே! – ஞானசார

வாக்குகளில் அரைக்கோடி அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்தர்களுக்காக குரல்கொடுப்பதற்கு முன்வரும் வேட்பாளருக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தயார் என பொதுபல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற பொதுபல சேனா மாநாட்டிடல் குறிப்பிட்டுள்ளார்.

தமது அமைப்பு நாடளாவிய ரீதியாக உள்ள 5000 கோயில்களிலிருந்து 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கட்சி அரசியலின் மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ள இனத்தை மீண்டும் ஒருமுறை நிமிர்த்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. அதனைத் தங்களால் செய்ய முடியாது விட்டால் அந்த தலைமைப் பதவியைத் நாங்கள் தருவதற்குத் தயாராகவுள்ளோம். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க யாராகவும் இருந்துவிட்டுப் போகலாம். அவர்களை ஆட்சிபீடத்திற்கு அமர்த்தும் சக்தி எங்களிடமே உள்ளது.

இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து திருட்டு, கையாலாகாத அரசியல் முறையை நாங்கள் மாற்றியமைப்போம்.. நீல நிற, பச்சை நிற, சிவப்பு நிறக் கண்ணாடிகளைக் கழற்றி எறிந்துவிட்டு பௌத்த கொடியை மட்டுமே கைகளில் ஏந்த வேண்டும். சிங்கள பௌத்த நாட்டை இந்நாட்டில் கட்டியெழுப்பவே நாங்கள் அயராது பாடுபடுகின்றோம்.

மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க எல்லோரும் எழுங்கள்… சிங்கள பௌத்தர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயங்களைத் திரும்பிப் பாருங்கள்… கட்சிகளாகப் பிரிந்து இருந்தது போதும்… எங்கள் தலைவர் டீ.எஸ்.சேனாநாயக்க அல்ல.. பண்டாரநாயக்க அல்ல… கார்ள் மாக்ஸ், லெனின் அல்ல.. எங்கள் தலைவர் புத்த பெருமானே. நாங்கள் நாட்டை மாற்றியமைக்கத் தயாராகவுள்ளோம்..

தயவுசெய்து நீங்கள் மாறுங்கள்.. முடியாதுவிட்டால் நாங்கள் அதற்கும் தயார்…இலங்கையில் 25,287 கிராமங்கள் உள்ளன. அந்த எல்லாக் கிராமங்களிலும் ஒவ்வொரு கோயில்கள் இருந்தபோதும் 12,000 கோயில்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் பௌத்த கொள்கைக்கு ஏற்றாற்போல செயற்படுவன 5000 அளவில் உண்டு. ஒவ்வொரு கோயிலிலிருந்தும் சிங்கள பௌத்தர்கள் 1000 வீதம் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள இயலும். யாருக்குத்தான் வெற்றி என்பதைப் பார்த்துக் கொள்வோம்.. இந்த மாற்றத்தை நாங்கள் செய்வோம். தலைவனில்லாத இனத்திற்கு நாங்கள் தலைமைத்துவம் ஒன்றைப் பெறுவோம். அதனை எங்களால் மட்டுந்தான் செய்யவியலும்.

தலைவன் இல்லாத நாட்டுக்கு, இனத்திற்கு பௌத்த சக்தியின் மூலம் பொறுப்புச் சொல்லக்கூடிய, வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க உரிமைகளைப் பாதுகாக்கும் தலைவனைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு எங்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. இன்று முழுச் சமுதாயமும் நோய்வாய்ப்பட்டுள்ளது. தர்மாசனத்தைப் போலவே சிம்மாசனத்தையும் எங்களால் சரிசெய்ய முடியும் என்பதை நினைவுறுத்த விரும்புகின்றோம்…”

-கலைமகன் பைரூஸ்

Read more...

Sunday, September 28, 2014

புலமைப்பரிலில் அகில இலங்கை ரீதியில் முதலிடம்பெற்ற மாணவி முதலில் அல்லாஹ்வுக்க நன்றி தெரிவிக்கின்றார்.

2014 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் தோற்றிய மாவனல்லை சாஹிராக் கல்லூரி மாணவி பாத்திமா சமா 197 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலத்தில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார். இம்மாணவி ஐ. எல். எம். நிஸ்வர் மற்றும் ரஜபு நிஷh ஆகிய தம்பதிகளின் புதல்வியாவர்.

இம்மாணவி கருத்துத் தெரிவிக்கையில்..

இந்தச் சந்தர்ப்பத்தில் முதன் முதலாக அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தன்னுடைய கற்கைகுத் துணை புரிந்த பாடசாiலை அதிபர் கே. எம். பௌமி, ஆரம்பப் பிரிவு ஆசிரியர் எம். இஸட். எம் ஐயூப், வகுப்பாசிரியர் எம். பீ. எம் பழீல் ஆகியோருக்கும் மற்றும் என்னுடைய பெற்றோருக்கும் நன்றியைத் தெரிவிக்கின்றேன். அத்துடன் என்னுடைய பெறுபேறுகளைக் கேட்டு யார் யாரோ சந்தோசம் அடைகின்றார்களோ அனைத்து மக்களும் இந்தச் சந்தர்ப்பத்தில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். என்னுடைய கல்வியை முயற்சியை முன்னெடுத்துச் செல்வேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அதிபர் கே எம். பௌமி கருத்துத் தெரிவிக்கையில்

இம்முறை இந்த மாணவி 197 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றதையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இந்த மாணவியுடைய வளர்ச்சியை மூன்றாம் ஆண்டு முதல் காணக் கூடியதாக இருந்தது. பாடசாலையில் நடத்தப்படும் பரீட்சைகளில் பெருவாரியாக 100 புள்ளிகளையே அவர் பெறுவார். அது மாத்திரமல்ல ஏனைய தமிழ் தினப் போட்டிகளிலும் பங்கு பற்றி முதலிடங்களைப் பெற்றுள்ளார். கல்வித்துறையில் முதன்மை பெற்று விளங்கும் எமது பாடசாலைக்கு இந்த மாணவியுடைய பெறுபேறு இந்தப் பாடசாலையின் வழர்ச்சிக்கு பெரும் உந்து சக்தியாக அமையும் இந்த சமயத்தில் இதற்காக பாடுபட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் இதில் சம்மந்தப்பட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.





இக்பால் அலி


Read more...

Saturday, September 27, 2014

பயங்கரவாதத்தின் நிழலில் பேச முடியாது: பாகிஸ்தானுக்கு மோடி பதிலடி

பயங்கரவாதத்தின் நிழலில் இருந்து கொண்டு, அமைதி பேச்சுவார்த்தையை நடத்த முடியாது என பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலடி கொடுத்துள்ளார்.ஐ.நா., பொதுசபையின் 69வது ஆண்டு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவின் பிரதமராக உங்கள் முன்பாக முதன்முறையாக பேசுகிறேன். நான் இந்திய மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்புகளையும் நன்கு அறிந்தவன். அதே சமயம் இந்த உலகம் 125 கோடி மக்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதையும் உணர்ந்துள்ளேன். ஒவ்வொரு நாட்டிற்கும் அதற்கென ஒரு தத்துவம் உள்ளது. நான் கருத்துக்களை சொல்லவில்லை. இந்த தத்துவம் ஒவ்வொரு நாட்டையும் வழிநடத்தும். இந்தியாவின் தத்துவம் "வாஷூதெய்வ குடும்பகம்". இந்தியா பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் விரைவாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. ஐ.நா., அலுவலகத்தில் 193 நாடுகளின் கொடிகள் பறக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறோம். இந்தியா எப்போதும், நீதிக்காகவும், கவுரவத்திற்காகவும், வாய்ப்புகளுக்காகவும் குரல் கொடுத்து வந்துள்ளது. இந்த உலகில் தற்போது ஜனநாயக அலை வீசிவருகிறது. ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் நடந்த அதிகார மாற்றம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இதே போல், நேபாளத்தில் வலுவான ஜனநாயகம் அமைந்துள்ளது.

இந்தியா உலகத்தை ஒரு குடும்பமாக பார்க்கிறது. பன்நோக்கு தன்மையில் இந்தியாவிற்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. பாகிஸ்தானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த நான் தயாராக உள்ளேன். ஆனால் அவை பயங்கரவாதத்தின் நிழலில் அமையக்கூடாது. பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலையை பாகிஸ்தான் தான் உருவாக்க வேண்டும். பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதும், இந்தியா உதவி செய்துள்ளது. இந்தியாவின் எதிர்காலம், அதன் அண்டை நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இதன் காரணமாகவே, எனது அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து அண்டை நாடுகளுடன் நட்புக்கரம் நீட்டி வருகிறோம். தற்போது பயங்கரவாதம் புதிய வடிவில் உருவெடுத்துள்ளது. உலகில் உள்ள எந்த ஒரு நாடும் அதில் இருந்து தப்ப முடியவில்லை. பயங்கரவாதத்தை எதிர்க்க உலக நாடுகள் ஒருங்கிணைந்து முயற்சிகள் எதுவும் எடுத்துள்ளனவா? இந்த அமைப்பில் பிரச்னைகளை எழுப்புவது மட்டும், அதற்கு தீர்வாக அமைந்து விடாது. இந்தியா அதன் வெற்றியைப் பெற, அமைதியான சூழல் தேவைப்படுகிறது. பிரச்னைகளை களைய கடல், வான்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸ் ஆகியவற்றில் நாம் இணைந்து செயல்பட வேண்டும். நல்ல பயங்கரவாதம் மற்றும் கெட்ட பயங்கரவாதம் என நாம் எப்போது பேச ஆரம்பிக்கிறோமோ, அது பயங்கரவாதத்திற்கு எதிரான நமது நோக்கம் குறித்த கேள்விகளை ஏற்படுத்தி விடுகிறது. பல ஆண்டுகளாக, இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது தான் இதை உலகம் உலகளாவிய பிரச்னையாக பார்க்க ஆரம்பித்துள்ளது. நாம் எல்லைகளைக் கடந்து ஒன்றிணைந்திருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஐ.நா., தான். உலகளாவிய அரங்காக ஐ.நா., இருக்கும் போது நமக்கு எதற்காக ஜி4, ஜி7, ஜி 20 என பல்வேறு ஜி அமைப்புகள் உள்ளன?

அமைதி, பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளுக்காக நாம் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். உலகில் உள்ள மக்களில் 6ல் ஒருவர் இந்தியராக உள்ளனர். அமைதியை நோக்கிய பயணத்திற்காக நம்மை நாமே மாற்றிக்கொள்வோம். 21ம் நூற்றாண்டில் உலகம் வேகமாக மாறி வருகிறது. ஐ.நா., அமைதிப்படைக்கு இந்தியா முழு வலிமையை அளித்துள்ளது. வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாட்டு அரசும் தங்களது பொறுப்புகளை அளிக்க வேண்டும். சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது, ஒருவர் மற்றவரின் கவலைகளையும், அக்கறையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஐ.நா., பாதுகாப்பு சபையை விரிவாக்கம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். உலகில் பல கோடி மக்களுக்கு அடிப்படை சுகாதாரம், மின்சாரம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கவில்லை. உலக யோகா தினத்தை அனுசரிப்போம். உடல்நலத்தைப் பற்றி பேச வேண்டுமானால், நாம் பின்னோக்கி அடிப்படைக்கு செல்ல வேண்டும். அதற்கு குறிப்பாக யோகாவைப் பற்றி கூற விரும்புகிறேன். அடுத்த ஆண்டு ஐ.நா., அதன் 70 ஆண்டை கொண்டாட உள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டு ஐ.நா., பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் கொண்டு வருவது குறித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும். நாம் தனியாக வளர்ச்சி அடைய முடியாது. இந்த உலகம் ஒருங்கிணைந்தே வளர்ச்சியடைய முடியும். இவ்வாறு மோடி பேசினார்.

Read more...

ஸ்காட்லாந்தின் பிரிந்துபோக ஆதரிக்காத வாக்குகளும், பிரிட்டிஷ் தேசிய அரசின் நெருக்கடியும். Statement of the Socialist Equality Party (UK)

ஸ்காட்லாந்து சுதந்திரம் மீதான வெகுஜன வாக்கெடுப்பில் மொத்த வாக்குப்பதிவு 84.6 சதவீதம் பதிவாகி இருந்த நிலையில், அது 44.7 சதவீதத்திற்கு 55.3 சதவீதத்தால் தோற்கடிக்கப்பட்டது.

ஆளும் வட்டாரங்களில் உடனடியான நிம்மதி பெருமூச்சு இருந்தது, அங்கே ஒரு சூழலில், கருத்துக் கணிப்புகளின்படி —ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸூக்கு இடையிலான 307-ஆண்டுகால ஐக்கியம் உடனே சிதையக்கூடிய அச்சுறுத்தலுடன்— பிரிந்துபோக ஆதரித்தவர்களின் பிரச்சாரம் ஒரு பெரும்பான்மையை பெற்றுவிடுமென காணப்பட்டது. அதுபோன்றவொரு சாத்தியக்கூறு ஒரு புதிய "லெஹ்மென் நிகழ்வுடன்" தொடர்புபடுத்தப்பட்டிருந்தது—இது 2008 நிதியியல் பொறிவைத் தூண்டிவிட்ட வங்கித்துறை தோல்வி குறித்த குறிப்பாகும். பிரிந்துபோக ஆதரிப்பவர்கள் வெற்றியடைந்தால் அது பிரிட்டனின் ஆளும் மேற்தட்டை எல்லா தரப்பிலும் பலவீனப்படுத்துமென்ற அச்சங்கள் அங்கே இருந்ததுடன், அரசியல்வாதிகள், பொருளியல்வாதிகள், பெருநிறுவன செயலதிகாரிகள் மற்றும் இராணுவ பிரபலங்களிடமிருந்து எச்சரிக்கைகளை அது தூண்டிவிட்டிருந்தது.

சமீபத்திய நாட்களில் பெரும் இழப்புகளால் பாதிக்கப்பட்டிருந்த பின்னர், வெள்ளியன்று காலை பிரிட்டிஷ் பவுண்டும் இங்கிலாந்து பங்குகளும் இரண்டுமே வேகமெடுத்தன. ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் (SNP) தலைவர் அலெக்ஸ் சால்மன்ட், பிரிந்துபோக ஆதரிப்பவர்களது பிரச்சார தோல்வியை ஏற்று இராஜினாமா செய்யும் அவரது விருப்பத்தை அறிவித்தார்.

ஆனால் அதேநாளின் மாலை, பங்குகள் மற்றும் ஸ்டேர்லிங்கின் உயர்வு தலைகீழாக திரும்பியிருந்தன, அது பிரிட்டிஷ் தேசிய அரசின் கூர்மையான நெருக்கடி இன்னும் தீர்ந்துவிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது.

"ஒன்றாகி இருப்பதே சிறப்பு" என்ற முகாமின் முதுகெலும்பாக இருந்த பிரதான கட்சிகளினது பிரச்சாரத்திற்கு இடையே, பிரிவினைக்கு எதிராக பெரும்பான்மை கிடைத்திருக்கிறது என்றபோதினும், அது அந்த பிரச்சாரத்தின் காரணமாக ஏற்பட்டதில்லை என்ற உண்மையே முதலாளித்துவத்தை மிகவும் கவலைப்படுத்துவதாக இருந்தது.

அந்த பிரச்சாரம் வெஸ்ட்மின்ஸ்டர் மேற்தட்டை நோக்கிய அதிருப்தி மற்றும் விரோதத்தின் பெரும் அளவை அம்பலப்படுத்தி இருந்தது, அவர்கள் அனைவரும் சட்டவிரோத காலனித்துவ யுத்தங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டிருக்கிறார்கள்.

இந்த அரச விவகாரங்கள் மீதான கோபத்தை, புதிய தேசிய எல்லைகள் உருவாக்குவதற்கான ஆதரவுக்குள் திருப்பிடும் முயற்சிகளை ஒரு பெரும்பான்மையினர் நிராகரித்தார்கள் என்பது உழைக்கும் மக்களிடையே நிலவும் கூட்டு-உணர்வின் பலமான அடையாளத்தை மற்றும் பெரு வணிக-சார்பு SNPஇன் மீதிருக்கும் அவநம்பிக்கையை நிரூபணம் செய்கின்றது. எவ்வாறிருந்த போதினும், 2012இல் சுமார் 15 சதவீதமாக இருந்த சுதந்திரத்திற்கான ஆதரவை அதிகரிப்பதில், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு பிரிவினரிடையே நிலவிய சமூக மற்றும் அரசியல் அதிருப்தியை பிரிந்துபோக ஆதரிப்பவர்களின் பிரச்சாரத்தால் வெற்றிகரமாக சுரண்ட முடிந்திருந்தது. ஐந்தில் இரண்டுக்கும் அதிகமானவர்கள் பிரிவினைக்கு வாக்களித்திருந்தார்கள், ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரமான கிளாஸ்கோவ் பிரிந்துபோக ஆதரிப்பவர்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பதிவு செய்திருந்தது.

SNP ஒவ்வொன்றுக்கும் பொய்-இடது சக்திகளிடம் —அதாவது ஸ்காட்டிஷ் சோசலிச கட்சி (SSP), டோம்மி ஷெரிடன், சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (SWP) ஆகியவற்றிடம்— கடமைப்பட்டிருக்கிறது. ஸ்காட்டிஷ் பிரிவினைவாதத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிற்போக்குத்தனமான சமூக மற்றும் அரசியல் நலன்களை மூடிமறைப்பதும் மற்றும் அதை போலி-சோசலிச வர்ணங்களில் சித்தரிப்பதுமே அவற்றின் பாத்திரமாகும். இவ்விதத்தில் அவை பிரிந்துபோக ஆதரிப்பவர்களினது பிரச்சாரத்தின் அடிமட்ட-சிப்பாய்களாக செயல்பட்டதுடன், சுதந்திரத்திற்குப்-பிந்தைய ஒரு மிக முற்போக்கான ஸ்காட்லாந்தின் ஒரு பரந்த இயக்கத்தின் பாகமாக SNPஐ புத்துருவாக்கம் செய்து வருகின்றன.

பிரிந்துபோக ஆதரிப்பவர்களின் வாக்குகள் அதிகரித்திருப்பதே ஸ்காட்டிஷ் தேசியவாதத்திற்கு தொழிலாள வர்க்கத்திடமிருந்து கிடைத்திருக்கும் நற்சான்றென இப்போது இந்த பொய்-இடது போக்குகள் வாதிடுகின்றன.

உலகளாவிய உற்பத்தி மற்றும் நிதியியல் சந்தைகளின் பாரிய அபிவிருத்தியானது, மத்திய அரசாங்கத்தைக் கடந்து, பிராந்திய முதலாளித்துவத்தின் ஒரு பிரிவுக்கு பன்னாட்டு பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகள் உடனான நேரடி உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குகிறது. அதனால் தான் பெருநிறுவன வரி வெட்டு என்பது SNPஇன் மைய முறையீடாக இருந்தது. இந்த முதலாளித்துவ கன்னையைச் சுற்றி, அரச நிர்வாகிகள், கல்வித்துறை மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளின் ஒரு மத்தியதர வர்க்க அடுக்குகள் ஈர்க்கப்பட்டுள்ளன, இவை தான் பொய்யான-இடது குழுக்களுக்கு சமூக அடித்தளமாக விளங்குகின்றன.

SSP தலைவர் கோலின் ஃபாக்ஸ், “சுதந்திரம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது" என்பதே வாக்கெடுப்பின் தீர்ப்பாக இருக்கிறதென கூறி, அவர்களின் எதிர்கால போக்கைத் தொகுத்தளித்தார். அவர்கள் ஸ்காட்லாந்தில் தொழிற்கட்சி மற்றும் SNPஇன் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு புதிய "இடது" கட்சியை, அதாவது தேசியவாத கட்சியை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறை விவாதித்து வருகிறார்கள்.

பிரிந்துபோக வேண்டாமென்ற வாக்கு, பிரிட்டன் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் முகங்கொடுத்துவரும் அபாயங்களை எவ்விதத்திலும் குறைத்துவிடவில்லை. அங்கே நடைமுறையில் ஒவ்வொரு பிரச்சினையிலும் ஆளும் மேற்தட்டிற்குள் ஆழ்ந்த பிளவுகள் உள்ளன. “நல்லிணக்கத்திற்கு" திறந்துவிடும் ஒரு காலக்கட்டத்திலிருந்து வெகுதூரம் விலகி, அடுத்த மாதங்கள் ஒவ்வொரு முனையிலிருந்தும் ஒரு கடுமையான போராட்டத்தைக் காணும்.

அவர்களின் தோல்விக்குப் பின்னர், SNPஉம் மற்றும் அதன் பங்காளிகளும் ஒரு முரட்டுத்தனமான போட்டாபோட்டியில் வடக்கு கடல் பிராந்திய எண்ணெய்யின் மீதான வரிகள் உட்பட முக்கிய ஆதாரவளங்கள் மீது கட்டுப்பாட்டைப் பெற, வெஸ்ட்மின்ஸ்டரிடம் இருந்து பெரியளவிற்கு சாத்தியமான விட்டுக்கொடுப்புகளைக் கோரி வருகிறார்கள், அதிலிருந்து தனிப்பட்டரீதியில் பெரும் செல்வந்தர்களாக முடியுமென நம்புகிறார்கள்.

அவர் பங்கிற்கு பிரதம மந்திரி டேவிட் கேமரூன், ஸ்காட்லாந்து அதன் கருத்தைத் தெரித்திருக்கிறது, இப்போது இது "மில்லியன் கணக்கான இங்கிலாந்து மக்களின் குரல்களை" செவிமடுப்பதற்கான நேரமாகும் என்று வலியுறுத்த அந்த வாக்கெடுப்பின் முடிவைப் பயன்படுத்தினார். ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டுமென்ற மூன்று கட்சிகளின் அறைகூவல் "முற்றிலுமாக மதிக்கப்படுமென" உத்திரவாதம் அளித்த போதினும், அவர் "இங்கிலாந்து சட்டங்களுக்கான இங்கிலாந்தின் வாக்குகளை" அறிமுகப்படுத்த அவர் சூளுரைத்தார்—அதாவது இப்போது ஸ்காட்டிஷ் நாடாளுமன்றம் மற்றும் வேல்ஷ் சட்டமன்றம் சம்பந்தப்பட்ட சில குறிப்பிட்ட பிரச்சினைகளின் மீது வாக்களிப்பதற்கு ஸ்காட்டிஷ் மற்றும் வெல்ஷ் MPகளின் உரிமையை நீக்குவதை இது குறிக்கிறது.

தொழிற் கட்சியால் வரையப்பட்ட, மற்றும் ஸ்காட்லாந்திற்கான "உள்நாட்டு சட்டத்துக்கு" ஒரு மாற்றீட்டு பாதையாக முன்மொழியப்பட்ட ஸ்காட்டிஷ் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை விரிவாக்கும் முறைமைகளில், வரியை-மாற்றியமைக்கும் அதிகாரங்களை விரிவாக்குவது மற்றும் ஹோலிரூட் பகுதிக்கு சமூகநலத்தின் சில குறிப்பிட்ட பிரிவுகளைப் விலக்குவது ஆகிய பொறுப்புடைமையும் உள்ளடங்கி உள்ளன. உண்மையில் இந்த நடவடிக்கைகள் ஒவ்வொரு இடத்திலும் தேசிய மற்றும் பிராந்திய போட்டியை ஊக்குவிக்க பயன்படுத்தப்படும் என்பதை கேமரூனின் அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது, “ஆழ்ந்த தூக்கத்திலிருந்து இங்லீஷ் தேசியவாதமெனும் மிருகம்" தட்டி எழுப்பப்பட்டு இருப்பதாக இதை ஒரு விமர்சகர் குறிப்பிடுகிறார்.

அதற்கும் கூடுதலாக, இங்கிலாந்து விவகாரங்களில் வாக்களிப்பதற்கு ஸ்காட்டிஷ் மற்றும் வேல்ஷ் MPகளைத்தான், தொழிற்கட்சி சார்ந்துள்ளது என்ற நிலையில், அவர்களை விலக்கி வைப்பதன் மூலமாக தொழிற் கட்சியை நிரந்தரமாக முடமாக்கலாமென கேமரூன் நம்புகிறார்—கேமரூனின் பரிந்துரைகளை தொழிற் கட்சி தலைவர் எட் மிலிபாண்ட் நிராகரித்துள்ளார்.

ஆளும் மேற்தட்டின் உட்பகை மோதலில் இருந்து எது வெளிவந்தாலும் சரி, அதற்கு தொழிலாள வர்க்கமே விலை கொடுப்பதாக இருக்கும், அவர்கள் அடிமட்டத்தில் வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகளுக்கான போராட்டத்தில் ஒருவருக்கு எதிராக மற்றவர்கள் நிறுத்தப்படுவார்கள்.

இந்த வெகுஜன வாக்கெடுப்பு பிரச்சாரம் ஓர் ஆழ்ந்த எச்சரிக்கையாக சேவை செய்கிறது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச மறுநோக்குநிலை இல்லையென்றால், பிரிட்டிஷ் மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடி —அனைத்திற்கும் மேலாக தேசிய பிளவுகள் திட்டமிட்டு பேணி வளர்க்கப்படுவதில்—பிற்போக்குத்தனமான வடிவங்களை எடுக்க முடியும்.

சோசலிச சமத்துவ கட்சி மட்டுமே ஓர் அரசியல் மாற்றீட்டை அபிவிருத்தி செய்த ஒரே போக்காக இருக்கிறது. நாம் ஒரு சோசலிச பிரிட்டனுக்கான போராட்டத்தில் முதலாளித்துவத்தின் அனைத்து அடுக்குகளுக்கு எதிராகவும் உழைக்கும் மக்களை ஐக்கியப்படுத்தும் அடிப்படையில் வாக்கெடுப்பில் பிரிந்துபோக ஆதரிக்க வேண்டாமென்பதற்கு வாக்கிடுமாறு வலியுறுத்தினோம்.

SNP மற்றும் பொய்-இடதால் தூண்டிவிடப்பட்ட தேசியவாதம் ஐரோப்பா மற்றும் சர்வதேசமெங்கிலும் அதேமாதிரியான வலதுசாரி போக்குகளைப் பலப்படுத்துமென நாம் எச்சரித்தோம். அந்த கண்டத்தை சிற்றரசுகளின் ஓர் ஒட்டுவேலையாக மற்றும் இன மண்டலங்களாக பால்கன்மயப்படுத்துவதற்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி, ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தை முன்னிறுத்தியது.

நமது பிரச்சாரத்தினூடாக, "ஸ்காட்டிஷ் வெகுஜன வாக்கெடுப்பில் பிரிந்துபோக வேண்டாமென வாக்களிப்போம்—ஒரு சோசலிச பிரிட்டனுக்காக போராடுவோம்" என்ற எமது அறிக்கையின் 10,000 நகல்களை நாம் விற்பனை செய்து, பத்து ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் விவாதித்தோம். தேசியவாதத்தை எதிர்த்த மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தை உயர்த்திப் பிடித்த சோசலிஸ்டுகளின் பொதுக்கூட்டத்தில் பலர் அவர்களின் நிம்மதியை வெளிப்படுத்தினார்கள்.

நமது தலையீடு போலி-இடது குழுக்களின் பொய்கள் மற்றும் திரித்தல்களை எதிர்த்து போராடுவதை மையப்படுத்தி இருந்தது. இங்கிலாந்துடனான சாத்தியமான உடைவு என்பது உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடியிலும் மற்றும் காலங்கடந்த எதிர்விரோத தேசிய அரசுகளுக்குள் பூமியை பிளவுபடுத்துவதற்குள் வேரூன்றி இருப்பதை விவரித்து, நாம் ஒரு புதிய சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தை மற்றும் தலைமையை தொழிலாள வர்க்கம் ஏற்க வேண்டுமென வலியுறுத்தினோம்.

வரவிருக்கின்ற காலகட்டத்தில் இந்த அரசியல் போராட்டம், வெறுமனே பிரிட்டனில் மட்டுமல்ல, மாறாக ஐரோப்பா மற்றும் சர்வதேசமெங்கிலும் உள்ள நமது தோழர்களால் ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தில் ஆழப்படுத்தப்படும்; ஆழப்படுத்தப்பட வேண்டும்.

Read more...

சொத்து சேர்ப்பு வழக்கில் ஜெயலலிதா நான்கு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். தமிழ் நாடு முழுக்க கலகம்.

வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்ததாக கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தமிழ் நாட்டின் முதலமைச்சர் குற்றவாளி என நீதிமன்று அறிவித்துள்ளது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 4 பேருக்கும் நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

பெங்களூரு பரப்பன அக்ரஹார நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

வழக்கில் தொடர்புடைய சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் 3 பேருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்துள்ளது. காஞ்சிபுரம், கோவையில் பேருந்துகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா தமிழக முதலமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுகிறார். மேலும், அவர் இனிமேல் தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்குள் தண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிடுவதில் சிக்கல் இல்லை. 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் மேல் நீதிமன்றம் சென்று தண்டனையை குறைக்கவோ அல்லது விடுதலை பெறவோ செய்யாமல் தேர்தலில் நிற்க முடியாது.

நான்காண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா இன்னும் இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன்படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல், தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார். இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது தேர்தல் ஆணையத்தின் சட்டம். எனவே ஜெயலலிதாவுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் விடுதலையான பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டிய முடியாது. ஒரு சட்டசபை அல்லது மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். எனவே 6 ஆண்டு போட்டியிட முடியாது என்றால் இரு பொதுத் தேர்தல்களில் குற்றவாளியால் போட்டியிட முடியாது என்றே அர்த்தம். எனவே ஜெயலலிதாவின் தண்டனை காலத்தை தவிர்த்து இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து பார்த்தாலும் கூட இன்னும் 2 சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாது.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை அடைக்க பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர்களுக்காக நேற்றே அறைகளை போலீசார் தயார் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. தண்டனை அறிவிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தீர்ப்பு இன்று தான் அளிக்கப்பட்டது. தற்போது பண்டிகை காலம் என்பதால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


குறித்த வழக்கு ஒரே பார்வையில்

கடந்த 1996-ம் ஆண்டு ஜூன் 16-ந்தேதி சென்னை செசன்சு கோர்ட்டில் சுப்பிரமணியசாமி (தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்) ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில், 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை தமிழக முதல்-அமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாகவும், அதனால் ஜெயலலிதா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி 27.6.1996-ந்தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் தன் மீதான விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி ஜெயலலிதா சார்பில் 14.8.1996-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே 7.9.1996-ந்தேதி இந்த வழக்கு விசாரணை அதிகாரியாக நல்லமநாயுடு நியமிக்கப்பட்டார். விசாரணை அதிகாரி நல்லமநாயுடு உத்தரவின் பேரில் 18.9.1996-ந் தேதி ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மறுநாள் ஜெயலலிதாவுக்கு சொந்தமான வீடுகளில் சோதனை செய்யப்பட்டன. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கில் 7.12.1996-ந்தேதி அன்று ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். நகரும் சொத்துகளான 800 கிலோ வெள்ளி, 28 கிலோ தங்கம், 750 ஜோடி தங்கக் காலணிகள், 10,500 புடவைகள், 91 கைக்கடிகாரங்கள் 19 வாகனங்கள், 7,109 சேலைகள், 389 ஜோடி செருப்பு, 214 சூட்கேஸ், தங்க- வைர நகைகள், 1,116 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த பொருட்கள் அனைத்தும் வழக்கில் சேர்க்கப்பட்டன. ஜெயலலிதா தனது வருமானத்தை விட ரூ.66 கோடியே 64 லட்சத்து 42 ஆயிரத்து 318 மதிப்புள்ள சொத்துகளை வாங்கி குவித்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது.

3.1.1997-ந்தேதி ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த கோர்ட்டில் விசாரணை தொடங்கியது. 19.11.1999-ந் தேதி தொடங்கிய விசாரணை 18.7.2001-ந்தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 259 சாட்சிகளின் வாக்குமூலம் பதிவு செய்யபட்டன. அவர்களிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 2001-ம் ஆண்டு தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. அதைத்தொடர்ந்து 79 சாட்சிகளிடம் மறு விசாரணை நடந்தது. இந்த நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களில் முதல் நபர்(ஜெயலலிதா) முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ளதால் இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அப்போதைய நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே.சீமா அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

அதைத்தொடர்ந்து கர்நாடக அரசு 27.12.2003-ந்தேதி அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தனிக்கோர்ட்டு அமைத்து உத்தரவிட்டது. ஏ.எஸ்.பச்சாபுரே நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அரசு சிறப்பு வக்கீலாக ஆச்சார்யா நியமனம் செய்யப்பட்டார். 9.5.2005-ந்தேதி அன்று ஜெயலலிதா சார்பில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் லண்டன் ஓட்டல் மற்றும் சொத்து குவிப்பு ஆகிய 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்று 2 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க பெங்களூர் தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து 14.7.2005-ம் ஆண்டு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து லண்டன் ஓட்டல் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. 2010-ம் ஆண்டு வரை தமிழில் இருந்த வழக்கு ஆவணங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் 88 ஆயிரம் பக்கங்கள் ஆகும். குற்றப்பத்திரிகை மட்டும் 13 ஆயிரத்து 600 பக்கங்களை கொண்டுள்ளது. பெங்களூர் தனிக்கோர்ட்டில் 252 அரசு தரப்பு சாட்சிகளும், 99 எதிர்தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டன.

சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதை அடுத்து கடந்த 2011-ம் ஆண்டு அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பெறுமாறு கோரி மனு செய்தார். அதைத்தொடர்ந்து அப்போதைய தனிக்கோர்ட்டு நீதிபதி மல்லிகார்ஜுனா உத்தரவின் பேரில் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா 2011-ம் ஆண்டு அக்டோபர் 20, 21 மற்றும் நவம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அதைத்தொடர்ந்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

2012-ம் ஆண்டு அக்டோபர் 12-ந்தேதி அரசு சார்பில் ஆஜராகி வந்த அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா பதவியை ராஜினாமா செய்தார். அதே மாதம் 29-ந் தேதி அரசு சிறப்பு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். 13.8.2013-ந் தேதி அன்று இந்த வழக்கில் அரசு தரப்புடன் தி.மு.க. விடுத்த கோரிக்கையை அப்போது நீதிபதியாக இருந்த பாலகிருஷ்ணா ஏற்றுக்கொண்டார். அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை நீக்க வேண்டும் என்று கோரி 23.8.2013-ந்தேதி கர்நாடக ஐகோர்ட்டில் தி.மு.க. மனு தாக்கல் செய்தது.

அதைத்தொடர்ந்து 26.8.2013-ந் தேதி அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங்கை நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கர்நாடக அரசின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், இந்த வழக்கில் அவர் தொடர்ந்து ஆஜராகி வாதாட நீதிபதிகள் அனுமதி வழங்கினார். அதைத்தொடர்ந்து ஜெயலலிதா தரப்பு வக்கீல் குமார் தனது இறுதி வாதத்தை தொடங்கினார்.

25 நாட்கள் அவர் வாதிட்டு தனது தரப்பு நியாயங்களை எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து சசிகலா சார்பில் வக்கீல் மணிசங்கர் 9 நாட்களும், சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சார்பில் வக்கீல் அமித் தேசாய் 8 நாட்களும் ஆஜராகி வாதிட்டனர். அரசு சிறப்பு வக்கீல் பவானிசிங் 15 நாட்கள் இறுதி வாதம் செய்தார். அரசு தரப்பு மற்றும் எதிர்தரப்பு இறுதி வாதம் நிறைவடைந்ததை அடுத்து கடந்த 20-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா அறிவித்தார்.

ஆனால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முதல் நபரான ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக இருப்பதால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்பு கருதி தனிக்கோர்ட்டை பெங்களூர் பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும் என்றும் ஜெயலலிதா சார்பில் தனிக்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டியும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வசதியாக தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றுமாறு யோசனை தெரிவித்ததால் நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா தனிக்கோர்ட்டை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

வழக்கு ஆவணங்களை மாற்ற வசதியாக வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 27-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை தொடங்கி 18 ஆண்டுகள் ஆகிறது. இதில் கர்நாடகத்தில் மட்டும் 11 ஆண்டுகள் விசாரணை நடைபெற்று உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்:-

1. பச்சாபுரே 2. மனோலி 3. ஆன்ட்ரிக்ஸ் (தற்காலிகம்) 4. மல்லிகார்ஜுனய்யா 5. சோமராஜ் (தற்காலிகம்) 6. பாலகிருஷ்ணா 7. முடிகவுடர் (தற்காலிகம்) 8. ஜான் மைக்கேல் குன்கா

Read more...

புலிகள் மீது தடை: தீர்ப்பாய விசாரணையில் சாட்சியிடம் வைகோ கேள்வி

புலிகள் தடை மீது அமைக்கப்பட்ட தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி, டெல்லி உயர்நீதிமன்ற நீதி அரசர் மிட்டல் அவர்களின் தீர்ப்பு ஆய விசாரணை, இன்று (27.9.2014) இரண்டாவது நாளாக சென்னை எம்.ஆர்.சி.நகர் இமேஜ் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விசாரணையில் தமிழ்நாடு அரசு ‘கியூ பிராஞ்ச்’ காவல்துறை கண்காணிப்பாளர் புவனேஇவரி அவர்கள் சாட்சியம் அளித்தார். அப்போது, ‘புலிகளின் சுதந்திரத் தமிழ் ஈழத்திற்கானதனிநாடு கோரிக்கை, தமிழ்நாட்டை, இந்தியாவின் ஒரு பகுதியை இணைத்து உருவாக்கும் திட்டம் கொண்டதால், அது இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகவும் ஆபத்தானது. எனவே, புலிகள் மீதான தடையை நீடிக்க வேண்டும்’ என்று தமது சாட்சியத்தைப் பதிவு செய்தார்.

இதுகுறித்து, நீதிபதி மூலமாக வைகோ சாட்சியிடம் விளக்கம் கோரிப் பேசியதாவது:–

‘சுதந்திரத் தமிழ் ஈழம் என்பது, இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை மட்டுமே உள்ளடக்கியது. இதுதான் அடிப்படை உண்மை ஆகும். இந்தியாவின் எந்தப் பகுதியையும், தமிழ்நாட்டின் ஒரு பிடி மண்ணைக் கூடச் சேர்க்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் கற்பனை செய்ததுகூடக் கிடையாது. சுதந்திரத் தமிழ் ஈழத்திற்காக ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று, ஓராண்டுக்கு முன்னர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு இன்றைய ஆளுங்கட்சி ஒருமனதான தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழ்நாட்டின் ஒரு பகுதியையும் தமிழ் ஈழத்தில் சேர்க்கப் புலிகள் திட்டமிட்டு இருந்தால், இப்படி ஒரு தீர்மானத்தைத் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றுமா? சாட்சி இதுபற்றி அறிவாரா?’ என்று கேட்டார்.

இதற்கு சாட்சி எந்த பதிலும் கூறவில்லை.

‘தமிழகத்தின் ஒரு பகுதியைச் சேர்க்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் திட்டமிட்டதற்கு வேறு என்ன ஆதாரத்தைத் தாக்கல் செய்து இருக்கின்றீர்கள்?’ என்று கேட்டபோது, ‘விடுதலைப்புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பின் வரைவுச் சட்டத்தைத் தாக்கல் செய்து இருக்கின்றோம்’ என்று சாட்சி கூறினார்.

அதற்கு வைகோ, ‘விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்பது 1990 ஆம் ஆண்டு இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத் தற்காலிகமாக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. அது பின்னர் கலைக்கப்பட்டு விட்டது சாட்சிக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்.

‘அந்த அமைப்பு கலைக்கப்படவில்லை. இன்னமும் இருக்கின்றது; தமிழ்நாட்டில் தமிழர் பாசறை, தமிழ்நாடு விடுதலைப்படை, தமிழ்நாடு விடுதலை இயக்கம் என்ற பல அமைப்புகள், தமிழ்நாட்டையும் ஈழத்தையும் சேர்த்து அகன்ற தமிழ்நாடு கேட்கின்றார்கள்’ என்று சாட்சி கூறினார்.

அதற்கு வைகோ, ‘ஒவ்வொரு அமைப்பும் தங்களுக்கு என்று ஒரு கொள்கை வைத்து இருக்கலாம். அதற்கும் விடுதலைப்புலிகளுக்கும் என்ன தொடர்பு? இந்த அமைப்புகளுடைய கொள்கைக்கு விடுதலைப் புலிகள் எப்படிப் பொறுப்பு ஆவார்கள்? விடுதலைப் புலிகள் என்று சிலரைக் கைது செய்ததாக நீங்கள் கூறுகின்றீர்களே, அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்களா? அப்படிக் கொடுத்து இருந்தால், நீதிபதியின் முன் கொடுத்தார்களா? அல்லது போலீசாரே வாக்குமூலத்தை எழுதிக் கொண்டார்களா? என்று கேட்டார்.

இதற்கு நீதிபதி, ‘இந்தக் கேள்விகளை நீங்கள் விசாரணை அதிகாரியிடம் கேட்கலாம்’ என்றார். அத்துடன், ‘வழக்கு விசாரணை அடுத்த மாதம் 26, 27 தேதிகளில் குன்னூரில் நடைபெறும்’ என்று நீதிபதி அறிவித்து ஒத்தி வைத்தார்.

வைகோவுடன், ம.தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ், செய்தித் தொடர்பாளர் நன்மாறன், சட்டத் திருத்தக்குழுச் செயலாளர் அருணாசலம், வழக்கறிஞர் நடராஜன், வழக்கறிஞர் தவசி, வழக்கறிஞர் சுப்பிரமணியம், வழக்கறிஞர் சுப்பையா உள்ளிட்ட பலர் பங்கு ஏற்றனர்.

Read more...

Friday, September 26, 2014

பருத்தித்துறை கடலில் சிக்கிய ஆயிரம் கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை!!!!

முல்லைத்தீவுக்கும் பருத்தித்துறைக்கும் இடையிலான கடற் பரப்பில் சுமார் 1000 கிலோ எடையுள்ள ஆனைத்திருக்கை மீன் மீனவர் ஒருவரின் வலையில் அகப்பட்டதாக யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் பா. ரமேஷ் கண்ணா புதன்கிழமை தெரிவித்தார். நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பருத்தித்துறைக்கு அண்மித்த கடற்பரப்பில் வலை வீசிய போது, மிகவும் அரிதான வகையிலான ஆனைத்திருக்கை அகப் பட்டுள்ளது.

மீனவர்கள் தமது படகை பருத்தித்துறை இறங்குதுறையில் நிறுத்தி ஆனைத்திருக்கையை துண்டுகளாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அரிதான வகை திருக்கை மீனான ஆனைத் திருக்கை கடலின் ஆழப்பகுதியில் இருப்பதாகவும், முதன்முதலாக இவ்வாறு மீனவரின் வலையில் அகப்பட்டுள்ளதென்றும் அம்மீனை சுமார் ஒரு இலட்சம் ரூபாவுக்கு விற்கமுடியுமென்றும் யாழ். மாவட்ட கடற்றொழில் பரிசோதகர் மேலும் கூறினார்.





Read more...

பலமுறை கையெடுத்துக் கும்பிட்டும் பரிதாபமாய் பலியாகிய இளைஞன்!! (நேரடி வீடியோ)

டெல்லி உயிரியல் பூங்காவில் 22 வயது இளைஞர் ஒருவர் வெள்ளைப்புலி ஒன்றால் அடித்து கொல்லப்படும் வீடியோ காட்சியானது வலைத்தளங்களில் பரபரப்பாக பேசுப்படும் விடயமாக மாறியுள்ளது.இச்சம்பவம் கடந்த 23 ஆம் திகதி பகல் 1.30 மணியளவில் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். புலி அடைக்கப்பட்டிருந்த வேலிப்பகுதியின் அருகே நின்று அந்த இளைஞர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது உள்ளே இருந்த காய்ந்த தடாகத்தினுள் தவறி விழுந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அங்கிருந்த வெள்ளைப்புலி பாய்ந்து வந்து அந்த இளைஞரை அடித்து இழுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த இளைஞர் எவ்வாறு உள்ளே விழுந்தார் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. சிலர் அந்த தடுப்பு வேலி மீது இளைஞர் அமர்ந்திருந்தபோது உள்ளே விழுந்ததாகவும், வேறு சிலர் தடுப்பு வேலிக் கம்பியின் உயரம் மிகவும் தாழ்வாக இருந்ததாகவும், இதன் காரணமாகவே அந்த இளைஞர் உள்ளே விழுந்ததாகவும் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், 'புலி இருந்த பகுதிக்குள்ளிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டதும் ஓடிச் சென்று வேலிக்கு அருகே சென்று பார்த்தேன். அப்போது அந்த வெள்ளைப்புலியின் வாயில் அந்த இளைஞர் சிக்கியிருந்தார். அந்த இளைஞரின் கழுத்தை கவ்விப்பிடித்து புலி தூக்கிச் சென்றுகொண்டிருந்தது. வலியால் அவர் அலறி துடித்துக்கொண்டிருந்தார்' என்றார்.

மற்றொருவர் கூறுகையில், 'அந்த இளைஞர் உயிரிழப்பதற்கு முன்னர் சுமார் 10 நிமிடங்களாவது பீதியோடு போராடினார். புலியை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். சில வினாடிகள் அந்த இளைஞரை புலி உற்று பார்த்த நிலையில், அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். உடனே புலி அவரை விரட்டிச் சென்று கவ்வி பிடித்தது. அங்கு வந்த பாதுகாவலர்களால் அவரை காப்பாற்ற முடியவில்லை' என்றார்.

ஆனால் வேறு சிலர், புலியை மயக்கமடைய செய்யும் துப்பாக்கி எதுவும் பாதுகாவலர்களிடம் இல்லை என்று குற்றம் சாட்டினர். இந்நிலையில் புலியால் அடித்து தூக்கிச் செல்லப்பட்ட இளைஞரின் தலையின் சில பாகங்களை புலி கடித்து தின்றுள்ளதாகவும், மாணவனின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே உயிரியல் பூங்காவுக்கு வந்த சிறுவர்கள் சிலர் புலி அடைக்கப்பட்டிருந்த வேலிக்குள் கற்கள் மற்றும் சிறிய கம்புகளை தூக்கி வீசியதாகவும், அதன் பின்னரே ஒருவரை புலி தனது வாயில் கவ்விக் கொண்டு சென்றதை பார்த்ததாகவும் வேறு சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடந்த சம்பவத்தை பிட்டு என்பவர் தனது கையடக்கத் தொலைபேசி கமார மூலம் படம் பிடித்துள்ளார். அவர் கூறுகையில், 'புலியிடம் சிக்கிய இளைஞரை காப்பாற்ற பாதுகாவலர்கள் மிகவும் தாமதமாகவே வந்தனர். வந்த பின்னரும் அவர்கள் தடுப்பு வேலிக்கு அருகில் நின்றவர்களைத்தான் விரட்டிக்கொண்டிருந்தார்களே தவிர, இளைஞரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவில்லை' என தெரிவித்தார்.



Read more...

யாழில் காதலுக்காக தனக்கு தானே தீமூட்டிக் கருகிய சிவதர்சன்!!

தனது காதலியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லியும் அவள் வேலைக்குச் சென்றதால் விரக்தியுற்ற இளைஞர் தனக்குத் தானே தீமூட்டி மரணமாகியுள்ளனான். கடந்த 4ம் திகதி காதலி வேலை செய்யும் இடத்திற்கு அருகில் தனக்குத் தானே தீமூட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் குறித்த இளைஞன் நேற்று முன்தினம் மரண மாகியதாக தெரியவருகின்றது. இளைஞன் பிரபல அச்சகம் ஒன்றின் உரிமையாளராவார். இவர் காதலித்த யுவதியின் நடத்தை பற்றி இளைஞனின் பெற்றோர் இளைஞனுக்கு தெரிவித்து காதலியை மறக்குமாறு தெரிவித்ததாகவும் ஆனால் குறித்த இளைஞன் பெற்றோரின் புத்திமதியைக் கேளாது யுவதியைத் தொடர்ந்து காதலித்து வந்துள்ளான்.

இதே வேளை குறித்த யுவதி தான் வேலை செய்யும் இடத்தில் இன்னொருவருடன் தொடர்பாக இருப்பதாக அறிந்த இளைஞன் யுவதியை வேலைக்குச் செல்ல வேண்டாம எனத் தெரிவித்துள்ளான். இருந்தும் யுவதி இளைஞனின் சொல்லைக் கேளாது தொடந்து அங்கு வேலைக்குச் செல்லவே அதனால் வெறுப்புற்ற இளைஞன் தனக்குத் தானே தீமூட்டியதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வருடத்துக்குள் நான்கு இளைஞர் கள் காதலிகளால் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, September 24, 2014

இராஜபக்ஷ அரசாங்கம் பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை நியாயப்படுத்துகின்றது. W.A. Sunil

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இஸ்ரேல் அரசாங்கமானது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான கொடூர இராணுவத் தாக்குதலை ஆரம்பித்து இரண்டு வாரங்களின் பின்னர், இலங்கை அரசாங்கம் விடுத்திருக்கும் அறிக்கை மூலம், இஸ்ரேலின் ஆத்திரமூட்டும் யுத்த நடவடிக்கையை ஆதரிக்கும் அதே சமயம், அந்நாட்டுடனும் மற்றும் மத்திய கிழக்கு அராபிய நாடுகளுடனும் சமாந்தரமான தொடர்புகளை வைத்துக்கொள்வதற்கான இராஜபக்ஷவின் அவநம்பிக்கையான முயற்சி அம்பலத்துக்கு வந்துள்ளது.

இலங்கையின் வெளியுறவு அமைச்சினால் ஜீலை 15 வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, பாலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தில் தீவீரமடைந்துவரும் கலவரத்தின் விளைவாக பொதுமக்களின் உயிர்கள் துன்பகரமாக பலியாவதையும் சொத்துக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்புக்களையிட்டும் “ஆழ்ந்த கவலை” அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள போதும், இந்த அட்டூழியங்களுக்கு நேரடிப் பொறுப்பான நெதன்யாகு அரசாங்கத்தினை முழுமையாக அதன் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளது. அதற்குப் பதிலாக, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் இயக்கத்தின் மீது குற்றம் சாட்டி, “இஸ்ரேல் தேச எல்லைக்கூடான ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு” கேட்கப்பட்டுள்ளது. “கலவரங்களை நிறுத்துவதற்கான முயற்சிப்பதற்கும் மோதலுக்கு நிரந்தரமான தீர்வு காணும் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்குவதற்கும் சம்பந்தப்பட்ட பகுதியினர் ஆழ்ந்த உணர்வுடன் செயற்பட வேண்டும்” என மேலும் அவ்வறிக்கை குறிப்பிடுகிறது. “சாதகமான சூழலை உறுதிப்படுத்தல்” என ஜனாதிபதி ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் குறிப்பிடுவது, இஸ்ரேலின் வலதுசாரி சியோனிச நிர்வாகத்தின் நிபந்தனைகளுக்கு பாலஸ்தீனம் கட்டுப்பட வேண்டும் என்பதையே அன்றி வேறெதையும் அல்ல.

அதற்கு ஒரு வாரத்தின் பின்னர், ஜூலை 23 அன்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் விசேட கூட்டத்தில் ஸ்ரீலங்காவின் உத்தியோகபூர்வ பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவின் கருத்து, அரசின் இந்த போக்கினை முன்னெடுத்துச் செல்வதாகும்.

அழிவுகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கும் “திட்டமிட்டு செய்யப்படும் சகல நடவடிக்கைகனையும்” கண்டனம் செய்யும் ஆரியசிங்கவின் அறிக்கை, “பிராந்தியம் முகம் கொடுக்கும் சிக்கல்களை வெற்றிகரமாக அணுகக்கூடிய மற்றும் சமாதானமான தீர்வுக்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரே பொருத்தமான தேர்வாக இருப்பது பேச்சுவார்த்தையே என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்” என குறிப்பிடுகிது. திட்டமிட்டு செய்யப்படும் “சகல” நடவடிக்கைகளையும் எனும் கருத்தில், திட்டமிட்டு ஆத்திரமூட்டல்களை முன்னெடுக்கும் இஸ்ரேலும் அதற்கு இரையாகியுள்ள பாலஸ்தீன மக்களும் ஒரே கும்பலில் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் “நடுநிலை” முற்றிலும் வஞ்சகமானதாகும். அதே போல், தீர்வுக்கான “ஒரே” வழி பேச்சுவார்த்தையே என மிகைப்படுத்துவது, இஸ்ரேலினுடைய எதிர்ப்போக்கு வகிபாகத்தின் வரலாற்றை வேண்டுமென்றே மூடி மறைப்பதாகும்.

பாலஸ்தீனத்திற்கு ஏதாவது மட்டுப்படுத்தப்பட்ட சுய நிர்வாகத்திற்கு வழி சமைக்கும் 1993 மற்றும் 1995 ஒஸ்லோ ஒப்பந்தம் உட்பட சகல ஒப்பந்தங்களை மீறியதும், சமாதான பேச்சுவார்த்தைகளை குழப்பியதும் இஸ்ரேலே ஆகும். பிராந்தியத்தில் இன்னுமொரு பொம்மையாட்சியும் பிற்போக்கு அரசுமான எகிப்தினால் முன்மொழியப்பட்டுள்ள யுத்த நிறுத்தம், சமாதானமான தீர்வுக்கான முக்கியமான “ஆரம்ப அறிகுறியாகும்” என்றும் ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார். ஏவுகனைத் தாக்குதல்களை உக்கிரப்படுத்தி, ஆயிரக்கணக்கான இரானுவத்தினரை தரைமார்க்கமாக பாலஸ்தீனத்துக்கு அனுப்பி, இப்போதே இஸ்ரேல் அந்த “போர் நிறுத்தத்தை” மீறியுள்ளது.

இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட 1200 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் உதவி மற்றும் செயல்முறை முகவரமைப்பின் அறிக்கையின்படி, இடம்பெயர்ந்து அவர்களின் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 1,67,269 ஆகும். இன்னும் ஆயிரக்கணக்கானோர் காஸாவின் வேறு பிரதேசங்களில் வாழும் தமது உறவினர்களிடம் தஞ்சமடைந்துள்ளனர். வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற மற்றும் அடிப்படை வசதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

நெதன்யாகு அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டாலும், பாலஸ்தீனத்திற்கு எதிரான இராணுவத் தாக்குதலின் உண்மையான நோக்கம், அது ஆக்கிரமித்துக்கொண்டுள்ள பிரதேசங்களில் அதன் அதிகாரத்தை உறுதி செய்வதாகும். இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு எதிராக மேற்கொள்ளும் இத்தகைய ஆத்திரமூட்டும் தாக்குதல்கள், வெறுமனே ஹமாஸ் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுப்பதற்கானது அல்ல. அது கணிப்பிட்டு மேற்கொள்ளப்படும் குற்றவியல் யுத்தமாகும்.

ஜூலை 18, உலக ட்ரொட்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விடுத்த அறிக்கை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

“காஸா மீதான இஸ்ரேல் இராணுவ ஆக்கிரமிப்பை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு கண்டனம் செய்கிறது. வடக்கிலும் கிழக்கிலும் சியோனிச அரசாலும் தெற்கில் எகிப்திய நிர்வாகத்தாலும் சுமத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் எதிரில், 200 சதுர மைல்களுக்கும் குறைவான நிலப்பகுதியில் சிக்கொண்டுள்ள 1.8 மில்லியன் பாதுகாப்பற்ற பாலஸ்தீன மக்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் யுத்தக் குற்றங்கள் நடக்கின்றன.

ஹமாஸ் எனப்படும் இஸ்லாமிய பாலஸ்தீன இயக்கம், இஸ்ரேல் மீது மேற்கொள்ளும் பலவீனமான ரொக்கட் தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்த இன அழிப்பு நடவடிக்கையை நிகழ்வதாக நியாயப்படுத்தும் சகல ஆளும் தட்டுக்களையும் கண்டனம் செய்ய வேண்டும்.”

அராபிய நாடுகளிடமிருந்து கிடைக்கும் கடன் மற்றும் நிதி உதவிகளினால் இராஜபக்ஷ அரசாங்கம் தனது தந்திரமான அறிக்கைக்கூடாக இஸ்ரேலுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் சமநிலைப் பேணும் கொள்கையை பின்பற்றுவதாக காட்டும் முயற்சி ஒரு மோசடியாகும்.

குளிர் யுத்த காலகட்டத்தில் ஏகாதிபத்தியத்துக்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையிலான பேரம் பேசல்களின் பாகமாக “அணி சேரா போக்கினை” பின்பற்றிய இலங்கை, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பினால் அமெரிக்காவின் மூலோபாய சகாவான இஸ்ரேலுடன் நேரடி தொடர்புகளை பேணுவதில் இருந்து விலகி இருந்து.

1970ல் பிரதமர் ஸ்ரீமா பண்டாரநாயக்க இலங்கையில் இருந்து இஸ்ரேல் பிரதிநிதியை வெளியேற்றிய பின்னர், 1983ல் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட யுத்தத்தோடு இரு நாடுகளுக்கும் இடையிலுமான உறவு மீண்டும் ஆரம்பமானது. ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன யுத்தத்திற்கு தேவையான ஆயுத தளவாடங்களுக்கும் இராணுவத்தை பயிற்றுவிப்பதற்கும் இஸ்ரேலுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதோடு இலங்கையில் அமெரிக்க தூதுவராலயத்தில் இஸ்ரேல் ஊக்குவிப்பு பகுதியொன்றை இஸ்ரேல் நிறுவியதோடு பின்னர் தனியான தூதரகத்தை நிறுவியது.

ஜனாதிபதி இராஜபக்ஷ காலத்திலேயே இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மிக நெருக்கமான இராஜதந்திர மற்றும் இராணுவ உறவுகள் மிகவும் நெருக்கமடைந்தன. இராஜபக்ஷ பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை 2006ல் மீண்டும் ஆரம்பித்த பின்னர், ஆயுதமும் இலங்கை இராணுவத்துக்கு பயிற்சியையும் பெற்றுக்கொள்வதற்காக, மிகவும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட நாடுகளில் இஸ்ரேலுக்கு முக்கியமான இடம் கிடைத்தது. ராடர் உபகரணங்கள், கிபீர் தாக்குதல் விமானங்கள் மற்றும் டோரா தாக்குதல் படகுகளையும் இஸ்ரேல் இலங்கை இராணுவத்திற்கு வழங்கியது.

இராஜபக்ஷ அரசாங்கம் பின்பற்றும் தந்திர கொள்கை, அது மேலும் மேலும் வலது நோக்கி தள்ளப்படுவதையும், ஏகாதிபத்திய சக்திகளுடன், குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்துடன் கூட்டு சேர்வதற்கான அதன் போக்கினை சமிக்ஞை செய்கின்றது.

பழைய தீவிரவாதியும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் இராஜதந்திர அதிகாரியாகவும் சேவை செய்த தயான் ஜயதிலகவின்படி இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள், அது இஸ்ரேலினுடைய “பொறியில்” அகப்பட்டுக்கொண்டுள்ளதன் விளைவாகும். ஆனால் உண்மை அதுவல்ல. தழிழர் விரோத இனவாத யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், அரசாங்கத்தின் இராணுவம் இழைத்த யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை பற்றிக்கொண்டு, இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அமெரிக்கா பிரயோகிக்கும் அழுத்தம் மேலும் மேலும் உக்கிரமடைந்துள்ளமை, அது அமெரிக்கா மற்றும் அதன் நட்பு ஆளும் தட்டுக்களுடன் அணிதிரளும் திசையை நோக்கி நகரச் செய்துள்ளது.

மார்ச் மாதம், யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பாக இலங்கைக்கு எதிரான ஒரு சர்வதேச விசாரணையை கோரி, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் அமெரிக்கா பிரேரணை ஒன்றை கொண்டுவர தயாராகிய நிலைமையில், இராஜபக்ஷ ஜனவரி மாதம் இஸ்ரேலுக்குப் பயணித்தார். அது இலங்கை ஜனாதிபதி ஒருவர் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட முதலாவது விஜயமாகும். அமெரிக்காவால் ஆட்டுவிக்கப்படும் இஸ்ரேல் அரசாங்கத்தின் ஊடாக ஒபாமா நிர்வாகத்தின் அனுதாபத்தினை பெற்று, பிரேரனையை சமர்பிக்காதபடி தவிர்த்துக்கொள்வதே இராஜபக்ஷவின் அந்த பயணத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஆயினும் ஒபாமா நிர்வாகம் பிரேரணையை நிறைவேற்ற முன் சென்றது. இலங்கை-பாலஸ்தீன நட்புறவு சங்கத்தின் ஆரம்ப தலைவராகவும் பல வருடங்கள் அதில் பிரதான பதவி வகித்தவருமான இராஜபக்ஷ, அமெரிக்காவுடனும் இஸ்ரேலுடனும் அணிதிரள முனைவது, அவரும் அவரது அரசாங்கமும் பிற்போக்கு வலதுசாரி பக்கம் திரும்புவதன் இன்னொரு வெளிப்பாடாகும்.

புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்திற்கு எல்லா வகையிலும் உதவிய அமெரிக்காவுக்கு மனித உரிமைகள் தொடர்பாக எந்தவித அக்கறையும் கிடையாது. “ஆசியாவில் முன்னிலை” என்ற அதன் புதிய மூலோபாயத்தின் கீழ், சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைக்கும் திட்டத்தின்படி, இராஜபக்ஷ அரசாங்கத்தை சீனாவுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதார தொடர்புகளிலிருந்து தூர விலக்குவதே ஒபாமா நிர்வாக்கத்தின் ஒரே தேவையாகும். இப்போது அந்த பிரேரணையின்படி சர்வதேச விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையிலேயே அமெரிக்காவின் மூலோபாய அவசியத்துடன் அணிதிரளும் திசையில் இராஜபக்ஷ அரசாங்கம் தீவிரமாக திரும்பியுள்ளது.

இலங்கை தொழிலாள வர்க்கம் பாலஸ்தீனத்திற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டனம் செய்யவேண்டும். இராஜபக்ஷ அரசாங்கம் சர்வதேச பிற்போக்கு சக்திகளுடன் அணிதிரண்டு தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான தாக்குதல்களை மேலும் மேலும் தீவிரமாக்கும் என்பதையே அதன் நகர்வுகள் வெளிப்படுத்துகின்றன.

Read more...

புலிக்கூண்டுக்குள் தவறி விழுந்த மாணவனை குதறியெடுத்த வெள்ளைப் புலி! டெல்லியில் பயங்கரம் (அதிர்ச்சி வீடியோ)

டெல்லி உயிரியல் பூங்காவில் இன்று நடந்த பயங்கர சம்பவம் அனைவரையும் அதிர வைத்து விட்டது. அங்குள்ள வெள்ளைப் புலி இருந்த பகுதியில் புலியைப் பார்த்து தனது நண்பர்களுடன் கூச்சல் போட்டு சத்தம் போட்டுள்ளார் ஒரு பிளஸ்டூ மாணவர். அப்போது தவறி உள்ளே விழுந்து விட்டார். அவரை அந்தப் புலி பயங்கர கோபத்துடன் கடித்துக் குதறிக் கொன்ற பரிதாபம் அனைவரையும் உறைய வைத்து விட்டது. டெல்லியில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ஒரு வெள்ளைப் புலியும் உள்ளது.

இந்நிலையில், இன்று ஹிமான்சு என்ற 12ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனது நண்பர்களுடன் இந்த உயிரியல் பூங்காவைப் பார்வையிட சென்றுள்ளார். மதியம் சுமார் 1.30 மணியளவில் வெள்ளைப் புலியைப் பார்க்க அம்மாணவர்கள் சென்றுள்ளனர்.

அப்போது வெள்ளைப் புலியைப் பார்த்த உற்சாகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து ஹிமான்சு கூச்சலிட்டுள்ளார். புலியைப் பார்த்து உரத்த குரலில் கத்தியுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக தடுப்புச் சுவரைத் தாண்டி புலி இருந்த பகுதிக்குள் போய் விழுந்து விட்டார் ஹிமான்சு.இதைப் பார்த்து ஹிமான்சுவின் நண்பர்கள் மற்றும் மற்ற பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்குள்ளாக ஹிமான்சுவை நெருங்கி விட்டது புலி.. புலியை மிக நெருக்கத்தில் பார்த்த ஹிமன்சு பயந்து அலறினார்.

ஆனால் அவரை படு வேகத்துடன் புலி கடித்துக் குதறியது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பர்களும், மற்ற பார்வையாளர்களும் ஹிமான்சுவைக் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். கல் மற்றும் குச்சி போன்றவற்றால் அடித்துப் புலியை விரட்ட முயற்சித்துள்ளனர்.ஆனால், அவர்களது எண்ணம் பலிக்கவில்லை. ஹிமான்சுவைக் கடிக்கத் தொடங்கிய புலி பின்னர் அம்மாணவனின் உடலைத் தூக்கிக் கொண்டு அருகிலிருந்த புதருக்குள் சென்று மறைந்து விட்டது என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்து 20 நிமிடங்களுக்குப் பிறகே பாதுகாவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.மேலும், வெள்ளைப் புலி அடைக்கப் பட்டிருந்த இடத்தின் தடுப்பு வேலியின் உயரம் குறைவாக இருந்ததே மாணவன் தடுமாறி கீழே விழுந்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. டெல்லியில் இச்சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.









Read more...

பேஸ்புக்கினூடாக மாணவிகளுக்கு இரகசிய அழைப்பு விடுத்த இளைஞன் கைது !!

முகப்புத்தகத்தினூடாக மாணவிகள் இருவருக்கு குறுந்தகவல் அனுப்பி, தன்னை சந்திக்க வருமாறு அச்சுறுத்தல் விடுத்த 22 வயது இளைஞன் ஒருவரை பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவி த்தது. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது,

அவுஸ்திரேலியாவில் கல்வி பயிலும் இலங்கை யுவதி யொருவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியிருந்தார். இந்நிலையில், அந்த யுவதியின் முகப்புத்தக (பேஸ்புக்) கணக்குக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பியுள்ள சந்தேகநபர் ஒருவர், 'உன்னுடைய் புகைப்படம் என்னிடம் உள்ளது. அதை இணையதளத்தில் வெளியிடுவேன். நான் அப்படி செய்யாமலிருக்க வேண்டுமாயின் என்னை சந்திக்க வா' என்று குற்றிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு குறுந்தகவல் மற்றுமொறு மாணவியொருவருக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது. இது தொடர்பான முறைப்பாடுகள் இரண்டு, பொலிஸ் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றது. இது தொடர்பில் விசாரணை நடத்திய அவர்கள், பாணந்துறை பிரதேசத்திலிருந்து 22 வயதான இளைஞர் ஒருவரை கைது செய்தனர்.

இவ்விளைஞனுக்கு 17 வயதாக இருக்கும் போதே அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்கத் தொலைபேசியொன்றை அவ்விளைஞனின் அப்பா வாங்கிக் கொடுத்துள்ளார். அத்துடன், காணியொன்றை விற்று பெற்றுக்கொண்ட பணத்திலிருந்து ஒரு தொகுதியை ஒதுக்கி, மடிகணினியொன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

சந்தேகநபரான இளைஞன், மேற்படி கையடக்கத் தொலைபேசி மற்றும் மடிகணினியை உபயோகித்து அரட்டையடித்து பல பெண்களை ஏமாற்றியுள்ளார் எனவும் அவரது பென் ட்ரைவில் கொழும்பிலுள்ள முன்னணி மகளிர் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளுடன் அரட்டையடித்ததற்கான ஆதாரங்களை சேமித்து வைத்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை, முகப்புத்தகத்தினூடாக குறுந்தகவல்கள் அனுப்புவோருக்கு சொந்த விபரங்களை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், முகப்புத்தகமோ அல்லது வேறு எந்தவொரு சமூக வலையமைப்பினூடாகவோ சந்திக்கும் நபர்கள் உண்மை நண்பர்கள் இல்லை என்பதை விளங்கிக்கொள்ளுமாறும் அவர்களிடையே ஏமாற்றுப் பேர்வளிகள், குற்றவாளிகள், காமுகர்கள் என்போர் அடங்கியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள், (குறிப்பாக பெண் பிள்ளைகள்) சமூக வலைத்தளங்களில் தொடர்புகளை வைத்திருக்கும் இனந்தெரியாத நபர்கள் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் மேலம் குறிப்பிட்டார்.

Read more...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க்கில்... (வீடியோ,படங்கள்)

ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வுகளில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியூயோர்க் சென்ற டைந்துள்ளார். இலங்கை ஜனாதிபதி அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.







Read more...

Tuesday, September 23, 2014

கொழும்பில் பாரிய மரம் வீழ்ந்ததில் 12 வாகனங்கள் சேதம் - மூவர் காயம்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அண்மித்தான கேரி கல்லூரி பகுதி யில் பெரிய மரம் ஒன்று இன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கி ன்றது. குறித்த மரம் உடைந்து வீழ்ந்ததால் 12 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக் கின்றனர். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read more...

ரூ.2 கோடி கப்பம் கேட்டவர் கைது !!

நபரொருவரை கொலை செய்வதாக அச்சுறுத்தி, 2 கோடி ரூபாய் கப்பம் கோரிய சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 30 திகதி தனக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய சந்தேக நபர், தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்வதாக அச்சுறுத்தியதாகவும் அதற்கு பதிலாக இரண்டு கோடி ரூபாய் பணத்தினை கப்பமாக கோரியதாகவும் மொனராகலை உலங்தாவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை(22) கைது செய்யப்பட்டுள்ளார்.நுகேகடை, உலங்தாவ தெற்கு, மொனராகலை எனும் முகவரியில் வசிக்கும் உபுல் சமன்குமார என்பவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை(23) மொனராகலை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

Read more...

குழந்தை தருவதாககூறி பெண்களை துஷ்பிரயோகம் செய்த பூசாரி ....

குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு தோஷம் கழித்து குழந்தை பெற்று கொடுப்பதாக கூறி, அவர்களை துஷ்பிர யோகம் செய்த பூசாரி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டனிலிருந்து திரும்பிய மாத்தறையை சேர்ந்த பூசாரியே (வயது 32) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிங்கிரிய அந்தபன்கொடையை சேர்ந்த திருமணம் முடித்த பெண்கள் இருவருக்கு குழந்தை பேறு தருவதாக கூறி, அவ்விருவரையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பூசாரிக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. முறைபாடு தொடர்பில் பொலிஸார் மேற் கொண்ட விசாரணைகளின் போது, குறித்த பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more...

திருச்சியில் இருந்து இலங்கைக்கு வரவிருந்த விமானம் மயிரிழையில் தப்பியது !!

திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறக்க ப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதியம் 2:30 ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இலங்கை புறப்பட்டது. ஓடு பாதையில் இருந்து விமானம் மேலே எழும்பியபோது, பறவை ஒன்று விமானம் மீது மோதியது. விமானத்தின் முன்பக்க காற்றாடியில் பறவை சிக்கியதால் காற்றாடி பழுதடைந்தது.

காற்றாடியின் வேகம் சற்று குறைய ஆரம்பித்ததால், நிலைமையை புரிந்துகொண்ட விமானி விமானத்தை உடனடியாக தரையிறக்கியுள்ளார். விமானத்தில் இருந்த 139 பயணிகளும் திருச்சி ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். பழுதடைந்த காற்றாடி மாற்றப்பட்டவுடன் விமானம் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தின் காற்றாடியில் சிறிய பறவைகள் அடிக்கடி மோதிக்கொள்வது வழக்கம். ஆனால் சற்று பெரிய பறவையாக இருந்தால் அதன் எலும்புகள் விமானத்தின் காற்றாடியில் சிக்கி அதனை பழுதடையச் செய்துவிடும். மேலும் சிலவேளை எலும்புகள் உராய்வின் காரணமாக , தீ பற்றவும் வாய்ப்புகள் உள்ளது. எனவும் மேலும் தெரிவித்தனர்.

Read more...

Monday, September 22, 2014

ஜப்பானிய பிரதமர் இலங்கை சீனாவுடனான உறவுகளை வலுகுறைக்க நெருக்குகிறார். By W.A. Sunil

இலங்கைக்கான சின்சோ அபேயின் இரண்டு நாள் பயணமானது சீனாவின் இழப்பில் தெற்காசியாவில் ஜப்பானிய செல்வாக்கை தக்க வைத்துக்கொள்வதற்கான ஒரு பரந்த உந்துதலுடன் பிணைந்துள்ளது.

ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே, தெற்காசியாவில் சீனாவின் செல்வாக்கை எதிர்க்கும் அவரது அரசாங்கத்தின் ஆக்கிரோசமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக செப்டம்பர் 7-8ம் திகதிகளில் இலங்கையில் இரண்டு நாட்களை கழித்தார். இது 24 ஆண்டுகளில் ஒரு ஜப்பானிய பிரதமரின் முதல் பயணம் ஆகும். அபேயுடன் ஹிட்டாச்சி, சுமிடோமோ, மிட்சுபிஷி, டொமோ டிஜி, ஒனோமிச்சி டொக்கியார்ட் மற்றும் நொரிடேக் போன்ற கம்பனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் பயணித்திருந்தனர்.

கடந்த ஆண்டு, ஜப்பானிய அரசாங்கமானது கிழக்கு சீனக்கடலில் சர்ச்சைக்குரிய டயோயு/சென்காகு தீவு தொடர்பாக சீனாவிற்கு எதிராக ஆத்திரமூட்டல்களை தீவிரப்படுத்தியிருந்தது. அபே, அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியா உடன் நெருக்கமான மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம், சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைக்கும் ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவில் முன்னிலை" என்ற கொள்கையுடன் அணிசேர்ந்துள்ளார். இத்தகைய கூட்டணிகளை பேணும் அதே வேளை, ஜப்பான் பிராந்தியத்தில் தனது சொந்த ஏகாதிபத்திய நலன்களை முன்னேற்ற முற்படுகின்றது.

இப்போது, இலங்கையிலான ஜப்பானின் நிகழ்ச்சி நிரலானது பெய்ஜிங்கில் இருந்து தூர விலகுமாறு கொழும்புக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்காவின் அதே நிகழ்ச்சி நிரலின் மறுபக்கமாக இருக்கின்றது. பெய்ஜிங், கடந்த ஐந்து ஆண்டுகளில், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூலம் இலங்கையில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொண்டுள்ளது. 2009 முதல் சீனாவானது இலங்கையின் முக்கிய கொடையாளனாக ஜப்பானை மிஞ்சியிருந்தது. அது அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகள், மின் நிலையங்கள் போன்றவை உட்பட உள்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய முக்கிய பகுதிகளில் முதலீடு செய்துள்ளது. சீனா, கொழும்பு துறைமுகத்தின் புதிய பகுதியொன்றை கட்டுவதற்கும் நிதி வழங்கியுள்ளது.

வாஷிங்டன், புலிகளுக்கு எதிராக ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களை ஆதரித்து வந்துள்ளது. எனினும், 2009ல் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அது சீனாவிற்கு எதிரான அமெரிக்க கொள்கையின் பின்னால் அணிதிரள இலங்கையை நெருக்கும் ஒரு நெம்புகோலாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ நிர்வாகத்தின் போர் குற்றங்களை இழிந்த முறையில் பயன்படுத்தியது.

இராஜபக்ஷ தன்னுடைய பங்கிற்கு, ஜப்பானுடனான நெருக்கமான உறவானது தனது அரசாங்கத்தின் மீதான அமெரிக்க அழுத்தத்தை மென்மையாக்கும் என்று கணக்கிட்டு, அந்த உறவை வளர்க்க ஆர்வமாக உள்ளார். மார்ச் மாதம், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணையை கோரி, அமெரிக்க அனுசரணையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) முன்வைக்கப்பட்ட தீர்மானம் மீதான வாக்கெடுப்பை டோக்கியோ புறக்கணித்தது.

எனினும், ஜப்பான், இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான ஏதாவது அனுதாபத்தினால் அன்றி, தனது சொந்த மூலோபாய நலன்களுக்காகவே கொழும்புடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்த சூழ்ச்சி செய்கின்றது. பொது உறவுகள் நோக்கங்களுக்காக, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை மூடி மறைப்பதை உள்ளடக்கிய இலங்கையின் “நல்லிணக்க முன்னெடுப்புகளையும்”, "மனித உரிமைகள் சபை மற்றும் அதன் வழிமுறைகளிலும்" அரசாங்கம் ஈடுபாடுக் காட்டுவதாக கூறப்படுவதையும் அபே பாராட்டினார்.

அபே மற்றும் இராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஐந்து பக்க கூட்டறிக்கை, இதில் சம்பந்தப்பட்டுள்ள அடிநிலையில் உள்ள கணிப்பீடுகளை சுட்டிக்காட்டியுள்ளன. இரண்டு தலைவர்களும், "பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடலில் ஸ்திரத்தன்மையை ஸ்தாபிப்பதில் கணிசமான பங்கு வகிப்பதற்காக", இலங்கை-ஜப்பான் உறவுகளை "கடல்சார் நாடுகளுக்கு இடையேயான ஒரு புதிய பங்கான்மைக்கு" உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளனர் என்று அந்த அறிக்கை கூறுகின்றது.

இந்திய பெருங்கடலின் மத்தியில் இலங்கையின் புவியியல் அமைவிடத்தையும் "பிராந்தியத்தில் கடற் போக்குவரத்து சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும்" சுட்டிக் காட்டிய இரு தலைவர்களும், “கடல்சார் பாதுகாப்பு மற்றும் சமுத்திர விவகாரங்களைப் பற்றி இலங்கை-ஜப்பான் பேச்சுவார்த்தைகளை" ஸ்தாபிக்க முடிவெடுத்துள்ளனர். கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் கலந்துரையாடப்பட்டு, ஜப்பான் ரோந்துப் படகுகளை வழங்க உறுதியளித்துள்ளது.

ஜப்பானின் பக்கத்தில், இந்த முன்மொழிவுகள் ஜப்பானின் மூலோபாய நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை உள்ளடக்குவதை இலக்காகக் கொண்டவையாகும். இந்திய பெருங்கடலானது சீனாவிற்குப் போலவே, ஜப்பானின் தேவைகளுக்கும் மிக தீர்க்கமானதாகும். ஜப்பான் தனது எண்ணெய் மற்றும் எரிவாயு வழங்கல்களின் 80 சதவிகிதத்தை மலாக்கா ஜலசந்தி வழியாக மத்திய கிழக்கில் இருந்து பெறுவதானால், இந்திய பெருங்கடலின் கடல் பாதைகளுக்கு நெருக்கமான இலங்கையின் அமைவானது டோக்கியோவுக்கு இன்றியமையாத முக்கியத்துவத்தை கொடுக்கின்றது.

அதற்கு சமமாக சீனாவிற்கு மிகவும் அவசியமான எரிசக்தி மற்றும் வளங்கள் இறக்குமதிகளை தடுப்பதற்கு, இந்திய பெருங்கடலிலான கடற்படை மேலாதிக்கமானது அமெரிக்க மற்றும் ஜப்பான் ஏகாதிபத்தியங்களுக்கு தீர்க்கமான இயலுமையை கொடுக்கின்றது.

இந்த கூட்டறிக்கை சீனாவின் நட்பு நாடான வட கொரியா பற்றியும் கவலை தெரிவித்தது. "இரு தலைவர்களும் சர்வதேச சமூகத்தின் கவலையில் வட கொரியா அக்கறை காட்ட வேண்டும் என்ற தங்கள் அழைப்பை மீண்டும் வலியுறுத்துவதோடு, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை பரீட்சிப்பது உட்பட எந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளையும் வட கொரியா தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்."

கடந்த டிசம்பரில், இராஜபக்ஷ அரசாங்கம் வட கொரியா ஒரு ஏவுகணையை பரிசோதித்தது பற்றி முதல் முறையாக கவலை தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. இப்போது ஜப்பானுடன் சேர்ந்து மேலும் ஒரு அறிக்கையை வெளியிடுவதன் மூலம், ராஜபக்க்ஷ சீனாவிற்கு எதிராக அமெரிக்க மற்றும் ஜப்பானுடன் அணிசேர்வதற்கான தனது தயார் நிலையை பற்றி மற்றொரு சமிக்ஞையை அனுப்பியுள்ளார்.

பதிலுக்கு, பிரதானமாக பணப் பற்றாக்குறையில் இருக்கும் இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு கணிசமான உதவியை செய்ய அபே உறுதியளித்தார். கடந்த ஆண்டு, ஜப்பான் மொத்தம் 43.8 பில்லியன் யென் [480 மில்லியன் டொலர்] அபிவிருத்தி உதவி நிதி வழங்க உறுதியளித்தது. அபே இந்த முறை, சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்க 330 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் ஜப்பானின் பிராந்திய ஒருங்கிணைந்த சேவைகள் டிஜிட்டல் ஒளிபரப்பு முறைமையை தளமாகக் கொண்ட ஒலிபரப்பு மற்றும் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புக்கு 130 மில்லியன் டொலர் உட்பட பல ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டார்.

அபேயின் பயணம், தெற்காசியாவில் செல்வாக்குக்கான பரந்த உந்துதலுடன் பிணைந்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன், அபே பங்களாதேஷிற்கு சென்றார். அங்கும் சமீப ஆண்டுகளில் பெய்ஜிங் நெருக்கமான உறவுகளை வளர்த்து வந்துள்ளதோடு பல்வேறு திட்டங்களுக்கும் உதவி வழங்கியுள்ளது. பிரதமர் ஷேக் ஹசினா, ஐநா பாதுகாப்பு சபையில் நிரந்தரமற்ற உறுப்புரிமைக்கு பங்களாதேஷ் போட்டியிடாமல் விலகிக்கொள்ள முடிவு செய்தார். அதற்கு பதிலாக அதே இடத்தில் ஜப்பானுக்கு ஆதரவளிக்க முடிவு செய்தார். ஹசீனா ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு சிறப்பு தொழில்துறை பேட்டைகளை அமைக்க உறுதியளித்த அதேவேளை, பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காக பங்களாதேஷிற்கு அபே 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உறுதியளித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானுக்கு ஐந்து நாள் விஜயம் ஒன்றை முடித்தார். இது ஒரு "சிறப்பு பூகோள மூலோபாய பங்கான்மையை" நிறுவுவதாகப் பாராட்டப்பட்டது. மோடி அபேயுடன் இராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். தொடர்ச்சியான பாதுகாப்பு மாநாடுகள், ஜப்பான், இந்தியா மற்றும் அமெரிக்காவையும் உள்ளடக்கிய முக்கூட்டு கடற்படை பயிற்சிகள், மற்றும் இந்தியவுக்கான ஆயுத விற்பனைகளும் இதில் அடங்கும்.

இலங்கைக்கான அபேயின் வருகை, சீனாவிற்கு எதிராக ஜப்பான் மற்றும் அமெரிக்காவும் மூலோபாய மற்றும் இராணுவ தயாரிப்புக்களின் மேற்கொண்டு வரும் ஒரு பரந்த சூழலிலேயே இடம்பெற்றுள்ளது. ஜப்பானிய பிரதமருக்கு இராஜபக்ஷ பெரும் வரவேற்பு கொடுத்தமை, அவர் அமெரிக்கா மற்றும் அதன் தற்போதைய பங்காளியான ஜப்பானதும் வழியில் கால் பதிக்கத் தயாராக உள்ளார் என்ற செய்தியை அனுப்பியுள்ளது................................

Read more...

ஜனாதிபதிக்கு விசேட இணையத்தளம் !!

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இலங்கை ஜனாதிபதி கொண் டுள்ள தொடர்புகள், நடவடிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தும் வகையில் விசேட இணையத்தளமொன்று ஆரம்பிக் கப்பட்டுள்ளது. இந்த வாரம் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக ஜனாதிபதி இந்த இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். பின்வரும் முகவரியி னூடாக http://unga.president.gov.lk இந்த புதிய இணையத்தளத்தை அணுகமுடியும்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் தொடர்பான, நியூயோர்க்கில் இடம்பெறும் ஏனைய உத்தி யோகபூர்வ நிகழ்வுகளும் மும்மொழிகளிலும் உரிய காலத்தில் இந்த இணையத்தில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read more...

பழம் வீதியில் திருட்டுத்தம்பதியினர் பொலிஸாரால் கைது !!

திருடிய பொருட்களினை பதுக்கி வைத்திருந்த நபரின் மனைவியினை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆறுகால் மடம் பழம் வீதியிலேயே நேற்று முன்தினம் மாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. குறித்த இடத்தில் வீடொ ன்றினை வாடகைக்கு எடுத்த மனைவியும் கணவனும் திருட்டுப் பொருட்களினை அவ் வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர். இத்திருட்டு கணவன் பொலிஸாரிடம் பிடிபட்டுக் கொண்டத னையடுத்து கணவனால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தன்னால் திருடப்பட்ட பொருட்களை குறித்த இடத்திலுள்ள வீடொன்றில் பதுக்கி வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் குறித்த திருடனின் வீட்டினை முற்றுகையிட்ட மானிப்பாய் பொலிஸார் திருடி மறைக்கப்பட்டிருந்த பொருட்களினை மீட்டதோடு திருடனின் மனைவியினையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். குறித்த வீட்டிலிருந்த வீட்டுத் தளபாட பொருட்கள் இலத்திரனியல் சாதனங்கள் எனப் பல பெறுமதி மிக்க பொருட்களையும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை தங்களுடைய வீட்டினை வாடகைக்கு கொடுக்கும் போது வாடகைக்கு வீட்டினை எடுப்பவர்கள் எவ்வாறானவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்து வாடகைக்கு வழங்க வேண்டுமென வீட்டு உரிமையாளர்களிற்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை குறித்த கைதுச் சம்பவம் இடம்பெறுவதற்கு சில நாட்களிற்கு முன்னர் அப்பகுதி வீடொன்றில் இடம்பெறவிருந்த திருட்டு முயற்சியொன்றும் அப்பகுதி இளைஞர்களினால் முறியடிக்கப்பட்டமை குறிப்பிட த்தக்கது.

Read more...

முன்னாள் காதலனால் கடத்தப்பட்ட பெண் மகனுடன் காரிலிருந்து கீழே குதித்துத் தப்பினார்!

குருணாகல் பொல்பித்திகம பொலிஸ் பிரிவில் கார் ஒன்றில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் இளம் தாயொரு வரையும் அவரது மூன்றரை வயது மகனையும் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்ப வத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் இருவரை பொல்பித் திகம பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசமொன்றில் நேற்று பகல் காரில் வந்த சிலர் தாயொருவரையும் அவரது மூன்றரை வயது மகனையும் கடத்திச் சென்றுள்ளனர். காரில் நான்கு சந்தேக நபர்கள் இருந்துள்ளதை பிரதேச மக்கள் அவதானித்துள்ளதுடன் அந்தக் காரை பிரதேச மக்கள் பின் தொடர்ந்து விரட்டி சென்றுள்ளனர்.

வெல்லவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இந்தகஸ்பிட்டிய என்ற இடத்தில் காரின் வேகம் குறைந்த நேரத்தில் தாயும் மகனும் அதிலிருந்து வெளியே குதித்து கடத்தல் காரர்களிடமிருந்து தப்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்நிலையில் கடத்தல்காரர்கள் காரில் தப்பித்துச் சென்றுள்ளதுடன் தாயாரும் மகனும் பொல்பித்திகம அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப ட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொல்பித்திகம பொலிஸார் முறைப்பாட்டினை பெற்றுக் கொண்டதை அடுத்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரின் இலக்க தகடு போலியானதாக இருக்கலாம் என்ற ஊகத்தில் பொலிஸார் காரின் பயணப் பாதையை மையப்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து குருணாகலை அண்மித்த ஒரு பகுதியில் வைத்து காருடன் சந்தேக நபர்களில் இருவரை பொலிஸார் நேற்று கைது செய்தனர். குறித்த சந்தேக நப்ர்களிடம் மேற்கொன்ட விசாரணைகளில் தனிப்பட்ட விடயத்துக்காக இந்த கடத்தல் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட தாய்க்கு முன்னர் ஒரு காதல் தொடர்பு இருந்துள்ளதுடன் இடையில் அந்த காதல் தொடர்பு தடைப்பட்டுள்ளது இந்நிலையில் பழைய காதலன் அவரை மீன்டும் தன்னுடன் வருமாறு வற்புறுத்தியுள்ளார். எனினும் அவரது அழைப்பை அந்த பெண் தொடர்ந்து மறுத்துவந்துள்ள நிலையிலேயே கதலனான சந்தேக நபர் இந்தப் பெண்ணையும் அவரது மகனையும் கடத்த முயற்சித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட ரஷ்ய ஜோடி!! (திருகோணமலைக் கடற்கரையில் விநோதம்)

இந்துகலாசாரத்தின் மீது கொண்ட பற்று காரணமாக ரஷ் யாவைச் சேர்ந்த வெள்ளைக்கார ஜோடி ஒன்று திருகோண மலை வந்து சனிக்கிழமை இந்துமுறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். குறித்த ஜோடியினர் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து விட்டு தனது 50 க்கும் மேற்பட்ட சக நண்பர்களுடன் வந்து திருமணத்தை மிகவும் விமர்சையாக கொண்டாடினார். திருகோணமலை வேலூரில் உள்ள திருமண ஹய் பார்க் விடுதி கடற்கரை முன்றலில் இத்திருமணம் நடைபெற்றது.

ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டிமிரிதி, கலினா ஆகிய இருவருமே இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டவர்களாவர்.

Read more...

Sunday, September 21, 2014

ஈபிடிபி யின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' எனும் சுலோகத்தை கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரின் இணையத்தளம் இந்தோநேசியாவைத் தளமாக கொண்ட „எதுவே அசாத்தியமில்லை, நாம் நம்பும்வரை எதுவும் எப்போதும் நடக்கலாம்' எனும் சுலோகம் கொண்டோரால் முடக்கப்பட்டுள்ளது.

ஈபிடிபி யினரின் இணையம் மீதான இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

Saturday, September 20, 2014

கோட்டாபயவோ, பசிலோ தங்களின் சொந்த பணத்தை எங்களுக்கு தரவில்லை – விக்கி

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செய லாளர் கோட்டாபய ராஜபக்ஷவோ, பொருளாதார அபிவிரு த்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ தங்கள் பணத்தை எங்களுக்கு தரவில்லை மாறாக வெளிநாடுகளிலிருந்து எமது மக்களுக்காக தரப்பட்ட பணத்தையே பெற்று தருகின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சாடியுள்ளார்.

நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஓரிரு தினங்களுக்கு முன்னர் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ எம்முடன் வடமாகாண முதலமைச்சர் முரண்படுகின்றமையால் வடக்கிற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அரசாங்கத்தின் செயற்றிட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றால் நகர சபைகள், மாகாணசபைகள் அனைத்தும் நகர அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும்' என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

இதனையே ஓரிரு வாரங்களுக்கு முன்னர் அவரின் சகோதரர் பசில் ராஜபக்ஷ, இங்கு வந்து கூறிவிட்டு சென்றார். அதாவது வடக்கில் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றால் நாங்கள், தனது அமைச்சுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறி சென்றார்.

அவர்களிடையே போட்டி, பொறாமை இருக்கின்றதோ அதை நானறியேன். ஆனால் நான் இருவரிடமும் கேட்கும் கேள்வி இது தான். செயற்றிட்டங்களுக்கு பணம் ஹம்பாந்தோட்டையில் இருந்து வரவில்லை அல்லது அமெரிக்காவில் இருந்து சகோதரர்கள் இருவரும் (கோட்டா, பசில்) இங்கு வந்தபோது எடுத்து வரவில்லை.

அவை வெளிநாட்டு பணம். ஐக்கிய நாடுகள், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கிகளிடம் இருந்து கடன்களை பெற்றுள்ளோம். பல்வேறு நாடுகளிடம் இருந்து கொடைகளையும் பெறுகின்றோம். வடக்கு கிழக்கு மாகாணங்கள் போரால் பாதிக்கப்பட்டதை உணர்ந்து, அது தொடர்பில் கருத்திலெடுத்து வெளிநாடுகள் எங்களுக்கு நன்கொடை தந்துள்ளார்கள் அல்லது கடன் தந்துள்ளார்கள். அந்த பணத்தை செலவு செய்வதும் செயற்றிட்டங்களை நிறைவேற்றுவதும் எம்நாட்டு நிறுவனங்களும் எமது மாகாணசபை அலுவலர்களும் தான். இதனை இரு சகோதரர்களும் எமக்கு பெற்று கொடுக்காதிருந்தாலும், நாம் நேரடியாக கோரியும் வெளிநாட்டவர்கள் எங்களுக்கு பணம் தந்திருப்பார்கள்;. கடன்களும் வழங்கியிருப்பார்கள்.

இதில் உங்களுடன் நாங்கள் இணைந்து செயற்பட வேண்டும் என்று ஏன் கருதுகின்றீர்கள்? உங்களை தான் எங்கள் மக்கள் வேண்டாம் என்று விரட்டி விட்டார்களே. ஆகவே செயற்திட்டங்களை எங்களிடம் கையளித்துவிட்டு நீங்கள் எங்களுடன் இணைந்து செயலாற்றலாமே! நாங்கள் ஏன் உங்களுடன் இணைந்து செயலாற்ற வேண்டும்?

போரில் நீங்கள் வென்றபடியாலா அல்லது முழு இலங்கை தேர்தலில் உங்கள் கட்சி வென்றபடியாலா உங்களுடன் இணைந்து செயற்பட சொல்கின்றீர்கள் ஆனால், உங்கள் கட்சி வடமாகாணத்தில் எத்தருணத்திலும் மக்களால் ஏற்றுகொள்ளப்படவில்லை. ஆகவே அன்பார்ந்த சகோதரர் கோட்டாபயவிடம் நான் கேட்பது செயற்றிட்டங்களை எங்களை செய்ய விடுங்கள். நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று.

சகோதரர் பசில் அவர்களுக்கு நான் கூறுவது, உங்களை விட எங்களால் செயற்றிட்டங்களை ஊழல் இன்றி, ஊறு இன்றி, உண்மையாக நடைமுறைப்படுத்த முடியும். ஆதலால் அவற்றை எங்களுக்கு வழங்குங்கள் என்று. மேலும், 'தன்னை போல் என்னையும் அரசாங்கத்துடன் சேர்ந்து அவர்களிடம் இருந்து பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ளுமாறு' கொழும்பு நகர பிதா சகோதரர் முஸாமில் என்னை கேட்டிருக்கின்றார். கொழும்பு புதுக்கடையில் அதாவது ஹல்ஸ்டொபில் நான் பிறந்தபடியால் எனக்கு பண்டமாற்று, வணிக, வாணிப அரசியல் பற்றி நன்றாக தெரியும்.

வடக்கு கிழக்கு மாகாண மக்கள் வாணிப அடிப்படையில் அரசியல் செய்ய முன்வந்தவர்கள் அல்ல. அப்படியிருந்திருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அண்மை காலத்தில் சென்ற வழியில் எமது கட்சியும் சென்றிருக்கும்.

நாங்கள் அபிவிருத்தி என்ற மாயையை விட எங்கள் பிறப்போடு ஒட்டிய பிறப்புரிமையை வென்றெடுக்க விழைபவர்கள் என்பதை என் முஸ்லிம் சகோதரர் தம் மனதில் நிலை நிறுத்தி கொள்ள வேண்டும். எப்படியாவது வாழலாம் என்பது எமது குறிக்கோள் அல்ல. இப்படித்தான் வாழ்வோம் என்று அறவழி வரம்புகளை ஆழமாக பதித்து முன் செல்பவர்கள் எம் மக்கள் என்பதை சகோதரருக்கு கூறி வைக்கின்றேன்.

எங்களுடைய ஒத்த கருத்துடைய ஒரு முஸ்லிம் கட்சி நல்லாட்சிக்கான தேசிய முன்னணி. எங்களுடன் தோளோடு தோள் நின்று இன்று முன்னேறுவது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது. அவர்களும் வணிக, வாணிப அரசியலை ஒதுக்கிவிட்டு நல்லாட்சிக்கான நடைபாதையில் எம்மோடு நடந்துவர நலமான நடவடிக்கைகளில் இறங்கியவர்கள்.

போராட்டங்களே எமது மனக்கிடக்கைகளையும் மனத்தாக்கங்களையும் மனக்கிலேசங்களையும் உலகத்திற்கு எடுத்தியம்புகின்றன. உலகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகள் யாவும் இலங்கை அரசாங்கத்தால் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. அபிவிருத்தி என்ற போர்வையில் அடக்கு முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை (17) எனக்கு கடிதம் ஒன்று கிடைத்தது. அதாவது ஒக்டோபர் 13 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் இணைந்த விசேட மாவட்ட அபிவிருத்திக்கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதென்றும் அதற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்று வெள்ளிக்கிழமை (19) காலை 9 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடத்தப்படும் என்றும் என்னை அதற்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த அறிவித்தல் யாழ்.மாவட்ட செயலாளரால் எனக்கு விடுக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி, திடீரென்று அப்படியானதொரு அபிவிருத்தி கூட்டத்திற்கு முடிவெடுத்ததன் காரணம் என்ன? எமக்கு இரண்டு நாள் அவகாசத்தில் பூர்வாங்கக் கூட்டத்தைக கூட எத்தணிப்பதன் உள் அர்த்தம்; என்ன? இவ்வாறான கூட்டங்கள் முன்னர் நடைபெற்றிருந்தால் - நடைபெற்றுள்ளதாக கேள்வி எழும்புகிறது.

வட மாகாண சபை வந்ததன் பின்னர் இச்சபையுடன் கலந்தாலோசித்தல்லவா வட மாகாண அபிவிருத்திக் கூட்டம் நடைபெற வேண்டும். ஜனாதிபதியின் கட்சியை எம் மக்கள் நிராகரித்து விட்டார்கள். அப்படி இருக்கையில் தான்தோன்றி தனமாக அபிவிருத்திக் கூட்டம் ஒன்றினை தன் தலைமையின் கீழ் ஆயத்தம் செய்து வருவது எதற்காக?

தாம் நடத்தும் கூட்டத்திற்கு எம்மை பார்வையாளர்களாக அழைப்பதன் மர்மம் என்ன? எந்த மொழியில் நடவடிக்கைகளை நடத்தஇருக்கின்றார் ஜனாதிபதி? தான் கற்றிருக்குந் தவழ்த் தமிழிலா அல்லது தன் தாய் மொழியிலா? பல கேள்விகள் பதில் இல்லாமல் இருக்கின்றன. எனினும், நான் என் செயலாளரை கூட்டத்திற்கு சென்று வருமாறு அனுப்பியிருந்தேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

கோப்பாய் கோமகன் வன்னியசிங்கம் 55ஆவது நினைவு தினமும் இலங்கை தமிழரசு கட்சியின் புதிய நிர்வாகிகளுக்கான வரவேற்பு விழாவும் நீர்வேலி மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read more...

Friday, September 19, 2014

ஆசிரியை கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை நிரூபனம்!

பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீதும்பிட்டிய பகுதியில் பூசாரி ஒருவரின் வீட்டின் முன்னால் இருந்த புதை குழியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை அ.சரஸ்வதி கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் நிரூபணமாகியுள்ளது.

அத்துடன் கொலை செய்யப்பட முன்னர் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பதை அறிய உடற்பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் கடமை நேர உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த முதலாம் திகதி பசறை கோணகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக சென்ற ஆசிரியை அ.சரஸ்வதி காணாமல் போனமை தொடர்பில் கடந்த 2 ஆம் திகதி பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந் நிலையிலேயே அது தொடர்பில் கைது செய்யப்பட்ட மீதும்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பூசாரி பொலிஸாருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்கு மூலத்துக்கு அமைய பதுளை மேலதிக நீதிவான் மகேஷிகா பிரியதர்ஷனியின் உத்தரவின் கீழ் பூசாரியினால் ஆசிரியை கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதை குழி கடந்த திங்களன்று தோண்டப்பட்டது.

இதன் படி தோண்டி எடுக்கப்பட்ட ஆசிரியையின் சடலம் பதுளை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இந் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை 18.09.2014 அன்று பொலிஸாருக்கு கிடைத்த நிலையில் ஆசிரியை அ.சரஸ்வதி துணியொன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

துணியினால் கழுத்தை நெரித்ததின் விளைவாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் இந்த மரணம் சம்பவித்துள்ளதாகவும் இது ஒரு கொலை என்பதும் பிரேத பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை குரித்த ஆசி¬ரியை கொலை செய்ய முன்னர் சந்தேக நபர் அவரை பாலியல் ரீதியாகவோ அல்லது வேறு விதமா¬கவோ துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினாரா என்பதை கண்டறிய சடலத்தின் பாகங்கள் சில அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட நிலை அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரான பூசாரி தற்கொலைக்கு முயன்ற நிலையில் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

குடு லாலிதவின் 685 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அரசுடமை!

அத்துருகிரிய, ஒருவல பகுதியில் வைத்து கடந்த 5ஆம் திகதி பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த 'குடு லாலித' என்றழைக்கப்படும் விதான முதியன்சலாகே லாலித்ய கௌசல்யவின் 685 இலட்சம் ரூபாய் பெறுமதியான அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

போமிரிய, கொரதொட்ட மற்றும் தலங்கம பிரதேசங்களிலுள்ள அதி சொகுசுவாய்ந்த வீடுகள், ரணாலையில் உள்ள காணி, 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார், 45 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு வாகனங்கள் என்பன இந்த சொத்துக்களில் அடங்குகின்றன.

Read more...

கிழிந்த பாதணிகளுடன் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் (படங்கள்)

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவுக்கு நான், அணிந்து சென்ற பாதணிகள் என்னுடையது தான். ஆனால் அது பழையது என்று கலை மற்றும் கலாசார அமைச்சர் டி.பீ.ஏக்கநாயக்க குறிப்பிடுள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையில் 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் நிகழ்வு, காலி முகத்திடலில் கடந்த 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்வில் கிழிந்த பாதணிகளுடன் கலந்து கொண்ட அமைச்சர் சற்று தடுமாற்றநிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில்,

வீட்டிலிருந்த பாதணிகளில் இரண்டை அணிந்து சென்றேன். அந்த பாதணிகளில் 'அடிகள்' இரண்டுமே இடைநடுவில் கழன்றுவிட்டன.

அந்த பாதணிகள் இரண்டுமே வெள்ளை நிறமானவை. நான் உடுத்தியிருந்த உடைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதனால் அதனை அணிந்துசென்றேன். ஆனாலும் நீண்ட நாட்களாக அந்த பாதணிகளை அணியவில்லை.

பழைய பாதணிகள் என்பதனால் இடைநடுவில் அடிகள் கழன்றுவிட்டன. என்ன செய்வது. விழாவுக்கு செல்லவேண்டும். சீன ஜனாதிபதியுடன் கைலாகு கொடுப்பது எப்போதாவது ஒரு தடவை கிடைக்கின்ற சந்தர்ப்பமாகும். அதனால், நான் அடிகள் கழன்றதோடு சென்றுவிட்டேன்.

நாங்கள் கிராமத்து மக்கள், மண்ணில் பாதங்களை பதித்து நிற்கின்ற மனிதர்கள். பாதணிகள் இரண்டுக்கும் நடந்ததை பற்றி நான் நினைக்கவில்லை. எனினும், படங்கள் வெளியாகியிருந்தன. எதுவும் நடக்கலாம் எனத் தெரிவித்தார்.

Read more...

Wednesday, September 17, 2014

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளியான செல்வராசனை பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி!

சென்னையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளியான இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அருண் செல்வராசனை ஆறு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிப்பதற்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தான் உளவாளியாகச் செயற்பட்ட இலங்கைத் தமிழரான அருண் செல்வராசன் கடந்த 10ஆம் திகதி சென்னை சாலி கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். முதல்கட்ட விசாரணையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர், அருண் செல்வராசனை மூளைச்சலவைச் செய்து உளவாளியாக மாற்றியது கண்டறியப்பட்டது.

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்த அருண் செல்வராசன், அதன் மூலமாக பரங்கிமலை இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம், பாதுகாப்பு மிக்கதாக திகழும் துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களைப் படம் பிடித்து பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளியான தமீம் அன்சாரி அளித்த தகவலின் பேரில் கடந்தாண்டு மண்ணடியில் ஜாகீர் உசேன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முகமது சலீம், சிவபாலன், ரபீக் ஆகியோரையும் பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அருண் செல்வராசன் கைது செய்யப்பட்டார்.

பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்ட அருண் செல்வராசனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி கோரி தேசிய புலனாய்வு பொலிஸார் கடந்த 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அருண் செல்வராசன், நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். மனுவை விசாரித்த நீதிபதி மோனி, அருண் செல்வராசனிடம் பொலிஸ் விசாரணைக்கு செல்ல விருப்பமா? என்று கேட்டார். அதற்கு அருண் செல்வராசன் எந்த வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அருண் செல்வராசனை 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அருண் செல்வராசனுடன், அவனது கூட்டாளிகள் 5 பேரும் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அருண் செல்வராசன் பணியாற்றியதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், 5 கூட்டாளிகள் குறித்து அருண் செல்வராசனிடம் விசாரணை செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும், அருண் செல்வராசன் தன்னந்தனி ஆளாக நின்று மிகப்பெரிய அளவான சதி திட்டத்தை செய்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கருதும் பொலிஸார், சென்னையில் அவருக்கு உதவிய முக்கிய பிரமுகர்கள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com