Tuesday, July 1, 2014

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் சமூக சமத்துவமின்மை. By Richard Phillips

இந்த வாரம் வெளியிடப்பட்ட ஆக்ஸ்பாம் ஆஸ்திரேலிய ஆய்வு ஒன்றின்படி ஆஸ்திரேலியாவில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் வலதுசாரி Sydney Institute இன் கூட்டமொன்றில் அதிகரிக்கும் சமூக சமத்துவமின்மையை சுட்டிகாட்டுபவர்கள் "தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்” என்ற ஆஸ்திரேலிய பொருளாளர் ஜோ ஹாக்கியின் கூற்றுக்களை ஆக்ஸ்பாம் புள்ளிவிவரங்கள் தவிடு பொடியாக்குகின்றன.

இது இன்னும் அதிர்ஷ்டமான நாடா? என்று தலைப்பிடப்பட்ட ஆக்ஸ்பாம் அறிக்கை மக்கள் தொகையில் கீழ்மட்டத்திலுள்ள 60 சதவிகித மக்களின் சொத்துக்கு சமமானதை ஒரு சதவிகித மிகப் பெரிய செல்வந்தர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. நாட்டின் ஒன்பது மிகப் பெரிய செல்வந்தர்கள் $58.6 பில்லியன் டாலர் அளவிற்கு நிகர சொத்து மதிப்பை கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கீழ்மட்டத்திலுள்ள 20 சதவிகிதத்தினரின் அல்லது 4.5 மில்லியன் மக்களின் நிகர சொத்து மதிப்பைவிட அதிகமாக இருக்கிறது என்பதையும் அது காட்டுகிறது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய செல்வந்தர், 10 சதவிகிதம் அல்லது ஏறக்குறைய 2 மில்லியன் கீழ்மட்டத்திலுள்ள மக்களை விட அதிகமாக சொத்துக்களை கொண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் வருமான சமத்துவமின்மை 1990-களின் மத்தியிலிருந்தே அதிகரித்து வந்திருக்கிறது என்று ஆக்ஸ்பாம் குறிப்பிடுகிறது. “1995இல், ஏனைய செல்வச் சிறப்புடைய, பொருளாதார அபிவிருத்திற்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பின் OECD அங்கத்துவ நாடுகளுடன் ஒப்பிடும்போது ஆஸ்திரேலியா சமத்துவமின்மையில் ஒரு சராசரி அளவைக் கொண்டிருந்தது. இன்று, பெரும்பாலானவற்றை விட சிறப்பாக செயல்படும் பொருளாதாரத்தை கொண்டிருந்தும் நமக்கு ஒப்பானவர்களை விட குறைந்து நாம் சராசரிக்கும் கீழே இருக்கிறோம்”

கடந்த தசாப்த காலத்தில் ஆஸ்திரேலிய செல்வந்தர்கள் மற்றும் ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்திருக்கிறது என்று கணிப்பு எடுத்தவர்களில் 79 சதவிகிதம் பேர் நம்புகிறார்கள் என்றும் அத்துடன் இது ஆஸ்திரேலியாவை "வாழ்வதற்கு ஒரு மோசமான இடமாக” செய்துவிட்டது என்று 60 சதவிகிதமானவர்களுக்கும் அதிகமாக நம்புவதாக குறிப்பிடும் ஒரு மதிப்பீட்டை அந்த அறிக்கை உள்ளடக்கி இருக்கிறது.

மிகப் பெரிய செல்வந்தர்கள் போதுமான வரி கட்டுவதில்லை என்று 76 சதவீதம் பேர் கருதுவதாகவும், 75சதவிகிதம் பேர் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையேயான இடைவெளியை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவிரும்புவதாகவும், செல்வந்தர்கள் "மிக அதிக செல்வாக்கு" கொண்டிருப்பதாக 79 சதவிகிதத்தினர் நம்பினார்கள் என்றும் ஆக்ஸ்பாம் கருத்துகணிப்பு கண்டறிந்தது.

Australia Institute உடன் இனைந்து ஒரு இலாப நோக்கமற்ற ஆராய்ச்சி நிறுவனமான ஆஸ்திரேலியா 21 மூலமாக கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு ஆவணத்தை தொடர்ந்து ஆக்ஸ்பாம் அறிக்கை வெளிவந்தது. முன்னேறிய ஆஸ்திரேலியா அறிவுக்கு உகந்ததா? என்று தலைப்பிடப்பட்ட ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் சமத்துவமின்மைக்கு என்ன செய்வது? என்ற அந்த ஆவணம் கூறியதாவது: சமீபத்திய தசாப்தங்களில், 1சதவிகித செல்வந்தர்களின் வருமானத்தின் பங்கு இருமடங்கு ஆகியுள்ளது, 0.001 சதவிகித செல்வந்தர்களின் சொத்து பங்கு மும்மடங்கை விட அதிகமாக்கியது, மற்றும் உயர் செல்வந்தர்களில் 0.0001இன் (1 இற்கு 1000000 ஆன ஒரு செல்வந்தரின்) பங்கு ஐம்மடங்காக்கியது.

இதே அளவின் மறுபுறம் நலத்திட்ட பயனாளிகளாக இருக்கும் 35 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வதோடு, கீழ்மட்டத்திலுள்ள மக்களில் 20 சதவிகிதம் பேர், அவர்கள் வருவாயில் மூன்று காலாண்டுகளுக்கான அளவுக்கு அரசாங்க பண உதவிகளை சார்ந்திருக்கிறார்கள். OECD நாடுகளிலேயே ஆஸ்திரேலியாவின் Newstart வேலைவாய்ப்பின்மை உதவிகள் தான் மிகக் குறைவானதாகும். தற்பொழுது ஆஸ்திரேலியாவில் 570,000இற்கும் அதிகமான குழந்தைகள் அல்லது ஆறில் ஒரு குழந்தை வறுமையில் வாழ்கிறது.

கடந்த ஏழு வருடங்களில் அதிக வருவாய் ஈட்டும் 10 சதவிகிதத்தினருக்கு $71 பில்லியன் டாலர் சேமிப்பில் இருப்பதோடு அரசாங்க வரி குறைப்புகள் பொருத்தமில்லா விகிதத்தில் செல்வந்தர்களுக்கு சாதகமாகி இருக்கிறது.

அவ்வறிக்கை குறிப்பிடுவதாவது: 1983-84இல் டாலருக்கு அதிகூடிய வரிவிகிதங்கள் 60 சென்ட் என்ற அளவிலிருந்து இன்று 45 சென்ட் என்ற அளவிற்கு குறைக்கப்பட்டிருக்கின்றன. நிறுவனங்களின் வருமானத்திற்கு அல்லது ஓய்வூதிய வருமானமான (superannuation) முறையே 30 மற்றும் 15 (அல்லது பூஜ்யம்) சதவிகிதத்தில் மட்டும் வரி வசூலிக்கப்படுவதால் தனிப்பட்ட வருமானத்தை மறைத்துக் காட்டகூடியதாக உள்ளது.

செல்வந்தர்களுக்கு பெருமளவிற்கு பயனளிக்கும் ஓய்வூதிய வரி சலுகைகள் ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய $35 பில்லியன் டாலரை அரசாங்கத்திற்கு செலவு வைப்பதால் முதியோர் ஓய்வூதியம் மற்றும் அதனை பெறும் 2.4 மில்லியன் மக்களுக்கான வருடாந்த வரவு-செலவுத் திட்ட அளவை விரைவிலேயே முந்திச் சென்றுவிடும் என்பதை முன்னேறிய ஆஸ்திரேலியா அறிவுக்கு உகந்ததா? என்று தலைப்பிடப்பட்ட அறிக்கை காட்டுகிறது.

சமுதாயத்தின் மிக ஏழ்மையான பிரிவுகளின் உடல் நலம், கல்வி மற்றும் நல்வாழ்வுகளில் சமூக சமத்துவமின்மையின் பலவீனமாக்கும் தாக்கத்தையும் அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

"பாரிய வருமான சமத்துவமின்மையானது வீட்டு வசதி, கல்வி, சத்தான உணவு மற்றும் உடல்நலம் போன்றவற்றை மேலும் அதிகமாக சமமற்ற விதத்தில் பெற வழிநடத்துகிறது” என்று அது கூறுகிறது. குறைந்த வருவாய் பிரிவுகள் சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு உகந்த சுற்றுப்புறத்தில் வாழ ஏற்ற நிலையில் குறைந்த அளவு வாய்ப்புகளே இருக்கின்றன.... அவர்கள் நிலையற்ற மற்றும் குறைந்த ஊதிய வேலைகளைப் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது, அதன்விளைவாக இதய நோய் மற்றும் மனநோய்க்கான ஒரு பெரிய அபாயம் அவர்களுக்கு உருவாகுகின்றது.

குறைந்தளவு ஊதியம் மற்றும் அதிக அளவிலான இதய நோய், புற்று நோய், நீரிழிவு மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு தொடர்ச்சியான இடைத்தொடர்பை கொடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் காண்பிக்கின்றன.

கடந்த வாரம் Sydney Institute இல் பொருளாளர் ஹாக்கி கூறியதாவது அளவுக்கு அதிகமான பேர் சமூகநல உதவிகள் பெறுவதால் அரசாங்கம் ஒரு அவசரகால வரவு-செலவுத் திட்டத்தை எதிர்கொண்டது. இந்த கருத்துக்கு மாறுபட்டதாக இந்த வாரம் Melbourne Institute இனால் ஆஸ்திரேலியாவில் குடும்பம், வருமானம் மற்றும் உழைப்பின் இயக்கவியல் (HILDA) புள்ளி விபரம் வெளியிடப்பட்டது. வேலை செய்யக்கூடிய வயதில் இருக்கும் ஆஸ்திரேலியர்கள் ஒரு தசாப்தத்திற்கு முன்பு அவர்கள் இருந்ததைவிட சமூகநல உதவிகளை குறைந்தளவே சார்ந்திருக்கிறார்கள்.

2001இற்கு பின்னர் குடும்பங்களின் ஒரு மாதிரியை கண்காணித்தது, அதில் 2001இல் சமூகநல உதவிகளின் கீழ் வரும் 18 மற்றும் 64 வயதுக்குட்பட்ட 23 சதவிகித மக்கள் 2011இல் 18.6 சதவிகிதமாக குறைந்துவிட்டார்கள் என்று HILDA ஆய்வு குறிப்பிடுகிறது. அதே காலகட்டத்தில் தங்களுடைய வருமானத்தில் பாதியை சமூகநல உதவியிலிருந்து பெற்றுவருபவர்களில் 12 இலிருந்து 10.1 சதவிகிதத்திற்கு குறைந்துவிட்டார்கள்.

HILDA இன் மாதிரி ஆய்வில், 'தனிப்பெற்றோருக்கு வழங்கும் பணஉதவியை' சார்ந்திருந்தவர்களில் 2001இல் 43.8 சதவிகிதம் என்ற அளவிலிருந்து கீழாக 2011இல் 32.6 என்ற அளவிற்கு ஒரு தீவிர சரிவு இருந்தது. ஓய்வூதியத்திலிருந்து வரும் வருமானத்தின் ஒரு பகுதி வயதானவர்களுக்கான ஓய்வூதியத்தில் (age pension) தங்கியிருப்போரின் அளவும் 2001இல் 67.8 சதவிகிதத்திலிருந்து 2011இல் 59.9 சதவிகிதமாக குறைந்துள்ளது.

திங்களன்று HILDA அறிக்கை தயாரிப்பாளரான இணைப் பேராசிரியர் ரோஜர் வில்கின்ஸ் ABC நியூஸ் இன் "Breakfast” நிகழ்ச்சியில் கூறியதாவது, ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக சமூக நல உதவி மீது தங்கியிருப்பது குறைந்து வருகிறது. “குறிப்பாக கூட்டணி அரசாங்கத்திடமிருந்து வரும் தற்போதைய பகிரங்கமான விவாதத்துடனான இந்தப்போக்கை சமரசப்படுத்துவது கடினமாக இருக்கிறது. சமீபத்தில் வெளிப்பட்ட ஒரு அவசரகால சமூகநல உதவி அல்லது அவசரகால சமூகநல உதவியில் சார்ந்திருப்பது என்ற நிலை இருக்கிறது என்று நீங்கள் கண்டிப்பாக வாதம் செய்ய முடியாது” என்றார்.

தொழிலாள வர்க்கம் எதிர்நோக்கும் அடிப்படை அரசியல் கேள்வி, சமூகநல உதவிகள் அல்லது ஓய்வூதிய வருமானங்களை கூடுதலான அல்லது குறைந்த மக்கள் சார்ந்திருக்கிறார்களா என்பது அல்ல. ஆனால் ஒரு ஜனநாயக உரிமையாக தேவைப்படும் அனைவருக்கும் போதுமான அந்த சமூகநல உதவிகள் வழங்கப்படவேண்டும் என்பது தான்.

சமூக சமத்துவமின்மை, அதிகரிக்கும் ஏழ்மை, பரவலாக வேலை அழிப்பு போன்ற காரணங்களின் கீழ் சமூகநல உதவி மற்றும் ஓய்வூதியங்களை சார்ந்திருக்கும் மக்களின் எண்ணிக்கை குறைகிறது என்பது தொடர்ச்சியாக பதவியிலிருந்த தாராளவாத- தேசியவாத மற்றும் தொழிற்கட்சி அரசுகளின் மீதான ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறது. கடந்த தசாப்த காலத்தின்போது, பெருவணிகத்தின் கோரிக்கைகளுடன் இணைந்து அரசாங்கங்கள் இலட்சக்கணக்கானோரை ஏழ்மையில் வாழ்க்கை நடாத்த நிர்ப்பந்திக்கும் சமூகநல உதவி குறைப்புகள் மற்றும் நடவடிக்கைகளை அறிமுகம் செய்திருக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com