Tuesday, July 1, 2014

உருத்திரகுமாரன் யாருடன் நிற்கிறார்?

ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் பிரபல சட்டத்தரணியாகவும், தமிழ் காங்கிரஸ் சட்டத்தரணியாகவும், தமிழ் காங்கிரஸ் பிரமுகராகவும், யாழ்ப்பாணம் மாநகர பிரமுகராகவும், யாழ்ப்பாணம் மாநகர முதல்வருமாக இருந்த முதல்வருமாக இருந்த வி.விசுவநாதனின் செல்வப் புதல்வர் உருத்திரகுமாரன் என்பவர் அமெரிக்காவில் இருந்துகொண்டு ‘நாடு கடந்த (நாடில்லாத) தமிழீழ அரசாங்கம்’ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை நடாத்தி வருகின்றார்.

அவரது ‘அரசாங்கத்தை’ அங்கீகரித்த ஒரேயொரு நாடு ஒரு வருடத்துக்கு முன்னர் உருவான தென் சூடான் மட்டுமே! (இவர்களின் நட்பு நாடு உருவான பின்னர் அந்நாட்டில் அதிகாரப் போட்டியால் இவர்களுக்கு விருப்பமான குருதி ஆறாக ஓடுவதைப் பார்த்து உலகம் திகைத்து நின்றாலும் இவர்களுக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை)

இப்பொழுது இந்தியாவில் புதிதாக பிரதமர் பதவிக்கு வந்துள்ள நரேந்திரமோடி விரைவில் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கிறார். அப்பொழுது ‘தமிழீழப் பிரதமர்’ உருத்திரகுமாரனையும் மோடி சந்திப்பார் என தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்களில் ஒருவர் அண்மையில் திருவாய் வேறு மலர்ந்திருக்கிறார்! (சில திருவாய் வேறு மலர்ந்திருக்கிறார்! (சில வேளைகளில் ஒபாமாவைச் சந்திக்கும் சாக்கில் உருத்திரகுமாரனைச்
சந்திக்கத்தான் உண்மையில் மோடி செல்கிறாரோ என்னவோ?) செல்கிறாரோ என்னவோ?)

இந்த உருத்திரகுமாரனின் நிறுவனம் அடிக்கடி அறிக்கைகளையும் ஊடகங்களுக்கு அனுப்பி வருகிறது. அந்த அறிக்கைகளில் சில முசுப்பாத்திக் கதைகளை அடிக்கடி காண முடிகிறது. அப்படி ஒரு அறிக்கை அண்மையில் வந்தது. அதில் இலங்கை அரசின் போர்க்குற்றவாளிகள் என்று சொல்லி சிலரின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் செயற்படும் சில புலிசார்பு அமைப்புகளையும், தனிநபர்களையும் தடை செய்து அறிவிப்பு வெளியிட்ட பின்னர் உருத்திரகுமாரனின் அறிக்கை வந்துள்ளது. பதிலடி போலும்.

சில நேரங்களில் சில நகைச்சுவைகளிலும் ஆழமான அர்த்தங்கள் பொதிந்திருப்பதுண்டு. உருத்திரகுமாரனின் இந்தப் போர்க் குற்றவாளிகள் அறிக்கையிலும் அப்படியான விடயம் உள்ளே பொதிந்திருக்கிறது.

உருத்திரகுமாரனின் போர்க் குற்றவாளிப் பட்டியலில் முதலாவதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயர் உள்ளது. அப்படியே அவரது சகோதரர் கோத்தபாய, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, பல முன்னாள் இந்நாள் இராணுவ உயரதிகாரிகள் எனப் பலரின் பெயர்கள் உள்ளன. இந்தப் பட்டியலில் ஒரு விசேடம் என்னவென்றால், முதல் மூன்று நான்கு பெயர்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பெயரும் இருக்கிறது!

அப்படியானால் முன்னாள் பிரதமரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் கட்டாயம் இருக்க வேண்டுமே எனத் தேடிப்பார்த்தால்... இல்லவே இல்லை. வேறு யாராவது ஐக்கிய தேசியக் கட்சிப் பிரமுகர்களின் பெயர்களாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை.

1977இல் ஆட்சிக்கு வந்த ரணிலின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் அவரைத் தொடர்ந்து ஆh.பிரேமதாசவும் 1994 வரை தொடர்ச்சியாக 17 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்தனர். அவர்கள் காலத்தில் 1977, 1983, 1981 என மூன்று தடவைகள் தமிழர்களுக்கு எதிரான இன வன்செயல்கள் அவர்களது அரசாங்கங்களாலேயே திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தமிழ் மக்களுக்கு எதிரான போரும் அவர்களாலதான் ஆரம்பிக்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க ஜே.ஆரின் அரசிலும், பிரேமதாசவின் அரசிலும் முக்கியமான அமைச்சராக இருந்து அந்தக் காலப் போர் நடவடிக்கைகளில் ஒரு பங்காளியாக இருந்தவர். 83ஆம் ஆண்டு இனவன்செயலின் போது கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் தமிழ் வர்த்தகர்களின் கடைகளைச் சூறையாடிய ஐ.தே.க காடையர் குழுக்களுக்கு பிரேமதாசவும், ரணிலும் தான் பொறுப்பாக இருந்தவர்கள் என்ற பேச்சு பரவலாக உண்டு. அதுபற்றி பின்னர் ஒருமுறை பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்த ரணில், “சில்லறை வர்த்தகத்தில் தமிழர்கள் போட்டியிட்டதால்தான் சிங்களவர்கள் தமிழர்களின் கடைகளைச் சூறையாடினாhகள்” என நியாயப்படுத்தினார்.

சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட நல்லதொரு தீர்வுப் பொதியை ஐ.தே.க எம்.பிக்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயே தீ வைத்து எரித்த போது ரணில் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததை தொலைக்காட்சிகள் எல்லாம் ஒளிபரப்பின. அந்தத் தீர்வுத் திட்டத்தை ஐ.தே.க ஏன் எதிர்த்தது என விளக்கம் கொடுத்த ரணில், ‘அது தமிழர்களுக்கு அளவுக்கு அதிகமான அதிகாரங்களைக் கொடுத்ததூன் காரணம்’ என்றார்.

இப்படியான ரணில் போன்றவர்களைத் தவிர்த்துவிட்டு இன்றைய அரச தலைவர்களையும், முன்னைய அரச தலைவர் சந்திரிகாவையும் மட்டுமே உருத்திரகுமாரன் போர்க் குற்றவாளிகளாக அறிவித்திருக்கிறார்.

நல்லது உருத்திரகுமாரன் அவர்களே! நீங்கள் வெளிப்படையாக உங்கள் சகபாடிகள் யார்? எதிரிகள் யார்? என்பதை இனம் காட்டியதற்காக உங்களுக்கு நிச்சயம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

வானவில் மே பதிப்பிலிருந்து.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com